ஓம் சரவணபவ வாசகர்களுக்கு வணக்கம்.
ஆன்மிகம், ஜோதிடம், அமானுஷ்யம், அறிவியலுக்கு அப்பாற் பட்ட விஷயங்கள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலிலில் ஜோதிடம் பற்றி சிறு விளக்கம்.
பொதுவாக நாத்திகர்கள் ஜோதிடத்தை ஏற்கமாட்டார்கள். நாத்திகம் என்பது ஆன்மிகத்தின் முதல் படி. இது மிகவும் முக்கிய மானது. பல்வேறு தெய்வங்களை வணங்குவதை விட்டுவிட்டு, கோவிலுக்குப் போவதை விட்டுவிட்டு, தான் வீட்டில் தனியறையில் இருந்து, வள்ளலாரைப்போல விளக்கேற்றி வழிபடுவது அல்லது கண்களை மூடி கற்பனையில் இறைவனைக் கண்டு ஆன்மிகத்தில் ஈடுபட்டு, பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகும் நிலைக்குச் செல்வதற்கு முதற்படி நாத்திகம்தான்.
ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை, இந்து மதத்தைப் பொருத்தவரை ஜோதிடம் என்பது நூற்றுக்கு நுறு உண்மை. மகாபாரதம், இராமாயணம் போன்ற எல்லாமே கடந்தபிறவி, அடுத்த பிறவி ஆகியவற்றை அடிப்படையாக வைத்துதான் எழுதப்பட்டிருக்கின்றன. கர்ணன் முற்பிறவில் சகஸ்த்ரகுண்டலன் என்பவனாக இருந்தான். சகஸ்ரகவசன் என்றும் கூறுவர். சகஸ்த்ர என்றால் ஆயிரம். ஆயிரம் கவசம், ஆயிரம் குண்டலங்களோடு பிறந்த வன். அவனது ஆயிரம் கவச குண்டலங்களையும் அறுத்தால் தான் அவனைக் கொல்லமுடியும். அவனுடன் போரிட்டு ஒரு கவச குண்டலத்தை அறுப்பவர்கள் இறந்துவிடுவார்கள்.
இத்தகைய வரம்பெற்ற சகஸ்த்ரகுண்டலனின் ஆணவத்தால் தேவர்கள் பெரிதும் துன்புற்று, மகாவிஷ்ணுவை சரணடைந்தனர்.
அவர்களுக்கு அபயமளித்த மகாவிஷ்ணு நரன், நாராயணன் என்னும் இருவராக அவதரித்தார். சகஸ்த்ர கவசனுடன் பத்தாயிரம் ஆண்டுகள் முதலில் போரிட்ட நரன் அவனது ஒரு கவசகுண்டலத்தை அறுக்க, நரன் இறந்துவிடுகிறார்.
அடுத்து நாராயணன் பத்தாயிரம் ஆண்டுகள் போரிட்டு இன்னொரு கவச குண்டலத்தை அறுக்க, நாராயணனும் இறந்துவிடுகிறார். அடுத்து நரன் மீண்டும் பிறப்பெடுத்து வந்து போரிட்டு மேலுமொரு கவசகுண்டலத்தை அறுத்துவிட்டு இறக்கிறார். அடுத்து நாராயணர் பிறப்பெடுத்து வருகிறார். இவ்வாறு நர நாராயணர்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பிறந்து பிறந்து சகஸ்த்ர குண்டலனுடன் போரிட்டு 999 கவச குண்டலங்களை அறுத்தனர். இறுதி யாகவுள்ள கவசகுண்டலங்களை அறு
ஓம் சரவணபவ வாசகர்களுக்கு வணக்கம்.
ஆன்மிகம், ஜோதிடம், அமானுஷ்யம், அறிவியலுக்கு அப்பாற் பட்ட விஷயங்கள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலிலில் ஜோதிடம் பற்றி சிறு விளக்கம்.
பொதுவாக நாத்திகர்கள் ஜோதிடத்தை ஏற்கமாட்டார்கள். நாத்திகம் என்பது ஆன்மிகத்தின் முதல் படி. இது மிகவும் முக்கிய மானது. பல்வேறு தெய்வங்களை வணங்குவதை விட்டுவிட்டு, கோவிலுக்குப் போவதை விட்டுவிட்டு, தான் வீட்டில் தனியறையில் இருந்து, வள்ளலாரைப்போல விளக்கேற்றி வழிபடுவது அல்லது கண்களை மூடி கற்பனையில் இறைவனைக் கண்டு ஆன்மிகத்தில் ஈடுபட்டு, பிரபஞ்சத்தோடு ஐக்கியமாகும் நிலைக்குச் செல்வதற்கு முதற்படி நாத்திகம்தான்.
ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை, இந்து மதத்தைப் பொருத்தவரை ஜோதிடம் என்பது நூற்றுக்கு நுறு உண்மை. மகாபாரதம், இராமாயணம் போன்ற எல்லாமே கடந்தபிறவி, அடுத்த பிறவி ஆகியவற்றை அடிப்படையாக வைத்துதான் எழுதப்பட்டிருக்கின்றன. கர்ணன் முற்பிறவில் சகஸ்த்ரகுண்டலன் என்பவனாக இருந்தான். சகஸ்ரகவசன் என்றும் கூறுவர். சகஸ்த்ர என்றால் ஆயிரம். ஆயிரம் கவசம், ஆயிரம் குண்டலங்களோடு பிறந்த வன். அவனது ஆயிரம் கவச குண்டலங்களையும் அறுத்தால் தான் அவனைக் கொல்லமுடியும். அவனுடன் போரிட்டு ஒரு கவச குண்டலத்தை அறுப்பவர்கள் இறந்துவிடுவார்கள்.
இத்தகைய வரம்பெற்ற சகஸ்த்ரகுண்டலனின் ஆணவத்தால் தேவர்கள் பெரிதும் துன்புற்று, மகாவிஷ்ணுவை சரணடைந்தனர்.
அவர்களுக்கு அபயமளித்த மகாவிஷ்ணு நரன், நாராயணன் என்னும் இருவராக அவதரித்தார். சகஸ்த்ர கவசனுடன் பத்தாயிரம் ஆண்டுகள் முதலில் போரிட்ட நரன் அவனது ஒரு கவசகுண்டலத்தை அறுக்க, நரன் இறந்துவிடுகிறார்.
அடுத்து நாராயணன் பத்தாயிரம் ஆண்டுகள் போரிட்டு இன்னொரு கவச குண்டலத்தை அறுக்க, நாராயணனும் இறந்துவிடுகிறார். அடுத்து நரன் மீண்டும் பிறப்பெடுத்து வந்து போரிட்டு மேலுமொரு கவசகுண்டலத்தை அறுத்துவிட்டு இறக்கிறார். அடுத்து நாராயணர் பிறப்பெடுத்து வருகிறார். இவ்வாறு நர நாராயணர்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பிறந்து பிறந்து சகஸ்த்ர குண்டலனுடன் போரிட்டு 999 கவச குண்டலங்களை அறுத்தனர். இறுதி யாகவுள்ள கவசகுண்டலங்களை அறுக்க மீண்டும் போரிடும்போது, தான் இறந்துவிடு வோம் என்பதை உணர்ந்த சகஸ்த்ர குண்டலன் சூரியபகவானிடம் சென்று அடைக்கலமாகிவிடுகிறான். துவாபர யுகத்தில்தான் அவன் பூமிக்கு வருவான் என்றறிந்து நரநாராயணர் காத்திருந்தனர்.
சூரியபகவான் சகஸ்த்ரகுண்டலனை குந்தியின் வயிற்றில் கருவாக வைத்தார். அவனே கர்ணனாகப் பிறக்க, நர நாராயணர் அர்ஜுனனாகவும் கண்ணனாகவும் பிறந்து மகாபாரத யுத்தகளத்தில் அவனை அழித்தனர்.
இது ஒரு உதாரணம். இத்தகைய பிறவித் தொடர்புகள் எல்லாம் ஜோதிடம் சார்ந்தவை.
கடவுள் பற்றிய நம்பிக்கை ஒருவருக்கு ஏற்படுவதற்கு, பிறவியிலேயே வருகிற மரபணு தொடர்பு, பெற்றோர் வளர்க்கும் விதம், அந்த நபரின் பொருளாதாரச் சூழல் போன்ற காரணங்களைச் சிலர் கூறுகின்றனர்.
அனுபவம் தருகிற மாற்றம் என்போரும் உண்டு. ஜோதிடத்தைப் பொருத்தவரை, ஒருவருக்கு ஆன்மிக நாட்டம் ஏற்பட அவரது ஜாதக அமைப்பே காரணமாகச் சொல்லப் படுகிறது. சுக்கிரனும் குருவும் ஒரே வீட்டில் இருந்தால், அவருக்கு ஆன்மிகமும் வரும்;
நாத்திகமும் வரும் என்று கூறுகிறார்கள். புவி யீர்ப்பு விசையைக் கண்ட றிந்த சர் ஐசக் நியூட்டன் மிகுந்த ஜோதிட நம்பிக்கையுள்ளவர்.
அவர் இல்லத்தில் ஏராள மான ஜோதிடநூல்கள் இருந்துள்ளன.
தங்கள் மரணத்தை முன்கூட்டியே கணித்த வர்களையும் எனக்குத் தெரியும். ஜோதிட ரீதியாக நொடிப் பொழுது கூட பிசகாமல் கணிக்கமுடியும். எனக் குத் தெரிந்த ஒரு திரைப் பட நடிகர் நன்றாக ஜோதிடம் பார்ப்பார்.
அவர் தான் மரண டையும் நாளை முன்கூட்டியே சொல்லி, அனைவரையும் வர வழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் மரணமடைந்தார். சமீபத்தில் நடந்த சம்பவம் இது. சில காரணங்களால் அவர் பெயரை இங்கு குறிப்பிடவில்லை.
கே.சி. தங்கப்பன் என்று ஒருவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நாடக கம்பெனியில் ஒன்றாக இருந்தவர். மிகச்சிறந்த ஜோதிடர். கேரளாவில் கல்யாணசுந்தரம் என்னும் பிரபல ஜோதிடரிடம் இக்கலையைக் கற்றவர், அவரும் இதுபோலவே தன் இறுதிநாளைக் குறிப்பிட்டு, அந்த நாளில் தன் மனைவி, மக்களையெல்லாம் அருகில் வைத்துக்கொண்டு மரணமடைந்தார்.
சென்னை கே.கே.நகரில் வெங்கட் ராமையர் என்றொருவர் இருந்தார். அவர் தான் என் ஞானகுரு. 1992-ல் நான் விரக்தி யடைந்து ஊருக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணியபோது, அவர்தான் எனக்கு தைரியமூட்டி, "நீ நன்றாக வருவாய்' என்று சொன்னவர். அவரும் தன் குடும்பத்தாரி டம் செப்டம்பர் மாதம் தான் இறந்து விடுவேன் என்று சொல்லிவிட்டார். ஜூன் மாதத்தில் ஒருநாள் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மரணமடைந்து விட்டார். எல்லாரும், "செப்டம்பரில் இறப் பேன் என்று சொன்னவர் முன்கூட்டியே இறந்துவிட்டாரே' என்று பேசிக் கொண்டனர்.
பின்னர் அவருக்கு காரியம் செய்தபொழுது அவருடைய டைரியை எடுத்துப் பார்த் திருக்கிறார்கள். அதில் ஜூன் மாதத்தில் அவர் இறந்த தேதியைக் குறிப்பிட்டிருந்த தோடு, 9.00 முதல் 9.30 மணிக்குள் என்று சரியாகக் குறிப்பிட்டிருந்தார்!
என் தாயாரின் மரணம் 21-6-1989 அன்று 9.00 முதல் 9.30 மணிக்குள் நிகழும் என்று பார்த்தசாரதி என்னும் ஜோதிடர் நான்கு மாதங்களுக்கு முன்பே கூறினார். நான் ஏடு பார்த்தபோது நாற்பதாவது வயதில் கர்மம் செய்ய நேரிடும் என எனக்கும் வந்தது. அதனால்தான் என் தாயாரின் மரணத் தறுவாயில் நான் தயாராக இருந்தேன்.
இதுபோல பல விஷயங்கள் உள்ளன. தவறிப்போன விஷயங்களும் உண்டு. எத்தனை முறை தவறிப்போனாலும் அது விஞ்ஞானத்துக்கு ஆதரவு. ஆனால் நான்கு விஷயங்கள் துல்லியமான நேரத்தில் நடந்துவிட்டால் அதுதான் ஜோதிடத்தின் ஆச்சரியம்!
இப்போது உண்மையில் நடந்த ஒரு அமா னுஷ்யமான விஷயத்தைச் சொல்கிறேன்.
எனது அடுத்த தம்பி சாம்சன் ராஜசேகரன் என்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயமிது. அவர் ஒருமுறை பஸ்ஸில் பயணித்தபோது, பையை இருக்கையில் வைத்துவிட்டு வெளியே சென்றிருக்கிறார். திரும்ப வந்தபோது அவரது பையை நகர்த்தி வைத்துவிட்டு வேறொரு வர் அமர்ந்திருக்கிறார். இவர் அந்த இருக்கை யைக் கேட்க, அவர் மறுக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு பயணி என் தம்பியை சமாதானப்படுத்தி அழைத்துப்போய் வேறிடத்தில் அமரச் செய்திருக்கிறார். அப்போது அவர் என் தம்பிக்குக் கூறிய விஷயம் இது...
""யாரிடமும் வம்பு வைத்துக்கொள்ளாதீர் கள். நான் பக்தி மிகுந்தவன். அடிக்கடி திருவண்ணாமலை கோவிலுக்குப் போவேன். அப்படி ஒருமுறை போகும்போது, முன்பாகவே போய் பையை ஜன்னலோர இருக்கையில் வைத்துவிட்டு ஒரு பொருள் வாங்க இறங்கிப்போனேன். திரும்ப வந்தபோது என் பையை நகர்த்தி வைத்துவிட்டு வேறொருவர் அங்கு அமர்ந்திருந்தார். ஒரு ஐம்பது அறுபது வயதிருக்கும். குளித்துப் பல நாட்களானவர்போல தோற்றம். அழுக்கான ஆடைகள்... நான் அவரிடம் இருக்கையைக் கேட்டேன்.
அவர் கண்டுகொள்ளவே இல்லை. எவ்வளவோ சொல்லியும் அவர் கண்டு கொள்ளாமல் இருக்கவே, மிகுந்த கோபம் வந்து அவரையும் அவரது பையையும் இழுத்துத் தள்ளினேன். அதைப்பார்த்த நடத்துனர் வந்து அந்த பெரியவரிடம் பின்னால்போய் அமருமாறு சொல்ல, அவரும் போய் அமர்ந்துவிட்டார். நான் என் இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.
திருவண்ணாமலை வந்தது. இறங்கு வதற்காகப் படியை நோக்கிச் சென்றபோது அந்த பெரியவரைப் பார்த்தேன். அவர் சற்று கோபமாக ஒரு பார்வை பார்த்தார். அடுத்த நிமிடம் புன்முறுவல் செய்தார். பிறகு மீண்டும் ஒரு கோபப் பார்வை. நான் யோசித்துக்கொண்டே இறங்கி நான்கடி நடந்திருப்பேன். பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை. முகத்தில் தண்ணீர் தெளித்த உணர்வு வர, கண் திறந்து பார்த்தேன். நான் கீழே விழுந்து கிடக்க சுற்றிலும் ஆட்கள் நின்றிருந்தார்கள். அவர்களுக்கிடையே அவரும் இருந்தார். அதே கோபம், சிரிப்பு கலந்த பார்வை. பிறகு எனக்கு நினைவு தப்பிவிட்டது. இது நிகழ்ந்து ஒரு மாதம் கழித்துதான் நான் சுயநினைவுக்கு வந்தேன். இடையில் என்ன நடந்தது? நான் மயங்கிவிட, என் பர்ஸிலிருந்த அடையாள அட்டையை வைத்து வீட்டுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார் கள். அவர்கள் என்னை மருத்துவமனையில் சேர்க்க, மருத்துவர்களால் எனக்கு என்ன நேர்ந்தது என்றே கண்டுபிடிக்கமுடியவில்லை. இறுதியில் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு மாதம் கடந்து ஒரு அமாவாசை நாளில் நான் என் மனைவியை அழைத்து தண்ணீர் கேட்டேன். எனக்கு நினைவு திரும்பியது கண்டு பெரிதும் மகிழ்ந்த என் மனைவிதான் மேற்படி விவரங்களையெல்லாம் என்னிடம் கூறினார். எனக்கு நினைவு திரும்புவதற்குமுன் அந்த பெரியவர் என் கனவில் வந்து சிரித்தார். அதன்பிறகே நான் கண்விழித்தேன்.
இந்த ஒரு மாத காலத்தில் 87 கிலோ எடையிருந்த நான் 45 கிலோ அளவுக்கு மெலிலிந்துவிட்டிருந்தேன். என் வேலையும் போய்விட்டது. பஸ்ஸில் ஏற்பட்ட ஒரு இருக்கை தகராறு. அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என் முன்ஜென்ம வினையா? எதுவும் புரியவில்லை'' என்றார்.
அதனால் உருவத்தை வைத்து யாரையும் எடைபோடக்கூடாது. யாரையும் உரசாமல் நம் வாழ்க்கைப் பாதையில் பயணிப்பதே சிறந்தது. அதற்கு இந்த சம்பவம் உதாரணம். ஆனால் ஒரு சாதாரண பிச்சைக்காரர் தோற்றம் கொண்டவர் தன் பார்வையால் இவ்வளவையும் செய்யமுடியுமா? எதைக்கொண்டு செய்தார்? இதுவே அமானுஷ்யம்!
(அதிசயங்கள் தொடரும்)
________
ஜோதிடம் சொல்லாதது ஏன்?
2020-ஆம் ஆண்டில் "கொரோனா' என்னும் கொடியநோய் உலக மக்களைத் தாக்குமென எந்த ஜோதிடரும் சொல்லவில்லையே என்று பலரும் கேட்கிறார்கள். ஆனால் பஞ்சாங்கத்தில், இந்த விகாரி வருடத்தில் விஷக்கிருமி தாக்கம் ஏற்படுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. வருடம் பிறக் கும்போது எல்லா ஜோதிடர்களும் பஞ்சாங்கம் பார்ப்பார்கள். அதிலுள்ள இந்த விஷயத்தை பெரும்பாலான ஜோதிடர்கள் சொல்லவில்லை. நேர்மறை சிந்தனை, எதிர்மறை சிந்தனை என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம். வருடம் தொடங்கும்போது எல்லாம் நன்றாக நடக்கும்- எல்லாரும் வளமாக இருப்பார்கள் என்று "பாசிட்டிவாக' சொல்லிவிட்டார்கள். இதுபோன்ற விஷயத்தில் அது அவசியமில்லை.
எனக்குத் தெரிந்த திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒரு ஜோதிடர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் என்னிடம் "பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கப்போகிறது' என்றார். "யாருக்கு' என்றேன். "உலகத்துக்கே' என்றார்.
அவர் சொன்னது உண்மை. அதுபோல செப்டம்பர் மாதத்தில் ஒரு ஜோதிடர் "உலகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது. அதற்கு யாகம் வளர்க்கவேண்டும்' என்றார். யாகம் என்று சொன்னதால் அப்போது அப்படியே விட்டுவிட்டேன். இப்போது அவர் போன்செய்து, "போன வருடமே சொன்னேனே' என்றார். இதுபோல சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பரவலாக அறியப்பட்ட பிரபலங்கள் அல்ல. அதனால் அவர்களால் பேசமுடியவில்லை. நான் சொன்னால், "மக்களிடம் பீதியைக் கிளப்புகிறேன்' என்று வழக்கு போடுவார்கள். இதை பெரும்பாலான பிரபல ஜோதிடர்கள் வெளிப்படையாகச் சொல்லி மக்களை எச்சரித்திருக்கவேண்டும்.