ஒருவர் பிறந்த நேரத்தில் இருந்த நவகிரகங்களின் அமைப்பானது அந்த ஜாதகரின் வாழ்க்கையை வழிநடத்துகிறது என்பது ஜோதிடத்தின் அடிப்படைக் கருத்து. இதை ஒரு பிரிவினர் ஏற்றுக்கொண்டாலும் இன்னொரு பிரிவினர் மறுக்கிறார்கள்.
ஆனால் தற்போது ஒன்பது கோள்களின் தாக்கம் மனிதர்களை பாதிக்கிறதா என்பது குறித்து மேலைநாடுகளில் விரிவான ஆய்வுகள் நடக்கின்றன. இதை "எபிக் ஜெனடிக்ஸ்' என்கிறார்கள்.
நாம் நடைமுறையில் பல்வேறு முரண்களைக் காண்கிறோம். உதாரணமாக, ஒருவர் மிகவும் நல்லவராக இருப்பார். ஆனால் வாழ்க்கையில் அதிக துன்பங்களை அனுபவிப்பார். வெளியே அவருக்கு நற்பெயர் இருக்காது. இன்னொருவர் மிகவும் தீயவராக இருப்பார். அவரோ மிகச்சிறந்த வாழ்க்கை வாழ்வார். சுற்றுப்புறத்தில் நல்லவரென்றும் பெயரெடுத்திருப்பார். இதுபோல இன்னும் பல விஷயங்களை வாழ்க்கையில் நாம் காண்கிறோம். இவற்றுக்கெல்லாம் காரணம் என்னவென்று ஆய்கின்றபோது நமக்கு கிடைக்கின்ற விடைதான் ஜோதிடம் கூறும் விதிப்பயன். அதுவே ஒருவர் பிறக்கின்ற நேரத்தில் அவரது ஜாதகக் கட்டத்திலுள்ள கிரகநிலையைத் தீர்மானிக்கிறது.
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய காரகங்கள்- அதாவது அந்த கிரகத்தின் ஆளுமைக்குரிய அம்சங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. உதாரணமாக, சூரியன் என்பது தந்தைக்குரியது; சந்திரன் தாய்க்குரியது. செவ்வாய் சகோதரனையும், புதன் தாய்மாமனையும், வியாழன் (குரு) கணவனையும், வெள்ளி (சுக்கிரன்) மனைவியையும் என உறவுகளைக் குறிக்கின்றன. ராகு- கேது ஆகியவை தாய்வழி மற்றும் தந்தைவழி தாத்தா- பாட்டியைக் குறிக்கின்றன. சனி கிரகம் பணியாட்களைக் குறிக்கும். இந்த கிரகங்கள் ஒருவர் ஜாதகத்தில் அமைந்துள்ள நிலையைப் பொருத்தே அந்தந்த உறவுகளால் ஜாதகருக்கு நன்மையோ- தீமையோ ஏற்படுகின்றன.
உறவுகள் மட்டுமின்றி இந்த கிரகங் களுக்கு வேலை, தொழில், ஆளுமை, சுகம், நோய், வீடு, வாகனம் உள்ளிட்ட பல காரகத் துவங்களும் உள்ளன.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மிகமிக முக்கியமானது என்னவென்றால், ஒரு மனிதன் எப்படிப் பிறந்தாலும்- அதாவது மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து பலருக்கும் அறிமுகமானவராக இருந்தாலும், சாதாரண குடும்பத்தில் பிறந்து நான்கு பேருக்கு மட்டுமே தெரிந்த வராக இருந்தாலும், இறுதியில் அவர் மரணமடையும்போது எவ்வாறு செல்கிறார் என்பதுதான் முக்கியம். எழுபது வயதோ, எண்பது வயதோ, தொண்ணூறு வயதோ- அவர் விரும்பியதை உண்டு, நன்றாகத் தூங்கி, அவர் தூங்கும்போதே மரணமடைந்தால் மிகப்பெரும் பாக்கியசா-. அவ்வாறில்லாமல் இறுதிக்காலத்தில் ஓராண்டு ஈராண்டு என மருத்துவமனையில் கிடந்து அவதிப்பட்டு, நொந்து நூலாகி மரணமடைந்தால் அவர் வாழ்ந்த வாழ்க்கை நல்லதல்ல.
சிலர் யாரையுமே மதிக்கமாட்டார்கள். "நான் முன்னேறியபின் எல்லாரும் என்னை வந்து பார்க்கட்டும்' என்று வீராப்பாக இருப்பார்கள். ஆனால் அறுபது வயதானா லும் அப்படியேதான் இருப்பார்கள். எந்த முன்னேற்றமும் இருக்காது. யாரும் அவர்களைத்தேடி வரமாட்டார்கள். இன்னும் சிலர், கலைத்துறையாகட்டும் அரசியலாகட்டும்- "நான் முன்னுக்கு வருவேன்' என்று சொல்-க்கொண்டு வீராப்பாக இருப்பார்கள். யாரையும் சிறிதும் மதிக்கமாட்டார்கள். யார்மீதும் அன்பு செலுத்தமாட்டார்கள். என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அத்தகையவர்களில் ஒருவர்கூட முன்னுக்கு வந்ததில்லை.
இது பொதுவான விஷயம். இப்போது ஒன்பது கோள்களும் ஒரு மனிதனின் வாழ்வை எவ்வாறு இயக்குகின்றன என்று பார்க்கலாம். முத-ல் சூரியன். சூரியன் பிரதானமாகக் குறிப்பது தந்தையை. சிலர் பெற்ற தாய்- தந்தையை மதிக்கவேமாட்டார்கள். சுமாரான தோற்றத்தி-ருந்தால், தனது பெற்றோர் என்று பிறரிடம் சொல்வதைக்கூட அவமான மாகக் கருதுவார்கள். யாரிடமும் அறிமுகப் படுத்தமாட்டார்கள். இப்படிப்பட்டவர் களெல்லாம் வாழ்க்கையில் முன்னுக்கே வரமாட்டார்கள். செய்கின்ற தொழில் தடைப்பட்டுக்கொண்டே போகும். பொருளாதாரம் சேராது. அடுத்தவர்களிடம் வாங்கி உண்ணும் நிலை ஏற்படும். திருமணமும் அமையாது. அப்படியே திருமணம் நடந்தாலும் மனைவியிடம் கருத்தொற்றுமை இருக்காது. பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். இதற்குக் காரணம் அவர்களது ஜாதகத்தில் சூரியனின் நிலை சரியில்லாததே என்று சொல்கிறார் கள். அதேபோலதான் சந்திரனும். தாயை மதிக்காதவர்களுக்கு மனம் சரியாக வேலை செய்யாது. ஏனென்றால் தாயைக் குறிக்கும் சந்திரன் மனதையும் குறிக்கும். மொத்தத்தில் தாய்- தந்தையை மதிக்காதவர்கள் வாழ்வில் முன்னேறமாட்டார்கள்; சமுதாயமும் அவர் களை மதிக்காது.
இது ஜோதிடரீதியாக மட்டுமல்ல; அறிவியல்ரீதியாகவும் உண்மைதான். என்னுடைய மரபணுவை (டி.என்.ஏ) எடுத்து சென்னையிலுள்ள ஒரு ஆய்வுக்கூட்டத்தில் வைத்துவிட்டு வெளியூர் சென்றுவிடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு என் மனநிலை எப்படியுள்ளது- நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா, வருத்தத்தில் இருக்கிறேனா என்பதை சென்னையிலுள்ள என்னுடைய மரபணுபவை வைத்து அறிந்துகொள்ள முடியும். தந்தையின் விந்துப்பைக்கும் தாயின் கர்ப்பப்பைக்கும் உள்ள தொடர்பால் தான் நாம் பிறக்கிறோம். எனவே தாய்- தந்தை, மகன் மூவருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மரபியல் இணைப்பு இருக்கிறது.
இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
நீங்களே பார்த்திருக்கலாம். பெரிய அரசியல் தலைவர்களோ, புகழ் பெற்ற திரைக்கலைஞர்களோ, மிகப்பெரிய தொழிலதிபர்களோ- யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் தங்கள் பெற்றோரை நன்கு மதிக்கக்கூடியவர்களாகவும், அன்புடன் பராமரிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவ்வாறில்லையென்றால், ஒருவர் என்னதான் தன் திறமை காரணமாக உயர்ந்த நிலைக்குச் சென்றிருந்தாலும், அறுபது வயதிற்குள் சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்படுவார்கள். இது அனுபவப்பூர்வமானது.
அடுத்து மனைவிக்கு வருவோம். மனைவிக்குரிய கிரகம் சுக்கிரன். மனைவியை நன்கு மதிக்கவேண்டும், முழுமையாக அன்பு செலுத்தவேண்டும். சரிநிகராக நடத்தவேண்டும். அப்போதுதான் குடும்பம் செழிக்கும். மகாலட்சுமி வீட்டிற்குள் வருவாள். மகாலட்சுமி என்றால் செல்வம். வீட்டில் செல்வம் சேரும். பலர் பெற்றோர் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்திருப்பார்கள். சிலர் காதல் மணம் புரிந்திருப்பார்கள். காத-ல் பார்வைக் காதல், உள்ளக் காதல், உடல் காதல், ஆத்மார்த்த காதல் என நான்கு வகையுண்டு. இதில் நான்காவதான ஆத்மார்த்தமான காதலை ஒரு கணவன் தன் மனைவிமீது செலுத்தவேண்டும். அதுபோல மனைவியும் கணவன்மீது செலுத்தவேண்டும். அப்போதுதான் நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். பெற்றோரை மதிப்பவர்களாக இருப்பார்கள். மனைவிமீது அன்பில்லாமல் போ- வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்குப் பிறக் கும் பிள்ளைகள் அன்பற்றவர்களாகவும், கொடூரமானவர்களாகவும், சமூக விரோதி களாகவும் மாறக்கூடிய வாய்ப்புண்டு.
குரு என்னும் கிரகம் கணவனையையும், பணத்தையும் குறிக்கும். ஆசிரியர், மடாதிபதிகள் போன்றோரையும் குறிக்கும். ஒரு மனைவி கணவனை மதிக்கவேண்டும். "கணவனே கண்கண்ட தெய்வம்' என்று வாழவேண்டும். பழமை என்று இதனைப் புறந்தள்ளக்கூடாது. அப்போதுதான் நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள்.
பணத்துக்காகவோ, சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்பதற்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ விருப்ப மில்லாமல் திருமணம் செய்துகொண்டு விருப்பமில்லாமல் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால், அவர்கள் பெற்றோர் மீது பாசமில்லாமல் போய்விடுவார்கள். பிற்காலத்தில் கவனிக்கமாட்டார்கள். "தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா- சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தைகள் சொந்தம் என்பது ஏதடா' என்று கண்ணதாசன் பாடியதுபோன்றும்; "கூட்டிலே குஞ்சு பறக்கநினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா- ஆட்டிலே குட்டி ஊட்டமறந்தால் அதோடு சொந்தம் மாறுமடா' என்று பட்டுக்கோட்டையார் பாடியதுபோன்றும் பரிதவிக்க நேரும். எனவே கணவன்- மனைவி, பிள்ளைகள் என அனைவரும் ஒருவர்மீது ஒருவர் அன்பு செலுத்தவேண்டியது மிகமுக்கியமானது.
தாய்- தந்தை, கணவன்- மனைவியைக் குறிக்கும் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பதுபோல அமையும்.
அந்த கிரகங்கள் ஜாதகத்தில் கெட்டால் அவை குறிக்கும் உறவுகள் பாதிக்கப்படும். சந்திரன் கெட்ட ஒரு ஜாதகர் தாயை மதிக்கமாட்டார். அறிவில்லாமல் செயல்பட்டு ஏதாவது ஒரு விஷயத்தில் அகப்பட்டுக்கொள்வார். லஞ்சம் வாங்கியதாலோ பெண்கள் விஷயத்தாலோ பெருத்த அவமானத்தை சந்திப்பார். வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் வீணாகிவிடும். ஒரு கெட்டபெயர் வாங்க ஒரு நிமிடம் போதும். கெட்டநேரம் வரும்போதுதான் அறிவு விபரீதமாக செயல்படும்.
அதுபோல மனைவியைக் குறிக்கும் சுக்கிரன் ஆறாமிடத்தில் அமர்ந்துவிட்டால், கணவன்- மனைவிக்குள் அடிக்கடி சண்டை நிகழும். சுக்கிரன் நல்ல இடத்தில் அமைந்த ஆணுக்கு அழகான பெண் மனைவியாக அமைவாள்.
அந்தக் காலத்தில் 13 முதல் 19 வயதுக்குள் திருமணம் செய்து வைத்துவிடுவார் கள். ஏனென்றால் அது பாலுணர்வு மிகையாகும் நேரம். "17 வயதுமுதல் 29 வயதுவரையான காலகட்டம் புயல்வேக பாலுணர்வைத் தரும்' என்கிறார். சிக்மண்ட் ஃபிராய்ட். அந்த காலகட்டத்திற்குள் திருமணம் செய்துவிடுவது நல்லது.
ஆனால் காலத்தின் கொடுமை- தற்போது திருமணம் தள்ளிப்போடப்படுகிறது. மேல்நாடுகளில் பலர் திருமணம் செய்துகொள்ளவே அஞ்சுகிறார்கள்.
அவ்வாறு செய்துகொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பமில்லை என்கிறார்கள். அல்லது குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடுகிறார்கள். நம்நாட்டிலும் இப்படி வரப்போகிறது.
தமிழ்நாட்டில் மக்கள்தொகை குறைந்துகொண்டே வருகிறது. பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கிறார் கள். வெளிமாநிலத்தவர் இங்குவந்து வசிக்கி றார்கள். தாய்- தந்தை இருவரென்றால் இரண்டு பிள்ளைகளாவது வேண்டும். நான்கைந்து பிள்ளைகள் இருந்தால் வளர்க்கமுடியாதென்று நினைக்கிறார்கள். இரண்டு பிள்ளைகளாவது இருந்தால், அவர்கள் ஒரு ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையால் நன்றாக கல்விகற்று ஏதோவொரு துறையில் முன்னேறிவிடுவார்கள்.
மற்ற கிரகங்கள் குறிப்பிடும் உறவு கள் சார்ந்த விவரங்களைத் தொடர்ந்து காண்போம்.
(அதிசயங்கள் தொடரும்)