நடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம்! பிரம்மிப்பூட்டும் தொடர்! - 5

/idhalgal/om/actor-rajesh-writes-thousand-wonders-awesome-series-5

பிறந்த வீட்டாருடன் ஏற்பட்ட மனக்கசப்பால், சுமார் 27 ஆண்டுகள் அவர்களுடன் எவ்வித் தொடர்புமின்றி வாழ்ந்துகொண்டிருந்தார் அந்த அம்மையார். அவரது மகனுக்குப் பெண் தேடிக்கொண்டிருந்த சமயம் ஒரு குறிசொல்லும் பெண்மணி, "உங்கள் தம்பியின் மகளுடன்தான் உங்கள் மகனின் திருமணம் நடக்கும்' என்று சொல்ல, வெகுண்ட அந்த அம்மையார், "அது நடக்கவே நடக்காது!' என்றார். "நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள்' என்று சவால்விட்டுச் சென்றார் குறிசொல்லும் பெண்மணி.

ra

இதனால் வேகம் கொண்ட அந்தத் தாயார், "போர்க்கால நடவடிக்கை' என்பதுபோல, உடனே திருச்சிக்குச் சென்று பெண்பார்க்கும் படலத்தைத் தொடங்கி, ஒரு பெண்ணையும் பார்த்து அவசரகதியில் தன் மகனுக்குத் திருமணத்தையும் நடத்திமுடித்துவிட்டார். சவாலில் வென்றுவிட்டார்!

மணமக்களும் தாயாரும் சென்னை திரும்பினர்.

மூன்று மாதங்கள் கடந்தன. அப்போது சென்னை தண்டையார் பேட்டையில் இவர்களது உறவினர் வீட்டுத் திருமணம். கண்டிப்பாகக் கலந்துகொள்ளவேண்டிய சுபநிகழ்வு. ஆனால் அங்குபோனால் தாய்வீட்டார் வருவார்களே- 27 வருடங்கள் பார்க்காமல் இருந்துவிட்டோம். அங்கு அவர்களைப் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வதென்று அந்த அம்மையாருக்குக் குழப்பம். இறுதியாக, கடைசிநேரத்தில் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, அவர்களுக்குச் செய்யவேண்டியதைச் செய்து விட்டு உடனடியாகத் திரும்பிவிடுவோம் என்று முடிவெடுத்தனர்.

வீட்டைப் பூட்டிவிட்டு சற்றுதூரம் வந்தபோது மருமகளுக்கு ஒரு சந்தேகம். "கொஞ்சம் இருங்கள்; பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்' என்று சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்குச் சென்ற அந்தப்பெண், கதவைத் திறந்து சமையலறைக்குச் சென்று மின்விளக்கை எரியச்செய்ய "ஸ்விட்ச்' போட்டாள். அடுத்த நொடி அந்த விபரீதம் நடந்துவிட்டது. சமையல் எரிவாயு கசிந்திருந்த நிலையில், அந்தப்பெண் "ஸ்விட்ச்' போட்டதும் "சிலிண்டர்' வெடித்துவிட்டது.

"டமார்' என்னும் பெரிய வெடிச்சத்தம் கேட்டு தாயும் மகனும் வீட்டைப் பார்க்க, வீடுமுழுக்க ஒரே தீப்பிழம்பு! பங்கரமான அலறல் சத்தம். அக்கம் பக்கத்தினரெல்லாம் ஓடிவந்து பார்த்தபோது, அந்தப் பெண்ணின் உடல்

பிறந்த வீட்டாருடன் ஏற்பட்ட மனக்கசப்பால், சுமார் 27 ஆண்டுகள் அவர்களுடன் எவ்வித் தொடர்புமின்றி வாழ்ந்துகொண்டிருந்தார் அந்த அம்மையார். அவரது மகனுக்குப் பெண் தேடிக்கொண்டிருந்த சமயம் ஒரு குறிசொல்லும் பெண்மணி, "உங்கள் தம்பியின் மகளுடன்தான் உங்கள் மகனின் திருமணம் நடக்கும்' என்று சொல்ல, வெகுண்ட அந்த அம்மையார், "அது நடக்கவே நடக்காது!' என்றார். "நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள்' என்று சவால்விட்டுச் சென்றார் குறிசொல்லும் பெண்மணி.

ra

இதனால் வேகம் கொண்ட அந்தத் தாயார், "போர்க்கால நடவடிக்கை' என்பதுபோல, உடனே திருச்சிக்குச் சென்று பெண்பார்க்கும் படலத்தைத் தொடங்கி, ஒரு பெண்ணையும் பார்த்து அவசரகதியில் தன் மகனுக்குத் திருமணத்தையும் நடத்திமுடித்துவிட்டார். சவாலில் வென்றுவிட்டார்!

மணமக்களும் தாயாரும் சென்னை திரும்பினர்.

மூன்று மாதங்கள் கடந்தன. அப்போது சென்னை தண்டையார் பேட்டையில் இவர்களது உறவினர் வீட்டுத் திருமணம். கண்டிப்பாகக் கலந்துகொள்ளவேண்டிய சுபநிகழ்வு. ஆனால் அங்குபோனால் தாய்வீட்டார் வருவார்களே- 27 வருடங்கள் பார்க்காமல் இருந்துவிட்டோம். அங்கு அவர்களைப் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வதென்று அந்த அம்மையாருக்குக் குழப்பம். இறுதியாக, கடைசிநேரத்தில் சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, அவர்களுக்குச் செய்யவேண்டியதைச் செய்து விட்டு உடனடியாகத் திரும்பிவிடுவோம் என்று முடிவெடுத்தனர்.

வீட்டைப் பூட்டிவிட்டு சற்றுதூரம் வந்தபோது மருமகளுக்கு ஒரு சந்தேகம். "கொஞ்சம் இருங்கள்; பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்' என்று சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்குச் சென்ற அந்தப்பெண், கதவைத் திறந்து சமையலறைக்குச் சென்று மின்விளக்கை எரியச்செய்ய "ஸ்விட்ச்' போட்டாள். அடுத்த நொடி அந்த விபரீதம் நடந்துவிட்டது. சமையல் எரிவாயு கசிந்திருந்த நிலையில், அந்தப்பெண் "ஸ்விட்ச்' போட்டதும் "சிலிண்டர்' வெடித்துவிட்டது.

"டமார்' என்னும் பெரிய வெடிச்சத்தம் கேட்டு தாயும் மகனும் வீட்டைப் பார்க்க, வீடுமுழுக்க ஒரே தீப்பிழம்பு! பங்கரமான அலறல் சத்தம். அக்கம் பக்கத்தினரெல்லாம் ஓடிவந்து பார்த்தபோது, அந்தப் பெண்ணின் உடல் கருகிவிட்டிருந்தது. உடனே மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர். ஆனால் பயனில்லை. அந்தப்பெண் இறந்து விட்டாள்.

இந்த விவரம் தெரிந்ததும் அந்த அம்மையாரின் தாய்வீட்டாரும் உடனடியாக விரைந்துவந்தனர். "தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்' என்பார்களே- அது போல! அவர்கள் அங்கேயே தங்கி அந்தப் பெண்ணுக்குச் செய்யவேண்டிய பதினாறாம் நாள் காரியங்களையெல்லாம் செய்து முடித்தார்கள்.

அவர்கள் சமூகத்தில், இதுபோல இளம்வயதில் மனைவியைப் பறிகொடுத்த கணவனுக்கு, முப்பது நாட்களுக்குள் வேறொரு பெண்ணை மணம் முடித்துவிட வேண்டும் என்பது வழக்கம். அதன்படி அவர்கள் அனைவரும் ஆலோசித்தபோது, அந்த அம்மையாரின் சகோதரர், "போனதெல்லாம் போகட்டும். எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். நான் என் மகளைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்'' என்று அக்காவிடம் சொன்னார். அந்த அம்மை யாருக்கோ மிகுந்த குழப்பம். அப்போது "உங்கள் தம்பி மகளுடன்தான் உங்கள் மகனுக்குத் திருமணம்' என்று சவால்விட்ட அந்த குறிசொல்லும் பெண்மணி மனதில் வந்தார். நீண்டநேர மனப்போராட்டத்துக் குப்பின் சம்மதம் சொன்னார். திருமணமும் நடந்து முடிந்தது.

rajesh

திருமணத்திற்குப்பின் அவர்கள் நன்றாக வாழ்ந்துகொண்டிருந்த சமயம், வெல்டிங் கடை நடத்திவந்த அந்த அம்மையாரின் மகனுக்கு தொழிலில் சரிவு ஏற்பட்டு சிரமத்துக்கு உள்ளானார். இது ஏனென்று ஆலோசித்து, நாடிஜோதிடம் பார்க்கலாம் என முடிவுசெய்து ஒரு நாடிஜோதிடரை அணுகினர். நாடியைப் பார்த்த அவர், ""இப்போது இங்கு வந்திருக்கும் உன் பெரிய மனைவி உனக்கு இரண்டாவது மனைவி. முதல் மனைவியானவள் திருமணமான தொண்ணூறாவது நாளில், நீ செய்யும் தொழில் சம்பந்தமான காரணத்தால் (வெல்டிங்- தீ) இறந்துவிட்டாள். நீ இப்போது மணம் முடித்திருக்கும் பெண் உன் தாய்மாமன் மகள். இந்தப்பெண்ணும் இரண்டாவது மனைவியாகப் போகவேண்டுமென்பதே அமைப்பு. இப்போது உனக்கு சற்று சோதனையான காலம். ஆனால் உங்களுக்குக் குழந்தை பிறந்ததும் நிலைமை சீராகி வாழ்வு செழிப்பாகும்'' என்று கூறியிருக்கிறார்.

அதன்படியே நடந்தது.

ஒரு குறிசொல்லும் பெண்ணிடமிருந்து ஆரம்பித்ததுதான் இவ்வளவு சம்பவங்களும் என்று எண்ணும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது.

நான் நடிகனானபிறகு பல ஊர்களுக்கும் சென்று பல்வேறு விஷயங்களையும் சேகரித்திருக்கிறேன். இது மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூரில் நான் சேகரித்த விஷயம். இந்த நிகழ்வை நேரில் பார்த்த பலரிடமும் பேசி, அதைப் பதிவு செய்துகொண்டும் வந்தேன். 1985-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவமிது.

அந்த ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். (அவர்கள் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்பதால் முனுசாமி, பெரியசாமி என்று கற்பனைப் பெயர்களை வைத்துக்கொள்வோம்.) இருவரும் வியாபாரிகள். ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். வியாபாரம் முடிந்ததும் இரவு கடையை மூடிவிட்டு ஒன்றாகவே திரும்புவது அவர்கள் வழக்கம். அன்றும் வழக்கம்போல கடையை மூடிவிட்டு, மது அருந்தி விட்டு விளையாட்டாகப் பேசியபடி வீட்டைநோக்கி வந்துகொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் விளையாட்டு வினையாகி, சிறிதாக ஆரம்பித்த சண்டை பெரிதாகிவிட்டது. அதில் திடகாத்திரமாக இருந்த பெரியசாமி, முனுசாமியை கழுத்தில் அடிக்க, அவர் அப்படியே கீழே விழுந்து மயங்கிவிட்டார்.

அவர் எழுந்திருக்காதது கண்டு சற்று கலவரமடைந்த பெரியசாமி, "சரி; போதையில் மயங்கி விட்டான். இல்லையென்றால் சண்டைக்கு வருவான். தெளிந்ததும் வந்துவிடுவான். நாம் போவோம்' என்றெண்ணிக்கொண்டு, வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு உறங்கி விட்டார். காலையில் எழுந்தபோது ஊரே கலவரமாக இருந்தது. என்னவென்று விசாரித்தபோது, "முனுசாமி இறந்து கிடக்கி றார்' என்னும் செய்தி கிடைத்தது. பெரும் அதிர்ச்சியடைந்தார் பெரியசாமி. எங்கே இறந்துகிடக்கிறார் என்று விசாரித்தபோது, "பஞ்சாயத்து அலுவலகம் அருகே... பாலத்துக்குக் கீழே' என்று சொன்னார்கள். பெரியசாமிக்கு மேலும் அதிர்ச்சி. ஏனென் றால் அவர் நண்பனை அடித்தது அங்கே தான், அவர் மயங்கிவிழுந்ததும் அங்கேதான். தான் அடித்ததால்தான் நண்பன் இறந்து போனான் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது.

பிறகு, எதுவும் தெரியாதவர் போல் துக்கவீட்டுக்குச் சென்றார். நண்பரின் உடலுக்கு மாலை போட்டார். ""நாங்க எப்பவுமே வியாபாரம் முடிஞ்சு ஒண்ணாதான் வருவோம். நேத்துன்னு பாத்து, "எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. நீ போடா. நான் அப்புறம் வர்றேன்'னு சொன்னான். நான் வந்துட்டேன். அதுக்குப்புறம் என்ன நடந்துன்னு தெரிய லையே'' என்று போலியாக நடித்தார். இறுதி ஊர்வலத் திலும் மன உறுத்தலுடன் கலந்துகொண்டார்.

முனுசாமி இறந்து ஆறு மாதங்கள் கடந்தன.

இவர்கள் இருவருக்கும் இன்னொரு நண்பர் இருந்தார். (ராமசாமி என்று வைத்துக்கொள்வோம்.) அவர் கள் வீட்டில் வார விடுமுறை நாட்களில் இரவு உணவு பெரும்பாலும் சமைக்க மாட்டார்கள். ஹோட்டலில் அசைவ உணவு வாங்கிவந்து சாப்பிட்டுவிட்டு உறங்கி விடுவார்கள். அந்த வாரமும் அதுபோல மாலைநேரத்தில் ராமசாமி தன் மனைவி யிடம், ""என்னம்மா சமையல் செய்யறியா? வாங்கிட்டு வரட்டுமா?'' என்று கேட்க, அவர் மனைவியும், ""கடையிலயே வாங்கிட்டு வந்துருங்க'' என்றாள்.

கடைக்குச் சென்றவர் வெகுநேரமாகியும் வரவில்லை. காத்திருந்து பார்த்த மனைவி, வீட்டிலிருந்த மதியம் சமைத்த பழைய சாதத்தை சாப்பிட்டுவிட்டுப் படுத்தவள் அப்படியே அயர்ந்து உறங்கிவிட்டாள். பொழுதும் விடிந்துவிட்டது. கண்விழித்துப் பார்த்த மனைவி கணவன் வராதது கண்டு கலக்கமடைந்தாள். இப்போது உள்ளது போல அப்போது அலைபேசி வசதி யெல்லாம் இல்லை. "எங்கே போயிருப்பார்' என்று எண்ணியபடியே கதவைத் திறந்து வாசலுக்கு நீர் தெளிக்க வந்தவள் திண்ணை யைப் பார்க்க, அங்கே தன் கணவர் படுத்திருப்பதைக் கண்டாள். அருகே அவர் இரவு வாங்கிவந்த அசைவ உணவுப் பொட்டலங்கள் இருந்தன.

"அடடா... கதவு தட்டியதுகூட கேட்காமல் இப்படித் தூங்கிவிட்டேனே. பாவம்...

அவரும் சாப்பிடாமல் படுத்துவிட்டார்' என்று தன்னைத்தானே நொந்துகொண்டவள் அவசரமாக கணவரை எழுப்பி, "நீங்க வர நேரமானதால பழைய சாதம் சாப்பிட்டுட்டு படுத்தேன். எப்படி தூங்கினேன்னே தெரியல. நீங்க கதவைக் கொஞ்சம் வேகமா தட்டியிருக்கக்கூடாதா?'' என்றாள்.

எழுந்து அமர்ந்த ராமசாமி, ""என்னம்மா தங்கச்சி... என்னைத் தெரியலையா?'' என்று கேட்டார். மனைவிக்கோ பேரதிர்ச்சி! கட்டிய கணவன் "தங்கச்சி' என்றழைத்தால் ஒரு மனைவிக்கு எப்படி இருக்கும்! மேலும் குரலிலும் மாறுபாடு. எப்போதோ கேட்ட குரல்போல இருந்தது. கிராமத்துப் பெண்ணல்லவா... உடனே அழ ஆரம்பித்துவிட்டாள்.

""என்னங்க ஆச்சு உங்களுக்கு? பரோட்டா, கறி வாங்கிட்டு வர்றேன்னு ராத்திரி சொல்லிட்டுப் போனீங்க. இப்ப இப்படிப் பேசறீங்களே...'' என்று அவள் புலம்ப, ராமசாமியோ மிகவும் பொறுமையாக, ""தங்கச்சி... நான்தாம்மா உங்க வீட்டுக்காரரோட சினேகிதன் முனுசாமி'' என்றார். மனைவிக்கு மயக்கம் வராத குறைதான்!

அதற்குள் விஷயம் தெரிந்து அக்கம்பக்கத் தினர் கூடிவிட்டனர். திண்ணையிலிருந்த உணவுப் பொட்டலங்களையெல்லாம் பார்த்த அவர்கள், ""உன் பொண்டாட்டிக்குதானே இதெல்லாம் வாங்கிட்டுவந்த? அப்புறம் ஏன் அவள பட்டினி போட்டுட்டு திண்ணையில படுத்துத் தூங்கின? கதவைத் தட்டி அவளை எழுப்பியிருக்கலாமில்ல?'' என்று கேட்க, ""என் சினேகிதனோட சம்சாரம் ராத்திரியில தனியா படுத்திருக்கறப்ப கதவைத் தட்டுறது தப்பில்லியா? சாப்பாடு குடுக்கறதுக்கு தட்டலாம்னுதான் நினைச்சேன். அப்புறம் மனசு கேக்கல. தப்புன்னு தோணிச்சு. அதான் இங்கயே வச்சிட்டுப் படுத்தேன்'' என்றார் ராமசாமி- முனுசாமியின் குரலில்.

மக்களுக்கு ஏதோ பொறிதட்ட, அந்த கிராமத்திலிருந்த பேய்விரட்டும் பெண்மணி ஒருவரை அழைத்துவந்தார்கள்.

அந்தப் பெண்மணி சற்று அதட்டலான குரலில், ""தம்பி, நீ யாரு? எங்கருந்து வந்தே?'' என்று கேட்க, ""அம்மா... ஆறு மாசத்துக்கு முன்ன செத்துப்போனானே முனுசாமி.

அவன்தான் நான். நானும் பெரியசாமியும் அன்னிக்கு ராத்திரி எப்பவும்போல வீட்டுக்கு நடந்து வந்துக்கிட்டிருந்தோம். பேச்சுவாக்குல வாக்குவாதம் முத்திப்போய், அவன் என்னை அடிச்சிட்டான். நான் மயக்கமா விழுந்துட்டேன். அப்பவே அவன் தண்ணி தெளிச்சு என்னை வீட்ல கொண்டுபோய் விட்டிருந்தான்னா நான் பொழச்சிருப்பேன். ஆனா அவன் அந்த ராத்திரி நேரத்துல, யாருமில்லாத இடத்துல தனியா என்ன அம்போன்னு விட்டுட்டுப் போனதால நான் செத்துப் போயிட்டேன். அவனுக்கு எத்தனையோ முறை பிரச்சினை வந்தப்பல்லாம் நான் உதவிசெஞ்சி அவனைக் காப்பாத்தியிருக்கேன். அந்த நன்றியக்கூட நினைக்காம இப்படி செஞ்சிட்டான். அவன நான் பழிவாங்காம விடமாட்டேன்'' என்று ஆவேசமாகச் சொன்னார் ராமசாமிக்குள் இருந்த முனுசாமி!

(அதிசயங்கள் தொடரும்)

om010221
இதையும் படியுங்கள்
Subscribe