திருவள்ளுவர் ஒரு நாஸ்டர் டாமஸ் போல எனக்ககுத் தோன்றுகிறார். உலகப்புகழ்பெற்ற ஜோதிட மேதை நாஸ்டர் டாமஸ் எதிர்காலக் கணிப்புகளை உலகத்திற்குப் பொதுவாக எழுதியுள்ளார். திருவள்ளுவரோ ஒவ்வொருதனி மனிதனுக்கும் பல்வேறுவிதமான கோணங்களில் திருக்குறவில் எழு வைத்துள்ளார். அதில் நல்ல நேரம், கெட்ட நேரம் என்பது குறித்து ஊழ் என்னும் அதிகாரத்தில் பத்து குறள்கள் எழுதியுள்ளார். எல்லாவற்றையும் எழுதிய அவர் இதையும் எழுத வேண்டுமா?
அப்போதுதானே 360 பாகையும் முழுமை பெறும்.
செல்வம் சேரும் விதி வருகிறதென்றால் நமக்கு அசைக்க முடியாத மன உறுதி உண்டாகும். செல்வம் போகும் விதியென்றால் சோம்பல் வந்துவிடும என்கிறார்.
எவனொருவன் சூரிய உதயம்வரை உறங்கு கிறானோ அவனிடம் செல்வம் சேராது.
செல்வத்தை இழக்கும் விதி ஒருவனை முட்டாளாக்கும். கெட்ட நேரம் வந்து விட்டால் முட்டாளாகிவிடுவான். சேர்க்கும் விதி அவனைப் புத்திசாலியாக்கும். (புத்திசாலி வேறு, அறிவாளி வேறு -ஞானவான் வேறு)
பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவனா னாலும், நல்ல காலம் வாய்க்காவிட்டால் அவனது சொந்த அறிவு மட்டும் தான் மிஞ்சும்.
உலகத்தின் இயற்கை இரண்டு வகை. விதியின் காரணமாக அறிவுடையோர் (அதாவது அறிவே விதியாலதான் வருகிறது) இதைத்தான் ‘பராசக்தி’ படத்தில் ‘முட்டாள் பயலையெல்லாம் தாண்டவக்கோனே -காசு முதலாளியாக்குதடா தாண்டவக் கோனே என்று பாடலாக எழுதினார்கள்.
செல்வம் சேரும் காலத்தில் தீயவை நன்மையாக மாறும். போகும் காலத்தில் நல்லவையும் தீயவையாகும்.
கெட்டநேரம் ஆரம்பமானால் கஷ்டப்பட்டுக் காப்பாற்றினாலும் செல்வம் நிற்காது. வரப்போவதை எப்படித் தெரிந்துகொள்ளலாம் என்றால், நாம் ஏதாவது நிலத்தையோ, வீட்டையோ விற்க நினைத்தால் அது முடியவே முடியாது. அது நம்மைவிட்டுப் போகாது. நல்லது, கெட்டது என்பது மாறி மாறித்தான் வரும். அப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டும் -
திருவள்ளுவர் ஒரு நாஸ்டர் டாமஸ் போல எனக்ககுத் தோன்றுகிறார். உலகப்புகழ்பெற்ற ஜோதிட மேதை நாஸ்டர் டாமஸ் எதிர்காலக் கணிப்புகளை உலகத்திற்குப் பொதுவாக எழுதியுள்ளார். திருவள்ளுவரோ ஒவ்வொருதனி மனிதனுக்கும் பல்வேறுவிதமான கோணங்களில் திருக்குறவில் எழு வைத்துள்ளார். அதில் நல்ல நேரம், கெட்ட நேரம் என்பது குறித்து ஊழ் என்னும் அதிகாரத்தில் பத்து குறள்கள் எழுதியுள்ளார். எல்லாவற்றையும் எழுதிய அவர் இதையும் எழுத வேண்டுமா?
அப்போதுதானே 360 பாகையும் முழுமை பெறும்.
செல்வம் சேரும் விதி வருகிறதென்றால் நமக்கு அசைக்க முடியாத மன உறுதி உண்டாகும். செல்வம் போகும் விதியென்றால் சோம்பல் வந்துவிடும என்கிறார்.
எவனொருவன் சூரிய உதயம்வரை உறங்கு கிறானோ அவனிடம் செல்வம் சேராது.
செல்வத்தை இழக்கும் விதி ஒருவனை முட்டாளாக்கும். கெட்ட நேரம் வந்து விட்டால் முட்டாளாகிவிடுவான். சேர்க்கும் விதி அவனைப் புத்திசாலியாக்கும். (புத்திசாலி வேறு, அறிவாளி வேறு -ஞானவான் வேறு)
பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவனா னாலும், நல்ல காலம் வாய்க்காவிட்டால் அவனது சொந்த அறிவு மட்டும் தான் மிஞ்சும்.
உலகத்தின் இயற்கை இரண்டு வகை. விதியின் காரணமாக அறிவுடையோர் (அதாவது அறிவே விதியாலதான் வருகிறது) இதைத்தான் ‘பராசக்தி’ படத்தில் ‘முட்டாள் பயலையெல்லாம் தாண்டவக்கோனே -காசு முதலாளியாக்குதடா தாண்டவக் கோனே என்று பாடலாக எழுதினார்கள்.
செல்வம் சேரும் காலத்தில் தீயவை நன்மையாக மாறும். போகும் காலத்தில் நல்லவையும் தீயவையாகும்.
கெட்டநேரம் ஆரம்பமானால் கஷ்டப்பட்டுக் காப்பாற்றினாலும் செல்வம் நிற்காது. வரப்போவதை எப்படித் தெரிந்துகொள்ளலாம் என்றால், நாம் ஏதாவது நிலத்தையோ, வீட்டையோ விற்க நினைத்தால் அது முடியவே முடியாது. அது நம்மைவிட்டுப் போகாது. நல்லது, கெட்டது என்பது மாறி மாறித்தான் வரும். அப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டும் -எவ்வள்வு கஷ்டப்பட்டும் விற்க முடியவில்லை என்றால் நல்லநேரம் வரப்போகிறது என்பதை.
கோடி கோடியாய் பணம் சேர்ந்தால், அனுபவிக்க வேண்டும் என்னும் விதி இல்லாவிட்டால் அதை அனுபவிக்க முடியாது. இதுதான் வள்ளுவர் விதியைப் பற்றி சொன்ன கருத்துகளில் உச்சம்.
துபாயில் ஒரு பெரிய பணக்காரர். தங்கத்தில் உருவாக்கப்பட்ட கார். வீட்டில் மளிகைப் பொருட்களைப் போல அடுக்கப் பட்டிருக்கும் தங்க பிஸ்கட்கள். படிக்கட்டு களில் பதிக்கப்பட்ட நவரத்தினங்கள். அது அவர் விதி. இங்கு பெண்ணுக்கு இரண்டு சவரன் குறைந்தால் திருமணமே நின்றுவிடுகிறது.
கோடி கோடியாய் பணம் சேர்வதென்பது வழிதான். ஆனால் அவ்வளவு இருந்தும் நோய் காரணமாக விரும்பியதை சாப்பிட முடியாமல் போனால் என்ன பயன்? அதை அனுபவிக்கவும் விதி வேண்டும். சில பணக் கார வீடுகளில் பார்த்தால் அங்கிருக்கும் பெண்கள் சோகமாக உட்கார்ந்திருப்பார் கள். வீட்டில் லட்சுமி தாண்டவ மாடுவார்கள். இவர்களோ மூதேவி பிடித்தாற்போல் இருப்பார்கள். அவர்களுக்கு மாளிகையில் வசிக்க வேண்டு மென்னும் விதி இருக்கிறதே தவிர, வாழ வேண்டுமென்று இல்லை. வசப்படுவதென்பது வேறு, வாழ்வதென்பது வேறு.
விதி அனுமதித்தால் மட்டுமே அனுபவிக்க ஏதுமில்லா வறியவன் துறவியாகப் போவான்.
நல்ல நேரம் வரும்போது மகிழ்ச்சி ய டைபவர் கெட்ட நேரம் வரும்போது ஏன் வருத்தப் பட வேண்டும் என்று கேட்கி றார் வள்ளுவர். கடைசி குறயில் மிக அழுத்த மாகச் சொல்கிறார் -விதி வலியது, விதியை வெல்ல வழி தேடினாலும் விதி முன்வந்து நிற்கும். அதற்கும் விதி வேண்டும் என்கிறார்.
‘ஊழ்’ என்னும் அதிகாரத்திலுள்ள பத்து குறள்களில் விதியின் நிலைப்பாட்டை விளக்குவதன் மூலம் ஜோதிடத்தை இணைத்துள்ளார்.
அதேபோல, ‘நிலையாமை’ அதிகாரத்தில் கூறுகிறார். நாடக அரங்கிற்கு வரும் ரசிகர்கள், ஒவ்வொருவராக கொஞ்சம் கொஞ்சமாக வருவார்கள். ஆனால் நாடகம் முடிந்ததும் உடனடியாக அனைவரும் கலைந்து போய்விடுவார்கள். அதுபோல சிறிது சிறிதாக சேரும் செல்வம் ஒரே சமயத்தில் ஒன்றுமில்லாமல் போய்விடும். இதைத்தான் கவிஞர் கண்ணதாசன ஒரு பாடலில் கூறுவார்.
‘தேடிவரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடிவரும்’ என்று. ‘போகும் காலமென்றால் ஓடிப்போய்விடும்’ என்று மறைமுகமாக உணர்த்துகிறார்.
இதுபோலதான் நல்ல பெயர், கெட்டபெயர் என்பதும். அறுபது எழுபது வயதுவரை நல்லபெயரோடு வாழ்ந்திருப்போம். ஏதோவொரு சிறுசெயல் நம் வாழ்க்கையைப் பாழ்படுத்தி, இவ்வளவு ஆண்டுகள் நாம் காப்பாற்றி வந்த நல்லபெயரை அழித்து அவப்பெயரைத் தந்துவிடும். ஒரு மனிதருக்கு கெட்டநேரம் வந்தால் செல்வம் மட்டுமல்ல; செல்வாக்கும் சென்றுவிடும்.
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மரணப்படுக்கையில் இருக்கும்போது எம்.ஜி.ஆர் அவர்களிடம் சொன்னாராம்- ஒரு மனிதனுக்கு செல்வமும் செல்வாக்கும் மிகமிக முக்கியம். எனக்கு செல்வாக்கு இருக்கிறது. ஆனால் செல்வம் இல்லை.
எனவே நீ செல்வாக்கை மட்டு மல்ல; செல்வத்தையும் விட்டு விடாதே என்று.
வாழ்க்கையில் இறுதிநாள் வரை செல்வமும் செல்வாக்கும் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
ஆனால் வள்ளுவர், நல்லநேரம் இருக்கும்வரை அவை இருக்கும். கெட்டநேரம் வந்துவிட் டால், நாடகம் முடிந்ததும் அரங்கைவிட்டு அனைவரும் போய்விடுவதைப்போல அவை உடனடியாகப் போய்விடும் என்கிறார்.
விதி என்பதைப்பற்றி கம்ப ராமாயணத்தில் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார் கம்பர். ராமர் வனவாசம் புறப்படும் காட்சியை விவரிக்கும்போது, விதி முன்செல்ல- ராமன் பின்செல்ல என்கிறார்.
மாபெரும் நாத்திகவாதியான ராபர்ட் இங்கர்சால், ஒரு மனிதன் இரண்டு வகையில் சிந்திக்கிறான் என்று சொல்கிறார். ஒன்று, அறிவுப்பூர்வமாக சிந்திக்கிறான்; இன்னொன்று உணர்வுப்பூர்வமாக சிந்திக்கிறான். ஒரு மனிதனுக்கு கெட்டநேரம் வந்துவிட்டால், அறிவுப்பூர்வமாக சிந்திப்பவன் உணர்வுப்பூர்வமாக சிந்திக்கிறான்; உணர்வுப்பூர்வமாக சிந்திப்பவன் அறிவுப்பூர்வமான சிந்திக்கிறான்.
இதற்கு எடுத்துக்காட்டாக ராமாயணத்தில் ஒரு காட்சி வருகிறது. ராமர் வனவாசம் மேற்கொண்டிருந்த சமயம். இராவணன் கட்டளைப்படி, மாரீசன் பொன்மானாக உருமாறி வந்து சீதையின் கண்களில் படும்படி விளையாடினான். அந்த மானைக் கண்ட சீதை அதன்மீது ஆசைகொண்டு அதைப் பிடித்துத் தருமாறு ராமனிடம் கேட்டாள். அப்போது ராமன், லட்சுமணனிடம் அந்த மானைப் பிடித்து வா தம்பி என்று சொன்னான்.
லட்சுமணன் எப்போதும் அறிவுப் பூர்வமாகப் பேசுபவன் அல்ல. அவன் உணர்வுப்பூர்வமானவன். அத்தகையவன் அப்போது- அண்ணா, இது மானல்ல. ராட்சதர்கள் வசிக்கும் பகுதி இது.
அந்தமான் ஒரு ராட்சதனாகவும் இருக்கலாம் என்று அறிவுப்பூர்வமாக பதில் சொன்னான்.
அதற்கு ராமன், இல்லை தம்பி. திருமணமான நாளிலிருந்து இதுவரை சீதை என்னிடம் எதுவும் கேட்டதில்லை. முதன்முறையாக ஒரு மானை விரும்பிக் கேட்கிறாள். இதைக்கூட செய்யமுடியவில்லை என்றால் நான் ஒரு பொறுப்பான கணவனாக இல்லாமல் போய்விடுவேன் என்றான். அப்போதும் அந்த மானைப் பிடிப்பதற்கு லட்சுமணன் செல்லவில்லை. எனவே ராமனே அதைப் பிடிக்கப் போகிறான். உணர்வுப்பூர்வமான சிந்தனை. அதன்பின் நடந்த வரலாறு அனைவரும் அறிந்ததே.
ஆக, அறிவுப்பூர்வமாக யோசிப்பவர் உணர்வுப்பூர்வமாக யோசிப்பதும், உணர்வுப்பூர்வமாக யோசிப்பவர் அறிவுப்பூர்வமாக யோசிப்பதும் விதியின் விளையாட்டே என்று கம்பர் சொல்கிறார்.
திருமண விஷயத்திற்கு வருவோம். இப்போது எல்லா மதத்தினரும் பெரும்பாலும் அவர்களது வழிபாட்டுத் தலங்களில் மத குருமார்களைக் கொண்டு திருமணம் செய்துகொள்கின்றனர். பிறகு வரவேற்பு நிகழ்ச்சியென்று தனியாக நடத்திக்கொள்கின்றனர். அவ்வாறு, இறைத் தலங்களில் மத குருமார்களின் ஆசியுடன் நடக்கும் அனைத்து திருமணங்களும் நல்ல இல்லற வாழ்வை சந்திக்கின்றனவா? எத்தனை விவாகரத்து வழக்குகள்! ஜோதிடப் பொருத்தம் பார்த்துதான் பலரும் திருமணம் செய்கின்றனர். அதிலும் எவ்வளவு விவாகரத்து வழக்குகள்!
அதேபோல, புரட்சிவாதிகள்- இதுபோன்ற சடங்குகளுக்கு எதிராகத் திருமணம் செய்கிறோம் என்று சொல்பவர்கள்- அவர்கள் திருமணங்களிலும் எவ்வளவு விவாகரத்து வழக்குகள்! இதற்கெல்லாம் என்ன காரணம்? விதிதான்.
முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், தி ஹிஸ்டரி ஆஃப் இந்தியன் அண்ட் வெஸ்டர்ன் பிலாஸபி என்றொரு நூலை வெளியிட்டார். அதில் ஒரு பாரசீகக் கவிஞர், நல்லவர்கள் துன்பப்படுவது ஏன்? இதற்கான விடையை உலகம் முழுக்கவுள்ள எல்லா மதங்களிலும் தேடினேன். உலகத்தில் மொத்தம் 4,800 மதங்கள் உள்ளன. அவற்றில் பெரிய மதங்கள் 12. அவற்றிலும் இந்தியாவிலுள்ள இந்துமதத்தில் மட்டுமே எனக்கு ஒரு விடை கிடைத்தது என்றான். என்னவென்று கேட்டபோது கர்மா என்றான். கடந்த பிறவியில் செய்த பாவத்தின் பலன் இந்தப் பிறவியில் கிடைக்கிறது என்பதே விடை!
மேலும் அந்த பாரசீகக் கவிஞன், முதல் ஏட்டையும் கடைசி ஏட்டையும் இழந்த ஒரு கையேடுதான் இந்தப் பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா உண்மைகளும் முழுமையானவையல்ல என்று கூறுகிறான்.
ராமனுக்கும் சீதைக்கும் திருமண ஏற்பாடுகள் செய்தவர்கள் விசுவாமித்திரரும் வசிஷ்டரும்தான்.
ஆனால் திருமணத்திற்குப்பிறகு ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேரிட்டது. சீதை அபகரிக்கப்பட்டாள். ராமன் பெருந்துன்பம் கொண்டான். இறுதியில் சீதை மீட்கப்பட்டாலும், இந்த பதினான்கு ஆண்டுகால இளம்வயதுத் துயரமென்பது எவ்வளவு கொடியது!
அதன் பின்னரும் நிறைமாத கர்ப்பிணியான சீதையை ராமன் பிரிய நேரிட்டதும் எத்தகைய கொடுமை! பெரும் ஆற்றல் வாய்ந்த ரிஷிகளாலும் அதைக் கணிக்க முடியவில்லை. இதுவே விதியின் விளையாட்டு.
(அதிசயங்கள் தொடரும்)