"ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ்' (Akashic Records) என்னும் "ஆகாயப் பதிவுகள்' பற்றி இங்கு பார்க்க லாம்.
இவ்வுலகில் நடந்து முடிந்த- நடந்து கொண்டிருக்கிற- எதிர்காலத்தில் நடக்க விருக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஆகாயத் தில் பதிவாகியுள்ளதாகச் சொல்லப் படுகிறது. அந்தப் பதிவுகளுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றலை நாம் பெற்றுவிட்டால் முக்காலங்களையும் அறிந்துகொள்ள முடியும் என்கிறார்கள்.
உலகத்தில் சுமார் 4,200 மதங்கள் இருக்கின்றன. அவற்றுள் பெரிய மதங்கள் இருபது இருக்கும். ஒவ்வொரு மதமும் தமக்கென்று கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்டிருக்கின்றன. திருக்குறள், இராமாயணம், மகாபாரதம், ஐம்பெருங்காப்பியங்கள், தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்ற பல்வேறு நீதிநூல்கள் மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்னும் நோக்கில் எழுதப் பட்டுள்ளன. இவ்வாறு பல மதங்களிலும் எழுதப்பட்டுள்ளவை ஏதோவொரு வகையில் ஆகாயப் பதிவுகளுடன் சம்பந்தப்பட்டவை என்கிறார் கள்.
இந்த ஆகாயப் பதிவுகளில், ஒவ்வொரு தனிமனிதனுடைய பல பிறவி வாழ்க்கைகளின் அனைத்து நிகழ்வுகளும் தனித்தனி அடுக்குகளாக உள்ள தாம். என்னையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், ஜோதி டம், பூர்வஜென்மம், மனிதனின் அசாதாரண ஆற்றல், முனிவர்கள், கடவுள் என இதுபோன்ற விஷயங்களை தேடித் தேடிப் படித்து பல்லாண்டுகளாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு உள்ள வர்கள் இதற்குமுன்னர் 800 அல்லது 900 பிறவிகள் எடுத்திருப்பார்கள் என்கின்றனர்.
பொதுவாக, ஒரு ஆன்மா ஆயிரம் பிறவிகள் எடுக்கும் என்பது கருத்து. அதனால் தான் சிவன், அம்பிகை, மகாவிஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு சகஸ்ரநாமம் என்னும் ஆயிரம் பெயர்களால் வழிபடும் துதிகள் உள்ளன. அவ்வகையில், இதுவரையில் நான் 900 பிறவிகள் எடுத்துள்ளதாக வைத்துக் கொண்டால், இந்த அனைத்துப் பிறவிகளின் நிகழ்வுகளும் 900 புத்தகங்களாக- அடுக்கு களாக ஆகாயப் பதிவுகளில் உள்ளனவாம்.
அவற்றில் என்னவெல்லாம் இருக்கும்? நம் முழு வாழ்க்கை, தாய்- தாய்வழியினர், தந்தை- தந்தைவழியினர், சகோதர- சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள், எதிரிகள் என நம்மோடு தொடர்புடையவர்கள் எல்லாம் வருவார்கள். உதவியவர்களும் வருவார்கள்; ஏமாற்றியவர்களும் வருவார்கள். அப்படி யென்றால், அனைத்து நிகழ்வுகளும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது- விதி என்றால், இவற்றைத் தெரிந்துகொள்வதால் என்ன ஆகிவிடப்போகிறது?
குறைந்தபட்சம் கடந்த ஒரு பிறவியை யாவது தெரிந்துகொண்டால், அதில் நாம் செய்த நன்மை- தீமைகளுக்கான பலன் களையே இப்பிறவி வாழ்க்கையில் அனுபவித் துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். நம்மைத் திருத்திக்கொள்ள முடியும் என்கிறார்கள். நான் பெருமைக்குச் சொல்லவில்லை. எனது மூன்று வயதிலிருந்து இந்த எழுபது வயதுவரை என் வாழ்வில் நடந்த அவ்வளவு நிகழ்வுகளுக்கும் எதிர்வினை என்ன என்பது பற்றி என் அனுபவத்திலிருந்தே ஆராய்ந்து உணர்ந்திருக்கிறேன். என்றாலும் மனித வாழ்வு குறித்து நான் அறிந்தது மிகமிகக் குறைவே. "கற்றது கைம்மண்ணளவு' என்று ஔவையார் கூறியதுபோல்தான். அப்படி யென்றால் உன்னையே நீ அறிவாய்' என்று சாக்ரடீஸ் கூறியதுபோல, ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்துகொள்வது எப்படி? ஆகாயப் பதிவுகளைப் படிப்பவர் களுக்கு அது சாத்தியம் என்கிறார்கள்.
இதில் சொல்லப்படுவது என்னவென் றால், ஒருவர் நம்மை ஏமாற்றிவிட்டாலோ வஞ்சித்துவிட்டாலோ அவர்களை தண்டிக்க வேண்டாம். போகட்டும் என்று விட்டுவிட வேண்டும். ஏனெனில் முற்பிறவியில் இது போல நாம் அவர்களுக்கு செய்திருப்போம். அவ்வாறு விட்டுவிட்டால் எதிர்வினைக்கு இடமில்லாமல் ஒரு பிறவி குறைந்துவிடும். நாம் அவரை நேரடியாகவோ அல்லது சட்டத்தின் வாயிலாகவோ தண்டித்தால், அந்த வினைக்கான எதிர்வினையை அனுபவிப்பதன் பொருட்டு பிறவி யின் சங்கிலி நீளும். மீண்டும் பிறவா நிலை என்பதே ஒவ்வொரு ஆத்மா வின் குறிக்கோளா கும். இதைத்தான் அனைத்து ஞானி களும் வலியுறுத்தி யுள்ளனர்.
கடந்த நூற் றாண்டில் விஞ் ஞானத்தின் வளர்ச்சி மிக அபரிதமாக இருந்தது. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது மிகப்பெரிய திருப்புமுனை. பின்னர் தொலை தொடர்பு, போக்குவரத்து, விண்வெளிப் பயணம் என அசுர வளர்ச்சியடைந்து, தற்போது கிட்டத்தட்ட அந்த உச்சியை அடைந்துவிட்டோம். மனிதன் நாகரிக மடைந்து எவ்வளவோ நூற்றாண்டுகளுக் குப்பின் சுமார் ஒன்றரை நூற்றாண்டில் இத்தகைய அசுர வளர்ச்சி எப்படி ஏற்பட்டது?
பூமியில் நிலவிய சராசரி வாழ்க்கை முறையைக்கண்டு, விஞ்ஞானத்தில் சிறந்த வேற்றுகிரகவாசிகள் பூமியில் பிறந்து இந்த அதிசயங்களை நிகழ்த்தினர் என்கின்றனர்.
நமது நாட்டில் திருமூலர், திருவள்ளுவர், போகர் போன்ற சித்தர்களும் மெய்ஞ்ஞானி களும் தோன்றி மக்களுக்கு நன்மை விளைவிக்கும் பல விஷயங்களை வெளிப்படுத் தினர். குறிப்பாக போகர் நவ பாஷாணங் களைக்கொண்டு பழனி முருகன் சிலையை வடிவமைத்தார். அதற்கு அபிஷேகம் செய்யப் பட்ட பாலையோ நீரையோ உட்கொண்டால் நோய்கள் நீங்குகின்றன என்பது அனுபவத் தில் கண்ட உண்மை. மொத்தம் 64 பாஷாணங் கள் உள்ளனவாம். அவற்றைப் பயன்படுத்தி னால் எத்தகைய நோயையும் குணப்படுத்த முடியும் என்கின்றனர். ஆனால் அவை என்ன வென்பது பரம ரகசியமாக உள்ளது.
அதுபோல, அகத்தியர் 4,448 நோய் களுக்கு மருந்து கண்டுபிடித்தார். 4,000 நோய்கள் மனிதனுக்கு, நாநூறு நோய்கள் மிருகங்களுக்கு, நாற்பது நோய்கள் ஊர்வனவற்றுக்கு, எட்டு நோய்கள் பறவைகளுக்கு என கண்டறிந்து, அவற்றுக்கு முக்கால் பாக நோய்களுக்கான மருந்தை நம் உணவிலேயே வைத்தார்.
எதிர்காலத்தை அறிந்துகொள்ள ஜோதிடம், நாடி ஜோதிடம் போன்றவற்றை முனிவர்களும் சித்தர்களும் வழங்கினர். அதில் மருத்துவ ஜோதிடமும் உண்டு. மனிதர்களில் உடல்நலனுக்காக இவற்றையெல்லாம் வழங்கிய அவர்கள், மன நிம்மதிக்காக தியானம், யோகம் போன்ற கலைகளையும் வழங்கினர். ஆலயங்கள் அமைக்கும் விதிகளை வகுத்து கோவில்களை உருவாக்கினர். நமக்கு ஏதோவொரு மனபாரம் இருந்தால், ஒரு ஆலயத்தில் சென்றமர்ந்து நம் மனச் சுமையை இறக்கிவைக்கலாம். ஏதோவொரு விஷயத்தில் நம்பிக்கை இருக்கவேண்டும். அது கோவிலாக இருந்தால் மிக நல்லது.
நம் உடல், ரத்தம் நன்றாக இருக்கும்வரை தான் ஆணவப்பேச்சு, தற்பெருமைப் பேச்சு, தத்துவப்பேச்சு என எல்லாம் பேசுவோம். பொன்மொழிகளெல்லாம் வெளிப்படும். ஆனால், உடலுறுப்புகளில் 18 உறுப்புகள் முக்கியமானவை. அவற்றுள் நான்கு மிக முக்கியம் என்பர். அவை சற்று பாதிக்கப் பட்டுவிட்டால் அவ்வளவுதான். மனிதனுக்கு அழுகை வந்துவிடும். அப்போது அவன் தேடுகின்ற இடம் கடவுள். சராசரி மனித அறிவுக்கு மேம்பட்ட இத்தகைய மிக உயரிய சித்தர்களும் ஞானிகளும் பூவுலக மனிதகுலத்தை மேம்படுத்தும் பொருட்டு, வேற்று கிரகத்திலிருந்து இங்கு வந்தவர்கள் என்கிறார்கள்.
இவற்றையெல்லாம்கூட ஆகாயப் பதிவில் அறிந்துகொள்ளமுடியும். இந்த வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் முற்பிறவிகளில் நம்முடன் ஏதோவொரு தொடர்பில் இருந்தவர்கள். நமது வளர்ப்புப் பிராணிகளும் அவ்வாறு தொடர்பில் இருந்தவைதான். அவ்வாறு தொடர்பில்லாத யாரையும் எதனையும் இப்பிறவியில் சந்திக்க இயலாது என்கிறார்கள் ஆகாயப் பதிவு ஆய்வாளர்கள்.
இந்த ஆகாயப் பதிவுகள் குறித்து தற்போது விரிவாக ஆராய்ந்து வருகிறார் கள். "The Infinite wisdom of Akashic Records' - ஆகாயப் பதிவுகள் முடிவில்லா ஞானம் என்று கூறுகின்றனர்.
லிசா பர்னட் என்னும் பெண்மணி இதுபற்றிய முதல்நூலை எழுதினார். அவருக்கு மூன்று வயது நடக்கும்போது, காதில் ஏதேதோ ஒலிகள் கேட்டனவாம். வேற்றுலகில் இருப்பதுபோலவும், வேற்றுலக மனிதர் களிடம் பேசுவதுபோலவும் உணர்வுகள் ஏற்பட்டதாம். பின்னர் நடக்கப்போகும் நிகழ்வுகள் முன்கூட்டியே அவருக்குத் தெரிந் துள்ளன. சுமார் ஐந்தாண்டுகள் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
பிற்காலத்தில் இதுபற்றி நூல் வெளியிடும் போது, அதன் முன்னுரையில், "இந்த நூலைப் படிப்பதற்குமுன் ஒரு மனநல ஆலோசகரை சந்தித்து, நல்ல மனநிலையில் நீங்கள் இருப்பதாக அவர் சான்றளித்த பின்பே படிக்கவும். இதைப் படித்தபின் உங்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல' என்று குறிப்பிட்டுள் ளனர்.
(தற்போது இதுபற்றி பல நூல்கள் வந்துள்ளன. பயிற்சி வகுப்புகளும் இணைய தளத்தில் கட்டணம் பெற்றுக்கொண்டு நடத்துகிறார்கள். அதைப் பார்க்கும் படி நான் உங்களைப் பரிந்துரைக்க வில்லை. ஒரு தகவலுக்காக மட்டுமே குறிப் பிடுகிறேன்.)
இந்த ஆகாயப் பதிவுகளில் நான்குபேர் குறிப்பிடப்படுகின்றனர். முதலாவதாக நாம் பரம்பொருள் என்று குறிப்பிடுவதுபோன்ற தலைவர், அடுத்து கற்றுக்கொடுப்பவர்கள், பிறகு ஒளி மற்று ஒலியானவர்கள். இந்த நால்வரும் தங்கள் கரங்களை நீட்டிக்கொண்டு நம்மை கேட்கச் சொல்கிறார்கள். வள்ளலார் சொன்னதைப்போல் விழித்திருக்கச் சொல்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் நம் கேள்விகளுக்கான விடை கிடைக்கும்; நம் வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள முடியும் என்கிறார்கள்.
ஆகாயப் பதிவுகளில் நான்கு விஷயங்கள் முக்கியமாகச் சொல்லப்படுகின்றன.
அன்பாக இருத்தல், பிறருக்கு உதவுதல், நன்றி மறவாமை, மன்னிக்கும் குணம் ஆகியவையே அவை. இந்த நான்கிலும் மிக முதன்மையாகச் சொல்லப்படுவது மன்னிக்கும் குணமே.
பிறர் மனம் புண்படாதவாறு பேசுவது முக்கியமானது. அவ்வாறு பேசினால் அதற்கான எதிர்வினைக்கு நாம் பிறவியெடுக்க வேண்டியிருக்கும். ஆகாயப் பதிவுகள்மூலம் இதைத் தெரிந்துகொண்டால், மனதாலோ- உடலாலோ- செயலாலோ பிறரைத் துன்புறுத் தாமல் வாழும் பக்குவம் கிடைக்கும். பிறவிச் சங்கிலி அறுபடும்.
இதுபற்றி இன்னும் சில தகவல்களை அடுத்த இதழில் சொல்கிறேன்.