சுமார் 45 ஆண்டுகளுக்குமுன், மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தில் நடந்த சம்பவமிது. ஆன்மிக உலகில் புரியாத புதிர்கள் அல்லது புரிந்தும் நிரூபிக்க இயலாத விஷயங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்றாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
அந்த ஊரில் ஜாதி இந்துக்கள் என்று சொல்லப்படும் நான்கு சமூக அடுக்கு கள் செல்வாக்குடனும் சொல்வாக்குடனும் இருந்தனர். அவர்கள் ஒன்றிணைந்து அவ்வூரிலுள்ள அம்மன் கோவிலின் சித்திரைத் தேரோட்டத்திற்காக தேர் ஒன்றைச் செய்தனர். வெள்ளோட்டமும் பார்த்தனர். தேர் இழுப்பது, பூஜை செய்வது போன்ற முறைகளை வகுக்க அனைவரும்கூடி விவாதித்தனர். அங்கேதான் பிரச்சினை தொடங்கியது. தேங்காய் உடைக்கும் வரிசைதான் காரணம். நான்காவது சமூகத்தவர் தேருக்கு முன்பாக சற்று தள்ளி தரையில் உடைக்கவேண்டும்;
அதற்கும் மேற்பட்டவர் சங்கிலி அருகே உடைக்கவேண்டும்; அடுத்தவர் தேர்ச் சக்கரத்தின் அருகிலும், முதலாவது சமூகம் தேரின் முன்பாக தேங்காய் உடைப்பதற்கென்றே வைக்கப்படும் கல்லில் உடைக்கவேண்டும் என்று பேசப்பட்டது.
மற்ற சமூகத்தினர், "நீங்களும் நாங்களும் வெவ்வேறு ஜாதி களைச் சேர்ந்தவர்களாக இருந்தா லும், எங்கள் ஜாதி குறைந்த தல்ல. பாரம்பரிய மிக்கது தான்; கௌரவமானது தான். நாம் எல்லாரும் சேர்ந்து பணம் போட்டு தான் தேரை உருவாக்கி யிருக்கிறோம். எனவே நாங்களும் கல்லில்தான் உடைப்போம்'' என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.
அம்மன் கோவிலின் நகைகள் அறநிலையத் துறையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருக்கும். திருவிழா சமயத்தில் அதை எடுத்துவந்து அம்மனுக்கு அணிவித்து, விழாமுடிந்ததும் மீண்டும் கொண்டுபோய் ஒப்படைத்துவிடுவார்கள். இந்த நான்கு சமூகத்துப் பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று கையெழுத்திட்டால்தான் நகைகளைத் தருவார்கள். அதுவே வழக்கமாக இருக்கும் நடைமுறை. இந்த உரிமையின் காரணமாக இந்த புதிய விதிமுறைக்கு மற்ற சமூகத்தினர் சம்மதிக்கவில்லை. பல ஆண்டுகளாகியும் தேரோட்டம் நடக்க வில்லை.
இது ஒருபுறமிருக்க, அந்த ஊரில் மிகச் சாதாரண நிலையிலிருந்த ஒரு கணவன்- மனைவி இருந்தனர். அவர்களுக்கு ஒன்பது வயதுடைய ஒரு மகள் இருந்தாள். ஒருநாள் இரவு அந்த சிறுமிக்கு கனவு அல்லது உள்ளுணர்வில், ஆற்
சுமார் 45 ஆண்டுகளுக்குமுன், மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தில் நடந்த சம்பவமிது. ஆன்மிக உலகில் புரியாத புதிர்கள் அல்லது புரிந்தும் நிரூபிக்க இயலாத விஷயங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்றாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
அந்த ஊரில் ஜாதி இந்துக்கள் என்று சொல்லப்படும் நான்கு சமூக அடுக்கு கள் செல்வாக்குடனும் சொல்வாக்குடனும் இருந்தனர். அவர்கள் ஒன்றிணைந்து அவ்வூரிலுள்ள அம்மன் கோவிலின் சித்திரைத் தேரோட்டத்திற்காக தேர் ஒன்றைச் செய்தனர். வெள்ளோட்டமும் பார்த்தனர். தேர் இழுப்பது, பூஜை செய்வது போன்ற முறைகளை வகுக்க அனைவரும்கூடி விவாதித்தனர். அங்கேதான் பிரச்சினை தொடங்கியது. தேங்காய் உடைக்கும் வரிசைதான் காரணம். நான்காவது சமூகத்தவர் தேருக்கு முன்பாக சற்று தள்ளி தரையில் உடைக்கவேண்டும்;
அதற்கும் மேற்பட்டவர் சங்கிலி அருகே உடைக்கவேண்டும்; அடுத்தவர் தேர்ச் சக்கரத்தின் அருகிலும், முதலாவது சமூகம் தேரின் முன்பாக தேங்காய் உடைப்பதற்கென்றே வைக்கப்படும் கல்லில் உடைக்கவேண்டும் என்று பேசப்பட்டது.
மற்ற சமூகத்தினர், "நீங்களும் நாங்களும் வெவ்வேறு ஜாதி களைச் சேர்ந்தவர்களாக இருந்தா லும், எங்கள் ஜாதி குறைந்த தல்ல. பாரம்பரிய மிக்கது தான்; கௌரவமானது தான். நாம் எல்லாரும் சேர்ந்து பணம் போட்டு தான் தேரை உருவாக்கி யிருக்கிறோம். எனவே நாங்களும் கல்லில்தான் உடைப்போம்'' என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.
அம்மன் கோவிலின் நகைகள் அறநிலையத் துறையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருக்கும். திருவிழா சமயத்தில் அதை எடுத்துவந்து அம்மனுக்கு அணிவித்து, விழாமுடிந்ததும் மீண்டும் கொண்டுபோய் ஒப்படைத்துவிடுவார்கள். இந்த நான்கு சமூகத்துப் பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று கையெழுத்திட்டால்தான் நகைகளைத் தருவார்கள். அதுவே வழக்கமாக இருக்கும் நடைமுறை. இந்த உரிமையின் காரணமாக இந்த புதிய விதிமுறைக்கு மற்ற சமூகத்தினர் சம்மதிக்கவில்லை. பல ஆண்டுகளாகியும் தேரோட்டம் நடக்க வில்லை.
இது ஒருபுறமிருக்க, அந்த ஊரில் மிகச் சாதாரண நிலையிலிருந்த ஒரு கணவன்- மனைவி இருந்தனர். அவர்களுக்கு ஒன்பது வயதுடைய ஒரு மகள் இருந்தாள். ஒருநாள் இரவு அந்த சிறுமிக்கு கனவு அல்லது உள்ளுணர்வில், ஆற்றங்கரையிலிருக்கும் பிள்ளையாரை நான்கு பேர் தூக்கிச் செல்வதுபோல தோன்றியது. மறுநாள் காலை அவள் பள்ளிக்குச் சென்றபோது, இந்த விஷயத்தைத் தனது தோழிகளிடம் கூறினாள். ஒருவர் மாற்றி ஒருவர் என இது ஆசிரியையின் கவனத்துக்குப் போனது.
சிறுமியைக் கூப்பிட்டு விசாரித்தார் ஆசிரியை. சிறுமி சொன்னதை அவர் நம்ப வில்லை. "இதுபோன்றெல்லாம் பேசிக் கொண்டிருக்காதே' என்று கண்டித்து விட்டுவிட்டார்.
அப்போதெல்லாம் கிராமங்களில் இரவு சீக்கிரமே உறங்கிவிடுவார்கள். சுமார் ஒன்பது மணியிருக்கும். உறங்கிக்கொண்டிருந்த அந்த சிறுமி திடுக்கிட்டெழுந்து, தனது தாய்- தந்தையை எழுப்பி, "பிள்ளையார் சிலையை நான்குபேர் தூக்கிக்கொண்டு போகிறார் கள்'' என்று பதட்டத்துடன் கூறினாள். பிள்ளைக்கு என்னவாயிற்றோ என்று கவலைப்பட்ட பெற்றோர், உட்காரவைத்து அவளெதிரே கற்பூரம் கொளுத்தி, அதன் சாம்பலை நெற்றியிலிட்டனர்.
அதை வைத்ததும் அந்த சிறுமிக்கு திடீரென ஒரு சக்தி பிறந்ததுபோல தோன்றியது. வேகமாக எழுந்த அவள் கதவைத் திறந்துகொண்டு ஓட ஆரம்பித்தாள். பின் தொடர்ந்த பெற்றோரால் அவளைப் பிடிக்கமுடியவில்லை. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத் திலிருந்த விநாயகர் சந்நிதிக்குச் சென்றுவிட்டனர்.
அந்த விநாயகர் சந்நிதியில் மாலை ஆறு மணிக்கு விளக்கேற்றி வைப்பார்கள். சுமார் ஒரு மணி நேரம் கடந்த பின் அது அணைந்து விடும். இருளாகத்தான் இருக்கும். இவர்கள் போனபோது அது அணையாமல் எரிந்து கொண்டிருந்தது கண்டு பெற்றோர் ஆச்சரியப்பட்டனர். அதைவிட ஆச்சரியம் அங்கிருந்த பிள்ளையார் சிலையைக் காணவில்லை.
உடனடியாக அந்த சிறுமியின் தந்தை ஓடிச்சென்று கதவுகளைத் தட்டி ஆட்களிடம் விவரத்தைக் கூறினார். அந்த ஊரிலிருந்து வெளியே செல்ல இரண்டு வழிகளே இருந்தன. அந்த இரு வழிகளிலும் ஆட்கள் பிரிந்து விரைந்தனர். ஒரு பாதையில் இருளில் ஒரு மாட்டுவண்டி போய்க்கொண்டிருந்தது. அதில் பிள்ளையார் சிலை இருக்க, நான்கு நபர்கள் அமர்ந்திருந்தனர். ஊர்மக்கள் சிலையை மீட்டு நான்கு பேரையும் பிடித்து வந்தனர். ஊருக்குள் வந்த பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி! அந்த நான்குபேரும் அதே ஊரைச் சேர்ந்த உயர் வகுப்பினர்.
"வேலியே பயிரை மேய்ந்ததுபோல இப்படி செய்துவிட்டார்களே' என்று திகைத்தனர். அவர்கள் காரணம் எதையும் சொல்லவில்லை. பஞ்சாயத்து கூடி, "இதற்குப் பிராயச்சித்தமாக உயரமான மேடையமைத்து, பிள்ளையாரை அதில் பிரதிஷ்டை செய்து கும்பா பிஷேகம் நடத்துங்கள். செலவை நீங்கள் நால்வரும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறினர். பஞ்சாயத்துத் தலைவரும் அவர் கள் சமூகத்தவரே.
பின்னர் அவர் தனியாக நால்வரிடமும் பிள்ளையார் சிலையைக் கடத்த காரணம் என்னவென்று கேட்டார். "யாரிடமும் சொல்லவேண்டாம்' என்று கூறிய அவர்கள், பக்கத்து ஊர் பண்ணையார் இந்த பிள்ளையார் சிலை வேண்டுமென்று கேட்டதாகவும், அதற்கு பத்தாயிரம் ரூபாய் தந்ததாகவும், அதை நால்வரும் பிரித்துக்கொண்டு, பண்ணை யாருக்காக சிலையைக் கடத்திச் சென்றதாகவும் கூறினர்.
அதுசரி... ஆற்றங்கரையிலிருந்த பிள்ளையார் சிலை பண்ணையாருக்கு எதற்கு? அவர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ளவர். அவரிடம் சில ஜோதிடர் கள், "ஐம்பது வருடங்களுக்குமேல் பழமை யான- ஆற்றங்கரையோரமுள்ள பிள்ளை யார் சிலையைக் கொண்டுவந்து உங்கள் இடத்தில் வைத்துக் கோவில்கட்டி கும்பா பிஷேகம் செய்தால், இப்போது உள்ளதை விட பலமடங்கு சொத்து சேரும்' என்று கூறி யிருக்கிறார்கள். இதன் அடிப்படையில்தான் இந்த சிலைக் கடத்தல் சம்பவம் நடந்து முடிந்தது.
இதற்குப்பின் அந்த சிறுமியை அனைவரும் வியப்புடன் பார்க்கத் தொடங்கினர்.
ஒரு தெய்வக் குழந்தைபோல மதித்தனர்.
இந்நிலையில் தேரோட்டத்திற்கான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. இந்த வருடமாவது எப்படியாவது நல்லமுறையில் பஞ்சாயத்தை முடித்து தேரோட்டத்தை நடத்திவிடவேண்டுமென்று அனைவரும் ஆவலாக இருந்தனர். சிறுமியின் தந்தையும் பஞ்சாயத்து நடக்குமிடத்திற்குச் செல்ல, "நானும் வருகிறேன்' என்றாள் சிறுமி. "சரி; வேடிக்கை பார்க்கட்டுமே' என்று அழைத் துச் சென்றார் தந்தை.
ஊர்கூடி பஞ்சாயத்து தொடங்கியது. அது வரை சாதாரணமாக இருந்த சிறுமி அசாதாரணமானாள். ஆட ஆரம்பித்தாள். அவளது மாற்றத்தைக்கண்டு அனைவரும் அவளுக்குள் அம்மன் இறங்கியிருப்பதாக நினைத்துக் கும்பிட்டனர். "என்னமா சொல்றீங்க?'' என்று கேட்க, "இத்தனை வருஷமா ஜாதி பிரச்சினையை பேசி தேரோட்டம் நடத்தாம இருக்கீங்க. இந்த வருஷம் சித்திரையில நடத்தலன்னா ஊருக்கு அழிவுதான் வரும். இதுக்கு தடையா இருக்கறவங்க சீரழிவாங்க. என்ன சொல்றீங்க?'' என்று அதட்டலாகக் கேட்க, "அப்படியே செய்றோம் தாயே'' என எல்லாரும் கூறி கற்பூரம் காட்ட, அந்த கற்பூரத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள் சிறுமி. சில நொடிகளில் இயல்பு நிலைக்கு வந்தாள். நடந்த எதையும் அவளிடம் சொல்லாமல் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் தந்தை.
இத்தனை ஆண்டுகளாக தேரோட்டம் நடத்த முட்டுக்கட்டை போட்டவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர்தான். பிள்ளையார் சிலையைத் தூக்கிச் சென்றவர்களும் அவர்கள்தான். சிறுமி எச்சரித்து ஒரு மாதம் கடந்தநிலையில், அவர்களுள் ஒருவர் வெளியூர் சென்றபோது பேருந்து விபத்தில் இறந்துவிட்டார். அதற்கடுத்து ஒரு மாதம் கடந்த நிலையில் இன்னொரு நபர் வயலுக்கு நீர்பாய்ச்ச சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்துபோனார்.
மேலும் ஒரு மாதம் கடந்த நிலையில் மூன்றாவது நபர் நெஞ்சுவலியால் இறந் தார். அடுத்து நான்காமவரும் இறந்தார். இயற்கை மரணமா அல்லது வரிசையாக தனது கூட்டாளிகள் இறந்ததால் பீதியின் காரணமாக மரணமடைந்தாரா என்பது தெரியவில்லை. இவையெல்லாம் சித்திரை பிறப்பதற்கு முன்பாகவே நடந்தன. அது மட்டுமல்ல; பிள்ளையாரைக் கடத்தியது முதல் நான்கு பேரின் மரணங்கள்வரை எல்லாமே அமாவாசை நாளில்தான் நடந்தன.
இதற்கிடையியே, இந்த நான்கு பேரின் சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு பெரிய மனிதர் இருந்தார். செல்வந்தர். வம்புகள் எதற்கும் போகாதவர். அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி உள்ளூரைச் சேர்ந்தவர். இரண்டாவது மனைவி அடுத்த ஊரைச் சேர்ந்தவர். முதன் மனைவிக்கு ஒரு மகன்; இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகன்கள். அவருக்கு சுமார் எழுபது வயது. ஒரே மனைவியென்றால் சொத்து இயல்பாக வாரிசுகளுக்குப் போய்விடும். இரண்டு மனைவி என்பதால் சொத்து பிரிப்பதில் பிரச்சினை வந்தது. முதல் மனைவிக்கு அந்த ஊர் ஆதரவு தெரிவித்த னர். இரண்டாவது மனைவிக்கு அவரது உறவினர்கள் உரிமைக்குரல் எழுப்பினர். சொத்தை இரண்டாகப் பிரிப்பதா- மூன்றா கப் பிரிப்பதா என்பதில்தான் கருத்து வேறுபாடு.
இந்த நிலையில் அந்த சிறுமி தன் பெற்றோரிடம், "இரண்டாவது மனைவியின் மூத்த மகனைக் கொல்லப்போகிறார்கள்' என்று கூறினாள். இதைக்கேட்டு பெற்றோர் பதறிவிட்டனர். "இதை யாரிடமும் சொல்லாதே. சொன்னால் நம்மை சும்மா விடமாட்டார்கள்' என மகளை எச்சரித்தனர்.
ஆனால், பத்து நாட்கள் கடந்து, இளைய தாரத்தின் மூத்தமகன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக செய்தி பரவியது. காவல் துறையினர் வந்து விசாரித்தனர். பின்னர் எல்லாம் முடிந்துவிட்டது. ஊரில் பலவாறு பேசிக்கொண்டனர்.
சிறுமியின் பெற்றோருக்கு கவலை சூழ்ந்தது. "நடக்கப்போவதை முன் கூட்டியே சொல்கிறாளே. நாளை இவள் பெரியவளானால் திருமணம் செய்துகொடுப்பதில் பிரச்சினை வருமே. பயந்துகொண்டு யாரும் திருமணம் செய்ய முன்வரமாட்டார்களே' என்று வருந்தினர்.
கூலிவேலை செய்து பிழைக்கும் ஏழைக் குடும்பம்தானே. எங்காவது வெளியூர் சென்றுவிடலாமா என்று யோசித்தனர்.
அப்போது உறவினரிடமிருந்து கடிதம் வந்தது. கொடைக்கானலில் கணவன்- மனைவி இருவரும் செய்யும்படி வேலை இருப்பதாகவும், குடும்பத்துடன் தங்கிக்கொள்ள வசதி இருப்பதாகவும், நல்ல சம்பளம் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. அன்றிரவு யாருக்கும் சொல்லாமல் அந்தக் குடும்பம் ஊரைவிட்டு வெளியேறியது. அதன்பிறகு அந்த சிறுமியைப் பற்றிய தகவல் ஏதுமில்லை.
இந்த நிகழ்வுகளில் நாம் சிந்திக்க வேண்டியது- வசதியுள்ள நான்கு பேர் தான் பத்தாயிரம் ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு பிள்ளையார் சிலையைக் கடத்தினார்கள். இவர்கள் அரசியல்வாதிகளாகவோ பெரிய அதிகாரிகளாகவோ பதவிவகித்தால் என்னதான் செய்யமாட்டார்கள்? ஆனால் நடைமுறை அப்படித்தான் இருக்கிறது. பணம் சேரசேரத்தான் ஆசை கூடுகிறது.
அத்தகையவர்களுக்கு இது ஒரு படிப்பினை.
அந்த சிறுமிக்கு முன்கூட்டியே உரைக்கும் ஆற்றல் எப்படி இருந்தது? இந்த பிரபஞ்சம் முடியும்வரை என்ன நடக்கும் என்னும் பதிவுகள் வான்வெளியில் உள்ளன. அதை அவளுக்கு ஏதாவது அமானுஷ்ய சக்திகள் உணர்த்தியதா? அப்படி யாரையும் அவள் குறிப்பிடவில்லை. ஆனால் உலகம் முழுக்க சேகரிக்கப்பட்டுள்ள இதுபோன்ற சம்பவத் தொகுப்புகளில், யாரோ உணர்த்தியதாகவே சொல்லப்பட்டுள்ளது. மேலும் நான்கு முதல் ஒன்பது வயதுவரையிலான சிறார்களுக்கே அமானுஷ்ய சக்திகளைக் காண்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். எது எப்படியோ......
சித்திரை பிறந்தது. அம்மன் கோவில் தேரோட்டம் மிக விமரிசையாக நடந்தது. எல்லாம் பிள்ளையார் செயல் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.
(அதிசயங்கள் தொடரும்)