ன்மிகம், ஜோதிடம், அமானுஷ்ய நிகழ்வுகள் போன்ற பலவற்றைக் கடந்த இதழ்களில் பார்த்துவந்தோம். அவற்றைப் பற்றி பலரும் வியந்து பேசினர். அதேசமயம் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், "ஜோதிடம், ஆன்மிகம் என்னும் பெயரில் ஏன் மூடநம்பிக்கையைத் தூண்டுகிறீர்கள்? இப்போதுதான் மக்கள் சற்று திருந்தி வருகிறார்கள். பகுத்தறிவு வளர்ந்து வரும் நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடுவதுபோல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தேவையா' என்று கேட்டனர்.

நாம் மூடநம்பிக்கை சார்ந்த எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை. ஆதாரம் உள்ள- தீர விசாரிக்கப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம். வாழ்க்கையில் மனிதனுக்கு இத்தகைய தகவல்கள் தேவையானவை என்பதாலும் அவற்றைக் குறிப்பிட்டோம். எனினும் அவர்களது கேள்விகளுக்கும் பதில்சொல்ல வேண்டுமல்லவா? அதனால் "பகுத்தறிவு' என்பது என்ன என்பது குறித்து இந்த மாதம் காண்போம்.

actor rajesh

பகுத்தறிவு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மாறு படும். நாம் பரம்பரையாக செய்து வரும் செயல்களிலெல்லாம் பகுத்தறிவைப் பார்ப்பதில்லை. பொதுவாக பகுத்தறிவென்றால் என்னவென்று சொல்கிறார்கள் என்றால், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களாலும் நாம் உணரும் விஷயத்தை நம் அறிவால் ஆராய வேண்டும். நமது பின்பக்க மூளையில் பரம்பரையாக சொல்லப்பட்டு வரும் எண்ணப் பதிவுகள் இருக்கும். "இந்த விஷயங்களை செய்யக்கூடாது' என்று நமது தாய்- தந்தையர் கூறியிருப்பர். இதுபோன்ற விஷயங்களெல்லாம் இருக்கும். வலப்பக்க மூளை உணர்வு சார்ந்தவற்றை ஆலோசிக்கும். இடப்பக்க மூளை "இது சரியா- தவறா? ஏற்புடையதா- இல்லையா?' என்பதுபோன்ற தர்க்கங்களில் (Logic) ஈடுபடும். இத்தகைய அறிவால், ஆராய்ந்துணரவேண்டும் என பொதுவாகக் கூறுவார்கள்.

பிரெய்ன்வேஸ் என்னும் அறிஞர், "பொதுவாக ஏழு அறிவுகள் உள்ளன. எட்டாவது அறிவுதான் பகுத்தறிவு' என்று கூறுகிறார். நமக்கு நிஜ உலகம் (Real World) கற்பனை உலகம் (Mental World), சிறப்புலகம் (Special World), ஆன்மிக உலகம் (Spiritual World) என்ற நான்கு உலகங்கள் உள்ளன.

நிஜவுலகம் என்பது நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம். அடுத்தது கற்பனை உலகம்.

சிலர் கற்பனை உலகி லேயே வாழ்ந்து கொண்டிருப் பார்கள். அவர்கள்தான் பல புதுமைகளையும் வெளிப் படுத்தியிருக்கிறார்கள். எனவே கற்பனை உலகில் வாழ்ந்து அதை நடைமுறைப் படுத்த வேண்டும். சிலரைப் பார்த்து, "இவன் பகல் கனவு காண்கிறான்' என்று ஏளனமாகப் பேசுவார்கள். பகல் கனவு காண்பவர்கள்தான் பெரிய ஆளாக வருவார்கள். இரவுக் கனவு காண்பவர்கள் அவ்வாறு ஆவதில்லை. இரவில் ஏராளமான கனவுகள் வரும். இரவுக் கனவுகளில் நூற்றுக்கு ஒன்றுதான் நடக்கும். பகல்கனவுகளில் பத்துக்கு நான்காவது நடந்துவிடும். பகல்கனவென்பது சிந்திப் பது- கற்பனை செய்வது. அதற்காக எப்போதுமே பகல்கனவு காண்பவர்கள் முன்னேறமாட்டார்கள்.

அடுத்தது சிறப்புலகம். பணம், செல்வாக்கு, புகழ், சமூக அங்கீகாரம் போன்றவையெல்லாம் இருப்பது சிறப்புலகம். அடுத்து ஆன்மிக உலகம். இதில் பல சித்தர்கள், மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ராம கிருஷ்ண பரமஹம்சர், ரமணர், கிருபானந்த வாரியார் போன்றவர் களெல்லாம் ஆன்மிக உலகில் வாழ்ந்தவர்கள்.

இந்த நான்கு உலகங்களில் வாழ்பவர்களை நாம் எப்படி பகுத்தறிவு கொண்டு பார்ப்பது? "புல்லாங்குழல்' மாலிக் என்பவர் எப்படி தன் பத்து வயதிலேயே மிகச்சிறந்த வாசிக்கும் திறனைப் பெற்றிருந்தார்? பாலமுரளி கிருஷ்ணா எப்படி ஏழு வயதிலேயே கச்சேரி செய்தார்? யாராவது பாடினால் அதைக்கேட்டு அப்படியே திரும்பப் பாடும் ஆற்றல் நான்கு வயதிலேயே எப்படி எம்.எல். வசந்தகுமாரிக்கு வந்தது? தாமஸ் ஃபுல்லர் "ஒன்றரை வருடங்களுக்கு எத்தனை நொடிகள்' என்பதை இரண்டு நொடிகளில் எப்படி சொன்னார்? கணிதமேதை சகுந்தலாதேவி 250 இலக்க எண்களைப் பெருக்கி வரும் எண்ணிக்கையை 37 நொடிகளில் சொன்னார். இதைக் கணக்கிட அமெரிக்க கம்ப்யூட்டருக்கு 52 நொடிகள் பிடித்தன. இது எப்படி? இதையெல்லாம் எப்படி பகுத்தறிவு கொண்டு கண்டறிவது?

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நமது மூளையில் பொதிந்துள்ள பேராற்றலை நாம் உணர்ந்துகொள்ளலாம். இந்த உலகத்தில் பேரதிசயங்கள் என்று எவற்றையெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோமோ, அவற்றையெல்லாம் உங்களாலும் செய்யமுடியும்; என்னாலும் செய்யமுடியும். செய்வதற்கான மூளை நம்மிடமிருக்கிறது. ஆனால் எல்லாராலும் அதிலிருந்து அவற்றை எடுக்க முடிவதில்லை. அந்தக் கட்டளை மேலிருந்து வருகிறது. அது எங்கிருந்து வருகிறது? கடவுளிடமிருந்தா- இயற்கையிடமிருந்தா? உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

450 கோடி வருடங்களுக்கு முன்னர் இந்த உலகம் தோன்றியதாகவும், 380 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்கள் தோன்றிய தாகவும் சொல்கிறார்கள். 65 கோடி ஆண்டு களாக உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தனவென்று கண்டறிந்துள்ளனர்.

ராட்சத உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்ந்ததாகவும், மிகப்பெரிய கல்லானாது மோதியதன் விளைவாக அவையெல்லாம் அழிர்ந்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.

மிகப்பெரிய உயிரினங் கள் வாழ்ந்த "ஜுரா ஸிக் பீரியட்' எனும் கால கட்டம் சுமார் ஆறுகோடி ஆண்டுகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அது போல வெவ்வேறு கால கட்டங்கள் இருந்துள்ளன. இதுகுறித்த தகவல்கள் எந்த மத நூல்களிலும் வர லாற்றிலும் காணப்பட வில்லை. நவீன காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு அகழ்வராய்ச்சிகள்மூலம் இந்த உண்மைகள் வெளிப் படுத்தப்பட்டுள்ளன.

இப்போது நாம் காணும் புலியானது மிக அழகாக இருக்கிறது. ஆனால் இதற்கு முந்தைய காலகட்டப் புலிகள் மிகக் கொடூர மான தோற்றத்தைக் கொண்டிருந்தன. அது போல இப்போதுள்ள யானை அழகாக இருக்கிறது. இதற்குமுன் "மம்மத்' என்னும் யானை இருந்தது. அது இதைக்காட்டிலும் மிகப்பெரிய உருவத்துடன், நீண்ட தந்தங் களுடன் பயமுறுத்தும் தோற்றத்தில் இருந்தது.

யாழி என்னும் ஒரு மிருகம் இருந்தது. அந்த இனம் அழிந்துவிட்டது. அதன் உருவத் தோற்றத்தை நாம் கோவில்களில் உள்ள தூண்களில் காணலாம். இவ்வாறு காலமாற்றத் திற்கேற்ப பலவகை உயிரினங்கள் தோன்றி, அவையெல்லாம் முற்றாக அழிந்துபோய் வெவ் வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

மனிதர்களாகிய நமது அன்றாட உடலியக்கத்தில் 90 முதல் 95 சதவிகித இயக்கம் தானாகவே நடைபெறுவதுதான். சுவாசித்தல், இதயத்துடிப்பு உள்ளிட்ட அனைத்து செயல்களும் அவையாகவே நடக்கின்றன. அதில் நமது முயற்சியென்பது எதுவுமில்லை. எஞ்சியுள்ள ஐந்து முதல் பத்து சதவிகித புறவேலைகளைத்தான் நாம் அதிகாலை விழித்தெழுவது முதல் உறங்கச் செல்வதுவரை செய்துகொண்டிருக்கி றோம். இந்த குறைந்த சதவிகிதமுள்ள நாம் செய்யும் செயல்களுக்கே எத்தனை ஆட்டமாடுகி றோம்! கடவுள் பக்தி என்னும் ஒன்றிருந்தால் இப்படி ஆட்டம்போட மாட்டார்கள்.

பக்தியுள்ளவர்கள் ஆலயத்திற்குச் சென்று இறைவிக்ரகத்தைப் பார்த்து மனமுருக வழிபடுகிறார் கள். அதே விக்ரகத்தை சிலர் கடத்திச்சென்று பெருந்தொகைக்கு வெளி நாடுகளில் விற்கின்றனர்.

கோவிலிலேயே உள்ள சிலர் அவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள ஆலய தங்கவிக்ரகத்தைத் திருடிக்கொண்டு, அது போலவே போலியான ஒரு சிலையைச் செய்துவைத்து ஏமாற்றுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு கடவுள்பக்தி இல்லை.

இந்த உலகில் நமக்கு மிகமிக முக்கிய மான தேவைகள் எவையென்றால் முதலில் வாழ்க்கை. தாய்- தந்தை, கணவன்- மனைவி என்பவை போன்ற உறவுகள் சார்ந்த வாழ்க்கை. அதற்கடுத்தது உணவு. பிறகு மருந்து. உணவே மருந்துதான். எனினும் அதையும் கடந்து வரும் சில நோய்களுக்காக நம் முன்னோர்கள் அறிந்துசொன்ன எளிய மருந்துகள்.

அடுத்தது கடவுள். அதற்கடுத்தது பெருமழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை அறிந்துகொள்வதற்காகப் பயன்படும் வானசாஸ்திரம். பிறகு ஜாதகம், திரைப்படம்,

அரசியல். இந்த எட்டு விஷயங்கள்தான் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருப் பவை.

மேற்சொன்ன எட்டு விஷயங்களில் எப்படி நாம் பகுத்தறிவுகொண்டு பார்க்கிறோம்?

சாதாரணமாக நம் குடும்பத்திலேயே மனிதர் களுக்கான புரிதல் இல்லை. ஒரு மனிதனுக்கு தெரிந்துகொள்ளுதல், புரிந்துகொள்ளுதல், இன்னொருவரோடு உறவாடுதல், ஒருவர் இதயத்தில் நீங்காத இடம்பிடித்தல் போன்ற குணங்கள் தேவை. மேற்சொன்ன நான்கில் தெரிந்துகொள்ளுதல் என்பது பலரிடமும் உள்ளது. ஆனால் அடுத்ததான புரிந்துகொள்ளுதல் என்னும் குணம் இல்லையே. கணவன்- மனைவிக்குள்ளேயே புரிதல் இல்லையே. இருவரும் புரிந்து வாழ்ந் தால்தான் அந்தக் குடும்பம் செழிக்கும் என்னும் மாபெரும் உண்மையை உணராமல்தானே இன்றைய பல தம்பதிகள் உள்ளனர்! பெற்றோ ருக்கும் பிள்ளைகளுக்குமான புரிதலும் தற்போதைய தலைமுறையில் அப்படித்தான் இருக்கிறது. வயதாகி விட்டாலே அறிவு மங்கிவிட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள்.

இப்படி அடிப்படையான புரிதலே இல்லாதவர்களிடம் பகுத்தறிவைக் கொண்டு வைத்தால் என்னாகும்? வழக்கமாகச் செய்துகொண்டிருக்கும் நிகழ்வுகளிலேயே பகுத்தறிவில்லை. சுமார் முந்நூறு வருடங் களுக்கு முற்பட்ட காலங்களில் தேரிழுத்தல், திருவிழா போன்ற கொண்டாட்டங்கள் ஊர்தோறும் நடத்தப்பட்டன. அதன் அடிப் படைக் காரணம், அங்கு கூடும் மக்கள் மூலம் பணம் ஒருவரிடமிருந்து அடுத்தவரிடம் கைமாறிப் பரவலாகும். ஆனால் இன்றைய காலத்தில் பணப்பரிமாற்றமென்பது மிக எளிதாக இருக்கும்போது அந்த நடை முறைகள் தொடர்வதேன்? அதன்மூலம் வேறுசிலர் பயனடைகிறார்கள் என்பதால் தான். இல்லையெனில் இது தொடராது நின்றிருக்கும்.

அதிவேக மின்காந்த ஆற்றலை கிரகிக்கும் ஆற்றலுள்ளவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

எதையும் நொடிப்பொழுதில் புரிந்துகொள் வார்கள். தர்க்கரீதியானவர்கள். அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது. அதேபோல உள்ளுணர்வும் இருக்காது.

ஆனால் படிப்பறிவே இல்லாதவர்கள் மிகச் சாதாரணமாக பல விஷயங்களை உள்ளுணர்வால் சொல்லிவிடுவார்கள். எங்கள் வீட்டில் ஒரு பெண்மணி வேலை செய்துகொண்டிருந்தார். தொடர்ந்து நான்கு தமிழகத் தேர்தல் முடிவுகளை முன் னரே மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் பகுத்தறிவால் எவ்வாறு உணர்ந்துகொள்ள முடியும்?

உண்மையைச் சொன்னால், எத்தகைய சோதனையிலும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பற்றுக்கோடாக இருப்பது கடவுள் நம்பிக்கைதான். 78 வயதுடைய தாய் தன் 43 வயதுடைய ஒரே மகளை- எதுவும் செய்யத்தெரியாமல் "ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்ட தன் மகளை இன்றும் மிகப் பொறுமையாகப் பராமரித்து வருகிறார். "இந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை கடவுள் என்னிடம் தந்திருக்கிறார்' என்று கூறுகிறார் அந்த அம்மையார். அந்த நம்பிக்கை இல்லையென்றால் அவ்வளவு பெரிய துயரைத் தாங்கிக்கொள்ள முடியுமா?

பலருக்கும் திருமணம் காலதாமதமாவதற் குப் பணமே காரணமென்று சொல்வார்கள். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அம்மையார், "எங்களுக்கு 650 கோடி ரூபாய்க்கு சொத்து இருக்கிறது. ஒரேயொரு மகள் டாக்டருக்குப் படித்திருக்கிறாள். முப்பது வயதாகியும் இன்னும் திருமணம் கூடிவர வில்லை. எங்கள் மொத்த சொத்தும் அவளுக்கு தான். என்ன செய்வது?' என்று கேட்டார். கோவில்களுக்குச் செல்லும்படி சொன்னேன்.

அதைததவிர வேறேன்ன கூறமுடியும்?

இவை இரண்டு உதாரணங்கள்தான். இன்னும் நிறைய உள்ளன. ஒருவருக்கு மனைவி இறந்துவிட்டாள். பிள்ளைகளும் பேரன் களும் உதவவில்லை. கையறு நிலையிலுள்ள அவருக்குத் துணையாக இருப்பது எது? கண்ணுக்குத் தெரியாத கடவுள்தான். கடவுள் நம்பிக்கைதான்!

(அதிசயங்கள் தொடரும்)