கடந்த இதழில், ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் காரகம் வகிக்கும் உறவுகளில், தந்தையைக் குறிக்கும் சூரியன், தாயைக் குறிக்கும் சந்திரன், கணவனைக் குறிக்கும் குரு, மனைவியைக் குறிக்கும் சுக்கிரன் ஆகியவை பற்றிய செய்திகளைப் பார்த்தோம் இனி மற்ற கிரகங்கள் குறிப்பிடும் உறவுகள்பற்றிக் காணலாம்.
ஒரு குடும்பத்தில் தாய்மாமன் என்பவருக்கு முக்கிய பங்குண்டு. இந்த உன்னதமான உறவைக் குறிப்பிடும் கிரகம் புதன். (அறிவுக்கும் இந்த புதனே காரக கிரகமாக விளங்குகிறது.) ஒரு குழந்தைக்குக் காது குத்தும்போது தாய்மாமன் மடியில் அமரவைத்துதான் குத்துவார்கள். பெண் பார்க்கச் செல்லும்போதும் தாய்மாமன் இல்லாமல் செல்லமாட்டார்கள். அது போல திருமண சமயத்திலும் முதல் மாலையைத் தாய்மாமன்தான் எடுத்துத் தருவார். நமது தமிழ்ப் பண்பாட்டில் தாய்மாமன் உறவென்பது மிக உயர்வாகக் கருதப்பட்டு வருகிறது.
தாய்மாமன் என்பவர், அது அக்காவின் பிள்ளைகள் என்றாலும் சரி; தங்கையின் பிள்ளைகள் என்றாலும் சரி- அவர்கள்மீது இரண்டாவது தந்தையைப்போல மிக உயிராக இருப்பார். இன்னும் சொல்லப்போனால் தந்தையைவிட மிக நெருக்கமாக இருப்பார். நமது நல்லது- கெட்டது போன்ற எல்லா நிகழ்வுகளிலும் தாய்மாமன் நிச்சயமாக கலந்துகொள்வார். தாய்மாமனது ஆசிர்வாதம் இருந்தால்தான் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.
ஆக, இத்தகைய சிறப்புமிகுந்த தாய்மாமன் உறவு ஒருவருக்கு நன்றாக அமையவேண்டுமென்றால், ஜாதகரது பிறந்தகால ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தாய்மாமன் உறவில் விரிசல் உண்டாகும். அவரது அனுசரணை கிடைக்காது.
அடுத்து செவ்வாய் கிரகம் பற்றிக் காணலாம். ஒருவரது ஜாதகத்தில் லக்னத் துக்கு மூன்றாம் வீடானது சகோதர ஸ்தானமாகும். அந்த வீடு தைரியம், வீரம் போன்றவற்றையும் குறிக்கும். "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்பதுபோல, சகோதர பலமுள்ளவன் எதற்கும் அஞ்சமாட்டான். ஒருவருக்கு சகோதரர்கள் எவ்வாறு அமைவார்
கடந்த இதழில், ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் காரகம் வகிக்கும் உறவுகளில், தந்தையைக் குறிக்கும் சூரியன், தாயைக் குறிக்கும் சந்திரன், கணவனைக் குறிக்கும் குரு, மனைவியைக் குறிக்கும் சுக்கிரன் ஆகியவை பற்றிய செய்திகளைப் பார்த்தோம் இனி மற்ற கிரகங்கள் குறிப்பிடும் உறவுகள்பற்றிக் காணலாம்.
ஒரு குடும்பத்தில் தாய்மாமன் என்பவருக்கு முக்கிய பங்குண்டு. இந்த உன்னதமான உறவைக் குறிப்பிடும் கிரகம் புதன். (அறிவுக்கும் இந்த புதனே காரக கிரகமாக விளங்குகிறது.) ஒரு குழந்தைக்குக் காது குத்தும்போது தாய்மாமன் மடியில் அமரவைத்துதான் குத்துவார்கள். பெண் பார்க்கச் செல்லும்போதும் தாய்மாமன் இல்லாமல் செல்லமாட்டார்கள். அது போல திருமண சமயத்திலும் முதல் மாலையைத் தாய்மாமன்தான் எடுத்துத் தருவார். நமது தமிழ்ப் பண்பாட்டில் தாய்மாமன் உறவென்பது மிக உயர்வாகக் கருதப்பட்டு வருகிறது.
தாய்மாமன் என்பவர், அது அக்காவின் பிள்ளைகள் என்றாலும் சரி; தங்கையின் பிள்ளைகள் என்றாலும் சரி- அவர்கள்மீது இரண்டாவது தந்தையைப்போல மிக உயிராக இருப்பார். இன்னும் சொல்லப்போனால் தந்தையைவிட மிக நெருக்கமாக இருப்பார். நமது நல்லது- கெட்டது போன்ற எல்லா நிகழ்வுகளிலும் தாய்மாமன் நிச்சயமாக கலந்துகொள்வார். தாய்மாமனது ஆசிர்வாதம் இருந்தால்தான் பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.
ஆக, இத்தகைய சிறப்புமிகுந்த தாய்மாமன் உறவு ஒருவருக்கு நன்றாக அமையவேண்டுமென்றால், ஜாதகரது பிறந்தகால ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தாய்மாமன் உறவில் விரிசல் உண்டாகும். அவரது அனுசரணை கிடைக்காது.
அடுத்து செவ்வாய் கிரகம் பற்றிக் காணலாம். ஒருவரது ஜாதகத்தில் லக்னத் துக்கு மூன்றாம் வீடானது சகோதர ஸ்தானமாகும். அந்த வீடு தைரியம், வீரம் போன்றவற்றையும் குறிக்கும். "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்பதுபோல, சகோதர பலமுள்ளவன் எதற்கும் அஞ்சமாட்டான். ஒருவருக்கு சகோதரர்கள் எவ்வாறு அமைவார்கள் என்பதை மூன்றாம் வீட்டைக்கொண்டு அறியலாம். இரண்டாம் வீடு தாயைக் குறிப்பதுபோல மூன்றாம் வீடானது சகோதரரைக் குறிக்கிறது.
சூரியன் தந்தையையும், சந்திரன் தாயையும் குறிப்பதுபோல, சகோதரரைக் குறிப்பிடும் கிரகம் செவ்வாய். ஒருவர் ஜாதகத்தில் மூன்றாமிடம், மூன்றாமிட அதிபதி, செவ்வாய் சிறப்பாக அமைந் திருந்தால், சகோதரர்களின் ஆதரவுடன் அரசனைப்போல வாழலாம். அதேசமயம் மேற்சொன்னவை பாதிக்கப்பட்டால் சகோதரர்களால் நன்மை இருக்காது.
சில சகோதரர்கள், எவ்வளவு உதவி செய்தாலும் அவர்களிடம் நன்றியோடு நடந்துகொள்ள மாட்டார்கள். தாங்களே சுயமாக முன்னேறி வந்ததைப்போல காட்டிக்கொள்வார்கள் சிலர் "கடவுள் தான் என் அண்ணனின் மனதுக்குள் புகுந்து எனக்கு உதவிசெய்ய வைத்தார்' என்று கடவுளுக்கு நன்றி சொல்வார்கள். ஆபத்தில் உதவிய அண்ணனை மறந்து விடுவார்கள். நன்றி நினைக்கமாட்டார்கள். இதைத்தான் இயேசுநாதர், "கண்ட சகோதரனை விசுவாசிக்காதவன் காணாத தெய்வத்தை எப்படி கண்டடைவான்?' என்று சொல்கிறார்.
எனவே சகோதரர்களை மதிக்க வேண்டியது முக்கியமானது. அவர்கள் செய்த நன்றியை எப்போதும் மறக் கக்கூடாது. உலகத்திலேயே மிகமிக முக்கியமானது நன்றியுணர்வு.
"அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்' என்றார் கவியரசர் கண்ணதாசன். நன்றியுணர்வென்பது நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். ஒவ்வொரு நிமிடமும் கடவுளுக்கு அல்லது பிரபஞ்சத்திற்கு அல்லது இயற்கைக்கு நாம் நன்றிசொல்ல வேண்டும். நன்றி சொல்வதை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மிகவும் வற்புறுத்திக் கூறுகிறார். சகோதரர்களின் உதவியை மறந்தவர்கள் முன்னுக்கு வரவேமாட்டார்கள். மறக்காதவர்கள் மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு வருவார்கள்.
அடுத்து ராகு- கேது. இந்த கிரகங்கள் தாத்தா- பாட்டியைக் குறிப்பவை. அவர்கள் தான் நமக்கு நல்லொழுக்கங்களை போதிப்பவர்கள். ராகு- கேது நல்லநிலை யில் அமைந்த ஒருவருக்கு தாத்தா- பாட்டியின் பேரன்பும் அரவணைப்பும் நிறைவாகக் கிடைக்கும். அவர்களது ஆசிர்வாதம் எப்பொழுதும் துணையிருந்து காக்கும். ஆசிர்வாதம் என்பது இதயத் திலி-ருந்து வருவது. இதயம் மிகமிக முக்கிய மானது. அதில் மனித மூளையைவிட ஐந்தாயிரம் மடங்கு அதிகமான- திறன்வாய்ந்த மின்காந்த அலைகள் உள்ளன. இந்த மின்காந்த அலைகளானது நமது தாத்தா- பாட்டியிடம் மிக அதிகமாக இருக்கும்.
உதாரணமாக, பிள்ளைகளைக் கொஞ்சியதைவிட, பேரப்பிள்ளைகளை அதிகமாகக் கொஞ்சும் தாத்தா- பாட்டிகளை நாம் காணலாம். பெற்றவர் களுக்குப் பிள்ளை களைப் பள்ளியில் கொண்டுவிடக்கூட நேரமிருக்காது. தாத்தா- பாட்டிகள் நிலை அப்படியல்ல. அவர்கள் ஓய்வு பெற்றபின், அன்பு செலுத்துவதற்கான முழு நேரத்தையும் தங்கள்வசம் கொண்டவர் கள். இப்போதும் பல பள்ளிகளின் வாசலி-ல் பாருங்கள். தாத்தாவோ பாட்டியோ பேரப்பிள்ளைகளின் வருகைக்காக பள்ளி வாயி-லில் ஆவலுடன் காத்திருப்பார்கள். அவர் கள் ஓடிவந்ததும் அவர்களைத் தழுவிக் கொண்டு, முத-லில் பிள்ளைகளின் சுமை நிறைந்த புத்தகப்பையை வாங்கிக்கொள் வார்கள். அந்த குழந்தைகளின் மனதில் உற்சாகம் ததும்பும்படி பேசியவாறு, மிக கவனமாக அழைத்துச்செல்வார்கள். சற்று கவனித்துப் பார்த்தோமேயானால், அவர்களது அதீத பாசம் நமக்குள்ளும் புகுவதுபோன்ற ஒரு பரவசம் உண்டாகும். தாத்தா- பாட்டியின் ஆசிர்வாதம் ஒருவருக்கு அவசியம். அத்தகைய உன்னத உறவைக் குறிக்கும் ராகு- கேதுவை, அதாவது தாத்தா- பாட்டியை நாம் வணங்கவேண்டும்.
எட்டு கிரகங்களுக்கான உறவுமுறைகளைப் பார்த்துவிட்டோம். கடைசியாக சனி கிரகத்தைப் பார்த்துவிடுவோம். சனியானது உறவுமுறையைக் குறிக்கும் கிரகமல்ல. அது ஒரு நீதியின் கிரகம். ஒருவர் ஜாதகத்தில் சனிபகவான் லக்னத்தி லேயே அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகர் மிகுந்த நேர்மையுடன் இருப்பார். தவறு செய்ய மாட்டார். தவறு கண்டு அஞ்சுவார். தப்பித்தவறி ஏதேனும் தவறுசெய்துவிட்டால், சனிபகவான் அதற்குரிய தண்டனையை வழங்கி அவரை நல்வழியில் திருப்பிவிடுவார். மற்ற எட்டு கிரகங்களின் சாதகத்தினால் ஒருவர் எவ்வளவு செல்வம், செல்வாக்கை அடைந்தாலும், அவர்கள் தவறுசெய்யும் பட்சத்தில் சனிபகவானின் தண்டனையிலி-ருந்து தப்பவேமுடியாது. எனவே நவ கோள்களில் சனிபகவான் மிக முக்கியமானவர்.
"தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக் காது' என்று கிராமப்புறங்களில் குற்றம் புரிபவர்களைப்பற்றிக் கூறுவார்கள். தண்ணீர்கூடவா கிடைக்காது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னதான் வசதியிருந்தாலும், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுவிட்டால், 350, 400 மில்லி- -லிட்டர் நீருக்குமேல் பருகக்கூடாது என்று மருத்துவர்கள் கூறினால் அவர் என்ன செய்வார்? அருகில் தண்ணீர் இருக்கும்.
ஆனால் அந்த நபரால் குடிக்கமுடியாது. நமது நாட்டில் ஆன்மிகம், மருத்துவம், வாழ்வியல் என அனைத்துமே ஜோதிடத் துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவற்றின் உண்மைத் தன்மையையும் ஆழ்ந்த அறிவியலை யும் புரிந்துகொண்டு நாம் செயல்பட வேண்டும்.
ஒன்பது கிரகங்களில் எட்டு கிரகங்களுக்கு முக்கியமான உறவுமுறைகளைப் பிரித்த ஜோதிட மேதைகள், சனிக்கு மட்டும் உறவென் னும் பகுப்பைத் தராமல், அவற்றுக்கெல்லாம் மேலானது நீதி என்னும் உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளனர். இது பிரபஞ்சத்தின் தீர்ப்பு!
(அதிசயங்கள் தொடரும்)
_____________
சோழி சொன்ன எம்.ஜி.ஆரின் எதிர்காலம்
மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம். ஜி. சக்கரபாணி அவர்கள், அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக இருந்தார். அவரது திறமைக்கு அவர் திரையுலகில் பிரகாசித்தது மிகமிகக் குறைவென்பது என் கருத்து. மிகச்சிறந்த நடிகர் அவர். நடிப்புத் துறையில் அவர் உயர்ந்த இடத்தில் இருந்தபோது, எம்.ஜி.ஆர் அவர்கள் சிறுசிறு வேடங்களில்தான் நடித்துக்கொண்டிருந்தார். "என் தம்பிக்கு வேடம் கொடுத்தால்தான் நான் நடிப்பேன்' என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார் சக்கரபாணி. தன் தம்பி முன்னுக்கு வராதது கண்டு கவலையுற்ற சக்கரபாணி, 1942-ல் கேரளா சென்று, சோழி உருட்டிப் பலன்பார்க்கும் ஜோதிடரை சந்தித்து, "எவ்வளவு முயன்றாலும் என் தம்பிக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. அவன் எப்போது முன்னுக்கு வருவான்?'' என்று கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், "உங்கள் தம்பி எப்போது முன்னுக்கு வருவார்- எப்போது பெரிய நடிகராவார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் தம்பி மரணமடையும்போது லட்சோப லட்சம் மக்கள் கண்ணீர் சிந்தி கதறியழுவார்கள். சோழி உருட்டியதில் இதுமட்டும்தான் எனக்குத் தெரிந்தது" என்றார். இந்த நிகழ்வை, புகழ்பெற்ற மலையாளத் திரைப்பட இயக்குனர் கே.எஸ். சேதுமாதவனிடம் சக்கரபாணி அப்போது கூறியிருக்கிறார். அதை அவர் கவியரசர் கண்ணதாசனின் மூத்தமகன் கண்மணி சுப்புவிடம் சொல்ல, அவர் என்னிடம் சொன்னார். கேரள ஜோதிடர் 1942-ல் சொன்னது 1987-ல் அப்படியே நடந்ததல்லவா!
___________
ஏடு தந்த ஆச்சரியம்!
ஜி.என். ரங்கராஜன் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர். கமலஹாசன் நடித்த "கடல்மீன்கள்', "கல்யாணராமன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். கவிஞர் கண்ணதாசனின் மகன் கலைவாணன், அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் எனது நண்பர். ஒருமுறை ஜி.என். ரங்கராஜன், கலைவாணன் உட்பட இரண்டு மூன்று உதவி இயக்குனர்களுடன், கோவையில் ஏடு (ஓலைச்சுவடி) படிக்கச் சென்றார். ஏடு பார்ப்பவர் ஒன்றரை மணி நேரமாகத் தேடியும் ரங்கராஜனுக்கான ஏடு கிடைக்கவில்லை. அதனால் சோர்ந்துபோன கலைவாணன், புகைபிடிப்பதற்காக எழுந்து வெளியே சென்றார். சற்றுநேரம் கழித்து மீண்டும் உள்ளே வந்தவர் ரங்கராஜன் அருகே அமர்ந்தார். முன்பு அவர் அமர்ந்திருந்தது ரங்கராஜனுக்கு வலப்புறம்; இப்போது தற்செயலாக இடப்புறம் அமர்ந்தார். ஒரு நான்கைந்து நிமிடங்களில் ரங்கராஜனுக்கான ஏடு கிடைத்துவிட்டது! அதிலி-ருந்த முதல்வரியை இவ்வாறு படித்தார் ஜோதிடர்: "தமிழகத்தில் செட்டிகுளத்தைச் சேர்ந்த கவிஞரின் மகன் இந்த ஜாதகரின் இடப்புறம் அமர்ந்திருக்க, உன் ஓலையைப் படிக்கிறேன்.'