Advertisment

நடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம்! பிரம்மிப்பூட்டும் தொடர்! 29

/idhalgal/om/actor-rajesh-writes-thousand-miracles-amazing-series-29

மிழகத்தில் அதிக செல்வாக்கோடு வாழ்ந்த- புகழ்பெற்ற சில மனிதர்களும் தங்கள் இறுதிக்காலத்தில், "எல்லாம் இறைவன் செயல்; எல்லாமே கிரகச்சாரம்' என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த இடத்தில் ஆன்மிகத்திற்குத் துணை போகிறேன் என்று சிலர் எண்ணக்கூடும்.

Advertisment

இதுபோன்ற செயல்களுக்கு அறிவுரை யாக மகாபாரதத்தில் ஒரு காட்சி வருகிறது.

குருக்ஷேத்திரத்தில் 18 நாட்கள் போர் நடந்தது. அது உண்மையாக நடந்ததா இல்லையா என்னும் சர்ச்சை நமக்குத் தேவை யில்லை. இதை கதையாகக்கூட எடுத்துக் கொள்ளலாம். கருத்துதான் முக்கியம்.

Advertisment

அதாவது 18 நாட்கள் போர் நடந்து முடிந்த பிறகு அர்ஜுனன் ரதத்தைவிட்டு இறங்க வேண்டும். துவாபரயுகத்திலுள்ள தர்மத்தின் படி ரதத்தை ஓட்டிய கிருஷ்ணன்தான் முதலில் ரத்தத்தை விட்டிறங்கி, அர்ஜுன னின் கையைப் பிடித்து இறக்கிவிட வேண்டும். ஆனால் கிருஷ்ணர் ரதத்தைவிட்டு இறங்காமல் உட்கார்ந்தே இருந்தார்.

அப்பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் கீழே இறங்கி என்னை இறக்கிவிடுங்கள்" என்றான்.

அப்போது கிருஷ்ணர், "தர்மப்படி நான்தான் முதலில் கீழே இறங்கி பிறகு உன்னை இறக்கிவிட வேண்டும். ஆனால் இந்த 18 நாட்கள் நடந்த போரினால் பல அஸ்திரங்கள் பாய்ந்து ரதம் வெடிக்கும் தறுவாயில் உள்ளது. நான் முதலில் இறங்கினால் ரதம் வெடித்துவிடும். எனவே முதலில் நீ இறங்கு'' என்றார்.

உடனே அர்ஜுனன் கீழ இறங்கி கிருஷ்ணரின் கையைப் பிடித்து இறக்கிவிட்டான். இருவரும் இறங்கியபிறகு ரதம் வெடித்து சுக்குநூறாகிவிட்டது.

அப்போதுதான் அர்ஜுனனுக்கு, நடைபெற்ற போரில் போராடியது நானல்ல; அடைந்த வெற்றிக்குக் காரணமும் நானல்ல. முழுவதற்கும் காரணம் கிருஷ்ணன்தான் என்று தெரியவந்தது. இதற்குப் பெயர்தான் முழுவதுமாக சரணாகதி அடைவது. இந்த இடத்தில் அகந்தை முற்றிலுமாக அகழ்கிறது. இந்த நிலையானது யாருக்கெல்லாம் வருகிறதோ, அவர்களில் சிலர் இறைவனின் செயல் என்கின்றனர்; சிலர் கிரகச்சாரம் என்கிறார்கள். இங்கு ஆன்மிகவாதிகள் கடவுளைப் புகுத்த வேண்டுமென்னும் நோக்கத்தில் இந்தக் காட்சியை மகாபாரதத்தில் உரிய இடத்தில் வைத்து கிருஷ்ணனையும் விஷ்ணுவின் ஒரு அவதார மாக்கி, எல்லாம் அவன் செயல் என்னும் கருத்தைக் கூறியுள்ளனர்.

அந்தக் காலத்தில் மக்களுக்கு ஜோதிடத்தில் முழு நம்பிக்கை இருந்ததா இல்லையா என்பது தெரியவில்லை பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் கீழேதான் கிரகங்கள் என்ற அடிப்படையில்

மிழகத்தில் அதிக செல்வாக்கோடு வாழ்ந்த- புகழ்பெற்ற சில மனிதர்களும் தங்கள் இறுதிக்காலத்தில், "எல்லாம் இறைவன் செயல்; எல்லாமே கிரகச்சாரம்' என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த இடத்தில் ஆன்மிகத்திற்குத் துணை போகிறேன் என்று சிலர் எண்ணக்கூடும்.

Advertisment

இதுபோன்ற செயல்களுக்கு அறிவுரை யாக மகாபாரதத்தில் ஒரு காட்சி வருகிறது.

குருக்ஷேத்திரத்தில் 18 நாட்கள் போர் நடந்தது. அது உண்மையாக நடந்ததா இல்லையா என்னும் சர்ச்சை நமக்குத் தேவை யில்லை. இதை கதையாகக்கூட எடுத்துக் கொள்ளலாம். கருத்துதான் முக்கியம்.

Advertisment

அதாவது 18 நாட்கள் போர் நடந்து முடிந்த பிறகு அர்ஜுனன் ரதத்தைவிட்டு இறங்க வேண்டும். துவாபரயுகத்திலுள்ள தர்மத்தின் படி ரதத்தை ஓட்டிய கிருஷ்ணன்தான் முதலில் ரத்தத்தை விட்டிறங்கி, அர்ஜுன னின் கையைப் பிடித்து இறக்கிவிட வேண்டும். ஆனால் கிருஷ்ணர் ரதத்தைவிட்டு இறங்காமல் உட்கார்ந்தே இருந்தார்.

அப்பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் கீழே இறங்கி என்னை இறக்கிவிடுங்கள்" என்றான்.

அப்போது கிருஷ்ணர், "தர்மப்படி நான்தான் முதலில் கீழே இறங்கி பிறகு உன்னை இறக்கிவிட வேண்டும். ஆனால் இந்த 18 நாட்கள் நடந்த போரினால் பல அஸ்திரங்கள் பாய்ந்து ரதம் வெடிக்கும் தறுவாயில் உள்ளது. நான் முதலில் இறங்கினால் ரதம் வெடித்துவிடும். எனவே முதலில் நீ இறங்கு'' என்றார்.

உடனே அர்ஜுனன் கீழ இறங்கி கிருஷ்ணரின் கையைப் பிடித்து இறக்கிவிட்டான். இருவரும் இறங்கியபிறகு ரதம் வெடித்து சுக்குநூறாகிவிட்டது.

அப்போதுதான் அர்ஜுனனுக்கு, நடைபெற்ற போரில் போராடியது நானல்ல; அடைந்த வெற்றிக்குக் காரணமும் நானல்ல. முழுவதற்கும் காரணம் கிருஷ்ணன்தான் என்று தெரியவந்தது. இதற்குப் பெயர்தான் முழுவதுமாக சரணாகதி அடைவது. இந்த இடத்தில் அகந்தை முற்றிலுமாக அகழ்கிறது. இந்த நிலையானது யாருக்கெல்லாம் வருகிறதோ, அவர்களில் சிலர் இறைவனின் செயல் என்கின்றனர்; சிலர் கிரகச்சாரம் என்கிறார்கள். இங்கு ஆன்மிகவாதிகள் கடவுளைப் புகுத்த வேண்டுமென்னும் நோக்கத்தில் இந்தக் காட்சியை மகாபாரதத்தில் உரிய இடத்தில் வைத்து கிருஷ்ணனையும் விஷ்ணுவின் ஒரு அவதார மாக்கி, எல்லாம் அவன் செயல் என்னும் கருத்தைக் கூறியுள்ளனர்.

அந்தக் காலத்தில் மக்களுக்கு ஜோதிடத்தில் முழு நம்பிக்கை இருந்ததா இல்லையா என்பது தெரியவில்லை பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் கீழேதான் கிரகங்கள் என்ற அடிப்படையில்தான் அவர்கள் எடுத்துக்கொண்டார்களா? ஏனென்றால் பாரதப்போருக்கு முதல் நாள் கலபலி கொடுக்கத் தீர்மானித்த நிலையில், அமாவாசையில் பலிகொடுப்ப வருக்கு வெற்றிகிட்டும் என்று துரியோதனனுக்கு முன்னதாகவே சகாதேவன் சொல்லிவிட்டான். இதையறிந்த கிருஷ்ணன் அதற்கு முன்நாளிலேயே அமாவாசையை மாற்றியமைத்து தர்ப்பணம் செய்தார். கிருஷ்ணர் தர்ப்பணம் செய்ததைப் பார்த்த சூரியனும் சந்திரனும், அவர் தெரியாமல் செய்கிறாரோ என்றெண்ணி இருவரும் ஒன்றுசேர்ந்து வந்து அமாவாசையை உருவாக்கி விட்டார்கள்.

மேற்சொன்ன காரணங்களால்தான் வைணவர்களில் பலரும் ஜோதிடத்தை ஏற்பதில்லை. கிருஷ்ணர் நினைத்தால் ஜோதிடத்தையே மாற்றிவிடுவார்; கிரகங் களையே மாற்றிவிடுவார். கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில்தான் இந்த அண்ட சராசரங் களும் இயங்குகின்றன என்கிறார்கள். மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றில் எந்த அளவுக்கு ஜோதிடத்தை புகுத்தியுள்ளனரோ, அதே சமயம் எல்லாமே படைத்த கடவுளுக்குக் கீழேதான் என்றும் கூறியுள்ளனர்.

இராமாயணம் மகா பாரதம் ஆகிய இரு இதி காசங்களும் நடந்தனவோ இல்லையோ- இவை கற்பனையாக உருவாக்கப் பட்டவை என்றும் கூறு கிறார்கள் சிலர். அதற்குள் போய் விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவற்றுக்குள் சொல்லப்பட்ட கருத்துகளும், அறிவுரை களும், கதாபாத்திரங்களின் குணங்களும், காட்சிகளும் மனித வாழ்வு இந்த பூமி யிலிருக்கும்வரை பொருந் தும். அதுவும் சரியான கோணத்தில் பார்த்தால் தான் புரியும். வேறு வகையான கோணத்தில் பார்த்தால் அது மனித வாழ்வுக்குப் பயன்படாது.

அதன் அடிப்படையில் ஜோதிடத்தை முழுமை யாக நம்பவேண்டும்; விதியை யாரும் மாற்றமுடியாது என்னும் கருத்தை வலி யுறுத்துவது போன்ற ஒரு காட்சி மகாபாரதத்தில் வருகிறது.

ஒருநாள் தர்மர் ஏதோ சிந்தனையில் இருந்தார்.

அப்போது நாரதர் வந்தார். "நன்றாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டார் தர்மர். அதற்கு அவரும் தர்மரைப் பார்த்து, "நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டார். "தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்றார் தர்மர். "நான் சொர்க்கத்திலிருந்து நேராக இங்குதான் வருகிறேன்'' என்றார் நாரதர். "அப்படியா...'' என்ற தர்மர் அத்துடன் விட்டுவிட்டிருக்கலாம். அங்குதான் விதி தனது முதல் காட்சியை ஆரம்பிக்கிறது.

தர்மர் நாரதரிடம், "என்னுடைய தந்தையைப் பார்த்தீர்களா?'' என்று கேட்டார். "உன் தந்தையைப் பார்த்துவிட்டுதான் வருகிறேன்'' என்றார் நாரதர். அத்துடன் விட்டுவிட்டாலும் பரவாயில்லை. "என் தந்தை என்ன சொன்னார்?'' என்று தர்மர் மீண்டும் கேட்டார். "துரியோதனன் முதலானவர்களிடம் எந்தவிதமான காழ்ப்புணர்வும் இல்லாமல் இருக்கச் சொல்; மேலும் எல்லா விஷயத்திலும் இணங்கிச் செல்லுமாறு கூறு என்று சொன்னார்'' என்றார் நாரதர்.

இவ்வாறு கூறிவிட்டு நாரதர் சென்றபிறகு, சிறிதுநேரம் கழித்து விதுரர் அங்கே வந்தார். அவரை அன்புடன் வரவேற்றார் தர்மர். விதுரர் தான் கொண்டுவந்த ஒரு ஓலையை தர்மரிடம் ஒப்படைத்து, "இது துரியோதனன் கொடுத்த ஓலை'' என்று சொன்னார். அந்த ஓலையை வாங்கிப் படித்தார் தர்மர். அதில் எழுதப்பட்டிருந்த வாசகம்- "மண்டபம் காண வாரீர்; மகிழ்ச்சிக்கு சூதாடுவோம்' என்றிருந்தது.

அதைப் படித்த தர்மர், "இப்பொழுதுதானே தந்தை நாரதரிடம் துரியோதனன் முதலியவர்களிடம் எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம்; அமைதியாகப் போங்கள் என சொன்னார்?' என்பதை நினைத்துப் பார்த்தார்.

பிறகு தர்மர் சகாதேவனிடம் ஓலையைக் கொடுத்து, "நாம் அங்கு போவோமா வேண்டாமா என்று யோசனை கூறு. நீதான் முக்காலமும் உணர்ந்தவனா யிற்றே'' என்றார்.

ss

ஓலையை வாங்கிய சகா தேவன், "இந்த ஓலையை எழுதி யது யார்?'' என்று கேட்டான். "துரியோதனன்'' என்றார் தர்மன். "கையொப்பமிட்டது யார்?'' என்றான் சகாதேவன். "திருதராஷ்டிரன்'' என்றார் தருமர். "ஓலையைக் கொண்டு வந்தவர் யார்?'' என்ற கேள்வி அடுத்து சகாதேவனிமிருந்து வந்தது. "விதுரர்'' என்று பதில் சொன்னார் தர்மர். "ஓலையை யாரிடம் கொடுத்தீர்கள்?'' என்று கேட்டான் சகாதேவன். "உன்னிடம் தான் கொடுத்தேன்'' என்றார் தர்மர். "யாரிடம் பதில் கேட்கிறீர்கள்?'' என்று மீண்டும் கேட்டான் சகாதேவன். "சகாதேவனாகிய உன்னிடம்தான்'' என்றார் தர்மர்.

இதே கேள்விகளை மீண்டும் மீண்டும் மூன்றுமுறை கேட்டான் சகாதேவன். தர்மனுக்கு கோபம் வந்துவிட்டது. "என்ன சகாதேவா... உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா ஒரே கேள்வி எத்தனை முறைதான் கேட்பாய்?'' என்றார். அதற்கு சகாதேவன், "துரியோதனன் எழுத திருதராஷ்டிரர் கையொப்பம் இட்டதற்காகவோ, விதுரர் கொண்டுவந்த ஓலை என்பதற்காகவோ, தர்மராகிய உங்களிடம் கொடுத்ததற்காகவோ, சகாதேவனாகிய என்னிடம் நீங்கள் யோசனை கேட்டதற்காகவோ நாம் அங்கு செல்லப்போவதில்லை. இவையெல்லாம் நடப்பதற்கு முன்பாகவே, விதி நம்மை அங்கு அழைத்துச் செல்வதற்காக ஒரு ரதத்தில் நம் வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருக்கிறது'' என்றான்.

இதைக்கேட்ட தர்மருக்கு, தந்தையும் சுமுகமாகப் போகச் சொன்னதாக நாரதர் கூறியது நினைவுக்குவந்தது. மண்டபம் காணப் போவோம் என்று புறப்பட்டார். போகாமல் இருந்தால் பகைவரும் என்று கருதி தர்மர் சென்றார். போனதால்தான் பகையே வந்தது. அந்த இடத்தில்தான் விதி விளையாடியது.

தர்மர் சூதாட்டத்தில் தன் தம்பிகள் உட்பட அனைவரையும் இழந்து, இறுதியாகத் தன் மனைவியையே பணயம் வைத்தார் .அதைக்கண்ட தர்மரின் தம்பிகள், "அண்ணா, பாஞ்சாலியை பணயம் வைக் கிறீர்களே, நளன்கூட தமயந்தி யைப் பணயம் வைக்கவேண்டிய சூழ்நிலை வந்தபோது அவ்வாறு செய்யாமல் எழுந்து விட்டாரே. அவ்வாறிருக்கும்போது நீங்கள் ஏன் அண்ணா இவ்வாறு செய்கிறீர்கள்?'' என்று கேட்டனர்.

அதற்கு தர்மர் அவர்களைப் பார்த்து, "நளனைப் பிடித்ததோ சனி; என்னை பிடித்தது சகுனி'' என்றார். அதன் உட்பொருள், சனி எங்கோ இருந்து இயக்குகிறது; ஆனால் சகுனியோ உடனிருந்தே கெடுக்கிறான் என்பதுதான். கிரகங்களைவிட தீய மனிதர்கள் மிகமிக மோசமானவர்கள் என்பதுதான் இதன்மூலம் நமக்குக் கிடைக்கும் செய்தி.

இதேபோல நள வெண்பாவில் ஒரு காட்சி வருகிறது. அன்னப்பறவையின் நடையழகைப் பார்த்து ரசித்த நளன் "உன்னுடைய நடை மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த நடையை யாரிடம் நீ கற்றுக்கொண்டாய்?'' என்று கேட்டான். அதற்கு அந்த அன்னப்பறவை, "நாங்கள் தமயந்தியிடமிருந்துதான் இந்த நடையைக் கற்றுக்கொண்டோம்'' என்று சொன்னது. அதைக்கேட்டு நளன் உடனடியாக தமயந்தியின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டான். அன்னத்தின் தூதால் அவர்களது காதல் வளர்ந்தது.

அந்தக்கால வழக்கப்படி சுயம்வரம் மூலமாகதான் திருமணம் முடிப்பார்கள். அதன்படி தமயந்தியை மணக்க விரும்பிய இளவரசர்கள் பலரும் பல்வேறு நாட்டி லிருந்து வந்தார்கள். நளனும் அவர்களுடன் சென்றிருந்தான். தமயந்தியின் கையில் ஒரு மாலையைக் கொடுத்து, விருப்பப் படுபவர்களுக்கு மாலையிடச் சொன்னார் கள். இளவரசர்களுடன் வானத்திலிருந்து தேவர்கள் பலரும் வந்திருந்தார்கள். வந்திருந்த தேவர்கள் அனைவரும் நளனைப் போன்றே உருவத்தில் இருந்தார்கள். இதில் யார் உண்மை யான நளன் என்பதைக் கண்டுபிடிப்பது சிரம மான சூழல். அந்த இக்கட்டான நிலையை தமயந்தி சமாளிக்கவேண்டி இருந்தது.

மாலையுடன் வந்த அவள் பெண்களுக்கே உரிய அறிவுக் கூர்மையால் தேவர்கள் கழுத்தில் அணிந்திருந்த மாலைகள் வாடுகிறதா- கண்கள் இமைக்கிறதா- கால்கள் தரையில் படுகின்றனவா என்பதை உற்று நோக்கி னாள். பொதுவாக தேவர்களின் கண்கள் இமைக்காது, கால்கள் தரையில் படாது.

அவர்கள் அணிந்திருக்கும் மலர் மாலைகள் வாடாது. இவற்றை வைத்து உண்மையான நலனைக் கண்டறிந்து அவனுக்கு மாலை யிட்டாள். வந்திருந்த தேவர்களும் மற்ற இளவரசர்களும் தோல்வியடைந்து அவரவர் இருப்பிடம் திரும்பினர்.

மன்னர்கள் திரும்பிச் செல்லும் வழியில் சனிபகவான் எதிரே வந்துகொண்டி ருந்தார். அவரைப் பார்த்த மன்னர்கள் சனியை நலம் விசாரித்துவிட்டு, "தாங்கள் எங்கே செல்கிறீர்கள்?'' என்று கேட்டார் கள். அதற்கு சனி, "தமயந்தியின் சுயம்வரத் தில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருக் கிறேன்'' என்றார். அதுகேட்ட மன்னர்கள் சிரித்துவிட்டு, "சனி பகவானே, உங்களுக்கு விவரம் தெரியாதா? சுயம்வரம் முடிந்து விட்டது. அது முடிந்தபிறகுதானே நாங்கள் எல்லாமே திரும்பிக் கொண்டிருக்கிறோம்'' என்றனர்.

"அப்படியா... யாருக்கு தமயந்தி மாலை யிட்டாள்?'' என்று சனிபகவான் கேட்டார். "நளனுக்குதான் தமயந்தி மாலையிட்டாள்'' என்றார்கள். அதைக்கேட்ட சனி பகவானுக்கு கடும் கோபம் வந்தது. எனவே நளனை தண்டிக்க வேண்டுமென்று தருணத்தை எதிர்பார்த்திருந்தார். ஆனால் நளனைப் பிடிப்பதற்கு எந்த வழியும் சனி பகவானுக்குத் தெரியவில்லை.

இறுதியில் நளன் கால் கழுவும்பொழுது, காலில் ஒரு சிறிய அளவு தண்ணீர் படாமல் இருந்தது. அந்த இடத்திற்குள் சனி புகுந்தார். இந்த இடத்தில்தான் விதி விளையாடுகிறது. இதை ஆழமாகப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். தமயந்தி அழகாக இருந்தது- நடந்தது அவளுடைய குற்றமா- அன்னப் பறவை தமயந்தி நடையைப் பின்பற்றியது அவற்றின் தவறா- அதைப் பார்த்து தமயந்தியை விரும்பியது நளனின் தவறா- சனிபகவானின் கால் ஊனமாய் இருந்ததால் சுயம்வரத்திற்கு தாமதமாக வர வேண்டியதாகிவிட்டது- அது யாருடைய குற்றம்- சனி தமயந்தியைத் திருமணம் முடிக்க நினைத்தது சனியின் குற்றமா அல்லது தமயந்தி அழகாகப் படைத்தது பிரம்மாவின் குற்றமா? எது எப்படியோ- துன்பங்களை அனுபவித்தது நளனும் தமயந்தியும்தான்.

இதைத்தான் பாவம் ஒருபக்கம்; பழி ஒருபக்கம் என்பார்கள். இதுபோல நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கும் ஏதோவொரு காரணமிருக்கும். அது எங்கோ இருக்கிறது. அது ஏதோவொரு இடத்தில் சம்பந்தமில்லாமல் ஆரம்பிக்கும். அந்த ஆரம்பப் புள்ளி நமக்குத் தெரியாது. தெரிந் திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒருவருக்குத் தெரிந்துவிட்டால் அவர் ஞானியாவார்.

தற்போதைக்கு இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன். பின்னர் சந்திப்போம்... நன்றி, வணக்கம்!

om010323
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe