வாசகர்கள் பலர் ஜோதிடம் பற்றிதான் நிறைய கேட்கிறார்கள். எனவே இரண்டு சம்பவங்களை இங்கு எழுதுகிறேன்.

திரைப்படப் பாடலாசிரியரும் என்னுடைய நண்பருமான பிறைசூடன், 1980-களில் நாடி ஜோதிடம் பார்ப்பதற் காக வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் புறப் பட்டார். வழியில், சென்னை தியாகராய நகரில் தனது நெருங்கிய நண்பரைச் சந்தித்திருக்கிறார். அவரிடம், தான் வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போவதாகக் கூறி, "நீயும் என்னுடன் வா.

எனக்கும் துணையாக இருக்கும்'' என்று அழைத்திருக்கிறார்.

அதைக்கேட்ட நண்பர் வருவதாக சம்மதம் தெரிவித்து, "வீட்டில் தந்தை யிடம் சொல்-விட்டு வந்துவிடுகிறேன். ரயில் நிலையத்தில் காத்திரு'' என கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பாடலாசிரிய ரும் இரண்டு டிக்கெட்டுகளை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்தில் காத்திருக்க, சற்று நேரத்தில் அந்த நண்பரும் வந்துவிட, இருவரும் பயணமானார்கள்.

Advertisment

மறுநாள் காலை வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று நாடி ஜோதிடம் பார்த்தனர். அப்போது பாடலாசிரியருக்கு சிறிது நேரத்தில் நாடி கிடைத்துவிட்டது. ஆனால், நண்பருக்கு மதியம் ஒருமணி வரை நாடி கிடைக்கவில்லை. சாப்பாடு நேரமானதால் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர்.

பிறகு, மீண்டும் இரண்டு மணிக்குத் திரும்பிவந்து வேறு சில நாடிகளை எடுத்து நண்பருக்காகப் படிக்கும்போது, "உங்கள் அப்பா உயிருடன் இருக்கிறாரா?'' என்று ஜோதிடர் கேட்டுள்ளார்.

நண்பரும், "என் அப்பா உயிருடன் இருக்கிறார். வரும்போது அவரிடம்தான் செலவுக்குப் பணம் வாங்கிவந்தேன்'' என்று கூறியுள்ளார். பாடலாசிரியரும், "அது உண்மைதான். எனக்குத் தெரியும். இவருடைய அப்பா நன்றாகத்தான் இருக்கிறார்'' என்று சொன்னார்.

Advertisment

ஆனால் நாடி ஜோதிடர், "இல்லை... உங்கள் தந்தை இப்போது உயிருடன் இருக்க வாய்ப்பில்லை'' என்று கூறியதும், நண்பருக்குக் கோபம் வந்து, நாடி பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு வெளியேறிவிட்டார்.

பிறகு பாடலாசிரியர் தன் நண்பருடைய நாடிபற்றி விசாரித்திருக் கிறார். அதற்கு ஜோதிடர், "நாடியில் இவ்வேடு படிக்கும் வேளை ஜாதகனின் தந்தை உயிருடன் இல்லை'' என்று இருப்பதாகக் கூறினார். பாடலாசிரியருக்கு திகைப்பு. தனது நாடியை மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு, நண்பருடன் சென்னை புறப்பட்டார்.

மறுநாள் காலை தி.நகர் ரயில் நிலையத்தில் இறங்கி நடந்துவரும்போது, உயிரோடு இருக்கும் தந்தை இறந்துவிட்டதாக ஜோதிடர் கூறியதைப் பேசி கிண்டல் செய்து சிரித்துக்கொண்டே வந்தாராம் நண்பர். ஆனால் இருவரும் தங்களது தெருவில் திரும்பியவுடன் திடீர் அதிர்ச்சி. தாரை தப்பட்டையின் துக்க ஒ- கேட்க ஆரம்பித்தது. அருகில் நெருங்கிவர, அது அந்த நண்பரின் வீடு. இறந்துபோனவர் நண்பரின் தந்தைதான் என்பது அவர்களுக்குத் தெரிந்தது.

முதல் நாள் மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து உட்கார்ந்தவர், தன் மனைவியிடம் தண்ணீர் கேட்டிருக்கிறார்.

மனைவி தண்ணீர் எடுத்துவந்து கொடுக்கும்போது அவர் உயிருடன் இல்லையென்பதை அங்கே அறிந்துகொண்டார் பாடலாசிரியர்.

சம்பவத்தன்று மதியம் ஒரு மணிவரை கிடைக்காத ஓலை, மதியம் இரண்டு மணிக்குக் கிடைத்தபோது, அந்த நாடியில் "இவ்வேடு படிக்கும் வேளை, ஜாதகனின் தந்தை உயிருடன் இல்லை' என்று இருந்ததை நினைத்து வியந்திருக்கிறார்.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று இறைவனைக் குறிப்பிடுவார்களே... அதேபோலதான் இந்த நிகழ்ச்சியுமா அல்லது பிரபஞ்சத்தின் அதிசய செயலா? அப்படியென்றால் நம்முடைய செயல்களின் அளவுதான் என்ன?

நடுங்க வைத்த நாடி

இது என் மாமனாருக்கு ஏற்பட்ட அனுபவம்.

ஒருகாலத்தில் திராவிடர் கழகத்தில் பெரும்பங்காற்றியவர் அணைக்காடு டேவிஸ். அவருடைய ஒரே மகன்தான். என்னுடைய மாமனார். திராவிடர் கழகக் கொள்கைகளில் அவருக்கு அதிக ஈடுபாடும், நம்பிக்கையும் உண்டு. ஜோதிடம், நாடி, குறிபார்த்தல் போன்ற எதிலும் நம்பிக்கையில்லாதவர்.

அவர் திருநெல்வே-யில் ஒரு பா-டெக்னிக்கில் வேலை பார்த்தார். 1960-ஆம் ஆண்டுகளில், அங்கு ரயில் நிலையத்துக்கு எதிரில் ஒரு மர நிழ-ல் சாமியார் ஒருவர் இருந்தார். ஒருவருடைய முகத்தைப் பார்த்தே அவருடைய எதிர்காலத்தைத் துல்-யமாகக் கணிப்பாராம். ஜாதகத்தைக் கொடுத்துப் பலன் கேட்டாலும் மிகச் சரியாகச் சொல்வாராம். திருநெல்வே-யில் பலருக்கும் அவரைப் பற்றித் தெரியும்.

என் மாமனாருடன் சேர்த்து நான்கு பேர் ஒரு விடுமுறை நாளில் மாலை வேளையில் ஓட்டலுக்குச் சென்று சிற்றுண்டி சாப்பிட்டபின் மரத்தடி சாமியாரிடம் போயிருக்கிறார்கள். என்னுடைய மாமனாருக்கு ஜோதிடத்திலும், ஆரூடத்திலும் நம்பிக்கையில்லாததால் சற்று தள்ளி சாலைக்கு அந்தப் பக்கமுள்ள மரத்தடியில் சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார்.

மாமனாரின் நண்பருக்கு ஜோதிடம் சொல்- முடித்தபிறகு என்னுடைய மாமனாரைப் பார்த்து, "நீங்கள் ஜோதிடம் பார்க்கவில் லையா?'' என்று சாமியார் கேட்டிருக்கிறார். அதற்கு நண்பர், "அவர் திராவிடர் கழகக் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இதிலெல்லாம் அவருக்கு நம்பிக்கையில்லை'' என்று சொல்-யிருக்கிறார். உடனே அந்தச் சாமியார் என் மாமனாரை சைகையால் தன்னிடம் அழைத்திருக்கிறார். அந்த வட்டாரத்தில் பிரபலமான சாமியார் என்பதாலும், பண்பாடு- வயது கருதியும் அவர் அருகே சென்றிருக்கிறார்.

சாமியார், "ஏன் தம்பி! நீங்கள் ஜோதிடம் பார்க்கவில்லையா'' என்று கேட்க, அதற்கு மாமனார், "நான் பார்க்க விரும்பவில்லை'' என்று நாகரீகமாகப் பதிலளித்திருக்கிறார்.

rr

"உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லையல்லவா?'' என்று நமட்டுச் சிரிப்பு சிரித்த சாமியார், "நீங்கள் ஜோதிடம் பார்க்க வேண்டாம். ஆனால், உங்களுக்கு நான் ஆரூடம் கூறுகிறேன். அது நடக்கிறதா என்று பாருங்கள். அப்படி நடந்தால் அதன்பிறகு இதை நம்புங்கள்'' என்றார்.

மாமனாரும் தலையாட்டினார்.

"நீங்கள் விரைவில் முஸ்-ம் நாட்டுக்கு வேலைக்குச் செல்வீர்கள். உங்கள் மனைவி உங்களுடைய வாழ்நாளில் பாதி நாட்கள்தான் உயிருடன் இருப்பார். இந்த இரண்டும் நடக் கிறதா என்று பாருங்கள். அப்படி நடந்தால் இதுபோன்ற விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படட்டும்'' என்று கூறியிருக் கிறார்.

அவர் சொன்ன முதல் கணிப்பு- "நீங்கள் விரைவில் இந்திய நாட்டைவிட்டுச் சென்று விடுவீர்கள். முஸ்-ம் நாட்டில் வேலை பார்ப்பீர்கள் என்பது. அவர் சொன்ன சமயத்தில் மாமனாருக்கு வெளிநாடு செல்வதற்கான எந்த எண்ணமும் இல்லை. அவருடைய சகலை மட்டும் அபுதாபியில் வேலை பார்த்தார்.

ஆரூடம் சொல்- முடித்தவுடன் நான்கு பேரும் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

நேராக வீட்டிற்கு வந்த மாமனார் தன்னுடைய மனைவியிடம் மரத்தடி சாமியார் சொன்ன ஆரூடக் கணிப்பைக் கூறியுள்ளார்.

அதைக்கேட்ட அவரது மனைவி, "நான் வாழ்நாளில் பாதி நாட்கள்தான் வாழ்வேன் என்று ஏற்கெனவே எனக்குத் தெரியும்'' என்று கூறியுள்ளார். ஏற்கெனவே தெரியுமா? ஏன் என்னிடம் இதுபற்றிக் கூறவில்லை?'' என்றிருக்கிறார்.

அதற்கு அவர், "திருமணத்திற்குமுன்பு எனது தாயார் எனக்கு ஜோதிடம் பார்த்தார்கள். ஜோதிடர் 45 வயதுவரைதான் இந்தப் பெண்ணிற்கு ஆயுள் இருக்கிறது என்று சொல்-யிருக்கிறார். எனவேதான் எனது தாயார் என் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யமாட்டார். திருமணத்திற்குமுன்பு இதை உங்களிடம் கூறினால் நீங்கள் எப்படி இதை எடுத்துக்கொள்வீர்கள் என்று எனக் குத் தெரியாது. எனவேதான் உங்களிடம் நான் சொல்லவில்லை; அது தவறுதான்'' என்றிருக்கிறார். பிறகு இருவரும் நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிட்டார்கள். நான்கு ஆண்டுகள் சென்றபின், மாமனாரின் சகலை இவரை அபுதாபிக்கு வேலை பார்க்க அழைத்திருக்கிறார். இவருக்கு தமிழகத்தில் சரியான வேலை கிடைக்காததால், அபுதாபி சென்றுவிட்டார்.

1978-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி கடுமையான ஆஸ்துமா நோயால் இதயம் பாதிக்கப்பட்டு இவரின் மனைவி இறந்து போனார். இது நடந்து சில நாட்கள் கழித்துதான் மரத்தடி சாமியார் கூறியது மாமனாருக்கு நினைவுக்குவந்தது.

1983-ஆம் ஆண்டில் நாடி ஜோதிடம், ஜோதிடம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டபிறகு, "இதுபற்றி உங்களுக்கு எதுவும் அனுபவம் உண்டா?'' என்று அவரிடம் கேட்டேன். அப்பொழுதுதான் தன்னுடைய இந்த அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

ஜோதிடம் போன்றவற்றைப் பற்றி நான் அதிகமாகக் கூறியதைக்கேட்டு அவருக்கும் இதைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவர் மனதுக்குள் யாரிடமும் சொல்ல முடியாத, விசாரிக்க முடியாத, தெரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள், உண்மைகள், மர்மங்கள் இருந்தன.

"நாடி பார்த்தால் அதெல்லாம் தெரிந்து விடுமா?'' என்று கேட்டார்.

"ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளலாம். என்றா லும் உங்களுடைய அறிவும் நினைவாற்றலும்தான் உண்மைகளைக் கண்டுபிடிக்க உதவும்'' என்றேன்.

என்னிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு என்னுடைய குணம் நன்றாகத் தெரியும். எதையும் ஆராயாமல் சொல்லமாட்டேன். எதைச் சொன்னாலும் அதில் உண்மை இருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அந்தவரிசையில் என் மாமனாரும் ஒருவர். அவர் எனக்கு நெருங்கிய உறவு என்பதால் சிறுபிள்ளையில் இருந்தே நானும் அவரும் கிட்டத்தட்ட அண்ணன்- தம்பிபோல நெருக்கமாகப் பழகிவந்தோம்.

என் திருமணம் முடிந்தபிறகு 1985-ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்னிடம், "வைத்தீஸ்வரன் கோவி-ல் போய் நாடி பார்க்கலாம்'' என்றார்.

நானும் ஒப்புக்கொண்டேன். நாடி பார்க்கும் போது, வழக்கம்போல என் மாமனாருக்கு கடந்தகால- எதிர்கால விஷயங்களைச் சொன்னார்கள்.

சொன்னதில் முக்கியமான விஷயம், அவருடைய மனைவியின் மரணம் குறித்ததுதான். அதாவது, என் மாமியார் அதிகமான தெய்வபக்தி உள்ளவர். உடல்நிலை எவ்வளவு சரியில்லை என்றா லும் ஆஸ்பத்திரிக்குப் போகமாட்டார். எந்த டாக்டரையும் பார்க்கமாட்டார். மருந்தும் சாப்பிடமாட்டார். அப்படிப்பட்ட வருக்கு ஆஸ்துமா, மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாததால் அவர் கஷ்டப்பட்டது கொஞ்சநஞ்சமல்ல.

போகப்போக ஆஸ்துமா முற்றிவிட்டது. டிசம்பர் மாதம் என்பதால் அதிகமான பனி. கடுமையாக சளி பிடித்துவிட்டது. மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டார். உடனிருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்தும் அவர் செல்லவில்லை. டாக்டரைப் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. அதனால் சுவாசத் தொல்லை அதிகமாகி இதயம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இந்த விஷயத்தை நாடியில், "வனிதை உயிர் பிரியவே நாற்பான் ஈர் ஈரினுள்ளே' என்றும், "மூச்சு வழியில் ஏற்பட்ட சுவாசத் தொல்லையால், இருதய பங்கம் ஏற்பட்டு மரணமடைந்தார்' எனவும் வாசித்தார். என் மாமனார் பிறந்தது 1934. அவர் மனைவி இறந்தது 1978 டிசம்பர். "நாற்பான் ஈர் ஈரினுள்ளே' என்று வாசித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம், 1978-ல் மாமனா ருக்கு 44 வயது.

மும்பையில் ஒரு நண்பரிடம் அதிக பணத்தைக் கொடுத்தார். அந்தத் தொகை திரும்ப வரவேயில்லை. அதுவும் நாடியில் வந்தது. அதைக்கேட்ட மாமனாருக்கு ஒன்றுமே புரியவில்லை!

"இதையெல்லாம் எப்படி இவர்களால் சொல்லமுடிகிறது?'' என்றார். "கடைசி காலத்தில் என் மாமனார், நரம்பு குருதி சம்பந்தமான நோய்வந்து கோலூன்றி நடப்பார்' என்றும் நாடியில் கூறியிருந்தார்கள்.

அதுபோலவே 1994-ஆம் ஆண்டு கா-லுள்ள நரம்பு வெடித்து நிறைய ரத்தம் வெளியாகி, மதுரையிலுள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு குணமடைந் தார். ஆனால், அதன்பிறகு ஒழுங்காக நடக்க முடியவில்லை.

இவையெல்லாம் அனுபவப்பூர்வமான உண்மைகள்!

(அதிசயங்கள் தொடரும்)