Advertisment

அத்தனை தோஷத்தையும் நிவர்த்தி அருளும் ஆவூர் பஞ்சபைரவர் திருத்தலம்! - கோவை ஆறுமுகம்

/idhalgal/om/aaur-panchabhairava-temple-cures-all-evils-coimbatore-arumugam

"நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.'

-திருவள்ளுவர்

தன் நேர்மையான வழியை விட்டுவிலகாத உறுதியான உள்ளமும் அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு மலையை விடச் சிறந்தது என போற்றப்படும்.

Advertisment

சந்நியாசி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரைத் தேடிவந்த குணசிலன் அவரை வணங்கி னான். சுவாமி தாங்கள் எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும் என்றான்.

என்ன செய்யவேண்டும் உனக்காக என்றார்.

"நானும் என் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்றான். அவ்வளவு தானே... என்று சொல்லி இறைவா எல்லாரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும். எங்குமே துன்பம் இல்லாமல் மறைய வேண்டும். உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும். அனைவருக்கும் நிம்மதி வேண்டும்...' என தன் வழிபாட்டைத் துவங்கினார் சந்நியாசி.

சந்நியாசியின் வழிபாடு குண சீலனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. சுவாமி என்ன இது.

Advertisment

எனக்காகவும் என் குடும்பத்திற் காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.

நீங்களோ உலகமக்களுக்காக பிரார்த்தனை செய்கிறீர்கள். உங்கள் இறைவணக்கத்தில் ஒருமுறைகூட என் பெயரையோ, என் குடும்பத்தையோ குறிப்பிட வில்லை' என்றான்.

aa

"மகனே... மன்னிக்கவேண்டும். நீ குறிப்பிடுவதுபோல என்னால் பிரார்த்தனை செய்யமுடியாது. அனைவருக்காகவும் அனைத்து உலக நன்மைக்காகவும் பிரார்த் தனை செய்வது பற்றிதான் என் குருநாதர் கற்றுத்தந்தார். என் சந்நியாச தர்மமும் எனக்கு அதைத்தான் கற்றுத்தந்தது. எல்லாருக்குமாக பிரார்த்தனை செய்யும்போது கிடைக்கிற பலன் உனக்கும் உண்டு. அப்படி இருக்கும்போது, ஏன் நீ கவலைப்படுகிறாய்...' என்றார்.

இவ்வளவு கூறியும் குணசீலனுக்கு தெளிவு ஏற்படவில்லை. சரி... இங்கேவா... என்றழைத்து ஒரு வாளி நிறைய தண்ணீர் நிரப்பி அவனிடம் கொடுத்து இதோ அந்த செடிக்கு இந்த தண்ணீரை ஊற்றிவிட்டு வா... என்றார் அப்படியே செய்தான்.

"தண்ணீரை எங்கே ஊற்றினாய்...' என்று கேட்டார் சந்நியாசி. அந்த செடியின் வேர் பாகத்தில் ஊற்றினேன் என்றான்.

இலைகள்தானே வாடியிருக்கிறது. ஒவ்வொரு இலைக்கும் தண்ணீர்விட்டு வரவேண்டியதுதானே... என்றார். சுவாமி, வேருக்கு நீர் ஊற்றினால், அது எல்லா கிளைகளுக்கும் போய் சேர்ந்துவிடுமே... என்றான். என் பிராத்தனையும் அது மாதிரிதான். உலக நன்மைக்காக வழிபாடு செய்யும்போது உனக்கும் அந்த பலன் வந்துசேரும் என்றார்.

நந்தவனம் தேசத்து மன்னர் குலசேகரனுக்கு விஜயராணி என்ற ஒரு மகள். இங்கு வசித்த பணம் படைத்த மக்கள் ஆணவம் அதிகமாகி அட்டூழியம் செய்தனர்.

இதையெல்லாம் அந்நாட்டு மன்னர் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் சனீஸ்வரரின் பார்வை அந்த நாட்டின்மீது பட்டுவிட்டது. பணக்காரர்களையும் ஏழையாக்கிவிட்டார். அனைத்தையும் இழந்த மக்களை தன் அடிமையாக்கி னார் மன்னர்.

தினமும் கூலியின்றி வேலை செய்ய வேண்டும். ஒருவேளை மட்டும் அரசாங்கம் உணவிடும் என்பது அவரிட்ட கட்டளை. மக்களும் வேறுவழியின்றி அதை ஏற்று சிரமப்பட்டனர். கஷ்டம் வந்ததும் கடவுள் நினைவு அவர்களுக்கு வந்தது. தங்கள் குலதெய்வமான பைரவரை வணங்கி, விமோசனம் அளிக்கும்படி கண்ணீர்விட்ட னர். பைரவரும் மனமிறங்கி, மனித வடிவில் நந்தவன நாட்டுக்கு வந்தார்.

சனீஸ்வரரை அழைத்து "நீ இவர்களை விட்டுவிடு, பாவம் இந்த மக்கள்...' என்றார்.

இல்லை தெய்வமே இந்த மக்களின் பொறுப் பற்ற செயல்களுக்குரிய தண்டனையே இவர்களுக்கு தரப்பட்டுள்ளது. இவர்களை விடமுடியாது... என்றார்.

அவர்கள் செய்தது தவறுதான். இருப்பி னும் என்னை சரணடைந்து விட்டதால் அவர்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது... என்ற பைரவர், ஒரு தோட்டத்தில் படுத்து உறங்குவதுபோல் நடித்தார்.

அவரை எழுப்பி டேய்... வேலை செய்யா மல் உறங்கவா செய்கிறாய். ஒழுங்காக இங்கிருக்க

அவரை எழுப்பி டேய்... வேலை செய்யா மல் உறங்கவா செய்கிறாய். ஒழுங்காக இங்கிருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்று... என்றனர் காவலர்கள்; கண்டுகொள்ள வில்லை பைரவர்.

அப்போது அங்குவந்த மன்னரின் மகள் விஜயராணி பைரவரை திட்டினாள்.

"அழகிகள் திட்டினால்கூட ஆனந்தம் தான்...'ss

என்று கேலி செய்தார் பைரவர். கோபமடைந்த இளவரசி அவரை சவுக்கால் அடித்துக்கொல்ல உத்தரவிட்டாள்.

"அடிப்பதாய் இருந்தால் உன் பிஞ்சுக் கையால் வாங்கும் அடி சுகமாகவே இருக்குமே...' என பைரவர் மீண்டும் கேலி செய்தார். அவரை மன்னர்முன் நிறுத்தினர்.

அவரது கண்களைக் குத்தி குருடாக்க உத்தரவிட்டார் மன்னர். காவலர்களும் கம்பியால் அவரது கண்களைக் குத்தினர்.

ஆனால் குத்தியவர்கள் குருடாயினர். கலக்கம் அடைந்த மன்னரும், இளவரசியும் நீ யார் எனக் கேட்க அவர்கள்முன் தோன்றி னார் பைரவர். மக்களையும் மன்னரையும் கண்டித்தார். இரு தரப்பும் பொறுப்பாக இருந்தால்தான் அனைவரையும் பாதுகாப் பேன்...' என்றார். இதைக்கேட்டு மன்னரும், மக்களும் மனம் திருந்தினர்.

உலக நலன்கருதி செய்யக்கூடிய வழி பாட்டிற்கும்; அரசு மட்டுமல்ல, அதை அமைக்கும் மக்களும் பொறுப்புடன் இருந்தால்தான் இறைவன் அருள் கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்ற அற்புதமானதொரு திருத்தலம்தான் ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: ஸ்ரீ பசுபதீஸ்வரர்.

இறைவி: மங்களாம்பிகை, பங்கஜவல்லி.

விசேஷமூர்த்தி: பஞ்சபைரவர்.

புராணப் பெயர்: ஆவூர் பசுபதீசுவரம் (மணிகூடம், அசுவத்தவனம்).

ஊர்: ஆவூர்.

மாவட்டம்: தஞ்சை மாவட்டம்.

மாநிலம்: புதுச்சேரி.

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், காமதேனு தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பொய்கையாறு தீர்த்தம்.

தலவிருட்சம்: அரசு.

சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் முறைப்படி காலபூஜைகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 21-ஆவது தலமாகவும், திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பட்டது, மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோவில்.

"பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார்

போம்வழி வந்திழி வேற்றமானார்

இங்குயிர் ஞானத்தர் வானோரத்தும்

இறையவரென்று மிருந்தவூராம்

தெங்குயர் சோலைசே ராலை சாலி

திளைக்கும் விளைவயல் சேரும் பொய்கைப்

பங்கயமங்கை விரும்பும் ஆவூர்ப்

பசுபதீயீச்சரம் பாடுநாவே.''

-திருஞானசம்பந்தர்.

aa

இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோவில்களில் ஒன்றாகவும், பொறுப்பு அற்றவர்களே தண்டித்து அருள்மழை பொழியக்கூடிய தலமாகவும், பிரம்மா, விஷ்ணு, தசரதர், சப்தரிஷிகள், இந்திரன், சூரியன், வசிஷ்டர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகவும், பித்ரு மற்றும் திருஷ்டி தோஷப் பரிகார தலமாகவும் விளங்குகின்ற ஒரு திருத்தலம்தான் ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோவில்.

தலவரலாறு

வைகுந்தவாசனிடமே தனது இறுமாப்பை வெளிப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு துணிவுகொண்டது காமதேனு. பாற்கடல் தந்த அற்புதங்களில் தான் மட்டுமே உயர்ந்த வள் என கர்வம் கொண்டது. கேட்போருக்கு கேட்டதைக் கொடுக்கும் தன் திறமைக்கு காரணம் தனக்குள் சுரக்கும் சிவசக்திதான் என்பதை உணரமறந்தது. தான் வழங்கும் எதுவும் தன்னால்தான் உண்டாகின்றன என்று தனியே இரு ஆணவக் கொம்புகள் அதற்கு முளைத்தன. எல்லாம் சரிதான். ஆனால் ராஜரிஷியான வசிஷ்டரிடமே அது விளையா டிப் பார்த்ததுதான் வினையாக முடிந்தது.

வசிஷ்டர் தனது ஆசிரமத்திற்கு எதிரே யுள்ள பரந்திருக்கும் வயலைக் கண்டார். வாடிய பயிரைக் கண்டபோது தானும் வாடினார். நிலம் வானை ஏக்கத்தோடு வாய் பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. மக்கள் மழையில்லையே எனத் துவண்டு இருந்தார்கள். எங்கோ தர்மம் பிசகி நடப்ப தன் கோளாறு இது என்றுணர்ந்தார் வசிஷ்டர். பயிரும் மக்களும் வாடுவது கண்டு தானும் சுருங்கி சருகானார். என்ன செய்வதென்று யோசித்தார். யாகம் செய்யத் தீர்மானித்தார். வாஜபேயம் எனும் யாகம். என்ன யாகம் அது? "வாஜம் என்றால் அன்னம், சோறு என்றும் பொருளுண்டு. பேயம் என்றால் பானம். அதாவது தானியச் செழிப்பையும், பானம் எனும் நீர்வளத்தையும் இந்த யாகம் கொண்டுவந்து கொடுக்கும். இந்த யாகத்தில் சோமரச ஹோமம் நடத்தி பசுக்களை பூஜித்து, வாஜம் எனும் அன்னத்தால் யாரால் இந்த ஹோமம் நடத்தப்படுகிறதோ அந்த எஜமானனுக்கு அன்னாபிஷேகம் செய்யவேண்டும். இந்த யாகத்தின் சிறப்பம்சம் இது. முடிவாக மன்னனே வெண்பட்டுக் குடைபிடிப்பான். யாகத்தின் பலனாக மழை பொழியும். உலகம் சுபிட்சம் பெறும்' என்று விளக்கம் கொடுத்தார் வசிஷ்டர்.

அந்த யாகத்திற்கு காமதேனுவை வரவழைத்து பூஜித்தால் நற்பலன்கள் விளையும் எனத் தோன்றியது. காமதேனுவை அழைத்தார்கள். வானுலகில் தேவர்கள் துதியில் மயங்கிக் கிடந்தது காமதேனு. வசிஷ்டர் வரச் சொன்னார் என்றவுடன் அலட்சியப் பெருமூச்சுவிட்டது. "எல்லாவற்றிற்கும் நான் தானா? என்று கர்வமாக அலுத்துக்கொண்டது. "சரி. சரி நான் எப்பொழுதாவது வருகிறேன் என்று சொல்' என்று சொல்லியனுப்பியது.

ss

வசிஷ்டர் கோபமானார். தானென்ற பித்து அதற்கு தலைக்கு ஏறியிருப்பதைக் கண்டு வருத்தமானார். அதனுள் அருள் சரந்து கொண்டு இருக்கின்ற ஈசனை சற்றே நீங்கி யிருக்கும்படி கேட்டுக்கொண்டார். சிவமும் அதற்காகவே காத்திருந்ததுபோல அதனின்று நீங்கியது. சிவத்தை இழந்த காமதேனு வெறும் பசுவானது. அதற்கே உரிய இயல்பான களை யையும் மங்கலத்தையும் பறிகொடுத்து ஒடுங்கி யது. அதுவரை அதனை பூஜித்துக்கொண்டி ருந்த தேவர்கள் அதன் பொலிவு இருள் கண்டு மருண்டு ஒதுங்கினார்கள்.

ஆனாலும் அகம்பாவம் குறையாத காமதேனு கடும்கோபம் கொண்டது. ஆனால் அந்தக் கோபத்தை வெளிப்படுத்த முடியாத பலவீனம் தன்னுள் நிறைந்திருப்பதையும் உணர்ந்தது. தேவருலகில் தன்னை சீந்துவார் இல்லாத நிலை கண்டு பயந்து, கீழிறங்கி பூமிக்கு வந்து திரிந்தது. பசி, பட்டினி, சோர்வு கடைசியாகத் தன்னை வரச்சொல்லி ஆள் அனுப்பியவர் வசிஷ்டர்தானே? அதற்குப் பிறகுதானே இவையெல்லாம் நடந்தது.

அவரையே பார்ப்போம்.

யாக சாலைக்கு சற்றுத் தொலைவில் கண்களில் நீர் கொப்பளிக்க ஒடுங்கி, நடுங்கி நின்றுகொண்டிருந்த காமதேனுவை வசிஷ்டர் கண்டார். "அருகே வா' என்றழைத்தார். அந்த ஒரு கணத்தில் காமதேனு தான் படைக்கப் பட்டிருப்பதன் காரணத்தையும், தான் இறையருளைப் பிறருக்கு வழங்கும் வெறும் கருவிதான் என்பதையும் உணர்ந்தது. வசிஷ்டர் அதற்கு ஆறுதளித்தார். "அஸ்வந்தவனம் செல்.

அங்கே ஈசனை பூஜித்துவா. காலம் கனியும் போது காமதேனுவாய் மாறுவாய்' என்றார்.

dd

அடர்ந்து செழித்து காடாக பரவியிருந்த அஸ்வந்தவனம் எனும் அரசமரக் காட்டிற்குள் நுழைந்தது. தான் காமதேனுவா, பசுவா என்ற சந்தேக எண்ணத்தை அழித்தது. சிவனை மட்டுமே தன் சிந்தையில் கொண்டது. அங்கே ஈசனைக் கண்டதும் முன்னங்கால்களை மடித்து தலை சாய்த்து வணங்கியது.

சிற்றோடை பாயும் இடத்திற்கு சென்று கொம்பால் கீறி பொங்கிவரும் தீர்த்தத்தால் லிங்கத்தை அபிஷேகித்தது. கயிலை நாயகனே தனது நாவால் நீவி சுத்தம்செய்தது. பாலை சிவலிங்கத்தின்மீது பொழிந்தது. வெண்மை மிகுந்து பூக்கும் மல்லிகைபோல மனம் ஒளிகண்டது.

பசுவின் பூஜையில் மகிழ்ந்த பசுபதிநாதர் காமதேனுவை பரிவுடன் பார்த்தார். உடனே அந்தப் பசு காமதேனுவாக மாறியது. மீண்டும் சிவசக்தி உள்ளுக்குள் பொங்கியது. காமதேனு வசிஷ்டரை பார்க்கச்சென்றது. வாஜபேய யாகத்திற்குத் தேவையான அனைத் தையும் சுரந்தது. யாகம் முடிந்தவுடன் அதற் காகவே காத்து இருந்ததுபோல மழை அடித்துப் பெய்தது. இன்றும் அந்தத் தலம் ஆ எனும் காமதேனு, பசு பூஜித்ததால் ஆவூர் என அழைக் கப்படுகிறது. புராணத்தில் (கோ+வந்த+குடி) கோவந்தகுடி என்றுள்ளது. பசு வழிபட்டதால் பசுபதீஸ்வரர் என்றழைக்கப் பட்டார்.

சிறப்பம்சங்கள்

ப் இறைவன் ஆவூருடையார், கவர்தீஸ்வரர், அஸ்வத்தநாதர் என்றிருந்தார் பசுபதீஸ்வரர் என்றே சொல் வழக்கிலும் மக்கள் மனதிலும் பதிவாகியுள் ளது.

ப் இறைவி மங்களாம்பிகை, பங்கஜவல்- என இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர்.

இதில் மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழமை வாய்ந்தது. தேவாரத்தில் "பங்கயமங்கை விரும்பும் ஆவூர்' என்று வருகிறது. ஆனால் இங்கு சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே.

ப் எத்தலத்திலும் காணக்கிடைக்காத ஒன்று இத்தலத்தில் ஐந்து பைரவர்கள் சிவனை நோக்கி நின்ற கோலத்தில் அருள்கின்றனர். இத்தலம் பஞ்சபைரவர் தலம் என்று போற்றப் படுகிறது. பிரதிமாதம் தேய்பிறை அஷ்டமி யன்று சிறப்பு யாகம் நடைபெறுகிறது. இதில் பல ஊர்களிலிருந்து சேவார்த்திகள் வருகை தந்து வழிபட்டு பலன்பெற்றதாக ஆலய செயல் அலுவலர் கூறுகிறார்.

ப் ஆவூர் ஊர்ப்பெயர். பசுபதீச்சரம் கோவிற்பெயர். மாடக் கோவிலாக விளங்குகின்ற இத்தலம் அசுவத்வனம் என்றும், இறைவன் விளங்கும் விமானம் அழகிய மலை உச்சியைக் கொண்டுள்ளதால் மணிகூடம் என்றும் வழங்கப்படுகிறது. கயிலையிலிருந்து ஆதிகேசனு டன் போரிட்டு வாயு தேவனால் கொண்டுவரப்பட்ட இரு மலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றொன்று ஆவூரிலும் தங்கியதாக தலபுராணம் சொல்கிறது.

ப் தசரதன் தனக்கு ஏற்பட்ட பித்ரு தோஷம் நீங்க வழிபட்டதலம்.இத்தலத்திலுள்ள தனுசு சுப்ரமணியரை வில்வம் மற்றும் துளசி கலந்த மாலை சூட்டி வழிபட மனதைரியம் அதிகரிப்பதுடன் புத்திர பாக்கியம் கிட்டும். அப்படி தசரதனுக்கு புத்திர பாக்கியம் வழங்கிய தனுசு சுப்பிரமணியர் வீற்றிருக்கும் தலம்.

ப் 2-ஆம் நூற்றாண்டில் சோழர்களின் கோட்டையாக சிறப்புற்றிருந்த தொன்மை யான தலம் என்று புறநானூறு சொல்கிறது. ஆவூர் மூலங்கிழார், பெருந்தலைச் சாத்தனார் ஆகிய புலவர்களைப் பெற்ற ஊர் ஆவூர்.

ப் இரு தேவியரும் அபய, வரத ஹஸ்தம் காட்டி வலது கையில் அட்சர மாலையும், இடக்கரத்தில் தாமரை மலரையும் ஏந்தி அருள்கிறார்கள். அன்பு அவர்களிருவரின் சந்நிதிகளிலும் காட்டாறாக பொங்கி வழிவதை உணர்கின்ற அபூர்வ தலம்தான் ஆவூர்.

ப் பிரம்மன், சப்தரிஷிகள், கணங்கள், தேவர், இயக்கர் கந்துருவர், இந்திரன், சூரியன், திருமால், தசரதர் முதலியோர் வழிபட்டு பேறு பெற்றதலம்.

ப் தர்மத்துவஜன் என்ற அரசன் பிரம்மதீர்த்தத்தில் மூழ்கிக் குட்டநோய் நீங்கப் பெற்றதலம்.

ப் நித்தி விநோத வடநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் என்று இறைவனின் பெயரை கல்வெட்டுச் செய்திகள் குறிப்பிடுவது சிறப்பான ஒன்று.

ப் பஞ்ச பைரவ க்ஷேத்திரமான இத்தலத்தில் வடக்கு நோக்கியுள்ள உன்மத்த பைரவருக்கு ஆட்டுப்பால், சமஅளவு நீர் பனைவெல்லம் சேர்த்து பைரவருக்கு சாற்றி அந்தப்பாலை பிரசாதமாக ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்ய தீராத நோய்கள் தீரும். உடலில் குறைபாடு மற்றும் சித்த பிரமையும் நீங்குவதோடு ஆரோக்கிய விருத்தி ஏற்படும்.

ப் திருநல்லூர் சப்தஸ்தான தலங்கள் என்று ஏழு தலங்களை- அதாவது திருநல்லூர், கோவிந்தகுடி, மாளிகைத்திடல், மட்டியான திடல், ஆவூர், பாபநாசம் (தஞ்சைமாவட்டம்) திருப்பாலைத்துறை இதில் ஒன்றாகப் போற்றப்படுவது ஆவூர்.

ப் எந்த ஒரு காரியத்திற்கும் பொருத்தமான ஒரு நல்லநாளை தேர்ந்தெடுப்பதற்கு பஞ்சாங்கத்தை புரட்டி நாள், வாரம், யோகம், கரணம். திதி என்ற ஐந்தையும் காண்கிறோம். இந்த ஐந்தும் நமக்கு சாதகமாக இருக்கவேண்டுமென்றால் இத்தலத்தில் அருள்பாலிக்கும் பஞ்சபைரவர்களை வழிபாடு செய்தால்போதும். பைரவருக்கும் பஞ்சாங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.

பஞ்சாங்கத்தின் அங்கங்களான நாள், வாரம், யோகம், கரணம், திதி ஆகியவற்றின் அதிபதியாகத் திகழ்பவர் பைரவர். காலத்தை கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை பைரவருக்கு உண்டென்பதால் காலபைரவர் என பெயர்பெற்றார். அவரே இங்கே ஐந்து வடிவங்களில் காட்சிதருவதால் இது ஒரு சிறந்த பரிகாரத்தலமாக போற்றப்படுகிறது. நாம் அனைவரும் ஏதாவது ஒரு கிழமையில், யோகம், கரணம், திதியில்தான் நிச்சயம் பிறந் திருப்போம். பிறக்கும்போது யாராலும் தோஷம் ஏதும் இல்லாத நாள் என்றெல்லாம் தேர்வுசெய்து பிறக்க முடியாது. எத்தகைய தோஷத்தாலும் அதிகமாக பாதிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால் ஒருமுறை இத்தலம் வந்து பைரவரை வழிபட்டால்போதும். காலத்தைக் கட்டுப்படுத்தும் பைரவர் நம் வாழ்வில் நல்லகாலமே நிலவச் செய்வார் என்று ஆலயப் பிரதான அர்ச்சகர் பிச்சை குருக்கள் பெருமிதத்துடன் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், கோச் செங்கட்சோழன் கட்டிய 70 மாடக் கோவில்களில் ஒன்றானதும், கேட்டதைத் தட்டாது அளித்திடும் காமதேனுவுக்கே அருள்புரிந்தவரை தரிசித்தாலே போதும் கேட்க மறந்ததையும் சொல்லாமல் அளித்திடும் பரமன் இவர், "குற்றமறுத்தார் குணத்திலுள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்' என்று தொடங்கி "ஆவூர் பசுபதீச்சரம் பாடு நாவே' என்று அவனின் நாமத்தை பாடிக்கொண்டிருங்கள். சகல தோஷங்களும் ஓடிவிடும் என்கிறார்.

கார்த்திகை மாதம் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பசுபதீஸ்வரர் வீதி உலாவந்து தீர்த்தவாரி நடைபெறும். பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று வீதி உலா செல்வது, ஹோமம், சிறப்பு அபிஷேகம், அன்னதானம் ஆகியவை சிறப்பம்சமாகும்.

திருகோவில் அமைப்பு

நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று, பிரம்மதீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் மற்றும் பொய்கையாறு தீர்த்தங்களால் சுற்றிலும் அமையப்பெற்று வயல்வெளிகளுக்கு மத்தியில் அழகுற கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்தால் வெளிப் பிராகாரத்தின் நடுவில் குன்றுபோல் அமைந்த மாடக்கோவில் வடிவில் உள்ளது.

ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் கொடிமரம், கொடிமர விநாயகர் பிரதோஷ நந்தி உள்ளது. கொடிமரத்தில் பசுபால் சொரிவது போன்ற சிற்பம் உள்ளது. தெற்கிலிருந்து வடக்காக ஏறுவதுபோல் செங்குத்தான படிகள் உள்ளது. அதில் தெற்கு நுழைவாயிலில் நுழைந்தவுடன் சிவனை நோக்கிய வண்ணம் ஐந்து பைரவர்கள் அருள்கின்றனர். மகாமண்டபத்தில் தெற்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் பங்கஜவல்லி, நெற்றிக்கண்ணுடன் திகழும் மங்களாம்பிகை சந்நிதிகள் தனித்தனியே உள்ளது. பஞ்சபைரவர்க்கு அருகே தசரத சக்கரவர்த்தி சிவனை பூஜிக்கும் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது.

அர்த்தமண்டபத்தில் சப்தமாதர்கள், சூரியன், சந்திரன், அருள்பாலிக்கின்றனர்.

மூலவர் சுயம்பு மூர்த்தியாய் கிழக்கு நோக்கியபடி அருட்காட்சி தருகிறார்.

குன்றின்மேல் நிருதிமூலையில் சோமாஸ் கந்தர், கோஷ்ட தெய்வங்கள் முறைப்படி உள்ளது.

நடைதிறப்பு: காலை 7.30 மணிமுதல் பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக் கோவில் (பஞ்சபைரவர் க்ஷேத்திரம்) ஆவூர் (அஞ்சல்) வலங்கைமான் வட்டம், தஞ்சை மாவட்டம்- 612 701. தொலைபேசி: 04374- 299676.

பூஜை விவரங்களுக்கு: பிட்சை குருக்கள் அலைபேசி: 94448 61548.

அமைவிடம்: தஞ்சை மாவட்டம், வலங்கைமான் வட்டம், கும்பகோணம், பட்டிஸ்வரலி மெலட்டூர், திட்டை நெடுஞ் சாலையில் அமைந்துள்ளது. பேருந்துகள் கும்பகோணம் பேருந்து நிலையம் மற்றும் பட்டீஸ்வரத்திலிருந்து கோவிந்தகுடி வழியாக 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படுகின்றன.

படங்கள்: போட்டோ கருணா

bala010224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe