Advertisment

500 ஆண்டுகள் பழமையான செஞ்சிக்கோட்டை கோதண்டராமர் - கு கதிரவன்

/idhalgal/om/500-years-old-red-fort-kothandarama-ku-katiravan

செஞ்சியின் கடந்த 500-600 வருடகால சரித்திரம், அம்மண்ணின் நிலையை நமக்கு அதிகமாகவே எடுத்துக் காட்டுகிறது. பல்லவ, சோழ, பாண்டிய, விஜய நகர, நாயக்கர் காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள் செஞ்சியில் காணப்படுகின்றன. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து நாயக்க மன்னர் கள் செஞ்சியின் முன்னேற் றத்திற்குப் பல காரியங் களைச் செய்துள்ளனர். ஆனால், 1564-ல் முகம்மதி யர்களால் விஜயநகர மன்னர் விரட்டப்பட்டு, செஞ்சி ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களது ஆட்சிக் காலத்தில் கோவில்கள் பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டன; இடிக்கப்பட்டன, அவ்விடங்களில் மசூதிகள் கட்டப்பட்டன.

Advertisment

1712-ல் செஞ்சி மன்னருக்கும், ஆங்கிலேயர் களுக்குமிடையே, டேவிட் கோட்டையில் சண்டை நடந்தது. 1721-ல் ராஜாதேசிங்கு கப்பம் கட்டாததால் ஆற்காடு நவாப் படையெடுத்தான். சதத்துல்லாகான் என்பவனின்கீழ் முகம்மதிய படை செஞ்சியை முற்றுகையிட்டது. போரில் தேசிங்கு கொல்லப்பட்டான். தேசிங்குவின்

செஞ்சியின் கடந்த 500-600 வருடகால சரித்திரம், அம்மண்ணின் நிலையை நமக்கு அதிகமாகவே எடுத்துக் காட்டுகிறது. பல்லவ, சோழ, பாண்டிய, விஜய நகர, நாயக்கர் காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள் செஞ்சியில் காணப்படுகின்றன. 15-ஆம் நூற்றாண்டிலிருந்து நாயக்க மன்னர் கள் செஞ்சியின் முன்னேற் றத்திற்குப் பல காரியங் களைச் செய்துள்ளனர். ஆனால், 1564-ல் முகம்மதி யர்களால் விஜயநகர மன்னர் விரட்டப்பட்டு, செஞ்சி ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களது ஆட்சிக் காலத்தில் கோவில்கள் பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டன; இடிக்கப்பட்டன, அவ்விடங்களில் மசூதிகள் கட்டப்பட்டன.

Advertisment

1712-ல் செஞ்சி மன்னருக்கும், ஆங்கிலேயர் களுக்குமிடையே, டேவிட் கோட்டையில் சண்டை நடந்தது. 1721-ல் ராஜாதேசிங்கு கப்பம் கட்டாததால் ஆற்காடு நவாப் படையெடுத்தான். சதத்துல்லாகான் என்பவனின்கீழ் முகம்மதிய படை செஞ்சியை முற்றுகையிட்டது. போரில் தேசிங்கு கொல்லப்பட்டான். தேசிங்குவின் பெயர் தேஜ் சிங் என்பதாகும். ராஜஸ் தான் கவர்னர், ஸ்வரூப் சிங் என்பவரின் மகன். ராஜா தேசிங்கின் உடல் செட்டிக்குளத்திலுள்ள மண்டபத்தில் தகனம் செய்யப்பட்டு, அந்த இடத் தில் ஒரு கல்வெட்டும் பதிக் கப்பட்டது. ஆனால் அது 1878-லேயே காணவில்லை என்று ஆற்காடு கெஸட்டி யர் குறிப்பிடுகிறது. 1749-ல் அன்வருத்தூன் ஆம்பூர் போரில் கொல்லப் பட்டவுடன், முஹம்மது அலி செஞ்சியைப் பிடித் துக்கொண்டான். பிரெஞ்சுக் காரர்களும், சந்தாசாகிப் பும் (முகலாயர்களும்) சேர்ந்துகொண்டு, "கோவில் கள் தாக்கப்படக்கூடாது என்றால், பணம் கொடுக்க வேண்டும்' என்று மிரட்டி பணம் சம்பாதித்தனர்.

dd

கோதண்டராமர் ஆலயம்

கோட்டை என்றாலே அது செஞ்சிக்கோட்டை என்று சொல்லுமளவுக்குப் பிரசித்தி பெற்றிருக்கும் செஞ்சி நகரத்தில், சங்கராபரணி நதியின் கரையில் அமைந்திருக்கும் கோதண்டராமர் கோவில் ஒருகாலத்தில் மூலவர் சந்நிதி, தாயார் சந்நிதி, அர்த்த மண்டபம், மகாமண்டபம், இரண்டு மணி மண்டபங்கள், சங்கராபரணி ஆற்றுக்கு உள்ளே நீராழி மண்டபம், நாற்பது கால் மண்டபம், அறுபது கால் மண்டபம் மற்றும் துளசி மண்டபம் என்று மிகுந்த கலையழகோடு நான்கு பிராகாரங்களுடன் அமைந்திருந்ததை இன்றைக்கும் எஞ்சியிருக்கும் தடயங்கள் நமக்கு உணர்த்தவே செய்கின்றன. இத்திருக்கோவிலின் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், கிருஷ்ணவேணித் தாயார், கோதண்டராமர் விக்கிரகங்கள், முன்பு செஞ்சியை ஆண்ட நவாப் படைகளால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது இத்திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். கிபி 1714-ஆம் ஆண்டு ராஜா தேசிங்கிற்கும், ஆற்காடு நவாப்பிற்கும் நடந்த போரின்போது இந்த கோவில் பீரங்கி தாக்குதலினால் சின்னாபின்னமானது. சேதமடைந்து 309 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒரு காலத்தில் அழகியலுக்கே இலக்கணமாய்- மிக பிரம்மாண்டமாய்த் திகழ்ந்த திருக்கோவில் சிதிலமடைந்த நிலையிலிருந்து தற்பொழுது திருப்பணிக் குழுவினரால் புனருத்தாரணம் செய்யப்பட்டு, கோவிலில் கருவறை, கோபுரம் புதுப்பித்து, கருவறைமுன்பு மகாமண்டபமும், புதிதாக அனுமன் சந்நிதியும் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் கோதண்டராமர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதன் சம்ப்ரோக்ஷணம் ஏப்ரல், 2021-ல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நித்திய பூஜைகள் நடந்துவருகின்றன.

Advertisment

இந்த திருக்கோவிலின் பழமையான ராஜகோபுரம் தற்பொழுதும் சிதிலமடைந்த நிலையிலேயே உள்ளது. நிதி வசதி ஏற்பட்டவுடன் ராஜகோபுரம் சீரமைப்பு செய்யப்படும் என்று பக்தர்கள் தெரிவிக்கின் றனர்.

தீர்த்தவாரிப் படித்துறை

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணுக்குள் புதைந்திருந்த கோதண்டராமர் கோவில் தீர்த்தவாரிப் படித்துறை, திருக்கோவில் மறுசீரமைப்பின்போது வெளிப்பட்டது. கோதண்டராமர் கோவில் பகுதியைப் புதுப்பித்து, திருப்பணிகள் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மண்ணுக்குள் புதைந்திருந்த தீர்த்தவாரிப் படித்துறையில் மண்ணை அகற்றியுள்ளனர்.

அதுவரை சிதிலமடைந்து புதர் மண்டியிருந்த அப்பகுதி, கலையம்சத் துடன் படித்துறையாக, இரண்டு பக்கமும் மீன் இலச்சினையுடன் அழகுடன் காட்சிதந்தது. மேலும் இத்திருக்கோவிலின் கருவறையின் பின்புறம் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட கிணறு இருந்திருப்பதும் மறு சீரமைப்பின்போது தெரியவந்துள்ளது.

முக்கிய விழாக்கள்

ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று செஞ்சி மதுரகவி ஆழ்வார் சபையினரால் ஸ்ரீராம பஜனை மற்றும் சொற்பொழிவுடன் ததியாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

வருடந்தோறும் மாசிமகத்தன்று சிங்கவரம் அரங்கநாதப்பெருமாள், ஏகாம்பரேஸ்வரர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலுள்ள பல கோவில் களிலிருந்து தெய்வமூர்த்தங்கள் இந்தக் கோவிலுக்கு வந்து சங்கரா பரணி ஆற்றிலே தீர்த்தவாரியில் கலந்துகொள்ளும். அன்றைய தினத் தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்து வருகின்றனர்.

om010824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe