அன்புள்ள வாசகப் பெருமக்களே!
எல்லாம் வல்ல எம்பெருமான் முருகனின் அருளோடும், எனது தந்தை தெய்வத்திரு ஜோதிட சக்கரவர்த்தி முருகு இராசேந்திரன் அவர்களின் ஆசியோடும் இந்த 2022-ஆம் ஆண்டின் புத்தாண்டு ராசி பலனை உங்களுக்கு வழங்கி உள்ளேன்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குரு, திருக் கணிதப்படியும் வாக்கியப்படியும் 13-4-2022 முதல் மீன ராசிக்கு மாறுதலாகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருக்கணிதப்படி மகரத்தில் சஞ்சரிக்கும் சனி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை கும்ப ராசியில் சஞ்சரித்து, மீண்டும் மகர ராசிக்கு மாறுதலாகி ஆண்டு இறுதி வரை மகர ராசியில் சஞ்சரிக்கிறார். (இந்த ஆண்டு முழுவதும் வாக்கியப்படி சனி மகரத்தில் சஞ்சரிக்கிறார்). இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சரிக்கின்றனர். அதன் பின் ஏற்படும் சர்ப்பகிரக மாறுதலால் திருக்கணிதப்படி 12-4-2022 (வாக்கியப்படி 21-3-2022) முதல் ராகு மேஷ ராசியிலும், கேது துலா ராசியிலும் சஞ்சரிக்கவுள்ளனர்.
நவகிரகங்களின் சஞ்சாரத்தால் 12 ராசிகளுக்கும் ஏற்படக்கூடிய பொதுபலன் மற்றும் மாத வாரியான பலன்களைத் தெள்ளத் தெளிவாக இப்புத்தகத்தில் விளக்கியுள்ளேன். இது மட்டுமின்றி சந்திராஷ்டம தினங்களை யும் குறிப்பிட்டுள்ளேன். இதனைப் படித்து அனைவரும் பயனடையும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஜோதிட மாமணி முனைவர் முருகு பாலமுருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro.,Ph.D in Astrology.
Visit me @ www.muruguastrology.com
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255, வடபழனி,
சென்னை- 600 026, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: 044- 24881038 / 24839532
அலைபேசி: 0091-72001 63001. 93837 63001
Visit me @ www.muruguastrology.com
மேஷம்
அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, எதிலும் தைரியம், துணிவுடன் செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை அடையும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2022-ஆம் ஆண்டு தன காரகன் குரு பகவான் 13-4-2022 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை ஆண்டின் தொடக்கத்தில் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக் கும் நல்ல வரன் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் 2, 8-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது 12-4-2022-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தின் மூலம் ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத்திற்குப் பிறகு பணவரவுகளில் சற்றே நெருக்கடிகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களைக் குறைத்துக் கொள்ளமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்கள் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், உயரதிகாரிகளின் ஆதரவுகள் மன நிம்மதியை அளிக்கும். எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதே உத்தமம். உங்கள் ராசிக்கு இவ்வாண்டில் சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில்- உத்தியோக ரீதியாக கவனமான செயல்பட்டால் மட்டுமே அடையவேண்டிய இலக்கை அடைய முடியும். திருக்கணிதப்படி சனி பகவான் அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால், இக்காலங்களில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும்.
குடும்பம், பொருளாதார நிலை
ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது உத்தமம். உற்றார்- உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நற்பலனை தரும்.
கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் முற்பாதியில் பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் ஒருசில அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளைக் கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்கள் சற்று தாமதமாகதான் வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்புகள் கிடைக்கும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகக் கூடும் என்பதால் கொடுக்கல்- வாங்க-ல் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.
தொழில், வியாபாரிகளுக்கு
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும் என்றாலும், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானித்து செயல்படவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தாமதப்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். தொழிலாளர்கள் வீண் சங்கடங்களை ஏற்படுத்தினா லும் அபிவிருத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். எடுக்கும் பணிகளில் நிம்மதியாக செயல்பட முடியும் என்றாலும், உடன் இருப்பவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் தேவை. அனைவரையும் அனுசரித்துச் செல்வதன்மூலம் வீண் சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை தற்போதைய காலத்திற்கு தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு
ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் அமோக ஆதரவுகளைப் பெற்றுவிடுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிப்பதோடு உடல்நிலையும் சோர்வடையும். பெயர், புகழைத் தக்க வைத்துக் கொள்ள சற்று பாடுபடவேண்டி இருந்தாலும் பதவிக்கு பங்கம் ஏற்படாது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய உழைக்க வேண்டி வரும். எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் போட்ட முதலீட்டை எடுத்துவிட முடியும். உடல்நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானியத்தொகை சற்றே தாமதப்படும்.
பெண்களுக்கு
உடல் நிலையில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் ஒருமுறைக் குப் பலமுறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தால் சேமிக்கலாம்.
மாதப் பலன்கள்
ஜனவரி
ஜென்ம ராசிக்கு 9, 10-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். கொடுக்கல்- வாங்க-ல் லாபகரமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்ற மான பலன்கள் ஏற்படும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 30-12-2021 இரவு 7.07 மணிமுதல் 1-1-2022 இரவு 7.17 மணிவரை மற்றும் 27-1-2022 அதிகாலை 3.12 மணிமுதல் 29-1-2022 அதிகாலை 5.07 மணிவரை.
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எதையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பெரிய மனிதர்கள் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெறமுடியும். விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 23-2-2022 காலை 8.56 மணி முதல் 25-2-2022 பகல் 12.07 மணி வரை.
மார்ச்
உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய், சுக்கிரன், 11-ல் குரு, மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். இருக்கும் இடத்தில் கௌரவமான நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அஷ்டலட்சுமியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 22-3-2022 பகல் 2.33 மணிமுதல் 24-3-2022 மாலை 5.29 மணிவரை.
ஏப்ரல்
உங்கள் ராசியதிபதி செவ்வாய் இம்மாதம் 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் அவற்றை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். சூரியன் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். மற்றவர்களிடம் தேவையற்ற பேச்சைக் குறைப்பது சிறப்பு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் மாத முற்பாதியில் சாதகப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்க-ல் சரளமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-4-2022 இரவு 10.07 மணிமுதல் 20-4-2022 இரவு 11.40 மணிவரை.
மே
ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது, பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதும், சனி அதிசாரமாக 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். உற்றார்- உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 16-5-2022 காலை 7.53 மணிமுதல் 18-5-2022 காலை 8.09 மணிவரை.
ஜூன்
ஜென்ம ராசியில் சுக்கிரன், 11-ல் சனி, மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின்பு அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார்- உறவினர் களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். குரு 12-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமை கள் பாராட்டப்படும். தொழி-ல் தொழிலாளர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். பைரவரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 12-6-2022 மாலை 6.33 மணிமுதல் 14-6-2022 மாலை 6.32 மணிவரை.
ஜூலை
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் ஒருசில அனுகூலங்கள் ஏற்படும் என்றாலும் ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்க-ல் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைப்பளு குறைவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை இருந்தாலும் போட்ட முதலீட்டை எடுத்துவிடுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 10-7-2022 அதிகாலை 4.20 மணிமுதல் 12-7-2022 அதிகாலை 5.15 மணிவரை.
ஆகஸ்ட்
ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். புதன் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சைக் குறைப்பது நல்லது. உற்றார்- உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்க-ல் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சினைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. அம்மன் வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம்: 6-8-2022 பகல் 12.06 மணிமுதல் 8-8-2022 பகல் 2.37 மணிவரை.
செப்டம்பர்
உங்கள் ராசிக்கு சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும், மாதப் பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலனைத் தரும் அமைப்பாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உறவினர்களிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். முருக வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம்: 2-9-2022 மாலை 5.55 மணிமுதல் 4-9-2022 இரவு 09.42 மணிவரை மற்றும் 29-9-2022 இரவு 11.25 மணிமுதல் 2-10-2022 அதிகாலை 3.10 மணிவரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பொருளாதாரநிலை ஓரளவு சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். சனீஸ்வர வழிபாடு நன்மையை அளிக்கும்.
சந்திராஷ்டமம்: 27-10-2022 காலை 6.30 மணிமுதல் 29-10-2022 காலை 9.05 மணிவரை.
நவம்பர்
ஜென்ம ராசியில் ராகு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், குடும்பத்தில் நிம்மதிக்குறைவு ஏற்படும் காலம் என்பதால் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றிபெற வேண்டியிருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றே குறையும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 23-11-2022 மாலை 4.03 மணிமுதல் 25-11-2022 மாலை 5.20 மணிவரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 8-ல் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதிக் குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சுக்கிரன் 9, 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் சற்று மந்தநிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளமுடியும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 21-12-2022 அதிகாலை 2.57 மணிமுதல் 23-12-2022 அதிகாலை 4.02 மணிவரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 1, 2, 3, 9. நிறம்: ஆழ்சிவப்பு. கிழமை: செவ்வாய். கல்: பவளம். திசை: தெற்கு. தெய்வம்: முருகன்.
ரிஷபம்
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையே அதிகம் விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியும் தர்ம கர்மாதிபதியுமான சனி பகவான் இவ்வருடத்தில் 9-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டு ஏற்றங்களைப் பெறுவீர்கள். ஆண்டில் தொடக்கத்தில் குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால், முதல் மூன்று மாதம் மட்டும் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும், 12-4-2022-ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின் மூலம் கேது உங்கள் ராசிக்கு 6-லும், ராகு 12-லும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத் திலும் வெற்றியினைப் பெறமுடியும். தடைப்பட்டுக்கொண்டிருந்த திருமண சுப முயற்சிகளில் தடை விலகி நல்லது நடக்கும். சிறப்பான வரன்கள் தேடி வருவதால் நல்ல வாழ்க்கை அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். நவீன பொருட்களையும், அசையும், அசையா சொத்துகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகளும் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கடன் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதுடன் லாபம் பெருகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பதுமூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் நற்பலன்களைத் தரும் என்றாலும் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதுடன் உயர்பதவிகளும் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும்.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் ஏப்ரலுக்கு பிறகு எளிதில் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சொந்த மனை வாங்கக் கூடிய யோகங்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்க-ல் எதிர்பார்த்த லாபத்தினை அடையமுடியும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி அனுகூலப்பலன்களை அடைவீர்கள். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். இழுபறி நிலையில் உள்ள வம்பு வழக்குகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளைத் தக்க நேரத்தில் காப்பாற்றி நற்பெயர் எடுப்பீர்கள்.
தொழில், வியாபாரிகளுக்கு
நல்ல வாய்ப்புகள் தேடி வருவதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். புதிய நவீன யுக்திகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலங்கள் உண்டாகும். பயணங்களால் நற்பலன்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்கக்கூடிய வாய்ப்பும், ஆற்றலும் உண்டாகும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் இருந்த நெருக்கடிகள் குறைந்து எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். செய்யும் பணிகளுக்குத் தகுந்த பாராட்டுதல்களும் உயரதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிவீர்கள். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக்கொள்ள முடியும். வெளியூர்- வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு
உங்களது பெயர் புகழ் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகு பதவிகள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கட்சிப் பணிகளுக்காக செலவு செய்வதில் தொய்வு ஏற்படாது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் பல மானிய உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன்களை அடைவதால் மனநிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் நிறைவான திருப்தி கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளைக் கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய மனை வாங்கும் யோகம் ஏற்படும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபத்தினை அடைவீர்கள்.
பெண்களுக்கு
உடல்நிலை சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுப்பாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளை தாராளமாக செய்யமுடியும். ஆடை, ஆபரணம் சேரும். உற்றார் உறவினர் களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும்.
மாதப் பலன்கள்
ஜனவரி
உங்கள் ராசிக்கு 7, 8-ல் செவ்வாய், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத் தைக் கடைப்பிடிப்பது உத்தமம். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம்: 1-1-2022 இரவு 7.17 மணிமுதல் 3-1-2022 மாலை 6.52 மணிவரை மற்றும் 29-1-2022 அதிகாலை 5.07 மணிமுதல் 31-1-2022 அதிகாலை 5.46 மணிவரை.
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், சுக்கிரன், 10-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட்டால்தான் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத சூழ்நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனைத் தரும். முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 25-2-2022 பகல் 12.07 மணிமுதல் 27-2-2022 பகல் 2.22 மணிவரை.
மார்ச்
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களை அடைவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார்- உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களை பெற்றுவிட முடியும். தொழிலாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். அஷ்டலட்சுமி வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம்: 24-3-2022 மாலை 5.29 மணிமுதல் 26-3-2022 இரவு 8.28 மணிவரை.
ஏப்ரல்
உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-லும், மாத முற்பாதியில் சூரியன் 11-லும் சஞ்சரிப்பது சிறப்பு என்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. 14-ஆம் தேதி முதல் குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலையை சந்திக்க நேர்ந்தாலும் ஓரளவுக்கு லாபம் அமையும். எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-4-2022 இரவு 11.40 மணிமுதல் 23-4-2022 அதிகாலை 1.52 மணிவரை.
மே
உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய், 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்கவேண்டிய வாய்ப்புகளும் தடையின்றிக் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படமுடியும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப்பலனை அடைவீர்கள். சிவ வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம்: 18-5-2022 காலை 8.09 மணிமுதல் 20-5-2022 காலை 8.45 மணிவரை.
ஜூன்
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத் துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதுமூலம் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடையமுடியும். தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம்: 14-6-2022 மாலை 6.32 மணிமுதல் 16-6-2022 மாலை 5.55 மணிவரை.
ஜூலை
உங்கள் ராசிக்கு 11-ல் குரு, மாதப் பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பலவழிகளில் தேடிவரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்க-ல் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களைச் செய்வார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 12-7-2022 அதிகாலை 5.15 மணிமுதல் 14-7-2022 அதிகாலை 4.32 மணிவரை.
ஆகஸ்ட்
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, இம்மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார்- உறவினர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும் எதிர்பார்க்கும் லாபங்களும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்க-ல் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. காலபைரவரை வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம்: 8-8-2022 பகல் 2.37 மணிமுதல் 10-8-2022 பகல் 2.58 மணிவரை.
செப்டம்பர்
ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 6-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெறுவதால் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாகக்கூடிய போட்டி பொறாமை களால் வரவேண்டிய வாய்ப்புகள் சில தடைகளுக்குப் பின் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்கமுடியும். பூமி, மனை வாங்கும் விஷயங்களில் நிதானித்துச் செயல்படுவது நல்லது. அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 4-9-2022 இரவு 9.42 மணிமுதல் 6-9-2022 இரவு 11.37 மணிவரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடையமுடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினைக் கொடுக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆஞ்சனேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 2-10-2022 அதிகாலை 3.10 மணிமுதல் 4-10-2022 காலை 6.01 மணிவரை மற்றும் 29-10-2022 காலை 9.05 மணிமுதல் 31-10-2022 பகல் 11.23 மணிவரை.
நவம்பர்
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், கேது, 11-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து தேவைகள் பூர்த்தியாகும். நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனைத் தடையின்றி அடையமுடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்றுவிடமுடியும். தொழிலாளர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படமுடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 25-11-2022 மாலை 5.20 மணிமுதல் 27-11-2022 மாலை 6.05 மணிவரை.
டிசம்பர்
ஜென்ம ராசியில் செவ்வாய், 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைப்பது, எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உற்றார்- உறவினர்களால் தேவையற்ற வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். கேது 6-ல், குரு 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம்காணமுடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடையவேண்டிய லாபத்தை அடைந்துவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 23-12-2022 அதிகாலை 4.02 மணிமுதல் 25-12-2022 அதிகாலை 3.30 மணிவரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8. நிறம்: வெண்மை, நீலம். கிழமை: வெள்ளி, சனி. கல்: வைரம். திசை: தென்கிழக்கு, தெய்வம்: விஷ்ணு, லக்ஷ்மி.
மிதுனம்
மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, சிறப்பான அறிவாற்றலால் பலரை வழிநடத்தும் திறமை கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2022-ஆம் ஆண்டில் ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி 8-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அஷ்டமச்சனி நடைபெறுகிறது. இதனால் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் அவர்கள் மூலம் நற்பலன்களை அடையமுடியும். சர்ப்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6-ல் 12-4-2022 முடிய சஞ்சரிப்பதாலும், அதன் பின்பு ஏற்படும் சர்ப்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதாலும் எதையும் ஓரளவுக்கு சமாளிக்ககூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆண்டுக் கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் 13-4-2022 முடிய சஞ்சரிப்பதால் முதல் மூன்று மாதங்கள் உங்களின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்டால் அனுகூலப்பலனைப் பெறமுடியும். தொழில், வியாபாரரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. கொடுக்கல்- வாங்க-ல் நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் தடைதாமதங்களுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் சற்றே மந்தநிலையை சந்தித்தாலும் ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த லாபத்தினைப் பெறமுடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தி பெருகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைக்க தாமதநிலை ஏற்படும் காலம் என்பதால் உங்கள் பணியில் கவனமாக செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும்.
திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் சனி பகவான் அதிசாரமாக வரும் 29-4-2022 முதல் 12-7-2022 வரை பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால், இக்காலங்களில் நெருக்கடிகள் குறைந்து பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும் யோகம் உண்டு.
குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது, கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். எதிர்பாராத உதவிகளால் அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்து கொள்ளமுடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் முற்பாதியில் நல்லது நடக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஏப்ரலுக்கு பிறகு சற்று தேக்கங்கள் ஏற்படலாம் என்பதால் கொடுக்கல்- வாங்க-ல் சிந்தித்து செயல்படவும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் பொருளாதார ரீதியாக இருக்கும் நெருக்கடிகள் குறையும். கொடுத்த கடன்களும் வீடுதேடி வரும்.
தொழில், வியாபாரிகளுக்கு
தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும். புதியவாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் போட்டிகள் சற்று அதிகமாக இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திசெய்ய நினைக்கும் காரியங்களில் கவனம்தேவை. அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் வீண் பிரச்சினைகள், பிறர் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும், உயரதிகாரிகளின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்துவிட முடியும். பதவி உயர்வுகளை ஆண்டின் தொடக்கத்தில் அடையமுடியும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் கைக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு
பெயர், புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளைத் தடைகளுக்குப் பின்பே காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். கட்சிப் பணிகளுக்காக செலவுசெய்ய நேடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய அதிகம் பாடுபடவேண்டி வரும். புழுபூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கால்நடைகளால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். சரியான நேரத்தில் வேலையாட்கள் கிடைக்காததால் எதிலும் நீங்கள் முன்நின்று செயல்பட நேரிடும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்றுக்கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியம் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும்.
மாதப் பலன்கள்
ஜனவரி
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் செவ்வாய் 6-ல் இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமாக சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும்

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் செவ்வாய் 6-ல் இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமாக சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதுமூலம் அமைதியை நிலைநாட்ட முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். ஆஞ்சனேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 3-1-2022 மாலை 6.52 மணிமுதல் 5-1-2022 இரவு 7.53 மணி வரை மற்றும் 31-1-2022 அதிகாலை 5.46 மணிமுதல் 2-2-2022 காலை 6.45 மணிவரை.
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 7-ல், சூரியன் 8-ல் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 27-2-2022 பகல் 2.22 மணிமுதல் 1-3-2022 மாலை 4.31 மணிவரை.
மார்ச்
ஜென்ம ராசிக்கு 6-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும், சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். கொடுக்கல்- வாங்க-ல் லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் சாதகப்பலன் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 26-3-2022 இரவு 8.28 மணிமுதல் 28-3-2022 இரவு 11.54 மணிவரை.
ஏப்ரல்
உங்கள் ராசிக்கு இம்மாதத்தில் சூரியன், புதன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றிப் பூர்த்தியாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆன்மிக- தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 23-4-2022 அதிகாலை 1.52 மணிமுதல் 25-4-2022 அதிகாலை 5.30 மணிவரை.
மே
உங்கள் ராசிக்கு ராகு 11-ல், மாத முற்பாதியில் சூரியன் 11-ல், மாதப் பிற்பாதியில் செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் வளமான பலன்களைப் பெறுவீர்கள். சனி அதிசாரமாக 9-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளைப் பிறருக்குக் கடனாகக் கொடுக்கும்போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். விஷ்ணுவை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-5-2022 காலை 8.45 மணிமுதல் 22-5-2022 பகல் 11.12 மணிவரை.
ஜூன்
உங்கள் ராசிக்கு 11-ல் ராகு, 10, 11-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டியிருக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும் என்றாலும் சூரியன் மாத முற்பாதியில் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். சிவனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 16-6-2022 மாலை 5.55 மணிமுதல் 18-6-2022 மாலை 6.42 மணிவரை.
ஜூலை
ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் குரு 10-ல் இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான நிலை இருக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 14-7-2022 அதிகாலை 4.32 மணிமுதல் 16-7-2022 அதிகாலை 4.15 மணிவரை.
ஆகஸ்ட்
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 11-ல் செவ்வாய், பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிட முடியும். குரு வக்ர கதியில் இருப்பதால் பணவரவுகள் சாதகமாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார்- உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தடைப்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று நிம்மதி ஏற்படும். ஆஞ்சனேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 10-8-2022 பகல் 2.58 மணிமுதல் 12-8-2022 பகல் 02.50 மணிவரை.
செப்டம்பர்
உங்கள் ராசியதிபதி புதன் 4-ல், ராகு 11-ல், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படமுடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 6-9-2022 இரவு 11.37 மணிமுதல் 9-9-2022 அதிகாலை 00.40 மணிவரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் புதன், சுக்கிரன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் சோர்வு, மந்தநிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நற்பலனைத் தரும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. வண்டி வாகனங்கள்மூலம் வீண்விரயங்களை எதிர்கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 4-10-2022 காலை 6.01 மணிமுதல் 6-10-2022 காலை 8.27 மணிவரை மற்றும் 31-10-2022 பகல் 11.23 மணி முதல் 2-11-2022 பகல் 2.15 மணிவரை.
நவம்பர்
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் புதன், சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும், மாதப் பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் மிகவும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் ஏற்படும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாவதால் நிம்மதி குறையும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடையவேண்டிய இலக்கை அடைந்துவிட முடியும். உத்தியோகத்தில் உள்ள நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 27-11-2022 மாலை 6.05 மணிமுதல் 29-11-2022 இரவு 7.50 மணிவரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, 7-ல் புதன், சுக்கிரன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமான பலனை பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 25-12-2022 அதிகாலை 3.30 மணிமுதல் 27-12-2022 அதிகாலை 3.30 மணிவரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8. நிறம்: பச்சை, வெள்ளை. கிழமை: புதன், வெள்ளி. கல்- மரகதம். திசை: வடக்கு. தெய்வம்: விஷ்ணு.
கடகம்
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, விடா முயற்சியுடன் செயல்பட்டு எதிலும் வெற்றிகளை குவிக்க கூடிய திறமைசா-களான உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆண்டுக்கோளான குரு உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் வாழ்வில் முன்னேற்றங்களை அடையமுடியும். முதல் மூன்று மாதங்கள் பொருளாதார ரீதியாக சிறிது நெருக்கடி, தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த நற்பலனை அடைய இடையூறு ஏற்படும். வேலைபளு காரணமாக உடல் அசதி உண்டாகும். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் 13-4-2022 முதல் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குரு மாற்றத் திற்குப் பிறகு உங்களின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு மேலோங்கும். பொருளாதார ரீதியாக இருந்த தேக்கங்கள் விலகி தாராள தனவரவு ஏற்படும். கடன் பிரச்சினைகள் எல்லாம் விலகி சுபிட்சம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்லவரன்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சொந்த பூமி, மனை வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடி வரும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிட்டும். வெளியூர்- வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும், உயர் பதவிகளையும் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பு அமையும். ராகு உங்கள் ராசிக்கு ஆண்டுத் தொடக்கத்தில் 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு ஏன்றாலும் 12-4-2022-ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு ஜென்ம ராசிக்கு 10-ல், கேது 4-ல் சஞ்சரிக்க உள்ளதால் சில நேரங்களில் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். என்றாலும் குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வளமான பலனை அடைவீர்கள். ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் விட்டுகொடுத்துச் செல்வது, கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று கவனத்துடன் செயல்படுவதுமூலம் நற்பலனை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் சனிபகவான் வரும் 29-4-2022 முதல் 12-7-2022 வரை அஷ்டம ஸ்தானமான 8-ல் அதிசாரமாக சஞ்சரிப்பதால் இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.
குடும்பம், பொருளாதார நிலை
இந்த ஆண்டு எல்லா வகையிலும் ஓரளவுக்கு ஏற்றத்தைத் தருவதாக அமையும். தொடக்கத்தில் சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் ஏப்ரல் மாதம் முதல் உங்கள் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் சிறு தடைகளுக்குபின் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதுமூலம் நற்பலன்களைப் பெற முடியும். பூர்வீக சொத்துகளால் எதிர்பார்த்த ஆதாயங்களைப் பெறுவீர்கள். முடிந்தவரை குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாது இருப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் பணவரவில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஏப்ரல் முதல் வளமான பலன்களைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம்காண முடியும். கொடுக்கல்- வாங்க-ல் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். கொடுத்த கடன்களும் வீடுதேடி வரும்.
தொழில், வியாபாரிகளுக்கு
தொழில், வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சற்று மந்தநிலை நிலவினாலும், உங்கள் பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக விலகி ஏப்ரலுக்குப் பிறகு நல்ல முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும், அதன்மூலம் நற்பலனைப் பெறமுடியும். கூட்டாளிகளாலும், தொழிலாளர்களாலும் சிறுசிறு வீண் பிரச்சினைகள் தோன்றும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு
ஆண்டின் தொடக்கத்தில் சில சமயங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சாதிக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு
உடன் பழகுபவர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பதைத் தவிர்ப்பது உத்தமம். ஏப்ரல் மாதம் முதல் பெயர், புகழ் உயரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றிவிட முடியும். கட்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். அதிகப்படியாக உழைக்க வேண்டிய நிலைகள் ஏற்பட்டாலும் பட்ட பாட்டிற்கான முழுப்பலனை தடையின்றி அடைய முடியும். புதிய யுக்திகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சிறு தடைகளுக்குப்பின் கிடைக்கும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் விட்டு கொடுத்துச் சென்றால் ஒற்றுமை நன்றாக இருக்கும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பணவரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றிபெறும். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிர்ப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.
மாதப் பலன்கள்
ஜனவரி
உங்கள் ராசிக்கு 11-ல் ராகு, மாத முற்பாதியில் 6-ல் சூரியன், மாதப் பிற்பாதியில் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால், எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக் கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்குப்பின் அனுகூலப் பலன் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரரீதியாக ஓரளவுக்கு மேன்மைகளை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 5-1-2022 இரவு 7.53 மணிமுதல் 8-1-2022 அதிகாலை 00.15 மணிவரை.
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகளை அடைவீர்கள். சூரியன் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது உத்தமம். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளைத் தள்ளிவைப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. நவீனபொருட்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 2-2-2022 காலை 6.45 மணிமுதல் 4-2-2022 காலை 10.02 மணிவரை.
மார்ச்
உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிறுசிறு அலைச்சல்கள், டென்ஷன்களை சந்திக்கநேரிடும் என்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதநிலை உண்டாகும். வெளியூர்- வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபமும் வாய்ப்புகளும் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 1-3-2022 மாலை 4.31 மணிமுதல் 3-3-2022 இரவு 8.03 மணிவரை மற்றும் 28-3-2022 இரவு 11.54 மணிமுதல் 31-3-2022 அதிகாலை 4.32 மணிவரை.
ஏப்ரல்
உங்கள் ராசிக்கு 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நினைத்தது நிறைவேறும். 14-ஆம் தேதி முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் சகல விதத்திலும் அனுகூலங்கள் நடக்கும். தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரிய முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்களும் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் கவனம்தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்துகொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். முருகனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 25-4-2022 அதிகாலை 5.30 மணிமுதல் 27-4-2022 பகல் 11.00 மணிவரை.
மே
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, சுக்கிரன், 10, 11-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்தி ருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் திறம்பட செய்யமுடியும். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும், மகிழ்ச்சியும் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி லாபம் பெருகும். அரசாங்க வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். ஆஞ்சனேயர் வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 22-5-2022 பகல் 11.12 மணிமுதல் 24-5-2022 மாலை 4.26 மணிவரை.
ஜூன்
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். வெளியூர்- வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடையமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன்களை வசூ-க்க முடியும். வீண்செலவுகள் குறையும். விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 18-6-2022 மாலை 6.42 மணிமுதல் 20-6-2022 இரவு 10.35 மணிவரை.
ஜூலை
ஜென்ம ராசிக்கு 9-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சூரியன் 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம்கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடிவருவதால் அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிவனை வழிபடுவது சிறப்பு.
சந்திராஷ்டமம்: 16-7-2022 அதிகாலை 4.15 மணிமுதல் 18-7-2022 காலை 6.34 மணிவரை.
ஆகஸ்ட்
உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய், 9-ல் குரு சஞ்சரிப்பதால் பல்வேறு அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்க-ல் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துமுடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். பிரதோஷகால விரதம் மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 12-8-2022 பகல் 02.50 மணிமுதல் 14-8-2022 மாலை 4.15 மணிவரை.
செப்டம்பர்
உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாய், மாதப் பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப் பலனை அடையமுடியும். பொன், பொருள் சேரும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்லவும். உத்தியோகஸ்தர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் நல்ல வாய்ப்பைப் பெறமுடியும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 9-9-2022 அதிகாலை 00.40 மணிமுதல் 11-9-2022 அதிகாலை 2.22 மணிவரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் 3-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வளமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத் திலும் தடையின்றி வெற்றிகிட்டும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவதுமூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடமுடியும். தொழி-ல் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பதுமூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 6-10-2022 காலை 8.27 மணிமுதல் 8-10-2022 பகல் 11.23 மணிவரை.
நவம்பர்
உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணவரவுகளில் இடையூறுகள் ஏற்பட்டாலும் சுக்கிரன், புதன் இம்மாதத்தில் 4, 5-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது கஷ்டங்கள் குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அசையும்- அசையா சொத்துகளால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது உத்தமம். உத்தியோகத்தில் வேளைப்பளு இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 2-11-2022 பகல் 2.15 மணிமுதல் 4-11-2022 மாலை 6.20 மணிவரை மற்றும் 29-11-2022 இரவு 7.50 மணிமுதல் 1-12-2022 இரவு 11.47 மணிவரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு 9-ல் குரு, 11-ல் செவ்வாய், மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் நற்பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றிகிட்டும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடையலாம். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலம் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 27-12-2022 அதிகாலை 3.30 மணிமுதல் 29-12-2022 அதிகாலை 5.55 மணி வரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9. நிறம்: வெள்ளை, சிவப்பு. கிழமை: திங்கள், வியாழன். கல் : முத்து. திசை: வடகிழக்கு. தெய்வம்: வேங்கடாசலபதி.
சிம்மம்
மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, அஞ்சா நெஞ்சமும் தாராள மனப் பான்மையும், பெருந்தன்மையும் கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2022-ஆம் ஆண்டு ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும், வரும் 12-4-2022 முதல் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது சஞசரிக்க இருப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறமுடியும். நீங்கள் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு பல்வேறு முன்னேற்றங் களைப் பெறுவீர்கள். எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் பலம் ஏற்படும். பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்களின் தனித் திறமையால் எதையும் சிறப்பாகக் கையாண்டு முன்னேற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் நல்ல வாய்ப்புகள் பெறமுடியும். உங்களின் முயற்சிகள் நற்பலனைத் தரும். கூட்டாளிகளிடம் இருந்த பிரச்சினைகள் மறைந்து அபிவிருத்தி பெருகும். நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களால் சிறுசிறு இடையூறுகளை சந்தித்தாலும் எதிர்பார்த்த உயர்வுகளைத் தடையின்றி அடைய முடியும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்து கொள்ளமுடியும். புதியவேலை தேடுபவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல உயர்வுகளைப் பெறமுடியும். 13-4-2022 வரை ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் இவ்வாண்டில் முதல் மூன்று மாதங்கள் உங்களின் பொருளாதாரநிலை மிக சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடி வருவதால் குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். சிறப்பான பண வரவால் அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் வரும் 13-4-2022 முதல் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்கமுடியும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு வீண் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டால் அவர்கள்மூலம் அனுகூலப்பலனைப் பெறமுடியும். ஆண்டின் தொடக்கத்தில் 4, 10-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு 12-4-2022-ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின்மூலம் ராகு 9-லும், கேது 3-லும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு உள்ள அலைச்சல்கள் சற்று குறையும். வெளியூர், வெளிநாடு மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும்.
குடும்பம், பொருளாதாரநிலை
கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும், திருமண சுபகாரிய முயற்சிகளில் ஆண்டின் தொடக்கத்தில் அனுகூலம் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துகளால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்கள்மூலம் ஆதாயங்களை அடையமுடியும்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எது எப்படி இருந்தாலும் எந்த நெருக்கடிகளையும் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். உங்கள் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்க-ல் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களைத் தவிர்க்க முடியும்.
தொழில், வியாபாரிகளுக்கு
தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஆதாயத்தையும் பெறமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துக்கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக்கொள்ளமுடியும். வெளியூர்- வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் தேவையற்ற குழப்பங்கள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் இருந்தாலும், எதையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக விலகும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள், பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பும் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்ல நினைப்பவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு
கட்சிப் பணிகளுக்கு நிறைய செலவு செய்யவேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலையில் சரளமான நிலை இருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவினைப் பெறமுடியும். எதிர்பாராத உயர்பதவி கிடைக்கும். பெயர், புகழ் உயரும். பத்திரிகை நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் நீர் வரத்து குறையும் என்றாலும், எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தினைப் பெற்றுவிடுவீர்கள். புதிய மனை, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிடைக்கும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நல்லது நடக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பொருளாதார நெருக்கடிகளை எதிர்க்கொள்ளும் பலம் உண்டாகும்.
மாதப் பலன்கள்
ஜனவரி
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு, மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் நடக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளித் தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 8-1-2022 அதிகாலை 00.15 மணிமுதல் 10-1-2022 காலை 8.49 மணிவரை.
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய மாதமாக இருக்கும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். கடன்கள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். விநாயகர் வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 4-2-2022 காலை 10.02 மணிமுதல் 6-2-2022 மாலை 5.09 மணிவரை.
மார்ச்
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதன்மூலம் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். உற்றார்- உறவினர் களை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்களும் ஓரளவுக்கு ஆதரவாக நடந்துகொள்வார்கள். கொடுக்கல்- வாங்க-ல் சிறப்பான நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் முழுமையாக விலகும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி லாபங்களை அடையலாம். நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 3-3-2022 இரவு 8.03 மணிமுதல் 6-3-2022 அதிகாலை 2.29 மணிவரை மற்றும் 31-3-2022 அதிகாலை 4.32 மணிமுதல் 2-4-2022 பகல் 11.21 மணிவரை.
ஏப்ரல்
உங்கள் ராசிக்கு 6-ல் சனி சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட்டால் நற்பலன்களை அடையமுடியும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, உற்றார்- உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் மாதத் தொடக்கத்தில் நல்ல செய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்க-ல் சரளமானநிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று நிம்மதியான நிலை இருக்கும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 27-4-2022 பகல் 11.00 மணிமுதல் 29-4-2022 மாலை 6.42 மணிவரை.
மே
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9, 10-ல் சூரியன், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றிகிட்டும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். சனி 7-ல், குரு 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்தநிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இடையூறு உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை தரிசிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 24-5-2022 மாலை 4.26 மணிமுதல் 27-5-2022 அதிகாலை 00.38 மணிவரை.
ஜூன்
உங்கள் ராசிக்கு 9, 10-ல் சுக்கிரன், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் பல்வேறு வகையில் வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆன்மிக, பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய், குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குபின் கிடைக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-6-2022 இரவு 10.35 மணிமுதல் 23-6-2022 காலை 6.15 மணி வரை.
ஜூலை
உங்கள் ராசிக்கு 10, 11-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களால் ஒருசில அனுகூலங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது, ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர்- வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலம் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வாகனம் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற- உயர்வுகள் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-7-2022 காலை 6.34 மணிமுதல் 20-7-2022 பகல் 12.50 மணிவரை.
ஆகஸ்ட்
உங்கள் ராசிக்கு 8-ல் குரு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு, உற்சாகமின்மை போன்றவை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டிவரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படவும். 10-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 14-8-2022 மாலை 4.15 மணிமுதல் 16-8-2022 இரவு 09.05 மணிவரை.
செப்டம்பர்
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. செவ்வாய் 10-ல் இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என்றாலும், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்களைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் வேலைப்பளு இருந்தாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 11-9-2022 அதிகாலை 2.22 மணிமுதல் 13-9-2022 காலை 6.35 மணி வரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சுப காரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தமுடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். கேது 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 8-10-2022 பகல் 11.23 மணிமுதல் 10-10-2022 மாலை 4.01 மணிவரை.
நவம்பர்
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றிமேல் வெற்றி அடைவீர்கள். சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் மேன்மை உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குரு 8-ல் இருப்பதால் பணவிஷயத்தில சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் யோகம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். குரு பகவானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 04-11-2022 மாலை 6.20 மணிமுதல் 6-11-2022 இரவு 12.03 மணிவரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப் பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்க-ல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடிவரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள், எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிவபெருமானை வழிபடுவது நல்லது. சந்திராஷ்டமம்: 1-12-2022 இரவு 11.47 மணிமுதல் -4-12-2022 காலை 6.16 மணிவரை மற்றும் 29-12-2022 அதிகாலை 5.55 மணிமுதல் 31-12-2022 பகல் 11.45 மணிவரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9. நிறம்: வெள்ளை, சிவப்பு. கிழமை: ஞாயிறு, திங்கள். கல்: மாணிக்கம். திசை: கிழக்கு. தெய்வம்: சிவன்.
கன்னி
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, எவ்வளவு அவசரமாக வேலை இருந்தாலும் பரபரப்பு இல்லாமல் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்ளும் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2022-ஆம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனிபகவான் இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சிறப்பாக செயல்பட்டு படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் பல புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருப்பதால் எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்கமுடியும். எதிர்பார்க்கும் உயர்பதவிகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். 13-4-2022 வரை குரு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், இவ்வாண்டில் முதல் மூன்று மாதங்கள் மட்டும் நீங்கள் சற்று பொறுமையுடன் இருக்கவும். பணவரவுகளில் ஏற்ற- இறக்கம் இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரநிலை மிகவும் சிறப்பாக இருப்பது மட்டுமின்றி நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் காலமாக இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வாகனங் கள் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீகச் சொத்துகளால் ஒரு சிலருக்கு ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமைவது மட்டுமின்றி பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடையமுடியும். பல பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மிகதெய்வீக காரியங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு வரும் 12-4-2022-ல் ஏற்படவுள்ள ராகு- கேது மாற்றத்தின்மூலம் கேது ஜென்ம ராசிக்கு 2-லும், ராகு 8-லும் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு உணவு உண்பது, தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். குடும்ப விவகாரங்களைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் சனிபகவான் அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் இக்காலங்களில் மிகவும் அனுகூலமான பலனை அடையும் யோகம் உண்டாகும்.
குடும்பம், பொருளாதார நிலை
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படும் காலம் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சொந்த பூமி, மனை போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சுபச்செய்தி உங்களுக்கு வந்துசேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தைக் காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சினைகள் தீரும். இது வரை இருந்து வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தனவரவுகளால் பொருளாதாரநிலை மேன்மையடையும். சேமிப்பும் பெருகும்.
தொழில், வியாபாரிகளுக்கு
பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியைப் பெருக்கமுடியும். அரசு வழியில் அனுகூலம் கிட்டும். புதிய கிளைகளை நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர்- வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரநிலை உயரும். புதியவேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிட்டும்.
அரசியல்வாதிகளுக்கு
பெயர் புகழ் உயரக்கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு செலவுகளை செய்யவேண்டி இருந்தாலும் மறைமுக வருவாய்களும் பெருகும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்றுவிடுவீர்கள். நவீனமுறைகளைப் பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க முடியும். வேலையாட்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். சொந்த வீடு, மனை போன்றவற்றை வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும்.
பெண்களுக்கு
உடல்நிலை மிகவும் அற்புதமாக அமையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம், மற்றும் அதிநவீனப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
மாதப் பலன்கள்
ஜனவரி
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, மாத முற்பாதியில் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கக்கூடும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாத முற்பாதியில் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 10-1-2022 காலை 8.49 மணிமுதல் 12-1-2022 இரவு 8.45 மணிவரை.
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். குரு 6-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அசையும்- அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்கநேரிடும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் சற்றே அலைச்சல்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம்பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 6-2-2022 மாலை 5.09 மணிமுதல் 9-2-2022 அதிகாலை 4.09 மணிவரை.
மார்ச்
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுப காரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதியவாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் தொழில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 6-3-2022 அதிகாலை 2.29 மணிமுதல் 8-3-2022 பகல் 12.30 மணிவரை.
ஏப்ரல்
உங்கள் ராசிக்கு 7-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 14-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார தேக்கங்கள் எல்லாம் விலகி தாராள தனவரவு ஏற்படும். உடல்ரீதியாக மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்படமுடியும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட முடியும். கடன்களும் படிப்படியாகக் குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 2-4-2022 பகல் 11.21 மணிமுதல் 4-4-2022 இரவு 9.01 மணிவரை மற்றும் 29-4-2022 மாலை 6.42 மணி முதல் 2-5-2022 அதிகாலை 04.43 மணிவரை.
மே
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் இனிய மாதமாக இருக்கும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அசையும்- அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறமுடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். காலபைரவரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 27-5-2022 அதிகாலை 00.38 மணிமுதல் 29-5-2022 பகல் 11.15 மணிவரை.
ஜூன்
ஜென்ம ராசிக்கு 7-ல் குரு, 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பெரியதொகைகளை சிறப்பா கக் கையாண்டு லாபங்களை அடையும் யோகம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதியவாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைத்து உங்களின் நீண்டநாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்படலாம். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நல்லவாய்ப்புகள் கிடைக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 23-6-2022 காலை 6.15 மணி முதல் 25-6-2022 மாலை 5.02 மணிவரை.
ஜூலை
உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப் பாக இருக்கும். குரு 7-ல் இருப்பதால் பல்வேறு வகையில் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். குடும்பத்தில் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் சரளமானநிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் உயர்வுகள் உண்டாகும். புதியவேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-7-2022 பகல் 12.50 மணிமுதல் 22-7-2022 இரவு 11.01 மணிவரை.
ஆகஸ்ட்
உங்கள் ராசிக்கு 10, 11-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துக்கொள்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். அஷ்டலட்சுமியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 16-8-2022 இரவு 9.05 மணிமுதல் 19-8-2022 காலை 6.06 மணிவரை.
செப்டம்பர்
குரு, சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும்- அசையா சொத்துகளால் வீண்விரயங்களை சந்திக்கநேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பேசினால் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். தொழில், வியாபாத்தில் பெரிய தொகைகளை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உக்ர தெய்வங்களை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 13-9-2022 காலை 6.35 மணிமுதல் 15-9-2022 பகல் 2.28 மணிவரை.
அக்டோபர்
ஜென்ம ராசியில் சூரியன், குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. புதன், சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத் துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கமுடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பேச்சில் நிதானமாக இருந்தால் வீண் விரோதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 10-10-2022 மாலை 4.01 மணிமுதல் 12-10-2022 இரவு 11.30 மணிவரை.
நவம்பர்
உங்கள் ராசிக்கு 9, 10-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார் கள். பொன், பொருள்சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனைப் பெறமுடியும். பணவரவுகளில் சரளமான நிலையிருக்கும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். வெளியூர், வெளிமாநிலங்களுக்குச் சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 6-11-2022 இரவு 12.03 மணிமுதல் 9-11-2022 காலை 7.58 மணிவரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 3-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மை, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ராகு 8-ல் சஞ்சரிப்பாதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் தாராளமாக அமையும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அசையும்- அசையா சொத்துகள்மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்க-ல் பெரியதொகைகளை ஈடுபடுத்தி லாபங்களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 4-12-2022 காலை 6.16 மணிமுதல் 6-12-2022 பகல் 3.02 மணிவரை மற்றும் 31-12-2022 பகல் 11.45 மணிமுதல் 2-1-2023 இரவு 8.50 மணிவரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 7, 8. நிறம்: பச்சை, நீலம். கிழமை: புதன், சனி. கல்: மரகதப் பச்சை. திசை: வடக்கு. தெய்வம்: ஸ்ரீவிஷ்ணு.
துலாம்
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே, பிறரை எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றலும், நேர்மையையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2022 -ஆம் வருடத்தில் 13-4-2022 வரை ஆண்டுக் கோளான குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள், முன்னேற்றங்கள் உண்டாவதுடன், எதையும் எதிர்கொள்ளக்கூடிய வ-மையும் வல்லமையும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவந்து சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம்கிட்டும். தொழில், வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் வளமான பலன்கள் கிடைக்கும் யோகம், உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும் நிலை உண்டாகும். 2022-ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சனி பகவான் 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்தாஷ்டமச்சனி நடைபெறுவதால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். உங்களது சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சற்று பாதிக்கும். 13-4-2022 முதல் குரு உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால், பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்காது. எதிலும் நீங்கள் முன்நின்று செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். முடிந்தவரை கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்வதன்மூலம் பொருட்தேக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். உடன்பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் பணியில் மட்டும் கவனத்துடன் செயல்படுவது, முடிந்தவரை வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ளவது நல்லது. இவ்வருடத்தில் உங்கள் ராசிக்கு 2, 8-ல் சஞ்சரிக்கும் கேது, ராகு 12-4-2022 முதல் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7-லும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை 5-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் இக்காலத்தில் சற்று குறைந்து நற்பலன்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், சண்டை, சச்சரவுகளும் ஏற்படக்கூடிய காலம் என்பதால், விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார்- உறவினர் களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
கொடுக்கல்- வாங்கல்
பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப்பின் வசூ-த்து விடுவீர்கள். அவ்வப்போது தேவையற்ற வம்பு வழக்குகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய வ-மையும் வல்லமையும் கூடும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் படிபடியாக நிவர்த்தியாகும்.
தொழில், வியாபாரிகளுக்கு
கூட்டுத் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்களை அடைவதில் சில சிக்கல் ஏற்படும். நிறைய போட்டி பொறாமைகளையும் மறைமுக எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். எதிலும் சிந்தித்து செயல்படுவது, கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொள்வது போன்றவற்றால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளமுடியும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது உத்தமம்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் நிம்மதிக் குறைவுகள், வீண் பழிச்சொற்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு எதிலும் ஈடுபாடற்ற நிலை உண்டாகும் என்றாலும், எதையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சிலதடை தாமங்களுக்குப்பின் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு
மக்களின் ஆதரவைப்பெற அரும்பாடுபட வேண்டியிருந்தாலும், எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களைப் பெறுவீர்கள். பணவரவுகளில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதால் ஓரளவுக்கு அவர்களிடம் செல்வாக்கினைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தாலும் மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராமல் ஏற்படக்கூடிய செலவுகளை சமாளிக்க கடன் வாங்கவேண்டி வரும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் எல்லாம் சற்று குறைந்து நிம்மதி ஏற்படும். கால்நடைகளால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்ளவேண்டிய காலமாகும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். சுப காரியங்கள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் பலம் உங்களிடம் இருக்கும். தாய் வழியில் ஆதரவு கிட்டும். புத்திர பாக்கியம் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு சற்று ஆறுதலை அளிக்கும்.
மாதப் பலன்கள்
ஜனவரி
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, மாத முற்பாதியில் 3-ல் சூரியன், பிற்பாதியில் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 12-1-2022 இரவு 8.45 மணிமுதல் 15-1-2022 காலை 9.51 மணிவரை.
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து ஆடம்பரத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ளமுடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பல புதியவாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியானநிலை இருக்கும். புதிதாக வேலைதேடுபவர்களுக்கு திறமைகேற்ப வேலைவாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 9-2-2022 அதிகாலை 4.09 மணிமுதல் 11-2-2022 மாலை 5.05 மணிவரை.
மார்ச்
ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் குரு, மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியும். திருமண சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திரவழியில் இருந்த கவலைகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்க-ல் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் அனுகூலமானப் பலனைப்பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சனிபகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
சந்திராஷ்டமம்: 8-3-2022 பகல் 12.30 மணிமுதல் 11-3-2022 அதிகாலை 1.03 மணிவரை.
ஏப்ரல்
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் 5-ல் குரு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினா லும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல்- வாங்க-ல் நிலவிய தேக்கங்கள் விலகி அனுகூலங்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபமும் கிட்டும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆஞ்சனேயரை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 4-4-2022 இரவு 9.01 மணிமுதல் 7-4-2022 காலை 9.09 மணிவரை.
மே
உங்கள் ராசிக்கு 6-ல் குரு 7-ல் சூரியன் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை ஏற்ற- இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பணம் கொடுக்கல்- வாங்க-ல் சுமாரான நிலையே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. சிவனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 2-5-2022 அதிகாலை 4.43 மணிமுதல் 4-5-2022 மாலை 4.45 மணிவரை மற்றும் 29-5-2022 பகல் 11.15 மணிமுதல் 31-5-2022 இரவு 11.30 மணிவரை.
ஜூன்
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் நற்பலனை அடைய எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும். கடன்கள் சற்று குறையும். ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைக் பெருக்கிக்கொள்ளமுடியும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் வேலைப்பளுவை குறைத்துக் கொள்ளமுடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 25-6-2022 மாலை 5.02 மணிமுதல் 28-6-2022 அதிகாலை 5.32 மணிவரை.
ஜூலை
உங்கள் ராசிக்கு 6-ல் குரு 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, பொருளாதாரரீதியாக நெருக்கடி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம்தேவை. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துக்கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்க-ல் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தொழி-ல் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 22-7-2022 இரவு 11.01 மணிமுதல் 25-7-2022 பகல் 11.32 மணிவரை.
ஆகஸ்ட்
ராசியாதிபதி சுக்கிரன் 9, 10-ல், சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்லது நடக்கும். உற்றார்- உறவினர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் நல்ல லாபத்தைப் பெறமுடியும். கொடுத்த கடன்களையும் வசூ-க்க முடியும். சொந்த தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகளை அடையமுடியும் என்றாலும் வேலைபளு சற்று அதிகமாக இருக்கும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 19-8-2022 காலை 6.06 மணிமுதல் 21-8-2022 மாலை 6.10 மணிவரை.
செப்டம்பர்
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும், சூரியன், சுக்கிரன் மாத முற்பாதியில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். தொழி-ல் வேலையாட்கள் உதவியால் நெருக்கடி குறையும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 15-9-2022 பகல் 2.28 மணிமுதல் 18-9-2022 அதிகாலை 1.43 மணிவரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு 6-ல் குரு, மாத முற்பாதியில் 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவு ஏற்படும். கணவன்- மனைவியிடையே அனுசரித்து நடந்துகொள்வது, உறவினர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கமுடியும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கொடுக்கல்- வாங்க-ல் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 12-10-2022 இரவு 11.30 மணிமுதல் 15-10-2022 காலை 10.01 மணிவரை.
நவம்பர்
ஜென்ம ராசியில் சூரியன், 6-ல் குரு, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய விஷயத்தில் கவனம்தேவை. பணவரவுகள் ஏற்ற- இறக்கமாகதான் இருக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேற சற்று தாமதநிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். சிவனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 9-11-2022 காலை 7.58 மணிமுதல் 11-11-2022 காலை 6.17 மணிவரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு 6-ல் குரு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாதப் பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறமுடியும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சாதிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைய எதிலும் நீங்கள் முன்நின்று செயல்படவேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம்: 6-12-2022 பகல் 3.02 மணிமுதல் 9-12-2022 அதிகாலை 1.43 மணிவரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 7, 8. நிறம்: வெள்ளை, பச்சை. கிழமை: வெள்ளி, புதன். கல்: வைரம். திசை: தென்கிழக்கு. தெய்வம்: லக்ஷ்மி.
விருச்சிகம்
விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, குறும்புத் தனமும், விஷமத்தனமும் அதிகம் கொண்டவராக இருந்தாலும், பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2022-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் சனி வலுவாக சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல்படக்கூடிய ஆற்றலும் உண்டாகும். எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படுவதால் உங்களுக்கு பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து குடும்பத்தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்யமுடியும். 2022-ல் ஆண்டுத் தொடக்கத்தில் குரு பகவான் ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதும், ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும் சற்று சுமாரான அமைப்பு என்பதால் சிறுசிறு தடைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும், 13-4-2022 முதல் குரு உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும், 12-4-2022-ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின்மூலம் உங்கள் ராசிக்கு ராகு 6-ஆம் வீட்டிலும், கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால், ஏப்ரலுக்குப் பிறகு நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் காலமாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்களுக்கான முயற்சிகள் தடையின்றி கைகூடி தக்க சமயத்தில் நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சியளிக்கும் நிகழச்சிகள் நடைபெறும். தற்போது உள்ள குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாடு மூலம் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். புதிய யுக்திகளைக் கையாண்டு தொழிலை விரிவுசெய்யும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் அனைத்தும் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் அடைவீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதியவேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயர்வடையும். அசையும்- அசையா சொத்துகளை வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை அளிக்கும். புரிந்துகொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்- வாங்க-ல் சரளமானநிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் சனிபகவான் அதிசாரமாக வரும் 29-4-2022 முதல் 12-7-2022 வரை சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்தாலும், குரு, ராகு சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள்.
குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஏப்ரலுக்குப் பின்பு ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடிவரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும். அதிநவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி ஏப்ரலுக்குப் பிறகு சகல விதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.
தொழில், வியாபாரிகளுக்கு
தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நீங்கள் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் கௌரவமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெறமுடியும். புதியவேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
உங்களின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். மறைமுக வருவாய் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடுவதால் சற்றே அலைச்சல் உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளைபொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைப்பதால் உழைப்பிற்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் குறைந்து சிறப்பான பலன்களை அடைவீர்கள். கால்நடைகளால் லாபம் கிட்டும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடையே இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்வீர்கள். வரும் ஏப்ரலுக்குப் பிறகு திருமணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியம் அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும்.
மாதப் பலன்கள்
ஜனவரி
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, மாதப் பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நவீன பொருட்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். கணவன்- மனைவியிடையே இருந்த வாக்குவாதங்கள் விலகி ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்லசெய்தி கிடைக்கும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 15-1-2022 காலை 9.51 மணிமுதல் 17-1-2022 இரவு 10.02 மணிவரை.
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மை மிகுந்த பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள் ஆதரவாக நடந்துக்கொள்வதால் உங்கள் பிரச்சினைகள் விலகும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில்ரீதியாக புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபங்களைப் பெறமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். சிலருக்கு வெளியூர்- வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அமையும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 11-2-2022 மாலை 5.05 மணிமுதல் 14-2-2022 அதிகாலை 5.19 மணிவரை.
மார்ச்
ராசியாதிபதி செவ்வாய்- சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். உங்கள் பலமும் வ-மையும் கூடும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் இருக்கும். பண வரவில் எந்தவித இடையூறுகளும் இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதியவாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் நல்லநிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதியவேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிட்டும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 11-3-2022 அதிகாலை 1.03 மணிமுதல் 13-3-2022 பகல் 1.30 மணிவரை.
ஏப்ரல்
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன், வரும் 13-ஆம் தேதி முதல் குரு 5-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். கணவன்- மனைவியிடையே இருந்த ஒற்றுமைக் குறைவுகள் விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். புதியவாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதால் லாபமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 7-4-2022 காலை 9.09 மணிமுதல் 9-4-2022 இரவு 9.51 மணிவரை.
மே
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, சுக்கிரன், 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் தெம்புடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்க-ல் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைத் தடையின்றிப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழச்சி அளிக்கும். காலபைரவரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 4-5-2022 மாலை 4.45 மணிமுதல் 7-5-2022 அதிகாலை 5.34 மணிவரை மற்றும் 31-5-2022 இரவு 11.30 மணிமுதல் 3-6-2022 பகல் 12.20 மணிவரை.
ஜூன்
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமானநிலை இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதியவாய்ப்பு கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூ-ப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு, சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 28-6-2022 அதிகாலை 5.32 மணி முதல் 30-6-2022 மாலை 6.23 மணிவரை.
ஜூலை
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் வெற்றியினைப் பெற்றுவிட முடியும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். உற்றார்- உறவினர்கள் சற்றே ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். வெளியூர்மூலம் நல்ல செய்தி கிடைக்கும். மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 25-7-2022 பகல் 11.32 மணிமுதல் 27-7-2022 இரவு 12.20 மணிவரை.
ஆகஸ்ட்
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அனுகூலங்கள் ஏற்படும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்றுவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். குரு வக்ரகதியில் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது உத்தமம். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 21-8-2022 மாலை 6.10 மணிமுதல் 24-8-2022 காலை 6.56 மணிவரை.
செப்டம்பர்
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். கடன்களும் சற்றே குறையும். கொடுக்கல்- வாங்க-ல் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்லலாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். முருக வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம்: 18-9-2022 அதிகாலை 1.43 மணிமுதல் 20-9-2022 பகல் 2.23 மணிவரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பாகும். சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் திறன் உண்டாகும். செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் செயல்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். வெளியூர்- வெளிநாடு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 15-10-2022 காலை 10.01 மணிமுதல் 17-10-2022 இரவு 10.28 மணிவரை.
நவம்பர்
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதும், சூரியன் 12-ல் சஞ்சரிப்பதும், செவ்வாய் 7, 8-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறு உண்டாகும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமானநிலை இருந்தாலும் கிடைக்கவேண்டிய லாபம் கிட்டும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 11-11-2022 காலை 6.17 மணிமுதல் 14-11-2022 காலை 6.30 மணி வரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் சரளமான நிலையிருக்கும். ஆரோக்கியத்தில் மந்த நிலை உண்டானாலும் எடுக்கும் காரியத்தை திறம்பட செய்துமுடித்து விடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 9-12-2022 அதிகாலை 1.43 மணிமுதல் 11-12-2022 பகல் 1.51 மணிவரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9. நிறம்: ஆழ்சிவப்பு, மஞ்சள். கிழமை: செவ்வாய், வியாழன்.கல்: பவளம், திசை: தெற்கு. தெய்வம்: முருகன்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்பவராகவும் கள்ளம் கபடமின்றி உண்மையாகப் பழகுபவராகவும் விளங்கும் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2022-ஆம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி குரு 13-4-2022 வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும், அதன்பின்பு சுக ஸ்தானமான 4-ல் குரு சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே அடையவேண்டிய நற்பலன்களை அடையமுடியும். உங்கள் ராசிக்கு சர்ப்ப கிரகமான ராகு 6-ல் 12-4-2022 வரையும், அதன்பின்பு கேது 11-ல் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளும் திறன், எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் ஏற்றங்களை அடையும் வாய்ப்பு உண்டாகும். பண வரவுகள் சற்ற சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் சிறு தடைக்கு பின்பு திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே இருந்த கடந்தகால கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். ஆன்மிக- தெய்வீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு, தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் மந்தநிலை நிலவினாலும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சிறப்பான முன்னேற்றங் களைப் பெறுவீர்கள். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ளமுடியும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் மனநிம்மதியுடன் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் சிறு தடைக்குப்பின் கிடைக்கும். ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால், உங்களுக்கு ஏழரைச்சனியில் பாதசனி நடைபெறுவதால் எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிககவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தேவையற்ற வகையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு சிலருக்கு கடன்கள் ஏற்படலாம். எதிலும் சிந்தித்து செயல்படுவது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. திருக்கணிதப்படி உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சனி பகவான் அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகபெரிய முன்னேற்றம் ஏற்படும். ஏழரைச்சனியின் தாக்கம் முற்றிலும் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடையும் யோகம் உண்டாகும்.
குடும்பம், பொருளாதார நிலை
திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறுசிறு இடையூறுகளுக்குபின் நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் சென்றால் ஒற்றுமையும், அன்யோன்யமும் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சுபச் செய்தி விரைவில் வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
கொடுக்கல்- வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகள் ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் ஏப்ரலுக்குப் பிறகு ஒரு சில அனுகூலங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். சிலருக்குள்ள கடன் பிரச்சினைகள் படிபடியாகக் குறையும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.
தொழில், வியாபாரிகளுக்கு
ஆண்டின் தொடக்கத்தில் சற்று மந்தநிலை நிலவினாலும் ஏப்ரலுக்குப் பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வெளியூர்- வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியைப் பெருக்கமுடியும். புதிய கிளைகளை நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் சிறு தடைக்குப் பின்பு கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் சென்று பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாலும், வேலைப்பளு அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு
பெயர், புகழ் உயரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என்றாலும் பண விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டால்தான் எதையும் சமாளிக்க முடியும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு செலவுகளை செய்யவேண்டி இருந்தாலும் பொருளாதார ரீதியாக எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்றுவிடுவீர்கள். நவீனமுறைகளைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்கள் தக்க நேரத்திற்குக் கிடைப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகள் வெற்றிபெறும். பொருளாதார நிலை சற்று சாதகமாக இருக்கும். அரசு வழியில் ஆதாயங்கள் கிட்டும்.
பெண்களுக்கு
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். திருமண சுபகாரியங்கள் சிறு தடைக்குப் பின்பு கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணம், குடும்பத்திற்கு தேவையான அதி நவீன பொருட்கள் வாங்குவீர்கள். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
மாதப் பலன்கள்
ஜனவரி
இம்மாத முற்பாதியில் ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். நெருங்கியவர்களால் நிம்மதி குறையும். வீண் செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தாமதம் அடையும். கணவன்- மனைவியிடையே ஏற்படக்கூடிய வாக்கு வாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது கவனம்தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெற சற்று தாமதநிலை உண்டாகும். சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடுவது சிறப்பு.
சந்திராஷ்டமம்: 17-1-2022 இரவு 10.02 மணிமுதல் 20-1-2022 காலை 8.24 மணி வரை.
பிப்ரவரி
ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் ராகு, மாதப் பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவில் உள்ள நெருக்கடிகள் விலகி நிம்மதி அடையமுடியும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமண சுபகாரிய முயற்சிகள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 14-2-2022 அதிகாலை 5.19 மணிமுதல் 16-2-2022 பகல் 3.14 மணிவரை.
மார்ச்
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 6-ல் ராகு, மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். மறைமுக எதிர்ப்புகள் மறைந்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்க-ல் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த பொருட்தேக்கங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 13-3-2022 பகல் 1.30 மணி முதல் 15-3-2022 இரவு 11.33 மணிவரை.
ஏப்ரல்
உங்கள் ராசிக்கு 7-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். சனி 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றக்கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 9-4-2022 இரவு 9.51 மணிமுதல் 12-4-2022 காலை 8.34 மணிவரை.
மே
உங்கள் ராசிக்கு 3-ல் சனி அதிசாரமாக சஞ்சரிப்பதாலும், 11-ல் கேது, மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் உங்கள் வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்க-ல் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதியவேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிட்டும். வெளியூர்- வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 7-5-2022 அதிகாலை 5.34 மணி முதல் 9-5-2022 மாலை 5.07 மணிவரை.
ஜூன்
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, மாத முற்பாதியில் 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளிதரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். விஷ்ணுவை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 3-06-2022 பகல் 12.20 மணிமுதல் 5-06-2022 இரவு 12.24 மணிவரை மற்றும் 30-06-2022 மாலை 6.23 மணிமுதல் 3-07-2022 காலை 6.30 மணிவரை.
ஜூலை
உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், ராகு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, தேவையற்ற அலைச்சல் ஏற்படும். வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். முடிந்தவரை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது சிறப்பு. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பதுமூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்- 27-7-2022 இரவு 12.20 மணிமுதல் 30-7-2022 பகல் 12.12 மணிவரை.
ஆகஸ்ட்
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பது சற்று நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், இம்மாதம் புதன் 9, 10-ல் சஞ்சரிப்பதும், வரும் 10-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் சமாளித்து ஏற்றத்தை அடைவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினா லும் ஒற்றுமை குறையாது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்தநிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 24-08-2022 காலை 06.56 மணிமுதல் 26-08-2022 மாலை 06.32 மணிவரை.
செப்டம்பர்
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 10-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை முதலீடு செய்து நல்ல லாபம் காண்பீர்கள். சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-9-2022 பகல் 2.23 மணிமுதல் 23-9-2022 அதிகாலை 02.03 மணிவரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு இம்மாதம் 10, 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைக் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகத்தில் சக நண்பர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 17-10-2022 இரவு 10.28 மணிமுதல் 20-10-2022 காலை 10.30 மணிவரை.
நவம்பர்
இம்மாத முற்பாதியில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். செவ்வாய் மாதப் பிற்பாதியில் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். குரு பகவானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 14-11-2022 காலை 6.30 மணிமுதல் 16-11-2022 மாலை 6.58 மணிவரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற்றத்தை அடையமுடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சூரியன் இம்மாதம் 12 மற்றும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் சிறுசிறு அலைச்சல், உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சிறு நெருக்கடி இருந்தாலும் உங்கள் தனிதிறமையால் அடையவேண்டிய லாபத்தைப் பெறுவீர்கள். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம்: 11-12-2022 பகல் 1.51 மணிமுதல் 14-12-2022 அதிகாலை 2.32 மணிவரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9. நிறம்: மஞ்சள், பச்சை. கிழமை: வியாழன், திங்கள். கல்: புஷ்பராகம். திசை: வடகிழக்கு. தெய்வம்: தட்சிணாமூர்த்தி.
மகரம்
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே, நண்பர்களாக இருந்தாலும், விரோதிகளாக இருந்தாலும் சமமாகப் பழகும் குணமும், எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் தாங்கிக்கொள்ளும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2022-ஆம் ஆண்டில் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுகிறது. எதிலும் நிதானமாக செயல்பட்டால் தேவைகளைப் பூர்த்திசெய்து வாழ்வில் ஏற்றங்களை அடையமுடியும். ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும். உற்றார்- உறவினர்களால் சிறுசிறு ஆதாயங்களைப் பெறுவீர்கள். ஏழரைச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதியை ஏற்படுத்தமாட்டார். எதையும் எதிர்கொண்டு அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். 2022-ஆம் ஆண்டில் 13-4-2022 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், ஏப்ரல் வரை பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பென்று கூறமுடியாது. எனவே பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளைக் குறைப்பது, அதிகப்படியாக கடன்கள் வாங்குவதைத் தவிர்ப்பது உத்தமம். சொந்த மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்க-ல் முடிந்தவரை பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்து போட்ட முதலீட்டை எடுத்துவிடுவீர்கள். வேலையாட்களை அனுசரித்துச் சென்றால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஆதாயப் பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்து உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கேது உங்கள் ராசிக்கு ஆண்டு தொடக்கத்தில் 11-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும், 12-4-2022-ல் ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சிமூலம் ராகு ஜென்ம ராசிக்கு 4-ல், கேது 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சலையும், இருப்பதை அனுபவிக்க இடையூறுகளையும் ஏற்படுத்தலாம். முடிந்தவரை வேலைப்பளுவை குறைத்துக்கொள்வது நல்லது. திருக்கணிதப்படி உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருக்கும் காலத்தில் நெருக்கடிகள் குறைந்து சில ஆதாயங்களை அடையும் யோகம் உண்டாகும்.
குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார்- உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் தொடக்கத்தில் சிறப்பாக இருந்தாலும் ஏப்ரலுக்குப் பிறகு ஏற்ற இறக்கமாக இருக்கும். தேவையற்ற அலைச்சல் காரணமாக சுகவாழ்வு பாதிக்கும். இவ்வாண்டு தொடக்கத்தில் பண வரவுகள் சிறப் பாக இருந்தாலும் ஏப்ரலுக்குப் பிறகு சுமாராகவே இருக்கும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்பட்டால், நெருக்கடிகளை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். நெருங்கியவர்கள் உதவி தக்கநேரத்தில் கிடைப்பதால் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்லபெயர் எடுப்பீர்கள். வம்பு, வழக்கு பிரச்சினைகளில் சற்று இழுபறியான நிலை ஏற்பட்டாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தொழில், வியாபாரிகளுக்கு
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்து செயல்படவும். கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைத்தாலும் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடைவீர்கள். ஆண்டின் முற்பாதியில் அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து நடந்துகொண்டால் போட்ட முதலீட்டை எடுத்து முன்னேற முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் வேலைப்பளு சற்று அதிகரிக்கும் என்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கும் சம்பள உயர்வுகள் கிடைக்கும். பேசும்போது சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.
அரசியல்வாதிகளுக்கு
பெயர், புகழ் மங்கக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டி இருந்தாலும், அதற்கேற்ற வருவாய் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் சற்று ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் ஏற்படும். தகுந்த நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காததால் அறுவடையில் தாமதம் உண்டாகும் என்றாலும், ஓரளவுக்கு எதையும் சமாளித்து எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடையமுடியும். ஆண்டின் முற்பாதியில் அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிட்டும். பங்காளிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம்.
பெண்களுக்கு
நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆண்டின் முற்பாதியில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொண்டால் மட்டுமே அன்றாடப் பணிகளைத் தடையின்றி செய்துமுடிக்க இயலும். பிறர் விஷயங்களில் தலையிடாம-ருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆண்டின் முற்பாதியில் மகிழ்ச்சிதரும் செய்தி கிடைக்கும்.
மாதப் பலன்கள்
ஜனவரி
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் கேது, மாத முற்பாதியில் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால், நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் சிறப்பாக கிடைக்கும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தை அடையமுடியும். சிவ வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம்: 20-01-2022 காலை 08.24 மணிமுதல் 22-01-2022 மாலை 04.48 மணிவரை.
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். செவ்வாய் 12-ல், சூரியன் 1, 2-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைப்பது, பெரியவர்களிடமும், உற்றார்- உறவினர்களிடமும் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் போன்றவற்றை வாங்கமுடியும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்துசேரும். ஆஞ்சனேயர் வழிபாடு சுபிட்சத்தை உண்டாக்கும்.
சந்திராஷ்டமம்: 16-2-2022 பகல் 03.14 மணிமுதல் 18-2-2022 இரவு 10.46 மணிவரை.
மார்ச்
ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் குரு, 11-ல் கேது சஞ்சரிப்பதும், மாதப் பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபத்தையும் பெறமுடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெற்று கடன் சுமைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். எதிலும் திறம்பட செயல்பட்டு நற்பெயர் எடுப்பீர்கள். முருக வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்: 15-3-2022 இரவு 11.33 மணிமுதல் 18-3-2022 காலை 06.32 மணிவரை.
ஏப்ரல்
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார்- உறவினர்கள் ஆதரவாக நடந்துகொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூ-ப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புமூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகளைப் பெறமுடியும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 12-4-2022 காலை 08.34 மணிமுதல் 14-4-2022 மாலை 03.54 மணிவரை.
மே
உங்கள் ராசிக்கு 5-ல் புதன், மாதப் பிற்பாதியில் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய திறன் உண்டாகும். சூரியன், ராகு 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்துச் செல்வது, உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது உத்தமம். அசையும்- அசையா சொத்துகள் வாங்குவதில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்தநிலையை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேச்சைக் குறைத்தால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். சிவ வழிபாடு சிறப்பு.
சந்திராஷ்டமம்: 9-5-2022 மாலை 05.07 மணிமுதல் 12-5-2022 அதிகாலை 01.32 மணிவரை.
ஜூன்
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 4, 5-ல் சுக்கிரன், மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் கிடைக்கும். குரு 3-ல் இருப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார்- உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பிறரை நம்பி பெரிய தொகைகளைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விஷ்ணு வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம்: 5-6-2022 இரவு 12.24 மணிமுதல் 8-6-2022 காலை 10.03 மணிவரை.
ஜூலை
உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 4-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. இம்மாத முற்பாதியில் 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்குப்பின் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடி நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. முருகரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 3-7-2022 காலை 6.30 மணிமுதல் 5-7-2022 மாலை 4.50 மணிவரை மற்றும் 30-07-2022 பகல் 12.12 மணிமுதல் 1-8-2022 இரவு 10.30 மணிவரை.
ஆகஸ்ட்
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், ராகு, 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை ஏற்படும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் தேவையற்ற அலைச்சலால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். பெரிய தொகைகளை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் வீண் செலவுகள் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சனேயரை வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம்: 26-8-2022 மாலை 6.32 மணிமுதல் 29-8-2022 அதிகாலை 4.15 மணிவரை.
செப்டம்பர்
உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தள்ளிவைப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் தோன்றி மறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் வீண் நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். மேலதிகாரிகளிடம் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்: 23-9-2022 அதிகாலை 2.03 மணிமுதல் 25-9-2022 பகல் 11.20 மணிவரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு இம்மாதம் 9, 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்துவிடுவீர்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தி ருக்கும். ஜென்மச்சனி நடப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது சிறப்பு. கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அனுகூலங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாகச் செய்துமுடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். எதிலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நினைத்ததை சாதிக்கமுடியும். அம்மன் வழிபாடு சிறப்பு.
சந்திராஷ்டமம்: 20-10-2022 காலை 10.30 மணிமுதல் 22-10-2022 இரவு 8.05 மணிவரை.
நவம்பர்
உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். பெண்களின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் மூலம் சுபச்செய்திகள் வந்துசேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளைப் பெறமுடியும். வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர்கள். அஷ்டலட்சுமி வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்: 16-11-2022 மாலை 6.58 மணிமுதல் 19-11-2022 அதிகாலை 5.28 மணிவரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் ஒருசில அனுகூலங்கள் ஏற்பட்டாலும், 3-ல் குரு, 12-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களும் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள் என்பதால், பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கொடுக்கல்- வாங்க-ல் பிறரை நம்பி எந்த வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். ஆஞ்சனேயரை வணங்குதல் உத்தமம்.
சந்திராஷ்டமம்: 14-12-2022 அதிகாலை 2.32 மணிமுதல் 16-12-2022 பகல் 2.03 மணிவரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8. நிறம்: நீலம், பச்சை. கிழமை: சனி, புதன். கல்: நீலக்கல். திசை: மேற்கு. தெய்வம்: விநாயகர்.
கும்பம்
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, எந்த பிரச்சினைகளையும் ஆராய்ந்து நியாயமாகத் தீர்த்துவைக்கும் அறிவாற்றல் கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2022-ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு 2, 11-க்கு அதிபதியான குரு பகவான் ஆண்டுத் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், நீங்கள் எதிலும் சிக்கனமாக இருப்பது, சிந்தித்து செயல்படுவது நல்லது. முதல் மூன்று மாதங்கள் உங்களுக்கு சற்று சோதனைகள் நிறைந்ததாக இருந்தாலும், 13-4-2022 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும், 12-4-2022-ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின்மூலம் உங்கள் ராசிக்கு ராகு 3-ஆம் வீட்டிலும், கேது 9-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால், கஷ்டங்கள் படிப்படியாக விலகி முன்னேற்றமான பலன்களை அடையமுடியும். பொருளாதார நெருக்கடிகள் விலகி பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்க-ல் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடையலாம். பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைத்தால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த கெடுபிடிகள், வம்பு, வழக்குகள் யாவும் விலகும். உற்றார்- உறவினர் களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் சற்றே குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிட்டும். பிறர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்கள் ராசியாதிபதி சனி இவ்வாண்டு ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரித்து ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுவதால், தேவையற்ற செலவுகளை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பயணங்களில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். என்றாலும் எந்தவொரு விஷயங்களிலும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதையும் எதிர்கொண்டு வெற்றிபெறக்கூடிய வ-மையைப் பெறுவீர்கள்.
குடும்பம், பொருளாதார நிலை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள், திருமணத் தடைகள் உண்டாகும் என்றாலும், ஏப்ர-ல் ஏற்படும் குருப் பெயர்ச்சிக்குப் பின்பு சுபிட்சமான நிலை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு பூமி, மனை போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் கிடைக்கவேண்டிய சொத்துகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும், ஏப்ரலுக்குப் பிறகு தாராள தன வரவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்க-ல் சரளமான நிலை இருக்கும். கடந்தகால நெருக்கடிகள் விலகும். கொடுத்த கடன்களை வசூ-ப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சிறு தடைக்குப் பின்பு வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
தொழில், வியாபாரிகளுக்கு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகளால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும், ஏப்ரலுக்குப் பிறகு எல்லா வகையிலும் மேன்மைகளை அடையமுடியும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். வெளியூர்ப் பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும் என்றாலும், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டால் சிறப்பான பலன்களைப் பெறமுடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் சற்று வேலைப்பளு அதிகரிப்பதுடன், எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும், ஏப்ரலுக்குப் பிறகு நல்ல மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினைத் தற்போது பயன்படுத்திக்கொள்வது நல்லது. வெளியூர் செல்ல எண்ணுவோரின் விருப்பங்கள் நிறைவேறும்.
அரசியல்வாதிகளுக்கு
கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்யவேண்டியிருந்தாலும், பெயர், புகழ் பெறமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் அதன்மூலம் ஆதாயங்களும் உண்டாகும். பத்திரிகை நண்பர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரைக் காப்பாற்ற அதிக செலவு செய்யவேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்தையும் சரிசெய்ய முடியும். புதிய மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழிலாளர்களின் உதவி கிடைக்கும். கால்நடைகளாலும், காய், கனி, பூ வகைகளாலும் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்காது. ஆண்டின் முற்பாதியில் பணவரவுகளில் சற்று நெருக்கடிகள் ஏற்பட்டாலும், ஏப்ரலுக்குப் பிறகு தாராள தனவரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடிவரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும் என்றாலும், எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
மாதப் பலன்கள்
ஜனவரி
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன், 10, 11-ல் செவ்வாய், மாத முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால், பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். சனி 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார்- உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். பெரிய தொகைகளை கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் தடையின்றி நடைபெறுவதால் போட்ட முதலீட்டை எடுத்துவிட முடியும். தினமும் விநாயகரையும் சிவனையும் வணங்குவது நல்லது.
சந்திராஷ்டமம்: 22-1-2022 மாலை 4.48 மணிமுதல் 24-1-2022 இரவு 11.08 மணிவரை.
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்துவிட முடியும். குரு ஜென்ம ராசியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தாலும் வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-2-2022 இரவு 10.46 மணிமுதல் 21-2-2022 அதிகாலை 4.31 மணிவரை.
மார்ச்
ஜென்ம ராசியில் சூரியன், குரு, 12-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்க மான நிலையி-ருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்படமுடியாமல் போகும். உற்றார்- உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிப்பதால், வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகலாம். கூட்டாளிகளும் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். வேலைப்பளு அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். ஆஞ்சனேயர் வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்: 18-3-2022 காலை 6.32 மணிமுதல் 20-3-2022 காலை 11.10 மணிவரை.
ஏப்ரல்
ஜென்ம ராசியில் சுக்கிரன், மாதப் பிற்பாதியில் 2-ல் குரு, 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் இருந்த தேக்கநிலை விலகி தாராள பணவரவு ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களால் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருக்கும். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 14-4-2022 மாலை 3.54 மணிமுதல் 16-4-2022 இரவு 8.00 மணிவரை.
மே
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன், 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி அடைவீர்கள். சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். உங்கள் பணியில் கவனம் செலுத்தினால் மட்டுமே நினைத்ததை சாதிக்கமுடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 12-5-2022 அதிகாலை 1.32 மணிமுதல் 14-5-2022 காலை 6.12 மணிவரை.
ஜூன்
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சாதகமாக இருக்கும். இம்மாதத்தில் 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெறமுடியும். பண வரவுகள் நன்றாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட முடியும். தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகலாம். அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதி தரும். ஆஞ்சனேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 8-6-2022 காலை 10.03 மணிமுதல் 10-6-2022 மாலை 4.06 மணிவரை.
ஜூலை
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் செவ்வாய், ராகு, மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது நற்பலனைத் தரும்.
சந்திராஷ்டமம்: 5-7-2022 மாலை 4.50 மணிமுதல் 7-7-2022 இரவு 12.20 மணிவரை.
ஆகஸ்ட்
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, இம்மாத முற்பாதியில் 3-ல் செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைகளுக்குப்பின் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். வம்பு வழக்குகள் விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். விஷ்ணுவை வழிபடுவது சிறப்பு.v சந்திராஷ்டமம்: 1-8-2022 இரவு 10.30 மணிமுதல் 4-8-2022 காலை 6.40 மணிவரை மற்றும் 29-82022 அதிகாலை 4.15 மணிமுதல் 31-8-2022 பகல் 12.03 மணிவரை.
செப்டம்பர்
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத் துடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுகொடுத்து நடந்துகொள்வது நல்லது. பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் வீண் விரயங்களைத் தவிர்க்கமுடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள்.தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பணியாளர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் எதிலும் சிறப்பாக செயல்பட முடியும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 25-9-2022 பகல் 11.20 மணிமுதல் 27-9-2022 மாலை 6.17 மணிவரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். வாகனங்களால் வீண் விரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 22-10-2022 இரவு 8.05 மணிமுதல் 25-10-2022 அதிகாலை 2.32 மணிவரை.
நவம்பர்
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு 9, 10-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஏழரைச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும், அன்றாடப் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன்மூலம் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள்மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்து, தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 19-11-2022 அதிகாலை 5.28 மணிமுதல் 21-11-2022 பகல் 12.30 மணிவரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 10, 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கணவன்- மனைவியிடையே இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய எண்ணுபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். முருகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 16-12-2022 பகல் 2.03 மணிமுதல் 18-12-2022 இரவு 10.30 மணிவரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8. கிழமை: வெள்ளி, சனி. திசை: மேற்கு. கல்: நீலக்கல். நிறம்: வெள்ளை, நீலம். தெய்வம்: ஐயப்பன்.
மீனம்
பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே, தன்னம்பிக்கை உடையவராகவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராகவும், நீதி நேர்மை தவறாதவராகவும் விளங்கும் உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2022-ஆம் ஆண்டில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. சிலருக்கு சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கும் யோகமும், பொன், பொருள் சேர்க்கையும், தொட்டதெல்லாம் துலங்கும் யோகமும் உண்டு. தொழில், வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகிவிடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளித்தரும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகப்பலன் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை நிலவும். உயரதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய எண்ணுபவர்களின் விருப்பம் நிறைவேறும். ராசியாதிபதி குரு பகவான் இவ்வாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதும், 13-4-2022 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதும் அவ்வளவு சிறப்பான அமைப்பென கூறமுடியாது என்பதால், பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்து செயல்பட்டால் இலக்கை அடையமுடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில இடையூறுகள் ஏற்பட்டாலும், ஏப்ரல் மாதம் முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதன் மூலம் குரு களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் தடைகள் விலகி குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது 12-4-2022-ல் ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சிமூலம், ராகு ஜென்ம ராசிக்கு 2-லும், கேது 8-லும் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமற்ற அமைப்பென்பதால், உடல் நலத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு உணவுண்பது, தேவையற்ற அலைச்சல்களைக் குறைப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.
குடும்பம், பொருளாதார நிலை
கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்று காலம் என்பதால், பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால், ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும். எதிர்பாராத உதவிகள்மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ஏப்ரலுக்குப் பிறகு குரு 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் நல்ல வரன்கள் தேடிவரும். உற்றார்- உறவினர்களிடையே விட்டுக்கொடுத்து நடப்பதன்மூலம் பல நல்ல காரியங்களை சாதித்துக்கொள்ள முடியும்.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கடன்களை வசூ-க்கமுடியும் என்றாலும், சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தொழில், வியாபாரிகளுக்கு
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், போட்டி, பொறாமைகளால் சில நேரங்களில் மன உளைச்சல் ஏற்படும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதும், தொழிலாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலைவாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஓரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். எதிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் கவனமுடன் செயல்படவேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையிடாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
அரசியல்வாதிகளுக்கு
மேடைப் பேச்சுக்களில் கவனமுடன் இருப்பது, தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காதிருப்பது நல்லது. பத்திரிகை நண்பர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய சற்று கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் சொன்னதைச் செய்துமுடிப்பீர்கள். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்யவேண்டி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்கநேரத்தில் கிடைத்து மனநிம்மதி ஏற்படும். நிலம், மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். வாய்க்கால் வரப்புப் பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாது இருப்பது நல்லது.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் நடந்துகொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்திசெய்ய முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. முடிந்தவரை குடும்பப் பிரச்சினைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாது இருக்கவும். திருமண சுபகாரியங்கள் ஏப்ரலுக்குப் பிறகு கைகூடும். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.
மாதப் பலன்கள்
ஜனவரி
உங்கள் ராசிக்கு ராகு 3-ல், சனி 11-ல், சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு மேன்மைகளை அடையமுடியும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அவர்களின் ஆதரவினைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்க-ல் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடையமுடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிலும் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 24-1-2022 இரவு 11.08 மணிமுதல் 27-1-2022 அதிகாலை 3.12 மணிவரை.
பிப்ரவரி
உங்கள் ராசிக்கு ராகு 3-ல், செவ்வாய் 10-ல், சனி 11-ல், மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, பல்வேறு அனுகூலப் பலன்களை அடையும் யோகம் உண்டாகும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்க-ல் இருந்த தேக்கநிலை விலகி நல்ல லாபம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களும் நிம்மதியுடன் செயல்பட முடியும். விஷ்ணு வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்: 21-2-2022 அதிகாலை 4.31 மணிமுதல் 23-2-2022 காலை 8.56 மணிவரை.
மார்ச்
உங்கள் ராசிக்கு ராகு 3-ல், செவ்வாய், சனி, சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடிவந்து பையை நிரப்பும். சிலருக்கு வாகனங்கள் வாங்கும் வாய்ப்புண்டாகும். போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வயதில் முத்தவர்களிடம் பேச்சைக் குறைக்கவும். சிவ வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம்: 20-3-2022 காலை 11.10 மணிமுதல் 22-3-2022 பகல் 2.33 மணிவரை.
ஏப்ரல்
உங்கள் ராசிக்கு 11-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பு என்றாலும், ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு, நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த வகையில் லாபம் கிட்டும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் நிறைவேறும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 16-4-2022 இரவு 8.00 மணிமுதல் 18-4-2022 இரவு 10.07 மணிவரை.
மே
ஜென்ம ராசியில் சுக்கிரன், மாதப் பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். உங்கள் வ-மை கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலைநாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஜென்ம ராசியில் குரு, 12-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 14-5-2022 காலை 6.12 மணிமுதல் 16-5-2022 காலை 7.53 மணிவரை.
ஜூன்
உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும், எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். பேச்சில் கவனமாக இருந்தால் கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் இருந்தாலும், கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்துகொள்வதால் எதையும் எதிர்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 10-6-2022 மாலை 4.06 மணிமுதல் 126-2022 மாலை 6.33 மணிவரை.
ஜூலை
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, 4, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்றாலும், எதையும் சமாளிக்கும் பலம் உங்களுக்குண்டு. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது சிறப்பு. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும் என்பதால், வீண் செலவுகளைக் குறைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்க-ல் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருந்தாலும் அதிகாரிகளிடம் பேச்சைக் குறைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 7-7-2022 இரவு 12.20 மணிமுதல் 10-7-2022 அதிகாலை 4.20 மணிவரை.
ஆகஸ்ட்
உங்கள் ராசிக்கு சுக்கிரன் 4, 5-ல், மாதப் பிற்பாதியில் செவ்வாய் 3-ல், சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வ-மை கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலைநாட்ட முடியும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிட்டும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்ததம்.
சந்திராஷ்டமம்: 4-8-2022 காலை 6.40 மணிமுதல் 6-8-2022 பகல் 12.06 மணிவரை மற்றும் 31-8-2022 பகல் 12.03 மணிமுதல் 2-9-2022 மாலை 05.55 மணிவரை.
செப்டம்பர்
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 7-ல் புதன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகளில் சரளமான நிலையில் இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளைப் பெறமுடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவுக்கு ஆற்றல் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால், நெருக்கடிகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். விஷ்ணு வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்: 27-9-2022 மாலை 6.17 மணிமுதல் 29-9-2022 இரவு 11.25 மணிவரை.
அக்டோபர்
உங்கள் ராசிக்கு மாத முற்பாதியில் செவ்வாய் 3-ல் இருப்பது நல்ல அமைப்பென்றாலும், சூரியன் இம்மாதத்தில் 7, 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அஜீரணக் கோளாறு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படவும். சனி 11-ல் உள்ளதால் தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் எடுத்த பணியை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். சிவ பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 25-10-2022 அதிகாலை 2.32 மணிமுதல் 27-10-2022 காலை 6.30 மணிவரை.
நவம்பர்
உங்கள் ராசிக்கு 11-ல் சனி சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும், மாத முற்பாதியில் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் சென்றால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். மாதப் பிற்பாதியில் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கை கிடைக்கப்பெற்று உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். அஷ்டலட்சுமியை வழிபட்டால் முன்னேற்றங்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 2111-2022 பகல் 12.30 மணிமுதல் 23-11-2022 மாலை 4.03 மணிவரை.
டிசம்பர்
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சனி, 9, 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறையும். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புண்டாகும். குடும்பத்தில் இருந்த கடன் சுமைகள் குறைவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்க-ல் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கை அளிப்பதாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவார்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-12-2022 இரவு 10.30 மணிமுதல் 21-12-2022 அதிகாலை 2.57 மணிவரை.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9. கிழமை: வியாழன், ஞாயிறு. திசை: வடகிழக்கு. கல்: புஷ்பராகம். நிறம்: மஞ்சள், சிவப்பு. தெய்வம்: தட்சிணாமூர்த்தி.