மேஷம்

இந்த ஜனவரி 2022-ஆம் ஆண்டு கன்னி லக்னத்திலும், தனுசு ராசியிலும் பிறக்கிறது. உங்கள் ராசிக்கு 9-ஆவது ராசியிலும், 6-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. 9-க்குடைய குரு 11-ல் இருப்பது சிறப்பு. உங்களது பூர்வபுண்ணியம் மிகச் சிறப்பாக இருக்கும். முதலில் பிரச்சினைகள் தோன்றுவதுபோல் காணப்பட்டாலும் முடிவில் உங்கள் காரியங்கள் அனுகூலமாகவும் நன்மையாகவும் முடியும். 6-ஆவது லக்னத் தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. 6-க்குடைய புதன் 10-ல் வக்ரமாக இயங்குகிறார். தொழில் சம்பந்தமான கடன்கள் ஏற்பட லாம். என்றாலும் தொழில் இயக்கம் நடந்து கொண்டுதான் இருக்கும். 17-ஆம் தேதிமுதல் ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகிறார். 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். அவ்வப்போது ஏற்படும் விரயங்கள் தவிர்க்க முடியாதவையாக அமையும். மாதப் பிற்பகுதியில் சூரியன் 10-ல் பலம்பெறுகிறார். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் முன்னேற்ற கரமான சூழல் அமையும். 2-ஆமிடத்து ராகு குடும்பத்தில் சில குழப்பங்களையும் மன நிம்மதிக் குறைவையும் தரலாம். செவ்வாய்க் கிழமை துர்க்கையை வழிபடவும்.

ரிஷபம்

இந்த ஜனவரி 2022-ஆம் ஆண்டு கன்னி லக்னத்திலும், தனுசு ராசியிலும் பிறக்கிறது. உங்கள் ராசிக்கு 8-ஆவது ராசியிலும், 5-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. உங்கள் எண்ணங்கள் ஈடேறும். கருதிய காரியங்கள் கைகூடும். சில செயல்பாடுகளில் மந்தநிலை காணப்படலாம். சில காரியங்கள் விறுவிறுப்புடன் செயல்படும். 11-க்குடைய குரு 10-ல் நிற்பதால் தொழில் வகையில் குழப்பங்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். லாபமும் அனுகூலமும் தென்படும். 10-ஆம் தேதிமுதல் ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைகிறார். என்றாலும் வக்ரமாக இருக்கிறார். சஞ்சலமும் சங்கடமும் விலகும். 10-க்குடைய சனி 9-ல் ஆட்சியாக இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே, ஒவ்வொரு செயல்பாடுகளிலும் அது உங்களை வழிநடத்தும். ஜென்ம ராகு, சப்தம கேது- சிலநேரம் உங்கள்மீதே உங்களுக்கு நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்தலாம். கணவன்- மனைவிக்குள் சச்சரவு போன்ற சூழ்நிலைகள் காணப்படலாம். 2-ஆமிடத்தை குரு பார்ப்பது அவற்றுக்குத் தீர்வையும் தரும். வடக்கு பார்த்த காளி அல்லது அம்மனை வழிபடவும்.

Advertisment

மிதுனம்

இந்த ஜனவரி 2022-ஆம் ஆண்டு கன்னி லக்னத் திலும், தனுசு ராசியிலும் பிறக்கிறது. அதாவது உங்கள் ராசிக்கு 7-ஆவது ராசியிலும், 4-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. 4-ம், 7-ம் கேந்திர ஸ்தானம். ராசிநாதன் புதன் 8-ல் மறைந்தாலும் 4-ஆம் தேதிமுதல் வக்ரமாகிறார். பொதுவாக புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. வக்ரத்தில் உக்ரபலம். 7-ஆமிடத்து குரு 9-ல் திரிகோணம் பெற்று ராசியைப் பார்க்கிறார். ஆக, எடுக்கும் முயற்சிகள் எல்லாம் அனுகூலமாக முடியும். அட்டமத்துச்சனி நடந்தாலும் குரு பார்வையால் காரியத்தடைகள் விலகும். 12-க்குடைய சுக்கிரன் 8-ல் மறைகிறார். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதற்கிணங்க திடீர் யோகங்களும் நன்மைகளும் எதிர்பார்க்கலாம். 14-ஆம் தேதிமுதல் 3-க்குடைய சூரியன் 8-ல் மறைகிறார். தகப்பனார்வழியில் சங்கடங்களையும் சஞ்சலங்களையும் சந்திக்க நேரலாம். 6-ல் செவ்வாய் ஆட்சிபெறுகிறார். பூமி, வீடு சம்பந்தமாக கடன்கள் ஏற்படலாம். அது அனுகூலமான கடனாக அமையும். செவ்வாய்க் கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

கடகம்

Advertisment

இந்த ஜனவரி 2022-ஆம் ஆண்டு கன்னி லக்னத்திலும், தனுசு ராசியிலும் பிறக்கிறது. 3-ஆவது லக்னம், 6-ஆவது ராசி. இந்த மாதம் காரியத்தடைகள் அவ்வப்போது காணப்படலாம். 6-க்குடைய குரு 8-ல் மறைந்தாலும் 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி உண்டாகும். வீண் கற்பனை பயம் விலகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம். அந்த மாற்றம் நல்ல மாற்றமாக அமையும். தொழில் துறையிலும் வேலை, உத்தியோகத்திலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றிகரமாகச் செயல்படும். திடீர் பயணம் ஆதாயம் தரும். சகோதரவகையில் அனுகூலமும் நன்மையும் உண்டாகும். அவர்கள்வழியில் சுபச் செலவுகளுக்கும் இடமுண்டு. நண்பர்களால் உதவி கிடைக்கும். 10-ஆம் தேதிமுதல் 11-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைகிறார். எனவே, வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூலாவதில் தாமதமாகும். 2-க்குடைய சூரியன் 14-ஆம் தேதிமுதல் 7-ல் மாறி ராசியைப் பார்க்கிறார். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டா கும். வியாழக்கிழமை லட்சுமி நரசிம் மரை வழிபடவும்.

jj

சிம்மம்

இந்த ஜனவரி 2022-ஆம் ஆண்டு 2-ஆவது லக்னமான கன்னியிலும், 5-ஆவது ராசியான தனுசிலும் பிறக்கிறது. இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான மாதமாக அமையும். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் வெற்றியாகும். தேவைகள் பூர்த்தி யாகும். பூமி, வீடு, மனை போன்றவகையில் நன்மைகள் ஏற்படும். ராசிநாதன் சூரியனும் 14-ஆம் தேதிவரை 5-ல் திரிகோணம் பெறுகிறார். எனவே, தொட்டதெல்லாம் துலங்கும். பட்டது தளிர்க்கும். 5-க்குடைய குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது மேலும் பலம். உங்கள் செயல்பாடுகள் நிறைவேறும். உங்கள் திறமைகளும் பளிச்சிடும். 14-ஆம் தேதிமுதல் ராசிநாதன் சூரியன் 6-ல் மறைகிறார். அக்காலகட்டம் உங்களுக்கு சில விஷயங்களில் தேக்கநிலை காணப் படலாம். 6-ல் சனி ஆட்சியாக இருப்ப தால் கடன்கள் கட்டுக்குள் இருக் கும். சத்ருஜெயம் ஏற்படும். சகோதர வகையில் சங்கடங்கள், சச்சரவு கள் ஏற்பட்டு விலகும். ஞாயிற்றுக் கிழமை விநாயகருக்கு செம்பருத்திப்பூ மாலைசாற்றி வழிபடவும்.

கன்னி

இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்களது லக்னத்திலும், 4-ஆவது ராசியிலும் தான் பிறக்கிறது. எனவே, இந்த ஜனவரி மாதம் உங்களுக்கு காரிய சித்திகளைத் தரும். வீண் அலைச்சல் குறையும். குடியிருப்பு மாற்றம், வேலையில் ஊர்மாற்றம், இடமாற்றங்களை சந்திக்க நேரும். தேக ஆரோக்கியத்தில் பாதிப்புகளுக்கு இடமில்லை என்றாலும் சிறுசிறு தொந்தரவுகள் உண்டாகி மறையும். முக்கியமாக வயிறு சம்பந்தப்பட்ட அஜீரணக் கோளாறுகள் அல்லது கால்வலி பிரச்சினைகள் ஏற்படலாம். 3-ல் செவ்வாய் ஆட்சி. சகோதர- சகோதரிவகையில் ஒற்றுமை, பாசப்பிணைப்பு உண்டாகும். சுபமங்கள செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம், கருத்து ஒற்றுமை உண்டாகும். ராசி நாதன் புதன் 5-ல் திரிகோணம் பெற்று வக்ரமாக இருக்கிறார். பிள்ளைகள்வழியில் பெருமையும் அவர் களுக்கு வேலை, உத்தியோ கம் போன்றவற்றில் மகிழ்ச்சி கரமான நிகழ்வுகளும் நடக்கும். வெள்ளிக்கிழமை லட்சுமி நாராயணரை வழிபடவும்.

துலாம்

இந்த 2022-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 3-ஆவது ராசியான தனுசிலும், 12-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. 3-க்கு டைய குரு 5-ல் திரிகோணம் பெற்று ஜென்ம ராசியைப் பார்க்கிறார். சகோதரர் மற்றும் நண்பர்களால் நன்மை உண்டாகும். மனச் சங்கடம் விலகும். வரவுக்கேற்ற செலவுகள் நடக்கும். தொழிலில் அலைச் சல் ஏற்படலாம். 2-ல் கேது, 8-ல் ராகு- குடும்பத்தில் அவ்வப் போது நிம்மதிக் குறைபாடு உண்டாகும். வீண் கவலைகள் ஏற்படும். அவற்றுக்கு இடம் தராமல் மனதைக் கட்டுப்படுத்தி செயல்படுவது அவசியம். 10-ஆம் தேதிமுதல் ராசிநாதன் சுக்கிரன் 3-ல் மறைகிறார். வக்ரகதியில் இயங்குகிறார். வெளியிடத்தில் இருந்து வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூலாவதில் இழுபறிநிலை உண்டாகலாம். 14-ஆம் தேதிமுதல் 11-க்குடைய சூரியன் 4-ல் கேந்திரம் பெற்று சனியோடு இணைகிறார். சனி 4-ல் ஆட்சி. தகப்பனார்வகையில் சங்கடம் அல்லது சொத்துப் பிரச்சினை போன்றவற்றை சந்திக்கலாம். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாதரை வழிபடவும்.

விருச்சிகம்

இந்த ஜனவரி 2022-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 2-ஆவது ராசியிலும், 11-ஆவது லக்னத் திலும் பிறக்கிறது. குடும்பத்தில் தனவரவு, தொழில்துறையில் லாபம், முன்னேற்றம் போன்ற பலன்கள் நடைபெறும். விருச்சிக ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். ஜென்ம கேது, சப்தம ராகு வினால் ஏற்படும் குழப்பங் களுக்குத் தீர்வை ஜென்ம ராசியில் ஆட்சிபெற்ற செவ்வாய் தருவார். 12-க்குடைய சுக்கிரன் 10-ஆம் தேதிமுதல் 2-ல் வக்ரகதியில் மாறுகிறார். தாராள தன வரவுக்கு இடமுண்டு என்றாலும், செலவுகளும் அதற்கேற்றவகையில் நடைபெறும். சிக்கனத் தைக் கடைப்பிடிப்பது அவசியம். மூத்த சகோதரர்வழியில் உடல்நலக்குறைவு உண்டாக இடமுண்டு. பாதிப்புக்கு இடம் ஏற்படாது. அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் தாமதநிலை உண்டாகும். வாகனவகையில் கவனமும் எச்சரிக்கையும் வேண்டும். செவ்வாய்க்கிழமை வேலுக்குப் பாலாபிஷேகம் செய்யவும்.

தனுசு

இந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உங்கள் ராசியிலும், 10-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. தொழில்துறையிலும், வேலை உத்தியோகத்திலும், வாழ்க்கை அமைப்பிலும் தேக்கநிலைக்கு இடமில்லை. ஏழரைச்சனியின் கடைசிக்கூறு பாதச்சனி நடந்துகொண்டிருக்கிறது. ஓரிரு விஷயத்தில் மந்தநிலைபோல் தோன்றினாலும் காரியசித்தி உண்டாகும். ராசிநாதன் குரு 3-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த சனி, அவருக்கு 12-ல் நிற்கும் குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் கணவன்- மனைவி அன்யோன்யம், திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள், தொழிலில் நண்பர்களின் கூட்டுமுயற்சி போன்ற நன்மைகள் ஏற்படுத்தும். 12-ல் செவ்வாய் ஆட்சி. சிலநேரம் சில விரயங்களை சமாளித்து செயல்படவேண்டிய நிலை காணப்படும். சனிக்கிழமை காலபைரவரை வழிபடவும். மிளகுதீபம் ஏற்றவும்.

மகரம்

மகர ராசிக்கு 12-ஆவது ராசியான தனுசிலும், 9-ஆவது லக்னமான கன்னியிலும் 2022-ஆம் ஆண்டு பிறக்கிறது. 11-ல் செவ்வாய் ஆட்சி. எனவே, வெற்றியும் அனுகூலமும் உங்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் அமையும். 8-க்குடைய சூரியன் 12-மறைவு. 8-ஆமிடத்துக் கெடுபலன்கள் மறைந்து விடும். 12-க்குடைய குரு 2-ல் நிற்பது சிலசமயம் விரயங்களை ஏற்படுத்தினா லும் அது முதலீட்டு விரயம் அல்லது சுபவிரயமாக அமையும். 5-ல் உள்ள ராகு உங்கள் திட்டங்களில் நெருக்கடியை ஏற்படுத்தலாம். ராசிநாதன் சனி ஜென்மத்தில் ஆட்சிபெற்ற பலத்தால் மேற்கூறியவற்றில் இருந்து தப்பிக்கலாம். விளையாட்டு, பொழுதுபோக்கு சார்ந்தவற்றில் மேன்மையான பலன்கள் உண்டாகும். 6-ஆமிடத்தை குரு பார்க்கிறார். கடன்கள் ஏற்பட்டு விலகும். ஆனாலும் மதிப்பு, மரியாதை கெடாது. மாதப் பிற்பகுதியில் அரசுத்துறை அதிகாரிகளினால் பயனுள்ள பலன்கள் நடக்கும். சனிக்கிழமை ஆஞ்சனேயரை வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிக்கு 11-ஆவது ராசியான தனுசிலும், 8-ஆவது லக்னமான கன்னியிலும் 2022-ஆம் ஆண்டு பிறக்கிறது. நன்மையும் கலக்கமும் குழப்பமும் கலந்த மாதமாக இம்மாதம் அமைகிறது. ஜென்மத்தில் நிற்கும் குரு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். என்றாலும் ஏழரைச்சனி நடந்துகொண்டிருப்பதால் மேற்கூறிய வற்றில் பிரயாசைப்பட்டுதான் காரியம் சாதிக்கவேண்டிய நிலை. 7-க்குடைய சூரியன் 12-ல் 14-ஆம் தேதி மாறுகிறார்; மறைகிறார். கணவன்வகையிலோ அல்லது மனைவிவகையிலோ அரசுத்துறை சம்பந்தப் பட்ட விஷயங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். 17-ஆம் தேதிமுதல் 10-க்குடைய செவ்வாய் 11-ல் மாறுவதால் சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். அது நல்ல மாற்றமாக அமையும். ஒரு சிலருக்கு பெற்றோர்வழியில் மனக்கசப்பு உண்டாகலாம். குலதெய்வ வழிபாட்டு முறை யில் சிக்கல், சிரமங்கள் விலகும். வெளியூர் முயற்சிகள் பலன் தரும். சனிக்கிழமை கால பைரவருக்கு மிளகுதீபமேற்றி வழிபடவும்.

மீனம்

இந்த ஜனவரி 2022-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 10-ஆவது ராசியிலும், 7-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. 7, 10 இரண்டும் கேந்திரம். இந்த ஜனவரி மாதம் உங்களுக்கு சில காரியங்களில் வெற்றியும், சில காரியங்களில் தடை, தாமத நிலையும் தோன்றலாம். ராசிநாதன் குரு 12-ல் மறைவ தும் அதற்கு ஒரு காரணம். தொழில் ஸ்தானாதி பதி 12-ல் மறைவதால் வாழ்க்கை அமைப்பி லும் தொழில்வகையிலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாது. பண விஷயத்தில் எதிர்பார்த்த வரவுகள் தள்ளிப் போகலாம். கவனமுடன் கையாள்வது அவசி யம். என்றாலும் 17-ஆம் தேதிமுதல் 9-க்கு டைய செவ்வாய் 10-ல் மாறுவது தர்ம கர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்தும். அது ஒருவகையில் உங்கள் மரியாதையைக் காப்பாற் றும். 14-ஆம் தேதிமுதல் 11-ல் சூரியன் மாறுகிறார். மாதப் பிற்பகுதியில் காரியசித்தி உண்டாகும். அலைச்சல் குறையும். வியாழக் கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.