மேஷம்
இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமான கும்ப ராசியில், சதய நட்சத்திரத்தில் பிறக்கிறது. ராசிநாதன் செவ்வாய் 8-ல் இருந்தாலும் ஆட்சிபெறுவதால் மறைவு தோஷம் பாதிக்காது. உங்கள் தொழில் முயற்சிகளில் புதிய முடிவுகள் எடுக்கலாம். அதற் கான சிந்தனைகளும் வாய்ப்பு களும் அமையும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். 2-க் குடைய சுக்கிரன் 10-ஆம் தேதிமுதல் 11-ல் மாறுகிறார். 9-ல் நின்று குரு ராசியைப் பார்க்கிறார். எனவே தொட்ட தெல்லாம் துலங்கும். வேலைகளில் எதிர்பார்த்த சாதகமான பலன்கள் அமையும். தகப்பனார்வகையில் சிறுசிறு வைத்தியச்செலவுகள் வந்து விலகும். 15-ஆம் தேதிக்குப்பிறகு முழு நிவாரணம் உண்டாகும். பெண் களுக்கு தேக சுகம் நன்றாக இருக்கும். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடவும்.
ரிஷபம்
இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10-ஆம் இடமான கும்ப ராசியில் பிறக்கிறது. ராசிநாதன் சுக்கிரன் 10-ஆம் தேதிமுதல் கும்ப ராசியில் (10-ஆம் இடம்) சஞ்சரிக்கிறார். தொழில் நன்றாக இயங்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் விலகி சுமூகமான தீர்வுகள் காணப்படும். குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகும். செயல்பாடுகளில் விவேகத்துடன்கூடிய வேகம் இருந்தால் எண்ணிய இலக்கை அடையலாம். வியாபாரி களுக்கு, வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான கடனுதவிகள் கிடைக்கும். கூட்டுத்தொழில் புரிபவர்கள் கூட்டாளிகளுக்குள் சிறுசிறு கருத்துவேறுபாடுகளை சந்தித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் முன்னேற்றங்களைக் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகும். குரு 8-ல் நின்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளின் ஆதரவு கிட்டும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்யவும். நெய்தீபம் ஏற்றலாம்.
மிதுனம்
இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 9-ஆம் இடம்- திரிகோண ஸ்தான மான கும்ப ராசியில் பிறக்கிறது. பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம், விவகாரம் விலகும். ஆன்மிகப் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். ராசிநாதன் புதன் மாதத்தின் முதல்வாரம் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். பிறகு 8-ஆமிடம
மேஷம்
இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 11-ஆம் இடமான கும்ப ராசியில், சதய நட்சத்திரத்தில் பிறக்கிறது. ராசிநாதன் செவ்வாய் 8-ல் இருந்தாலும் ஆட்சிபெறுவதால் மறைவு தோஷம் பாதிக்காது. உங்கள் தொழில் முயற்சிகளில் புதிய முடிவுகள் எடுக்கலாம். அதற் கான சிந்தனைகளும் வாய்ப்பு களும் அமையும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். 2-க் குடைய சுக்கிரன் 10-ஆம் தேதிமுதல் 11-ல் மாறுகிறார். 9-ல் நின்று குரு ராசியைப் பார்க்கிறார். எனவே தொட்ட தெல்லாம் துலங்கும். வேலைகளில் எதிர்பார்த்த சாதகமான பலன்கள் அமையும். தகப்பனார்வகையில் சிறுசிறு வைத்தியச்செலவுகள் வந்து விலகும். 15-ஆம் தேதிக்குப்பிறகு முழு நிவாரணம் உண்டாகும். பெண் களுக்கு தேக சுகம் நன்றாக இருக்கும். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடவும்.
ரிஷபம்
இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10-ஆம் இடமான கும்ப ராசியில் பிறக்கிறது. ராசிநாதன் சுக்கிரன் 10-ஆம் தேதிமுதல் கும்ப ராசியில் (10-ஆம் இடம்) சஞ்சரிக்கிறார். தொழில் நன்றாக இயங்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் விலகி சுமூகமான தீர்வுகள் காணப்படும். குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகும். செயல்பாடுகளில் விவேகத்துடன்கூடிய வேகம் இருந்தால் எண்ணிய இலக்கை அடையலாம். வியாபாரி களுக்கு, வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான கடனுதவிகள் கிடைக்கும். கூட்டுத்தொழில் புரிபவர்கள் கூட்டாளிகளுக்குள் சிறுசிறு கருத்துவேறுபாடுகளை சந்தித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் முன்னேற்றங்களைக் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகும். குரு 8-ல் நின்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளின் ஆதரவு கிட்டும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு செய்யவும். நெய்தீபம் ஏற்றலாம்.
மிதுனம்
இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 9-ஆம் இடம்- திரிகோண ஸ்தான மான கும்ப ராசியில் பிறக்கிறது. பூர்வீகச் சொத்து சம்பந்தமான வில்லங்கம், விவகாரம் விலகும். ஆன்மிகப் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். ராசிநாதன் புதன் மாதத்தின் முதல்வாரம் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். பிறகு 8-ஆமிடமான மகர ராசியில் சஞ்சரிக்கிறார். 8-ல் புதன் நின்றாலும் மறைவு தோஷம் பாதிக்காது. ஏற்கெனவே கூறியபடி சூரியனுக்கு அருகில் சஞ்சாரம் செய்யும் புதனுக்கு மறைவு தோஷம் பாதிக்காது. புதிய நபர்களின் அறிமுகம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். 7-க்குடைய குரு 7-ல் ஆட்சி பெற்று ராசியைப் பார்ப்பதால் உங்கள் செயல்பாடுகள் யாவும் பூர்த்தியாகும். முயற்சிகளில் முன்னேற்றம் தென்படும். சகோதர உறவுமூலம் ஆதரவான சூழல் அமையும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். புதன்கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு 8-ஆமிடமான கும்ப ராசியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. கும்ப ராசிநாதன் சனி 6-ல் அமர்ந்து 8-ஆமிடத்தைப் பார்க்கிறார். எனவே உங்கள் காரியங்களில் தாமதம் ஏற்பட்டாலும் காரியத்தடை உண்டாகாது. குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனதில் இருந்துவந்த நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். 6-ல் குரு நின்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் குடும்பத் தேவைகள் நிறைவேறும். குழப்பங்கள் அகலும். தம்பதிகளிடையே அன்பும் அரவணைப்பும் பெருகும். மாத முற்பகுதிவரை (15-ஆம் தேதிவரை) கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படவேண்டும். குலதெய்வ வழிபாடு நிறைவேறும். வியாபாரிகளுக்கு அழகு சாதனப் பொருட்கள்மூலம் லாபம் கிட்டும். கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம். கிடைக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்து வதன்மூலம் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சித்தர்கள் வழிபாடு மேன்மை தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு 7-ஆமிடமான கும்ப ராசி யில்தான் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. சிம்ம ராசிநாதன் சூரியன் 5-ல் 5-க்குடைய குருவோடு சஞ்சரிக்கிறார். குரு ராசியைப் பார்க்கிறார். உங்கள் எண்ணங்க ளும் திட்டங்களும் செயல்பாடுகளும் கனவு களும் பூர்த்தியாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான அமைப்பு கள் உண்டாகும். சமூகப்பணிகளில் ஈடுபடு பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். முக்கிய அந்தஸ்துள்ள நபர் களின் அறிமுகம் ஏற்படும். புதிய முயற்சி கள் கைகூடும். 4-ல் செவ்வாய் ஆட்சி பெறுவதால் வீடு, மனை தொடர்பான விஷயங்களில் சாதகமான நற்பலன்கள் அமையும். கட்டடத்தை பாதியில் நிறுத்திய வர்கள் மீண்டும் துவங்கும் முயற்சியில் ஈடுபடலாம். அதற்குண்டான கடனுதவியும் கிடைக்கும். காரியத்தடை விலக ஆஞ்சனேயரை வழிபடவும். ஒருமுறை வெற்றிலை மாலை சாற்றலாம்.
கன்னி
இந்த ஆங்கிலப் புத்தாண்டு கன்னி ராசிக்கு 6-ஆமிடமான கும்ப ராசியில் பிறக்கிறது. 6-க்குடைய சனி 4-ல் நின்று 6-ஆமிடத்தையே பார்க்கிறார். உங்கள் திட்டங்களில் மந்தத் தன்மை காணப் பட்டாலும் பூர்த்தி யாகும். சற்று தாமத மாக நிறைவேறும். ராசிநாதன் புதன் 7-ஆம் தேதிமுதல் 5-ல் மாறுகிறார். 4-ல் உள்ள சனி, கேது உடல்நலத்தில் சௌகரியக் குறைவை ஏற்படுத்தினாலும், குரு ஆட்சிபெறுவதால் பாதிப்புகள் ஏதும் வராது. 3-ல் செவ்வாய் ஆட்சி. சகோதரவகையில் ஆதரவும் அனு கூலமும் உண்டாகும். சிலர் குடியிருப்பு மாற்றத்தைச் சந்திக்கலாம். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் சச்சரவும் ஒற்றுமைக் குறைவும் காணப்படும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் மறையும். கடன் வாங்கிக் கடனைக் கொடுக்கும் நிலை உண்டாகும். அரசுவகையில் எதிர் பார்த்த உதவி தாமதப்படலாம். லட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபமேற்றி வழிபடவும்.
துலாம்
துலா ராசிக்கு 5-ஆமிடமான கும்ப ராசியில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. 7-ஆம் தேதிமுதல் ராசிநாதன் சுக்கிரன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். எனவே, "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியமாதிரி எந்தக் குறையுமில்லை. 2-க்குடைய செவ்வாய் ஆட்சிபெற்று சுக்கிரனைப் பார்க்கிறார். பிள்ளைகள்வகையில் நிலவிய கருத்து வேறு பாடுகள் விலகும். அவர் களால் நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும். வெளியூர்ப்பயணம் அலைச்ச லைத் தந்தாலும் ஆதாயகரமானதாக அமையும். சுக்கிரன் 7-ஆம் பார்வையாக 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். 3-ல் இருக்கும் குருவும் 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். சுயதொழில் புரிகிறவர்களுக்கு தொழிலில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். அரசுத்துறை சார்ந்தவர்களுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியும் பதவி உயர்வும் ஏற்படும். வாகனப் பரிமாற்றமும், புதிய வாகனம் வாங்கும் யோகமும் அமையும். வெள்ளிதோறும் அம்பாளை வழிபடவும்.
விருச்சிகம்
இந்த ஆங்கிலப் புத்தாண்டு 4-ஆமிட மான கும்ப ராசியில் பிறக்கிறது. 4-க்குடைய சனி 2-ல் நின்று 4-ஆமிடத்தையே பார்க்கி றார். ஏழரைச்சனி நடப்பதால் குடியிருப்பு மாற்றம், வேலையில் இடமாற்றம், வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பணியமர்தல் போன்ற பலன்களைச் சந்திக்கநேரும். ராசிநாதன் செவ்வாய் ஜென் மத்தில் ஆட்சிபெற்று 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். 12-க்குடைய சுக்கிரன் அங்கு 10-ஆம் தேதிமுதல் சஞ்சாரம். வீடு, மனை, கட்டடம் சம்பந்தமான சுபவிரயங்கள் ஏற்படலாம். 2-ல் உள்ள சனி, கேதுவும் அவர்களைப் பார்க்கும் ராகுவும் பேச்சில் நிதானத்தை இழக்கச் செய்தாலும், குரு ஆட்சிபெறுவதால் (2-ஆமிடத்தில்) பிரச்சினைகள் ஏற்படாதவாறு காப்பாற்றுவார். பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. 8-ல் உள்ள ராகுவை குரு, சனி பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டங்களுக்கும் வாய்ப்பு ஏற்படலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கை யம்மனை வழிபடவும்.
தனுசு
தனுசு ராசிக்கு 3-ஆமிட மான கும்ப ராசியில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கி றது. 11-க்குடைய சுக்கிரன் 10-ஆம் தேதி முதல் 3-ல் சஞ்சாரம். ஜென்மத்திலுள்ள சனி அவரைப் பார்க்கிறார். உங்களது விடா முயற்சியிலும், தைரியம் தன்னம்பிக்கை யிலும் எவ்விதக் குறைபாடும் இருக்காது. எதையும் எதிர்த்துப் போராடும் துணிச்சல் உண்டாகும். ஜென்ம குரு 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வீண்விரயங்கள் கட்டுக்குள் அடங்கும். வரவும் செலவும் மாறிமாறி வருவதால், சேமிப்புக்கு இடமில்லாத வகையில் பணப்புழக்கம் இருக்கும். 7-ல் உள்ள ராகு திருமணமாகாதவர்களுக்குத் திருமணத் தடைகளை ஏற்படுத்தினாலும், குரு பார்ப்பதால் அதற்குண்டான நிவர்த்தியும் ஏற்படும். என்றாலும் சிலருக்கு தாமதத் திருமணத்தையும் தரும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு முல்லைப்பூ சாற்றி வழிபடவும்.
மகரம்
மகர ராசிக்கு 2-ஆமிடமான கும்ப ராசியில் வருடம் பிறப்பது நன்மை. பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். ஏழரைச்சனி நடந்தாலும் அது பொங்கு சனியாக செயல்படும். 11-க்குடைய செவ்வாய் ஆட்சி. தொழிலிலும் வியாபாரத்திலும் லாபம், முன்னேற்றம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். ராசி நாதன் சனி 12-ல் (விரய ஸ்தானத்தில்) நின்று 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். விரயங்களை சுபவிரயமாக மாற்றும் முயற்சிகளைக் கையாளலாம். 8-க்குடைய சூரியன் 12-ல் மறைவு. தகப்பனாரால் சில சங்கடங்களும் மனவருத்தமும் நேரலாம். 6-ல் உள்ள ராகு கடன்நிவர்த்தியை உண்டாக்குவார். ஆன்மிக யாத்திரை ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமான தீர்வுகளைத் தரும். தேக சுகம் நன்றாக இருக்கும். வைத்தியச் செலவுகள் விலகும். சனிக்கிழமை தோறும் காலபைரவரை வழிபடவும்.
கும்பம்
இந்த 2020 ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பது பலம். எந்தவொரு ராசிக்கும் லக்னத்திற்கும் அந்த ராசிநாதனோ லக்னநாதனோ ராசியைப் பார்ப்பது சிறப்பு. உங்கள் செயல்பாடு, திறமை, கீர்த்தி எல்லாம் நன்றாக விளங்கும். தொழில்துறை லாபகரமாக இயங்கும் என்பதில் சந்தேகமில்லை. 10-ல் செவ்வாய் ஆட்சி என்பது மேலும் ஒரு ப்ளஸ் பாயின்ட். 10-ஆம் தேதிமுதல் 9-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சாரம். அவரை 10-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். எனவே தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. தகப்பனார்வகை சொத்துகள் சரிசமப் பங்கீடு செய்யப்பட்டு, உங்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் கிடைக்கும் வழிவகை உண்டு. 3-ஆமிடத்தை குரு பார்ப்பதால் நண்பர்கள்வகையிலும் சகோதரவகையிலும் நன்மைகள் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிக மாகும். உங்களது எண்ணங்களும் திட்டங் களும் செயல்வடிவம் பெறும். இந்த புத்தாண்டு காரிய சாதனைகளைத் தரும். சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடவும்.
மீனம்
இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 12-ஆமிடமான கும்ப ராசியில் பிறக்கிறது. சுபவிரயங்கள், சுபநிகழ்வுகள் உண்டாகும். 9-க்குடைய செவ்வாய் ஆட்சி. சொத்துப் பிரச்சினையில் நிலவிய சிக்கல்கள் விலகும். 10-ல் ஆட்சிபெறும் குரு தொழில்துறையில் ஒரு வளர்ச்சியைத் தருவார். "பத்தாம் இடத்து குரு பதிகுலையச் செய்யும்' என்பது பழமொழி. ஆனாலும் இங்கு குரு ஆட்சி என்பதால் அந்த பழமொழி மாறி நன்மையைத் தரும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கைகூடிவரும். 2-ஆமிடத்தைப் பார்க்கும் குரு குடும்பத்தில் ஒற்றுமை, தனவரவு போன்றவற்றைத் தருவார். 9-ல் இருக்கும் செவ்வாயின் பார்வையும், 10-ல் இருக்கும் குருவின் பார்வையும் 4-ஆமிடத்துக்குக் கிடைப்பதால், அது வும் தர்மகர்மாதிபதி யோகம் என்ற அடிப்படையில் செயல்படும். தாய்சுகம், தன்சுகம் தெளிவு பெறும். வீடு, மனை யோகம் உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம். தொழிலில் நல்ல வேலையாட்கள் அமைய சேங்காலிபுரம் சென்று கார்த்தவீர்யார்ஜு னரை வழிபடவும். திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலிலும் வழிபடலாம்.