மேஷம்

2019-ஆம் ஆண்டு துலா ராசியிலும், கன்னி லக்னத்திலும் பிறக்கிறது. இந்த மாதம் குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். நற்பலன்கள் நடக்கும். பொருளாதாரத்தில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் வருமானத்திற்கு எந்தக் குறையும் வராது. நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அரசு, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பதவி உயர்வு உண்டாகும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் இணக்கமும் அதிகரிக்கும். பிரிவு பிளவுகளுக்கு இடம் வராது. சிலருக்கு வேலையில் அதிக உழைப்பு, அலைச்சல், பிரச்சினை போன்றவை தோன்றினாலும் பாதிப்பு களுக்கு இடமில்லை. உங்களது மரியாதையும் கௌரவமும் காப்பாற்றப் படும். இடம், வீடு, கட்டடம் சம்பந்தமான முயற்சிகளில் சில நல்ல திருப்பங்கள் உண்டாகும். சுபவிரயங் களையும் மேற் கொள்ள லாம். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடையலாம்.

ரிஷபம்

2019-ஆம் ஆண்டு 5-ஆவது லக்னமான கன்னியிலும், 6-ஆவது துலா ராசியிலும் பிறக்கிறது. திரிகோண ஸ்தானம் 5-ஆவது இடத்தில் வருடம் பிறப் பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். இந்த மாதம் இனிய மாதமாக நடைபெறும். உங்களது நீண்டகாலத் திட்டங்களும் கனவு களும் எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகும். தடைப்பட்ட காரியங்களை மீண்டும் தொடங்கி வெற்றிபெறலாம். உடல்நலத்தில் அவ்வப்போது சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். நேரம் தவறிய உணவு உட்கொள்ளுதல், தூக்கமின்மையும் ஒரு காரணமாக அமையும். தொழில், வியாபாரங்களில் போட்டிகள் இருந்தாலும் எதிர்த்து சமாளித்து சாதிக்கலாம். வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலை முயற்சிகள் நற்பலனைத் தரும். ஒருசிலருக்கு வேலை பார்த்து வரும் இடத்திலேயே புதிய இடங்களுக்கு மாறுதல் உண்டாகும். புதிய வாகனம் வாங்கலாம். ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு படிப்பில் மந்தத்தன்மை விலக ஹயக்ரீவரை வழிபடவும்.

Advertisment

மிதுனம்

2019-ஆம் ஆண்டு நான்காவது கன்னி லக்னத்திலும், ஐந்தாவது துலா ராசியிலும் பிறக்கிறது. பூர்வீகச் சொத்து சம்பந்தமாக உடன்பிறப்புகளால் சச்சரவு, சண்டை, கருத்து மோதல்களைச் சந்தித்து வந்தவர்களுக்கு இந்த மாதம் அதற்கு சுமுகத்தீர்வு அமையும். ராசிநாதன் புதன் மாத முற்பகுதிவரை 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். வாகனயோகம் உண்டு. பயணங்களால் ஆதாயம் ஏற்படும். மாமன், மைத்துனர்வழி ஒத்துழைப்புகள் நன்றாக அமையும். பிள்ளைகளுக்கு கல்வியில் ஏற்பட்ட தடை அகலும். 5, 12-க்குடைய சுக்கிரன் ஜனவரி முதல் தேதியிலேயே விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்குச் செல்கிறார். 12-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எனவே சுபவிரயங்களும் சுபச்செலவுகளும் உண்டாகும். ஆன்மிகப் பயணம் அல்லது உல்லாச சுற்றுலா அல்லது யாத்திரை போன்ற பயணங்களைச் சந்திக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் எதிர்பாôக்கலாம். தொழில், வாழ்க்கை நன்றாக அமையும்.

கடகம்

Advertisment

2019-ஆம் ஆண்டு 4-ஆவது துலா ராசியிலும், 3-ஆவது லக்னமான கன்னி யிலும் பிறக்கிறது. 4-க்குடைய சுக்கிரன் 5-ல் குருவுடன் அமர்கிறார். 11-ஆம் இடத்தைப் பார்க்கிறார். காரிய வெற்றி, அனுகூலம், ஆதாயம் போன்ற பலன்கள் உண்டாகும். 10-க்குடைய செவ்வாய் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். தொட்டதெல்லாம் துலங்கும். வீண்விரயங்கள் கட்டுக்குள் அடங் கும். 3, 12-க்குடைய புதன் 6-ல் மறைவது நன்மைதான். மறைந்த புதன் நிறைந்த தனம். பொருளாதாரத்தில் இருந்துவரும் சிக்கல்கள் விலகும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செயல்படுத்தலாம். வேலையில்லையே என்று தவித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். வேலையில் இருப்போருக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியும் அல்லது உத்தியோக மாற்றமும் உண்டாகும். அது நல்ல மாற்றமாக வும் அமையும்.

சிம்மம்

2019-ஆம் ஆண்டு 2-ஆவது லக்னத்திலும், 3-ஆவது ராசியிலும் பிறக்கிறது. சிம்ம ராசிநாதன் சூரியன் மாத முற்பாதிவரை 5-ல் சனி, புதனுடன் சஞ்சரிக்கி றார். குடும்பத்தில் நிலவும் சலசலப்பு விலகும். தொழிலில் புதிய திருப்பம், வாகன மாற்றம், வரவேண்டிய பாக்கிகள் வசூலாகுதல் போன்ற நற்பலனைச் சந்திக்கலாம். கணவன்- மனைவிக்குள் நிலவும் கருத்து வேறுபாடு விலகி ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகள் வகையில் நற்பலன்கள் சற்று தாமதமாகலாமே தவிர தடைப்படாது. 5-க்குடைய செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் சில நேரம் குழப்பங்களும் சஞ்சலங்களும் காணப்படலாம். சொத்துப் பிரச்சினையால் பங்காளிகளுக்குள் ஏற்பட்ட மனக் கிலேசம், வருத்தம் போன்றவற்றில் சுமுகநிலை ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்போருக்கு நற்செய்தி வந்துசேரும். உடல்நலத்தில் ஆரோக்கியம் உண்டாகும். தாய்வழி உறவில் மகிழ்ச்சிகரமான விசேஷங்கள் ஆகியவற்றை சந்திக்கலாம்.

monthrasiகன்னி

2019-ஆம் ஆண்டு உங்கள் ஜென்ம லக்னமான கன்னியிலும், 2-ஆவது துலா ராசியிலும் பிறக்கிறது. உங்களது திறமை, புகழ், கீர்த்தி, செயல்பாடு எல்லாம் சிறப்பாக அமையும். உழைப்புக்கேற்ற ஊதியம், மதிப்பு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு தகுந்த ஊதியமும் நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும். பொருளாதாரச் சிக்கல்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகமாகும். தேவையற்ற இன்னல்கள் விலகும். 2, 9-க்குடைய சுக்கிரன் 3-ல் நின்று 9-ஆம் இடத்தையே பார்க்கிறார். அவருடன் குருவும் இணைந்து 9-ஆம் இடத்தையே பார்க்கிறார். பூர்வபுண்ணியம் சிறப்பாக விளங்கும். குலதெய்வம் தெரியாமல் இருந்தவர்களுக்கு குலதெய்வ இருப்பிடம் தெரியவரும். சொத்துகளிலுள்ள வில்லங்க விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் அமையும். வழக்கு போன்றவற்றில் வெற்றிகள் கிடைக்கும். ஜனனகால தசாபுக்தியை அனுசரித்து செயல்படவேண்டும்.

துலாம்

2019-ஆம் ஆண்டு உங்கள் ராசியிலும், 12-ஆவது கன்னி லக்னத்திலும் பிறக்கிறது. ராசிநாதன் சுக்கிரன் 2-ஆம் இடமான விருச்சிகத்துக்கு மாறுகிறார். அவருடன் குருவும் இணைந்திருப்பதால் எதிர்பாராத பல நல்ல திருப்பங்கள் நிகழும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்வுகள் ஏற்படும். குதூகலம் அதிகரிக்கும். தங்குதடைகள் அகலும். குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில்துறையில் வளர்ச்சி ஏற்படும். பதவி, வேலை எல்லாவற்றிலும் நிம்மதி உண்டாகும். மனதை வருத்திய பல சங்கடங்கள் விலகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அனுபவித்த சங்கடங்கள் எல்லாம் உங்களுக்கு புதிய அனுபவத்தைக் கற்பிக்கும். தெளிந்த நீரோடைபோல செயல்படுவீர்கள். 2-க்குடையவர் 6-ல் மறைந்தாலும் குரு அந்த இடத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத் தடை விலகும். தவிர குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை யோகம் பெறுவதால் செவ்வாய்க்கு மறைவு தோஷம் விலகுகிறது. போட்டி, பொறாமை கள் விலகும். பங்கு பாகப்பிரிவினை திருப்தி கரகமாக நிறைவேறும்.

விருச்சிகம்

2019-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 12-ஆவது இடமான துலா ராசியிலும், 11-ஆவது இடமான கன்னி லக்னத்திலும் பிறக்கிறது. இதுவரை ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், லாப- நஷ்டங்களைச் சந்தித்தாலும், வெற்றி- தோல்விகளை அடைந்தாலும் குளத்தில் நீர்வற்றினா லும் உயர்ந்தாலும் நீர்மட்டத்துக்கேற்ப தாமரை மிதந்துகொண்டே இருப்பதுபோல நிலைமாறாமல் செயல்படுவீர்கள். ஜென் மத்திலுள்ள குருவோடு 12-க்குடைய சுக்கிரன் இணைகிறார். உங்களது செயல்பாட்டில் தடையேதும் வராது. ராசிநாதன் செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் இருக்கிறார். குரு அவரைப் பார்க்கிறார். எண்ணங்களையும் திட்டங்களையும் அனுகூலமாக நடத்தித் தருவார். பிள்ளைகள் வகையில் பாராட்டுகள் வந்துசேரும். அவர்கள் நலன்கருதி தீட்டும் எதிர்காலத்திட்டங்கள் பலனளிக்கும். உடன்பிறந்தவர்களால் சகாயமும் ஆதரவும் உண்டாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களை வழிநடத்தும்.

தனுசு

2019-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 10-ஆவது இடமான கன்னி லக்னத்திலும், 11-ஆவது இடமான துலா ராசியிலும் பிறக்கிறது. 10-ஆம் இடம் என்பது தொழில், வாழ்க்கை ஸ்தானம். அந்தவகையில் தொழில் பாதிப்புகளுக்கு இடமில்லை. வேலை, உத்தியோகத்தில் சுமை இருந்தாலும் அது சுகமான சுமைதான். அதனால் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். 12-ல் குரு நின்றாலும் 12-க்குடைய செவ்வாய் 4-ல் இருப்பது பரிவர்த்தனை யோகம். அதேபோல குரு 4-ஆமிடத்தைப் பார்ப்பதாலும் குருவின் மறைவு தோஷம் பாதிக்காது. கடந்த மாதம்வரை உடல் நிலையில் வைத்தியச்செலவுகளையும் மனக் கஷ்டத்தையும் சந்தித்தவர்களுக்கு இந்த மாதம் நிவாரணம் உண்டாகும். "பட்டகாலிலே படும்' என்பதற்கிணங்க அடிபட்ட இடத் திலேயே அடிபட்ட நிலையும் மாறும். ஆயுர் வேதம், ஹோமியோபதி சிகிச்சைகள் நல்ல பலன்களைத் தரும். சிலருக்கு உத்தியோக நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு களும் உருவாகும். ஜென்மச்சனி- செல்வாக்கு, மதிப்பு, கௌரவம் போன்ற யோகத்தைத் தருமென்று நம்பலாம்.

மகரம்

2019-ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு 9-ஆம் இடமான கன்னி லக்னத் திலும், 10-ஆவது இடமான துலா ராசியிலும் பிறக்கிறது. கேந்திரம், திரிகோணம் இவையிரண்டும் கலந்த கலவையில் வருடம் பிறக்கிறது. இந்த மாதம் எல்லாம் வெற்றியாகவே அமையும். கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம். எனவே உங்கள் முயற்சிகளுக்கு குருவருளும் திருவருளும் அருள்புரிந்து வெற்றியடைய வைக்கும். அதையே அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். அது இஷ்டமாக வருவது அதிர்ஷ்டம் என்பதாகும். அது இருந்தால் விலகிப் போனாலும் விரும்பிவரும். திரிகோணம் என்பது தெய்வீக ஸ்தானம். "கும்பிடபோன தெய்வம் நேரில்வரும்' என்பார்கள். ஆக மேற்கூறியபடி குருவருளும் திருவருளும் உங்களுக்குத் துணைநின்று வழிநடத்தி காரிய சித்தியைத் தருமென்பதில் சந்தேகம் தேவையில்லை.

கும்பம்

2019-ஆம் ஆண்டு கும்ப ராசிக்கு 8-ஆவது இடமான கன்னி லக்னத் திலும், 9-ஆவது இடமான துலா ராசியிலும் பிறக்கிறது. இந்த வருடம் வெற்றியும் தோல்வியும், ஏற்றமும் தாழ்வும் உடைய வருடமாக இருந்தாலும், ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்ப்பது ஒரு பலம். 2, 11-க்குடைய குரு 10-ல் நின்று 2-ஆம் இடத்தையே பார்ப்பதால் ஏமாற்றம், நஷ்டம், இழப்பு போன்றவற்றைத் தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் பிரச்சினைக்கு இடமில்லை. என்றாலும், வரவும்செலவும் மாறிமாறி இருந்துகொண்டிருக்கும். சேமிப்பைப் பெரிதளவு எதிர்பார்ப்பது கடினம். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் பெருமையும், பிள்ளை களுக்குப் பாராட்டும் ஏற்படும். பிணி, பீடைகள் விலகும். வைத்தியச்செலவுகளை விடைகொடுத்து வெளியேற்றிவிடலாம். வீண்பொழுதைப் பயனுள்ள பொழுதாக மாற்றியமைக்கலாம். வீட்டிலிருக்கும் குடும்பப் பெண்களுக்கும் வீட்டிலிருந்த படியே சிறுதொழில் அல்லது வேலைவாய்ப்பு அமையும்.

மீனம்

2019-ஆம் ஆண்டு மீன ராசிக்கு 7-ஆவது இடமான கன்னி லக்னத்திலும், 8-ஆவது இடமான துலா ராசியிலும் பிறக்கிறது. ராசிநாதன் குருவும் 9-ல் நின்று ராசியைப் பார்ப்பது மிக பலம். ஒரு ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும், குரு ராசியையோ லக்னத்தையோ பார்த்தால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலும் திறமையும் உருவாகும் என்பது ஜோதிடப் பாடம். கணவன்- மனைவிக்குள் அன்யோன்ய மும் இணக்கமும் இருக்கும். உடன்பிறந்த வர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மனக் கிலேசம் படிப்படியாக மாறும். 8-க்குடைய சுக்கிரன் 9-ல் குருவோடு இணைகிறார். தெய்வ கைங்கர்யங்களுக்கும், ஆன்மிக வழிபாடுகளுக்கும் வழிவகை ஏற்படும். இறைநம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் மட்டும் விடாமல் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.