பாரதவர்ஷம் எனப்படும் பரத கண்டம் குறித்து வியாசர் தொடர்ந்து ஜெனமேஜெயனுக்குக் கூறலானார்.

""ஜெனமேஜெயா... கண்டங்களில் பரதக்கண்டமே மேலானது. ஒரு மனித உயிரானது பிறகண்டங்களில் ஆயிரம் காலம் வாழ்வதும் சரி; பரத கண்டத்தில் பிறந்து ஒருநாள் வாழ்வதும் சரி... இரண்டும் ஒன்றாகும்.

இந்த பரதவர்ஷமாகிய பரதகண்டம் அத்தனை மகிமைமிக்கது. இதில் விஷ்ணுவே பிரதானம்! பரதகண்டத்தில் பிறந்தோர்க்கு விஷ்ணு கருணையும், பக்தியும் முக்கியம்.

இன்னொரு முக்கிய விஷயம்!

Advertisment

எங்கே விஷ்ணுவின் பாகவதக் கதைகள் சொல்லப்படுகிறதோ- எங்கே விஷ்ணுவுக்கான ஆராதனைகள், ஹோமங்கள் நடக்கிறதோ- அங்கே விஷ்ணு தோன்றி அதையேற்று ஆசிர்வதித்து ஆராதனைக்குரிய பயனையும் தருகிறார்.

ஒருபுறம் பயனளித்தபோதிலும், மறுபுறம் அழிந்துவிடும் பற்றுகளிலி−ருந்து அவர்களை விடுவித்து தன்னோடு சேர்த்துக்கொள்கிறார். இந்த பாக்கியம் மனிதர்களைத் தவிர ஏனைய உயிர்களுக்கில்லை. அவை திரும்பத்திரும்பப் பிறந்திடும் பிறவிச் சுழலுக்குள் இருப்பவை. விஷ்ணுபக்தி இல்லாது போகும் போது மானிடம் இந்த பிறவிச்சுழ−ல் சிக்கிப் பல்வேறு பிறப்பெடுத்து திரும்பத்திரும்பப் பிறப்பவனாகிறான்.

பாரத கண்டத்தில்தான் தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், முனிவர்கள் என்கிற கூட்டமும் மிகுதி. இவர்கள் மனிதர்களுக்கு மறைமுகமாக வழிகாட்டு பவர்கள்.

Advertisment

இந்த பரதகண்டம் எட்டு த்வீபங்கள் உடையது. சுவர்ணப் பிரஸ்தம், சந்திரப் பிரஸ்தம், சக்ரப் பிரஸ்தம், ஆவர்த்தனப் பிரஸ்தம், ரமணகப் பிரஸ்தம், மந்திரோ பாக்கியப் பிரஸ்தம், ஹரிணப் பிரஸ்தம், பாஞ்சஜன்யப் பிரஸ்தம் என்பவையே அவை. இவைபோக உப த்வீபங்கள் வரிசையில் அந்தமான், இலங்கை போன் றவையும் உண்டு.

இதில் நீயும் நானும் வாழ்ந்திடும் இந்த நிலப்பரப்பு ஜம்புத்வீபமாகும். இதன் நான்குபுறமும் கடல் சூழ்ந்துள்ளது. இதுபோக லவண சமுத்திரம், பிலஷத்வீபம், பின் கருப்பஞ்சாற்றுக் கடல் என்று பல சூழ்ந்த ஒரு பரப்பே ஜம்பூத்வீபமாகும்.

இதுபோக மதுக்கடல், நெய்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நன்னீர்க்கடல் என்கிற பெயர் கொண்ட கடல்களும் உள்ளன. இவற்றை மட்டுமின்றி உலகையே காண நமக்கு உதவுபவன் சூரியன். ஒளிக்கடவுள் என்றும் இவனை விளிப்போம்.

இவனுக்கு மார்த்தாண்டன், ஹிரண் யான்ட சமுத்பவன் என்னும் பெயர்களும் உண்டு. ஆகாயம், பூமி, சொர்க்கம், நரகம் எனும் இடங்களின் பேதங்களை நாம் இவன் ஒளியாலேயே கண்டுணர்கிறோம்.

இவனை கண்காணமுடிந்த கடவுளென் றும் கூறுவர்.

இவன் சுழன்றபடியே சுற்றிவருபவன். பூமியும் சுழன்றபடிதான் உள்ளது. சுழன்றால்தான் இயக்க விசை ஏற்பட்டு காலமாற்றங்களும் உருவாகும். சுழலா விட்டால் காலம் தோய்ந்த நிலை ஏற்பட்டு விடும். இருளில் இருப்பவர் இருளிலேயே இருக்கநேரிடும். பகலி−ல் இருப்பவர் பகலி−லேயே கிடக்க நேரிடும். இரண்டும் கலந்த நிலையே மனிதவாழ்வு! ஒன்று மட்டும்தான் என்றால் உயிரினங்கள் என்று ஒரு ஈ எறும்புகூட இல்லாத நிலை தோன்றிவிடும்.

எனவே உலகில் உயிரினங்கள் வாழ முதல் பௌதிகக் காரணம் சூரியனே! இவனும் பயணித்தபடியே இருக்கிறான். இந்தப் பயணத்தை அயனம் என்கிறோம்.

இவன் உதிக்கும் திசை கிழக்கு; மறையும் திசை மேற்கு. இவனது வலப்புறம் வடக்கு; இடப்புறம் தெற்கு. இதில் வலப்புறச் சஞ்சாரத்திற்கு உத்தராயனம் என பெயர். இடப்புற சஞ்சாரத்திற்கு தட்சிணாயனம் என பெயர். உத்தராயனத்தில் இவன் ஏறுகி றான்; தட்சிணாயனத்தில் இறங்குகிறான்.

இவனது நடையை துரித நடை, மந்த நடை, அதிசீக்கிர நடை என மூன்று வகைப் படுத்துவர். சூரியனுக்கு லட்சம் யோசனை தூரத்தில் இருப்பவன் சந்திரன். இவனது பிரகாசத்துக்குக் காரணமே சூரியன்தான். சூரிய ஒளி ஒருகோள்மீது பட்டுத் தெறித் தால் அது சந்திர ஒளியாகும். சந்திரனுக்கு வளர்நிலை, தேய்நிலை உண்டு. இதற்குக் காரணமும் சுழற்சிதான். இவனது இருண்ட நிலை கிருஷ்ண பட்சமாகும்; ஒளிமிகுந்த நிலை சுக்ல பட்சமாகும். சகல உயிர்களுக்குள்ளும் இவனே பிராணன்! உலகில் விளையும் அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களிலும், நம் மனங்களிலும் இவனது கலைகளே ஆட்சிபுரிகின்றன. இவன் நட்சத்திர மண்டலங்களைக் கடப்பவனும்கூட... ஒரு மாதத்திற்குள் அபிஜித் உள்ளிட்ட 28 நட்சத்திரங்களை இவன் தன் பயணத்தில் கடக்கிறான்.

அடுத்து அறியவேண்டியவன் சுக்கிரன். இவனே உயிர்களுக்கு சுகானுபவத்தை அளிப்பவன். தீவிரம், மந்தம், சமம் என மூன்றுவிதமான போக்குடையவன். இவனாலேயே மழைப்பொழிவு ஏற்பட்டு உயிரியக்கம் செழிப்படைகிறது.

சுக்கிரனை அடுத்து புதன். இவனுக்கும் மூன்றுவித நடைப்போக்கு. அடுத்து செவ்வாய், பின் குரு, அதற்கும் பின் சனி- இறுதியாக சப்தரிஷி மண்டலம். இந்தக் கோள்களும் பூமியை பாதித்து தங்கள் சக்தியை உணர்த்துபவையாகும். இவற்றின் பாதிப்பின்றி ஒரு உயிர்கூட மண்ணில் வாழமுடியாது.

சப்தரிஷி மண்டலத்துக்குமேல் துருவ மண்டலம். ஸ்ரீமன் நாராயணன்மேல் பக்திகொண்ட துருவன் என்பவனால் உருவானது இது. சொல்லப்போனால் இதுதான் மையம். இவனோடுகூட இந்திரன், அக்னி, காஸ்யபர், தர்மன் ஆகியோரும் உள்ளனர். நான் இதுவரை சொன்ன கோள்கள், நட்சத்திர மண்டலங்கள் என எல்லாம் இவனை மையமாகக்கொண்டே சுழல்கின்றன.

இதை நான் சற்று மாற்றியும் சொல்லலாம். முளையில் கட்டப்பட்டிருக்கும் பசுவானது எப்படி ஒரு வட்டத்தில் சுற்றிவருகிறதோ, அதுபோல் முளையாக துருவ மண்டலமும், அதில் கட்டப்பட்ட பசுவாக ஏனையவையும் உள்ளன.

இவையெல்லாம் பூமிக்கு மேலேயும், பூமியைச் சுற்றியும் உள்ளவையாகும். இப்போது பூமிக்குக் கீழுள்ள சப்தலோகங்கள் பற்றிச் சொல்கிறேன்.

அதலம்

விதலம்

சுதலம்

தராதலம்

மகாதலம்

ரசாதலம்

பாதாளம்

என்பவையே அவை. இவற்றை அமைத்த வன் மயன். இவனால் இங்கே மாடமாளிகை களும், தேரோடும் வீதிகளுடன்கூடிய பட்டணங்களுமுண்டு. இங்கேதான் தைத்தியர், நாகர் போன்றோர் உள்ளனர். இவர்களுக்கு நரை திரை மூப்பு கிடையாது. அதனால் மலம், மூத்திரம், வியர்வையும் கிடையாது.

yy

மயனுடைய புத்திரன் பலன் அதலத்தை ஆள்கிறான். இங்கே 96 வித மாயைகளை உருவாக்கி, தன் அதலத்துக்குள் நுழைபவர் களை மயங்கச் செய்கிறான்.

விதலத்தில் ஆடகேச்வரர் என்பவர்பால் பக்திப் பெருக்குடையோர் வாழ்கின்றனர்.

இங்கே சூடகம் எனும் நதியும் உண்டு. இது பார்வதி- பரமேஸ்வரனுடைய வீரியம் கலந்த நதியாகும். அதனால் இதில் பொன் விளைகிறது. இந்த பொன்னைக் கொண்டு வாழ்பவர்களே தைத்தியர் எனப்படுவர்.

சுதலலோகத்தை பலி− ஆள்கிறான். இவன் விஷ்ணுபக்தியோடு, இந்திரனைவிட அழகு, செல்வம், ஆற்றல்கொண்டு ஆட்சிபுரிகிறான். இராவணன் ஒருமுறை இந்த சுதலலோகம் வந்தபோது பலி− இவனைத் தூக்கி எறிய, பல லட்சம் யோசனை தூரத்தில் போய் இராவணன் விழுந்தான் என்பர்.

தராதலத்தை மயன் ஆள்கிறான். இவனை அசுரர்கள் போற்றுகின்றனர். இவனொரு சங்கர பக்தன். இங்கேதான் சர்ப்பங்கள் அதிகம் உள்ளன. குகன், தஷகன், சுலேணன், சாலையன் என்கிற இனங்களில் பிறந்தவை இவையெல்லாம். பலப்பல தலைகளும், நீண்ட உடலும் கொண்ட இவற்றுக்கு கருடன் என்றால் மட்டும் பயம்.

மகாதலத்தில் காலகேயர்கள், நிவாத கவசர்கள் எனப்படும் ராட்சஸர்கள் வாழ்கின்றனர்.

இவர்கள் தேவர்களுக்கு விரோதிகளாவர்.

இதுபோக, பாதாள உலகில் வாசுகி, சங்கன், குளிகன், சுவேதன், தனஞ் ஜெயன், மகாசங்கன், திருதராஷ்ட்ரன், சங்க சூடன், கம்பலாஸ்வதரன், தேவோ பதத்தகன் முதலி−ய சர்ப்ப ராஜாக்களும் வசிக்கின் றனர். இவற்றிடம் ஒளிமிகுந்த நாக ரத்தினங்களும் உள்ளன.

மேலும் ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேஷன் இந்த சப்தலோகங்களைத் தன் சிரசால் தாங்கியபடி உள்ளான். மூன்று கண்களையுடைய சங்கர்ஷணர் திரி சூலாதிபதியாய், மகா பூதங்களைக் கட்டுப் படுத்துகிறவராய், பதினோரு கணங்க ளோடு எழுந்தருளியுள்ளார். இவரை நாகர்கள் நமஸ்கரித்து காலடியில் கிடக்கின்றனர்.''

வியாசர் இப்படி வரிசையாக சகலத்தை யும் சொல்லி−வர, ஜெனமேஜெயன் விக்கித்துப் போனான்.

""அடேயேப்பா... என்னவொரு சிருஷ்டி, என்னவொரு சிருஷ்டி..!

அந்த பராசக்திக்குதான் எத்தனைப் பேரறிவு... எத்தனைப் பேராற்றல்?'' என்றவன், ""இவை அவ்வளவையும் ஒருநாள் ஒரு போதில் அவள் படைத்தாளா- இல்லை இவையெல்லாம் ஒன்றுக்குள்ளிருந்து ஒன்றாகத் தோன்றியதா?'' என்று கேட்க வேண்டிய கேள்வியைக் கேட்டான்.

""நல்ல கேள்வி... எதுவுமே ஒருநாள் ஒருபோதில் உருவாக முடியாது. நீயும் நானும் பிறக்கக்கூட பத்துமாத கர்ப்பம் என்றொரு கணக்குண்டு. எனவே இவை யெல்லாமே ஒன்றி−ருந்து ஒன்றாகத் தோன்றியவையே. ஆனால், இதன் ஆதிமூலம் அந்த பராசக்தியே...'' என்ற வியாசர், ""ஜெனமே ஜெயா... த்வீபங்கள், கண்டங்கள், கோள்கள், சப்தலோகங்கள்போல் நீ மேலும் பூகோளரீதியாக அறிய வேண்டியவை இன்னமும் உண்டு'' என்றார்.

""அதையும் கூறிவிடுங் கள்'' என்ற ஜெனமே ஜெயனிடம், அறிய வேண்டிய அந்த மற்ற விஷயங்களையும் கூறத் தொடங்கினார்.

""ஜெனமேஜெயா, இது காறும் பல சிறந்தவற்றை அறிந்த நீ இனி அறியப் போவது நரகங்களை...'' என்று அதிர்ச்சி யளித்தார்.

""நரகங்களையா?''

""ஆம்; ஒன்றல்ல, இரண்டல்ல. 28 நரகங்கள் உள்ளன!''

""அது என்ன கணக்கு மகரிஷி?''

""கேள், புரியும்... மனிதப் பிறப்பில் ஒன்றை மட்டுமே ஒருவர் செய்தல் அசாத்யம். பாவம்- புண்ணியம் இரண்டும் நம் செய−ல் இருந்தே தீரும். சமயத்தில் புண்ணியமே இன்றி பாவம் மிகுந்தாலும் மிகும்- புண்ணியம் மிகாது. காரணம் இந்த உலகத்தின் தன்மை அப்படிப்பட்டதாம்.

எனவே நல்லது செய்தால் நல்வினைப் பயனும், கெட்டதற்குத் தீவினைப் பயனும் பதிலுக்கு அனுபவிக்கவேண்டும். எனவே தான் சொர்க்க- நரகங்கள் தோன்றின.

இதில் தாமிஸ்ர நரகம் பிறர் பொருள், பிறன் மனையை அபகரித்தவர்க்குரியதாம். அந் தாமிஸ்ரம் என்பது ஏமாற்றுபவர்களுக்கா னது. துரோகிகளுக்கு ரௌரவமும் என்று, இதுபோல் 28 நரகங்கள் உள்ளன.

இதேபோல் புண்ணியங்களை அனுபவிக்க பொன்மயமான சொர்க்கம், பால்மயமான சொர்க்கம், கனிமயமான சொர்க்கம் என்று பல உள்ளன. சொர்க்கத்தை அடையவும், அங்கேயே நித்தியவாசம் புரியவும் அம்பிகை யின் கருணைதான் துணைசெய்யும். அதற் கேற்ப அவளை வழிபடவேண்டும்.

குறிப்பாக, சுக்கில பட்ச திரிதியையன்று இலுப்பை மரத்தையடைந்து தேவிபூஜை செய்வது மிக உசிதமானது. இந்த மரமே தேவி வடிவமாகும். தேவியும் அவள் கருணை யும் மரங்கள் எனப்படும் விருட்சங்களின் வடிவில் உள்ளது. மேலும் úலிதவியின் பாகவதம் அவள் பக்தர்களின் பலவித துன்பம் நீங்கவும் வழிகாட்டுகிறது.

காலகதியில் பிரதமை திதியில் தேவிக்கு நெய்விளக்கேற்ற ரோக நிவர்த்தி! துவிதை யில் சர்க்கரையை நிவேதனம் செய்திட ஆயுள் விருத்தி! திரிதியையில் பாலை நிவேதனம் செய்திட துக்கம் நீங்கும்! சதுர்த்தியில் எண்ணெய்யில் பொரித்த பட்சணங்களை நிவேதிக்க காரிய சித்தி! பஞ்சமியில் வாழைப் பழம் சமர்ப்பிக்க புத்திக்கூர்மை! சஷ்டியன்று தேனை வழங்கிட தேக சாந்தி! சப்தமியில் வெல்ல நிவேதனம் சோக வினாசனம்!

அஷ்டமியில் தேங்காய் தர தாபநிவர்த்தி! நவமியன்று நெற்பொரி அளித்திட அன்றாட சுகமும், தசமியில் எள்ளை நிவேதித்திட எமபயம் நீங்கும்! ஏகாதசியில் தயிரை அளிப்பதால் தேவியின் கருணை கிட்டும். துவாதசியில் அவலைச் சமர்ப்பித்திட சந்தோஷ சுகங்கள் கிட்டும். திரயோதசி அன்று கடலை சமர்ப்பிக்க சந்ததி விருத்தி! சதுர்த்தசி யில் சத்துமாவு நிவேதித்திட சிவன் கருணை யும், பௌர்ணமியன்று பாயசம் நிவேதிக்க பிதுர்களின் ஆசியும்கிட்டும்....''

வியாசர் தொடர்ந்தார்.

(தொடரும்)