வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தின், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58-ஆவது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீதன்வந்திரி பீடத்தின் 15-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 13-3-2019 புதன்கிழமை முதல் 17-3-2019 ஞாயிற் றுக்கிழமை வரை சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம் என ஷண்மதக் கடவுள்களைப் பிரதிஷ்டை செய்து ஷண்மத பீடமாகத் திகழ்ந்து வரும் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில், ஷண்மத தெய்வங்களைப் போற்றி ஆராதிக்கும் விதத்தில் ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்சவமும், ஸ்ரீ ஆரோக்கியலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு சஹஸ்ர கலசாபிஷேகமும், ஸ்ரீனிவாசர் திருக் கல்யாணத்துடன் 600-க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்கள் பங்கேற்கும் நாதசங்கமம் நிகழ்ச்சியுடன் பல்வேறு வைபவங்கள் நடைபெறவுள்ளன.

தெய்வத் திருமணங்களின் சிறப்பு

இந்து தொன்மவியலின் அடிப்படையில் இந்து சமயக் கடவுள்கள் தம்பதிகளாக உள்ளனர். சிவபெருமான்- பார்வதி, திருமால்- திருமகள், முருகன்- வள்ளி, தெய்வானை, விநாயகர்- சித்தி, புத்தி. இவர்களது திருமணங்கள் தெய்வத் திருமணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

திருக்கல்யாணம், யாகங்கள், சஹஸ்ர கலசாபிஷேகப் பலன்கள்

Advertisment

danvandriதன்வந்திரி பீடத்தில் அருள்புரியும் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீதன்வந்திரி பகவான் மற்றும் 75 பரிவார மூர்த்திகள், சிவலிங்க ரூபமாகவுள்ள 468 சித்தர்கள் அருளு டன் நடைபெறும் திருக் கல்யாண மஹோத்சவங்கள், யாகங்கள், பூஜைகள், ஆராதனைகள் போன்றவை பக்தர்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறவும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணவும், செய்தொழிலில் ஏற்படும் முடக்கம் அகலவும், நட்பினால் ஏற்படும் விரயம் குறையவும், பிள்ளைகள் வழி யிலான தொல்லைகள் அகலவும், ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அறுகுபோல வேரூன்றவும், திருமணம், குழந்தை பாக்கியம், நிரந்தர வேலை ஏற்படவும், குடும்பத்தில் பிரச்சினைகள், உடல் உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கவும், தீராத நோய்களுக்குத் தீர்வு கிடைக்கவும், கல்வி, தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், சௌபாக்கியங்கள் பெறவும், இயற்கை வளம் பெறவும், சகலவிதமான ஜீவராசிகள் நன்மை அடையவும் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சி நிரல்

13-3-2019 புதன்கிழமை காலை 9.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை கோமாதா திருக்கல்யாணமும், 108 பெண்கள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும் சமஷ்டி உபநயனமும் நடைபெறுகிறது.

Advertisment

14-3-2019 வியாழக்கிழமை காலை 6.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை துளசிதேவி- நெல்லிராஜா (துளசிச்செடி- நெல்லிச்செடி) திருக்கல்யாணமும்; 108 கன்னிப்பெண்கள் பங்கேற்கும் கன்யா பூஜையும் நடைபெறுகிறது.

15-3-2019 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை நிம்மலக்ஷ்மி- அஸ்வத் ராஜா (வேப்பமரம்- அரசமரம்) திருக்கல்யாணமும்; 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜையும் நடைபெறுகிறது.

16-3-2019 சனிக்கிழமை காலை 10.30 மணிமுதல் 1.00 மணிவரை 600-க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் நாத சங்கம நிகழ்ச்சியுடன், ஸ்ரீஆரோக்கிய லஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி யாகத்துடன் சஹஸ்ர கலச திருமஞ்சனம் நடை பெற்று, மாலை 5.00 மணிமுதல் 7.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவா சர் திருக்கல்யாணம் சதுர்வேதப் பாராய ணத்துடன் நடைபெறுகிறது.

ஸ்வாமிகளின் 58-ஆவது ஜெயந்தி விழா

17-3-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை பக்தர்கள் முன்னிலையில், ஷண்மத தெய்வங்களுக்கு ஒரே மேடையில், ஒரே நேரத்தில், ஷண்மத பீடத்தில் ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெறும்.

இவ்விழா சிறப்பாக நடைபெற திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமருகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிப்புத்துர், திருச்செந்தூர், திரு சத்திமுற்றம், கேரளத் தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மணமுடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெண்காடு, திரு வேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடைமருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழ பாடி, திருப்பாலைத்துறை, பந்தநல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற் காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ் வரன்கோவில், திருநாகேஸ்வரம், பூவாளூர் சக்திகோவில், திருமணமங்கலம் விசாலேஸ்வரா கோவில், தாடிக்கொம்பு, திருத்துறைப்பூண்டி போன்ற திருக் கல்யாண உற்சவம் விமர்சையாக நடை பெறும் தலங்களுக்கும், இதர ஷண்மத தலங்களுக்கும் டாக்டர் முரளிதர ஸ்வாமி கள் யாத்திரை சென்று, இவ்வைபவங்களின் மஹோத்சவப் பத்திரிகையை இறைவன்- இறைவியிடம் வைத்துப் பிரார்த்தித்து, சிறப்பு ஆராதனைகள் செய்து, அங்குள்ள புனித தீர்த்தங்கள், கற்கள், மூலிகை சமித்துக்கள், மூலிகை வேர்கள், ஸ்தல விருட்சங்களின் புஷ்பங்கள், காய்கள், இலைகள் கொண்டு நடைபெறவுள்ள வைபத்தில் அனைவரும் கலந்துகொண்டு இறையருள் பெற்று, ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் விவரங்களுக்கு:

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்,

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,

வாலாஜாபேட்டை- 632 513.

வேலூர் மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274.

அலைபேசி: 94433 30203.

Email : [email protected]