அட்சதை போடப்படுவதின் தாத்பர்யம் என்ன? ஆனந்தி, விழுப்புரம்
பொதுவாக திருமணங்கள் யாகங்கள் மற்றும் சுப விசேஷங்களில் அட்சதை தூவும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது. அட்சதை என்பது, முழு முனை உடையாத அரிசியும், மஞ்சளும் சேர்த்து சிறிதளவு நெய்யும் சேர்த்து கலக்கப்படுவது. இந்த மூன்றும் சேரும்போது, அதில் தெய்வாம்சம் வந்து விடுகிறது. பச்சரிசி என்பது சந்திரனுக்குரியது, மஞ்சள் என்பது குரு பகவானை குறிக்கும். நெய் என்பது மகாலட்சுமி அம்சமாகும். எனவே இந்த அட்சதையில் இந்த மூன்று தெய்வீக சக்தியும் வந்து உட்கார்ந்து விடுகிறது. இதனை தாலி கட்டியவுடன், மணமக்கள் மீது தூவும் போது, அவர்களுக்கு தெய்வ ஆசிர்வாதம் கிடைக்கிறது. மேலும் ஒரு முக்கிய காரணம், இந்த தெய்வீக சக்திக்குரிய பொருட்கள் அவர்கள் மீது பட்டு தெறிக்கும் போது அவர்கள் மீது விழுந்துள்ள திருஷ்டி, கெட்ட மனம் உடையவர்களின் எரிச்சலான தீய பார்வை பாதிப்பு என தடுக்கப்பட்டு, மணமக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற ஒரு உணர்வே அட்சதை தூவப்படுவதின் தாத்பர்யம் ஆகும்.
கிரஹஸ்தன் ருத்ராட்சம் அணியலாமா? ஆனந்தி, விழுப்புரம்
ருத்ராட்சம் என்பது, ஒரு தெய்வீக விஷயம் சார்ந்தது. ருத்ராட்சத்தை அணிந்தால் பாவங்கள் அழிந்துவிடும். தொட்டால் சுவர்க்கம் கிடைக்கும். அணிந்தால் மோட்சம் கிடைக்கும் என்று வியாசர் கூறியுள்ளார். எனவே இத்துணை சக்தியுள்ள, ருத்ராட்சம் அணியும்போது, சில உணவு கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள், மதுபானம், வெங்காயம், பூண்டு, முருங்கை காய் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் மேலும் சைவ உணவுகளை மட்டுமே அளவாக உண்ண வேண்டும். மற்றும் பிரம்மச்சர்ய விரதம் முக்கியமானது. எனவே மேற்கண்ட கடும் கட்டுப்பாடுகள் உடையவர்கள் மட்டுமே ருத்ராட்சம் அணிந்தால் நல்ல நன்மை கிடைக்கும். கட்டுப்பாடுகள் இன்றி ருத்ராட்சம் அணிந்தால், பெரும் தீங்கும், எதிர்மறை செயல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.எனவே, வயதான, கிரஹஸ்தர்கள் மட்டுமே ருத்ராட்சம் அணியலாம்.
பண்டைய தேசத்தின் இரண்டு வம்சங்கள் பற்றி கூறவும்?ஆனந்தி, விழுப்புரம்
பண்டைய காலத்தில் சூரிய வம்சம், சந்திர வம்சம் என இரண்டு வம்சங்கள் இருந்தது. சூரிய வம்சத்தின் முதல் குரு வைவஸ்த மனு ஆவார். இந்த வம்சத்தில் தான் ராமர் பிறந்தார். இது இராமாயண காவியத்துக்கு உடையது.சந்திர வம்சம் அத்ரி மகரிஷியிலிருந்து உருவானது. இந்த வம்சத்தில் இருந்து ஸ்ரீகிருஷ்ணர், கௌரவர், பாண்டவர்
அட்சதை போடப்படுவதின் தாத்பர்யம் என்ன? ஆனந்தி, விழுப்புரம்
பொதுவாக திருமணங்கள் யாகங்கள் மற்றும் சுப விசேஷங்களில் அட்சதை தூவும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது. அட்சதை என்பது, முழு முனை உடையாத அரிசியும், மஞ்சளும் சேர்த்து சிறிதளவு நெய்யும் சேர்த்து கலக்கப்படுவது. இந்த மூன்றும் சேரும்போது, அதில் தெய்வாம்சம் வந்து விடுகிறது. பச்சரிசி என்பது சந்திரனுக்குரியது, மஞ்சள் என்பது குரு பகவானை குறிக்கும். நெய் என்பது மகாலட்சுமி அம்சமாகும். எனவே இந்த அட்சதையில் இந்த மூன்று தெய்வீக சக்தியும் வந்து உட்கார்ந்து விடுகிறது. இதனை தாலி கட்டியவுடன், மணமக்கள் மீது தூவும் போது, அவர்களுக்கு தெய்வ ஆசிர்வாதம் கிடைக்கிறது. மேலும் ஒரு முக்கிய காரணம், இந்த தெய்வீக சக்திக்குரிய பொருட்கள் அவர்கள் மீது பட்டு தெறிக்கும் போது அவர்கள் மீது விழுந்துள்ள திருஷ்டி, கெட்ட மனம் உடையவர்களின் எரிச்சலான தீய பார்வை பாதிப்பு என தடுக்கப்பட்டு, மணமக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற ஒரு உணர்வே அட்சதை தூவப்படுவதின் தாத்பர்யம் ஆகும்.
கிரஹஸ்தன் ருத்ராட்சம் அணியலாமா? ஆனந்தி, விழுப்புரம்
ருத்ராட்சம் என்பது, ஒரு தெய்வீக விஷயம் சார்ந்தது. ருத்ராட்சத்தை அணிந்தால் பாவங்கள் அழிந்துவிடும். தொட்டால் சுவர்க்கம் கிடைக்கும். அணிந்தால் மோட்சம் கிடைக்கும் என்று வியாசர் கூறியுள்ளார். எனவே இத்துணை சக்தியுள்ள, ருத்ராட்சம் அணியும்போது, சில உணவு கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள், மதுபானம், வெங்காயம், பூண்டு, முருங்கை காய் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் மேலும் சைவ உணவுகளை மட்டுமே அளவாக உண்ண வேண்டும். மற்றும் பிரம்மச்சர்ய விரதம் முக்கியமானது. எனவே மேற்கண்ட கடும் கட்டுப்பாடுகள் உடையவர்கள் மட்டுமே ருத்ராட்சம் அணிந்தால் நல்ல நன்மை கிடைக்கும். கட்டுப்பாடுகள் இன்றி ருத்ராட்சம் அணிந்தால், பெரும் தீங்கும், எதிர்மறை செயல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.எனவே, வயதான, கிரஹஸ்தர்கள் மட்டுமே ருத்ராட்சம் அணியலாம்.
பண்டைய தேசத்தின் இரண்டு வம்சங்கள் பற்றி கூறவும்?ஆனந்தி, விழுப்புரம்
பண்டைய காலத்தில் சூரிய வம்சம், சந்திர வம்சம் என இரண்டு வம்சங்கள் இருந்தது. சூரிய வம்சத்தின் முதல் குரு வைவஸ்த மனு ஆவார். இந்த வம்சத்தில் தான் ராமர் பிறந்தார். இது இராமாயண காவியத்துக்கு உடையது.சந்திர வம்சம் அத்ரி மகரிஷியிலிருந்து உருவானது. இந்த வம்சத்தில் இருந்து ஸ்ரீகிருஷ்ணர், கௌரவர், பாண்டவர் தோன்றினர். இதிலிருந்து ஒரு மன்னனான யது என்ற பெயரில் யதுகுலம் தோன்றியதாகவும் கூறுகின்றனர்.
சபரிமலை செல்பவர்கள் தேங்காய் நெய் எடுத்துச் செல்வது ஏன்?ஆனந்தி, விழுப்புரம்
சபரி மலை செல்பவர்கள், தங்கள் குரு முன்னிலையில் பூஜை ஆரம்பிப்பர். அதை இருமுடி கட்டுதல் என்பர். தேங்காயின் கண்ணை திறந்து. அதில் உள்ள தேங்காய் தண்ணீரை கொட்டிவிட்டு, பின் அதில் நெய்யை நிரப்பி, நன்கு மூடிவிட்டு, அதை இருமுடியில் வைத்து, மலைக்கு சாமி சரணம் என கோஷமிட்டு எடுத்து செல்கிறார்கள். பின் மலைக்குச் சென்றவுடன். அந்த நெய்யை மட்டும், சுவாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு மீதியை பிரசாதமாக வாங்கி கொள்கிறார்கள். நெய் சுமந்த தேங்காய் நெருப்பு குண்டத்துக்கு போய்விடுகிறது.இதில் தேங்காயை உடம்பு என்றும், நெய்யை ஆத்மா என்றும் உருவகப்படுத்தப்படுகிறது. ஆத்மா எனும் நெய், சுவாமிக்கு போய் விடுகிறது. ஆத்மா எனும் நெய்யை சுமந்த உடம்பு எனும் தேங்காய் அக்னிக்கு போய் விடுகிறது எனும் நம்பிக்கை உள்ளது.இதில் இன்னும் ஒரு ரகசியம் உள்ளது. சபரிமலை ஐயப்பன் பிறப்பு கதை உங்களுக்கு தெரியும்தானே! யார் தலையிலும், கை வைத்தால், அவர்கள் உடனே மரணம் அடையவேண்டும் என்று வரம் வாங்கிய அரக்கன் அதை சோதித்து பார்க்க விரும்பினான் அட, வரம் கொடுத்த ஈசன் எதிரிலேயே நிற்க, அவர் தலையில் கை வைத்து டெஸ்ட் பண்ணிவிடலாம் என செம ஐடியா தோன்ற, சிவன் தலையில் கை வைக்க தயாரானான். இதனை கண்ட சிவன் ஓட, விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து, அவன் கையை அவன் தலையில் வைக்குமாறு செய்துவிட்டார். இதனால் அந்த அசுரன் அழிந்துவிட்டான். இந்த மோகினியை கண்டு மோகித்தால், ஐயப்பன் அவதாரம் நடந்ததாக புராண செய்திகள் கூறுகின்றன.இப்போது யோசியுங்கள். தேங்காய் என்பது மூன்று கண்ணுடைய ஈசன். அதிலிருந்து கொட்டும் தேங்காய் தண்ணீர் அந்த அரக்கன் ஆவான். அதில் ஊற்றப்படும் நெய், விஷ்ணுவைக் குறிக்கும்.எனவே சபரிமலை பக்தர்கள், கொண்டு செல்லும் தேங்காய், ஐயப்பனின் பிறப்பையும், அவன் உற்பத்தி ஆவதற்கு காரணமான சிவனையும், விஷ்ணுவையும் குறிக்கிறது. எனவே இருமுடி தேங்காயை, ஈசனையும், விஷ்ணுவையும் சேர்த்து சுமப்பதாக, பெருமிதம் கொள்ளுங்கள். இதில் ஈசன் நெருப்பு வடிவானவர். அதனால் முக்கண் தேங்காயை அந்த நெருப்பிடம் சேர்த்து விடுகிறீர்கள். விஷ்ணு சம்பந்த நெய்யை, சுவாமியிடம் அபிஷேகம் செய்துவிட்டு, மீதியை வீட்டிற்கு கொண்டு வருகிறீர்கள்.விஷ்ணு இருக்கும் இடத்தில், மகாலட்சுமி வாசம் செய்வாள். எனவே மலையில் இருந்து இறங்கியவுடன், நேராக வீட்டிற்கு சென்று, பூஜையறையில் இந்த நெய்யை வைத்து வணங்குங்கள். வீடு செல்வ செழிப்பாகும்.
மாதங்களில் சிறந்தது மார்கழி ஏன்? ஆனந்தி, விழுப்புரம்
பொதுவாக மனிதர்களாகிய நாம், ஒவ்வொரு காலை நேரமும், அதாவது சூரியன் உதிப்பதற்கு முன் உள்ள நேரத்தை, பிரம்ம முகூர்த்தம் என்போம். அந்த நேரத்தில், எந்த நல்ல செயலை தொடங்கினாலும், மிக அற்புதமாக அமையும். அதற்கு நல்ல நேரம். கெட்ட நேரம், இராகு காலம், கரிநாள் என எதையும் பார்க்க வேண்டாம். மனிதர்களுக்கே பிரம்ம முகூர்த்தம் இத்தனை நன்மை செய்யும். எனில், பிரம்மாவிற்கு, மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நாளாக அமைகிறது. எனில் மார்கழி மாதம் எத்தனை சிறப்பு உடையது என உங்களுக்கே தெரியும்.மார்கழி மாதம் பனி விழும் மாதம். அந்த பனி நேரத்தில், காலையில் எழுந்து குளித்து, சுவாமி தரிசனம், பஜனை பாடுவது என இருப்பது, உடல்நலத்தை மேம்படுத்தும். இந்த பஜனை சைவர்கள், வைஷ்ணவர்கள் என இருவருமே கொண்டாடுவார்கள்.வைஷ்ணவர்கள் ஆண்டாள் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருவெம்பாவை என பாடி பஜனை செய்வர்.இந்த மார்கழி மாதம், வைகுண்ட ஏகாதசி வருகிறது. இது பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் கதவு திறக்கும் விழாவாகவும், பூரண உபவாச நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பீமனுக்கு, ஒவ்வொரு ஏகாதசிக்கும் முழு பட்டினி இருக்க முடியாமல் போனது. எனவே பீம மஹாராஜா, வைகுண்ட ஏகாதசியில் மட்டும் பூரண உபவாசம் இருந்தாராம். மார்கழி மாதம் வரும் ஏகாதசி அத்தனை சிறப்புடையது. மற்றும் சிவபெருமான், மார்கழி ஆருத்ரா நடனம், வியாகரபாதர், பதஞ்சலி முனிவர் முன்பு நடத்தினார். திருவாதிரை வாய்க்கு ஒரு வாய் களி என்பர்.எல்லாவற்றிற்கும் மேலாக, கிருஷ்ண பரமாத்மா, தனது கீதையுரையில் மாதங்களில் நான் மார்கழி ஆவேன் என உறுதிபட கூறியுள்ளார்.இதையும்விட மாதங்களில் சிறந்தது மார்கழி என்பதற்கு என்ன அத்தாட்சி வேண்டியிருக்கிறது.
அபசகுணமாக பேசுவது தவறா? நம்பிக்கை துரோகத்திற்கு தண்டனை என்ன? ஆனந்தி, விழுப்புரம்
யாராக இருந்தாலும், அபசகுணமாக பேசாதீர்கள். நீங்கள் பேசும் சொற்கள் உங்களையே தாக்கும். எனவே அபசகுணமாக பேசுவது, உங்களுக்கே தீமையாக முடிந்துவிடும். அபசகுணமாக பேசுவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.நம்பிக்கை துரோகத்திற்கு நம்மால் தண்டனை கொடுக்க இயலாது. இறைவன் அனைத்து செயல்களையும் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பான். இந்த மாதிரி ஆட்களை கடவுளும், காலமும் தண்டிக்கும். வேறு ஒன்றுமில்லை. அவர்களுக்கு இறைவனின் உதவி கண்டிப்பாக தேவை எனும் நேரம், இறைவன் அவர்களைவிட்டு விலகி விடுவார். இதைவிட தண்டனை இந்த உலகில் வேறு எதுவுமில்லை. "கர்மத்தைச் செய் பலனை எதிர்பார்க்காதே'. அது இந்த கேள்விக்கும் பொருந்தும். உங்கள் வேலையை, பார்த்துக்கொண்டு அமைதியாக, கடவுளே கதி என்று இருங்கள்.
ஆஞ்சநேயர் நமக்கும் தூதன் என்பது சரிதானே? ஆனந்தி, விழுப்புரம்
தயவுசெய்து இந்த மாதிரி கேள்விகள் கேட்டு, மனதை சங்கடப்படுத்தாதீர்கள். ஆஞ்சநேயர், எப்பேர்ப்பட்ட அம்சம். அவர் சிவ அம்சமாக அவதரித்தவர். இராமரை தன் இதயத்தில் தரித்தவர். அவர் இராமருக்கும். சீதா பிராட்டிக்கும் தூதன் மட்டுமே. நமக்கும் தூதன் என்று இன்னொரு முறை கூறினால் சாமி கண்ணை குத்திவிடும்; ஜாக்கிரதை.
சனிபகவானால் பீடிக்கப்படாத அனுக்கிரகம் பிள்ளையாருக்கும், ஆஞ்சநேயருக்கும் அமைந்துள்ள பின்னணி என்ன?ஆனந்தி, விழுப்புரம்
ஆஞ்சநேயரும் சனியும் இராவணன்- இராமர் யுத்தத்தின்போது, இராமரும், லட்சுமணரும் மூர்ச்சையடைந்துவிட்டனர். அவர்களுக்கு மூலிகை தேடுவதற்காக ஆஞ்சநேயர் செல்ல, அவர் பின்னாலேயே சனியும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்.ஆஞ்சநேயருக்கு சரியான மூலிகை தெரியாத அந்த நேரத்தில், சனி அவரை பார்த்து, "ஜென்ம ராசிப்படி உன்னை நான் பிடித்தே ஆகவேண்டும்' எனக்கூறி, அவரின் இடது தோளில் ஏறி உட்கார்ந்துகொண்டார். ஆஞ்சநேயர், "அவரிடம், எனக்கு முக்கியமான வேலை உள்ளது. அந்த வேலை முடிந்ததும், நானே உன்னை அழைக்கிறேன். அப்போது என்னை வந்து பிடித்துக்கொள்' என்று எவ்வளவோ கூறியும். சனி, தோளிலிருந்து இறங்க மறுத்துவிட்டார்.இதனால் வெகு கோபம்கொண்ட ஆஞ்சநேயர், மலையைத் தூக்கி, தோளில் வைக்க, அதில் சனி அகப்பட்டுக்கொண்டார். மலையின் அடியில் நசுங்கிய சனி தயவுசெய்து என்னை விட்டுவிடு என கதற, ஆஞ்சநேயர் இனிமேல் "என்னிடம் மட்டுமல்ல; என் பக்தர்களின் அருகில்கூட நீ செல்லக்கூடாது'' என கண்டிப்பு காட்ட, சனி அதற்கு சம்மதம் தெரிவிக்க, ஆஞ்சநேயர் சனியை விடுவித்தார்.இதனால் ஆஞ்சநேய பக்தர்களை சனி பிடிப்பது கிடையாது.விநாயகருக்குள் அனைத்து கிரகங்களும் அடங்கியுள்ளது. மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் முழுமுதற் கடவுள் விநாயகர்தான். எனவே சனியின் தாக்கம் விநாயகரின் பக்தர்களுக்கு கிடையாது.
இறைவன் உருவமற்றவர் எனில் சிலை வழிபாடு ஏன்?ஆனந்தி, விழுப்புரம்
மனிதர்களின் மனப்போக்கு என்பது ஒரே விஷயத்தில், எப்போதும் முழு ஈடுபாட்டுடன் ஒன்றிப்போக இயலாது. அட சாப்பாட்டு விஷயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒருநாள் தேவாமிர்தமாக சாம்பார் காய்கறி பண்ணினால், "அட ரொம்ப நல்லாயிருக்கே' என சப்பு கொட்டி சாப்பிடுவோம். சரி, நல்லா சாப்பிடுகிறார்களே என்று, மறுநாளும் சாம்பார், காய்கறி என செய்தால், வீட்டில் உள்ளவர்கள் வெகுண்டு எழுந்துவிடுவர். என்னது தினமும் சாம்பாரா என்பர். பாருங்கள் ஒரு உணவு விஷயத்துக்கே, நம்ம மனிதர்களுக்கு ஒரே அளவு, ஈடுபாடு இல்லை. இது தெய்வ விஷயத்துக்கும் சரிதானே.சரி; இறைவன் உருவமற்றவர் என்று கண்ணை மூடி இருந்து பாருங்கள். உங்களுக்கு இறைவன் ஒரு நொடி தோன்றுவாரா என்றால் அது இயலவே இயலாது. பக்கத்து வீட்டுக்காரன்கூட போட்ட சண்டையும் பதவிசான நடிகையும்தான் கண்ணுக்குள் வருவார்களே, தவிர, சாமி... ம்கூம் நோ சான்ஸ்.அதனால்தான், மேற்கண்ட, இரு விஷயங்களையும், நமது முன்னோர்கள் நன்கு யோசித்து, நிறைய தெய்வங்களை அட, தெய்வ பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.உனக்கு எந்த சுவாமி கும்பிட தோன்றுகிறதோ, அந்த தெய்வத்தின் உருவத்தை மனதில் இருத்தி வழிபாடு செய். அப்போதுதான் மனம் ஒன்றி தெய்வீக சாந்நித்யம் பெருகும், பக்தி பெருகும் என இறைவனை, சிலை வழிபாடுகளை தோற்றுவித்தனர்.முற்றும் துறந்த முனிவர்கள், துறவிகள், ரிஷிகளுக்கு இறை உருவம் தேவை இல்லாதது. அவர்கள் அகன்று பரந்த பிரபஞ்சத்தில், பிரம்மத்தை காண்பவர்கள்.
மகான்களை தரிசிப்பதற்கும், இறைவனை தரிசிப்பதற்குமுள்ள வேறுபாடு என்ன?ஆனந்தி, விழுப்புரம்
இறைவன் என்பவர் யார்? இந்த அகிலாண்ட பிரபஞ்சங்களை ஆட்டிவைக்கும் பேருண்மை ஆவார். மேலும் ஈஸ்வரன் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால், இவ்வளவு ஞானத்தையும் அனுக்கிரகிக்கும் சக்தியை, கடவுள், குருவுக்கு கொடுத்திருக்கிறார். இறைவன் க்ருபா சமுத்திரமாக இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு மனிதனின் கஷ்டத்தின் தன்மை குறைய, சமுத்திரம் தேவையில்லை அல்லவா. தாகம் தீர்க்க, சமுத்திர நீரைவிட, ஒரு குழாயில் பிடிக்கும் தண்ணீர் தீர்க்கும்தானே. இதன் அடிப்படையில், மனிதரின் சின்ன சின்ன கஷ்டங்கள் தீர, இறையருள் பெற்ற குருவே போதும்.நடைமுறை வாழ்க்கையில், ஒரு பெரிய கவர்னர் அல்லது முதலமைச்சரை நம்மைபோல் சாதாரண மனிதர்களால் சந்திக்க இயலாது. ஆனால், அவரிடம் தொடர்புள்ள ஒருவரிடம், நாம் விண்ணப்பித்துக்கொண்டால், அவர்களை பார்க்காமலே நமது காரியம் ஆக உத்தரவு வந்து விடுகிறதல்லவா.ஆக, குரு என்பவர், நமக்காக இறைவனிடம் பிரார்த்தித்து, நமது வாழ்வை மேன்மையடைய, சீக்கிரமாக வழி காட்டுகிறார். அவ்வளவு ஏன் நமது வாழ்வு உய்வுபெற, இறைவனிடம் உரிமையாக சண்டைகூட போடும் ஆற்றல் பெற்றவர் குரு. ஆக, மகான்களை, குருவை வழிபடுவது நமது துன்பங்களைத் தீர்க்கும் எளிய வழியாகும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us