Advertisment

ஓம் பதில்கள் 010925

Q&A

 

இந்து மதத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளது?-கே. ஸ்ரீவித்யா, சென்னை.

ஆதிகாலத்தில் இந்து மதத்தில் எழுபத் திரண்டு மதங்கள், பிரிவுகள் இருந்துள்ளது. இதில் சில பிரிவுகள் மட்டுமே தெரிந்துள்ளது. மற்றவை காலப்போக்கில், அடித்துச் செல்லப்பட்டது, வேதாந்தம், காணபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம், ஸௌரம், பௌத்தம், ஜைனம், சார்வாகம் என இவ்விதம் பல பிரிவுகள் உள்ளது.தமிழ்நாட்டை பொறுத்தவரை, சைவமும், வைணவமும்தான் முக்கிய பிரிவாக உள்ளது.இந்து மதத்தின் சிறப்பே, யாருக்கு எந்தவிதமாக வணங்க பிடிக்கிறதோ, அது மாதிரி வணங்கும் மத சுதந்திரத்தை கொடுக்கிறது.

Advertisment

உடம்பு சரியில்லாதபோது, பிறர் பார்க்க மருந்து சாப்பிடக்கூடாதா?-எஸ்.ஆர். ஹரிஹரன், சென்னை.

உங்களிடம் யாரோ தவறாக கூறியிருக் கிறார்கள். மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு, நர்ஸ் மருந்து கொடுக்கும்போது, மேடம் கொஞ்சம் கண்ணை மூடிக்கொள் ளுங்கள் என்றால், நம்மை அடுத்த நிமிடம் மனநிலை சரியில்லாத மருத்துவமனையில் சேர்த்துவிடுவர்.இன்னும் சொல்லப்போனால், வியாதிகள் குணமாவதற்கு, கூட்டு பிரார்த்தனைகள் வெகு பலனளிப்பது. இன்றும் நிறைய வீடுகளில், யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் நிறைய பேர் சேர்ந்து, "ஸ்ரீ நாராயணியம்' பாராயணம் செய்வது வழக்கம். இதன்மூலம் ஸ்ரீ குருவாயூரப்பன் அருள் பொழிந்து, நோய் விலகி, நல்ல சௌக்கியமாக இருக்கலாம் என்

 

இந்து மதத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளது?-கே. ஸ்ரீவித்யா, சென்னை.

ஆதிகாலத்தில் இந்து மதத்தில் எழுபத் திரண்டு மதங்கள், பிரிவுகள் இருந்துள்ளது. இதில் சில பிரிவுகள் மட்டுமே தெரிந்துள்ளது. மற்றவை காலப்போக்கில், அடித்துச் செல்லப்பட்டது, வேதாந்தம், காணபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம், ஸௌரம், பௌத்தம், ஜைனம், சார்வாகம் என இவ்விதம் பல பிரிவுகள் உள்ளது.தமிழ்நாட்டை பொறுத்தவரை, சைவமும், வைணவமும்தான் முக்கிய பிரிவாக உள்ளது.இந்து மதத்தின் சிறப்பே, யாருக்கு எந்தவிதமாக வணங்க பிடிக்கிறதோ, அது மாதிரி வணங்கும் மத சுதந்திரத்தை கொடுக்கிறது.

Advertisment

உடம்பு சரியில்லாதபோது, பிறர் பார்க்க மருந்து சாப்பிடக்கூடாதா?-எஸ்.ஆர். ஹரிஹரன், சென்னை.

உங்களிடம் யாரோ தவறாக கூறியிருக் கிறார்கள். மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு, நர்ஸ் மருந்து கொடுக்கும்போது, மேடம் கொஞ்சம் கண்ணை மூடிக்கொள் ளுங்கள் என்றால், நம்மை அடுத்த நிமிடம் மனநிலை சரியில்லாத மருத்துவமனையில் சேர்த்துவிடுவர்.இன்னும் சொல்லப்போனால், வியாதிகள் குணமாவதற்கு, கூட்டு பிரார்த்தனைகள் வெகு பலனளிப்பது. இன்றும் நிறைய வீடுகளில், யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் நிறைய பேர் சேர்ந்து, "ஸ்ரீ நாராயணியம்' பாராயணம் செய்வது வழக்கம். இதன்மூலம் ஸ்ரீ குருவாயூரப்பன் அருள் பொழிந்து, நோய் விலகி, நல்ல சௌக்கியமாக இருக்கலாம் என்பதே உண்மை. ஸ்ரீநாராயணிய பாராயணம் முடிந்தவுடன், அன்னமிட்டு, வந்தவர்களை வழியனுப்பி வைப்பர். இது ஒரு கூட்டு வழி பாட்டு சிறப்பாகும்.

தேங்காய் உடைப்பதில் நியமம் உள்ளதா? -ராஜேஷ், திருச்சி.

தேங்காய் என்பது இந்து மத பூஜையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. தேங்காயிலுள்ள மூன்று கண்களும் முறையே சிவன், விஷ்ணு, பிரம்மா என குறிப்பிடுவதாக உள்ளது. உலகிலேயே மிக பரிசுத்தமான நீர் எதுவென் றால், அது தேங்காயை உடைக்கும்போது கொட்டும் நீர்தான். அதாவது தேங்காய் தண்ணீர்தான் என்பது தெளிவு. அதனால் தான் பூஜையில் தேங்காய் உடைக்கிறோம். தேங்காயை உடைக்கும்முன், அதன் குடுமியை நீக்கிவிட்டு கழுவி பின் உடைத்தல் தகும். குடுமி உள்ள பகுதி அதிகமாக தேங்காய் உடையதாக உடைந்தால் நல்லது. மேலும் சரியாக, இரண்டு பகுதியாக இருந்தாலும் நல்லதுதான். உடைந்த தேங்காய் பிசிறுகளோடு இருப்பதைவிட, பிசிறின்றி அழகாக இருப்பது நல்லது. தேங்காய் உடைக்கும்போது, கண் வழியாக உடைவதும், அழுகலாக இருப்பதும், துன்பம் வருவதைக் குறிகாட்டுகிறது. சில்லுசில்லாக சிதறுவதும் நன்மை கிடையாது. பூஜையின்போது இவ்விதம் ஏற்பட்டால், வேறு ஒரு தேங்காயை உடைத்து, பூஜையை தொடரவும். இதனால் முக்கிய பூஜைகளின்போது, இரண்டு தேங்காய் வாங்கி வைத்துக்கொள்வது, இவ்வாறான அவசரத்துக்கு உதவும்.தேங்காய் உடைக்கும்போது, அதில் தேங்காய் பூ இருப்பது, பெரிய அதிர்ஷ்டம் வர இருப்பதன் அறிகுறியாகும்.தேங்காய் பல தெய்விக சக்திகளுடையது. அதனால் பூர்ண கும்பத்தில் மாவிலையும் தேங்காயும் சேர்த்து வைக்கிறார்கள். அதனால்தான் தேங்காய் உடைக்கும்போது ஏற்படும் நிகழ்வுகள், நன்மை- தீமையைக் காட்டுவதாக மக்கள் நம்புகிறார்கள்.தேங்காய் உடைக்கும்போது கூறுவதற்கு ஒரு மந்திரம் உள்ளது. ஸ்கந்த பலா க்ஷிரா பலா பரசு ராம சுபம் சுபம். எனும் மந்திரத்தைக் கூறி ஜெபித்து பின் உடைக்கவேண்டும்.ஸ்ரீ பரசுராமர், பூலோகத்திற்கு பல பல அரிய தெய்வ மூர்த்திகளை, பிரதிஷ்டை செய்து, தேங்காயை பூலோகத்திற்கு கொண்டுவந்தார்.தேங்காய் உடைப்பது பற்றி முக்கியமான செய்தி, நாம் எந்த பெரிய வேலையை ஆரம்பித்தாலும், அதில் எந்த விக்னமும் ஏற்படாமல் இருக்க, விநாயகருக்கு சிதறு தேங்காய் போடுவது, பழங்காலத்திலிருந்தே வழக்கமாக இருக்கிறது. இந்த தேங்காய் நிறைய துண்டுகளாக உடையவேண்டும். அதனை குழந்தைகள் வந்து அள்ளிச் செல்வது வெகுசிறப்பு.

மகான்களைப் பற்றி விளக்கம் தருவீர்களா?-மோகனா, மதுரை.

Advertisment

மகான்கள் என்ற சொல்லுக்கு பலவித பொருள் உள்ளது. பிரம்மரிஷி, சப்தரிஷி, தேவரிஷி, யோகிகள், சாதுக்கள், குரு, சன்யாசி, பண்டிதர், அருட் தொண்டர் மற்றும் உன்னத மனிதர் என இவ்வித அர்த்தம் உள்ளது.எனினும் ரிஷிகள் என்னும்போது, அது நாரத மகரிஷி, அகஸ்திய மகரிஷி போன்ற தெய்வீக தன்மைகளைக் குறிப்பிடுகிறது.காஞ்சிப் பெரியவர், ஸ்ரீ ரமணர், சீரடி சாய்பாபா, இராகவேந்திரர் என இன்னும் பலர் மனித உருவில் பிறந்து, இந்த உலகமக்களின் வாழ்வு மேன்மையடையவும், இறைவனின் பாதங்களை பற்றிடவும் மிக தொண்டுபுரிந்தனர். இவர்கள் தாங்கள் தெய்வப் பிறவிதான் எனத் தெரிந்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஏதும் அறியாதவர்போல் இருந்து, மக்களை ஆபத்து காலத்தில் காத்து ரட்சித்தனர். இன்னும் சிலர் பரதேசிகளாகவும், பிச்சைக்காரர்கள் போலும் காட்சியளித்து வாழ்ந்துள்ளனர். ஆரம்பத்தில் இவர்களை கல்லால் அடித்து துரத்திய மக்கள், பின் அவர்கள் பெருமை உணர்ந்து, அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற வெகு முயன்றனர்.சில சித்தர்கள், மனிதர்களின் பார்வைக்கு படாமல், காடுகளிலும் குகைகளிலும் வாழ்கிறார்கள்.இன்றும் திருவண்ணாமலையில், நிறைய சித்தர்கள் நடமாடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.இவ்வித மகான்கள் என்னும் சித்தர்களிடம் நாம் வேண்டும் கோரிக்கை, உடனடியாக நிறைவேறும். நம் வாழ்வில் யாராவது ஒரு மகானை நாம் உறுதியாக பற்றிக்கொள்வது, நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும், அவர்கள் பாதுகாத்து ரட்சிப்பர் எனும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.வெளிநாட்டவர்கள், நமது பாரத தேசத்தை நாடி, ஓடிவருவதற்கு இந்த மகான்களும் ஒரு காரணம் என்பது உண்மைதான். 

பில்லி, சூன்யம் என்பது கற்பனையா? உண்மையா?-கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

இந்த பில்லி, சூன்ய கேள்விக்கு சுந்தர காண்டத்தில், ஒரு பதில் உள்ளது. ஸ்ரீ ஆஞ்சனேயர் சீதா பிராட்டியாரை தேடி, கடல்மேல் பறந்து கடந்துகொண்டு இருந்தார். அப்போது, ஓரிடத்தில் அவரால் நகர முடியவில்லை. அவர் நிழலை யாரோ பிடித்து இழுப்பதுபோல் இருந்தது. அவர் கூர்ந்து பார்க்கும்போது, ஒரு ராட்சசி அவரை மேற்கொண்டு நகரவிடாமல், பற்றி இழுப்பதை உணர்ந்தார். அவளிடம், தாம் சீதா பிராட்டியாரை தேடப் போவதாகவும், திரும்பி வரும்போது, அவளிடம் பேசுவதாகவும், மிக விநயமாகக் கூறினார். ஆனால் அவளோ, இக்கணமே அவரைஉட்கொள்ளப் போவதாகக் கூறி, பெரும் உருவமாக எழுந்து நின்றாள்.அவள் தனது உருவத்தை பெரிதாக பெருக்க, பெருக்க, ஆஞ்சனேயரும் அதற்கேற்றாற்போல், உருவத்தை பெரிதாக்கினார். அவள், "என் வாயில் உட்புகுந்து செல்' என கர்ஜிக்க ஆஞ்சனேயர், தனது உருவத்தை சிறியதாக்கி, சட்டென்று அவள் வாயில் புகுந்து, அவள் தொண்டையை கிழித்துக்கொண்டு வெளிவந்தார். அந்த ராட்சசி, அலறிக்கொண்டு உயிரைவிட்டாள்.இதுபோல் காஞ்சி பெரியவரிடம் ஒரு பையன், நிறைய சாப்பிடுவதாகவும், தமக்கு கட்டுபடியாகவில்லை என்றும் ஒரு தாயார் முறையிட, பெரியவரும் அவர்கள் ஊரிலுள்ள காளிக்கு நிறைய படையலிட்டு, வணங்குமாறு கூறினார். அந்த அம்மாவும் அவ்வாறு நிறைவேற்ற, அந்த பையன் சாதாரண நிலைமைக்கு திரும்பிவிட்டான்.கந்தசஷ்டி கவசத்திலும், "பில்லி, சூன்யம் பெரும் பகையகல' என்று வருகிறது.

om010925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe