மணி, மந்திரம், ஔடதம் என்கிறார்களே அதன் பொருள் என்ன? -கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.
சரீர ரட்சைக்கு மூன்று வழி சொல்வார்கள். மணி, மந்திர, ஔடதம் என்பர். ஔடதம், ஔஷதம் இரண்டும் ஒன்றுதான்.
மணி: நவகிரகங்களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவரத்தினத்துக்கு விசேஷமானது. வியாதி என்பது கர்மாவால் ஏற்படுகிறது என்றாலும், அந்த கர்மாவானது, ஒவ்வொரு கிரக கோளாறாக ரூபம் எடுத்து உண்டாகிறது. எனவே, அதற்கு சாந்தியாக அந்தந்த கிரகத்துக்குரியதை, மோதிரமாக, மாலையாக செய்து போட்டுக்கொள்வது, அந்த மணியால், பூஜை, அபிஷேகம் செய்து, தீர்த்தத்தை பருகுவது என இதெல்லாம் ஒரு வழியாகும். இதனையே மணி, மந்திர, ஔஷதத்தில் வரும் "மணி' என்பதன் பொருளாகும்.
அகஸ்தியர், ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு அருளிய "ஆதித்ய ஹ்ருதயம்' மிக பிரபலமான மந்திரமாகும்.
விஷக்கடிகளுக்கு மூலிகை, செந்தூரம் கொடுத்தாளும், மந்திர ஜெபமே முக்கியமானது.
கருடபகவான் மந்திரம், ஸர்ப்ப விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்டது. நாராயண பட்டத்திரியின், "நாராய ணீயம் வயிற்று உபாதைக்காக பாடப் பட்டாலும் சகல வியாதிகளும் தீரு வதற்குரிய பாராயணமாக உள்ளது.
கூன் பாண்டியனின் நோய் நீங்குவதற்குக்காக பாடப்பட்ட, திருநீற்று பதிகம். இதனை பல ஆவிருத்தி செய்து, திருநீறு பூசினால், வியாதி குணமாகும். இதனை சம்பந்த மூர்த்தி சுவாமிகள் இயற்றினார்.
திருச்செந்தூர், பன்னீர் இலை விபூதியை முழுங்கினாலும் சரி, அணிந்து கொண்டாலும், ஏன் பார்த்தாலே, எல்லா வியாதியும் ஓடி விடுமாம்.
பழனி ஆண்டவரின் தீர்த்தமானது, சுவாமியின்மீது பட்டுவருவதால், அதற்கு வியாதியை தீர்க்கும் வல்லமை உண்டு.
குருவாயூர் தைலம், திருச்சூர் நெய், கோவில்களில் மலையேறி வருவது, வில்வம், துளசி, வேப்பிலை என மூன்றையும் தினமும் சாப்பிடுவது, அரசும், வேம்பும் சேர்ந்த மரத்தைச் சுற்றுவது, பூஜையில் தூபம், தீபம் காட்டுவது என இவையனைத்தும் வியாதியை குணமாக்கும் வழிகள் ஆகும்.
ஔஷதம்: ஓளஷதி என்றால் மூலிகை என்று அர்த்தம். அதன் அடிப்படையில் பிறந்ததுதான் ஔஷதம் ஆகும்.
மூலிகை, பச்சிலை கள் கொண்டே மருந்துகளை செய்வது ஆயுர்வேதம் மற்றும் சித்த வைத்தியம் ஆகும். சிலசமயம் பவள பஸ்

மூலிகை, பச்சிலை கள் கொண்டே மருந்துகளை செய்வது ஆயுர்வேதம் மற்றும் சித்த வைத்தியம் ஆகும். சிலசமயம் பவள பஸ்பம், முத்து பஸ்பம் என்று உடன் சேர்ப்பர். சித்த வைத்தியத்தில் மணி, லோஹம், பாக்ஷாணம், தாதுப் பொருட்கள் இவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கிறார்கள்.
இதனுடைய சக்தி அதிகம். அதனால் கொடுத்த அளவுப்படி சாப்பிட வேண்டும். அகஸ்தியர், தேரையர் போன்ற சித்த புருஷர்கள் நமக்கு புரியாத பாஷையில் சித்த வைத்திய சாஸ்திரங்களை கொடுத்து உள்ளனர். ஏனெனில் இதற்கு பவர் அதிகமிருப்பதால் ஜாக்கிரதை உணர்வு காரணமாக, பரிபாஷை எழுதியுள்ளனர்.
இதையே மணி- மந்திர- ஔஷதம் என்பர்.
தீட்சை என்பது என்ன?-சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
குருவானவர் தமது சிஷ்யனுக்கு சொல்கிற உபதேசம். இதுவே தீட்சை எனப்படுகிறது. குருவிடமிருந்து, எது புறப்பட்டுப்போய், சிஷ்யனுக்குள் புகுந்து அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாக தூண்டி செலுத்துகிறதோ, அதற்கு தீகை அல்லது தீட்சை என்று பெயர்.தானே ஒரு வித்தையை கற்பது, மந்திரத்தை எடுத்துக்கொள்வது, புண்ணிய கர்மாவை பண்ணுவது எல்லாம் சாஸ்திரத்தில் விலக்கப்பட்டு, குரு மூலமாக தீட்சை பெற்று இவற்றை செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.தீட்சையை மூன்றுவிதமாக சொல்வார்கள்ஸ்பரிச தீட்சை: குக்குட தீட்சை என்பர். கோழி தீதீட்சை என்பர். கோழியானது தனது முட்டைகளின்மேல் உட்கார்ந்து அதன்மேல் தனது ஸ்பரிசம் நன்றாக படும்படி அடைகாத்து குஞ்சு பொரிக்கிறது. குரு- சிஷ்யனை தொட்டு, அவனின் அறியாமை ஓட்டை பிளக்கப் பண்ணுவது குக்குட தீட்சை ஆகும். காமாட்சியம்மன் ஸ்பரிசமான, தனது பாதங்களை பக்தர்கள், தலையில் வைத்து குக்குட தீட்சை தருகிறாள்.
நயன தீட்சை: இது மத்யஸ்த தீட்சை அல்லது மீன் தீட்சை எனப்படும். மீன் நீருக்குள் முட்டைகளை இட்டுவிடும். மீனும், முட்டைகளும் நதி பிரவாகத்தில் நகர்ந்து கொண்டேயிருக்கும். தாய் மீன், தன் முட்டைகளைக் கண்ணால் தீட்சயண்மாக பார்க்கும். உடனே முட்டையை உடைத்துக்கொண்டு. மீன் குஞ்சுகள் வெளிவந்துவிடும். இதனை மீனாட்சியம்மன் தன் பார்வையாலேயே, பக்தர்களை பார்க்கிறார். இதனால் இது நயன தீட்சை எனப்படுகிறது.
கமட தீட்சை: மானஸ அல்லது ஆமை தீட்சை, இது தாய் ஆமை கரைக்கு வந்து, முட்டையிட்டு விட்டு, கடலுக்குள் போய் விடும். தாய் ஆமை ஒரு பக்கமாகவும் முட்டைகள் ஒரு புறமாகவும் எங்கேயோ போயிருக்கும். எனினும். தாய் ஆமை தன் முட்டைகள் நல்லபடியாக பொரிய வேண்டுமே எனும் சிந்தனையாகவே இருக்குமாம். அந்த தீவிர சிந்தனையின் சக்தி, இங்குள்ள முட்டைகள் பொரிந்து குஞ்சாக வந்துவிடுமாம். இது மானஸ அல்லது கமட தீட்சை ஆகும். காசி விசாலட்சி அம்மன், பக்தர்களை அனுக்கிரக சிந்தையோடு, மனதால் நினைத்தே ஞானம் அளித்துவிடும் கமட தீட்சை குருவாக உள்ளார்.
உங்களுக்கு அஞ்ஞானம் தீர்ந்து, மெய்ஞானம் ஏற்பட வேண்டுமென்றால், ஒரு குருமூலம் நீங்கள் தீட்சை பெறுவது அவசியம். இது தெய்வ அநுக்கிரகத்தால், அதுவாக நடக்க வேண்டியது. நீங்கள் அதனை நோக்கி, நகர்ந்தால், ஒரு குரு உங்களை நோக்கி வருவார்.
ஈசன் வீற்றிருக்கும் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒரு அகல் விளக்கேற்றக் கூட ஆள் இன்றி உள்ளதே? -மீரா, மயிலாடுதுறை.
நீங்கள் கூறுவது உண்மைதான். நிறைய பாடல் பெற்ற கோவில்கள் ஆள் அரவமின்றி உள்ளது.
சில பெரியவர்கள் கூறுவார்கள். மனிதர்களின் வாழ்வு சில வருடங்கள் இருட்டில் மறைவதுபோல், சில கோவில்களும் இவ்விதம் வெளிச்சம் இல்லாமல் ஆகிவிடும் என்பர். ஆனால் இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்று எனக்கு புரியவில்லை.எது எப்படி இருப்பினும், இம்மாதிரி கோவிலில் விளக்கு ஏற்றினால் அதன் பலன் பன் மடங்காக திரும்பக் கிடைக்கும் என்பது மட்டும் உண்மை. எனவே உங்கள் ஊரில், எந்தக் கோவிலாவது, ஆள் அரவமின்றி இருந்தால், நீங்களே சென்று, சுத்தப்படுத்தி, விளக்கேற்றுங்கள். உங்களைப் பின்பற்றி, நிறைய ஆட்கள் வருவார்கள். அந்த புண்ணியம் உங்களை சேரட்டுமே!
நமது ஓவியர்கள் தெய்வங்களை பாம்பணையில் படுக்க வைப்பது ஏன்?-ராஜாராம், திருவேற்காடு.
நீங்கள் ஸ்ரீரெங்கப் பெருமாளை கவனித்ததால் அவர் பாம்பணையில் சயனம் செய்துகொண்டிருக்கிறார் என்று புரிகிறது. நிறைய தெய்வங்கள் கருவறையில் தனது துணையோடும்தான் இருக்கிறார்கள்.இந்த கருவறை தெய்வங்களை ஓவியர்கள் வரையும்போது, கோவில் நிர்வாகிகள், அவர்களுக்கு சகலவசதியும் செய்துகொடுத்து, உதவி இருக்கிறார்கள். தெய்வங்களின் உருவங்கள், எந்தக் கோவிலில், எவ்விதம் இருக்கிறதோ, அவ்விதமே வரைகிறார்கள்.கருவறையை போட்டோ எடுக்கக்கூடாது எனும் விதி உள்ளது. யாருக்கு எந்த தெய்வம் இஷ்டமாக உள்ளதோ, அந்த தெய்வத்தின் திருவுருவ படம் நம் பூஜை வழிபாட்டில் இடம்பெறுவது அத்தனை பெரிய கொடுப்பினை. இது ஓவியர்களின் கற்பனை கிடையாது.
இறைவனிடம் பக்தி செலுத்தினால் போதாதா மந்திரங்களும் உச்சரிக்க வேண்டுமா?-ராஜேஸ்வரி, தஞ்சாவூர்.
எல்லா மக்களுக்கும் தெய்வ சிந்தனை இருக்கத்தான் வேண்டும். மனுஷ ஜீவன் அந்த பெயருக்கு லாயக்காக இருக்கவேண்டுமெனில், அந்த ஜீவ சக்தியை கொடுத்த, தெய்வத்தின் அருளைபெற முயல வேண்டும். நாம் தெய்வம் சார்ந்த பூஜை செய்யும்போது, நமது சிந்தனை ஓரிடத்தில் நிற்காமல், தாறுமாறாக ஓடுகிறது. முதலில் சுவாமியை பற்றி, நமக்கு சொந்த அனுபவமாக ஒன்றும் தெரியாது. நமக்கு தெரியாததைப் பற்றி, நாம் என்ன சிந்திக்க முடியும்.தெய்வத்தைப் பற்றி தெரிந்துகொண்ட பெரியவர்கள், தெய்வம் குறித்து பாடிய ஸ்தோத்திரங்கள், நமக்கு கைகொடுத்து தூக்கிவிட ஓடிவருகின்றன. இதனை பலகாலம், பல மனிதர்கள் கூறி, கூறி, அதற்கான ஒரு மந்திர சக்தி கூடிக்கொண்டே வந்திருக்கும். இதனை ஸ்தோத்திர பாராயணம் என்று கூறுகிறோம். இந்தமாதிரி துதிகளை, குரு முகமாக இல்லாமல், தாங்களே படித்து பாராயணம் பண்ணலாம்.முதலில் பிள்ளையார் பற்றி ஒரு ஸ்லோகமாவது கூறவேண்டும். பின் எந்த மஹானை குருவாக நினைக்கிறோமோ அவரை குறித்து ஒரு ஸ்லோகம் சொல்லிவிட்டு, பின் மற்ற ஸ்லோகங்களை சொல்லலாம்.
குருவை குறித்து,
"குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஸ்வர
குருஸ் ஸாக்ஷாத் பரப்ரம்ம
தஸ்மை ஸ்ரீ குருவே நம''
என்று குருவை நமஸ்கரித்துவிட்டு பின் தெரிந்த ஸ்லோகங்களை கூறலாம்.
அஷ்டோத்தர நாமாவளிகளை தாங்களாகவே படித்து தெரிந்து கொண்டு அர்ச்சனை பண்ணலாம். இதில் பீஜாட்சரங்கள் எனும் மந்திர சாஸ்திர அட்சரம் இருந்தால், அதனை குருமூலம் கற்றுக்கொண்டு கூறவேண்டும்.
இந்த கலிகாலத்தில் நாம பாராயணமும், பஜனையும் சிறப்பு ஆகும்.
"ப்ரணவும்' "நம'வும் சேர்க்காமல்
சிவ, ராம, நாரயண, கோவிந்த
நாமாவை எவரும் ஜபிக்கலாம்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது. லலிதா சகஸ்ரநாமம், லலிதா த்ரிசதி, திருமுருகாற்றுப்படை, எனும் வீர்யமான மந்திர சக்தி பொருந்திய மந்திரங்களை குருவிடம் கற்றுக்கொண்டு, பின்பு பாராயணம் பண்ணவேண்டும்.
இறைவனிடம் பக்தி செலுத்தும்போது நம் மனம் சிந்தனை ஒரு முகப்படவும், தெய்வீக சக்தி நிரம்பிய ஸ்தோத்திரங்களை பாராயணம் பண்ணும்போது, நமது ப்ராத்தனைகள் பலிக்கவும், மந்திர ஸ்துதிகளைக் கூறவேண்டும்.
திருமூலர் திருமந்திரம்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே!
இறை மந்திரங்களை அர்த்தம் தெரியாமல் படிக்கலாமா?-ரேவதி, இராயபுரம்.
மந்திரங்களுக்கு அர்த்தம் ஈஸ்வரனுக்குத்தான் தெரியும். அர்த்தம் தெரியாமல் மந்திரங்களை உச்சரித்தால் என்ன பயனென்று கேட்கக்கூடாது.
இதற்கு உதாரணமாக, ஒரு கலெக்டர் ஆபிஸில் மனு கொடுக்க, ஒரு எழுத படிக்கத் தெரியாத ஒருத்தர் வருகிறார்.
அங்குள்ள ஒருவரிடம் எழுதி வாங்கி, அதனை கலெக்டரிடம் கொடுக்கிறார். கலெக்டரும், அடடா, பாவம், ஒன்றும் தெரியாமல், நம்பிக்கை மாத்திரம் வைத்துக்கொண்டு மனு கொடுக்கிறார். இவருக்கு கண்டிப்பாக ஏதாவது நல்லது பண்ணவேண்டும் என்று முடிவெடுக்கிறார்.
இதுபோல அர்த்தம் தெரிந்து மந்திரம் சொன்னால் நல்லதுதான். ஆனால், பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அதற்கு நிச்சயமாக பலனுண்டு என்ற நம்பிக்கையில், அர்த்தம் தெரியாமல் மந்திரம் சொன்னாலும், ஈஸ்வர கிருபையால், நல்ல பலன்களே கிடைக்கும்.
இறைவனே கதி என்று சரணடைந்தபிறகு நாள், கிழமை, கிரகப் பெயர்ச்சி பார்க்க வேண்டுமா?-சுரேஷ், சென்னை.
கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். காஞ்சி மகாமுனிவர், ஸ்ரீ பெரியவர்கள் எந்த வித, பெரிய துன்பம், இயற்கை சீற்றம் வந்தாலும், உடனே கோளறு பதிகம் பாடும்படி ஆணையிடுவார்கள். கோளறு பதிகம் முழுவதும், ஈசனைப் பற்றிய பாடல்கள் இருக்கும். அதில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி "பாம்பிரண்டுமுடனே நல்ல நல்ல, அவை நல்ல நல்ல அடியார் அவருக்கு மிகவே'' என்று வரும்.
எனவே ஈசனை வழிபடும்போது, நவகிரகங்களையும், மனதில் இருத்தி வணங்குவது நமது ஆதிகால சம்பிரதாயம்.மேலும் கிரகங்களின் கதிக்கு இறைவனே கட்டுப்பட்டவர் என்றும் கிரகங்களின் செயலை அவர் தடுக்கமாட்டார். ஆனால் காத்து ரட்சிப்பார் என்பதும் உண்மை.