யோகம், தியானம் செய்வதால் மனிதன் நீண்டநாட்கள் வாழமுடியுமா? அதன் சிறப்பம்சம் என்ன?-கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.
யோகம் என்றால் சுவாசத்தை அடக்கி, அடக்கியே சிலை மாதிரி உட்கார்ந்திருப்பது என்று பொதுவாக நினைக்கிறார்கள். யோகம் என்பதற்கு நேர் அர்த்தம் சேர்க்கை என்பது. நமது தினப்படி வாழ்வில் பலவித வஸ்துக்களோடு சேரவேண்டி இருக்கிறது. எனினும் இந்த சேர்க்கை நிரந்தரமில்லை. அப்படியில்லாமல், முடிந்த முடிவான ஒரே வஸ்துவோடு சேர்ந்துவிட்டோம். பின் அதிலிருந்து பிரிந்து வரவே முடியாது என்று ஆக்கி கொண்டுவிட்டால், அதுதான் நிஜமான யோகமாகும். நம் மனசின்மூலமாக இருக்கும் பரமாத்மாதான் அந்த ஒன்று ஆகும். மனதை, மூலத்தில், அந்த தெய்வத்தின் புறம் திருப்புவதற்காகவே யோகிகள் சுவாசத்தை அடக்குகிறார்கள். ஏனென்றால் எண்ணம் உதிக்கின்ற வேர் எதுவோ, அதுவேதான் சுவாசத்தின் வேரும் ஆகும். எனவே சுவாசம் மூலத்தில் நின்றால், மனமும் அதன் மூலத்துக்குப் போய் அடங்கிவிடுகிறது.யாகம் செய்வது, விரதமிருப்பது, கோவில் கோபுரங்கள் கட்டுவதில் முனைப்பு, முயற்சியும் காட்டுவது, என இவையெல்லாமே சித்த சுத்திக்கு நல்ல வழியாகும். இதையெல்லாம் முடித்துவிட்டு பின் சுவாச பந்தம் பற்றி முயற்சிக்கலாம்."வியோகம்' என்பதற்கு விட்டுப்போவது என்று அர்த்தம். ஒரு தினுசான வியோகம் வந்துவிட்டால், அதுவே யோகம் ஆகிவிடும் என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.ஆக, யோகம் என்பது எதைப் பற்றியும் சிந்திக்காமல், இறைவனைப் பரப்பிரம்மத்தைப் பற்றியே, அதை ஒன்றை மட்டுமே யோசிப்பது யோகம் ஆகும்.தியானம் என்பதும், மனதை ஒரு முகப்படுத்தி, நிலைப்படுத்துவதே ஆகும். சாதாரண மனிதர்கள் தியானம் செய்வர்.சித்தர்கள், யோகிகள், யோகம் செய்வர். இவை இரண்டும் நீண்ட நாள் வாழும் திடத்தைத் தரும்.
சாஸ்திரங்கள் பொய்யானால் கிரகணத்தைப் பார் என ஒரு சொலவடை உள்ளதே அதன்பொருள் என்ன?-கே.

சாஸ்திரங்கள் பொய்யானால் கிரகணத்தைப் பார் என ஒரு சொலவடை உள்ளதே அதன்பொருள் என்ன?-கே. எல். பகவதி, சென்னை- 91.
ஒருவர் சாஸ்திரங்கள், பஞ்சாங்கம், ஜோதிடம் என இவை எல்லாமே பொய், ஏமாற்று வேலை என்று கூறலாம். ஆனால் பஞ்சாங்களில் கிரகண காலம் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். அதுவும் இன்ன நேரத்தில் இருந்து, இன்ன நேரம்வரை ஆரம்பித்து, முடியும் என்றும் கூறியிருப்பார்கள். சில கிரகணம் இந்தியாவில் தெரியும். சில கிரகணம் வெளிநாட்டில் தெரியும் என்றும் துல்லியமாக கணித்து கூறியிருப்பார்கள். அதன்படி உலகின் எல்லா பகுதியிலும் கிரகணம் நடந்துகொண்டுதானே வருகிறது. இதன்மூலம் சாஸ்திரங்கள் பொய் எனக் கூறுபவர்களும் கிரகணத்தை ஒத்துக்கொள்ளத்தானே செய்கிறார்கள். சாஸ்திரங்கள் நூறு சதவிகிதம் மெய்தான் என கிரகணங்கள் நிரூபித்துக்கொண்டு உள்ளது.
பெண்களுக்குரிய பொறுப்புகள் கூடுதலாக உள்ளதா?-எஸ்.ஆர். ஹரிஹரன், சென்னை.
இதிலென்ன சந்தேகம்- தற்போதைய சூழ்நிலையில், பெண்கள் வீட்டிலும் வேலை பார்க்கிறார்கள். அலுவலகத்திலும் வேலை பார்க்கிறார்கள். பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்கிற பெயரில், அவர்கள் தோளில் கூடுதல் சுமை, சுமக்க முடியாத பளுவை ஏற்றி வைத்து விட்டார்கள்.வேலை செய்யும் பெண்கள் என்று, பிள்ளை பெறாமல் இருக்க முடியுமா? வீட்டு விலக்கு வராமல் இருக்குமா? இயற்கை நியதிப்படி அதனையும் சமாளிக்கத்தான் செய்கிறார்கள்.சில வீடுகளில், பணம் சம்பாதிப்பதால் திமிர் வந்துவிடக்கூடாது என சில கணவர் வீட்டார்கள் சம்பாதிக்கும் பெண்களை பாடாய்படுத்துகிறார்கள்.பெண்களின் கூடுதல் பொறுப்புகளை நினைத்து, ஒருபுறம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் மறுபுறம் சற்று சங்கடமாகவும் உள்ளது. கூடிய மட்டும் பெண்களின் கூடுதல் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள முயலுங்கள்.
திருவிழாக்கள் பண்டைய காலத்தில் எப்போது ஆரம்பம் ஆனது?-கவிதா, ஆற்காடு
இராமாயாண காலத்தில், தசரத மன்னருக்கு புதல்வர்கள் பிறந்த போது அது பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.அதுபோல், இலங்கையிலிருந்து, இராமர், சீதா பிராட்டி யாருடன் வந்து, இராமர் சீதா பட்டாபிஷேகமும், விழாவாகக் கொண்டாடப்பட்டது. மக்கள், நகரை அலங்கரித்தும், புது வண்ண பட்டாடை உடுத்தியும், இசைத்தும், மோதங்களை சுமந்தும், இராமருடன் சென்று விழா கொண்டாடினார்கள்.ஆக, புராண காலத்தில் இருந்தே விழா எடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.
நன்மையும், தீமையும் நம் கையில்தான் உள்ளதா?சுரேஷ், திருச்சி
நன்றும், தீதும் பிறர் தர வாரா என்றே கூறப்பட்டுள்ளது. எந்த வினையும், எதிர் வினையாற்றும் என்பர். இது பௌதீக விதி மட்டுமல்ல; வாழ்க்கை விதியும் கூட.எனவே மனிதர்கள் செய் யும் நன்மைகள் சில மடங்காக எவ்விதத்திலா வது திருப்பிக் கிடைத்துவிடும். மனிதர்கள் செய்யும் தீமை கள், நூறு மடங்கு திருப்பிவரும்.எனவே நன்மையும், தீமையும் நம் கையில் உள்ளது.
நித்ய பூஜையில் கவனிக்க வேண்டியது என்ன? -ரேவதி, திருத்தணி
நித்ய பூஜை விஷயத்தில், கண்டிப்பாக குளிக்கவேண்டும். பெண்களுக்கு மட்டும் விதி தளர்வாக, கழுத்து மட்டும் குளிக்க சலுகை உள்ளது.பூஜையறையை சுத்தமாக்க வேண்டும். பழைய பூக்களை எடுத்துவிட வேண்டும். அந்த காய்ந்த பூக்களை, கூடியமட்டும் செடி மரங்கள் அடியில் போடுவது உத்தமம்.எவர் சில்வர் விளக்கு ஏற்றக்கூடாது. தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் விளக்கு தேய்க்க வேண்டாம். ஈரத்துணியுடன் பூஜை பண்ணக்கூடாது. பூஜையறையில் இறந்தவர்கள் படம் கூடாது. காலை- மாலை விளக்கேற்ற வேண்டும். பூஜையில், உங்களுக்கு தெரிந்த ஸ்லோகம் கூறி வணங்குகள். சுவாமிக்கு, சிலர் சுத்தமாக தயாரித்த அன்னத்தை நைவேத்தியம் செய்வர். பழம், கல்கண்டு, உலர் திராட்சை, உலர் பழங்கள், உலர் பருப்புகள் இவற்றை ஏதேனும் நைவேத்தியமாக வைக்கவும்.காலை- மாலை இருவேளையும் விளக்கேற்றி வணங்குவது உத்தமம்.நித்ய பூஜை என்பது, உங்களின் வசதி, நேரத்திற்கேற்ப எளிமையான முறையிலாவது செய்துவிடுங்கள். அசைவம் சாப்பிட்டுவிட்டு, பூஜை செய்தால் பாவம் ஏற்படும். எதிர் விளைவுகள் உண்டாகும்; கவனம் தேவை.அன்றைய காலங்களில், தீபங்களை
நெய்யினால் ஏற்றினார்களா?-ஜெயந்தி, இராயபுரம்
வீடுகளில் நெய் தயாரிப்பது என்பது, அன்றைய காலங்களில் வழக்கமான நிகழ்வாக இருந்தது. அனேக வீடுகளில் மாடுகள் வளர்ப்பார்கள். அதனால் நெய் தீபம் ஏற்றுவது இயல்பான விஷயமாக இருந்துள்ளது.பழங்கால நிகழ்வுகளில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது என ஏந்த விஷயமும் காணக் கிடைக்கவில்லை.
பஞ்சாயதன பூஜை என்ற பெயரில் பூஜை இருந்ததா? விளக்கம் தருவீர்களா?-தமிழ்செல்வி, செங்கல்பட்டு
பஞ்சாயதன பூஜை என்ற பெயரில் பூஜை உள்ளது. ஈஸ்வரன், அம்பாள். விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் முர்த்தி வைத்து பூஜை செய்யவேண்டும். இதற்கு பஞ்சாயதன பூஜை என்று பெயர். அங்கங்கங்களோடு விக்ரங்களாக இல்லாமல், இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும். ஐந்து வஸ்துக்களில், ஆவாஹானம் செய்து பூஜைசெய்வது ஒரு மரபு ஆகும்.ஈஸ்வரனுக்குரிய பாணலிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிரகம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்கு பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்குரிய சோணபத்ரக் கல் கங்கையிலே கலக்கிற சோணா நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால், இந்த தேசம் முழுவதையும் ஒன்றுசேர்த்து வைத்தது போலிருக்கும்.இந்த ஐந்து மூர்த்திகளுக்கு செய்வது, பஞ்சாயதன பூஜை எனப்படும்.
அரணைக் கயிறு கட்டும் பழக்கம் இன்றும் உள்ளதா?-முருகன், மதுரை
இப்போதும் பிறந்த குழந்தைகளுக்கு அரணைக் கயிறு என்று அருணாக்கயிறு என்ற கருப்பு நிற இடுப்புக்கயிறு வழக்கம் உள்ளது. இதனை முக்கியமக திருஷ்டிக்காகத்தான் கட்டுவார்கள். எனினும் அடிவயிற்றில் நரம்புகள் மற்றும் ரத்தக்குழாய்கள் மெலிதாக, தோலுக்கு மிக அருகில் செல்கிறது. இந்த இடமான இடுப்பில் அரைஞான் கயிறு கட்டும்போது, மேல் வயிற்றிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும். மேலும் காத்து, கருப்பு அண்டாமல் இருக்கும் என்றும் நம்பினார்கள். வெள்ளி அரைஞான் கயிறு, குழந்தை பிறந்தவுடன் சீதனமாக கொடுப்பார்கள். எனினும் குழந்தைகளும், ஆண்களும் கருப்பு நிற அரை ஞாண் கயிறு அணிவது திருஷ்டி மற்றும் இடுப்பு பகுதி உறுப்புகளுக்கு நல்லது ஆகும். ஆக, இதுவரையில் அரைஞான் கயிறு கட்டாதவர்கள், மூடநம்பிக்கை என்று தள்ளாமல், இப்போது கட்ட ஆரம்பியுங்கள்.
ஆசைப்படுவதும் குற்றமா?-அஞ்சலி, திருச்சி
ஆசை என்பது நெருப்பு மாதிரி. நெருப்பில் எவ்வளவு பொருட்கள் போட்டாலும், அத்தனையையும் கபளீகரம் பண்ணிவிட்டு, பஸ்பமாக ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். வாழ்வை எத்தனைக்கு எத்தனை எளிமையாக வாழ்கிறோமோ, அத்தனைக்கத்தனை ஆத்ம லாபம் ஆகும்.அடிப்படைத் தேவைகள் கிடைத்தாலே திருப்தியாக இருக்கவேண்டும். ஆசைக்குமேல் ஆசை, தேவைக்குமேல் தேவை என்று ஆலாய் பறக்கவேண்டாம் இருப்பதைக்கொண்டு நிறைவாக வாழக் கற்று கொள்ளவேண்டும். எனவே ஆசைப்படுவதும் குற்றம்தான்.
அபசகுணமாக பேசுவது பாவம்தானே?-மீரா, ஆரணி
ஆம், நாம் எப்போதும் நேர்மறையான சொற்களைத்தான் பேச வேண்டும். எதிர்மறை சொற்கள். அது அபசகுணமாக பேசுவது என்போம். அதனைத் தவிர்ப்பது உத்தமம்.நம்மைச் சுற்றி தேவதைகள் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் "ததாஸ்து' எனக் கூறிக்கொண்டே இருப்பார்கள். "ததாஸ்து' என்பதற்கு அப்படியே ஆகட்டும் என்று பொருள்.யோசியுங்கள், நீங்கள் அபசகுணமாக பேசி கொண்டிருக்கும்போது, அப்போது அங்கே க்ராஸ் ஆகிகொண்டிருக்கும் தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்றி கூறிவிட்டால், அதுபோலவே பலித்துவிடும். அப்புறம் உங்கள் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துக்கொள்ளுங்கள். எனவே அபசகுணமாக பேசுவது உங்களுக்குத்தான் பாவம் பிடிக்கும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us