மேஷம்
மேஷ ராசி நாதன் செவ்வாய் 7-ல் நின்று ராசியை பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது சிறப்பு. 11-ல் சனி வக்ரகதியில் செயல்பட்டாலும் குரு பார்வை 11-ஆமிடத்திற்கு முதல் வாரம் வரை கிடைக்கிறது. காரிய அனுகூலம் உண்டு. 8-ஆம் தேதிமுதல் குரு அதிசாரப் பெயர்ச்சியாக 4-ஆமிடத்துக்கு மாறுகிறார். 4-ஆமிடம் கடகம் குருவுக்கு உச்ச வீடு. அங்கு உச்சம் பெறும் குரு தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைத் தருவார். தாயார் நலனிலும் தெளிவு பிறக்கும். சிலர் குடியிருப்புவகையில் முக்கிய நிகழ்வுகளை சந்திக்கும். அது நன்மை தரும் விதமாக அமையும். வீட்டு வேலைகளை ஏதும் தடைபட்டு இருந்தால் அந்த வேலையை மீண்டும் தொடங்கும் சூழ்நிலைகள் ஏற்படும். 4-ல் உச்சம் பெறும் குரு 8-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிடத்தை பார்க்கிறார். மனதில் சிலநேரம் கவலைகள் ஆட்கொண்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் பிறக்கும் உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றத்தைத் தரும். வெளியூர் அல்லது வெளிமாநில வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு பலன் கிடைக்கும். தற்காலிகமாக வெளிநாடு சென்று திரும்பும் விதமான பயணங்களும் ஏற்படும். அதே சமயம் சுபவிரயங்களும் ஏற்படும். வியாழக்கிழமையன்னு நவகிரகத்தில் உள்ள குருபகவானுககு கொண்டக்கடலை மாலை சாற்றி வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ஆம் தேதி வரை சிம்ம ராசியில் 4-ஆமிடத்தில் சஞ்சரிக்கிறார். வீடு வாகன வகையில் சுபபலன்களை எதிர்பார்க்கலாம். 10-ஆம் தேதிமுதல் கன்னியில் நீச்சம் அடைந்தாலும் 2-ல் உள்ள குரு 8-ஆம் தேதிமுதல் 3-ஆமிடத்தில் உச்சம் பெறுகிறார். ராசிநாதன் நீச்சம் அடைவதற்கும் குரு 3-ல் உச்சம் பெறுவதற்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் வரலாம்! 5-ல் நீச்சம் பெறும் சுக்கிரனும் 3-ல் உச்சம் பெறும் குருவும் 11-ஆமிடத்தை பார்க்கிறார்களே! உத்தியோகத்தில் உயர்வு அல்லது புதிய உத்தியோக இடமாற்றம் காரிய அனுகூலம் போன்ற வகையில் நன்மைகளை அடையலாம். மேலும் சுக்கிரன் தன் சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் (பூரம்) நீச்ச தோஷம் பாதிக்காது. 3-ல் வரும் குரு அதிசாரப் பெயர்ச்சிதான் என்றாலும் உச்சம் பெறுவதால் தற்காலிக நற்பலனை வழங்கும் அதிகாரம் உண்டு. 3-ல் வரும் குரு 7, 9, 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்த ஆண்- பெண்களும் திருமண அமைப்பு கைகூடும். தந்தையால் நன்மையும் அனுகூலமும் உண்டாகும். 11-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மூத்த சகோதரர் உள்ளவர்களுக்கு அவர்கள் வழியில் சுபநிகழ்வுகளை எதிர்பார்க்கலாம். குரு வருளும் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். சென்னையை அடுத்து ஊத்துக்கோட்டை அருகில் சுருட்டப்பள்ளி சென்று தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் இம்மாதம் முழுவதும் 5-ஆமிடமான துலா ராசியில் சஞ்சாரம். 5-ஆமிடம் எண்ணம் திட்டம் செயல்பாடு மகிழ்ச்சி பிள்ளைகள் ஸ்தானத்தைக் குறிக்குமிடம் பிள்ளைகள்வகையில் நல்லவைகளை எதிர் பார்க்கலாம். 8-ஆம் தேதிமுதல் ஜென்ம குரு அதிசாரமாக 2-ஆமிடமான கடகத்தில் உச்சம் பெறுகிறார். 7-க்குடையவர். 2-ல் உச்சம் பெறுவ தால் குடும்பத்தை ஏற்படுத்தித் தருவார். அதாவது திருமண வாய்ப்புகள் கைகூடும். அதற்கான சுபக்கடன் வாங்
மேஷம்
மேஷ ராசி நாதன் செவ்வாய் 7-ல் நின்று ராசியை பார்க்கிறார். ராசிநாதன் ராசியைப் பார்ப்பது சிறப்பு. 11-ல் சனி வக்ரகதியில் செயல்பட்டாலும் குரு பார்வை 11-ஆமிடத்திற்கு முதல் வாரம் வரை கிடைக்கிறது. காரிய அனுகூலம் உண்டு. 8-ஆம் தேதிமுதல் குரு அதிசாரப் பெயர்ச்சியாக 4-ஆமிடத்துக்கு மாறுகிறார். 4-ஆமிடம் கடகம் குருவுக்கு உச்ச வீடு. அங்கு உச்சம் பெறும் குரு தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைத் தருவார். தாயார் நலனிலும் தெளிவு பிறக்கும். சிலர் குடியிருப்புவகையில் முக்கிய நிகழ்வுகளை சந்திக்கும். அது நன்மை தரும் விதமாக அமையும். வீட்டு வேலைகளை ஏதும் தடைபட்டு இருந்தால் அந்த வேலையை மீண்டும் தொடங்கும் சூழ்நிலைகள் ஏற்படும். 4-ல் உச்சம் பெறும் குரு 8-ஆமிடம், 10-ஆமிடம், 12-ஆமிடத்தை பார்க்கிறார். மனதில் சிலநேரம் கவலைகள் ஆட்கொண்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் பிறக்கும் உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றத்தைத் தரும். வெளியூர் அல்லது வெளிமாநில வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு பலன் கிடைக்கும். தற்காலிகமாக வெளிநாடு சென்று திரும்பும் விதமான பயணங்களும் ஏற்படும். அதே சமயம் சுபவிரயங்களும் ஏற்படும். வியாழக்கிழமையன்னு நவகிரகத்தில் உள்ள குருபகவானுககு கொண்டக்கடலை மாலை சாற்றி வழிபடவும்.
ரிஷபம்
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ஆம் தேதி வரை சிம்ம ராசியில் 4-ஆமிடத்தில் சஞ்சரிக்கிறார். வீடு வாகன வகையில் சுபபலன்களை எதிர்பார்க்கலாம். 10-ஆம் தேதிமுதல் கன்னியில் நீச்சம் அடைந்தாலும் 2-ல் உள்ள குரு 8-ஆம் தேதிமுதல் 3-ஆமிடத்தில் உச்சம் பெறுகிறார். ராசிநாதன் நீச்சம் அடைவதற்கும் குரு 3-ல் உச்சம் பெறுவதற்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகம் வரலாம்! 5-ல் நீச்சம் பெறும் சுக்கிரனும் 3-ல் உச்சம் பெறும் குருவும் 11-ஆமிடத்தை பார்க்கிறார்களே! உத்தியோகத்தில் உயர்வு அல்லது புதிய உத்தியோக இடமாற்றம் காரிய அனுகூலம் போன்ற வகையில் நன்மைகளை அடையலாம். மேலும் சுக்கிரன் தன் சுயசாரத்தில் சஞ்சரிப்பதால் (பூரம்) நீச்ச தோஷம் பாதிக்காது. 3-ல் வரும் குரு அதிசாரப் பெயர்ச்சிதான் என்றாலும் உச்சம் பெறுவதால் தற்காலிக நற்பலனை வழங்கும் அதிகாரம் உண்டு. 3-ல் வரும் குரு 7, 9, 11-ஆமிடங்களைப் பார்க்கிறார். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்த ஆண்- பெண்களும் திருமண அமைப்பு கைகூடும். தந்தையால் நன்மையும் அனுகூலமும் உண்டாகும். 11-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மூத்த சகோதரர் உள்ளவர்களுக்கு அவர்கள் வழியில் சுபநிகழ்வுகளை எதிர்பார்க்கலாம். குரு வருளும் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். சென்னையை அடுத்து ஊத்துக்கோட்டை அருகில் சுருட்டப்பள்ளி சென்று தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிநாதன் புதன் இம்மாதம் முழுவதும் 5-ஆமிடமான துலா ராசியில் சஞ்சாரம். 5-ஆமிடம் எண்ணம் திட்டம் செயல்பாடு மகிழ்ச்சி பிள்ளைகள் ஸ்தானத்தைக் குறிக்குமிடம் பிள்ளைகள்வகையில் நல்லவைகளை எதிர் பார்க்கலாம். 8-ஆம் தேதிமுதல் ஜென்ம குரு அதிசாரமாக 2-ஆமிடமான கடகத்தில் உச்சம் பெறுகிறார். 7-க்குடையவர். 2-ல் உச்சம் பெறுவ தால் குடும்பத்தை ஏற்படுத்தித் தருவார். அதாவது திருமண வாய்ப்புகள் கைகூடும். அதற்கான சுபக்கடன் வாங்கவும் நேரிடும். தொழில் ரீதியாக நிலவிய சங்கடங்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்து வந்த டென்ஷன் அகலும். சக ஊழியர்களும் நட்பு பாராட்டுவர். ஒரு சிலர் வேறு இடத்திற்கு உத்தியோக மாற்றத்தை சந்திக்க நேரும். 10-க்குடையவர் 10-ஆமிடத்தையே பார்ப்பதால் சிலருக்கு பதவி உயர்வும் உண்டாகும். வெளிநாட்டு வேலை முயற்சிகள் பலன் தரும். அல்லது பணிபுரியும் அலுவலகத்திலேயே தற்காலிக வெளிநாட்டு பயணமும் அமையும். 9-ல் வக்ரமாக இருக்கும் சனி 10-க்குடைய குருவின் சாரத்தில் (பூரட்டாதி) சஞ்சரிப்பதால் தர்மகர்மாதி பதியோகம் ஏற்படும். அது வாழ்க்கை தொழில் இவற்றில் அனுகூலமான சூழலை எதிர்பார்க்கலாம். வாகனவகையில் சற்று கவனமுடன் இருப்பது அவசியம் திடீர் அதிர்ஷ்டத்தையும் எதிர்பார்க்கலாம். 10-ஆம் தேதி முதல் 12-க்குடையவர் 4-ல் நீச்சம். விரயாதிபதி நீச்சம் அடைவது நன்மைதான்! தேக சுகத்தில் அவ்வப்போது வைத்தியச்செலவுகள் வந்து விலகும்! செவ்வாய்க்கிழமை அன்று பழநிமலை சென்று முருகப்பெருமானையும், போகர் ஜீவசமாதியையும் வழிபடவும்.
கடகம்
கடக ராசிக்கு ஒரு புறம் அட்டமத்துச்சனி ஒரு புறம் குரு 12-ல் மறைவு. 10-ஆம் தேதிமுதல் 11-க்குடைய சுக்கிரன் 3-ல் நீச்சம். எந்த திசையில் சென்றாலும் அங்கு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை! கொடுக்கல்- வாங்கலில் சிக்கல், வேலையில் பிரச்சினை. தொழில் துறையினருக்கு சிப்பந்திகளால் தொந்தரவு போன்ற சூழ்நிலைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். 8-ஆம் தேதிமுதல் 12-ல் உள்ள குரு அதிசார பெயர்ச்சியாக உங்கள் ஜென்ம ராசியில் உச்சமாக மாறுகிறார். குரு நின்ற இடத்தைவிட பார்க்கும் இடத்துக்கு பலன் அதிகம் என்பது போல ஜென்ம குரு 5-ஆமிடம், 7-ஆமிடம், 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். பிள்ளைகளால். இருந்த எதிர்கால பயம் மாறி நற்பலன்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வீண் கற்பனை சிந்தனைகள் விலகும். திருமணத் தாமதங்களையும் தடையையும் சந்தித்தவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். அதேசமயம் திருமணமாகி பல வருடங்கள் குழந்தையில்லாமல் தவித்தவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். கணவன்- மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடு மாறும். ஒற்றுமையுணர்வு மேலோங்கும். தந்தைவழி சொத்துகளில் ஏதேனும் பிரச்சினை சிக்கல்கள் இருந்தால் அவை விலகி உங்களுக்கு சாதகமான முடிவுகள் வந்து சேரும். சொத்துகள் சரிசமமாக பங்கிடும் வாய்ப்புகளும் ஏற்படும். பொன்னமராவதி அருகில் செவலூர் பூமிநாத சுவாமியை வழிபடவும்.
சிம்மம்
சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ஆமிடமான கன்னியில் சஞ்சாரம். 7-ல் சனி வக்ரகதியில் சஞ்சாரம். ராசியை சனி பார்க்கிறார். எனவே குரு 11-ல் நின்ற இடத்துப் பலனை அனுபவிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அலைச்சல், வீண் மனக்கவலை, குடும்பத்தில் குழப்பம் போன்ற சங்கடங்கள் உருவாகி மனதைக் கவலையில் ஆழ்த்துகிறது. 8-ஆம் தேதிமுதல் 12-ல் உச்சமாக குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். 12-ஆமிடம் அலைச்சல் அயனசயனபோகம், விரயம், இடமாற்றம் ஆகியவற்றைக் குறிக்கிறது. வேலையில் ஒரு சிலர் தற்கா-க இடமாற்றத்தையும், அல்லது குடியிருப்பில் இடமாற்றத்தையும் சந்திக்கலாம். வரவைவிட செலவுகள் சற்று கூடுதலாக அமையும். 12-ஆமிடத்து குரு 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே வீடு மனை வாகனவகையில் நற்பலன்கள் எதிர்பார்க்கலாம். மேற்கூறியபடி குடியிருப்பு மாற்றத்தையும் எதிர் கொள்ள நேரிடும். அதற்குண்டான வகையில் கடன் அமைப்பும் ஏற்படும். போட்டி பொறாமைகளை உத்தியோகம் அல்லது தொழில் சம்பந்தமாக உண்டாகும். 8-ஆமிடம், விபத்து அபகீர்த்தி, திடீர் அதிர்ஷ்டத்தையும் குறிக்கும். 8-க்குடையவரே அந்த இடத்தைப் பார்ப்பது திடீர் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தலாம். வாகனத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரிடமும் பேச்சில் நிதானம் தேவை. ஞாயிறு அன்று சூரியனார் கோவில் சென்று வழிபடவும்.
கன்னி
கன்னி ராசிநாதன் புதன் 2-ல் சஞ்சாரம். முதல் வாரத்தில் குரு 10-ல் நின்று ராசிநாதனைப் பார்ப்பது ஒருவகையில் சிறப்புதான் என்றாலும் 2-க்குடைய சுக்கிரன் 12-ல் மறைகிறாரே! சாண் ஏற முழம் வழுக்கிய நிலையாகத்தான் செல்லுகிறது. எனினும் வரவு- செலவு ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும். 8-ஆம் தேதிமுதல் குரு 11-ல் அதிசாரப் பெயர்ச்சி. 3, 5, 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். 11-ஆமிடம் லாபம், வெற்றி, முன்னேற்றம் காரிய அனுகூலத்தைக் குறிக்குமிடம், எடுத்த செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும். 10-ஆம் தேதிமுதல் 2-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் நீச்சமடைந்தாலும் குரு 3-ஆமிடத்தைப் பார்ப்பதால் இவை அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு உறுதுணையாக உடன்பிறப்புகளோ அல்லது நண்பர்கள் வகையிலோ சகாயம் ஏற்படலாம். 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு திருமணமாகி வாரிசு யோகத்தைத் தாமதமாக சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு குரு வாரிசு யோகத்தைத் தருவார். ஒரு சிலருடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் போராட்ட நிகழ்வுகளைச் சந்தித்தாலும் அந்த நிலையும் மாறி முன்னேற்றம் ஏற்படும். 7-ஆமிடத்தை 7-க்குடையவரே பார்ப்பதால் அதிசாரப் பெயர்ச்சியிலும் திருமண யோகத்தைத் தவறாமல் நடத்தித் தருவார். ஆலங்குடி சென்று குருபகவானை வழிபடவும்.
துலாம்
துலா ராசிநாதன் சுக்கிரன் மாத முதல் வாரத்தில் 11-ல் சஞ்சாரம். 11-க்குடைய சூரியன் 12-ல் சஞ்சாரம். அரசு காரியங்கள் பூர்த்தியாவதில் தாமத நிலை ஏற்படலாம். 9-ல் குரு நின்று ராசியைப் பார்த்தவர் 8-ஆம் தேதிமுதல் 10-ஆமிடமான கடகத்தில் உச்சம் பெறுகிறார். அதிசாரப் பெயர்ச்சியாகிறார். 10-ஆமிடத்து குரு பதிமாறச் செய்யும் என்பது ஜோதிடப் பாடம். இதில் பதி என்பது பணியையும் குறிக்கும். எனவே ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது பதவி மாற்றம், பணியிட மாற்றம் போன்றவற்றை சந்திக்கலாம். 10-ல் வரும் குரு 2-ஆமிடம், 4-ஆமிட, 6-ஆமிடங்களைப் பார்க்கிறார். 2-ஆமிடம், தனம், வாக்கு, கல்வி, குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் ஸ்தானம். எனவே ஏற்கெனவே நிலவிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் காரிய நிகழ்வுகள் அமையும். குடும்பத்திலும் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமையுணர்வு உண்டாகும். 4-ஆமிடத்தைப் பார்க்கும் குரு (4-ஆமிடம் மகரம் குருவுக்கு நீச்ச வீடு) நீச்ச பங்க ராஜயோகம் செயல்படும். அதாவது உச்ச வீட்டில் நின்று நீச்சவீட்டை பார்ப்பது ஆகும். விற்க வேண்டிய வீடு அல்லது மனை விற்று பணவரவு ஏற்படும். உடல்நலத்தில் அவ்வப்போது சில மருத்துவச் செலவுகள் வந்து விலகும். பொன்னமராவதி முதல் புதுக்கோட்டை வரை பாதையில் செவலூர் சென்று பூமிநாதன் சுவாமியையும் ஆரணவல்-யம்மனையும் வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் இம்மாதக் கடைசிவரை 12-ல் மறைகிறார். 27-ஆம் தேதிமுதல் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். குருவும் 8-ஆம் தேதிவரை 8-ல் மறைவு. புத்திர காரகன் 8-ல் மறைந்தால் பிள்ளைகள் வழியில் மனக்கவலை, பிரச்சினை அல்லது சோகம் ஆகியவற்றை சந்தித்து இருக்கலாம். இப்போது 8-ஆம் தேதி முதல் 9-ல் உச்சமாக வரும் குரு 1-ஆமிடம், 3-ஆமிடம், 5-ஆமிடத்தைப் பார்க்கிறார். ஜென்ம ராசியைப் பார்க்கும் குரு உங்களது திறமைகளை அதிகப் படுத்துவார். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வேலைகளை சமாளிக்கும் ஆற்றலும் 3-ஆமிடத்தைப் பார்க்கும் குரு தருவார். பழக்க- வழக்கத்தில் நன்மதிப்புகள் உண்டாகும். தனவரவுகளும் தாராளமாகக் கிடைக்கும். தைரிய வீர்ய சகாய சகோதர ஸ்தானத்தைப் பார்ப்பதால் தான் துணிந்து பெரிய வேலைகளை தயங்காமல் எடுப்பீர்கள். இது தற்கா-க குரு பெயர்ச்சிதான் என்றாலும் இப்போது குரு வருவது அவருக்கு உச்சவீடு, எனவேதான் அதிசாரமும் ஆதாயமாக மாறும். 5-ஆமிடத்தைப் பார்க்கும் குரு உங்கள் திட்டத்தை நிறைவேற்றுவார். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்காயத்திற்கு மருந்து போடும் வகையில் ஆறுதல்களையும் தேறுதல்களையும் தருவார். திருமணமாகி நீண்ட நாட்களாக வாரிசு இல்லாதவர்களுக்கு இக்காலம் வாரிசு யோகத்தை உறுதிபடுத்துவார். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபடவும். புதுக்கோட்டை அருகில் உள்ள ஆலங்குடியில் குருபகவானை வழிபடவும்.
தனுசு
தனுசு ராசிநாதன் குரு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அது ஒரு வகையில் சிறப்புடன் இருந்தது என்று சொல்லலாம். ஜனன ஜாதக தசாப்புக்திகள் பாதகமாக இருந்தவர்களுக்கு சற்று கடினமான நிலையாகத்தான் இருந்தது. 8-ஆம் தேதிமுதல் தனுசு ராசிக்கு 8-ஆமிடமான கடக ராசியில் உச்சம் பெறுகிறார். 12-ஆமிடம், 2-ஆமிடம், 4-ஆமிடத்தைப் பார்க்கிறார். 12-ஆமிடம் விரயம் என்பதால் உடல்நலனில் நோய் சம்பந்தப்பட்ட விரயம் அல்லது குடியிருப்பு சம்பந்தப்பட்ட விரயம்- அதாவது பூமி, மனை, வீடு ஏதேனும் ஒன்றை பலன்களை சந்திக்கலாம். 2-ஆமிடம் தனவரவு ஸ்தானம் என்பதால் மேற்கூறிய விரயங்கள் மூலம் வரவு என்றும் அர்த்தம். புதிய வாகனம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம். அல்லது புதிய வீட்டை வாங்கலாம். அதே சமயம் 8-ல் குரு உச்சம் பெறுவதால் சில நேரம் அபகீர்த்தியையும் சந்திக்க நேரும். உத்தியோக வகையில் சில சில அவமானங்களும் வந்து விலகும். அதனால் உத்தியோக இடமாற்றமும் ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை நிகழும். ஆனால்உடன்பிறப்புகள் வகையில் தாமரை இலை தண்ணீர் போல்தான் இருக்கும். வியாழக்கிழமை தோறும் நவக்கிரகத்தில் உள்ள குருபகவானை வழிபடவும்.
மகரம்
மகர ராசிநாதன் சனி 2-ல் வக்ரம். ஆட்சி. அவரோடு ராகுவும் சேர்க்கை. ஒரு படி ஏறினால் பத்துபடி இறங்கும் அமைப்புகளால் வாழ்வா? சாவா? என்ற போராட்டம்! எதிர்பார்த்த காரியத்தில் எண்ணற்ற தடை தாமதம், தொழி-ல் சிப்பந்திகள் பிரச்சினை போன்றவற்றை சந்திக்கும் நிலை! 8-ஆம் தேதிமுதல் 6-ல் மறைந்த குரு 7-ல் உச்சம் பெற்று 11-ஆமிடம், 1-ஆமிடம், 3-ஆமிடத்தை பார்க்கிறார். கிணற்றுத் தண்ணீரில் விழுந்து தத்தளித்தவனுக்கு காப்பாற்றக் கரம் கிடைத்த மாதிரி இந்த அதிசாரக் குரு மாற்றம் நிகழும். இதுவரை திருமண முயற்சிகளில் தோல்வியைச் சந்தித்தவர்களுக்கு அக்டோபர் 8-ஆம் தேதிக்கு பிறகு திருமணம் கைகூடும். கணவரால் மனைவியும், மனைவியால் கணவனும் ஆதாயம் பெறும் சூழ்நிலைகள் அமையும். ஜென்ம ராசியைப் பார்க்கும் குரு புதிய யுக்திகளை கையாளும் திறன் உண்டாக்கும். 11-ஆமிடம் இடத்தை பார்க்கும் குரு காரிய அனுகூலத்தைத் தருவார். மூத்த சகோதரம் உள்ளவர்களுக்கு அவர்களால் நன்மை உண்டாகும். அவர்களுக்கும் அவர்களால் நன்மை உண்டாகும். அவர்களுக்கும் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும். தேகநலனில் நிலவிய மருத்துவச் செலவுகள் அகலும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.
கும்பம்
கும்ப ராசிக்கு ஏழரைச்சனியில் ஜென்மச் சனி நடக்கிறது. அவரும் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். எனவே தேகநலனில் அவஸ்தைகளை சந்திக்க நேரும். அதிலும் சந்திர தசையோ சந்திரபுக்தியோ நடப்பவர்களுக்கு பொருட் சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படலாம். 2-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்த்த காரணத்தால் மேற்கூறிய வகையில் எப்படியோ சமாளித்து நீச்சல் அடிக்கிறீர்கள்! இப்போது அதிசாரமாக 8-ஆம் தேதி முதல் 5-ஆமிடத்து குரு 6-ஆமிடத்தில மாறி உச்சம் பெறுகிறார். 10-ஆமிடம், 12-ஆமிடம், 2-ஆமிடம் ஆகியவற்றைப் பார்க்கிறார். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவற்றை சந்திக்கலாம். ஒரு சிலர் அலுவலக உத்தியோகத்தை விட்டுவிட்டு வீட்டில் இருந்தே சம்பாதிக்கும் யுக்திகளையும் கையாளலாம். 12-ஆமிடத்தைப் பார்க்கும் குரு வேலை நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிமாநிலம் செல்லும் சூழ்நிலைகள் ஏற்படும். 2-க்குடையவரே 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் தனவரவு தாராளமாக அமையும். வரவு செலவும் தாராளமாக நடைபெறும் 6-ஆமிடத்து குரு மறைமுக போட்டி, பொறாமைகளை உருவாக்குவார். ஒரு நேரம் உடல் நன்றாக செயல்பாட்டில் ஒரு நேரம் மிகச் சோர்வாக இருப்பதை உணரலாம். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.
மீனம்
மீன ராசிக்கு விரயச் சனி நடப்பு. எனவே எதைத் தொட்டாலும் ஒட்டிக்கு ரெட்டியாக செலவுகள் சூழ்ந்து கொள்ளும். அதை சமாளிக்க சற்று திணறும் சூழலும் உண்டாகும். ராசிநாதன் குரு 4-ஆமிடத்தில் நின்று 12-ஆமிடத்தைப் பார்த்ததும் ஒரு காரணம். இம்மாதம் 8-ஆம் தேதி முதல் 5-ல் குரு உச்சம் பெறுகிறார். (அதிசாரப் பெயர்ச்சி). 9-ஆமிடம், 11-ஆமிடம், 1-ஆமிடங்களைப் பார்க்கிறார். 9-ஆமிடம் தகப்பனார். பூர்வ புண்ணியம், குலதெய்வம் இவற்றை குறிக்கும். தந்தை உள்ளவர்களுக்கு தகப்பனாரால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக வழிபட முடியாமல் இருந்த குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். பூர்வீக சொத்துகளை பிரிவினைக்குட்படுத்தி அதன்மூலம் ஆதாயம் தேடலாம். 11-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மேற்கூறிய வகையில் நன்மையும் அனுகூலமும் தருவார். உங்கள் ராசியையே ராசிநாதன் பார்க்கிறார். உங்கள் திறமை அதிகரிக்கும் அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பாங்கும் உண்டாகும். 5-ல் உச்சம் பெறுவதால் பிள்ளைகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாழக்கிழமையன்று குருபகவானை வழிபடவும்.