ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை
மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை
மேற்கண்ட மாதத்தில் நாட்களில் பிறந்தவர்கள், மேஷ ராசியை சேர்ந்தவர்கள். இவர்களின் ராசி அதிபதி செவ்வாய். உங்கள் ராசி அதிபதிக்குரிய மலர் செம்பருத்தி. எனவே, நீங்கள் பூஜை வழிபாடு, கோவில் தரிசனம் போன்றவையின்போது, செம்பருத்தி மலரை பயன்படுத்துவது நல்லது. இந்த மாதம் பணவரவு சீராக அமையும். சிலருக்கு திருமண யோகம் கூடிவரும். இளைய சகோதரம்மூலம் ஒரு நன்மையுண்டு. இளைய சகோதரரின் திருமணச் செலவு வரும். சுப விஷயங்களுக்கு கடன் வாங்குவீர்கள். சிலர் வேலையில் சேரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவீர்கள். அது இடமாற்றம் உடைய வேலையாக இருக்கும். அவ்வப்போது தோள் வலி வந்து சரியாகும். நல்ல பக்தியுள்ள பணியாளர்கள் கிடைப்பார்கள். இந்த மாதம் சிறுதூர மற்றும் வெகுதூர அலைச்சல் இருந்துகொண்டே இருக்கும். அரசு சார்ந்த வீடு கிடைக்கும். சிலரின் வாழ்க்கைத்துணை, அரசு வேலை பெறுவார். உங்களின் சிலரின் வாரிசுகள், பயணத்தின் போது, சிராய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல் பங்கு வர்த்தகத்திலும் லைட்டா டேமேஜ் தெரிகிறது. கலைஞர்களின் நிலை நன்றாக இருந்தாலும், அவர்களின் பெயரில், புகழில் குறை கண்டுபிடிக்கப்படும்; பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பத்திரமாக இருக்கவும். அஜிர்ண குறை மற்றும் ஃபுட் இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்பமான பெண்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும். இப்போது பிரசவமானால், அனேகமாக சிசேரியனாக இருக்கும் வாய்ப்பு அதிகமுண்டு. உங்கள் தொழிலில் நல்ல லாபம் அதுவும் குறுக்குவழி வருமானம் நிறைய கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் கட்சி தொண்டர்களுக்கு, நல்ல செலவு செய்ய வேண்டியிருக்கும். செலவு செய்யாவிட்டால், அவர்கள் இஷ்டம்போல் கட்சி மாறிவிடுவர். சிலர் வீடு கட்சி மாறிவிடுவர். சிலர் வீடு மாற்றும் விஷயமாக அலைய வேண்டியிருக்கும்.
ஏப்ரல் 20 முதல் மே 20 வரை
மேற்கண்ட மாத நாட்களில் பிறந்தவர்கள் ரிஷப ராசியை சேர்ந்தவர்கள். இவர்களின் ராசி அதிபதி சுக்கிரன் ஆவார். உங்கள் ராசிக்குரிய மலர் மல்லிகை. நீங்கள் மகாலட்சுமி தாயாரை வணங்கும்போது மல்லிகை மாலை அல்லது மல்லிகை சரத்துடன் வணங்குங்கள். இந்த மாதம் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். இந்த தன்னம்பிக்கை, அதீத தைரியம் தரும். இந்த தைரியம், மானாவாரியாக லஞ்சம் வாங்கச் சொல்லும். ஆம், இந்த மாதம் உங்களுக்கு மறைமுக வருமானம் வந்து கொட்டும். அட, இந்த வருமானத்தை வீட்டில் வைக்க இடமில்லாமல், வேறு வீடு வாங்கி, அதில் பதுக்கி விடுவீர்கள் என்றால் பாருங்களேன்! இந்த அரிபரி அமர்க்களத்தில் சில புண்ணியவான்கள், சின்னவூடும் செட்அப் பண்ணி, அங்கேயும் பணத்தை மறைத்து வைத்துக்கொள்வர். இதுபோக தங்கள் வாழ்க்கைத்துணை பெயரில், ஒரு தொழில் ஆரம்பித்து விடுவர். பங்கு பத்திரம் முதலீடும் உண்டு. சினிமா கலைஞர்களும், தங்களது மறைமுக லாப வரவுகளை சரிசெய்ய, தனியாக தொழில் தொடங்குவர் அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்வர். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் காதல் வரும். அது வேறு மதம் சார்ந்ததாக அமையும். சிலருக்கு பிற மதம் சார்ந்தவருடன் திருமணம் அமையும். உங்களில் சிலருக்கு புதையல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்றுமதி- இறக்குமதி சார்ந்தவர்கள் நல்யோகம் பெறுவர். தொழில் செய்வோர், லஞ்சம் கொடுப்பதன்மூலம் எளிதான வர்த்தக நடைமுறையும் லாபமும் பெறுவர். சிலருக்கு மறுமணம் கைகூடும். அரசியல் வாதிகள், சிலர் எதிர்பாராமல் மந்திரி பதவி மற்றும் நல்ல பதவி உயர்வு என எண்ணியபடி நிறைவேறக் காண்பீர்கள். அரசு பணியாளர்கள் கிடைப்பார்கள். வீடு மாறுவீர்கள்.
மே 21 முதல் ஜூன் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்களின் ராசி மிதுனம். அதிபதி புதன் ஆவார். உங்கள் ராசிக்குரியது துளசி. எனவே பெருமாளை துளசிகொண்டு பூஜிப்பது நன்மை பயக்கும். இந்த மாதம் நிறைய பேருக்கு திருமணம் பேசி முடிக்கப்படும். அதுபோல், இதுவரையில் தொழில் விஷயமாக பிரிந்திருந்த தம்பதியர், இந்த மாதம் ஒன்று சேரமுடியும். உங்களில் நிறைய பேருக்கு, நல்ல தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள். அல்லது வே
ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை
மார்ச் 21 முதல் ஏப்ரல் 19 வரை
மேற்கண்ட மாதத்தில் நாட்களில் பிறந்தவர்கள், மேஷ ராசியை சேர்ந்தவர்கள். இவர்களின் ராசி அதிபதி செவ்வாய். உங்கள் ராசி அதிபதிக்குரிய மலர் செம்பருத்தி. எனவே, நீங்கள் பூஜை வழிபாடு, கோவில் தரிசனம் போன்றவையின்போது, செம்பருத்தி மலரை பயன்படுத்துவது நல்லது. இந்த மாதம் பணவரவு சீராக அமையும். சிலருக்கு திருமண யோகம் கூடிவரும். இளைய சகோதரம்மூலம் ஒரு நன்மையுண்டு. இளைய சகோதரரின் திருமணச் செலவு வரும். சுப விஷயங்களுக்கு கடன் வாங்குவீர்கள். சிலர் வேலையில் சேரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவீர்கள். அது இடமாற்றம் உடைய வேலையாக இருக்கும். அவ்வப்போது தோள் வலி வந்து சரியாகும். நல்ல பக்தியுள்ள பணியாளர்கள் கிடைப்பார்கள். இந்த மாதம் சிறுதூர மற்றும் வெகுதூர அலைச்சல் இருந்துகொண்டே இருக்கும். அரசு சார்ந்த வீடு கிடைக்கும். சிலரின் வாழ்க்கைத்துணை, அரசு வேலை பெறுவார். உங்களின் சிலரின் வாரிசுகள், பயணத்தின் போது, சிராய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல் பங்கு வர்த்தகத்திலும் லைட்டா டேமேஜ் தெரிகிறது. கலைஞர்களின் நிலை நன்றாக இருந்தாலும், அவர்களின் பெயரில், புகழில் குறை கண்டுபிடிக்கப்படும்; பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பத்திரமாக இருக்கவும். அஜிர்ண குறை மற்றும் ஃபுட் இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்பமான பெண்கள் வெகு கவனமாக இருக்கவேண்டும். இப்போது பிரசவமானால், அனேகமாக சிசேரியனாக இருக்கும் வாய்ப்பு அதிகமுண்டு. உங்கள் தொழிலில் நல்ல லாபம் அதுவும் குறுக்குவழி வருமானம் நிறைய கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் கட்சி தொண்டர்களுக்கு, நல்ல செலவு செய்ய வேண்டியிருக்கும். செலவு செய்யாவிட்டால், அவர்கள் இஷ்டம்போல் கட்சி மாறிவிடுவர். சிலர் வீடு கட்சி மாறிவிடுவர். சிலர் வீடு மாற்றும் விஷயமாக அலைய வேண்டியிருக்கும்.
ஏப்ரல் 20 முதல் மே 20 வரை
மேற்கண்ட மாத நாட்களில் பிறந்தவர்கள் ரிஷப ராசியை சேர்ந்தவர்கள். இவர்களின் ராசி அதிபதி சுக்கிரன் ஆவார். உங்கள் ராசிக்குரிய மலர் மல்லிகை. நீங்கள் மகாலட்சுமி தாயாரை வணங்கும்போது மல்லிகை மாலை அல்லது மல்லிகை சரத்துடன் வணங்குங்கள். இந்த மாதம் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். இந்த தன்னம்பிக்கை, அதீத தைரியம் தரும். இந்த தைரியம், மானாவாரியாக லஞ்சம் வாங்கச் சொல்லும். ஆம், இந்த மாதம் உங்களுக்கு மறைமுக வருமானம் வந்து கொட்டும். அட, இந்த வருமானத்தை வீட்டில் வைக்க இடமில்லாமல், வேறு வீடு வாங்கி, அதில் பதுக்கி விடுவீர்கள் என்றால் பாருங்களேன்! இந்த அரிபரி அமர்க்களத்தில் சில புண்ணியவான்கள், சின்னவூடும் செட்அப் பண்ணி, அங்கேயும் பணத்தை மறைத்து வைத்துக்கொள்வர். இதுபோக தங்கள் வாழ்க்கைத்துணை பெயரில், ஒரு தொழில் ஆரம்பித்து விடுவர். பங்கு பத்திரம் முதலீடும் உண்டு. சினிமா கலைஞர்களும், தங்களது மறைமுக லாப வரவுகளை சரிசெய்ய, தனியாக தொழில் தொடங்குவர் அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்வர். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் காதல் வரும். அது வேறு மதம் சார்ந்ததாக அமையும். சிலருக்கு பிற மதம் சார்ந்தவருடன் திருமணம் அமையும். உங்களில் சிலருக்கு புதையல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்றுமதி- இறக்குமதி சார்ந்தவர்கள் நல்யோகம் பெறுவர். தொழில் செய்வோர், லஞ்சம் கொடுப்பதன்மூலம் எளிதான வர்த்தக நடைமுறையும் லாபமும் பெறுவர். சிலருக்கு மறுமணம் கைகூடும். அரசியல் வாதிகள், சிலர் எதிர்பாராமல் மந்திரி பதவி மற்றும் நல்ல பதவி உயர்வு என எண்ணியபடி நிறைவேறக் காண்பீர்கள். அரசு பணியாளர்கள் கிடைப்பார்கள். வீடு மாறுவீர்கள்.
மே 21 முதல் ஜூன் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்களின் ராசி மிதுனம். அதிபதி புதன் ஆவார். உங்கள் ராசிக்குரியது துளசி. எனவே பெருமாளை துளசிகொண்டு பூஜிப்பது நன்மை பயக்கும். இந்த மாதம் நிறைய பேருக்கு திருமணம் பேசி முடிக்கப்படும். அதுபோல், இதுவரையில் தொழில் விஷயமாக பிரிந்திருந்த தம்பதியர், இந்த மாதம் ஒன்று சேரமுடியும். உங்களில் நிறைய பேருக்கு, நல்ல தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள். அல்லது வேறுமத நண்பருடன் சேர்ந்து, புது தொழில் தொடங்குவீர்கள். அரசு ஒப்பந்த பணம் கைக்கு வந்து சேரும். உங்களில் சிலர் வீடு வாங்கமுடியும். சிலருக்கு தகவல் தொடர்பு சார்ந்த பணி கிடைக்கும். பணியில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவர். இளவயது, பிறமத பணியாளர்கள் கிடைப்பார்கள். உங்கள் பெண் வாரிசு, இடம் பெயர்வார். பங்கு வர்த்தக முதலீடு உண்டு. கலைஞர்கள், வெளியூர், வெளிநாடு செல்வர். மனை சார்ந்து வழக்கு நடந்துகொண்டிருந்தால், அது சார்ந்த நற்செய்தி கிடைக்கும். உங்கள் தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவைப்படும். உங்களின் தெய்வ தரிசன பயணம் சற்று இடையூறு தரும். உங்களின் கௌரவத்தை உயர்த்த ரொம்ப மெனக்கிடுவீர்கள். அரசியல்வாதிகள், தங்களின் உழைப்பையும், பெருமையையும் பறை சாற்ற, தகவல் தொடர்புகளை அதிகரித்து, அதன்மூலம் பரப்புரை செய்வர். சில அரசியல்வாதிகள், தங்களின் உடன்பிறப்புக்களை, இதற்கு பயன்படுத்திக்கொள்வர். சிலரின் மாமியார்கள் உங்கள்கூட வந்து இருந்து, அதிகாரம் செய்வர். இதற்கு, உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழில் தொடங்குவதும் ஒரு காரணமாக அமையும். இந்த மாதம், நிறைய சுப செலவுகள் உண்டு. சிலர் குழந்தை பேறு சார்ந்து இடம் மாறக்கூடும்.
ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் கடக ராசியை சேர்ந்தவர்கள். அதிபதி சந்திரன் ஆவார். உங்களுக்குரிய மலர் ஜாதிப்பூ. எனவே அம்பாளை வணங்கும்போது, ஜாதிப்பூ கொண்டு வணங்க மேன்மை பெறலாம். இந்த மாதம் அரசு சார்ந்த பணம் உங்களைத் தேடிவரும். சிலரின் வாரிசுகள் பணம் கொடுத்து உதவுவர். பங்கு வர்த்தகத்தின் ஒரு பகுதிமூலம் பணவரவு உண்டு. சிலரின் தொழில் நல்ல பணவரவை தரும். சிலர் மனைகளை பிரிப்பதன்மூலம் பணவரவு பெறுவர். சிலர் மாமியாரின், வீடுமூலம் பணம் கிடைக்கப்பெறுவர். இவ்வளவு பண ரொட்டேஷன் இருக்கும்போது, வாய் சும்மா இருக்குமா. எல்லாரையும் எடுத்தெறிந்து, கடினமான சொற்களால் காயப்படுத்துவீர்கள். இளைய உடன்பிறப்பு, வேலை மற்றும் திருமணம் முடிந்து வெளிநாடு செல்வார். உங்களிடம் பணிபுரிவோர் வேறிடம் செல்வர். ஒப்பந்தங்களின் முதலீட்டு விஷயமாக கையெழுத்து இடுவீர்கள். வீட்டு விஷயம், நீங்கள் நினைத்த மாதிரி முடியும். உங்களின் தாயார், உங்கள் மூத்த சகோதரியுடன் சென்று தங்குவார். காதல் விஷயம் சண்டையில் முடியும். சிலர் வேலை கிடைத்து வெளியூர் செல்வர். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்வர். திருமண விஷயங்கள், கௌரவ பிரச்சினையில் தாமதமாகும். தம்பதிகளுக்குள் பிணக்கு வந்து சரியாகும். இந்த சண்டைக்கு மாமியார் காரணமாவார். ஆன்மிக பயணமுண்டு. உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். பெண் அரசியல்வாதிகள், தாங்கள் பிறந்த ஊரில் வெகு மேன்மை பெறுவர். சில பெண்கள், புதிதாக அரசியலுக்குள் நுழைவார்கள். கலைஞர்கள் தங்கள் தொழிலில் நல்ல சம்பாத்தியம் செய்து, அதனை வெளிநாடு அல்லது உள்நாட்டில் வீடு விஷயமாக முதலீடு செய்வர். சிலர் வேலையில் பதவி உயர்வு காரணமாக இடமாற்றம் செய்யவேண்டி இருக்கும். உங்கள் மாமனார் அல்லது தந்தை அல்லது இருவரும் சேர்ந்து ஆன்மிக பயணமாக அலைவார்கள்.
ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் சிம்ம ராசியை சேர்ந்தவர்கள். அதிபர் சூரியன். மலர் செந்தாமரை. நீங்கள் எந்த கோவிலுக்குச் சென்று வணங்கினாலும் செந்தாமரை மலர்கொண்டு வணங்கவும். வேறிடத்தில் இருந்த உங்கள் பெற்றோர், இந்த மாதம் உங்கள் வீட்டுக்கு வந்து தங்குவர். இதற்கு காரணம், நீங்கள் வெளியூர், வெளிநாடு செல்வதால் இருக்கும். பணவரவு செழிப்பாக அமையும். அதில் மறைமுக வருமானமும் இருக்கும். சிலரின் வாரிசுகளுக்கு திருமணம் நடக்கும். வரும் மருமகன், வேறு மொழி சார்ந்தவராக இருப்பார். உங்கள் தொழில் சார்ந்த நிறைய தரவுகள் கிடைக்கப்பெறுவீர்கள். நிறைய பெண் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அரசு மனை சார்ந்த முதலீடு உண்டு. பங்கு வர்த்தகம் எதிர்பாராத லாபம் தரும். பொழுதுபோக்கு, விளையாட்டு பிரிவினர், கலைஞர்கள் என இவர்கள் மிக மேன்மை காண்பர். வாரிசுகள், உங்கள் ஆசைகளை நிறைவேற்றித் தருவர். கலைஞர்கள் தொழில் சார்ந்த புகழ் வெளிச்சம் பெறுவர். வாழ்க்கைத்துணை சற்று உடல்நலம் கெட வாய்ப்புள்ளது. ஏற்றுமதி- இறக்குமதி சார்பு உடையவர்கள், வெளிநாட்டு லாபம் பெறுவர். மலை மீதுள்ள முருகரை தரிசிக்கும் வாய்ப்புண்டு. பெண்களில் தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள், இந்த மாதத்தை பயன்படுத்திக் கொள்ளவும். அரசியல்வாதிகளில், மந்திரி பதவியில் உள்ளவர்கள், வெகுமேன்மை காண்பர். மற்றய அரசியல்வாதிகள், நஷ்டத்திலும் லாபம் புரட்டிவிடுவர். மறைமுக வருமானம் அதிகரித்து, அதனை பதுக்கும் வழிமுறைகளை ஆராய்வர். இதன்பொருட்டு வெளிநாட்டு பயணங்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மேற்கொள்வர். உங்கள் வாழ்க்கைத்துணையின் வேலை வீட்டிலிருந்து செய்யுமாறு அமையும். உங்கள் மாமியாரும், மாமனாரும் வெகு கௌரவம் எதிர்பார்ப்பார்கள்.
ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் கன்னி ராசியை சேர்ந்தவர்கள். அதிபதி புதன் ஆவார். உங்களுக்குரிய மலர் பச்சை அல்லது கதிர் பச்சை ஆகும். கோவிலுக்கு செல்லும்போது கதிர் பச்சை கட்டு வாங்கிக் கொடுத்து வணங்கவும். இந்த மாதம், நீங்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவரும் சேர்ந்து வீடு வாங்குவீர்கள். அல்லது சொந்தத் தொழில் ஆரம்பித்துவிடுவீர்கள். இவ்வித யோசனையுடைய தம்பதிகள், இந்த மாதத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதற்கு உங்கள் மாமியார் கை கொடுத்து உதவுவார். பணவரவு சரளமாக இருக்கும். உங்கள் இளைய சகோதரன், கோபித்துக்கொண்டு எங்காவது ஓடிவிடுவார். உங்கள் பணியாளர்கள் வேறிடம் சென்றுவிடுவர். சில ஒப்பந்தங்கள் ரத்தாகும். உங்கள் வாரிசுகள் தொழில் விஷயமாக மனஸ்தாபம் கொள்வர். பங்கு வர்த்தகம் பயன் தராது. காதல் அடிவாங்கும். கர்ப்பமான பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். உங்களில் சிலருக்கு, தாய்வழி சொந்தத்தில் திருமணம் நடக்கும். உங்கள் வியாபாரத்தில், மிகத் தெரிந்த ஒருவர் பங்குதாரர் ஆவார். ஒரு நெருக்கடி ஏற்பட இருந்து, பின் சரியாகிவிடும். அது அனேகமாக மனை விஷயமாக இருக்கலாம். இந்த மாதம் உங்கள் கௌரவம் அதிகமாகும். அரசியல்வாதிகள், தங்களின் சேவையின் பொருட்டு அரக்க பறக்க அலைவார்கள். சில அரசு அதிகாரிகள், பதவி உயர்வும், இடமாற்றமும் பெறுவர். சில சீருடை பணியாளர்கள் பற்றிய சில செய்திகள் வந்து பின் சரியாகி மறைந்துவிடும். சில அரசுப் பணியாளர்கள், அரசியலில் சேர்வார்கள். இந்த மாதம் மாமியாரால் வரவும், மாமனாரால் செலவும் ஏற்படும்.
செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 20 வரை
இவர்கள் பிறந்த நாட்கள் துலா ராசியைக் குறிக்கும். அதிபர் சுக்கிரன். மலர் வெண் தாமரை. எனவே கோவில் தரிசனங்களின்போது, வெண் தாமரை மலருடன் சென்று வணங்குவது மேன்மை தரும். இந்த மாதம் பணவரவு நன்றாக இருக்கும். எனினும், உங்கள் மனதில் இனம்புரியாத ஒரு சங்கடம் வந்துவந்து போகும். வாஸ்தவத்தில் உங்களுக்கு ஒன்றும் நடக்காது. ஆனாலும் நினைப்பு பிழைப்பை கெடுத்த கதையாக, ஏதோ ஒரு கற்பனை பயம் இருந்துகொண்டே இருக்கும். மனை சார்ந்த லாபமுண்டு. இளைய உடன்பிறப்பின் திருமணம் நடக்கும். வாரிசுகளின் திருமணப் பேச்சு தொடங்கும். சில வாரிசுகள் வீடு வாங்கும் கடன் பற்றி திட்டமிடுவார்கள். காதல் திருமணம் கைகூடும். இந்த காதல் திருமணம், கலப்பாக மட்டுமின்றி, நல்ல செல்வ செழிப்பாகவும் அமையும். உங்களில் சிலருக்கு பேரன் அல்லது பேத்தி கிடைக்கும் வாய்ப்புண்டு. சிலரின் தந்தை கால்வலியால் அவதிப்பட நேரிடும். உங்களில் சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். அல்லது உங்கள் தொழிலில் அரசு சம்பந்தம் உண்டாகும். அரசு ஊழியர்கள் பதவி உயர்வு கிடைக்கப்பெறுவர். அரசியல்வாதிகள் அரசாங்க வேலைப் பளுவை சமாளிக்க முடியாமல் திணற வேண்டியிருக்கும். சில அரசியல்வாதிகள், தங்கள் கூட்டணி கட்சியினருடன் நிறைய சந்திப்பை நடத்துவர். இந்த சந்திப்புக்களில் நிறைய கோபம் வர வாய்ப்புண்டு. உங்களில் சிலர் ஆன்மிக பயணம், கல்வி சார்ந்த வெளிநாட்டு பயணம் மேற்கொள்வீர்கள்.
அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள். அதிபதி செவ்வாய். உங்களுக்குரிய மலர் செவ்வரளி ஆகும். நீங்கள் துர்க்கையை வணங்கும்போது, செவ்வரளியுடன் செல்லவும். இந்த மாதம் உங்களில் பலருக்கு அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கும். ஆனால் சம்பளம் நீங்கள் எதிர்பார்த்த அளவைவிட, மிக குறைவாகவே இருக்கும். இந்த மாதம் பணவரவும் உன்னைப் புடி என்னைப் புடி என்கிற அளவில் ஆட்டங் காட்டும். நீங்கள் எண்ணிய லட்சியம், கொண்ட ஆசைகள் எல்லாம் நினைப்பு அளவில்தான் இருக்கும். நடைமுறைக்கு வராது. உங்களிடம் ஊழியம் செய்யும் பணியாளர்கள், அவர்கள் பங்குங்கு காலை வாரிவிடுவர். உங்கள் இளைய சகோதரன் அல்லது உங்களின் உடல்நிலை சற்று கெடும். அது தலை அல்லது வயிறு, கால்வலி பிரச்சினையாக இருக்கும். உங்கள் தொழில் சார்ந்து கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். திருமண விஷயத்தில், பெண் வீட்டார் வெகு முனைப்பாக செயல்படுவர். அரசு அதிகாரிகள் இடமாற்றம் பெறுவர். சீருடை பணி செய்யும் அதிகாரிகள் தங்கள் வேலையில் சற்று நெருடலான விஷயங்களை கைகொள்ள வேண்டியிருக்கும். சில அரசியல்வாதிகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விடுவதால், மருத்துவ மனையில் சேரவேண்டியிருக்கும். சிலரோ காசு பண விஷய மோசடிகளால், ஒளிந்து வாழவேண்டியிருக்கும். சிலர் திருமணம் பொருட்டு, வெளியிடம் மாறுவர். சிலர் வர்த்தக பங்குதாரரை மாற்றுவர். சிலருக்கு வாழ்க்கைத் துணையிடமிருந்து, வேலை விஷயமாக பிரிந்து வாழவேண்டி இருக்கும்.கலைஞர்கள் சில விஷயங்களுக்காக, சற்று ஒதுங்கி இருக்க நேரிடும்.
நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை
மேற்கண்ட தினங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியை சேர்ந்தவர்கள். அதிபதி குரு ஆவார். உங்களுக்குரிய மலர் முல்லை மலர் ஆகும். நீங்கள் தட்சிணா மூர்த்தி, சிவனை வணங்கும்போது முல்லை மலர் கொடுத்து சேவிக்கவும். இந்த மாதம் திண்ணையில் இருந்தவனுக்கு, திடுக்குன்னு கல்யாணம் என்பார்களே, அதுமாதிரி, அனேக ஆட்களுக்கு கல்யாணம் ஆகிவிடும். இந்த மாத நாட்களில் பிறந்தவர்கள், இதுவரை கல்யாணம் கூடி வரவில்லையே என்று கவலையில் இருப்பவர்களும், இந்த மாதம் சிறு முயற்சி எடுத்தாலும் கல்யாணம் நடந்துவிடும். அதுபோல் வீடுகட்டும் முயற்சியும் பலிதமாகும். உங்கள் வாழ்க்கைத்துணை, வேலை தேடுகிறேன் பேர்வழி என வெட்டி பொழுதை போக்கினாலும், இந்த மாதம் சிறு தேடலிலேயே வேலை, தொழில் அமைந்துவிடும். இதுபோல் சில கணவர்கள், தன் மனைவி ஏதாவது வேலைக்கு போனால் நன்றாக இருக்குமே எனும் எண்ணம் உள்ளவர்களுக்கும், இந்த மாதம் உங்கள் மனைவிக்கு கௌரவமான வேலை கிடைக்கும் வாய்ப்புண்டு. முயற்சி செய்யுங்கள். உங்களில் சிலருக்கு, வெளிநாட்டு பணம் புழங்கும் வாய்ப்புண்டு. உங்களில் சிலர் வாரிசு வாய்க்கும் பொருட்டு மருத்துவ உதவி பெறுவீர்கள். உங்கள் மூத்த சகோதரிக்கு வேலை கிடைக்கும். உங்கள் தந்தையின் நிலை கவனிக்கப்பட வேண்டும். சீருடை பணி செய்பவர்கள் மேன்மை காண்பர். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு பெறுவீர்கள். சிலர் பேரன்- பேத்திகளை காண வெளிநாடு செல்வீர்கள். பெண் அரசியல்வாதிகளுக்கு, நிறைய சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் இவர்களின் வாழ்வு ஒருபடி முன்னேற்றம் காணும். உங்கள் தாயார், உங்கள் மாமியார் என இருவரும் ஒன்றுகூடி மகிழும் அல்லது மூஞ்சியை காண்பிக்கும் காலமிது.
டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை
மேற்கண்ட நாட்களில், பிறந்தவர்களின் ராசி மகரம். அதிபதி சனி ஆவார். இந்த ராசிக்குரிய மலர் நீல நிற பூக்கள் ஆகும். சனீஸ்வரரை வணங்கும்போது நீல நிற மலர் சரத்துடன் வணங்கவும். இந்த மாதம் உங்களுக்கு வெளிநாட்டு பணப்புழக்கம் இருக்கும். அல்லது வெளிநாட்டு வேலை ஒன்றை, வீட்டில் இருந்தே பகுதி நேரமாக செய்து பணம் பெறுவீர்கள். உங்கள் வேலையில் தகவல் தொடர்பு செய்திகள், ஒப்பந்த விஷயம், வீடு மாற்றும் தகவல், வாகன விற்பனை என இதில் ஏதாவது ஒன்று நிறைந்திருக்கும். இளைய சகோதரனின் உதவி கிடைக்கும். நல்ல பணியாள் கிடைப்பார். வேலை பார்த்துக்கொண்டிருக்கும் சிலர் இடமாற்றத்தை சந்திப்பீர்கள். இந்த மாதம் வீடு விஷயம் அல்லது தாயார் சார்ந்து ஒரு அல்லாட்டம் இருக்கும். உங்கள் மூத்த சகோதரனின் திருமண வாழ்வு சார்ந்து ஒரு மனப்பதட்டம் வரும். கலைஞர்கள் தொழில் சீராக அமையும். சிலர் தங்கள் தொழிலை சற்று உறுதியாக- நிரந்தரமாக மாற்றும் வழிகளை கண்டறிவார்கள். பங்கு வர்த்தகத்தின் நிலை சிறப்பு. பயணங்களில் கவனம் தேவை. இந்த மாதம் பிறந்த குழந்தைகளின் தந்தை வேலை வாய்ப்பு பெறுவார்கள். சில மாணவர்கள், தொழில் கல்வி சார்ந்த உயர் கல்வி பெறுவர். கல்வியின் பொருட்டு வெளியூர், வெளிநாடு செல்வர். நிறைய பெண்கள் தொழில் முனைவோர் ஆவார்கள். இந்த மாதம் எந்த லட்சியம், கற்பனைக் கோட்டை கட்டும் விஷயம் வேண்டாம். ஒன்றும் வௌங்காது. அரசியல்வாதிகள் சிறைக்கு போகும் வாய்ப்புள்ளது. எனவே அமைதியாக இருக்கவும்.
ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் கும்ப ராசி கொண்டவர்கள். அதிபதி சனி. உங்கள் ராசிக்குரிய மலர் நீல நிற மலர்கள். சனீஸ்வர பகவானை நீல மலர் சரம்கொண்டு வணங்கவும். இந்த மாதம் உங்களில் சிலருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாரிசுகள், உங்கள் பேச்சுக்கு எதிராக செயல்படுவார்கள். இதனால் மன அமைதி குலைவதுடன், உடல்நிலை பாதிப்பு ஏற்படும். பண விஷயங்களில் உங்கள் குடும்பத்தார், ஏதோ தில்லுமுல்லு செய்வதாக ஒரு எண்ணம் தோன்றும். உங்கள் வாரிசு, தன் கணவருடன் சேர்ந்து, உங்களை கஷ்டபடுத்தும் வேலையை யோசிப்பார்கள். உங்கள் இளைய சகோதரனை பங்குதாரர் ஆக்கி, ஒரு தொழிலை ஆரம்பிக்கும் சாத்தியக் கூறு தென்படுகிறது. உங்கள் வாரிசின் திருமணம் நடக்கும். அதில் உங்களுக்கு தெரியாமல் ஒரு விஷயம் ஒளிந்திருக்கும். மறைமுக வருமானம் கிடைப்பதால், ஒரு அடுக்கு மாடி வீடு வாங்குவீர்கள். சினிமா கலைஞர்கள், இரண்டாம் திருமணம் செய்து, ஒரு வீட்டையும் வாங்குவீர்கள். பங்கு வர்த்தகம், மறைவான லாபம் தரும். அரசியல்வாதிகள், அத்தனை குறுக்கு வழிகளையும் கையாண்டு, ஒரு மந்திரி பதவியை பிடித்து விடுவார்கள். உங்களில் சிலர், சில மந்திரிகள்மூலம், அரசியலில் ஒரு பதவி பிடித்துவிடுவீர்கள். உங்களில் சிலருக்கு கலப்பு திருமணம் நடக்கும். ஏற்றுமதி- இறக்குமதி தொழில் தொடர்புடையவர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை
மேற்கண்ட நாட்களில் பிறந்தவர்கள் மீன ராசிக்குட்பட்டவர்கள். அதிபதி குரு. இவர்களின் மலர் சம்பங்கி. தெய்வ வழிபாட்டின்போது, சம்பங்கி மலரை பயன்படுத்துங்கள். இந்த மாதம் நீங்களும், உங்கள் வாழ்க்கைத் துணையும் சேர்ந்து ஒரு புதிய தொழில் ஆரம்பிக்க போகிறீர்கள். அதில் நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்களோ, அந்தளவு பண வரவு இருக்கும். உங்களில் சிலருக்கு சீருடை துறையில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலர் மனை விஷயமாக அரசு சார்ந்து கடன் வாங்கக்கூடும். உங்கள் இளைய சகோதரி விஷயமாக ஒரு துன்பம் வரும். அல்லது உங்கள் வீட்டு பெண் பணியாளரால் ஒரு அவமானம் ஏற்படும். உங்கள் தொழில் சார்ந்து, இடம் வாங்குவீர்கள். இப்போது திருமணம் நிச்சயமானால், அது தாய்வழி சார்ந்த வரனாக அமையும். உங்கள் வாரிசு சார்ந்த சண்டையுண்டு. சினிமா கலைஞர்கள், டி.வியில் பணியாற்றுவோர், ஒரு சண்டை மற்றும் அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பங்கு வர்த்தகம் சரிப்படாது. உஷ்ண சம்பந்த நோய் வரும். உங்களில் சிலர் உங்கள் தாயாருடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பிக்கக்கூடும். வீடு மாற்றினால், கவனமாக இருக்கவும். ரியல் எஸ்டேட் துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால் நல்லது. சீருடை பணியாளர்கள் ஒரு நன்மை கிடைக்கப்பெறுவர். உங்கள் மாமியார் பெயரிலுள்ள வீடு கிடைக்கும். அரசியல்வாதிகள், தங்களின் பிறந்த ஊரில், ரொம்ப அலையும், அதிக செலவும் செய்ய வேண்டியிருக்கும் மட்டுமல்லாது, தங்களின் தொண்டர்களுக்கும், உணவு இருப்பிட வசதி என ஏதோ ஒருவகையில் செலவு வந்துகொண்டே இருக்கும். செலவுசெய்தே, அரசியல்வாதிகள் ஓய்ந்துபோய் விடுவார்கள். சமையல் கலைஞர்கள் நிறைய பயணம் சென்று சமையல் தொழில் செய்யவேண்டியிருக்கும். இந்த மாதம் பெண் பணியாளர்களிடம் வெகு கவனமாக இருக்கவேண்டும்.