1, 10, 19, 28.

இந்த எண்களில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கம் பெற்றவர்கள். தலைமைப் பண்பு மிக்கவர்கள். இந்த மாதம், இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு, அரசு பணி கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் தனியார் வேலை கிடைக்கப்பெறுவர். வேலை வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். பணவரவு என்பது மாச சம்பளத்தை பொறுத்தது. வணிகர்கள், சொந்தத் தொழில் செய்பவர்கள், ஒரே விதமான பணவரவு பெறுவர். உங்களின் இளைய சகோதரி, பெரிய தொழிற்சாலையில் வேலைக்கு சேர்வார். வீட்டுக்கடன் கிடைக்கும். பெற்றோர் நலன் கவனிக்கப் படவேண்டும். வாரிசுகளின் திருமணம் நடக்கும். ஏற்கெனவே வந்த மருமகன், முறுக்கிக்கொண்டு திரிவார். கலைஞர்கள் வேலைப்பளுவும், வருமானமும் பெறுவர். பங்கு லாபம் தரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். காதல், கலப்பு திருமணம் நடக்க வாய்ப்புண்டு. லஞ்ச தொகை வரவு அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் வெற்றி தரும். சொந்தத் தொழில் செய்வோர் வேலைப்பளு காண்பர். அரசியல்வாதிகள், கண்டிப்பாக சேவை செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். 

Advertisment

பரிகாரம்: அருகிலுள்ள கோவிலில் சூரிய பகவானையும், ஈசனையும் வணங்குவதோடு, அங்குள்ள அர்ச்சகருக்கு தேவையறிந்து உடலுழைப்பு கொடுங்கள்.

Advertisment

2, 11, 20, 29.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர்கள், சந்திரனைப்போலவே அழகும், பொறுமையும், வேகமும் கொண்டவர்கள். இந்த மாதம், காதல் திருமணம் நடக்கும். அதுவும் மிகப்பெரிய செல்வாக்கான, கௌரவமான வரனுடன் காதல் கல்யாணம் நடக்கும். இந்த திருமணம், உங்களுக்கு பணவரவு மற்றும் தொழில் வாய்ப்பும் கொண்டுவரும். வியாபாரத்துக்கு என்றே தனியாக கைபேசி வாங்குவீர்கள். பணியாள் மாற்றம் உண்டு. இளைய சகோதரம் இடம் மாறுவார். அது திருமணம் அல்லது வியாபாரத்தில் இருக்கும். உங்கள் மூத்த சகோதரிக்கு திருமணம் நடக்கும். அல்லது குழந்தை பிறக்கும். இதனால் உங்கள் தாயார், அவரிடம் அதிக அனுசரணை காட்டுவார். வீடு லாபம் தரும். கலைஞர்கள் வெகு மேன்மை காண்பர். பங்கு வர்த்தகம் பல மடங்கு உயரும். செக்யூரிட்டி, சம்பந்த தொழில்புரிவோர் லாபமும் மேன்மையும், வெகுஜன சந்திப்பும் பெறுவர். வேலை மாற்றம் கண்டிப்பாக உண்டு. சிலர் வேலையை விட்டுவிட்டு, தொழில் ஆரம்பித்துவிடுவர். உங்கள் தந்தை, அவர் வேலையை, அவரே பார்த்துக்கொள்ளும் நிலை உண்டு. தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள், இந்த மாதம் தொடங்கவும், அரசியலில் உள்ளோர் நிறைய சந்திப்புக்கள் நடத்துவர். வழக்குகள் தள்ளிப்போகும், 

பரிகாரம்: அம்பாளையும், சந்திரனையும் வணங்கி, அங்குள்ள அர்ச்சகருக்கு காபி, டீ, பால் வாங்கிக் கொடுங்கள். 

Advertisment

3, 12, 21, 30.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கம் பெற்றவர்கள். எனவே நியாயமான, தர்மமான, அறிவும், சிந்தனையும் கொண்டவர்கள். இந்த மாதம் திருமணம் நடக்கும். அது உங்கள் தொழில் சார்ந்து, அறிமுகமான நபருடன், விருப்பத் திருமணமாக இருக்கும். இதில் ஒருவர், மிக செல்வம்மிக்கவராக இருப்பார். பணவரவு சம்பந்த தரவுகள், கைபேசியில் கொட்டும். வீடு சம்பந்தமாக, நிறைய சந்திப்புகள் நடக்கும். சினிமா கலைஞர்கள், வீரமான, உக்ரமான பாத்திரமேற்று நடிப்பர். இதன்மூலம் செல்வம், செல்வாக்கு, பிற நாட்டு வாய்ப்பும் பெறுவர். பங்கு வர்த்த முதலீடுகள், செமத்தியான வருமானம் தரும். உங்கள் வாரிசுமூலம் வெளிநாட்டு பணம் கிடைக்கும். சிலர் அரசு அல்லது அரசியல் சார்ந்த வேலை பெறுவர். உங்கள் தந்தை, பணவரவு தருவார். தொழில் பங்குதாரருடன் சேர்ந்து, தொழில் வளர்ச்சி பெறுவீர்கள். இந்த வளர்ச்சி செல்வத்தை பெருக்கும். அரசியல்வாதிகள், இந்த மாதம் அநியாயத் துக்கு, பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அது வாரிசுக்காவும் அல்லது வாழ்க்கைத் துணைக்காகவும் இருக்கலாம். சீருடை பணியாளர்கள், வெகுதூர மாற்றம் பெறுவர். 

பரிகாரம்: சங்கரநாராயணரை வணங்க வும். கோவில் குருக்களின், வீட்டுத் திருமணத் துக்கு தேவைக் கேட்டு, முடிந்த பண உதவி செய்யவும். 

4, 13, 27, 31.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கம் பெற்றவர்கள். எதையும் குயுக்தியாக பெரிய அளவில், சற்று ரகசிய மாக செய்யும் குணமுள்ளவர்கள். இந்த மாதம், உங்கள் புத்திசாலித்தனத்தால் நல்ல பணவரவு பெறுவீர்கள். எனினும் உங்கள் கைபேசியின் ஒரேயொரு தகவல், உங்கள் மொத்த பணத்தையும் கொண்டு போய் விடும். எனவே, கைபேசி விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் பெற்றோர்வகையில் செலவு ஏற்படும். மருமகன்- மருமகள் சார்ந்து, செலவுசெய்ய வேண்டியிருக்கும். உங்கள் மாமனாரின் தொழில் விஷயமாக உதவிசெய்ய வேண்டியிருக்கும். சிலர் தொழில் முதலீடு சம்பந்தமாக, கடன் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள், தாங்கள் இருக்கும் இடத்துக்கும், சொந்த பூர்வீக இடத்துக்கும் அலைய வேண்டியிருக்கும். கலைஞர்கள் டி.வி. சீரியலில் முதலீடு செய்வர். பங்கு வர்த்தகம் பற்றி யோசிக்க வேண்டாம். சீருடை சம்பந்த ஒப்பந்தம் மாறும். தொழில் பணியாளர் அல்லது விளம்பர நிறுவனத்தை மாற்றுவீர்கள். இந்த எண்ணில் பிறந்த காவல்துறை உயரதிகாரி கவனமாக இருக்க வேண்டும். 

பரிகாரம்: வராஹி அம்மனை வணங்கவும். சாலை அமைக்கும் பணியாளர்களுக்கு, அவர்களின் செலவுக்கு பணம் கொடுங்கள். 

5, 14, 23.

இந்த எண்காரர்கள், புதன் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர்களின் அறிவு, புத்திசாலித் தனம் என இவை ரொம்ப குசும்பு பிடித்ததாக இருக்கும். அதிலும் இந்த மாதம், இன்றும், இன்னும் புத்தி கூர்மையாகும். இதனைக் கொண்டு, தொழிலை முதன்மை இடத்துக்கு கொண்டு வந்துவிடுவர். இவர்களின் பல தொழில்கள், பங்கு சந்தையில் பட்டியல் இடப்படும். சிலர் தொழில்களின் பங்குகள் அதிக முகமதிப்பும், லாபமும் பெறும். சிலர் மிகச் சிறந்த பங்குகளை வாங்கி குவிப்பர். இவர்களின் தொழில் மேன்மைக்கு உதவும் வகை வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்வர். அப்படியே வியாபாரத்துக்கு, சொந்த இடம் வாங்கி விடுவர். பண விஷயமெல்லாம். நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இந்த மாதம், உங்கள் பணியாளர் விஷயமாக, பெரிய அவமானம் மற்றும் காவல்துறை வரை செல்வது என இருக்கும். சிலர் வீடுகளில், இளம் பெண்கள், வீட்டு வேலை செய்பவருடன், அதிக நட்புகொள்ள வாய்ப்பு தெரிகிறது; கவனம் தேவை. வீட்டிலேயே, வெளிநாட்டு பணி செய்வீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒருவர், அறுவை சிகிச்சைக்கு உட்படுவர். அரசியல்வாதிகள் தங்கள் வாரிசு சம்பந்தமாக செலவு, அலைச்சல் கொள்வர். கலைஞர்கள் எங்காவது அடிபட வாய்ப்புண்டு. 

பரிகாரம்: நரசிம்மரை வணங்கவும். ஆசிரிய பெருமக்களுக்கு முடிந்த உதவியை செய்யுங்கள். 

6, 15, 24.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள். எனவே எந்தச் செயலிலும், ஒரு நேர்த்தியும், அழகும் இருக்கும். இந்த மாதம் பணவரவு மிக செழிப்பாக அமையும். உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலில், மிக நல்ல உயர்வு அடையப்பெற்று, அதன்மூலம் பணவரவு உண்டாகும். சிலரின் வீடுகளை அரசு எடுத்துக்கொண்டோ அல்லது விற்பதாலோ, நல்ல பண செழிப்பு  கிடைக்கும். வீடு, வாகன சம்பந்த நஷ்ட ஈட்டுத்தொகை கைக்கு வரும். இளைய சகோதர திருமணம் நடக்கும். உங்கள் வாரிசுகளில் சிலர் வேலையில் சேர்வர். கலைஞர்கள், பிறமொழி படங்களில் வேலை, புகழ், அதிர்ஷ்டம் பெறுவர். பங்கு வர்த்தகம் பரவாயில்லை. இப்போது கிடைக்கும் வேலை தகவல் தொடர்புடையதாக இருக்கும். இந்த மாதம் திருமணம் நடந்தால், மிக படோபடமாக, அரசியல் தலைவர்கள் வருகையுடன், மிக செலவுடன் நடக்கும். பூர்வீக வீடு பணம் கொண்டுவரும். அரசியல்வாதிகள், தங்கள் கட்சி தவிர்த்த மற்ற கட்சியினரோடும் நிறைய சந்திப்புகள் நடத்த வேண்டியிருக்கும். பிறந்த ஊர் சார்ந்த அலைச்சலும், செலவும் உண்டு.

பரிகாரம்: துர்க்கையை விளக்கேற்றி வணங்கவும். வீடு கட்டும் பெண் தொழிலாளர் களின் பயண செலவுக்கு உதவவும்.

7, 16, 25.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கம் பெற்றவர்கள். இந்த மாதம் சீருடை சார்ந்த பணி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் இளைய சகோதரிக்காக கடன் வாங்க நேரிடும். உங்கள் பெற்றோர், இவ்வளவு நாள் பிறருக்கு செய்த உதவி, சேவை அர்ப்பணிப்பு, இவை இப்போது பெரும் பாராட்டைப் பெறும். அரசு பணி செய்வோர் பதவி உயர்வு பெறுவர். உங்கள் ஆபிஸில், நிறைய பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பீர்கள். உங்கள் எதிரிகளும் உங்களிடம் பணிவு காட்டுவர். கலப்பு திருமணம் நடக்கும். மறுமணம் நடக்கும். சில அரசியல்வாதிகள் தாங்கள் மந்திரி ஆவதற்கு காய் நகர்த்துவர். சில அரசியல்வாதிகள், குறுக்குவழியில் தங்கள் வாரிசை அரசியலுக்குள் புகுத்துவர். மாணவர்கள், மருத்துவ படிப்பை எதிர் நோக்கியிருந்தால், அது சார்ந்த படிப்பு கிடைக்கும். சில மருத்துவர்கள், அறுவை சிகிச்சை படிப்பில் முதன்மை பெறுவர். விளையாட்டு வீரர்கள், அரசு வேலை பெறுவர். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமை விநாயகரை வணங்கவும். மனபிறழ்வு கொண்டவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுங்கள். 

8, 17, 26.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர்கள் நல்ல உழைப்பாளிகள். தங்கள் கடும் உழைப்பினால், உயர்வு பெறுபவர்கள். இந்த மாதம் உங்கள் எண்ணம், லட்சியம், ஆசை இவை நிறைவேறக் காண்பீர்கள். அது வீடு வாங்குவதாக இருக்கலாம். வாரிசு சம்பந்தமாக அமையலாம். வேலை அல்லது வேலையில் பதவி உயர்வாக இருக்கலாம். திருமணமாக இருக்கக்கூடும். லஞ்சப் பண வரவாக இருக்கலாம். ஆன்மிக தரிசனமாக இருக்கலாம். வழக்கின் வெற்றியாக விளங்கலாம். தொழிலில் முதன்மையும், பரவலாகவும் தெரியலாம். அரசியலில் ஈடுபடுவதாக இருக்கலாம். வேறு கட்சிக்கு மாறுவதாக அமையலாம். மூத்த சகோதர சம்பந்தமாக விளங்கலாம். சமையல் கலைஞர்களின் கனவாக இருக்கக்கூடும். பெண்ணுக்கு, ரொம்பநாள் தடைப்பட்ட, திருமணம் கை கூடுவதாகவும் இருக்கலாம். ஆக, நீங்கள் எதனை எதிர்பார்த்து, பிரார்த் தனைகள் செய்தீர்களோ, அது அனைத்தும் நிறைவேறக் காணலாம். 

பரிகாரம்: மலை உச்சியிலுள்ள முருகரை வழிபடவேண்டும். சமையல் கலைஞர்களின் தேவைக் கேட்டறிந்து உதவவும்.

9, 18, 27.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள். இந்த மாதம் தொழில் விஷயத்தில் ஒரு மிகப்பெரிய உயர்வும், ஒரு அவமானமும் ஒரு சேரப் பெறுவர். அதுபோலவே பெரிய கௌரவம் கிடைக்கும்போது, ஒரு கீழ் சொல்லும் சேர்ந்தே கிடைக்கும். உங்கள் சாமர்த்தியமான பேச்சு தொழிலை உயர்த்தும். நல்ல உழைப்பாளியான பணியாளர்கள் கிடைப்பர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கொண்டு முழியாய் முழிப்பார்கள். சில மந்திரிகள், ஆளும் கட்சியினரால் சற்று பந்தாடப்படுவர். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புண்டு. திருமணம் தேடிவரும். காதல் மணம் நடக்கும். காவல் துறையினர் கவனமாக பொதுமக்களிடம் பழகவேண்டும். பொதுமக்களும் கூடியமட்டும், காவல் துறையினர் அருகில் போகாமல் இருப்பது நல்லது. இன்ஷுயூரன்ஸ் ஆட்கள் நிறைய கமிஷன் காண்பர். உங்கள் தந்தை ஆன்மிக பயணம் செல்வார். 

பரிகாரம்: துர்க்கையை வணங்கவும். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டோருக்கு, தேவைக் கேட்டறிந்து உதவி செய்யவும்.

___________
தை மாத கிரக நிலைகள் 

சூரியன்

தை மாதம் சூரியன் எப்போதும் மகர ராசியில் இருப்பார். சூரியன் அரசாங்கத்தைக் குறிப்பார். இந்த மாதம் கால புருசனின் 10-ஆமிடத்தில் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். இதனால், ஏதோ காரணத்துக்காக, அரசு ஊழியர்கள், அரசாங்கத்தின் வேலைப்பளு கூடி, பெண்டு நிமிர்த்திவிடும். இதில் இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. இந்த தை மாதம் இந்த வருடத்தில், சூரியனுடன் செவ்வாய், சுக்கிரன், புதன் இவர்கள் சேர்க்கை. இதில் ஆளும் கட்சியைக் குறிக்கும். செவ்வாய் உச்ச நிலையில் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. எனவே, அரசாங்கம் என்ற ஊழியர்கள், ஆளும் கட்சியால் அதிக வேலை வாங்கப்படுவார்கள். பாதுகாப்புத் துறையும், அரசாங்கத்தை அதிக கெடுபிடி செய்யும். எப்போதுமே, தை, மாசி மாதங்களில், சூரியன், மகரம், கும்பம் போன்ற சனி வீடுகளில் இருப்பார். எனவே அந்த மாதங்களில், அரசாங்கம், ஏதோ ஒருவித இன்னலுக்கு ஆட்படும். இதற்கு சனிக்கு, சூரியனை கண்டாலே ஆவாது என்பது காரணமாகும். கூடவே, புதன் என்ற எதிர்கட்சியும், சுக்கிரன் என்ற கூட்டணிக் கட்சியும் சேர்ந்தே உள்ளனர். எனவே, அரசாங்க அமைப்பு, யாருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கும் நிலை ஏற்படும்.

செவ்வாய்

இவர் ஆளுங்கட்சியை குறிப்பார். இந்த தை மாதம் முழுவதும் இவர் உச்சமாகி உள்ளார். எனவே ஆளுங்கட்சி, அதிரிபுதிரி பண்ணும். கூடவே இருக்கும் அரசாங்க கிரகம் சூரியன். எனவே அரசாங்க அலுவல்கள், அரசு பணியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவரையும் தனக்கு தோதுப்பட்ட விதத்தில் மாற்றி அமைத்துவிடும். இதனால் ஆளுங்கட்சியின் ஸ்த்ரத்தன்மை வலுவாகும். இவ்வளவு பண்ணிட்டோம். இந்த கூட்டணிக் கட்சியை ஒரு வழி பண்ணிவிட மாட்டோமா என்று, கூட்டணிக் கட்சிகளை தங்கள் விருப்படி, இணைத்துக்கொள்வர். எதிர்கட்சியான புதன், தை மாதம் பாதிவரை, இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழியாய் முழிப்பார். அப்புறம் கிரேட் எஸ்கேப் ஆகிவிடுவார். ஆக, இந்த தை மாதம், ஆளுங்கட்சியின் மாதம் என்றே சொல்லலாம். 

புதன்

இவர் எதிர் கட்சியைக் குறிக்கும். கிரகம். தை மாதம் 15-ஆம் தேதிவரை மகர ராசியில், அரசுக் கிரகம் சூரியன், ஆளுங்கட்சி கிரகம் செவ்வாய், கூட்டணி கட்சி கிரகம் சுக்கிரன் என இவர்களுடன் மட்டுமல்ல, இவர்களுக் கிடையே மாட்டிக்கொண்டு படாதபாடு படுவார்கள். ஆளுங்கட்சி மிக பலமாக இருப்பதால், எதிர் கட்சியைப் பார்த்து, வெவ்வே என நக்கலடிக்கும். நிஜமாகவே எதிர் கட்சியினரால் எதுவும் செய்ய முடியாமல் போகும். எனினும் தை மாதம் 15-ஆம் தேதிக்குபிறகு ஆறுதலும், தேறுதலும் உண்டாகும். 

குரு 

குரு காலபுருசனின் 3-ஆமிடத்தில், இருபுறமும் கிரகங்களின்றி உள்ளார். தனது சுய சாரம் பெற்றுள்ளார். குருவின் பார்வை புண்ணியத்தால், நிறைய திருமணங்கள் நடக்கும். வெளிநாட்டு வர்த்தகம் மேன்மை அடையும். குரு, காலபுருசனின் 11-ஆமிடமான அரசியல் ஸ்தானத்தைப் பார்ப்பதால், நாட்டின் அரசியல் நிகழ்வுகளை, எல்லை மீறாமல், ஒரு கட்டுக்குள் வைத்திருப்பார். வெளிநாட்டு, வணிகம் சீர் அடையும். இந்த மாதம், குருபகவான், தனித்து, எந்த சுபர் அல்லது பாபர் பார்வையுமின்றி நிற்கிறார். 

இதனால் நீதித்துறை, கல்வி போன்ற குரு பகவானின் காரக செயல்கள் முழுமையாக தன்னிச்சையாக நடக்கும். ஆன்மிகமும் முழு சுதந்திரத்தோடு இயங்கும். சாலை பயணங் கள் ஒழுங்குபடுத்தப்படும். தை மாதம், தனித்த குரு எவ்வித பலன்கள் தரப்போகிறார் என்பது ஆச்சர்யமான எதிர்பார்ப்பாக உள்ளது.

சுக்கிரன்

இவர் கூட்டணிக் கட்சிகளைக் குறிப் பார். இவர் மகர ராசியில், சூரியன்+ உச்ச செவ்வாய்+ புதன்கூட உள்ளார். உச்ச செவ்வாய் எனும் ஆளும் கட்சி ஆட்களால் மிக மிரட்டப்படுவார். எனவே, எதற்கு வம்பு என, ஆளுங்கட்சியினருடன், அனுசரணையாக நடந்துகொள்வார். மேலும் காவல் துறையின் செயல்களுக்கு, அது கண்டிக்கத்தக் கதாக இருந்தாலும், கண்டுகொள்ளாமல், மௌனமாக இருப்பர்.

சனி

இது காலபுருசனின் 11-ஆம் வீடான அரசியல் ஸ்தானத்தில் ஆட்சியாக அமர்ந்துள்ளார். கூடவே ராகுவும் உள்ளார். சிறப்பாக, குரு பார்வையைப் பெறுகிறார். சனி+ராகு எத்தனை கோல்மால் செய்தாலும், குருவின் பார்வை கட்டுப்படுத்தும். இது நீதிமன்றங்கள் வழியே கட்டுப்பாடுகள் உண்டாகும். இந்த மாதம் அரசியல்வாதிகள், தகவல் தொடர்புமூலம் பரப்புரை செய்வர். அது நல்ல விஷயம், நாதாரி விஷயம் என எதுவாக இருப்பினும் செய்தி தொடர்பே பிரதானமாக இருக்கும். எதிர்கட்சியும், ஆளும் கட்சியும் கோட்டைத்தாண்டி நீயும் வராதே, நானும் வரமாட்டேன் என ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டுக்கொள்வர். இது சனிபகவான் குரு சாரம் பெற்றிருப்பதாலும், குருபார்வை பெற்றிருப்பதாலும் குரு தனித்து இருப்பதாலும் இவ்விதம் கூறப் பட்டது.

ராகு

காலபுருசனின் அரசியல் இடத்தில் ராகு அமர்வு. கூடவே சனியும். எனவே அரசியலை அதகளம் செய்ய ராகு முழு முனைப்பு காட்டுவார். ஆனால் குரு பார்வை, ராகுவின் அடாவடி செயல்களுக்குத் தடை போட்டுவிடுவார். இந்த கிரக நிலையால் வெளிநாடு சம்பந்த இனங்கள் நல்ல நன்மை தரும் விதத்தில் இருக்கும்.

கேது

இவர் காலபுருசனின், 5-ஆமிடமான சிம்மத்தில், சுக்கிர சாரத்தில் உள்ளார். அவரால் முடிந்தமட்டும் காதல் விஷயங்களை கட்பண்ணிவிடுவார். கூட்டணிக் கட்சிகளுக்கிடையே, மந்திரி பதவி சார்ந்து, தொண்டர் கூட்டம் சார்ந்து அல்லது இளம் பெண் சார்ந்து கலகத்தை மூட்டி, பிரிக்கும் வேலையை செய்வார். கூட்டணிக் கட்சிக்களுக்குள் ளேயே, சண்டையும் பதட்டமும், பிரிவும் இருக்கும். இதனால் இவர்கள் ஆளுங் கட்சியை, வேறு வழியின்றி அனுசரித்து போக நேரிடும். 

வானிலை

தை மாதம் 5, 6, 7-ஆம் தேதிகளில், மகர ராசியில், சூரியன், செவ்வாய் எனும் நெருப்பு கிரகம் + சுக்கிரன் எனும் நீர் கிரகம் + புதன் எனும் காற்றுக் கிரகம் இவர்களோடு பயணம். மகரம் ஒரு நில ராசி. இதில் செவ்வாய் உச்சம். எனவே சுள்ளென்று வெயில் அடிக்க வாய்ப்பு அதிகம்.

தை 7, 8, 9 கும்ப ராசியில் சனி+ராகுவுடன் பயணம். காற்று அதுவும் வெப்பக் காற்று வீசும். தை 9, 10, 11 திருக்கணிதப்படி சனி மீன ராசியில் உள்ளார். அதன்படி சந்திரன் இந்த தேதியில் மீன ராசியில் சென்றால், கடல் பின் வாங்குவத போன்ற செயல் நடக்கும்.

தை 15, 16, 17 மிதுன ராசியில் சந்திரன் ஓட்டம். 

அங்கு குரு உள்ளார். இது ஒரு காற்று ராசி. எனவே அதிக காற்று வீசும்.

தை 20, 21, 22 சந்திரன், சிம்ம ராசியில் கேது பகவானுடன் நகர்வு. வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். அதற்காக மழையெல்லாம் பொழியாது.

தை 27, 28, 29 விருச்சிக ராசியில், சந்திரன் பயணம். இது ஒரு நீர் ராசி. சந்திரன் நீர் கிரகம். 

எனினும் சனியின் பார்வை, விருச்சிகத்தில் விழுவதால், மழை பெய்ய வாய்ப்பு கிடையாது.

இந்த மாதம் நீர் ராசிகளில், சந்திரன் செல்லும் போதும், மழை பெய்ய வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. வெப்பமான வானிலை இருக்கும்.