Advertisment

மாசி மாத எண்ணியல் பலன்கள் - ஆர். மகாலட்சுமி

number-palan


1, 10, 19, 28 

உங்கள் எண்ணின் நாயகன் சூரியன் ஆவார். பிறரை ஆதிக்கம் செலுத்துவதில் பெரு விருப்பம் கொண்டவர்கள். இந்த மாதம் நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டியிருக்கும். அது திருமண நிகழ்வாக இருக்கலாம். அரசியல் சார்ந்து அமையலாம். இளைய சகோதரியின் தொழில் சார்பாக சிலருடன் பேச வேண்டியிருக்கும். பெற்றோர் நலன் தொடர்பாக மருத்துவரை கலந்து ஆலோசிப்பீர்கள். வாரிசுகளின் திருமண விஷயமாக அமையலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்ப நிகழ்வாக இருக்கலாம். தொழில் விரிவாக்கம் குறித்து, அரசு அதிகாரிகளை சந்திக்க முனைவீர்கள். உங்கள் அரசியல் முன்னேற்றம் சார்ந்து, பிற கட்சி பிரதிநிதிகளுடன் விவாதிக்க நேரம் ஒதுக்குவீர்கள். பங்குவர்த்தகம் லாபம் தரும். கலைஞர்கள் நல்ல மேன்மை காண்பர். வாரிசுகள் நல்ல முன்னேற்றம் அடைவர். நவகிரகங்களையும் சுற்றிவந்து வணங்கவும். சூரியனுக்கு விளக்கேற்றவும். மேற்கண்ட சந்திப்புக்களின்போது, சிலசமயம் சண்டை, கருத்து வேற்றுமை வர வாய்ப்புள்ளது. எனவே கூடியமட்டும், சந்திப்புக்கு முன்னால், அவர்களுக்கு ஏதாவது சாப்பிட வைத்து விடுங்கள். 

Advertisment

2, 11, 20, 29 

உங்கள் எண் நாயகன் சந்திரன் ஆவார். பிறரிடம் அன்பு செலுத்துவதில் பெரு விருப்பம் கொண்டவர்கள். இந்த மாதம் உங்கள் மனதில் சந்தேகம் நிரம்பி வழியும். அது மனதிற்குள்ளேயே இல்லாமல், வாக்கிலும் வெளிப்படும். இதனால் உங்களை சுற்றி உள்ளவர்கள், உங்களுடன் சண்டையிடும் நிலை ஏற்படும். உங்கள் இளைய சகோதரன், மூத்த சகோதரி, உங்கள் தாயார், உங்கள் வாழ்க்கைத்துணை என இவர்கள் உங்களை கரித்துக்கொட்டுவர். இது உங்களின் முறைகெட்ட காதலால் இருக்கும். வீடு முதலீட்டு விஷயத்தில் ஏமாந்ததாக அமையும். பெண்ணின் தகாத நட்பு, ரகசியம் வெளிவருவதால் அமையும். குடி, போதை பழக்கத்தால் அடி விழும் நிலை ஏற்படும். பணிபுரியும் ஆட்களால் அவதி உண்டாகும். உங்கள் வாழ்க்கைத்துணையின், தொழிலில் பாதிப்பு ஏற்படுவதால் ஏற்படும். உங்கள் பணம்


1, 10, 19, 28 

உங்கள் எண்ணின் நாயகன் சூரியன் ஆவார். பிறரை ஆதிக்கம் செலுத்துவதில் பெரு விருப்பம் கொண்டவர்கள். இந்த மாதம் நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டியிருக்கும். அது திருமண நிகழ்வாக இருக்கலாம். அரசியல் சார்ந்து அமையலாம். இளைய சகோதரியின் தொழில் சார்பாக சிலருடன் பேச வேண்டியிருக்கும். பெற்றோர் நலன் தொடர்பாக மருத்துவரை கலந்து ஆலோசிப்பீர்கள். வாரிசுகளின் திருமண விஷயமாக அமையலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்ப நிகழ்வாக இருக்கலாம். தொழில் விரிவாக்கம் குறித்து, அரசு அதிகாரிகளை சந்திக்க முனைவீர்கள். உங்கள் அரசியல் முன்னேற்றம் சார்ந்து, பிற கட்சி பிரதிநிதிகளுடன் விவாதிக்க நேரம் ஒதுக்குவீர்கள். பங்குவர்த்தகம் லாபம் தரும். கலைஞர்கள் நல்ல மேன்மை காண்பர். வாரிசுகள் நல்ல முன்னேற்றம் அடைவர். நவகிரகங்களையும் சுற்றிவந்து வணங்கவும். சூரியனுக்கு விளக்கேற்றவும். மேற்கண்ட சந்திப்புக்களின்போது, சிலசமயம் சண்டை, கருத்து வேற்றுமை வர வாய்ப்புள்ளது. எனவே கூடியமட்டும், சந்திப்புக்கு முன்னால், அவர்களுக்கு ஏதாவது சாப்பிட வைத்து விடுங்கள். 

Advertisment

2, 11, 20, 29 

உங்கள் எண் நாயகன் சந்திரன் ஆவார். பிறரிடம் அன்பு செலுத்துவதில் பெரு விருப்பம் கொண்டவர்கள். இந்த மாதம் உங்கள் மனதில் சந்தேகம் நிரம்பி வழியும். அது மனதிற்குள்ளேயே இல்லாமல், வாக்கிலும் வெளிப்படும். இதனால் உங்களை சுற்றி உள்ளவர்கள், உங்களுடன் சண்டையிடும் நிலை ஏற்படும். உங்கள் இளைய சகோதரன், மூத்த சகோதரி, உங்கள் தாயார், உங்கள் வாழ்க்கைத்துணை என இவர்கள் உங்களை கரித்துக்கொட்டுவர். இது உங்களின் முறைகெட்ட காதலால் இருக்கும். வீடு முதலீட்டு விஷயத்தில் ஏமாந்ததாக அமையும். பெண்ணின் தகாத நட்பு, ரகசியம் வெளிவருவதால் அமையும். குடி, போதை பழக்கத்தால் அடி விழும் நிலை ஏற்படும். பணிபுரியும் ஆட்களால் அவதி உண்டாகும். உங்கள் வாழ்க்கைத்துணையின், தொழிலில் பாதிப்பு ஏற்படுவதால் ஏற்படும். உங்கள் பணம் தொலைவதாலும் ஏற்படலாம். இத்தனையிலும் ஒரு ஆறுதல், எல்லா அவமானங்களும் வீட்டிற்குள்ளேயே முடிந்துவிடும். வெளியே ரொம்ப தெரியாது. அதனை குரு பாதுகாத்து ரட்சிப்பார். நவ கிரகங்களையும் வணங்கி, சந்திர பகவானுக்கு விளக்கேற்றவும். இந்த மாதம் உங்களையும், வீட்டையும் பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாகிவிடும். 

Advertisment

3, 12, 21, 30 

உங்கள் எண்ணின் நாயகன் குரு ஆவார். பிறரிடம் அன்பாக, மரியாதையாக பேசுவதிலும், பழகுவதிலும் பெருவிருப்பம் கொண்டவர்கள். இந்த மாதம் திருமண தகவல் நிலையத்தை அணுகுவீர்கள். அல்லது கைபேசியில், பதிவிடுவீர்கள். பங்குவர்த்தகம், நல்ல பணவரவு தரும். கலைஞர்களின் அல்லது வாரிசுகளின் வெளிநாட்டு பயணம் உறுதியாகும். வெளிநாட்டில் இருந்து, வாரிசுகளின்மூலம் பணவரவு கிடைக்கும். இந்த மாதம் நிறைய தகவல்கள், தரவுகள் கிடைக்கும். அது அனேகமாக ஒப்பந்த, குத்தகை விஷயமாக அமையும். ரியல் எஸ்டேட், வேலை, திருமணம், ஆன்மிக பயணம், தொழில் விரிவாக்கம், தொழில் தொடங்குவது, அரசியல், மூத்த சகோதரியின் வேலை, சமையல் பற்றிய தகவல் என இவை சார்ந்த தகவல்கள் நிறைய கிடைக்கும். இதன்மூலம் நிறைய பேர், பணவரவு செழிப்பும் காண்பீர்கள். நவகிரகத்தில் குரு பகவானை வணங்கவும். கைபேசிமூலம், தொழில் ஆரம்பிக்க, பணவரவு பெற விரும்புவர்கள், இந்த மாதத்தை பயன்படுத்திக்கொள்ளவும். கோவில் அர்ச்சகருக்கு, மஞ்சள் வஸ்திரம் வாங்கிக் கொடுங்கள். 

4, 13, 22, 31

உங்கள் எண்ணின் நாயகன் ராகு ஆவார். உங்களுக்கு எந்த விஷயத்தையும், அது நல்லதோ- கெட்டதோ பெருந்தனமாக பண்ண பெரு விருப்பம் கொள்வீர்கள். உங்கள் தொழில் எதுவாக இருப்பினும், அதன் தளம் எப்படி இருப்பினும் அது சார்ந்த அலைச்சல் இருந்து கொண்டேயிருக்கும். முதலீடும் செய்துகொண்டே இருப்பீர்கள். எனில் உங்களுக்கு பணவரவு வந்து கொண்டேயிருக்கும் என்றாகிறது. மேலும், பங்குவர்த்தகம், கலைஞர்கள், வாரிசுகள்மூலமும் செல்வ செழிப்பு உண்டாகும். இந்த மாதம் உங்கள் பெற்றோ ருக்கும், உங்களுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்படும். அதுபோல கணவன்- மனைவியும் சண்டையிட்டுக் கொள்வர். உங்கள் வாரிசு களின் காதல் விஷயங்கள் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் கலப்பு மத காதலியுடன் ஓடிவிடக்கூடும். அரசியல்வாதிகள், பூர்வீக இட நன்மை பெறுவர். நவகிரகங்களையும் வணங்கவும். ராகுவிற்கு விளக்கேற்றி வணங்கவும். பைரவர் சன்னதியில் நல்லெண்ணெய் விளக்கேற்றவும். பிற மத பெரியவருக்கு சிறு தூரப் பயண டிக்கெட் பணம் கொடுக்கவும். 

5, 14, 23

உங்கள் எண்ணின் நாயகன் புதன் ஆவார். உங்களின் செயல்களில் புத்திசாலித் தனம். நகைச்சுவையும் கலந்திருப்பதில் பெரு விருப்பம் கொண்டவர்கள். இந்த மாதம் வேலை கிடைத்துவிடும். அது அனேகமாக தனியார் வேலையாக அமையும். அரசு வேலை கிடைப்பதுபோல் இருந்து கை நழுவிவிடும். கடன் கிடைக்கும். உங்கள் இளைய சகோதரனால், தலைகுனிவு உண்டாகும். உங்கள் வாழ்க்கைத்துணை, புது தொழில் தொடங்குவார். உங்கள் முதலாளி உங்களை ரொம்ப வேலை வாங்குவார்கள். இதனால் அவருடன் சண்டை வர வாய்ப்பு ஏற்படும். இந்த மாதம் உங்கள் உடல்நிலையை, நன்கு பரிசோதித்துக் கொள்ளுங்கள். பிளட் பிரஷர் மானாவாரியாக அதிகரித்து, எப்போதும் யாரிடமாவது சண்டை போட்டு, கத்த வேண்டும்போல இருக்கும். சிலசமயம், உங்கள் மாமனாரால் பெருங்கோபம் ஏற்பட வாய்ப்புண்டு. நவகிரகங்களை வணங்கவும். அதில் புதன் கிரகத்துக்கு விளக்கேற்றி வணங்குங்கள். உங்கள் தாய்மாமன் அல்லது போக்குவரத்து துறையில் பணி புரியும் மனிதரின் தேவைக் கேட்டு அறிந்து உதவுவங்கள். 

6, 15, 24 

உங்கள் எண்ணின் நாயகன் சுக்கிரன் ஆவார். எந்தச் செயலையும், அழகுணர் வோடும், கலை நயத்தோடும் செய்வதில் பெரு விருப்பம் கொண்டவர்கள். இந்த மாதம் உங்களில் பலருக்கு திருமணம் நடக்கும். திருமணத்தில் சீருடை சம்பந்தம் இருக்கும். வேறு சிலரின் இளைய சகோதரத்துக்கு திருமணம் நடக்கும். புதிய கைபேசி வாங்குவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை பெயரில் மனை வாங்க இயலும். அரசியல்வாதிகள், தங்கள் வாரிசுகளுடன் கருத்து வேற்றுமை கொள்வர். சிலரின் ஆரோக்கியம் கெடும். கலைஞர்கள், வெளிநாடு, வெளியூர் செல்வர். பங்குவர்த்தகம் குழப்பம் தரும். சில வாரிசுகளின், கலப்பு திருமணம் நடக்கும். சிலர் வேலை கிடைத்து, வேறிடம் நகர்வர், ஆன்மிக, குலதெய்வ யாத்திரை உண்டு. சில அரசியல்வாதிகள் அல்லது சமையல் கலைஞர்கள் அல்லது மூத்த சகோதரர், காதல் விஷயமாக மனப்பிரிவினை கொள்ள நேரிடும். சில, பல கெட்ட பழக்கங்கள் வெளிச்சத்துக்கு வரும். சட்டபுறம்பான எந்தச் செயலையும், இந்த மாதம் கைவிட்டு விடுங்கள். நவகிரகங்களையும் வணங்கவும். சுக்கிர கிரகத்துக்கு, நெய் விளக்கேற்றி வழிபடவும். பிற இன, குழந்தை பெற்ற பெண்ணின் தேவைக் கேட்டறிந்து உதவவும். 

7, 16, 25 

உங்கள் எண்ணின் நாயகன் கேது ஆவார். எந்த விஷயத்தையும் பூடகமாக, ரகசியமாக, சுருக்கமாக செய்வதில் பெரு விருப்பம் கொண்டவர்கள். இந்த மாதம் உங்கள் தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படும். சிலர், தாங்கள் இருக்கும் கட்சித் தலைமையுடன் கருத்து வேற்றுமை கொள்வர். நிறைய மனிதர்களுடன் சந்திப்பு நிகழும். அத்தனை பேருடனும், ஏதோ ஒரு கருத்தில் முரண்பட்டு நிற்பீர்கள். பெண் பணியாட்கள் எதிர்மறை கருத்துக்களைக் கூறி நோகடிப்பர். தம்பதிகளுக்குள், வழக்கம்போல, சண்டை உண்டாகும். பங்கு வர்த்தகம் எதிர்பாராத விஷயமாக, இந்த மாதம் பண வரவைத் தரும். கலையுலகினர், நம்பிக்கைத் துரோகத்தை எதிர்கொள்வர். தொழில் துறையினர், அரசுவகை எரிச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாதம் ஒண்ணும் சரிப்பட்டு வரலை என ஆதங்கம் கொள்ள நேரிடும். நவகிரகங்களை வணங்கவும். கேது பகவானுக்கு விளக்கேற்றி வணங்கவும். விநாயகர் வழிபாடு நன்று. எல்லாரிடமும் கோபமும், எரிச்சலும் படாமல் இருக்கவும். அதுவே பரிகாரம் ஆகும். 

8, 17, 26 

உங்கள் எண்ணின் நாயகன் சனி ஆவார். நன்கு உழைப்பதில் பெரு விருப்பம் கொண்டவர்கள். இந்த மாதம் கண்டிப்பாக மனை யோகம், நிலத்தின்மூலம் லாபம் இவை கிடைக்கும். இதுபோல, உங்கள் வேலையில், இடமாற்றம் உண்டாகும். உங்கள் இளைய சகோதரன் வேறிடம் செல்வார். பணியாட்கள் மாறுவர். கைபேசி ஸ்டேட் அப்பை மாற்றுவீர்கள். பிறமத காதல் உண்டாகும். கலைஞர்கள், பிறமொழி படங்கள்மூலம் வளம் காண்பர். வேலையில் பதவி உயர்வு உண்டு. அரசியல்வாதிகள் மிக மேன்மை காண்பர். அதுவும் தங்களின் பிறந்த இடத்தில், அதிர்ஷ்டம் அடைவர். உங்களின் பணவரவு மேம்படுவதால், கடன் அடையும். சிலரின் நோய் தாக்கம் மட்டுப்படும். உங்களின் தந்தை எங்காவது விழக்கூடும். அவரால் மருத்துவமனை செல்ல நேரிடும். பங்கு வர்த்தகம்மூலம் பணவரவு உண்டு. இந்த மாதம் உங்கள் வாரிசுகளின் திருமணம், சீருடை வகையினருடன் சம்பந்தம் பெறும். நவகிரகங்களை வணங்கவும். சனீஸ்வர பகவானுக்கு, விளக்கேற்றவும். சனீஸ்வர சன்னதி அர்ச்சகருக்கு, கைபேசி சார்ஜ் பணத்தை கொடுக்கவும். 

9, 18, 27

உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய் ஆவார். எந்தச் செயலையும், வேகமாக சுறுசுறுப்பாக செய்வதில் பெரு விருப்பம் கொண்டவர்கள். இந்த மாதம் உங்கள் தொழிலில், குறுக்குவழியில், முதன்மை பெறுவீர்கள். இந்த மாதம் நல்ல லாபம் கிடைக்கும் மாதமாகும். வாக்குமூலம் தொழில் செய்பவர்கள், ஒப்பந்தம், குத்தகை எடுத்தவர்கள், ரியல் எஸ்டேட் துறையினர், பங்குவர்த்தகம் செய்வோர், கலைஞர்கள் மாத சம்பளம் வாங்குவோர், பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறுவர். வழக்கறிஞர்கள், வணிகர்கள் நல்ல மேன்மை பெறுவர். ஏற்றுமதி- இறக்குமதி செய்வோர் மற்றும் உளவுத்துறை சார்ந்தோர் தொழிலில் ஏற்றம் பெறுவர். அறநிலையத்துறை சார்ந்த பணியாட்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் ஸ்தரத்தன்மை பெறுவர். அரசியல்வாதிகள் நிறைய மக்களின் மற்றும் கூட்டணி கட்சியினரின் சந்திப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்வர். நவகிரகங் களை வணங்கவும். செவ்வாய் கிரகத்துக்கு விளக்கேற்றவும். முருகரை வணங்கவும். சிறு வயது பையன்கள், எங்காவது அடிபட்டுவிட்டால், தேவையான உதவி செய்யுங்கள்.        

om010226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe