நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்துகிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுவதால் இதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisment

நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல்வழங்கப்பட்டு வருகிறது. ஆறு துறைகளில்குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும், கல்வி, கலாச்சார அல்லது அறிவியல் முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்காக சுவீடன் மற்றும் நார்வே அமைப்புகளால் வழங்கப்படுவது நோபல் பரிசு ஆகும்.

Advertisment

1. இயற்பியல்  (Physics)

2. வேதியியல் (Chemistry)

3. இலக்கியம் (Literature)

4. மருத்துவம் (Medicine)

5. அமைதி (Peace)

6. பொருளாதார அறிவியல் 
        (Economic Science)

ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் பிறந்த அவர் வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.

டைனமட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். தனது கடைசி உயில் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.

Advertisment

ஆண்டுதோறும் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

நோபல் பரிசு வழங்கும் இடங்கள்

அமைதிக்கான நோபல் பரிசு - நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம்,பொருளாதார அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள்-சுவீடன் நாட்டில் வழங்கப் படுகின்றன.

சுவீடன் நடுவண் வங்கி  
பொருளாதார அறிவியல் நோபல் பரிசு 

பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு 1968-இல் சுவீடன் மத்திய வங்கியினால் அதன் 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின்அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

அமைதி நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாடு வழங்குகிறது. ஆல்பிரட் நோபலின் உயிலின் படிஇப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு வழங்குகிறது.    

பரிந்துரை செய்ய தகுதியானவர்கள், உலகளவில் முக்கியமாக உள்ள வேட்பாளர்களை, பிப்ரவரி மாதத்தில் பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலம், நோபல் குழுவிற்கு, தேர்வு செய்யப் போதுமான நேரம் கிடைக்கும்.

பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை பரிந்துரைக்குழு ஆய்வு செய்யும். நார்வே நாடாளுமன்றத் தால் தேர்வு செய்யப்பட்ட இந்த ஐந்து பேர் கொண்ட குழு, பரிந்துரைக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

பரிசுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரங்களில் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஒருமித்த முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில், பெரும்பான்மை வாக்குகளின்படி முடிவு எடுக்கப் படும்.

பரிசுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி பரிசளிக்கும் விழா நடைபெறும்.

 மருத்துவம் 

medicine

இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சகாகுச்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது. 

மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது குறித்துவெளியிட்டிருக்கும் தகவலில், நமதுநோயெதிர்ப்பு அமைப்பு ஒரு பரிணாம வளர்ச்சியின் தலைசிறந்த படைப்பு  ஒவ்வொரு நாளும் அது ஆயிரக்கணக் கான வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகள் நம் உடலை ஆக்கிரமிக்கும் முயற்சிகளிலிருந்து பாதுகாக்கிறது. உடலில் இயங்கி வரும் நோயெதிர்ப்பு அமைப்பு இல்லாமல், நாம் உயிர் வாழவே முடியாது.

வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு, அவை உடலின் சொந்த  செல்களிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் திறன் நோயெதிர்ப்பு மண்டலத்தின் அற்புதங்களில் ஒன்று.

மனிதனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நுண்ணுயிரிகள் ஒன்றுபோல அடையாளம் காண எந்த சீருடையும் அணிந்திருப்பதில்லை. அவை அனைத்தும் வெவ்வேறு தோற்றங்களில்தான் உள்நுழைகின்றன. சில கிருமிகள் மனித செல்களைப் போலவும் இருக்கலாம். எனவே நோயெதிர்ப்பு அமைப்பு எதைத் தாக்க வேண்டும், எதைப் பாதுகாக்க வேண்டும் என்பதை எவ்வாறு கண்காணிக்கிறது? நோயெதிர்ப்பு அமைப்பு ஏன் நம் உடல் செல்களை தாக்குவதில்லை?

இந்த கேள்விகளுக்கான பதில் ஏற்கனவே தங்களுக்குத் தெரியும் என்று தான் மருத்துவ விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி யாளர்களும் நீண்ட காலமாக நம்பியிருந்தனர்.

உடலின் மைய நோயெதிர்ப்பு சகிப்புத் தன்மை எனப்படும் ஒரு செயல்முறை மூலம் நோயெதிர்ப்பு செல்கள் முதிர்ச்சியடைகின்றன.

இருப்பினும், நமது நோயெதிர்ப்பு அமைப்பு இதுவரை நம்பப்பட்டதை விடவும் மிக சிக்கலானதாக இருந்திருக்கிறது. மேரி இ பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல், ஷிமொன் சகாகுச்சி ஆகியோர் புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 2025-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரி இ பிரங்கோ, அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலையில் முனைவர்பட்டம் பெற்றவர். தற்போது சியாட்டிலில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனத்தில் திட்ட மேலாளராக உள்ளார்.

பிரட் ராம்ஸ்டெல், அமெரிக்காவில் உள்ள சோனோமா பயோதெரபிடிக்ஸ் நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார். 

ஷிமொன் சகாகுச்சி, ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பு சக்தி சார்ந்த துறையில் பேராசிரியராக உள்ளார்.

   இயற்பியல் 

இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் ஜான் கிளார்க், மிஷெல் எச்.டெவரே, ஜான் எம்.மார்டினிஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

எண்மத் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவரும் குவாண்டம் ஊடுருவல் (குவாண்டம் டனலிங்) ஆய்வு மேற்கொண்டதற்காக இவர்கள் மூவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

physics

ஒரு மின்சுற்றில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் டனலிங் மற்றும் ஆற்றல் அளவீடு இருப்பதை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக போதிய ஆற்றல் இல்லாத அணுத் துகள்கள் தடைகளைக் கடந்து செல்ல முடியாது. ஆனால், குவாண்டம் டனலிங் மூலம் ஆற்றல் தடைகளைக் கடந்து ஒருபுறமிருந்து மறுபுறத்துக்குஎல்கட்ரான் போன்ற அணுத் துகள் களைக் கடத்த முடியும்.

குவாண்டம் கணினிகள், குவாண்டம் கிரிப்டோகிராஃபி மற்றும் குவாண்டம் சென்சார்கள் உள்ளிட்ட குவாண்டம் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை மேம்படுத்த ஜான் கிளார்க், மிஷெல் எச்.டெவரே மற்றும் ஜான் எம்.மார்டினிஸ் கண்டுபிடிப்புகள் வழிவகுத்துள்ளன.இத்துடன் 119-வது முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் அடிப்படை கண்டுபிடிப்புகளுக்காக ஜான் ஜே. ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹின்டன் ஆகியோர் கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றது நினைவுகூரத்தக்கது.

   வேதியியல் 

இந்தாண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு உலோக-கரிம கட்​டமைப்பை உரு​வாக்​கிய ஜப்​பான், ஆஸ்திரேலியா மற்​றும் அமெரிக்க ஆராய்ச்​சி​யாளர்​கள்3 பேருக்கு அறி​விக்கப்பட்டுள்​ளது.

chemistry

இதில் சுசுமு கிடகவா, ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள கியோடோ நகரில் 1951-ஆம் ஆண்டு பிறந்தவர். வேதியியலில் பிஎச்டி படிப்பை முடித்த இவர் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல் ரிச்சர்ட் ராப்சன் பிரிட்டனை சேர்ந்தவர். இவர் 1937-ஆம் ஆண்டு பிரிட்டனில் உள்ள குல்ஸ்பர்ன் நகரில் பிறந்தார். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் படித்து முடித்தவர். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

உமர் எம் யாகி ஜோர்டான் நாட்டில் 1965-ஆம் ஆண்டு பிறந்தார். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் கவ்லி எனர்ஜி நானோ சயின்ஸ் இன்ஸ்ட்டி யூட்டின் நிறுவன இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

இவர்கள் உலோக - கரிம கட்​டமைப்பை உரு​வாக்​கும் ஆய்​வில் ஈடு​பட்​டனர்.

இவர்​கள் உரு​வாக்​கிய கட்​டமைப்​பில் உள்ள பள்​ளங்​களில் மூலக்​கூறுகள் உள்​வந்து வெளியே செல்​லும். பாலை​வனப் பகுதி காற்​றி​லிருந்து தண்​ணீரை எடுக்​க​வும், தண்​ணீரில் உள்ள மாசுக்​களை அகற்​ற​வும், கார்​பன் டை ஆக்​சைடை ஈர்க்​க​வும், ஹைட்​ரஜனை சேமிக்​க​வும், இந்த உலோக -கரிம கட்​டமைப்பை ஆராய்ச்​சி​யாளர்​கள் பயன்​படுத்​தினர்.

வேதி​யியல் ஆராய்ச்​சி​யாளர்​கள் சந்திக்கும் சவால்​களுக்கு தீர்வு காண உலோக - கரிம கட்​டமைப்பு புதிய வாய்ப்​பு​களை அளித்​துள்​ள​தால், இந்த கட்​டமைப்பை உரு​வாக்​கிய 3 விஞ்​ஞானிகளுக்​கும் வேதி​யியலுக்​கான நோபல் பரிசு பகிர்ந்​தளிக்​கப்​படு​வ​தாக ‘தி ராயல் சுவீடன் அறி​வியல் அகாட​மி’அறி​வித்​துள்​ளது.


பொருளாதார அறிவியல்

2025-ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பேராசிரியர்கள் மூவருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

economics

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் இவான்ஸ்டன் நகரில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோயர் மோகிர், அந்நாட்டின் ரோட் ஐலண்ட் மாகாணம் பிராவிடன்ஸ் நகரில் உள்ள பிரௌன் பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டர் ஹோவிட், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள காலேஜ் டி பிரான்ஸ் கல்லூரி பேராசிரியர் ஃபிலிப் அகியோன் ஆகிய மூவருக்கும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஜோயல் மோகிர் நெதர்லாந்தில் பிறந்தவர். பீட்டர் ஹோவிட் கனடாவிலும், ஃபிலிப் அகியோன் பிரான்சிலும் பிறந்தவர்கள்.

பொருளாதாரத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு புதிய வழிமுறைகளும் சிந்தனைகளும் எவ்வாறு ஊக்கமளிக்கும் என்பது குறித்து ஜோயல், பீட்டர், ஃபிலிப் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.புதிய சிந்தனைகள், பொருள்கள், சேவைகள், நடைமுறைகளால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி குறித்து விளக்கியதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூவருக்கும் நோபல் பரிசுடன் 11 மில்லியன்சுவீடிஷ் கிரோனர் (சுமார் 10 கோடி) வழங்கப்படும். பரிசுத் தொகையில் ஒரு பாதி ஜோயலுக்கு வழங்கப்படும். மீதி பாதி தொகை பீட்டர் மற்றும் ஃபிலிப்புக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு உருவாக காரணமான சுவீடனின் ஆல்பிரட் நோபல் நினைவாகபொருளாதாரத்துக்கான நோபல் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. அது ஆல்பிரட் நோபலின் நினைவாகபொருளாதார அறிவியலுக்கு வழங்கப் படும் பாங்க் ஆஃப் சுவீடன் பரிசு என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது.


இலக்கியம் 

 2025-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் என்ற ஹங்கேரி எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

literary

கடும் பயங்காரவாத சூழலுக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப் படுத்தியதை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ளதேர்வு கமிட்டிகளில் ஒன்றான இலக்கியத்திற்கான ராயல் சுவீடன் அகாடமி தெரிவித்தது.

1954-இல் ஹங்கேரியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கியூலா என்ற சிறிய நகரில் பிறந்தார் லாஸ்லோ. இவரது முதல் நாவல் ‘ஷாடான்டன்கோ’ 1985-இல் வெளியானது. இந்த நாவலும் ‘எதிர்ப்பின் மனச்சோர்வு’ (தி மெலன்க-லி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்) என்ற அவரது மற்றொரு நாவலும் ஆதிக்கத்துக்கு எதிரான தொடர் போராட்டங்களை விவரிக்கிறது. இந்த இரு நாவல்களும் ஹங்கேரியில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வரியில் மிகக் கூர்மையான கருத்துகளை விவரிக்கும் திறன் வாய்ந்த எழுத்தாளரான லாஸ்லோ கிராஸ்னஹோர்காய், 2015-இல் மேன் புக்கர் பரிசை பெற்றுள்ளார்.

இதுவரை 121 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்று பெருந்துயர்களையும் மனித வாழ்வின் பலவீனத்தையும் ஆழமாக விளக்கும் வகையில் எழுதியதற்காக தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


அமைதி 

2025-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய,வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

peace

மரியா கொரினா மச்சாடோ, கடந்த 14 மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும் கூட அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது அந்நாட்டு மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் அபிமானத்தைப் பெற்றுத் தந்தது. 

மரியா, வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட்ட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டினார். அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர அவர் வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பான் நாட்டின் நிஹோன் ஹிதான்கியோ என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டது. அந்த அமைப்பு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீச்சில் தப்பியவர்களுக்காக செயல்படும் இயக்கமாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் அமைதிப் பரிசுக்காக, 338 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் 244 தனிநபர்கள் சார்ந்தது, 94 நிறுவனங்கள் சார்ந்தது. ஜனவரி 31 தான் நோபல் அமைதி விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகளைப் பெற கடைசி நாள். நோபல் அமைதி பரிசுக்கானவர்களை தேர்வு செய்யும் நார்வேஜியன் நோபல் கமிட்டியும் யாரேனையும் பரிந்துரை செய்யலாம். ஆனால், அவர்கள் பிப்ரவரிக்குள் அந்தப் பரிந்துரையை செய்ய வேண்டும்.

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு நிராகரிப்பு ஏன்?

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் காலத்திற்குப் பிறகே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.அதாவது, பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு முன்பாக, நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிபர் டிரம்ப்பின் பெயரை பிப்ரவரி 1-க்குப் பிறகு பரிந்துரை செய்தன.

இது குறித்து ஹென்றி ஜாக்சன் சொசைட்டியின் வரலாற்று ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் தியோ ஜெனூ கூறுகையில், அமெரிக்க அதிபர்டிரம்பின் முயற்சிகள் நீண்ட காலமாக நிலைக்குமா?என்று நிரூபிக்கப்படவில்லை. குறுகிய காலத்தில் சண்டையை நிறுத்துவதற்கும், மோதலின் அடிப்படை காரணங்களை தீர்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என தெரிவித்துள்ளார்.