இன்றைய நிலையில் ஒருவரது ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதுதான் சிறந்த செல்வமாகும். ஜோதிடரீதியாக உடல் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கின்றபொழுது பல்வேறு தகவல்களை கடந்த சில வாரங்களாக உங்களுடன் பகிர்ந்துவருகிறேன். இந்த வரிசையில் ஒருவருக்கு காது கேட்கும் திறன் சிறப்பாக இருக்குமா, காது கேட்பதில் ஒரு சில பாதிப்பு ஏற்படுமா என்பதைப் பற்றி ஜாதகரீதியாக இந்த இதழில் பார்ப்போம்.
ஒருவருக்கு ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீடும், காலபுருஷப்படி 3-ஆவது ராசியான
இன்றைய நிலையில் ஒருவரது ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதுதான் சிறந்த செல்வமாகும். ஜோதிடரீதியாக உடல் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கின்றபொழுது பல்வேறு தகவல்களை கடந்த சில வாரங்களாக உங்களுடன் பகிர்ந்துவருகிறேன். இந்த வரிசையில் ஒருவருக்கு காது கேட்கும் திறன் சிறப்பாக இருக்குமா, காது கேட்பதில் ஒரு சில பாதிப்பு ஏற்படுமா என்பதைப் பற்றி ஜாதகரீதியாக இந்த இதழில் பார்ப்போம்.
ஒருவருக்கு ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீடும், காலபுருஷப்படி 3-ஆவது ராசியான மிதுன ராசியும் வலது காதுக்கும், ஜென்ம லக்னத்திற்கு 11-ஆம் வீடும், காலபுருஷப்படி 11-ஆம் வீடான கும்ப ராசியும் இடது காதுக்கும் மிக முக்கிய பங்கு வைக்கிறது. அடுத்து நவகிரகங்களில் காது கேட்கும் திறனை பற்றி பார்க்கின்றபொழுது புதன் பகவானும் குரு பகவானும் மிக முக்கிய பங்கு வைக்கிறார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் 3, 11-ஆம் பாவங்கள் சிறப்பாக இருந்து குரு, புதன் சிறப்பாக இருக்கின்றபொழுது அவர்களுக்கு காது கேட்கும் திறன் சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்புகள் இருக்கும். ஒருவர் ஜாதகத்தில் 3, 11-ஆம் வீடுகளில் பாவ கிரகங்களும் என வர்ணிக்கப்படக்கூடிய சனி, ராகு இருந்தாலும், புதன்- சனி, ராகு சேர்க்கை பெற்றிருந்தாலும், புதன் பலவீனமாக இருந்தாலும் ஜாதகருக்கு காது கேட்கும் திறனில் பாதிப்பு, அதற்காக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளக்கூடிய அமைப்புகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக 3-ஆம் வீட்டுக்கு 7-ஆம் வீடான 9-ஆம் வீட்டிலும், 11-ஆம் வீட்டுக்கு 7-ஆம் வீடான 5-ஆம் வீட்டிலும் பாவ கிரகங்கள் அமையப்பெற்று 3, 11-ஆம் வீட்டை பார்த்தாலும், புதன் பலவீனமாக இருந்தாலும் காது கேட்பதில் பிரச்சினை ஏற்படும்.
அதுபோல புதன் ஒருவர் ஜாதகத்தில் பலவீனமாக 6-ஆம் வீட்டில் இருந்தாலும், 6-ஆம் அதிபதி சேர்க்கை பெற்றாலும் அவர்களுக்கு காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகிறது.
3, 11-ஆம் வீடுகளில் சந்திரன் அமையப்பெற்றாலும், புதன் சந்திரன் இணைந்து பலவீனமாக இருந்தாலும் காதுகளில் நீர் வடியும் அமைப்பு, காதுகளில் உட்பகுதிகள் பாதிக்கக்கூடிய அமைப்புகள் ஏற்படும். புதனுடன் செவ்வாய் இணைந்து பாவ கிரக பார்வையோடு இருந்தால் காதுக்காக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஜாதகருக்கு ஏற்படும்.
பொதுவாக ஒரு ஜாதகத்தில் லக்ன பாவத்திற்கு 3, 11-ஆம் வீடும், புதனும் சிறப்பாக இருந்தால் மட்டுமே காது கேட்கும் திறன் சிறப்பாக இருக்கக்கூடிய ஒரு நிலையானது இருக்கும். 3, 11-ஆம் வீடுகளை பாவ கிரகங்கள் பார்ப்பதைவிட சுப கிரகங்கள் பார்த்தால் காது கேட்கும் திறன் நன்றாக இருக்கக்கூடிய ஒரு நிலை உண்டாகும். காதுகளில் பிரச்சினை இருப்பவர்கள் பரிகாரமாக லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
செல்: 72001 63001