மது தேடலை முன் முடிவு செய்துகொண்டு ஒரு இடத்திற்கு பயணம் மேற்கொண்டோமென்றால் அதற்குத் தொடர்பான தகவல்களை நம்மால் அவ்விடத்தில் பெற இயலும். எந்தவித நோக்கமும் இல்லாமல் மேற்கொள்கின்ற பயணங்களில் நம் பார்வைக்கு எட்டுகின்ற காட்சிகளையும் நிகழ்வுகளையும் ஆய்ந்தறிந்து தகவல்களாகப் பெறலாம். அப்படியானதொரு பயணமாக அரிசோனா மாநிலத்தில் இருக்கும் உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றான கிராண்ட் கேன்யானிற்குச் சென்றது அமைந்தது. அதிகாலை நேரத்தில் ஃப்ளாக் ஸ்டாஃப் லிருந்து (எப்ஹஞ்ள்ற்ஹச்ச்) எங்களது பயணத்தைத் தொடங்கி கிராண்ட் கேன்யானை நோக்கிய பாதையில் சீராகச் சென்றபோது கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம் குறைந்துகொண்டே வருவதை நாங்கள் உணரவேயில்லை. உயரமான மலைப் பகுதியிலிருந்து விலகி தொலைவு நோக்கி செல்லச் செல்ல அங்கு நிலவிய பனிப்பொழிவும் குளிரும் குறைந்தபடி அதிக வெப்பநிலையை நோக்கி நகர்ந்ததில் மட்டுமே அந்த மாற்றங்களைக் கண்டோம். கடந்த இரவு பொழிந் திருந்த பனி முழுவதும் ஃப்ளாக்ஸ்டாஃப் (எப்ஹஞ்ள்ற்ஹச்ச்)ஐ விட்டு விலகிச்சென்ற வழியின் இருபுறமும் ஆங்காங்கே குவியலாகப் படிந்து காட்சி கொடுத்தன. பாதையில் பொழிந்திருந்த பனித்தூவல்களை துரிதமாக செயல்பட்டு சாலையோரம் நகர்த்தியிருந்தார்கள்.

கடல் மட்டத்திலிருந்து அதிகப்பட்சமாக 8000 அடி உயரத்திலிருந்த ஃப்ளாக்ஸ்டாஃப் (எப்ஹஞ்ள்ற்ஹச்ச்) லிருந்து குறைந்தபட்சமாக 2600 அடி உயரத்திலிருந்த “கிராண்ட் கேன்யான்” ஐ சில மணி நேரங்களில் வந்தடைந்தோம். முதல் பார்வையில் இதுவரை கண்டிராத கற்பனைக்கு அப்பாற்பட்ட வேற்று கிரகத்தின் ஒரு பகுதியைப்போல அவ்விடம் உணரவைத்தது. வட அமெரிக்காவின் டெல்லவர் நகரத்தின் பரப்பளவை விட சற்றுக் கூடுதலான நிலப்பரப்பைக் கொண்ட (6,200 சதுர மைல்கள்) இப்பகுதியை நமது சாதாரண கண்களால் கண்ணுக்கு எட்டும் எல்லை வரை காணும்படி, தடுப்புச் சுவர்களே இல்லாமல் இருந்தது. நில மட்டத்திலிருந்து கீழாக;க் சென்றடையும்படி, பள்ளத்தாக்குகள் கீழ்நோக்கிய சரிவைக் கொண்டிருந்தன. கிராண்ட் கேன்யானை அதிகபட்சமாக நூறு மைல்கள் தொலைவிலிருந்து குறைந்தபட்சமாக சுமார் பத்து மைல்கள் தொலைவுவரை பரந்த அளவில் காண்பதற்கு நமது பார்வைத் திறனை அன்றைய காற்று மாசுபாட்டின் அளவே நிர்ணயிக்கிறது. 

கரிய மலையின் உச்சியில் நிகழும் பனிப் பொழிவு, வெப்பத்தில் உருகுவதால் உருவாகி ஓடும் கொலராடோ ஆறும் அதன் கிளைகளும் பள்ளத்தாக்குகளை செதுக்கியவாறு, நிலத்தைக் கூறுபோட்டு பல்வேறு மலைமுகடுகளாகப் பிரித்திருந்தன. சிவப்பு நிறத்தில் பரந்து விரிந்திருந்த அந்நிலத்தின் குறுக்குவெட்டுத் தோற்றங்கள் பள்ளத்தாக்குகளில் வெளிப்படுவதை ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருவதால், உட்புறத்திலிருந்து பூமியில் உருவான அடுக்குகளின் மீது மில்லியன் கணக்கான ஆண்டுகளின் காலப்பதிவுகளோடு கூடிய வரலாறு வெளிப்பட்டிருக்கிறது. இதன் முழுச் சூழலையும் காண ஆர்வம் கொண்டு ஃபிளாக்ஸ்டாஃப் (எப்ஹஞ்ள்ற்ஹச்ச்) லிருந்து அதிகாலையிலேயே பயணம் மேற்கொண்டு கிராண்ட் கேன்யான் வந்தடைந்தோம். வரவேற்பு அலுவலகத்தை அணுகி எவ்வகையான பயணங்களையெல்லாம் அவ்விடத்தில் மேற்கொள்ளலாம் என்பதை அறிந்து கொண்டோம். நம்மால் அங்கு செலவிட இயலுமெனும் நேரக் கணக்கையும் நாமறிந்த நமது உடலளவிலான வலிமையையும் மனதில் கொண்டு, அவற்றிற்கு ஏற்றபடி ஒன்றைப்க் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கடல் நீர் முற்றிலுமாக வற்றியதால் வெளிப்பட்ட நிலப்பரப்பில் கொலராடோவும் அதன் கிளை ஆறுகளும் மில்லியன்கணக்கான ஆண்டுகளாக, தொடர்ந்து இன்று வரை ஓடிக்கொண்டிருப்பதால் ஏற்படுகின்ற அரிப்பு இன்றைய கிராண்ட் கேன்யானை வடிவமைத்திருக்கிறது. காலப்போக்கில் காற்றாலும் மழையாலும் சேதமுற்றிருக்கிறது. இந்த நிலத்தைக் குறித்த தொடர் ஆராய்ச்சியில் வெளிப்பட்டிருக்கின்ற தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. அன்றைய எங்களது பயணத்தில் கிடைக்கின்ற தகவல்களைத் திரட்ட மனதளவில் தயாரானோம். வட அமெரிக்க மாகாணங்களான கலிபோர்னியா, டெக்ஸாஸ், ஃப்ளோரிடா, நியூயார்க், மற்றும் பிற நாடுகளான ஜெர்மனி, கனடா, ஜப்பான், நெதர்லாந்து, ஐக்கிய ராஜ்ஜியங்கள் ஆகிய இடங்களிலிருந்து மக்கள் இங்கு சுற்றுலா வந்திருந்தார்கள்.

Advertisment

ஒரு குழந்தையைப்போல தரையில் அமர்ந்தவாறு இரு கைகளைக் கூப்பிய அணில் ஒன்று ஒரு பூனையின் உடல் அளவிற்கு தோற்றம் கொண்டு கிராண்ட் கேன்யானின் சுற்றுவேலியின் அருகில் நின்றுகொண்டிருந்தது. முதன்முதலாக எங்களை வரவேற்றது அதுவாகத்தானிருக் கும். அங்கு வாழும் உயிரினங்களுக்கு எந்தவொரு உணவையும் சுற்றுலா செல்பவர்கள் கொடுக்கக்கூடாது என்கிற எச்சரிக்கை இருந்தாலும் அந்த அணில் உணவை எதிர்பார்த்து நிற்பதாகவே அதன் உடல்மொழியின் தோற்றமிருந்தது. அப்படியாக பழகியிருக்கிறது. எச்சரிக்கையை மீறி உணவு கொடுப்பவர் கள் சில நேரங்களில் அணிலால் காயமடைகிறார்கள் என்கிற தகவலையும் பின்னர் அறிந்தோம். முக்கிய நோக்கமாக விலங்குகள் அதன் இயல்பில் உணவைத் தேடி அருந்துகின்ற உணவுச் சங்கிலி துண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, விலங்குகள் யாசிப்பதற்குப் பழகிவிடாமல் இருக்கவேண்டுமென அவற்றிற்கு உணவு கொடுக்க தடை விதித்து அமெரிக்க அரசாங்கம் மனிதர்களை எச்சரிக்கிறது.

ஓராண்டில் நிலவுகின்ற குறைந்தபட்ச வெப்பநிலையாக இங்கு 0ளிஈக்கும் கீழாக -18ளிஈ வரை செல்கிறது. அதிகபட்சமாக 46ளிஈ வரை வெப்பமடைகிறது. நாங்கள் சென்றிருந்த அன்று 18ளிஈ என நிலவிய பகல் நேர வெப்பநிலை, எங்களுக்கு சாதகமாகவே இருந்தது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பருவமழையோடு கூடிய புயலும் மின்னலும் தாக்கலாமெனும் நிலையில், நாங்கள் சென்றிருந்த பிப்ரவரி மாதத்தில் சுற்றுலாவினருக்கேற்ற இதமான குளிர் வெப்பநிலை நிலவியது. மாபெரும் கடல் போல பரந்து விரிந்திருந்த கிராண்ட் கேன்யானின் மத்தியில் அமைந்துள்ள கல்பாப் பீடபூமியானது, அதன் இருபுறமும் வடக்கு விளிம்பு, தெற்கு விளிம்பு (சர்ழ்ற்ட் ழ்ண்ம்; நர்ன்ற்ட் ழ்ண்ம்) என அதனை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரம் கொண்ட வடக்கு விளிம்பு, தெற்கு விளிம்பைவிட ஆயிரம் அடிகள் கூடுதலான உயரத்தைக் கொண்டது. பருவ காலத்தில் மட்டுமே வடக்கு விளிம்புப் பாதை, சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்படுகிறது. தெற்குப் பகுதியைவிட கூடுதலான மழையையும் பனியையும் பெறுகின்ற வடக்குப் பகுதியிலிருந்து அனைத்து ஓடைகளும் தெற்கு நோக்கியே பாய்கின்றன. வடக்கு விளிம்பில் வெப்பநிலையும் குறைவு. கோடைகாலத்தில் இரு விளிம்புகளிலும் பலத்த மழை பொழிவதைக் காட்டிலும், குளிர்காலத்தில் பெய்யும் பனியால் இங்குள்ள சாலைகள் பயன்பாட்டிற்கே இல்லாமல் மூடப்பட்டு விடுகின்றன.

அன்றைய நாளில் நாங்கள் தெற்கு விளிம்பையே சுற்றுலாப் பகுதியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். 

Advertisment

வடக்கு நோக்கிய சரிவான விளிம்பு, சூரிய ஒளியின் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே பெறுகின்றன. அங்கு வளரும் தாவரங்களும் வடக்கு அட்சரேகைகளிலுள்ள தாவரங்களையே ஒத்திருக்கின்றன. 1700-க்கும் மேற்பட்ட வாஸ்குலர் தாவரங்கள், 150- க்கும் மேற்பட்ட பூஞ்சைகள், 50-க்கும் மேற்பட்ட பாசிகள், கிட்டத்தட்ட 200 வகையான லைச்சன்கள் போன்றவை வடக்குப் பகுதியில் வாழ்கின்றன. கிராண்ட் கேன்யானில் உயர மாறுபாடுகள் பரவலாக இருப்பதால் கனடாவில் நிலவுகின்ற குளிர்கால வெப்பநிலையிலிருந்து பாலைவனத்தின் உயர்ந்த பட்ச வெப்பநிலை வரை நிலவுகின்ற ஏழுவிதமான சூழல்களை இப்பகுதி கொண்டிருக்கிறது. குளிர் காலப்பனி பொழிகின்ற விளிம்புகளில் பைன் மரக் காடுகளைக் காணலாம். டியூசான், அரிசோனா (பன்ஸ்ரீள்ர்ய், ஆழ்ண்க்ஷ்ர்ய்ஹ) ஆகிய நகரங்கள் அமைந்துள்ள பாலைவனப் பகுதிகளில் வெப்பநிலை பொதுவாக வறண்டே காணப்படுகிறது. கடல் மட்டத்தோடு ஒப்பிடும்போது இப்பகுதிகளின் உயரம் குறைவானவை. ஆனாலும் ஆண்டுக்கு இரண்டு முறை கணிசமான மழையும் இங்கு பொழிந்துவிடுகிறது. 

தெற்கு விளிம்பில் கிழக்கு மேற்காக செல்லும் பாதையில் பயணித்து ஆங்காங்கேயுள்ள காட்சிகளைக் காண தயாரானோம். அப்பாதையில் நமது வாகனங்கள் செல்வதற்கு அனுமதியில்லை. அங்கு வாழும் உயிரிகளுக்குத் தொல்லை தராத வண்ணம், ஒலி மாசுபாடுகளையும் காற்று மாசுபாடுகளையும் தவிர்ப்பதற்காக, முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை இயங்குகின்ற பேட்டரியாலான பேருந்துகளில் அவர்களே இலவசமாக அழைத்துச்செல்கிறார்கள். எங்களுக்கு வழிகாட்டியாகக் கொடுக்கப்பட்ட வரைபடத்தைக் கொண்டு பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய இடத்தில் நின்றுகொண்டிருந்தோம். 

சற்று நேரத்திலேயே வந்துசேர்ந்த பேருந்தில் அங்கிருந்த யாவரும் வரிசையாக ஏறினார்கள். இருக்கையில் இடம் இருந்தவர்கள் அமர்ந்தவாறும் இல்லாதவர்கள் நின்றுகொண்டும் பயணித்தனர். 80 வயது மதிக்கத்தக்கவரை முதியவராக எண்ணி அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அவர் அமர வழிவிட்டபோது, அதனை புன்னகையோடு மறுத்துவிட்டு நின்றுகொண்டு பயணித்தவரை என்னவென்று சொல்வது? காலியான அவ்விருக்கையில் எங்களுக்கும் அமர்வதற்கு மனம்வரவில்லை. அவ்வூராரைப் போலவே அப்போது நடந்து கொண்டோம். நமது கிராமங்களில் அடிதடியென இருக்கைகளைப் பிடித்துக்கொண்டு, பாரங்களை சுமந்து வருபவர்களுக்கு இடம் கொடுக்காமல் ஜன்னலோரம் திரும்பிக்கொள்ளும் ஆண்கள் நினைவிற்கு வந்துபோனார்கள். கிராமத்துப் பகுதிகளில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் போக்கு வரத்து வசதிகளில் போதாமை நிலவுவதே இதற்குக் காரணமாக இருக்கிறது. நம் நாட்டு நகரங்களில் அவ்வாறு இல்லை. பெண்களும் ஆண்களும் இடவலப்புறமாக அவர்களுக்கான இருக்கையில் அமர்வதும் சுமையோடு வருபவர்களுக்கு இடம் கொடுப்பதும் அல்லது அமர்ந்திருப்பவர்கள் சுமந்து கொள்வதும் பொதுவான இயல்பாக நடைமுறையில் இருக்கிறது. இவற்றில் விதிவிலக்குகளும் உண்டு. 

சில நிமிட நேரப் பயணத்திற்குப் பிறகு பேருந்து நின்றதால் அங்கிருந்து இறங்கி அப்பகுதியிலுள்ள காட்சிகளைக் காண்பதற்காக சாலையை விட்டு கிராண்ட் கேன்யானின் சுற்றுப்புற வேலியின் அருகே சென்றோம். தெற்கு விளிம்பில் இட வலப்புறமாக உள்ள பாதையில், ஹெர்மிட்ஸ் ரெஸ்ட் (Hermits rest)  எனும் பகுதி முக்கியப் புள்ளியாக இருக்கிறது.  (Village root transfer,Trailview overlook, Maricopa Point, Powell Point, Hopi Point, Mohave Point, The Abyss, Monument Creek Vista, Pima Point, Hermits Rest, & Pima Point, Mohave Point, Powell Point, village route transfer) கிட்டத்தட்ட பத்து நிறுத்தங்களில் பேருந்து நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் தோன்றிய காட்சிகளை சில நிமிடங்கள் நின்று ரசித்தோம். காண்பதற்கு எல்லாப் பகுதிகளும் ஒரே தோற்றத்தைக் கொண்டிருப்பதாகவே தோன்றினா லும், அங்குள்ள அறிவிப்புகளை வாசித்த பிறகு, அவ்விடத்திலுள்ள வேறுபாடுகளை உணரமுடிந்தது. பாலைவனப் பகுதிகளில் நாங்கள் மேற்கொண்ட பயணத்தில் மக்களுடான தொடர்பு மிகவும் குறைவாகவும் இயற்கைச் சூழல்களுடனான இணைப்பு அதிகமாகவும் இருந்தது. அதற்குக் காரணமாக இருப்பது, இயற்கையோடு ஒன்றிய அப்பகுதியின் வாழ்விடங்கள் மனிதர்களால் அதிகப்படியான மாறுதலுக்கு உட்படாமல் சேதாரம் குறைந்து அவை பாதுகாப்பாக உள்ளன என்பதுதான்.

கொலராடோ ஆற்றின் அரிப்பால் ஏற்பட்ட பள்ளத்தாக்குகள் எஞ்சியிருக்கின்ற நிலப்பகுதிகளில் குறிப்பிட்ட வடிவங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சிலவற்றைக் காண்பதற்கு தென்னிந்தியாவிலுள்ள பழங்கால கோவில்களின் கோபுரம்போல உச்சியில் உயர்ந்து நிற்பதால் இந்திய புராணக் கதைகளைப் படித்து அறிந்தவரான புவியியலாளர் க்ளாரன்ஸ் டட்டன்(ஈப்ஹழ்ங்ய்ஸ்ரீங் உன்ற்ற்ர்ய்) என்பவர் அவற்றை “சிவன் கோவில்”(நட்ண்ஸ்ஹ பங்ம்ல்ப்ங்) எனும் பெயரால் அடையாளப்படுத்தியிருக்கிறார். இங்குள்ள மற்றொரு பள்ளத்தாக்கின் ஆழமான பகுதிக்கு விஷ்ணுவின் அடித்தளப் பாறை என்று பெயர் சூட்டியிருக்கிறார். சுமார் 4000- 5000 அடி (1,220மீட்டர்) ஆழம் கொண்டு இனி அங்கு வெளிப்படுத்துவதற்கு பாறை அடுக்குகளே இல்லையெனும் அளவிற்கு கொலராடோ ஆறு ஆழமாக வெட்டியிருக்கிறது. அமெரிக்கக் கண்டத்தின் மிக ஆழமான இடமாக இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படியான ஆழம் உருவாவதற்கு கொலராடோ ஆறு கடந்த ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான காலங்களை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மொத்த உலகில் இதைவிடவும் ஆழமான பகுதி நேபாளத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 காற்றும் மழையும் ஏற்படுத்திய அரிப்பால் இங்கிருந்த டைனோசர் காலத்து அடையாளங்கள் மறைந்துவிட்டன என்று ஆய்வில் தெரிவிக்கிறார்கள். 

இம்மண்ணில் இருக்கின்ற யுரேனியத்தை சில காலங்களாக மக்கள் பிரித்தெடுத்திருக்கிறார்கள். இவ்விடம் உலகுக்குத் தெரிய ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் இப்பகுதிக்கு வேட்டைக்காகவும் இக்காட்சிகளை ரசிப்பதற்காகவும் வந்திருக்கிறார். பிறகு இவ்விடத்தைப் பாதுகாக்க வேண்டுமென்கிற உணர்வில் சில சட்டங்களை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை நகர்ப்புற மனிதர்களின் ஆக்கிரமிப்பு இல்லாத இயற்கைப் பகுதியாக இவ்விடம் திகழ்கிறது. ஆனால் இயற்கையோடு இயற்கையாக அவற்றிற்கு தீங்கிழைக்காமல் வாழ்கின்ற பழங்குடி மக்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இப்பள்ளதாக்கின் அடியிலுள்ள நிலப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள் என்கிற செய்தி எங்களுக்கு மிகவும் வியப்பைக் கொடுத்தது. 

பள்ளத்தாக்கிலுள்ள மக்கள் தற்சார்போடு வாழ்வதற்கு அங்கு ஓடுகின்ற கொலராடோ ஆற்றின் டெல்டா பகுதியில் விவசாயம் செய்கிறார்கள். கிராண்ட் கேன்யானின் அடிப்பகுதிகளில் பல கிராமங்கள் உள்ளன. சோளம், பீன்ஸ், ஸ்குவாஷ், பருத்தி போன்றவற்றை இவர்கள் பயிரிடுகிறார்கள். 

பியூப்லோன்ஸ் எனும் பழங்குடியினர் இந்த நிலத்தைக் குறித்து நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். 

மூதாதையர்களாக இருக்கும் இவர்களையே இப்பகுதியில் குடியேறிய முதல் மக்களாகவும் குறிப்பிடுகிறார்கள். ஹோப்பி பகுதிகளில் சினகுவா பழங்குடி இனத்தினர் வாழ்கிறார்கள். இங்கு மட்டுமல்லாமல் தெற்கு யூட்டா, வடக்கு அரிசோனா போன்ற பகுதிகளில் நவாஜோ பழங்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கனடாவிலுள்ள கிரேட் ஸ்லேவ் ஏரிக்கு அருகிலுள்ள பால்கன் மக்களிடமி ருந்து வந்ததாக வரலாறு இருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தங்களது சொந்த நிலத்திலிருந்து இப்பகுதிக்கு விரட்டப்பட்ட பழங்குடியினரும் தங்களது முன்னோர்கள் சிந்திய ரத்தத்தின் வெளிப்பாடாக சிவந்த நிலப்பரப்பு சூழ்ந்த இப்பகுதி யில் வரலாற்றின் மிச்சங்களாக வாழ்ந்து வருகிறார்கள். 

இப்படியான வலிகளோடு இன்னும் பல ஆச்சரியங் களையும் இந்நிலப் பகுதி சுமந்துகொண்டிருக்கிறது. அடுத்த கட்டுரையில் அவற்றைக் காணலாம்.

(தொடரும்)