பொதிகை மலையை நோக்கிய சவலான பயணம்!

பொதிகை மலைக்கு முன்வாசல் தமிழ்நாடு. இந்த வழியாகத்தான் ஏகாந்த நிலையில் பொதிகை மலை உச்சியில்  அகத்தியப் பெருமான் தவமேற்றுகிறார். முற்காலத்தில் இது வழியாகத்தான் யாத்திரிகர்கள் சென்று அகத்தியர் அருளைப் பெற்றுள்ளனர்.

Advertisment

யாத்திரிகர்களுக்கு முக்கியமான யாத்திரை கைலாய மலை யாத்திரைதான். இந்த யாத்திரைக்காகத்தான் சிவபக்தர்கள் வாழ்நாளில் காத்திருப்பார்கள். அதேவேளையில் கைலாய மலை யாத்திரை செல்லும்முன்பு பொதிகை மலை யாத்திரை வந்தால்தான் அந்த யாத்திரை முழுமையாக நிறைவுபெறும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். ஆம்; கயிலை மலைக்கு செல்லும்முன்பு தென்கயிலையாம் பொதிகை மலைவந்து, அகத்தியரை வணங்கிச்செல்வதே சாலச்சிறந் தது. இதற்காகத்தான் பக்தர்கள் முட்டிமோதி முன்பதிவு செய்து பொதிகை யாத்திரையை மேற்கொள்கிறார்கள்.

மே மாதம் 1-ஆம் தேதி நெல்லை மாவட்டத்திலோ சுட்டெரிக்கும் வெயில். கோடைகாலத்தில் பயிர்கள் வாடிவிடும். ஆனால் தாமிரபரணி வற்றாது.

ஏன் தாமிரபரணி வற்றுவது இல்லை. இதுவும் அகத்தியரின் அருள்தான். 

 பொதிகை மலையில் தாமிரபரணி தோன்றும் பூங்குளத்தில் வற்றாத ஊற்றுகள் மட்டும் எப்போதுமே பொங்கி வழிகிறது. காரணம் இங்கு கோடை காலத்தில்கூட மேகக் கூட்டங்கள் சுற்றிச்சுற்றி வருகின்றன. இது இயற்கையின் அருள் கூடம்.

Advertisment

இந்த இடம் மேகக் கூட்டம் நிறைந்த இடம். கடல் மட்டத்தில் இருந்து 6,200 அடியிலுள்ளது பொதிகை மலை. இங்கேதான்  அகத்தியர் தவமேற்றுகிறார்.

அவர் எதற்காக தவமேற்றுகிறார்.

hill1

இந்த உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் தழைத்தோங்க வேண்டும் என்பதற் காகவே  தவமேற்றுகிறார்.

Advertisment

அவரிடம்  உலகமக்கள்  வளம் பெறவேண்டி கோரிக்கையை வைக்க கரடுமுரடான சாலையில் பயணிக்கிறோம்.  அட்டைக்கடியை பொருட்படுத்தாமல்  நடந்துசெல்கிறோம். கரடி, புலிகள், யானைகள், ராஜநாகங்களின் அச்சுறுத்தலில் இருந்து அகத்தியர் காப்பார் என்ற நம்பிக்கையுடன் பயணம் செய்கிறோம். 

செல்லும் வழியில் உயிரைப் பணயம் வைக்கும் பயணத்தில் அகத்தியரை நம்பி மலை ஏறுகிறோம். கயிற்றில் ஏறி, நம் மதியையே மயக்கும் சோலையில் வழிமாறி போகாமல் அகத்தியரை நோக்கி நகர்கிறோம்.  

கடினமான பயணம். இந்தப் பயணத்தில் நமக்கு எதுவும் வேண்டாம் என அவரைநோக்கி முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தே பயணிக்கிறோம்.  அதேவேளையில் இந்தப் பயணத்தினை முடித்து விட்டால் வேண்டும் வரமெல்லாம் நமக்கு கிடைத்துவிடும்.

இப்போது நமது பயணம் கேரளா வழியாக பொதிகை மலை நோக்கி செல்ல உள்ளது. 

ஒருகாலத்தில்  பொதிகையடி யில் வாழ்ந்த புருஷோத்தம்மன் அய்யா பாபநாசம் அணைவழியாக இந்தப் பயணத்தினை மேற் கொண்டார். பிற்காலத்தில் வனத்துறை தடைசெய்தபிறகு, அவரே தன்னுடன் யாத்திரிகர்களை அழைத்துக்கொண்டு கேரளா வழியாகத்தான் பயணம் செய்தார்.

ஒருமுறை பொதிகை மலைக்கு பயணம் செய்தவர்கள், போதும் என நிறுத்தி விடமாட்டார்கள். காரணம் எழில்கொஞ்சும் அழகை காணுவதற்கு மட்டுமல்ல, அகத்தியர் அருளை வருடந்தோறும் பெறவேண்டும் என்றும் நினைப்பர். அகத்தியர் உள்பட சித்தர்கள் உலாவிய அந்த இடங்களைக் காணும்போது நம்மை அறியாமலேயே பரவசம்  பற்றிக்கொள்ளும். ஆனால் இந்தப் பயணம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்குமா?

பொதிகை மலை சித்தர்கள் வாசம்செய்யும் இடம். நம் மக்களுக்கு நோய்தீர மருந்து சேகரித்த இடம். மருந்தை அரைத்து உருவாக்க, பாறைகளில் குழிபோட்டு வைத்திருக்கும் இடம்.  எனவே இங்கு நினைத்த மாத்திரத்தில் யாரும் செல்ல  இயலாது.  பொதிகை மலை சித்தர்கள் அழைப்பு கொடுத்தால் மட்டுமே செல்ல இயலும். சித்தர்கள் நம்மை  பார்க்க வேண்டும் என விரும்பினால் மட்டுமே  பொதிகை  செல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே பொதிகை மலை செல்ல 41 நாள் விரதமிருக்கும் பக்தர்களும் உண்டு.

பொதிகை மலை யாத்திரை என்பது சாதாரணமானது அல்ல.  கேரள அரசு அகத்தியரை காண இரண்டு திட்டங்களை வைத்திருக்கிறார்கள். ஒன்று சிவராத்திரி காலம். மற்றொன்று மே மாதங்களில் கோடைகாலம். இந்தக் காலங்களில் போட்டி போட்டுக்கொண்டு பக்தர்கள் முன்பதிவு செய்து அகத்தியரை தரிசிக்க கிளம்புகிறார்கள்.

சிவராத்திரி காலங்களில்  தினமும் நூறுபேரை யாத்திரை அனுப்பு கிறார்கள். இதற்கான முன்பதிவு டிசம்பர் மாதத்தில் ஆன்லைன் மூலம் துவங்கும்.   யாத்திரிகர்கள் ஜனவரி 14-ல் இருந்து சிவராத்திரி வரை பொதிகை மலைக்கு வந்து செல்வார்கள். இதற்கு 500 ரூபாய் டிக்கெட். 

hill2

இந்த யாத்திரிகர்களுக்காக பொதிகை மலைக்கு செல்லும் பாதையின்  பராமரிப்பு  டிசம்பர் மாதம்  நடைபெறும். அத்திரி மலையிலுள்ள காட்டு பங்களா வெள்ளையடிக்கப் படும். கேண்டீன் வசதி செய்யப்பட வேண்டிய இடத்தில் கேண்டீன் வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முன்பதிவு செய்தவர்கள் வரும் போது கேம்ப் அமைக்கப்பட்டிருக்கும். போனாக்காடு, லாத்தி மோட்டா, கருமேனியாறு, வாலை பிந்தியாறு, அட்டையாறு, அதிரி மலை ஆகிய கேம்ப்களில் தலா ஐந்து கைடுகளை வைத்திருப்பார்கள். முதலில் 25 பேர் அடங்கிய குழு போனாக்காட்டிலுள்ள கைடு வசம் ஒப்படைக்கப் படுவார்கள். அவர்களின் அடையாள அட்டையை வைத்துச் சரிபார்த்து, கையெழுத்து வாங்கி இரண்டாவது லாத்தி மோட்டா விலுள்ள கைடு வசம் ஒப்படைப்பார்கள். இதேபோல அடுத்து, அடுத்து யாத்திரிகர்கள் ஏறிக்கொண்டே இருப்பார்கள். மறு பக்கம் மக்களை கீழே இறக்கிக் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு பிக்கெப் ஸ்டேஷ னிலும் வயர்லெஸ் வைத்திருப்பார்கள். 24 மணி நேரமும் வனத்துறையினரின் கண்காணிப்புகள் இந்த வனத்துக்குள் இருக்கும்.

இந்தவேளையில் ஆங்காங்கே செட்கள் போடப்பட்டிருக்கும். அங்கு விலைக்கு உணவு கிடைக்கும். சாப்பாடு, கஞ்சி,  டீ, கடும் சாயா, பருப்பு வடை, சுக்குக் காப்பி, உப்புமா, பூரி, புட்டுக் கடலைக் கறி போன்ற உணவு கிடைக்கும். உணவு பார்சலாகவும், தனித்தனியாகவும் கிடைக் கும்.  இதற்கெல்லாம் முன்னால் பணம் கட்டிவிடவேண்டும். எனவே இந்தக் காலத்தில் நாம் உணவுக்காக சுமைதூக்க வேண்டிய அவசியம் இல்லை. 

தங்கும் இடத்தில் பாய்க்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் இந்த முன்பதிவு திறந்து ஒரு மணி நேரத்தில் நிரம்பி வழியும். இதில் இருந்தே பொதிகைமலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் ஆர்வம் நமக்கு புலப்படும். 

அகத்தியர் அருளைப் பெறவேண்டும் என பக்தர்கள் ஆன்லைனில் மோதிக் கொள்வார்கள். இதில் தமிழ் யாத்திரிகர்களே அதிகமிருப்பர்.

அடுத்து இரண்டாவது பயணம். இது கோடைக் காலங்களில் நடைபெறும். இதற்கு சிறப்பு பேக்கேஜ் உண்டு.

சித்ரா பௌர்ணமி மற்றும் மே 1-ஆம் தேதிகளில் மிக அதிகமானோர்  பொதிகை மலையில் அகத்தியருக்கு பூஜை செய்யச் செல்வார்கள். இந்த காலகட்டத்தில்தான் நாம் ஏற்கெனவே சொன்ன மாதிரி வித்தியாசமான பூஜையை அகத்தியருக்கு செய்வார்கள். அந்த பூஜையில் நாம் கலந்துகொள்ள வேண்டும் என்றால் மே மாதம் பேக்கேஜ் மூலம் செல்லவேண்டும். 

இதற்காக கேரள வனத்துறையிடம் முதலில் அனுமதி பெறவேண்டும்.  நமது ஆதார் கார்டை கொடுத்து பத்து பேர் குழுவாக பணம் கட்டி  நடுவன் காட்டிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். (கடந்த வருடம் இதற்கான கட்டணமாக பயணி ஒருவருக்கு ரூ. 2,500 விதிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் உயரவும் வாய்ப்பு உண்டு.

அதன்பின் இந்தப் பயணத்துக்கு நாள் குறிக்கப்படும். அந்த தேதியை வனத் துறையினர் நமக்கு செய்து தருவார்கள். மிருகங்கள் இறங்கி நிற்காத நேரம், அதிக மழை பொழியாத காலங்கள், மேகக்கூட்டம்  அதிகமில்லாத காலங்களாகப் பார்த்து நமக்கு தேதி குறித்துத் தருவார்கள்.
நாம் பயணத்துக்கு தயாராக  கேரளாவில் விதுரா என்ற இடத்துக்கு வந்து, அங்கிருந்து காணித்தலம் என்ற இடத்துக்கு வாகனத்தில் வரவேண்டும். அங்கே நமது அடையாள அட்டை சரிபார்க்கப்படும். அதன்பின் ஐந்து பேருக்கு இரண்டு கைடுகள் ஒதுக்கப்படுவார்கள். அப்போது பொதிகை மலை பயணத்துக்கு தயாராக போனாக்காடு வரவேண்டும்.

அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு பேய்ப்பாறை ரேஞ்ச் என்ற இடத்தில் இருந்து நடைபயணத்தினை துவங்க வேண்டும். இந்த நேரத்தில் நாம் உணவுப் பொருட்கள், அட்டைக்கடியில் இருந்து காப்பாற்றிக்கொள்ளத் தேவையான டெட்டால், மூக்குப்பொடி, மஞ்சள்பொடி போன்ற பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டும். நமக்கு சமைத்துத் தர கைடுகள்  உடன் வருவார்கள்.  நமக்கு சோர்வு ஏற்படும்போது, உடனே சக்தி கொடுக்க தேன் கலந்த பேரீச்சம் பழத்தினை கையில் வைத்திருப்பது நலம். குடிக்கத் தண்ணீரும் வைத்துக்கொள்ள வேண்டும்.  உடல்எடை கூடும் ஆடையை தவிர்க்கவேண்டும். நமது முன்னாலும் பின்னாலும் கைடுகள் நடக்க நமது பயணம் துவங்கும்.

hill3

ஓங்கி வளர்ந்த மரங்கள், ஒய்யாரமாய் நம்மைப் பார்த்து கையசைக்க, பெயர் தெரியாத பறவைகளின் கீச் சத்தங்கள் நம்மைப் பரவசப்படுத்த காட்டுக்குள் அகத்தி யப் பெருமானை காணும் சந்தோஷத்துடன் கிளம்புவோம். வானத்திலிருந்து சூரிய பகவான் நம் மீது படவேண்டும் என்று நினைத்தாலும்,  மரங்கள் அந்த ஒளியைத் தடுத்து ஒளிக் கீற்றுகளை மட்டும் நம்மீது பாய்ச்சும். 

என்ன ரம்மியமான இடம். இவ்விடத்தில்தான்  சித்தர் பெருமக்கள் அரசாட்சி புரிகிறார்கள்.

இங்குதான் எங்கோ அவர்கள் பறவை களாகவோ, ஏதோ ஒரு மரத்திலோ வாசம் செய்கிறார்கள். நம்மை கண்காணிக்கிறார்கள். நமது கஷ்டத்தினைத் தீர்க்க கருணை காட்ட இருக்கிறார்கள்.

முதலில் நம்மை எதிர்நோக்குவது தங்கைமச்சன் கோவில்.  இங்கே தங்கையன் என்பவர் ஒரு பிள்ளையாரை பிரதிட்சை செய்துள்ளார். அவருக்கு முதலில் தேங்காய் விடலை போட்டுவிட்டு கிளம்புகிறோம். "விநாயகனே வினைதீர்ப்பவனே; யானைக் காட்டுக்குள் இருக்கும் யானைகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்று' என  வேண்டிவிட்டு கிளம்புகிறோம்.

உண்மை தான் இங்கே சுற்றுலா சென்ற பயணிகள் யானையைப் பார்த்து அதை புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது யானை தாக்கி இருவர் பலியாகினர். எனவே தான் காட்டு யானையிடம் இருந்து விநாயகர் நம்மைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை யுடன் கிளம்பினோம். ஆனால் அகத்தியரை தேடிவந்த எவருக்கும் எங்கும் எப்போதும் தீங்கு ஏற்பட்டதே இல்லை.  

சிலவேளைகளில் நடந்துவரும் பக்தர்கள் நடக்க முடியாமல் தவித்து, இரவு தங்க நேரிடும். அந்தச் சமயத்தில் திக்குத் தெரியாத காட்டில் தங்கினால் நமக்கு யானை மற்றும் விலங்குகளால் பிரச்சினை ஏற்படும். எனவேதான் இதுபோன்ற கேம்ப் அமைத்து வைத்திருக்கிறார்கள். சுற்றி சுமார் ஐந்து அடி பள்ளம் தோண்டி, அதன் நடுவே குடில் போடப்பட்டிருக்கிறது. அந்தக் குடிலுக்குச் செல்ல சிறு கம்பு வைத்து பாலமும் அமைத்துள்ளனர். இந்த கேம்ப் நமக்கு நன்மை பயக்கும். அதாவது யானை விரட்டும்போது இந்த கேம்ப்புக்குள் சென்று விடவேண்டும். அதன்பிறகு நமக்கு யானையால் பிரச்சினை இருக்காது.

தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். 

அடுத்து பாறை இடுக்குகள், அடர்ந்த மரங்கள், ஏறினால் வழுக்கும் பாறைகள், சாய்ந்து கிடக்கும் மரங்கள் என்று ஓரளவு கடினமான பயணத்தை எதிர்கொண்டோம். அதைத் தாண்டியவுடன் அடர்ந்த காடு வந்தது. யானை பிரச்சினை மட்டுமல்ல, பாதை மாறிச்செல்லவும் வாய்ப்புள்ளது. இந்த இடத்தில் வந்துகொண்டு இருக்கும்போதே மற்றொரு பாதை வலது புறம் திரும்பும். இந்தப் பாதை வழியாகச் சென்றால் அங்கே அழகான மற்றும் ஆபத்தான அருவி உள்ளது. இந்த அருவிக்கு "போனோ பால்ஸ்' என்று பெயர். இந்த இடத்துக்கு மக்கள் வழி தவறிப் போகக்கூடாது என்று கம்புகளால் தடுப்பு வைத்து மறித்து வைத்துள்ளார்கள். இதுபோன்ற பல குறிப்புகளைக் கவனமாக பார்த்து யாத்திரிகர்கள் செல்லவேண்டும். எந்த காரணத்தினைக் கொண்டும் கைடுகளை விட்டு விலகி விடக்கூடாது.

அடுத்து கருமேனி ஆறுவந்தது.

அங்கு நம்மை எதிர்பார்த்து அட்டைகள் காத்திருந்தன. ஆற்றுக்குள் கால் வைத்தவுடன் அட்டைகள் வந்து அப்பிக்கொண்டன. பலர் அட்டைக்கடியில் சிக்கித் தவித்தனர். 

ஆனாலும் அகத்தியர்மீது பாரத்தினைப் போட்டுவிட்டு, கொண்டுவந்த மூக்குப் பொடியையும், உப்பையும் அட்டைகடித்த இடத்தில் தூவிவிட்டுக் கிளம்பினோம். குறிப்பாக மரத்து இலை, தழைகள் உள்ள இடத்தில் அதிகமாக கால் வைக்கக்கூடாது. அங்கேதான் அட்டைக்கூட்டம் அதிகமாக இருக்கும். பெரிய விலங்குகளைக்கூட கண்ணால் கண்டு அதற்கு ஏற்ப தப்பித்து விடலாம். ஆனால் அட்டை அப்படியல்ல. சிறு துரும்புபோல நமது உடலில் கடித்து ரத்தத்தினை உறிஞ்சி பெரிய உருவமாக மாறிவிடும். அட்டையை பிடுங்கி போட்டால்கூட ரத்தம் நிற்காது. எனவே கவனமாக செல்லவேண்டும்.

 எல்லாம் அகத்தியர் அருள். அவர்மீது பாரத்தைப் போட்டுவிட்டு "ஓம் அகத்தியர் நமோ' என கூறிவிட்டு  நம்பிக்கையுடன் செல்கிறோம். 

 எங்கும் ரம்யமாக இருந்தது.  தொடர்ந்து நடந்தோம். சிறு குருவிகள் சத்தம் கூடி ரம்ய மாக இசைத்துக்கொண்டிருந்தது. ஆனால் அட்டை கடித்து ரத்தம் வடிந்துகொண்டே இருந்தது.

உடன் வந்த பக்தர்கள் தேவாரம் பாட ஆரம்பித்துவிட்டனர். அதன்பிறகுதான் ஓரளவு எங்களுக்கு அட்டைக்கடி வேதனை குறைந்தது. நாங்களும் கவனமாக நடக்க ஆரம்பித்தோம்!

 கருமனை ஆற்றைக் கடந்தவுடன் ஒரு குளம் தென்பட்டது. அதைக் கண்டவுடன்,  "இந்த இடத்துக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வரும். இந்தக் குளத்தில் சர்க்கரை, உப்பு போட்டு வைத்திருப்பார்கள். இதை சமூகக் காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் பராமரித்து வருகிறார்கள். இதை "வன்னிய ஜீவி இடம்' என்று மலையாளத்தில் கூறுவார்கள். இந்த இடத்தில் யானைகளுக்குப் பாதுகாப்பு உண்டு' என்றார் உடன் வந்த கைடு.

அது சரி; யானைகள் வாழும் இடத்திற்குள் நாம் வந்திருக்கிறோம். அப்படியென்றால் யானை நம்மை விரட்டத்தானே செய்யும். நாட்டுக்குள் யானை வந்தால் நாம் சும்மாவா விடப்போகிறோம்.

 அடுத்து சிறிய ஏற்றம்... வேகமாக ஏற முயற்சித்தோம். நடக்க, நடக்க தூரம் குறையவில்லை. ஆனாலும், உற்சாகமாக இருந்தது. அதிகமான மரங்கள் இருந்த காரணத்தினால் வெயில் தெரியவில்லை. எனவே, எங்களுக்கு சோர்வு தெரியவில்லை. சிறிது நேரத்தில் கருமனை ஆறு கேம்ப் சென்று அடைந்தோம்.  

இதை "கேம்ப்- 3' என்று அழைக்கிறார்கள். 

இதுவும் லாத்தி மோட்டாவில் அமைக்கப்பட்ட கேம்ப்போலவே இருந்தது. இந்த இடத்தில் யானை வந்தாலும்கூட நாம் கேம்ப் உள்ளே சென்று தங்கிக்கொள்ளலாம்.  

அதைத்தொடர்ந்து வாலைபிந்தியாறு என்ற இடம் வந்தது. இது ஒரு அழகான அருவி. நடந்துவந்த களைப்பு தீர அனைவரும் இந்த அருவியில் குளியல் போட்டோம். உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. 

கொண்டுவந்த உணவை எடுத்து சாப்பிட்டோம். எந்த இடத்திலும் பிளாஸ்டிக் போடக்கூடாது.  உடன்வந்த கைடுகள் இதில் கவனமாக இருப்பார்கள். 

தமிழ்நாடு அரசு யாத்திரிகர்களை நிறுத்தக் காரணமே இறந்த யானை ஒன்றை  பிரேத பரிசோதனை செய்தபோது அதன் வயிற்றில் பிளாஸ்டிக் பேப்பர் இருந்ததே என்கிறார்கள்.

கேரள அரசு, அதேபோன்ற தப்பை நாம் செய்யக்கூடாது என கவனமாக இருக்கிறது.

16 கிலோமீட்டர் நடக்கவேண்டிய கரடு முரடான மலைப்பாதையில் நாம் ஆறு கிலோமீட்டர் நல்ல பாதையில்தான் நடந்துள்ளோம். இதற்கே, மதியம் ஆகிவிட்டது. இருட்டுவதற்குள் பத்து கிலோமீட்டர் போய்ச் சேரவேண்டும்!

அதுவும் கடுமையான ஏற்றம். இதற்கிடை யில் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் அட்டைகள் ஆட்டம் போட்டு எங்கள்மீது அப்பிக்கொள்ள ஆரம்பித்தது.

 எப்படியும் அகத்தியரைக் காண்போம் என்ற நம்பிக்கையில் "ஓம் அகத்தியர் போற்றி என குரல் கொடுத்து அடுத்த கடுமையான யாத்திரையைத் தொடர்ந்தோம்.