ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில், ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா -2025’ அழகி போட்டி நடைபெற்றது.
48 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா, மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரேகா சின்
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில், ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா -2025’ அழகி போட்டி நடைபெற்றது.
48 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா, மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரேகா சின்ஹா மகுடம் சூட்டினார்.
2-வது இடத்தை உ.பி.,யின் தன்யா சர்மாவும், மூன்றாவது இடத்தை ஹரியானாவின் மேஹா தின்காராவும் பெற்றனர்.
இறுதி சுற்றின்போது, பெண் கல்விக்காக வாதிடுவது மற்றும் பின்தங்கிய குடும்பங் களுக்கு பொருளாதார உதவி வழங்குதல் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியிருந்தால் நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள், ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ‘நான் பெண் கல்வி என்ற விருப்பத்தையே தேர்ந்தெடுப்பேன். இது ஒரு நபரின் வாழ்க்கையை மட்டும் மாற்றாது. அது இந்த நாட்டின், இந்த உலகின் எதிர்காலத்தின் முழு அடுக்குகளையும் மாற்றும்’ என பதில் அளித்தார்.
மணிகா விஸ்வகர்மா, ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரை சேர்ந்தவர். தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.
அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் படிப்பில் இறுதி ஆண்டு மாணவியான மணிகா, கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் ராஜஸ்தான் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோக தனது இளம் பருவத்திலேயே பல பிரிவுகளில் தன்னை நிரூபித்துள்ளார்.
அதன்படி, பரதநாட்டிய பயிற்சி, ஓவியம் ஆகிய கலைகளில் கைதேர்ந்தவராக திகழ்கிறார். வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட BIMSTEC Sewocon நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
புதிய மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள மணிகா விஸ்வகர்மா, இந்த ஆண்டு நவம்பர் மாதம் தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் நடக்கும், 74-வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார்.