2025-ஆம் ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் அரு​கே​யுள்ள நோந்​த​புரி​யில் நடந்தது.
இதில், 120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. மெக்சிகோ, தாய்லாந்து, பிலி-ப்பைன்ஸ், சீனா, வெனிசுலா ஆகிய நாடுகள், முதல் 12 இடங்களை பிடித்தன.
அதற்கு முன்னதாக நீச்சலுடை சுற்றில் இந்தியாவின் மனிகா விஸ்வகர்மா வெளியேறினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் 2003-ஆம் ஆண்டு பிறந்த மணிகா, சாதாரண குடும்பத்தில் வளர்ந்தவர். தற்போது ​​டெல்லி பல்கலைக்கழகத்தின் மாதா சுந்தரி மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவியாக உள்ளார்.
மேலும் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் விருது பெற்ற ஓவியராகவும் உள்ளார். இப்படியாக படிப்புடன் சேர்த்து மணிகா, மாடலிங்கிலும் அசத்தி வருகிறார்.
இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள, ‘இம்பாக்ட் சேலஞ்சர்’ அரங்கில் இறுதிப்போட்டி நடந்தது.
போட்டியின் நடுவர்களில் ஒருவராக நம் நாட்டு பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இடம்பெற்றார்.
முடிவில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வெற்றி பெற்று, 2025-ஆம் ஆண்டுக்கான, ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை தட்டி சென்றார்.
இரண்டாம் இடத்தை தாய்லாந்தை சேர்ந்த இந்​திய வம்​சாவளி பெண் பிர​வீனர் சிங்கும், மூன்றாவது இடத்தை பிலிப்பைன்சை சேர்ந்த அதிஷாவும் பெற்றனர்.
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பாத்திமா போஷ், அமெரிக்கா மற்றும் இத்தாலியில் பேஷன் டிசைனிங் படித்தவர்.
அவருக்கு 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை, சொகுசு பங்களா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் கிரீடம், 44 கோடி ரூபாய் மதிப்புடையது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/05/misuniverse-2026-01-05-11-49-37.jpg)