உலகில் பிறந்த யாருக்கும் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள உரிமை கிடையாது. சட்டத்திலும் இதற்கு இடம் கிடையாது. இது இப்படியிருக்க ஒருசிலர் தங்களது வாழ்க்கையை எதிர்பாராத வகையில் முடித்துக்கொள்கிறார்கள். அதுதான் தற்கொலை.
ஒருவருக்கு ஜாதகரீதியாக அமைப்புகள் நன்றாக இருந்தால் நீண்ட ஆயுளுடன் வாழக்கூடிய யோகமானது உண்டாகும். ஒருசில கிரக அமைப்பு சாதகமற்று இருந்துவிட்டால் அவர்கள் தங்களது வாழ்க்கையை எதிர்பாராதவகையில் முடித்துக்கொள்கிறார்கள். அதற்கான கிரக அமைப்புகளை பார்க்கின்றபொழுது ஒருவர் ஜாதகத்தில் தைரியத்தை குறிக்கக்கூடிய ஸ்தானமாக விளங்கக்கூடியது ஜென்ம லக்னத்திற்கு 3-ஆமிடம் ஆகும். 3-க்கு 7-ஆமிடமான 11-ஆமிடம் ஒருவகையில் தைரியத்தை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் அதிபதி பலவீனமாக இருக்கின்றபொழுது, 3-ஆம் அதிபதி அதிக பாவ கிரக தொடர்போடு இருக்கின்றபொழுது அந்த ஜாதகருக்கு சுய தைரியம் இல்லாமல் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சில செயலை செய்து அதன்மூலமாக தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். ஒருவர் ஜாதகத்தில் 3-ஆம் அதிபதி சனி, ராகு- கேது போன்ற பாவ கிரக சேர்க்கை பெற்று 8-ஆம் வீட்டில் இருந்தாலும், காலபுருஷப்படி 8-ஆம் வீடான விருச்சிக ராசியில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு தைரிய குறைவு ஏற்பட்டு அதன் மூலமாக தேவையற்ற எண்ணங்கள் உண்டாகிவிடும்.
ஒருவர் ஜாதகத்தில் 8-ஆம் வீடு ஆயுள், ஆரோக்கியத்தை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். 8-ஆம் அதிபதி பாவ கிரக தொடர்போடு இருக்கின்றபொழுது அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைகிறது. ஒருவர் ஜாதகத்தில் 3, 8-ஆம் அதிபதிகள் பலவீனமாக இருக்கின்றபொழுது அந்த ஜாதகருக்கு தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகிறது. பொதுவாக நவகிரங்களில் மனோகாரகன் என வர்ணிக்கப்படக்கூடிய கிரகம் சந்திரனாகும். சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் சனி, ராகு- கேது போன்ற பாவ கிரக தொடர்போடு இருந்து 3, 8-ஆம் வீடுகளில் அமையப்பெற்றாலும், அப்படி அமையப்பெற்று சுப கிரக பார்வை இல்லாமல் இருந்தாலும், 8-ஆம் வீட்டில் சர்ப்ப கிரகமான ராகு- கேது பாவ கிரக தொடர்போடு அமையப்பெற்று சுபர் பார்வை இல்லாமல் இருந்து அந்த கிரகங்களுடைய தசை புக்தி நடைபெறுகின்ற பாலங்களில் அந்த ஜாதகருக்கு சுய தைரியம் மறைந்து, தன்னுடைய சுயநினைவை மறைந்து, தான் செய்யக்கூடிய செயல்கள் சரியா- தவறா என அறியாத அளவிற்கு தனது மனநிலை மாறி தேவையற்ற செயல்களை செய்து வீண் நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகிறது.
பொதுவாக 8-ஆம் வீட்டில் அதிகப் பாவ கிரகங்கள் அமையப்பெற்று சந்திரன் பலவீனமாக இருக்கக்கூடிய ஜாதக நேயர்களுக்கு சுய தைரியம் குறைய அமைப்புகள், தேவையற்ற தவறான எண்ணங்கள் ஏற்படக்கூடிய அனுகூலமற்ற நிலை உண்டாகிறது. பொதுவாக சந்திரன் பலவீனமாக இருக்கக்கூடிய நேயர்களுக்கு அதன் தசை புக்தி காலத்தில் தவறான எண்ணங்களை குறைத்துக்கொண்டு இறை வழிபாடுகள் மேற்கொள்வதன் மூலமாகவும், தியானங்கள் செய்வதுமூலமாகவும், தனிமையை தவிர்ப்பதன்மூலமாகவும் தவறான எண்ணங்களில் இருந்து தப்பித்து நீண்ட ஆயுளுடன் வாழமுடியும்.
செல்: 7200163001
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-08/murugu.balamurugan_3.jpg)
/nakkheeran/media/media_files/2025/10/31/newthumb-2025-10-31-14-53-36.jpg)