சிவபெருமானை நோக்கி அஞ்சனாதேவி தவம் செய்ததினால் அவர் மனம் குளிர்ந்து அவரின் பக்திக்கு இணங்கி அஞ்சனாதேவிக்கு அவள் விரும்பியதுபோல் வலிமையும், பக்தியும் இணைந்த சக்தியாகவும், அவர் திருமானின் அவதாரத்திற்குத் துனை நிற்பவராகவும், ஒரு சிறந்த ராம பக்தராகவுமுள்ள ஒரு குழந்தையை இந்த உலகத்திற்கு அஞ்சனாதேவிக்கு அஞ்சனை மைந்தனாக அவதரிக்க வைத்தார்.
ஆஞ்சநேயர் சிறுவனாக இருந்தபோதே சூரியனை சிவப்பு நிறக் கனியாக நினைத்து அதை சாப்பிட காற்றில் பறந்து செல்லும்போது தேவர்கள் அதிர்ந்துபோய் இறைவனிடம் முறையிட்டனர். திருமால் அவரின் செயலை தடுத்துவிட்டாலும் ஆஞ்சநேயரின் தைரியத்தை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்இதில் பிரம்மதேவர் இக்குழந்தை வாயு தேவரின் அம்சமாக இருப்பதால் அவருக்கு அமரத்துவத்தை வழங்கி இவரை எந்த ஆயுதத்தாலும் வீழ்த்த முடியாது என்று கூறி மரணபயமின்றி வாழ்வார் என்று வரமளித்தார்.
பிறகு சிவபெருமான் பக்தி, ஞானம், வைராக்கியம் மூன்றிலும் சிறந்து விளங்குபவர் என்றும் இவரின் பலம் எந்த சக்திக்கும் அடங்காது. இவரின் உடல் வஜ்ரம்போல என்று உறுதியாயிருக்கும் வரமளித்தார்.
அடுத்து விஷ்ணு அனுமனுக்கு நீ ஒரு சிறந்த ராம பக்தனாக விளங்குவாய் என்றும் இவரின் தாம பக்தி இவ்வுலகிற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கும் என்று வரமளித்தார்.
பிறகு இந்திரன் அவருக்கு அனுமான் எனப் பெயரிட்டு இனி எந்த ஆயுதமும் இவரை தாக்காது என்று வரமளிதார்.
இதன்பின் குபேரன் வந்து செல்வ வளத்தை அருளும் வரத்தையும், இவரை வணங்குபவர்களுக்கு செல்வம் குறையாது என்று வரமளித்தார்.
பின்பு வருணன் வந்து இவர் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் தண்ணீர் ஒரு தடையாக இருக்காது என்று வரமளித்தார்.
அதன்பின்பு எமதர்மன் வந்து என் தண்டம் இவரை நெருங்காது என்றும் மரணமே இவரைக் கண்டு அஞ்சும் என்று கூறி இவர் என்றும் சிரஞ்சீவியாகவே இருப்பார் என்று வரமளித்தார்.
இதேபோல் அக்னிதேவர் இவருக்கு நெருப்பு ஒருபோதும் இவரை நெருங்காது என்று வரமளித்தார்.
இறுதியாக சூரியபகவான் அவருக்கு தைரியத்தை வரமாக அளித்து வேதங்கள், உபநிஷத்துக்கள், தர்மசாஸ்திரங்கள் வியாக்கரணம், ஜோதிடம், தத்துவ ஞானம் என அனைத்தையும் கற்பித்தார்.
இக்கலியுகத்தில் மனிதர்கள் பொருளாதாரத்தைத் தேடுவதையே மிக சிறந்தப் பணியாக கொண்டிருப்பதை அனைவருமே உணருகிறோம். இதனால் தன் நிம்மதி ஆரோக்கியத்தை தொலைத்துவிட்டு எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் எனத் தெரியாமலே மிகவும் சோர்ந்து மனதில் பெரும் பாரத்தை ஏற்றிக்கொண்டு உதட்டளவில் புன்னகைத்து வாழும் பொய்யான வாழ்க்கையிலிருந்து உண்மையான வாழ்க்கை பயணத்தை அடைதலே நன்மையை விளைவிக்கும்.
அக்காலத்தில் மனிதர்கள் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு நம் முன்னோர்கள் இறைவனின் துதிகளை நமக்கு இயற்றி கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் கள். இதை மறந்த நாம் சுயநலத்தில் மாட்டிக்கொண்டு துன்பங்களை மட்டுமே அனுபவித்துக்கொண்டு அடுத்தவர்களின் முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டு பின் தங்கி இருக்கும் நம்மை நாம் உணர்ந்து பார்த்து நம் வினையை மாற்றிக் கொண்டால் மட்டுமே நன்மையடைய முடியும் என்ற நிலைக்கு ஒவ்வொருவரும் வர வேண்டும்.
ராம பக்தர்களுக்கும் ஆஞ்சநேயரின் மிகவும் சக்திவாய்ந்த மந்திரங்கள் கவசமாக விளங்குகிறது. இதில் அனுமன் சாலிசா என்ற அனுமன் நாற்பது துதிப் பாடலை ராம பக்தரான துளசிதாஸர் இயற்றி அதில் ஆஞ்நேயரின் புகழையும் வலிமையையும் இந்த துதிப் பாடலில் உணர்த்தியுள்ளார்.
துளசிதாஸர் இந்தத் துதியை எவர் ஒருவர் தூய மனதுடன் ஆஞ்சநேயரை தியானிக்கின்றார்களோ அவர்களுக்கு ஆஞ்சநேயரின் பொற்கரங்களின் அரவணைப்பு கிடைக்கும் என்பதையே இப்பாடல் உணர்த்துகிறது.
மேலும் நவகிரகங்கள் நம்முடைய ஜாதகக் கட்டத்தில் நசிந்து போன கிரகங்களின் கஷ்டங்களை விலக்கி அதை மேன்மைபடுத்த...
"அஞ்சனா கர்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும் ஹசாரிணம்
துஷ்ட கிரஹ வினா ஸாய
ஹனுமந்த முபாஸ்மஹே!''
இந்தத் துதியை மூன்றுமுறை கூறிவிட்டு ஆத்மார்த்தமாக அனுமனை நினைத்தால் துஷ்ட கிரகங்களால் வரும் துன்பங்கள் நம்மை நெருங்காது என்பதையே இந்த துதி நமக்கு விளங்குகிறது.
சிலர் எக்காரியங்களில் ஈடுபட்டாலும் அக்காரியங்களில் அவருக்கு வெற்றி கிடைக்காது. மனம் வெதும்புவர். இந்த நிலையில் இருப்பவர்கள்-
ஸ்ரீ ராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமுத்பவ
அஞ்சனா கர்ப ஸம்பூத
வாயு புத்ர நமோஸ்துதே!
என்ற இந்தத் துதியை தினமும் ஐந்துமுறை அனுமனை நினைத்து சொல்பவர்களுக்கு அனைத்து காரியங்களும் வெற்றியைத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
இவ்வாறு நாம் ஆஞ்சநேயரின் அற்புதங்களை நினைவுகூர்ந்து கொண்டே போகலாம். எவர் ஒருவர் இவரின் பக்தியில் மெய்மறக்கின்றனரோ அவருக்கு ராம பக்தரான ஆஞ்சநேயரின் அருள் என்றும் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயு புத்ராய தீமாஹி
தந்தோ அனுமந் ப்ரசோதயாத்'' என்ற
காயத்ரியை உணர்ந்து சொல்வதால் நமக்கு தேவையான செல்வ வளத்தை அள்ளித் தரும் என்பதை நாம் உணர வேண்டும்.
படிப்பறிவு இல்லாமல் உள்ள பாமரர் களுக்கு ராம நாமத்தை உச்சரிப்பதே பெரும் பாக்கியத்தை கொடுக்கும். ராம நாமம் என்பது ராமா ராமா என்றால் இப்புவியும் அசையும் என்பதை அறிந்துகொண்டு இந்த நாமத்தை முடிந்தவரை நூற்றெட்டு முறை தினமும் கூறிவந்தால் நன்மை கிட்டும்.
மேலும் ஸ்ரீ ராமஜெயம் என்று கூறி வந்தாலும் எண்ணற்ற மேன்மைகளை அடையலாம். நம் சந்ததியினரின் வாழ்க்கை மேன்மையையும், செல்வ வளத்தையும், உயர்த்தி பல வெற்றிகளை அவர்கள் அடைந்து நிம்மதியுடன் வாழ்க்கையில் வெற்றியடைய அஞ்சனை மைந்தனை அஞ்சாமல் பற்றிக்கொள்வதே சிறந்தது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து
"அனுமனை நினைப்போம்!
துன்பத்தை போக்குவோம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/04/anjeynar-2025-11-04-17-18-12.jpg)