மருத்துவத் துறையில் ஒரு நோய் வந்தபின்புதான் அதன் காரணத்தையும், அதன் தீர்வையும் கூறுவார்கள். ஆனால் ஜோதிடத்துறை அப்படியல்ல. ஒருவருக்கு வர இருக்கின்ற நோய் எத்தகையது, அதன் தன்மை என்ன? அதிலிருந்து அவர் விடுபடுவாரா? அந்த நோய் வருவதற்கான காரணம் என்ன? அதற்கு பரிகாரம் என்பது என்ன? என்பதெல்லாம் தெள்ளத் தெளிவாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருக்கு ஒரு நோய் ஏற்படுவதற்குக் காரண மாக இருக்கின்ற கிரகத்திற்குரிய கிரக சாந்தியை செய்வது அடுத்ததாக, அந்த வியாதிக்கு பிராயச்சித்த சுதா நிதி என்று சொல்லக்கூடிய, சாயானீயம் என்ற நூலில் பல பிராயச்சித்த பரிகாரங்கள் சொல்லப் பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் பரிகாரங்களை செய்வது என்பது நடைமுறை வழக்கமாக உள்ளது.
ஒருவருக்கு மனநோய் ஏற்படுகின்ற பலவிதமான கிரக நிலைகள் அவை ஜாதகத்தில் எப்படி அமைந்திருக்கும். அடுத்ததாக மனநோய் ஒருவருக்கு எந்த காரணத்தால் வந்திருக்கும், அதற்கு என்ன பரிகாரங்கள் என்றெல்லாம்கூட பிரசன்ன மார்க்கம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக பிரசன்ன மார்க்க நூலில் எட்டு விதமான மன நோய்க்குரிய கிரக நிலைகள் சொல்லப் பட்டுள்ளன அதோடு மற்ற நூல்களிலும் சில கிரக அமைப்புகள் சொல்லப் பட்டுள்ளன.
அதனை இங்கே தெள்ளத் தெளிவாக தெரிவிப்பது என்பது மக்களிடையே குழப்பத்தை விளைவிக்கும். எனவே, அதனை இங்கே விடுத்து அதற்கான பிராயச்சித்த திட்டங்களை மட்டும் கூறுகின்றேன். இருந்தாலும் ஒரு ஜாதகத்தில் குரு மற்றும் செவ்வாயின் தொடர்புகள், குரு மற்றும் சனியின் தொடர்புகள் அதுபோன்று, புதனின் வலுவற்ற நிலையில் சில வீடுகளில் அமர்வது மாந்தி பாவக் கிரகம் ஒன்றோடு ஒன்று, குறிப்பிட்ட வீடு ஒன்றில் அமர்ந்திருப்பதும், சந்திரனும், புதனும் வலுவற்று குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்துகொள்வது, இப்படி பல கிரக அமைப்புகள் மனநோய் வருகின்ற காரணிகளாக சொல்லப்பட்டுள்ளது. இவை எத்தகைய பாதிப்பைத் தரும் அல்லது தராது என்பதனை ஒரு ஜோதிட விற்பன்னரால் மட்டுமே நன்கு அறிந்துகொள்ளமுடியும் என்ற காரணத்தினால், அதனைக் கற்றறிந்த ஜோதிடர்மூலமாக உணர்ந்துகொள்வதே நலம்.
அவ்வாறே ஒருவருக்கு முகூர்த்தம் வைக்கும்போது அவர் நட்சத்திரத்தில் இருந்து, தாரா பலன் இல்லாத காலத்தில் முகூர்த்தம் வைத்தால் அவருக்கும் மனப் பதட்டம், அதுபோன்று மனோ வியாதி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையும் சாஸ்த்திரங்கள் அறிவுறுத்துகின்றன. ஒருவருக்கு மன நோய் வந்துவிட்டது என்றால் அவர் பெயருக்கு ஆரூடம் பார்த்து, அந்த ஆரூட லக்கினத்தில் இருந்து ஒன்பதாம் வீட்டில் பாவ கிரகம் இருந்ததென்றால் தெய்வத்தின் சாபத்தாலும், அதுபோன்று ஆரூடத்தில் இருந்து ஆறாம் வீட்டில் பாவ கிரகம் இருந்ததென்றால் எதிரியால் செய்யப்பட்ட, அபிசார தோஷம் அல்லது சூனிய தோஷத்தால் இவருக்கு மனநோய் ஏற்பட்டுள்ளது எனவும், ஆரூடம் பார்க்கும் வேளை சந்திரன், சுக்கிரன் அஷ்டமாதிபதி இவர் வலுவற்றிருக்க, விஷத்தாலோ அதிகமாக உணவு உண்டதாலோ அல்லது, உணவு உண்ணாமல் இருந்ததாலோ, ஒருவருக்கு மனநோய் ஏற்பட்டதாகவும் கூற வேண்டும் என்று பிரச்சன்ன மார்க்க நூல் சொல்கின்றது.
அவ்வாறு மேலும் ஒருவருக்கு ஆட்டிசம் என்று சொல்லக் கூடிய அபஸ்மார நோய் இருந்து அதற்கு மருத்துவம் செய்யாமல், பிராயசித்த பரிகாரங்கள் செய்யாமல், இருந்தாலும்கூட அது மன நோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒருவருக்கு பிரசவம் பார்க்கும் போது, எந்த தெய்வத்தின் கோபத்தால் அவருக்கு மனநோய் ஏற்பட்டதோ, அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தால் யாகம் செய்வது, சூனிய தோஷத்தால் மனநோய் ஏற்பட்டது என்றால், அதற்கு பிரச்சன்ன மார்க்கத்தில் சொல்லப்பட்ட விதிகளின்படி சூனிய தோஷப் பரிகார ஹோமங்களை செய்வது பலன் தரும்.
அவ்வாறு விஷத்தாலோ, உணவு உண்ணாமல் இருப்பதால் ஏற்படும் மன நோய்க்கு பரிகாரமாக அதற்குரிய மருத்துவங்களை செய்துகொள்வது, அடுத்ததாக பிராயசித்த சுதா நிதி நூலில் கூறப்பட்ட விதம் உன்மத்த பிராயச்சித்தம் என்னும் பரிகாரங்களை செய்வதுகொள்வதால் மன நோயிலிருந்து ஒருவன் விடுபடமுடியும் என்பதனை சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
இதனை பிரச்சன்ன மார்க்கம், சந்திர, சுக்கிர அஷ்டமாதீ ஷோ என ஆரம்பிக்கின்ற சுலோகம் இந்த கருத்துகளை தெள்ளத் தெளிவாக நமக்கு தெரிவிக்கின்றது. எனவே, ஒருவருக்கு மன நோய் ஏற்பட்டது என்றால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான பிராயச்சித்த திட்டங்களை தக்க, வேத விற்பனர்களால் செய்வதன்மூலமாகவும், பின்பு மருத்துவத்தின்மூலமும் மன நோயிலிருந்து விடுபடுவார் என சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
செல்: 94438 08596