புலம் பெயர்த்து அருளாட்சி செய்யும் மீனாட்சி சொக்கநாதர்

பல்வேறு கலாச்சாரங்கள் பாரம்பரியங்களை கொண்ட நாடு நமது இந்தியா. இங்கு பல மதங்கள். அப்படிப்பட்ட மதங்களில்...

meenakshi

ல்வேறு கலாச்சாரங்கள் பாரம்பரியங்களை கொண்ட நாடு நமது இந்தியா. இங்கு பல மதங்கள். அப்படிப்பட்ட மதங்களில் பொதிந்துள்ள அர்த்தங்கள் அதன் வழிகாட்டுதல்கள் மரபுகள். எந்தவித சமரசமும் இல்லாமல் நமது இந்து மதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நமது மதத் திலுள்ள நறுமணம்மிக்க கலா சாரங்கள், பண்பாடுகள், வழி பாட்டு முறைகள் அனைத்துமே அறிவியல் பூர்வமாகவும் சம்பந்தப்பட்டவை. அனைத்து மதங்களும் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை. தெய்வீக தன்மையினால் நமக்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, வாழ்க்கை கிடைக்கிறது. இதன் மூலம் அமைதி, செல்வம், மனநிறைவு ஆகியவற்றின் கடவுளின் அருள்கிடைக் கிறது. கடவுள்களின் வடிவங் களை பலவிதமான முறையில் வைத்து வழிபடுகிறோம். அந்த தெய்வங்களுக்கு பால், பழங்கள், பூக்கள், தூபங்கள், தானியங்கள், இளநீர், தயிர், சந்தனம், தேன் இப்படி பல்வேறு விதமானவற்றை வைத்து வழிபாடு செய்கிறோம். இது அறிவியல் பூர்வமானதும்கூட. எப்படி தெய்வத்திற்கு நாம் எதையெல்லாம் வைத்து பூஜை செய்து சாப்பிடுகிறோமோ அவை அனைத்தும் மனித உடல்களுக்கு தேவையான இன்றிய மையாத சக்தியை வழங்குகிறது.

 இந்த தெய்வங்களின் முதன்மையான தெய்வம் மும்மூர்த்திகளில் ஒருவர் சிவன். இவர் சர்வ வல்லமையும் நிறைந்திருப்பவர். அப்படிப்பட்ட சிவ பெருமானின் வடிவங்கள் பலவகைகளில் உள்ளன. அதில் குறிப்பாக, சர்வா, பவ, ருத்ரா, உக்ரா, பீமா, பசுபதி, ஈசன், மகாதேவர். இவர்தான் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியவர். சிவன் என்றால் மங்களகரமானவர், எல்லா துக்கங்களையும் போக்குபவர், பிரகாசமானவர் மற்றவர்களையும் பிரகாசிக்க செய்பவர். 

இதற்கு உதாரணம் தனது துணைவி யான சக்திக்கு தன்னில் பாதியை கொடுத்து ஆண்- பெண் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியவர். அதைவிட சில நேரங்களில் ஆண்களைவிட பெண்கள் பலமானவர்கள் என்பதையும் சக்தியை வைத்து நிரூபித்துக் காட்டியவர். சில நேரங்களில் இதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு பெண் தெய்வ வடிவங்கள் எடுத்து பார்வதி பல அசுரர்களை பதம் செய்துள்ளார். 

அப்படிப்பட்ட சக்திவடிவமான பார்வதி மதுரையில் மீனா

அப்படிப்பட்ட சக்திவடிவமான பார்வதி மதுரையில் மீனாட்சியாகவும், காஞ்சிபுரத்தில் காமாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும், விளங்கிவருகிறார். இங்கு சிவபெருமான் உட்பட அனைத்து தெய்வங்களும் குடிகொண்டிருந்தாலும் சிவனின் சக்தியான அம்பாள் பெயர்தான் மேலோங்கி நிற்கிறது.

 இந்த கோவில்களின் பெயர்களும் மீனாட்சியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், விசாலாட்சியம்மன் கோவில் என்று அம்மன் பெயரை முன்நிறுத்தி மக்களால் அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட அம்மன் மீனாட்சி பற்றியும் அவர் மதுரையில் மட்டுமல்ல பல்வேறு ஊர்களிலும் கோவில்கொண்டுள்ளார். அப்படிப்பட்ட மீனாட்சி, சொக்கநாதர் ஆகிய இருவரும் ஒரு ஊருக்கு தேடிவந்து கோவில் கொண்டுள்ளனர்.

meenakshi1

சைவ மதத்தில் புனித யாத்திரை செல்லும் இடங்களாக 68 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் மதுரையும் ஒன்று. மேலும் இந்திய அளவில் 51 இடங்களில் சக்தி பீடங்கள் அமைந்துள்ளன. அந்த 51 பீடங்களில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலும், ஒரு சக்தி பீடம் என்று கூறுப்படுகிறது. இப்படி மதுரை மீனாட்சியம்மன், சொக்கநாதர் இருவரும் அதே பெயரில் ஒரு ஊரின் புலம்பெயர்ந்து அருளாட்சி செய்கின்றனர். அந்த ஆலயம் குறித்தும் ஊர் குறித்தும் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா? பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட வெப்பாலை நோயை தீர்த்து வைத்தவர் திருஞானசம்பந்தர். இவர் ஒருமுறை சீர்காழியிலிருந்து தனது தந்தை தோளில் சுமக்க புறப் பட்டார். இறைவன் குடிகொண்டிருந்த ஆலயங்களுக்குச் சென்று இறைவனைப் பற்றி பாடுவதற்கு அதன்படி கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள தற்போது திருவட்டத்துறை என்று அழைக்கப்படும் திருவறத்துறை இறைவனைப் பற்றி பாடுவதற்கு வந்துகொண்டிருந்தார். அப்படி வரும்போது, இறையருள் பெற்ற ஊர் தற்போது இறையூர் என்று அழைக்கப்படும். இறையூருக்கு வந்து சேர்ந்தார். இருட்டிவிட்டது. அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலை புறப்பட்டுசென்று அறத்துரை நாதரை வணங்கி பாட முடிவெடுத்த திருஞானசம்பந்தர் அன்று இரவை இறையூர்லையே கழித்தார். 

அன்றிரவு திருவரத்துறை கிராமத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஆலயத்தின் நிர்வாகிகளாக சில தர்மகர்த்தாக்கள் ஊரில் இருந்தனர். 

அன்றிரவு அவர்கள் கனவில் தோன்றிய இறைவன் என்னைப் பற்றி பாடுவதற்கு வரும் சிறுவன் சம்மந்தனை அவனது தந்தை  தோள்வலிக்க கால் வலிக்க சுமந்துவருகிறார். எனவே நமது கோவிலுக்குள் முத்துச்சி விகை, முத்து மோதிரம், முத்துக்குடை  ஆகிய வற்றை வைத்துள்ளேன். அவற்றை எடுத்துச்சென்று அதில் அமர வைத்து சம்மந்தனை இங்கு அழைத்துவாருங்கள் என்று இறைவன் கட்டளையிட்டார். காலையில் கண்விழித்ததும் தர்மகர்த்தாக்களில் ஒருவர் மற்றவர்களிடம் சென்று தான் கண்ட கனவு பற்றி கூறியுள் ளார். அப்போது மற்றவர்களும் எங்களுக்கும் அதே போன்று கனவு தோன்றியதாக கூறியுள்ளனர். இதனால் வியந்துபோன தர்மகர்த்தாக்கள், இறைவன் கூறியது உண்மைதானா என்பதை அறிவதற்காக கோவிலுக்குச் சென்று திறந்து பார்த்தனர். என்னே அதிசயம் இறைவன் கூறியபடி முத்துச்சிவிகை, முத்து மோதிரம், முத்துகுடை ஆகியவை தயாராக இருந்தன. இறைவனின் கருணையை எண்ணி மெய்சிலிர்த்து, தர்மகர்த்தாக்கள் அவற்றை எடுத்துக்கொண்டு, சம்பந்தரை அழைத்துவர இறையூர் நோக்கி புறப்பட்டனர்.

 அப்போது இறையூரிலிருந்து அறத்தூரை நோக்கி, திருஞானசம்பந்தர் தன் தந்தை தோளில் அமர்ந்து வந்துகொண்டிருந்தார். இரு தரப்பினரும் நடுவழியில் கூடினர். 

அங்கேயே சம்பந்தரை வரவேற்று முத்துச் சிவிகையில் அமரவைத்து முத்துக்குடை பிடித்தபடி அறத்தூறை நோக்கி அழைத்து வந்தனர். அறத்தூரைவந்த திருஞானசம்பந்தர் இறைவனை வணங்கி பாடினார், (சம்பந்தர் பாடிய பாடல் தேவார பதிகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது). இப்படி இருதரப்பினரும், நடுவழியில்கூடிய இடம்தான் இப்போது கூடலூர் என்ற பெயரில் ஒரு கிராமமாக உள்ளது.

 இந்த கிராமத்தில் அர்ச்சகர் ஒருவர் வாழ்ந்துவந்துள்ளார். அவரது கனவில் மதுரை மீனாட்சி, சொக்கநாதர் இருவரும் ஊர் ஊராகச் சென்று எம்மைப்பற்றி பாடும் திருஞானசம்பந்தன் இங்குவந்து சென்றுள்ளார். அதை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையம்பதியிலுள்ள அதே பெயருடன் இங்கே பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பி வழிபாடு செய்யுமாறு கூறியுள்ளனர். இறைவனின் கட்டளையை ஏற்ற அந்த அர்ச்சகர் மீனாட்சியம்மனுக்கும் சொக்கநாதரும் தமது கனவில் தோன்றி கூறியதை கிராம மக்களிடம் எடுத்துக்கூறினார். 

இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவுசெய்த கிராம மக்கள் மீனாட்சி சொக்கநாதருக்கு ஆலயம் எழுப்பி வழிபாடு செய்து வந்துள்ளனர். இது நடந்து பலநூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. காலப் போக்கில் கோவில் வழிபாடு இல்லாமல் இருந்துவந்துள்ளது. சிவன் கோவில் விளக்கு எரியாமல் இருக்கலாமா? கூடாது என்ற எண்ணம் அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் சிலருக்கு ஏற்பட்டது. ஒன்றுசேர்ந்த பெண்கள் தெய்வத்தின்மீது ஈடுபாடுகொண்ட அந்த ஊர் ஆண்கள் சிலர் உதவியோடு சில சமீப காலமாக இறைவனுக்கு அர்ச்சகரைகொண்டு அனைத்து வழிபாடுகளையும் செய்து வருகிறார்கள்.

meenakshi2

அவர்களில் வீரவேல், ராணி, ராதா ஆகிய பக்தர்களிடம் கேட்டோம். எங்கள் ஊர் மீனாட்சியம்மன், சொக்கநாதர், ஆலயம் இறைவனின் விருப்பப்படி, இங்கே எழுப்பப்பட்டு வழிபாடு நடத்துள்ளது. காலப்போக்கில் அதை பராமரிப்பு செய்யாமல் அந்த அர்ச்சகர் விட்டுவிட்டார். தற்போது எங்களைப் போன்று இறைவனுக்கு தொண்டுசெய்யும் பக்தர்களின் உதவியோடு பிரதோஷம், பௌர்ணமி பூஜை, துர்க்கை வழிபாடு, விநாயகர் சதுர்த்தி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என அனைத்து விழா வழிபாடுகளையும், தொடர்ந்து செய்துவருகிறோம். மதுரைக்கும்- கூடலூருக்குமுள்ள இறைத்தொடர்பு சமீபத்தில் தெளிவாகியுள்ளது. சில மாதங் களுக்கு முன்பு பெண்ணாடத்திலுள்ள பிரளைய காலேஸ்வரர்- அழகிய காதலி அம்மன் ஆலயத்திற்கு குடமுழுக்குவிழா நடைபெற்றது. அந்த ஆலயத்திற்கு விளக்கு எரிப்பதற்காக மதுரையிலிருந்து சில பக்தர்கள் எண்ணைக் கொண்டுவந்து கொடுத் துள்ளனர். அந்த ஆலயத்திற்கு தேவையானது போக எண்ணெய் மிகுதியாக இருந்துள்ளது. இதை அருகிலுள்ள ஏதாவது ஒரு சிவாலயத்திற்கு வழங்க மதுரை பக்தர்கள் முன் வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த பக்தர் ஒருவர் கூடலூர் கிராமத்திலுள்ள மீனாட்சி, சொக்கநாதர் ஆலயத்திற்கு கொடுக்கலாமே என்று கூறியுள்ளார். அந்தப் பெயரை கேட்டதுமே அந்த மதுரை பக்தர்கள் நம்ம மதுரை மீனாட்சி, சொக்கநாதர், அதே பெயரில் இங்கே கோவில் கொண்டுள்ளார்களா என்று வியப்புற்றதோடு உடனடியாக அந்த விளக்கு எரிக்கும் எண்ணெயை கூடலூர் ஆலயத் திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்மூலம் இறைவன் தமக்கு எது வேண்டும் என்னவேண்டும் அதை யார்? யார்? மூலம்பெற வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். அதன்படி, தானே நடக்கும் என்பதற்கு, இந்த ஒரு சிறிய சம்பவம் ஒரு உதாரணம் என்கிறார்கள் மேற்படி பக்தர்கள்.

மேலும், இவ்வாலயம் அர்ச்சகர் வெங்கட்ராம ஐயர், நம்மிடம் பல நூற்றாண்டுகளுக்குமுன்பு கட்டப்பட்ட பழமையான ஆலயம் இது. இவ்வாலய இறைவனை எந்தவித பிரதிபலனும் பாராமல் பூஜை செய்துவருகிறேன் இறைவன் அருள் இருந்தால் எந்த விதத்திலாவது நம்மை காப்பாற்றுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன். பக்தர்களின் உதவியோடு, இவ்வாலய வழிபாடுகளை செய்துவருகிறோம். இங்குவந்து வழிபடும் அனைவருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி, மனதில் நிம்மதி, குறைவற்ற செல்வத்தை வாரி வழங்குகிறார்கள். இறைவனும், இறைவியும் மேலும் திருமண தடையால் தவிக்கும் ஆண்கள்- பெண்கள் திருமணம் செய்தும் நீண்டகாலம் குழந்தை பேரு இல்லாத பெண்கள் இவர்களின் குறைகளை நிவர்த்திசெய்து வருகிறார்கள். அங்கயர் கன்னியான மதுரை மீனாட்சி கண் இமையை காப்பதுபோல் பக்தர் களை காத்துவருகிறார்.

 ஒருமுறை இவ்வாலயம் வந்தவர்களை மீண்டும் காந்தம் போன்று கவர்ந்து இழுக்கிறார்கள் இறைவனும் இறைவியும். மேலும் ஆன்மிக அன்பர்கள் ஊர்மக்கள் பழமையான, இந்த ஆலயத்தை புதுப்பித்து குடமுழுக்கு நடத்துவதற்கு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கிறார் வெங்கட்ராமைர். இறைவன் சிவபெருமான் எப்போது எப்படி யாரால் வெளி உலகத்திற்கு வெளிப் படவேண்டும் என்று விரும்புகிறாரோ அந்த நேரத்தில் யார் மூலமாவது தன்னை வெளிப்படுத்திக்கொள்வார். அந்தவகையில், இவ்வூர் பக்தர்கள் சிலரின் முயற்சியால் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ள இறைவன் ஆலய புனரமைப்பை செய்ய அந்த இறைவனே வழிகாட்டுவார் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள். 

ஆலய அமைவிடம்

விருத்தாசலம் -தொழுதூர் நெடுஞ்சாலையின் மையப் பகுதி யிலும் சென்னை- திருச்சி, ரயில்வே மார்க்கத்தில் பெண்ணாடம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே மூன்று கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது கூடலூர்.  தொடர்புக்கு: 88258 85602.

OM010725
இதையும் படியுங்கள்
Subscribe