Advertisment

மீனாட்சி அக்கா (மலையாளக் கதை) மாதவிக்குட்டி தமிழில்: சுரா

ss

மீனாட்சி அக்கா, அம்மாவின் தந்தையின் மருமகள். அவள் பதினைந்தாவது வயதிலேயே ஒரு விதவையாக ஆகிவிட்டாள். அதற்குப் பிறகு அம்மாவின் வீட்டில் வசிக்க ஆரம்பித்தாள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கும், வீட்டு வேலைகளில் அம்மாவிற்கு உதவியாக இருப்பதற்கும் என்று மீனாட்சி அக்காவை அப்பாவும் அம்மாவும் சேர்ந்து குருவாயூரிலிருந்து அழைத்துக்கொண்டு வந்தார்கள். வந்ததற்குப் பிறகு மீனாட்சி அக்கா அந்த வாசலைக் கடந்து வெளியே இறங்கியதே இல்லை. நாற்பத்தொரு வருடங்களுக்குப் பிறகு, பன்னிரண்டு நாட்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஐந்தாவது அறைக்கு அடுத்து இருக்கும் இருண்ட அறையில் கிடந்து, இரவு மூன்றரை மணிக்கு அவள் இறந்துவிட்டாள்.

Advertisment

மீனாட்சி அக்காவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட சமயத்திலும், யாரும் அதை அந்த அளவிற்குப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம்- ஒரு நோயாளியின் உடல் நிலைதான் அவளுக்கு எப்போதும் இருந்தது என்பதுதான். இரவில் காலையும் கையையும் தடவியவாறு "ஆவ்.... அம்மா... அய்யோ'' என்று அவள் கூப்பாடு போடுவாள். மழைக் காலத்தில் ஜலதோஷம் அவளைவிட்டு விலகிச்செல்லாது. அப்படி ஏதாவது இருக்க வேண்டும் என்று மட்டுமே அனைவரும் எண்ணினார்கள்.

Advertisment

"வயிறு வலிக்குது... முடியல...'' என்று அவள் குறைப்பட்டுக் கொண்டபோது, அம்மா கூறினாள்: "மீனாட்சி, நீ அந்த  மாமரத்துல இருந்து மாங்காய் திங்க ஏன் போனாய்? அவங்கவங்க விஷயத்தை அவங்கவங்க கொஞ்சமாவது பார்க்க வேண்டாமா? இப்படி புத்தியில்லாமல் ஒவ்வொன்றையும் தின்று, உடல் நலக்கேடு உண்டாக்கிக்கொண்டால், அதை அவங்கவங்கதான் அனுபவிக்கணும்.''

அந்த நேரத்தில் மீனாட்சி அக்கா கிழக்கு வாசலில் அமர்ந்து, ஒரு கத்தியைக் கொண்டு பூசணிக்காயை வெட்டிக்கொண்டிருந்தாள். அவள் திடீரென சற்று முன்னோக்கிச் சாய்ந்தாள். அவளுடைய முகம் மிகவும் வெளிறிப் போயிருந்தது.

"நான் மாங்காய் எதுவும் சாப்பிடல...''- அவள் கூறினாள்: 

"நேற்று இரவு வயிறு வலித்ததால், கண்ணையே மூடல''.

"மீனாட்சி, மோரில் கொஞ்சம் அஷ்ட சூர்ணத்தைக் கலக்கிக் குடி.''- அம்மா கூறினாள்.

"நேற்று அஷ்ட சூர்ணத்தைக் குடிச்சேன். ஒரு பலனும் இல்ல. அந்த வெளுத்த மாத்திரையைச் சாப்பிட்டால் என்ன? லீலாக்குட்டி சாப்பிடுறது....''

"ஆஸ்ப்ரோ மாத்திரையைச் சொல்றியா? அதனால வயிறு வேதனை குணமாகுமான்னு எனக்குத் தெரியாது.''

அப்போதே அம்மா இரண்டு ஆஸ்ப்ரோ மாத்திரைகளை மீனாட்சி அக்காவிடம் கொடுத்தாள். நான் தானியப் பெட்டியின்மீது படுத்துக் கொண்டு ஒரு நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன்.

"இரண்டு ஆஸ்ப்ரோ மாத்திரைகள் என்பது கொஞ்சம் அதிகம்.''- நான் கூறினேன். மீனாட்சி 

அக்காவிற்கு அதை இதுவரை உட்கொண்டு பழக்க மில்லையே!

"மீனாட்சி, அது

"மீனாட்சி, அது இரண்டையும் சாப்பிடு.''- 

அம்மா கூறினாள்.

அன்று சாயங்காலம் ஆனபோது, மீனாட்சி அக்காவின் நோயின் நிலை அதிகமாகிவிட்டது. அவளுக்கு வேதனை தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. எதைச் சாப்பிட்டாலும், அது வாந்தியாக வந்துவிடும் என்ற நிலை உண்டானது. மீனாட்சி அக்காவை அம்மா ஐந்தாவது அறைக்கு அடுத்து இருந்த இருண்ட அறைக்குக் கொண்டு சென்றாள். அங்கிருந்த மரக் கட்டிலில்  பாயை விரித்துப்படுக்க வைத்தாள். அந்த அறையில் வைத்திருந்த சேனை, பூசணி, புளி ஆகியவை அங்கிருந்து எடுக்கப்பட்டன. எனினும், அந்த அறையில் பலாப் பழத்தின் ஒரு வாசனை தங்கி நின்றிருந்தது.

"டாக்டரை அழைப்பது நல்லது.''-அம்மா கூறினாள்.

மீனாட்சி அக்கா கட்டிலில் கிடந்து முனகிக் கொண்டிருந்தாள். அப்பா வாசலில் வந்து சற்று எட்டிப் பார்த்தார்.

"டாக்டரை அழைக்க வேண்டாம். ஒரு நாள் போகட்டும். ஏதாவது அஜீரண பிரச்சினையாக இருக்கும்.''-அப்பா கூறினார்.

"ஆவ்... அம்மா... எனக்கு முடியலையே!''- மீனாட்சி அக்கா உரத்த குரலில் கூப்பாடு போட்டாள்.

"கண்ணுல பார்க்குற எல்லாத்தையும் சாப்பிடுற காரணத்தாலதான் இப்போ வயிற்றுவலியே வருது.''- அப்பா கூறினார். அப்பாவிற்குக் கோபம் வர ஆரம்பித்திருந்தது.

"எதுவுமே சாப்பிடலைன்னு சொல்லலையா?-''

அம்மா கூறினாள்: "ஒரு வகையில் பார்க்கப் போனால், மீனாட்சி முன்பைப் போல இல்லை. ருசி இல்லாம போயிருக்கு. ஒரு பிடிச் சோற்றை அள்ளித் தின்று விட்டு, எழுந்து விடுவதைப் பார்த்திருக்கேன்.''

"சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்துடுறேன். எனக்கு என்ன ஆனது?''

"அதிகம் சாப்பிடாதது நல்லதுதான்.''- அப்பா கூறினார்: "இப்போ இளம் வயது இல்லை. அதையும் இதையும் வாரிச் சாப்பிடறதுக்கு...''

"ஆவ்... அம்மா... எனக்கு முடியலையே!''- மீனாட்சி கூறினாள். அவள் வெப்பம் நிறைந்த வெண்ணிறப் பையை தன் ஒட்டிய அடிவயிற்றில் வைத்து அழுத்திக் கொண்டிருந்தாள்.

அப்பா அங்கிருந்து நேராக வாசலுக்குச் சென்றார். 

அங்கு சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார்.

"டாக்டருக்கு ஆளை அனுப்பட்டுமா?''- அம்மா கேட்டாள்.

"இதற்கெல்லாம் டாக்டரைக் கூப்பிட என்னால முடியாது.''- அப்பா கூறினார்:

"வெறுமனே பத்து ரூபாய்களை வீணாக்கணுமா? "

"மீனாட்சிக்கு கடுமையான உடல் நல பாதிப்பு... இல்லாவிட்டால்... அவள் இப்படி கூப்பாடு போடமாட்டாள்.''

"அங்கு கிடந்து கூப்பாடு போடட்டும். இப்போ என் கையில் பணம் இல்ல...''- அப்பா கூறினார்.

"என் கையில பணம் இருக்கு.''- அம்மா கூறினாள்:

"அந்தச் சீட்டு மூலம் கிடைச்ச பணம் பெட்டியில இருக்கு.''

"இப்போ டாக்டரைக் கூப்பிட வேண்டாம். யாரையும் கூப்பிட வேண்டாம். ஒரு அஜீரண பிரச்சினை உண்டாகுறப்போ, மருத்துவமனை மருந்து வேணும்... டாக்டர் வேணும்... நான் கேட்கவே விரும்பல!''.

அம்மா தோற்று பின்வாங்கி விட்டாள். இரவு ஒன்பதுமணி ஆனபோது, மீனாட்சி அக்கா ரத்த வாந்தி எடுத்தாள். உடனடியாக அப்பா, டாக்டரை அழைத்துக் கொண்டு வருவதற்காகச் சென்றார்.

மீனாட்சி அக்காவின் முகத்தில் ஒரு மன்னிப்பு கேட்கும் சாயல் வெளிப்பட்டது. அவள் படுத்த இடத்திலிருந்து எழுந்து தரையிலிருந்த ரத்தத்தைத் துடைக்க முயன்றாள்.

"அசையாமல் படுக்கணும், மீனாட்சி''- அம்மா கூறினாள்.

"நான் துடைக்கிறேன்.''- மீனாட்சி அக்கா கூறினாள்: "ஒரு துணியைத் தந்தால், நான் துடைக்கிறேன்.''

"அதைத் துடைக்க வேண்டாம். அதை டாக்டர் கிட்ட காட்டணும்."- அம்மா கூறினாள்.

டாக்டர் வந்தபோது, மீனாட்சி அக்கா சுவரைப் பார்த்தவாறு அசைவே இல்லாமல் படுத்திருந்தாள். அவளுக்கு அருகில் அமர்ந்தவாறு டாக்டர் கூறினார்:

"கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்புங்க.''

மீனாட்சி அக்கா எங்கள் அனைவரையும் நிறைந்த கண்களுடன் பார்த்தாள்.

"எனக்குக் கொஞ்சம் கூட முடியல''- அவள் முணுமுணுத்தாள்.

பரிசோதனைக்குப் பிறகு, டாக்டர் ஒரு ஊசியைப் போட்டார்.

"எவ்வளவு வயசு ஆச்சு?''- டாக்டர் கேட்டார்.

"மீனாட்சிக்கு ஐம்பத்தாறு தாண்டியிருக்கும். என்னைவிட நான்கு வயது இளையவள் அவள்.''- அம்மா கூறினாள். அப்பா தரையில் படிந்திருந்த ரத்தக்கறையையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

நான்கு நாட்கள் கடந்தபோது, மீனாட்சி அக்காவின் சுய உணர்வு அவளை விட்டுச் சென்றுவிட்டது. அவள் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு, சில வேளைகளில் கூரையைப் பார்த்தவாறு படுத்திருப்பதைப் பார்க்கலாம். அப்படிஇல்லையென் றால், ஆழமான உறக்கம்.. தூக்கத்தில் சில நேரங்களில் முனகுவதையும் கேட்கலாம்.

"இவங்களுக்குக் "கேன்ஸர்'னு தோணுது''- டாக்டர் கூறினார்: "நான் மார்ஃபின் கொடுக்குறேன். வேதனை இல்லாமல் இருப்பதற்கு... ஆனால், மதராஸுக்கோ வேறு எங்கோ கொண்டு போய் பார்ப்பது நல்லது.''

அன்று இரவு உணவு சாப்பிடுவதற்கு மத்தியில் 

அப்பா கூறினார்: "கேன்ஸர்' என்றால், குணப்படுத்துறது ரொம்ப கஷ்டம். மதராஸுக்குக் கொண்டு போய், என்ன கிடைக்கப் போகுது?''

"அப்படின்னா, கோழிக்கோட்டுக்குக் கொண்டு போறதுதானே நல்லது?''- அம்மா கேட்டாள்: "டாக்டர் பாலகிருஷ்ணன் நாயரிடம் கொஞ்சம் காட்டக்கூடாதா?''

"கோழிக்கோட்டிற்கு கொண்டு போறதுன்னா, எவ்வளவு செலவாகும்னு உனக்குத் தெரியுமா?''

அப்பா கேட்டார்.

"அந்தச் சீட்டுப் பணம்... பெட்டியில இருக்கு''.

-அம்மா கூறினாள்.

"சீட்டுப் பணம்! நாற்பத்தைந்து ரூபாயை வைத்து புற்றுநோயைச் சிகிச்சை செய்து, குணமாக்க முடியுமா?''- 

அப்பா கோபத்துடன் கேட்டார். அம்மா தன் மூக்கை முந்தானையால் துடைத்தவாறு, இரண்டாவது தடவையாக சோற்றைப் பரிமாற ஆரம்பித்தாள்.

"போதும்.... போதும்.... எனக்கு இனி சோறு வேண்டாம்.''- அப்பா கூறினார்.

மறுநாள் மதியத்திற்குப் பின்னால் சுய உணர்வு திரும்ப வந்தபோது, மீனாட்சி அக்கா, அம்மாவிடம் கூறினாள்:

"என்னை மருத்துவமனைக்குக் கொண்டு போக வேண்டாம். நான் மருத்துவமனையில கிடந்து சாகக் கூடாது. இங்கு கிடந்து உங்க எல்லாருடைய கையில இருந்தும் நீர் கிடைத்து சாகணும்.''

"மீனாட்சி, நீ இறக்க மாட்டே...''-அம்மா கூறினாள்: 

"இரண்டு நாட்கள் தாண்டினால், இதெல்லாம் சரியாயிடும்.''

"இல்ல.. நான் சாகப் போறேன்.''-மீனாட்சி தேம்பிக்கொண்டே கூறினாள்.

நான் அவளின் கட்டிலில் சென்று அமர்ந்து, அந்த மெலிந்த கைகளை எடுத்து என் மடியில் வைத்தேன். அந்த அறையிலிருந்து பலாப் பழத்தின் மணம் அப்போது முற்றிலுமாக மறைந்து போயிருந்தது. அதற்குப் பதிலாக வியர்வை படிந்த தலைமுடியின், உடல்நலக் கேட்டின்... சிறிது கூட தாங்கிக் கொள்ள முடியாத ஒரு நாற்றம் அங்கு இருந்தது.

"மீனாட்சி அக்கா... உங்களுக்கு இது குணமாகும்.''- நான் கூறினேன்: "நான் பம்பாய்க்குத் திரும்பப் போகு றப்போ, எல்லாம் குணமாகி, நல்ல நிலைக்கு வரணும். மீனாட்சி அக்கா, நீங்க உடல் நலம் பாதிக்கப்பட்டு கிடக்குறப்போ, நான் எப்படி பிரசவிக்க முடியும்?'' மீனாட்சி அக்கா அழ ஆரம்பித்தாள்.

"கண்ணு... உன் மகனைப் பார்க்குறதுக்கு அதிர்ஷ்டம் இல்லாமப் போயிருச்சே!''- அவள் கூறினாள்.

"மீனாட்சி, லீலாவின் குழந்தையை உன்னால பார்க்க முடியும். அதை நான் உறுதியா சொல்றேன்.''- அம்மா கூறினாள்.

ஆனால், அதற்குப் பிறகு, மீனாட்சி அக்காவிற்கு சுய உணர்வு வரவே இல்லை. பக்கத்து வீடுகளிலிருக்கும் பெண்களும் மற்றவர்களும் அவளைப் பார்ப்பதற்காக அந்த அறைக்குள் வந்து நின்றபோது, ஒரு முறை... ஒரு நிமிடத்திற்கு.... அவள் கண்களைத் திறந்தாள். அவ்வளவுதான்.

மீனாட்சி அக்கா இறந்தபோது, அப்பாவும் அழுதார். 

அப்பா அழுவதை முதல் தடவையாக அன்று நான் பார்த்தேன்.

"இந்த அளவிற்கு அமைதியான குணத்தைக் கொண்ட ஒரு பெண்ணைப் பார்ப்பது கஷ்டம்''- அப்பா கண்களைத் துடைத்துக் கொண்டே கூறினார்.

வெண்ணிற துணியால் சுற்றப்பட்டிருந்த அந்த கறுத்து மெலிந்த பெண்ணின் உடலை வீட்டிற்கு வெளியே நான்கு பேர் கொண்டு சென்றபோது, அம்மா சத்தமாக குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

நான் அழவில்லை. ஆனால், குழந்தையாக இருந்த காலத்திலிருந்து பார்த்து வந்த அந்த முகத்தை இனிமேல் பார்க்க முடியாது என்பதை நினைத்த போது, என் இதயம் மரத்துப் போவதைப் போல நான் உணர்ந்தேன்.

சாயங்காலம் வரும்வரை, அந்த நிலத்திலிருந்து புகை உயர்ந்து கொண்டிருந்தது. பிறகு... நிலவு வெளிச்சத்தில்... அந்த புகைச் சுருள்களும் கலந்து கரைந்தன.

"பதினாறை நல்லா நடத்தணும்''- கணக்குப் பிள்ளையிடம் அப்பா கூறினார்: "என் குழந்தைகள் எல்லாரையும் பார்த்து வளர்த்தது அவங்கதான். எவ்வளவு பணம் செலவானாலும், பரவாயில்ல.''

அப்பா அழுவதை அன்று முதல்முறையாக நான் பார்த்தேன்.

--------------------------------

மொழிபெயர்ப்பாளரின் உரை

ணக்கம்.

இந்த மாத 'இனிய உதய'த்திற்காக 3 சிறந்த சிறுகதைகளை நான் மொழி பெயர்த்து உங்களுக்கு வழங்குகிறேன்.

"வேதனையும் நினைவும்' என்ற கதையை எழுதியவர்... 

மலையாள இலக்கியத்தின் நட்சத்திர எழுத்தாளரும், கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான உண்ணிகிருஷ்ணன் புதூர்.

குருவாயூர் கோவிலின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும் கதை.

இதில் வரும் ஆணும் பெண்ணும் நம் மனங்களில் தனியான இடத்தைப் பிடிப்பார்கள்.

இந்த இரு கதாபாத்திரங்களையும் உயிரோட்டத் துடன் படைத்திருக்கிறார் எழுத்தாளர்.

இந்தக் கதையை மலையாளத்தில் வாசித்தபோதும், இதை மொழி பெயர்த்தபோதும், ஒரு ஆலயத்திற்குள் இரு கதை மாந்தர்களை வைத்து இப்படியொரு கதையை எழுத முடியுமா என்ற வியப்புதான் எனக்கு உண்டானது.

அதற்காகவே உண்ணிகிருஷ்ணன்புதூரை நான் பாராட்டுகிறேன்.

"மீனாட்சி அக்கா' என்ற கதையை எழுதியவர்.... மலையாள பெண் எழுத்தாளர்களின் பேரரசியும், தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான மாதவிக்குட்டி.

1963-ஆம் வருடத்தில் அவர் எழுதிய இந்த கதை 'மாத்ருபூமி' வார இதழில் பிரசுரமாகி, வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் நான் மொழிபெயர்த்த கதைகளிலேயே என்னை மிகவும் நெகிழ வைத்த, கண்ணில் நீர் கசிய வைத்த கதை இது.

இக்கதையில் வரும் மீனாட்சி, இதை வாசிக்கும்  அனைவரின் உள்ளங்களிலும் நிரந்தரமாக குடிகொண்டிருப்பாள்.

அந்த அளவிற்கு உயிர்ப்புடன் அந்த பாத்திரத்தை நம் கண்களுக்கு முன்னால் உலாவ விட்டிருக்கிறார் மாதவிக்குட்டி.

இதை வெறுமனே கதை என்று கூறுவதைவிட, வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்று கூறுவதே பொருத்தமானது.

"நாவிதர் பேசுகிறார்' என்ற கதையை எழுதியவர்... உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான ஓ. ஹென்றி.

ஒரு நாவிதரையும் (பார்பர்), அவரிடம் சவரம் செய்வதற்காக வரும் ஒரு தபால்காரரையும் மையமாக வைத்து எழுதப் பட்டிருக்கும் கதை.

ஒரு சிறிய கதையில் இரண்டு சுவாரசியமான சம்பவங்களை நாவிதர் கூறுவதாக, ஹென்றி எழுதியிருக்கிறார்.

இரண்டுமே ரசிக்கத்தக்க சம்பவங்கள்தான்.

ஓ. ஹென்றியின் கதை என்றாலே, கதையின் இறுதியில் யாரும் சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு "ட்விஸ்ட்' இருக்கும். அந்தத் 'திருப்பம்' இந்த கதையிலும் இருக்கிறது.

அதுதான் ஓ. ஹென்றியின் முத்திரை!
நான் மொழிபெயர்த்த இந்த 3 கதைகளும் உங்களுக்கு மாறுபட்ட இலக்கிய அனுபவங்களை அளிக்கும் என்பது நிச்சயம்.

"இனிய உதயம்' வெளியிடும் என் மொழிபெயர்ப்பு ஆக்கங்களை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித் தளத்திலிருந்து நன்றி. 

uday010326
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe