Advertisment

வெற்றி உனை தேடி வர... நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர்

vetri

 


னிதன் உருப்பட 
இரண்டு வழி
நன்றி, பாசம் இருந்தால்
100 சதவிகிதம் வெற்றி
உன்னை தேடிவரும்...

Advertisment

ஏமாற்றங்கள்
எல்லாருக்கும் உண்டு..
தொடர் ஏமாற்றங்கள்தான்
விரக்தி அடைய செய்துவிடும்..
சோர்ந்து கிடப்பதால்
எந்த நல்லதும் நடக்க போவதில்லை..
வீழ்ந்து கிடப்பதே அவமானம்
எழுந்து சாதிப்பதே வீரம்..
நாம் கஷ்டங்களில் தவிக்கும்போது
ஆறுதல் தேடுகிறோம்..
பெரும்பாலும்
ஆறுதல் சொல்லியவர்களே
ஆப்பு வைப்பார்கள்..
வாழ்த்துகள் மட்டுமே
ஒருவரை வாழ வைத்துவிடாது
உழைப்பு வேண்டும்..

ஜோதிடர்கள் சொல்வதில்
எல்லாருக்கும்
எல்லா பலனும் பலிப்பதில்லை..
அப்படி சொல்லிவிட்டால்
கடவுளாகி விடுவான்

ஒரு ஜோதிடர்
துல்லியமான பலன் சொன்னால்
உலகமக்கள் முழுவதும்
அவரிடம் தஞ்சமடைவார்கள்..
வேறு ஜோதிடருக்கும் 
வேலை வேண்டும் என்பதால்
ஒருசிலருக்கு சொல்லும் பலன்
இன்னொருவருக்கு பலிப்பதில்லை..

Advertisment

ஜோதிடருக்கு நல்ல நேரம

 


னிதன் உருப்பட 
இரண்டு வழி
நன்றி, பாசம் இருந்தால்
100 சதவிகிதம் வெற்றி
உன்னை தேடிவரும்...

Advertisment

ஏமாற்றங்கள்
எல்லாருக்கும் உண்டு..
தொடர் ஏமாற்றங்கள்தான்
விரக்தி அடைய செய்துவிடும்..
சோர்ந்து கிடப்பதால்
எந்த நல்லதும் நடக்க போவதில்லை..
வீழ்ந்து கிடப்பதே அவமானம்
எழுந்து சாதிப்பதே வீரம்..
நாம் கஷ்டங்களில் தவிக்கும்போது
ஆறுதல் தேடுகிறோம்..
பெரும்பாலும்
ஆறுதல் சொல்லியவர்களே
ஆப்பு வைப்பார்கள்..
வாழ்த்துகள் மட்டுமே
ஒருவரை வாழ வைத்துவிடாது
உழைப்பு வேண்டும்..

ஜோதிடர்கள் சொல்வதில்
எல்லாருக்கும்
எல்லா பலனும் பலிப்பதில்லை..
அப்படி சொல்லிவிட்டால்
கடவுளாகி விடுவான்

ஒரு ஜோதிடர்
துல்லியமான பலன் சொன்னால்
உலகமக்கள் முழுவதும்
அவரிடம் தஞ்சமடைவார்கள்..
வேறு ஜோதிடருக்கும் 
வேலை வேண்டும் என்பதால்
ஒருசிலருக்கு சொல்லும் பலன்
இன்னொருவருக்கு பலிப்பதில்லை..

Advertisment

ஜோதிடருக்கு நல்ல நேரம்
இருக்கும்வரைதான்
பிரபலம் ஆவார்..
அவருக்கும் அஷ்டமாதிபதி தசை வந்தால்
செல்லும் இடம் தெரியாது..
எந்த மனிதனும் 
நிரந்தரமானவன் இல்லை...
காலம் எப்படிப்பட்டவரையும்
ஏமாற்றிவிடும்...

ஜாதகத்தில் முக்கியமானது
லக்னம் - லக்னாதிபதி..
லக்னத்தில் சுபர்
லக்னாதிபதியுடன் சுபர்
லக்னத்தை சுபர் பார்ப்பது 
லக்னாதிபதி தசை
சுபர் தசை 
கோட்சாரத்தில் சுப நிலை 
என அனைத்தும் 
நல்ல நிலையில் இருந்தால்
அதியோக, ராஜயோக பலன்
வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தே இருக்கும்..

நான் பார்த்தவரை எப்போதும் 
அவர் நன்றாகவே இருக்கிறார்
அவர் குடும்பம் 
நன்றாக இருக்கிறது என
கேள்விப்படும்..
ராஜ வாழ்க்கை வாழும்
சிலரின் ஜாதகத்தில் அமைந்த 
லக்ன நிலைதான்
காரணம்...

பொருளாதாரமும் குடும்பமும்
நன்றாக அமைய வேண்டும் என்றால்
இரண்டாம் இடம் 
சுப கிரக பார்வை 
சுப கிரக இணைவுடன் இருக்கவேண்டும்..
இரண்டாம் அதிபதி 
நல்ல கிரகங்களுடன் இருந்து
தசை நடந்தால் சிறப்பாகவே இருக்கும்...
எத்தனை பிரச்சினைகள் 
இடர்பாடுகள் வந்தாலும்  
அதிலிருந்து மீள 
தன்னம்பிக்கை, தைரியம் வேண்டும்..
மூன்றாம் இடம் 
மூன்றாம் இடத்து அதிபதி
சுபருடன் அல்லது 
சுப கிரக பார்வையில் இருந்தால் 
வீரனாக வெற்றி பெறுவான்...

நான்காம் இடம்
நான்காம் இடத்து அதிபதி 
நன்றாக அமர்ந்தால் 
சுப போகங்களுடன்
சுபயோக பலன்களைத் தருவான்..
ஐந்தாம் இடம் 
ஐந்தாம் இடத்து அதிபதி 
நன்றாக அமைந்தால்
புத்திர பாக்கியம் 
பூர்வபுண்ணியம் 
நன்றாக அமையும்...

இப்படி 12 இடங்கள் 
சுப தன்மை 
உடனிருந்தால் மட்டுமே 
ஒருவருக்கு நிம்மதியான 
வாழ்க்கை கிடைக்கும்..
அப்படி எல்லோருக்கும் 
எல்லா இடங்களும் 
சிறப்பாக அமையாது..
முழு சுகங்கள் பெற்ற மனிதன் 
என்று யாரும் இல்லை..
ஏதாவது ஒரு இழப்பு
ஏதாவது ஒரு குறை
ஏதாவது ஒரு ஆசை 
நிறைவேறாமல்தான்
எல்லா மனிதருக்கும் 
அமையும்..
எனக்கு மட்டும் துன்பம் 
என்று யோசிக்காமல்
எல்லாவற்றையும் கடந்து 
வாழ நினைப்பதுதான் 
வாழ்வில்
அடுத்த இடத்திற்கு செல்லமுடியும்...

தன்னம்பிக்கை 
யாராவது அருகில் இருந்து 
கொடுத்துகொண்டே இருக்கமுடியாது..
உங்களுக்கு நீங்களேதான் 
தன்னம்பிக்கை 
கொடுத்து கொள்ளவேண்டும்..
உனக்கு ஆறுதல் நீ மட்டுமே..
சிலர் எப்போதும் 
புலம்பிக்கொண்டே இருப்பார்கள்..
அப்படி இருந்தால்தான்
அருகில் இருப்பவர்கள் 
தன்னிடம் உதவி கேட்காமல் 
இருப்பார்கள் என்பதற்காக.. 
அப்படிப்பட்ட 
அபசகுணம் பிடித்தவர்களை 
அருகில் சேர்க்காதீர்கள்...   

பரிகாரங்கள் 
பலவிதமாக இருந்தாலும்
பலருக்கு பலன் தருவதில்லை..
உன்னுடைய கர்மாவை
நீ கழித்தே தீரவேண்டும்..
தப்பிக்க பரிகாரம் செய்தால்
ஜென்ம ஜென்மத்திற்கும்
தண்டனை தொடரும்..
மக்களின் தொந்தரவு
தாங்க முடியாதவன்தான்
கடவுளை பூமியில் படைத்தான்..
தான் படைத்த கடவுளே
சிறந்தது என மக்கள்
தங்களுக்குள்
அடித்துக் கொள்கிறார்கள்.. 
பரிகாரம் இல்லை 
என்கிற ஜோதிடன்
பரிகாசப்படுத்தப்படுகிறான்..
ஆதலால் ஜோதிடர்கள்
பரிகாரத்தை படைத்தார்கள்..
புதிது புதிதாக
படைக்கிறார்கள்..

ஏலியன்கள்
பூமிக்கு வந்தாலும்
எப்படியும் கடவுள்
பூமிக்கு வர போவதில்லை..
அண்டத்தில் இருப்பதுதான்
பிண்டத்தில் என சொன்னவன்
சித்தனல்ல..
உங்களை பெற்ற 
பெருமகன்கள்..
இந்நாட்டின் விஞ்ஞானிகள்..
விஞ்ஞானிகளை மெய்ஞானிகளாய்
மாற்றும்
நாம் மெய்யாய் வாழ்ந்தால்தான்
இந்த உலகம் 
இன்னும் கொஞ்ச காலம்
உருப்படியாய் சுற்றும்..

ஜோதிடம் கால கணிதம்
அதனை சரியாக பயன்படுத்தினால்
மனிதரில் புனிதராய்
நீ மாறலாம்..
காலம் 
எல்லா வலிகளையும் மாற்றி
எல்லா வழிகளிலும்
உனக்கு நல்லதே செய்யும்..
எல்லாம் நன்மைக்கே
என ஏற்றுக்கொள்ளும்போதே
எல்லாமும் நல்லா மாறும்..
பேரண்டத்தில் இருக்கும்
பேரிறைவன் உனை காக்க
பெருங்கடவுளாய்
அவதரிக்கும் நாள்
நெருங்கிவிட்டது..
நல்லதை இன்றே செய்
இக்கணமே செய்
நல்லதே நடக்கும்...

bala300825
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe