ன்றைய நவயுகத்தில் மணவாழ்வு சார்ந்த பின்னடைவுகள் மிகையாகவே உருவாகிவருகிறது. அவை சார்ந்த சில உண்மை நிலை குறித்து சாஸ்திரரீதியாக ஆய்வு செய்வோம்.

Advertisment

ஜாதகமே இல்லாதோருக்கு உள்ளங் கையில் தோன்றும் அறிகுறிகளே முத-டம் வகித்து நம்மை வருமுன் காக்க துணைபுரியும். எனவே புது கோணத்தில் ஆய்வு செய்வோம். திருமணங்களில், 16 பொருத்தம், 10 பொருத் தம் என பார்ப்பதுண்டு. (அக்காலத்தில் இதனை தா- பொருத்தம் என்பர்.) 

Advertisment

கட்டிய தாலி மூன்று முடிச்சுடன் நிறைவேறி னாலும் நிலையாக வாழ்நாள் முழுக்க வில்லங்கம் இல்லாத மணவாழ்க்கைக்கு ரஜ்ஜூ பொருத்தமும் இன்றியமையாதது.

திருமண காலத்தில் ஜாதகத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை

எவை- எவை!
திருமண காலத்தில் ஆண்- பெண் ஜாதகத்தில் என்ன தசை நடைபெறுகிறது.

கோட்சாரரீதியாக இருவருக்கும் குரு, சனி, ராகு- கேது போன்ற கிரகங்களின் நிலை எவ்வாறு உள்ளது.

Advertisment

வருகின்ற தசைகள் யோக தசைகளா, அவயோக தசைகளா மற்றும் ஜாதகத்தின் பலம் எவ்வாறுள்ளது? லக்னாதிபதி எப்படி இருக்கிறார், களத்திர காரகன் சுக்கிரனின் நிலை என்ன?

இரண்டாமிடம், இரண்டாம் வீட்டிற்கு அதிபதி எப்படி இருக்கிறார்? ஏழாமிடம் ஏழாம் வீட்டிற்கு அதிபதி எப்படி இருக்கிறார்  என்று மேலே கூறிய அனைத்து கிரக நிலைகளும் ராசி மற்றும் நவாம்சம் ஆகிய இரண்டிலும் சீர் தூக்கி பார்த்து அந்த ஜாதகத்தை தேர்வு செய்யவேண்டும்.

இன்னும் சில ஆண்- பெண் இருவருக்கும் தசா சந்திப்பு இருப்பது கூடாது.

இரண்டு, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் அதைபோலவே சூரியன் உள்ள ஜாதகத்தை சேர்க்கவேண்டும். இரண்டு, ஏழு ஆகிய இடங்களில் ராகு- கேது இருந்தால் அதைபோலவே உள்ள ராகு- கேது ஜாதகத்தை இணைக்கவேண்டும். 

இரண்டு, ஏழு, ஒன்பது போன்ற வீட்டின் அதிபதிகள் இருவர் ஜாதகத்திலும் பலமாக இருக்கவேண்டும். ஒருவர் ஜாதகத்தில் சுமாராக இருந்தால் இன்னொருவர் ஜாதகத் தில் வ-மை பெற்றிருக்க வேண்டும். 

ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும் 7 1/2 சனி ஒரே நேரத்தில் வராதிருக்க வேண்டும்.

கலப்பு திருமண பின்னடைவுகள்

எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 போன்ற இடங்களில் தனித்திருப்பது நல்லதல்ல. குறிப்பாக மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தனித்த குரு இருப்பது காதல் திருமணத்திற்கு அஸ்திவாரமாகும். திருமண பருவ காலத்தில் வயதில் கோட்சார நிலை சரியில்லாமலும் தசாபுக்திகள் சரியில்லாமலும், இருந்தால் மேலே குறிப்பிட்ட குருவால் கெடுபலனால் தாய்- தந்தையரை வேதனைக்கு உட்படுத்தும்விதமாக வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்யும் நிலை உண்டாகும். உள்ளங்கையில் திருமண ரேகை சனி மேட்டை நோக்கி செல்லும். சுக்கிர மேட்டை நோக்கி சென்றால் தூரத்து உறவை நாடிபோக நேரிடும்.

ப் லக்னத்தில் ராகு, சனி சேர்க்கை சந்திரனுக்கு ஏழில் சனி. குரு பார்வை சீராக இல்லா ஜாதகம் கலப்பு திருமணம். 

ப் ஏழாம் இடத்தில் கேது இருந்து லக்னாதிபதியும் சுக்கிரனும் பலம் குறைந்து காணப்பட்டால் கலப்பு திருமணம். 

ப் ஏழாம் வீட்டிற்கு அல்லது ஏழாம் வீட்டோன் இந்த இரண்டு இடங்களில் ராகு- கேது சம்பந்தம் ஏற்பட்டால் கலப்பு திருமணம், களத்திர காரகன் சுக்கிரனுடன் ராகு- கேது, சம்பந்தம் ராசி நவாம்சம் ஆகிய இரண்டிலும் எதில் இருந்தாலும் காதல் கலப்பு திருமணம் நிறைவேறும். ராகுவின் ஆதிக்கம் அதிகமிருந்தால், இஸ்லாமிய பெண்ணை இணைத்து வைப்பாராம். கேதுவின் ஆதிக்கம் என்றால் கிருஸ்து வரை இனத்தை வைப்பாராம்.

ப் ஏழாம் இடத்தில் கேது இருந்து லக்னாதிபதியும் சுக்கிரனும் பலம் குறைந் திருந்தால், இன்டர் காஸ்ட் மேரேஜ்.

ப் ஏழாம் வீட்டில் செவ்வாய், ராகு சேர்க்கை, அரசு வேலை பார்க்கும் துணை காதலாகி கலப்பு திருமணம்.

ப் பன்னிரண்டாம் இடத்திலுள்ள குரு பலம் குறைந்தால், குரு, குலதர்மத்திற்கு விரோதமான திருமணத்தை நடத்தி வைப்பார்.கைகளில் குரு மேட்டில் கரும்புள்ளி திருமண ரேகையில் தீவு (ஐலண்ட்) காணப்படின் துறவி கூட காதலராகலாம்.

ப் லக்னாதிபதி, ஏழாம் அதிபதி, சுக்கிரன் மூன்று பேரும் சேர்க்கை பெற்று எங்கு இருந்தாலும் கலப்பு திருமணம். 

ப் குரு 2, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்து அதாவது- தனித்திருந்தாலும் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும் இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் ஈடேறினாலும், "எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி, அங்கே எனக்கொரு இடவேண்டும்' என பாடும் சூழ்நிலைதான். "புதிய பறவை' திரைப்படம்போல் அல்லலுற நேரிடும்.

ப் லக்னத்திற்கு ஏழாம் இடத் தில் சந்திரன் தீய ஆதிபத்தியம், பாப கிரகம் பார்வை பெற்றால் காதல் கைகூடும்.

ப் லக்னத்திற்கு எட்டுக்குடையவன் ஏழாம் இடத்தில் இருந்து ஏழாம் அதிபதி பலம் குறைந்திருந்தால் காதல் திருமணம். எட்டாம் அதிபதி, ராகு- கேது சாரம் பெற்று காணப் பட்டால், தாய்- தந்தைக்கு தெரியாமலே வீட்டைவிட்டு வெளியேறி திருமணம்தான். 

ரஜ்ஜூவின் முக்கியத்தை பார்ப்போம்அதாவது ஐந்து வகை ரஜ்ஜூ உள்ளன. 

ப் சிரோரஜ்ஜூ- இது தரும் கெடுபலன். கணவனின் நிலை கெடுதல்.

ப் கண்டரஜ்ஜூ- மனைவிக்கு ஆகாது. அவள் ஜாதகத்தில் 7-ல் ராகு- கேது, சனி இருப்பது கூடாது.

ப் நாபி ரஜ்ஜூ- சந்தான பாக்கியம், வம்ச விருத்தி. தடையாகும். குழந்தை பேறு தடை.

ப் ஊரு ரஜ்ஜூ- குடும்பத்தில் தனவரவு, பணமுடை, பொருளாதார சீர்கேடு வரும்.

ப் பாத ரஜ்ஜூ- கட்டிய கணவன் ஏதோ காரணத்தால் குடும்பத்தை பிரிந்து வாழ நேரிடும்.
அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரத்திற்கும் ரஜ்ஜூ தடை விவரம் தருகிறேன். சுலபமாக அறிந்து செயல்படலாம்

மணமகள் நட்சத்திரம் அஸ்வினி
அஸ்வினி: ஏகரஜ்ஜூ பொருந்தாது. ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி. 

இவையாவும் ஏகரஜ்ஜூ. தவிர்க்க வேண்டி யவை.

பரணி: பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி தவிர்க்கவும். 

கிருத்திகை: (ராசி மேஷம்) முதல் பாதம் கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி.

கிருத்திகை: (ரிஷபம்) 2, 3, 4 பாதம் கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகியவை ஏகரஜ்ஜூ.

ரோகிணி: ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதையம்.

மிருகசீரிஷம்: 1, 2 பாதம் (ரிஷபம்) 
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம். 

மிருகசீரிஷம்: 3, 4 பாதம் (மிதுனம்) மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.

ப் திருவாதிரை (ராசி, மிதுனம்) 
ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம்.

ப்  புனர்பூசம்: 1, 2, 3 பாதம், (மிதுனம்)
கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி.

புனர்பூசம்: 4-ஆம் பாதம் (கடகம்)
கிருத்திகை, புனர் பூசம், உத்திரம், விசாகம் உத்திராடம், பூரட்டாதி.

ப் பூசம்: ராசி கடகம்
பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி.

ப் ஆயில்யம் கடகம்
அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி.
ப் மகம் சிம்மம் அஸ்வினி, ஆயில்யம், கேட்டை, மூலம், ரேவதி.

பூரம் சிம்மம்
பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி.

உத்திரம்: 1-ஆம் பாதம் சிம்மம்
கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி.

உத்திரம் 2, 3, 4 பாதம்
கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி.

அஸ்தம் கன்னி
ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதையம்.

சித்திரை 1, 2 பாதம் கன்னி
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்.

சித்திரை 3, 4 பாதம் (துலாம்)
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம். 

சுவாதி ராசி துலாம்
ரோகிணி, ஏகரஜ்ஜூ. திருவாதிரை அஸ்தம், 
சுவாதி, திருவோணம், சதயம், (27 நட்சத்திரத் தில் இந்த ஏழு நட்சத்திரமும் தவிர்க்கவும்.) கணவன்- மனைவி இருவர் கையிலும் ஆயுள் ரேகை குட்டையாகவும் திருமண ரேகையில் கரும்புள்ளி தென்பட்டால் மணவாழ்க்கை பல இன்னலை நிச்சயமாக தந்துவிடும். இது மட்டுமல்ல; இவர்கள் அஸ்வினி நபரை துணையாக ஏற்றால், இல்லற சுகம் கெடுவதோடு அதுவே மணமுறிவை தர முயலும்.

விசாகம் துலாம் 1, 2, 3 பாதம்
கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகியவை. பூராடம் கணப் பொருத்தம் இருக்காது. உத்திரட்டாதி பகையோனி, திருவோணத்தையும் தவிர்க்க லாம். வதவை நாசிகம் பொருந்தாது. 

விசாகம்: 4-ஆம் பாதம், விருச்சிக ராசி 
கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி.

அனுஷம் விருச்சிகம்
பரணி, பூசம், பூரம், அனுஷம், உத்திரட் டாதி. (திருவாதிரை, மூலம், அவிட்டம்) இவற்றையும் தவிர்க்கவும். பகையோனி. இவர்களின் சுண்டுவிரல், மிக குட்டையானால், உடலுறவில் நாட்டம் பின்னடைவாகும். அதுவே மணமுறிவை ஏற்படுத்தும்.

கேட்டை விருச்சிகம்
அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகியவை (திருவாதிரை) பகையோனி. பூராடம், கணப் பொருத்தம் தடையேற்படும். கணவரின் ஜாதகத்தில் 5-ஆமிடத் தில் கிரக நாதர் இல்லையென்றால். குழந்தை பேறு காலதாமதமாகலாம். பெண் ஜாதகத் தில் குரு, சுக்கிரன், சனி வீட்டில் இருப்பது கூடாது. 

மூலம் தனுசு ராசி
அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, ரேவதி ஆகியவை ஏகரஜ்ஜூ. அனுஷம் பகையோனி. உத்திராடம், பூரட்டாதி கணப் பொருத்தம் இருக்காது. தவிர்க்கவும். மணாளனில் கையில் ஆட்காட்டி விரல் குட்டையாகி குருமேடு நீசமானால், பக்தி பரவசத்தால் இல்லற சுகத்தை வெறுப்பவராக இருப்பார். 

பூராடம் தனுசு
பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி பொருந்தாது. கிருத்திகை (பகை யோனி).

உத்திராடம் 1-ஆம் பாதம் தனுசு 
கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி, சித்திரை, பகையோனி.

உத்திராடம்: 2, 3, 4 பாதம் மகரம்
கிருத்திகை, புனர்பூசம், உத்திராடம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகியவை. 

திருவோணம் மகரம்

ரோகிணி, அஸ்தம், சுவாதி, திருவோணம், மூலம் (பகையோனி, கிருத்திகை, பூசம்.)

அவிட்டம்: 1, 2 பாதம், மகரம்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இவை மூன்றும், பரணி ரேவதியும் பகையோனி. பூரட்டாதி கணப் பொருத்தம் இருக்காது.

அவிட்டம்: 3, 4 பாதம் கும்பம் 
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்.

சதயம் கும்பம்

ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம் கும்பம்

கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகியவை. பரணி, ரேவதி (பகை யோனி) தவிர்க்கவும். 

பூரட்டாதி 4-பாதம்

கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி.

உத்திரட்டாதி மீனம்

பரணி, பூசம், உத்திரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, சித்திரை, விசாகம், (பகை யோனி.)

ரேவதி மீனம்

அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி, ரஜ்ஜூ பொருத்தம் இருக்காது. அவிட்டம், பூரட்டாதி. (பகை யோனி.)  சாஸ்திர வழிகாட்டிமூலம் மேற்கூறிய, பொருந்தாத நட்சத்திரங்களைத் தவிர்த்தாலே ஓரளவு மணவாழ்வு நிம்மதி தரும்.

செல்: 93801 73464