சுமார் 70 வயதுடைய ஒருவர், ஜீவ நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்' என்றேன்.

Advertisment

ஐயா, "எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். மூத்த மகனுக்கு 37 வயது, இளைய மகனுக்கு 33 வயதாகின்றது. பெரிய மகனுக்கு 30 வயதிலேயே எனது உறவில் ஒரு பெண்ணை திருமணம் செய்துவைத்தோம். ஆனால் ஆறுமாத குடும்ப வாழ்வில் கணவன்- மனைவி இருவரும் பிரிந்துவிட்டார்கள். 

Advertisment

அந்தப் பெண் விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துவிட்டாள். நான்கு வருடங்களாக மூத்த மகன் தனித்து வாழ்கின்றான்.

இரண்டாவது மகனுக்கு கடந்த நான்கு வருடங்களாக திருமணம் செய்ய பெண் பார்த்துவருகின்றேன். ஆனால் பெண் அமையாமல் திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது. இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ளவே அகத்தியரை தேடி வந்துள்ளேன்'' என்றார்.

Advertisment

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலனை கூறத் தொடங்கினார்.

 இவன் வம்ச முன்னோர்கள் வாழ்வில் உண்டான சகோதர சாபம், இப்போது மகன்கள் வாழ்க்கையை பாதிக்கின்றது. இவன் பாட்டன் அவனுக்கு ஒரு தம்பி அதாவது- இவன் சின்ன பாட்டன் ஒருவன் இருந்தான்.  இவன் பாட்டன் குடும்ப பூர்வீக சொத்துகளில் தன் தம்பிக்கு கொடுக்காமல் தானே முழுச் சொத்தையும் அபகரித்து, அனுபவித்து வசதியாக வாழ்ந்தான். சிறிய பாட்டன் வாழ்க்கை சிரமமானது. இவன் பாட்டனுக்கு இவன் தகப்பன் ஒரே மகன். இவன் சின்ன பாட்டனுக்கு இரண்டு மகன்கள்.

தம்பியின் மகன்கள் இருவரும் வயதில் இளையவர்கள். இவன் தகப்பன் மூத்த வயதுடையவன். இவன் பாட்டனின் குணம், செயல் அறிந்து, இவன் தந்தைக்கு திருமணம் செய்ய பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. திருமணம் தடையாகிக்கொண்டே வந்தது.  அதனால் தம்பி மகன்களுக்கு திருமணம் நடக்கக்கூடாது என்ற தீய எண்ணத்தில் அவர்களுக்கு பெண் கொடுக்கலாம் என்று நினைப்பவர்களிடம் எல்லாம், அவர்கள் வீடு தேடிச்சென்று, தம்பி மகன்களையும், அவர்கள் குடும்பத்தைப்  பற்றியும் தவறாகக்கூறி, பெண் கொடுக்கவிடாமல் செய்துவிடுவான்.

உடன்பிறந்த அண்ணனின் செயலையறிந்து, இவன் சின்ன பாட்டன், மனம் கலங்கி இவன் பாட்டனுக்கு சாபங்களையிட்டான். என் அண்ணன் எனக்கு முறையாக கிடைக்கவேண்டிய சொத்துகளையும் அபகரித்துக்கொண்டு, எனக்கும், என் குடும்பத்திற்கும் பல கெடுதல்களை செய்துகொண்டு இருக்கின்றான். இப்போது என் மகன்களின் வாழ்க்கையையும் தடுத்துக்கொண்டு இருக்கின்றான். என் மகன்களின் வாழ்க்கையை எண்ணி நான் இப்போது கலங்குவதுபோல் என் மகன்களின் திருமணம் தடையாவதுபோல், என் அண்ணன் வம்ச வாரிசுகளின் வாழ்க்கையிலும், ஆண்களானால் ஒரு கன்னியை கரம் பற்றவும், பெண்களானால் பருவவயதில் ஒரு காளையை கரம் பற்றி கணவனை அடையமுடியாமல் தவிக்க வேண்டும். திருமணம் நடந்தாலும் அவர்கள் கணவன்- மனைவி பாசம் குறைந்து, பிரிந்து வாழ வேண்டும்.

அண்ணன் மகன் மூத்தவன். என் மகன்கள் இளையவர்கள். இனி வரும் காலங்களில், அண்ணன் வம்ச வாரிசுகளின் வாழ்க்கையில் தம்பிக்கு திருமணம் முடிந்தவுடன்தான் மூத்தவனுக்கு திருமணம் நடக்க வேண்டும். மூத்தவனுக்கு திருமணம் முதலில் திருமணம் நடந்தால் அவன் வாழ்க்கை மனைவியுடன் நீடித்து இருக்கக் கூடாது. கணவனை விட்டு மனைவி பிரிவாள் என்று இன்னும் பல விதமாக தன் அண்ணன் குடும்பத்திற்கும், வம்ச வாரிசுகளுக்கும் சாபமிட்டான்.

இவன் பாட்டன் செய்த பாவத்தின் விளைவால், இவன் சின்ன பாட்டன் விட்ட சாபம், இவன் பெற்ற மகன்களின் வாழ்க்கையில் செயல்பட்டு இவன் பெரிய மகன் குடும்ப வாழ்க்கையை ‌கெடுத்து வருகின்றது. இளைய மகன் திருமணத்தைத் தடுத்துவருகின்றது என்று முன்னோர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும், இப்போது காரியத் தடைக்கு காரணத்தையும் கூறினார்.

வம்சத்தில் உண்டான சாபத்தடை நிவர்த்தியாகி, என் மகன்களுக்கும், இனி குடும்ப வம்ச வாரிசுகளின் வாழ்வில் சாபம் பாதிப்பு இல்லாமல் நல்ல வாழ்க்கை அமைய அகத்தியர்தான் வழி காட்ட வேண்டும் என்றார்.

இளைய மகனுக்கு, மனைவியாக வரப்போகும் பெண்ணைப் பற்றிய விவரங்களைக் கூறி அவனுக்கு பெண் தேடச்சொல். நான் கூறியதுபோன்று பெண் அமையும். திருமணம் செய்துவைக்கச் சொல். இளையவன் திருமணம் முடிந்தவுடன், அந்தப் பெண்ணின் உறவிலேயே கணவனை இழந்த ஒரு விதவைப் பெண் மூத்த மகனுக்கு மனைவியாக அமைவாள். 

அவளை பெரியவனுக்கு திருமணம் செய்து வைக்கச்சொல். வம்ச சாபம் நிவர்த்தியாக, சில எளிமையான பிரார்த்தனைகளைக் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியரை வணங்கி, அவர் கூறியபடியே அனைத்தையும் செய்து விடுகின்றேன் என்று கூறி என்னிடம் விடைபெற்றுச் சென்றார் ஆண்- பெண்களின் திருமணத்தடைக்கு, கிரகங்கள் காரணம் அல்ல. வம்சத்தில் குடும்ப உறவுகளுக்கு முற்பிறவிகளில் செய்த பாவமும், அதனால் பாதிக்கப்பட்ட உறவுகள் விட்ட சாபமும்தான் காரணம். பாட்டன் செய்த பாவமும், பெற்ற சாபமும், வம்சத்தில் தொடர்ந்து பேரன்கள் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை நானும் தெரிந்துகொண்டேன்.

செல்: 99441 13267