சுமார் 65 வயதுடைய ஒரு பெண்மணி நாடியில் பலனறிய வந்தார். அவரை அமரவைத்து "என்ன காரியமாக பலனறிய வந்துள்ளீர்கள்'' என்றேன்.
எனக்கு ஒரு மகள், ஒரு மகன். மகளுக்கு 33 வயது, மகனுக்கு 29 வயதாகின்றது. கடந்த ஏழு வருடங்களாக மகளுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்து வருகின்றேன். மாப்பிள்ளை அமையவில்லை. இப்போது மகனுக்கும் திருமண வயது வந்துவிட்டது.
ஜோதிடர்கள் பலரிடம் மகள் ஜாதகத்தை காண்பித்து பலன் கேட்டபோது அவர்கள் சில தோஷங்கள் இருப்பதாக கூறினார்கள். திருமணத்தடைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரணத்தைக் கூறுகின்றார்கள்.
ஒரு சிவன் கோவில் குருக்களிடம் என் நிலையைக் கூறினேன். அவர் தான் உங்கள் செல்போன் நம்பரைத் தந்து அகத்தியர் ஜீவநாடியில் பலன் கேட்டால் உங்கள் கஷ்டங்களுக்கு சரியான காரணம் தெரியும், கஷ்டம் தீர வழி கிடைக்கும் என்றார்.
அம்மையார் கூறியதைக் கேட்டு விட்டு ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன் கூறத்தொடங்கினார்.
இவள் குழந்தைகளின் திருமணத்தடைக்கு கிரக தோஷமாக குலதெய்வ கோபமோ, ஏவல், பில்லி, சூனியமோ காரணமில்லை, இவளின் தாய், தந்தை செய்த பாவத்தால் உண்டான தாய்மாமன் சாபம் தான் காரணம் அந்த சாபமும் இவளால் உண்டானதுதான்.
இவளின் இந்த வாழ்க்கைக்கும், குழந்தைகளின் திருணத் தடைக்கு காரணமான சாபத்தையும் கூறுகின்றேன். இவள் பெற்றோருக்கு இவள் ஒரே மகள், இரண்டு சகோதார்கள். இவள் தாயை திருமணம் செய்த பின்பு, தனது சொந்த ஊரைவிட்டு வெளியேறி மனைவி பிறந்த ஊரில் சென்று வசித்தார்கள். இவள் தாயின் பெற்றோர்கள், பொருள் உதவி செய்து ஆதரவு தந்து காப்பாற்றினார்கள். அவர்கள் ஆதாவில்தான் இவளும் சகோதரர்களும் வளர்ந்தார்கள்.
இவள் வளர்ந்து பருவமடைந்து பெரியவளானால், இவள் தாயின் அண்ணன் மகனுக்கு இவளைத் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டு, அண்ணன் பெண் கேட்டான். ஆனால் பெண் தர இவன் தகப்பன் மறுத்துவிட்டான். இவளும் மாமன் மகனைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டாள்.
இவளின் அண்ணன் பிறர் ஆதரவின்றி அனாதைபோல் வந்தவர்களுக்கு பொருள் உதவி செய்து ஆதரவு தந்து இந்த தங்கையை காப்பாற்றினோம். ஆனால் என் மகனுக்கு தர மறுத்துவிட்டீர்கள். உங்கள் விருப்பப்படி எங்கு வேண்டுமென்றாலும்? யாருக்கு வேண்டுமென்றாலும் உங்கள் மகளைத் திருமணம் செய்து வைத்துக்கொள் ளுங்கள். நன்றாக வாழட்டும். ஆனால் நம்பிக்கை துரோகமும், நன்றி மறந்தவர்களுக்கும் எப்படி வாழ்க்கை அமையுமோ? அந்த பலனை அனுபவிப்பீர்கள் என்று கோபத்துடன் மனம் வெறுத்து சாபமிட்டான்.
இவளின் பெற்றோர் இவளுக்கு ஒருவனைத் திருமணம் செய்து வைத்தார்கள். தாய்மாமன் சாபம் இவள் வாழ்க்கையில் செயல்படத் தொடங்கியது. இவள் இல்லற வாழ்க்கை சிறிது காலம்தான். மகன் பிறந்த உடன் கணவன் இவளைவிட்டுப் பிரிந்தான். இவள் வாழ்வும் சந்நியாசி வாழ்க்கையானது. இவள் குழந்தைகளின் திருமணத்தையும் தாய்மாமன் சாபம் தடுத்து வருகின்றது என்றார் அகத்தியர்.
அகத்தியர் கூறியது அனைத்தும் என் வாழ்வில் நடந்துள்ளது. எந்த ஜோதிடரும் இந்த உண்மையை விளக்கமாகக் கூறவில்லை. எங்களின் இந்த நிலைக்கு காரணம் கூறிய அகத்தியர்தான் தாய்மாமன் விட்ட சாபம் நிவர்த்தியாகி என் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்து நல்வாழ்வு அடைய வழிகாட்ட வேண்டுமென்றார்.
அகத்தியர் தாய்மாமன் சாபம் நிவர்த்தியாக சில பிரார்த்தனைகளை கூறிவிட்டு இவள் மகளுக்கு கணவ னாக வரப்போகின்றவனைப் பற்றிய விபரங்களையும் மகனுக்கு மனைவியாக வரப்போகின்ற பெண்ணைப் பற்றிய விபரங்களைப் பற்றிய விபரங்களைக் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.