Advertisment

திருமணத் தடை , தாமதம் செவ்வாய் தோஷம் காரணமல்ல... -பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

marriage


ங்கையருக்கு ஏற்படும் மாங்கல்ய தடைகளும் உரிய பரிகாரங்களும் பெண்ணாய் பிறப்பெடுத்த அனைவருமே மாதரசிகளாய், மாதர் குல மாணிக்கங்களாய் திகழ்ந்து மணவாழ்க்கை அமைத்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதுமே இறைவன் தரும் வரம்தான்.

Advertisment

சிலருக்கு மணவாழ்வில் மகிழ்ச்சியின்மை யும், போராட்டமும், சிலருக்கு காலம் கடந்த திருமண வாழ்வும், குடும்ப சிதறலும் பாடாய்படுத்தும். இதன்காரணம் ஏன் என சுருக்க மாக ஆய்வு செய்வோம். உள்ளங்கை தரும் போராட்ட ரகசியத்தையும், ஜாதகமே இல்லாதோருக்கு எவ்வாறு செயல்படும் என்பதையும் ஆய்வு செய்வோம்.

Advertisment

தப்பான மிகைபடுத்தும் செவ்வாய் தோஷம்

ப் செவ்வாய் தோஷம் சார்ந்த உண்மையை அறியாமல் இருக்க மாட்டார்கள். திருமணத் தடைகளுக்கும், கால தாமதத்திற்கும், முதிர் கன்னியாக இருப்பதற்கும், மகிழ்வின்மைக்கும் செவ்வாய் தோஷம் மட்டும் காரணமாகாது. குரு தோஷம், சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், பாகவ தோஷம், ராகு தோஷம் என பல காரணங்களும், நங்கயரின் கனவை கால தாமதமாக்கிவிடும்.

ப் உள்ளங்கையில் சுண்டுவிரலின் நேர் கீழ்பாகம் அமைவது புதன்மேடு. அதன் ஓரப்பகுதியில் மெல்லிய கோடுகள் தென்படும் அவைதான் திருமண ரேகை. அவை குழந்தை ஜனனமானதும் தென்படுவ தில்லை. முதிர்ச்சி அடைய, அடைய ரேகை தோன்றும். பல ரேகை தென்பட்டால், அத்தனையும் திருமணத்தை தராது. குறுகியவை. வாலிபத்தில் இதயத்தில் யாரோ வருவார். யாரோ போவார்.

சுக்கிர தோஷம்

ப் சூரியன் அத்துடன் சுக்கிரன் கூடி கேந்திரத்தில் வாசம் செய்தால் திருமண வாழ்க்கை சிறப்பை தராது. தம்பதியரிடையே பிணக்கு, வீணான சந்தேகம் இன்னலைத் தரும். சுக்கிரன் அஸ்தங்கமடைந்து இராவிடில் தீமை பெரிதும் இருக்காது. குரு பார்க்கினும் தோஷம் குறையும். சுக்கிரன் சர ராசியில் இருந்தாலும் சுக்கிர தோஷம் உண்டு. துலா ஆட்சி வீடானதால் இங்கு நின்ற சுக்கிரனுக்கு தோஷமில்லை. ஆனால் ராகு சேர்க்கை கூடாது. உள்ளங்கையில் கட்டை விரலை இணைத்து காணப்படும் சுக்கிர மேட்டில் மைய்ய பகுதியில் கரும்புள்ளி தென்பட்டால். சுக்கிர மேட்டில் ரேகை உதயமாகி ஆயுள் ரேகையை கடந்து இதய ரேகையை தொட்டால் பல கசப்பான நிகழ்வுகள் வேதனை தரும். 

குரு தோஷம்

ப் செவ்வாய் மகரத்திலும் குரு கடகத்திலும் நின்ற பெண்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சியென்பது எட்டாக்கனியாகும். மணமுறிவு, விவாகரத்து போன்றவற்றை எதிர்பார்க்கலாம். ஆட்காட்டி விரலின் கடைசி மூன்றாம் அங்குலாஸ்தியில் கரும்புள்ளி தென்பட்டால், தம் வாய்சொல்லால் வில்லங்கம் ஏற்படும்.

ப் குருவை (தட்சிணாமூர்த்தியை) வணங்கலாம். புஷ்பராகம் (மஞ்சள்) ராசிக்கல் அணிதல் நன்று. ஆட்காட்டி விரலில் அணிய வேண்டும். குரு மேட்டில் கரும்புள்ளி தென்பட்டால், அந்த மங்கையால் குடும்பத்திற்க


ங்கையருக்கு ஏற்படும் மாங்கல்ய தடைகளும் உரிய பரிகாரங்களும் பெண்ணாய் பிறப்பெடுத்த அனைவருமே மாதரசிகளாய், மாதர் குல மாணிக்கங்களாய் திகழ்ந்து மணவாழ்க்கை அமைத்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதுமே இறைவன் தரும் வரம்தான்.

Advertisment

சிலருக்கு மணவாழ்வில் மகிழ்ச்சியின்மை யும், போராட்டமும், சிலருக்கு காலம் கடந்த திருமண வாழ்வும், குடும்ப சிதறலும் பாடாய்படுத்தும். இதன்காரணம் ஏன் என சுருக்க மாக ஆய்வு செய்வோம். உள்ளங்கை தரும் போராட்ட ரகசியத்தையும், ஜாதகமே இல்லாதோருக்கு எவ்வாறு செயல்படும் என்பதையும் ஆய்வு செய்வோம்.

Advertisment

தப்பான மிகைபடுத்தும் செவ்வாய் தோஷம்

ப் செவ்வாய் தோஷம் சார்ந்த உண்மையை அறியாமல் இருக்க மாட்டார்கள். திருமணத் தடைகளுக்கும், கால தாமதத்திற்கும், முதிர் கன்னியாக இருப்பதற்கும், மகிழ்வின்மைக்கும் செவ்வாய் தோஷம் மட்டும் காரணமாகாது. குரு தோஷம், சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், பாகவ தோஷம், ராகு தோஷம் என பல காரணங்களும், நங்கயரின் கனவை கால தாமதமாக்கிவிடும்.

ப் உள்ளங்கையில் சுண்டுவிரலின் நேர் கீழ்பாகம் அமைவது புதன்மேடு. அதன் ஓரப்பகுதியில் மெல்லிய கோடுகள் தென்படும் அவைதான் திருமண ரேகை. அவை குழந்தை ஜனனமானதும் தென்படுவ தில்லை. முதிர்ச்சி அடைய, அடைய ரேகை தோன்றும். பல ரேகை தென்பட்டால், அத்தனையும் திருமணத்தை தராது. குறுகியவை. வாலிபத்தில் இதயத்தில் யாரோ வருவார். யாரோ போவார்.

சுக்கிர தோஷம்

ப் சூரியன் அத்துடன் சுக்கிரன் கூடி கேந்திரத்தில் வாசம் செய்தால் திருமண வாழ்க்கை சிறப்பை தராது. தம்பதியரிடையே பிணக்கு, வீணான சந்தேகம் இன்னலைத் தரும். சுக்கிரன் அஸ்தங்கமடைந்து இராவிடில் தீமை பெரிதும் இருக்காது. குரு பார்க்கினும் தோஷம் குறையும். சுக்கிரன் சர ராசியில் இருந்தாலும் சுக்கிர தோஷம் உண்டு. துலா ஆட்சி வீடானதால் இங்கு நின்ற சுக்கிரனுக்கு தோஷமில்லை. ஆனால் ராகு சேர்க்கை கூடாது. உள்ளங்கையில் கட்டை விரலை இணைத்து காணப்படும் சுக்கிர மேட்டில் மைய்ய பகுதியில் கரும்புள்ளி தென்பட்டால். சுக்கிர மேட்டில் ரேகை உதயமாகி ஆயுள் ரேகையை கடந்து இதய ரேகையை தொட்டால் பல கசப்பான நிகழ்வுகள் வேதனை தரும். 

குரு தோஷம்

ப் செவ்வாய் மகரத்திலும் குரு கடகத்திலும் நின்ற பெண்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சியென்பது எட்டாக்கனியாகும். மணமுறிவு, விவாகரத்து போன்றவற்றை எதிர்பார்க்கலாம். ஆட்காட்டி விரலின் கடைசி மூன்றாம் அங்குலாஸ்தியில் கரும்புள்ளி தென்பட்டால், தம் வாய்சொல்லால் வில்லங்கம் ஏற்படும்.

ப் குருவை (தட்சிணாமூர்த்தியை) வணங்கலாம். புஷ்பராகம் (மஞ்சள்) ராசிக்கல் அணிதல் நன்று. ஆட்காட்டி விரலில் அணிய வேண்டும். குரு மேட்டில் கரும்புள்ளி தென்பட்டால், அந்த மங்கையால் குடும்பத்திற்கே தலைகுனிவு வரும். ஒன்பது வியாழனன்று ஒன்பது எலுமிச்சை பழத்தை மாலை தொடுத்து வணங்கவும். 

ப் நீண்டரேகைதான் திருமணத்தை உறுதிசெய்யும். சுக்கிர மேட்டில் பல செங்குத்தான ரேகை தோன்றினால் நல்ல வாழ்க்கை துணையை எதிர்பார்க்கலாம்.

செவ்வாய் தோஷம் 

ப் மங்கலன் எனப்படும் செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12-ல் நின்றால் செவ்வாய் தோஷம் என பொதுவாக கூறப்படும். ஊழ்வினை பயனாகவே இத்தகைய அமைப்பு உண்டாகிறது. ஆனால் செவ்வாய், லக்னாதிபதியாகவோ, யோகாதிபதியாகவோ இருந்தால் தோஷம் கிடையாது; சீராகி விடும். இத்தகைய அமைப்பு, மேஷம், விருச்சிகம், கடகம், சிம்ம லக்னங்களுக்கு  அமையும். 
செவ்வாயுடன், சூரியன்+ புதன்+கேது கூடினாலும் தோஷமில்லை. செவ்வாயை குரு பார்க்கவும் தோஷமில்லை. 

ப் லக்னத்திற்கு இரண்டாமிடம் மிதுனம், கன்னியில் செவ்வாய் நின்றால் கெடுதல் இல்லை. லக்னத்திற்கு 4-ஆமிடம் மேஷம், விருச்சிகமாகி செவ்வாய் நிற்க தோஷமில்லை. லக்னத்தின் ஏழாமிடம், தனுசு, மீனமானால் தோஷமில்லை. லக்னத்திற்கு 12-ஆமிடம் கும்பம், சிம்மமாகில் தோஷமில்லை.

ப் செவ்வாய் ஆட்சி, உச்சம், சுயநவாம்சம், புதன், குரு, சந்திரன் சேர பாவமில்லை; பார்க்கவும் கெடுதல் இல்லை. 7, 8-ல் இருக்கும் செவ்வாய் குரு, சுக்கிரன் பார்க்க தோஷமில்லை. 

ப் லக்னம், சந்திரன், சுக்கிரன் இவர்களுக்கு 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் நிற்கவும் தோஷம்தான். செவ்வாய் நின்ற வீட்டதிபதி. 1, 5, 9 பெற்று நிற்க தோஷமில்லை. செவ்வாய் நின்ற வீட்டதிபதி, அஸ்தமனமாகக் கூடாது.

ப் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகர லக்னமாகி, பிறந்தவர்களுக்கு செவ்வாய், மிருகசீரிசம், சித்திரை அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம், திருவாதிரை, சுவாதி, பூசம், உத்திரட்டாதி எனும் நட்சத்திர சார வரிசைகளில் அமைந்து எங்கிரிப்பினும், குறிப்பாக 1, 2, 7, 8, 12-ல் நின்று எவரால் பார்க்கப்பட்டாலும் பாதகமான பலன்தான் ஏற்படும்.

ப் வக்ர செவ்வாய் உள்ளவர்களுக்கு, பொருத்தமான அமைப்பு, வக்ர செவ்வாய் உள்ளவர்கள்தான் பொருத்தமான துணை. அப்போதுதான் பிறக்கு ஜீவன், ஆணோ- பெண்ணோ, ஊனமுற்று  உருவாகும். துணை, ஆண் மகனின் ஜாதகத்தில் 5-ஆமிடத்தை ஆய்வு செய்து இணைக்கலாம். 

ப் சிம்மம் 7-ஆமிடமாகி சூரியன் பாவர் தொடர்பு ஏற்பட தாம்பத்தியம் திருப்தியின்மை, குடும்பம் எப்போதுமே போராட்ட சூழ்நிலை தொடரும். காலையில் தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரமும்- உச்சி வேளையில் இனிப்பு கலந்த கோதுமை பண்டம் தானம் செய்தால் நிலைமையில் மாற்றம் தெரியவரும். பெண்ணின் சூரியமேட்டில் கரும்புள்ளி தென்பட்டால், குடும்பத்தார் கடன் வாங்கினால் அவர்கட்கு சூரிட்டி கொடுப்பது கூடாது. மீனம் 7-ஆமிடமாகி குரு பாவர் தொடர்பு கூடிநிற்க, கணவன் மாற்றான் தோட்டத்து மல்லிகையை தேடி அலைவார். கணவரின் கட்டைவிரல் முதல் அங்குலாஸ்தி கோதுமை ரேகையில் கரும்புள்ளி தென்பட்டால் விலை மாதை நாடுவார்.

ப் 7-ன் அதிபதி 5-ல் நின்று 9-ன் அதிபதி+குரு+பாவர், சேர்ந்து பார்க்க கலப்பு திருமணம் கைகூடும்; தவிர்க்க இயலாது.

ப் 3-ன் அதிபதி பாவராகி ராகுவுடன் கேது கூட, அந்த ஜாதக அமைப்பு பெண் கணவனை மதிக்காமல் தான்தோன்றிதனமாக செயல்பட்டு சட்டரீதியாக பிரிவினை உருவாகும்.

ப் 5-ன் அதிபதி பாவராகி ராகு, கேது கூடி 3-ல் நிற்க பிறந்த பெண்ணின் ஜாதக அமைப்பு அப்பெண் மனமறிந்து மணாளனுக்கு துரோகம் செய்வார். (இப்போது இது அன்றாட செய்தி பத்திரிகையில்).

ப் சந்திரன் நீசம்பெற்று, தீயவராலும் தீண்டப்பெற்று 4-ல் வாசம் செய்யும் பெண் வழிதவறி, நெறிதவறி நடப்பார். 
மாங்கல்ய தோஷம்

ப் 7 அல்லது 8-ல் ராகு- கேதுக்கள் நின்று சனி மற்றும் செவ்வாய் தொடர்புபெற்றாலும் 

7-ஆம் அதிபதி சனியோடு கூடி செவ்வாயின் தொடர்புபெற்று 8-ல் ராகு சஞ்சரிப்பதும் கேடுதான். 7-ல் பாவர் நின்று 7-ஆம் அதிபதி 8-ஆம் அதிபதியோடு இணைந்து 12-ல் சஞ்சரிக்க கெடுதல்தான். 

ப் உள்ளங்கையில் சுக்கிரமேட்டை சுற்றிய ஆயுள் ரேகை குட்டையாக நீளம் குறைந்து காணப்பட்டால், ஜாதகமும், கை அமைப்பும் கச்சிதமாக செயல்படும் வினைதான். நல்லதல்ல

ப் 7-ல் ராகு நின்று 7-க்கதிபதி சூரியனுடன் இணைந்து 8-ல் நிற்பதுவும் கூடாது 

ப் 7-ஆமிடத்ததிபதி நீசம்பெற்று ஏமுக் கதிபதி நின்ற ராசிநாதனும் குடும்பத்தை நிலைகுலைய செய்வார்.

ப் 7, 8 பரிவர்த்தனையும் மாங்கல்ய தோஷத்திற்கு துணை போகும்.

களத்திர தோஷம் 

இது ஆண்- பெண் இருபாலருக்கும் பொதுவானது

ப் ஏழாம் வீட்டோன் 6, 8, 12-ல் நின்றால் இல்லறசுகம் சுவைக்காது. இத்துடன் ஜாதகத்தில் குரு+சுக்கிரன் எங்கு இணைந்து காணப்பட்டாலும் இனிமையில்லா மணவாழ்க்கை.

ப் 7-ல் குரு தனித்தானும் பாவியுடன் கூடினாலும் 7-க்குடையவனுடன் சுக்கிரன் கூடி 7-ல் நிற்பதும் சீரானதல்ல. 7-க்குடையோன் 12-ல் பாவரோடு கூடி நிற்பதும் தீய விளைவு தான். ஆண் மகனின் கட்டை விரல், முதல் அங்குலாஸ்தி கோதுமை ரேகை மைய்யத்தில் கரும்புள்ளி காணப்பட்டால் கணவன் கூடா நட்பால் திசைமாறி குடும்பத்தை உதாசீனம் செய்வார். 

ப் 7-ல் சூரியனுடன்- ராகு இணைந்து காணப்பட்டால் ஆண்களுக்கு பெண்ணால் கேடு வரும்.

பாவக தோஷம்

ப் மேஷம் 7-ஆமிடமாகி அதன் அதிபதி செவ்வாய் தீயவர்கள் தொடர்புபெற்றால், கணவருக்கு தீய ஒழுக்கக்கேடு, அராஜகம் மூர்க்க குணத்துடன் காணப்படுவார். இவ்வாறான அமைப்பில் லக்னேசனோ குருவோ பார்க்க கேடுகள் சமநிலையடைந்து விடும்.

ப் உள்ளங்கையில் செவ்வாய் மேடுகள் இரண்டும் உச்சமாக காணப்படும். கட்டைவிரல் செங்குத்தாக தென்படும்.

ப் விருச்சிகம் 7-ஆமிடமாகி செவ்வாய் பாவரோடு கூட தாம்பத்தியத்தில் மனோசஞ்சலம், வீணான சர்ச்சைகள் வருவதோடு, கணவனுக்கு அற்ப ஆயுள் என்கிறது. சாஸ்திரம் கணவனின் எட்டாமிடத்தை ஆய்வுசெய்து பார்ப்பது நல்லது. உள்ளங்கையில் சுக்கிர மேட்டில் ரேகை உதயமாகி ஆயுள் ரேகையை கடந்து இதய ரேகையில் சங்கமித்தால் விவாகரத்துதான் விடையாகும்.

ப் மீனம் 7-ஆமிடமாகி குரு பாவர் கூடி நிற்க கணவன் ஒழுக்கக்கேடான சுபாவம் மிகையாகும்.

ப் 7-க்கதிபதி 6-ல் நிற்க பிறந்த பெண்ணின் கணவனுக்கு சுக்கிர மேட்டில் கரும்புள்ளி மையப்பகுதியில் தென்படின் நோயின் பிடியில் வாழ்வார்.

ப் 7-ஆம் அதிபதி 5-ல் நிற்க 9-ஆம் அதிபதி குரு+பாவர் சேர்க்கை, பார்க்க கலப்பு திருமணம் கைகூடும்.

ப் 5-ற்கதிபதி பாவராகி ராகு- கேது கூடி 3-ல் நிற்க பிறந்த பெண்மணி மனதுக்கு தெரிந்தும் மணாளனுக்கு துரோகம் செய்ய தயங்க மாட்டார்.

ப் இத்தகைய அமைப்பிலுள்ள ஜாதகத்தில் லக்னம், பஞ்சமம், நவமத்தில் குற்றமற்ற குரு நின்றிட பாதகமில்லை.

நாகதோஷம்

ப் கார்குழல் காரிகையின் ஜாதகத்தில் கரும்பாம்பெனும் ராகுவும்- செம்பாம் பெனும் கேதுவும் 1, 7 அல்லது 2, 8-ல் நிற்பது கடுமையான கர்ப்ப தோஷமாகும் இவர்களுக்கு இளமையில் திருமணம் நடப்பது. அரிதாகும். அவ்வாறு திருமணம் நடந்துவிட்டாலும், கணவனை இழக்கவோ- பிரியவோ நேரிடும். ராகு- கேது தசாகாலங்களில் கேடு நிகழும்.

ப் உள்ளங்கையில் கட்டை விரலை அடுத்த சுக்கிர மேட்டில் திடமான ரேகை உருவாகி ஆயுள் ரேகையை கடந்துசென்று இதய ரேகையில் முற்றுப்பெறும்.

ப் அனைத்து கிரகங்களும் லக்னம் உட்பட ராகு- கேதுவின் பிடிக்குள் அகப்பட்டுக்கொள்ள காலசர்ப்ப தோஷமாகும்.

ப் காலசர்ப்ப தோஷமுள்ளவர்கள் ராகு-கேது தசாகாலங்களில் திருமணங்களை மாற்றி வைக்கலாம்.

ப் காலசர்ப்ப யோகம் உள்ளவவர்கள் பின்னாளில் சாதனையாளர்களாக திகழ்வர்.

கிரக சேர்க்கை தோஷம்

ப் சுக்கிரனுக்கு 1, 4, 7, 10-ல் செவ்வாய் நிற்க அமையும் ஜாதகர் இல்லறத்தில் பல துன்பங்கள் மிகுதியில் பல சஞ்சலங்கள் பாடாய் படுத்தும். சுக்கிர மேட்டில் பல சதுர அமைப்பு தென்பட்டால் வைரம் அல்லது அமேரிக்கன் ஸ்டோன் (வெள்ளைகல்) மோதிரம் அணியவும்.

ப் செவ்வாயும் சுக்கிரனும் கூடி 1, 4, 7, 10-ல் நிற்க கணவரை புறக்கணிப்பார்கள். குருபார்வை இருந்தால் கெடுதல் அடியோடு மறையும். வரும் கணவரின் கையில் சுண்டுவிரல் குட்டையாகவும் குருமேடு உச்சம்பெற் றால் அவர் சிற்றின்பத்தை புறக்கணிப்பார்.

ப் மேஷம் அல்லது விருச்சிகத்தில் சுக்கிரன் அல்லது சந்திரன் வாசம் செய்து, செவ்வாயின் பார்வை பெற்றாலும். மகரம் அல்லது கும்பத்தில் சுக்கிரன் அல்லது சந்திரன் நின்று சனி பார்வை பெற்ற பெண்டிரும் துரோக குணம் மிகையாகும் என சாஸ்திரம்  கூறுகிறது.

ப் லக்னேசனும், சப்தமேசனும் கூடி 6, 8, 12-ல் நின்ற பாவர் தொடர்புபெற்றவருக்கு இனிமையான இல்லறம் கடினம்.

ப் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன் ஐவரும் ஒரே ராசியில் இருப்பின் திருமணம் நிறைவேறல் தடையாகும். சுண்டுவிரலை ஒட்டிய புதன் மேட்டில் காணப்படும் திருமண ரேகை சுண்டுவிரல் மூன்றால் அங்குலாஸ்திக்கு சென்றிருந்தால், பிரம்மச்சாரியான வாழ்க்கைதான். 

ப் 7 அல்லது 12-ஆமிடம் பாவராகி (ராசியாகி) சந்திரன் நிற்க சுக்கிரனை பாவர் தீண்டி பிறந்த பெண்ணின் கணவரே மரணத்திற்கு காரணகர்த்தவாக இருப்பார். கணவரின், மேல் செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி திடமாக தென்பட்டால் சாஸ்திரம நிரூபணமாகிவிடும்.

ப் இரண்டிற்கு மூன்றிற்கும் உரியவர்கள் கூடி 6, 8, 12-ல் நிற்க பிறந்த பெண்ணுக்கு, கணவன் நடத்தையால் பால்வினை நோய் வருமாம். எனவே தாம்பத்தியத்தில் உஷார் நிலையில் செயல்படல் நன்று. அவரின் உள்ளங்கையில் சுக்கிர மேட்டில் மையப் பகுதியில் வெண்புள்ளி தோன்றியிருக்கும்.

விஷ கன்னிகா யோகம்

ப் இதுவும் திருமண பந்தத்தை எச்சரிக்கை செய்யும் சாஸ்திர உண்மைகள்தான்.

ப் சப்தமி கூடிய செவ்வாய்க்கிழமையில் விசாகம் அல்லது சதைய நட்சத்திரத்தில் பிறந்த மாதர்களின் வாழ்க்கையில் இனிமை என்பது எட்டாக்கனியாகத்தான் அமையும். உள்ளங்கையில் கீழ் செவ்வாய் மேட்டில் பல குறுக்கு ரேகை காணப்படும். இதுவே அந்த பின்னடைவை உறுதிசெய்யும் 

ப் லக்னத்தில் சனி நின்று செவ்வாய் அல்லது சந்திரன் சேர, 6-ல் பாவர் நிற்க 5-ல் பாவர் தொடர்புபெற, இப்படிப்பட்ட மங்கயருக்கு சந்தான பாக்கியம் கிடையாது. எனினும் கணவன் ஜாதகத்தில் 5-ல் ஏதோ ஒரு நல்ல கிரகம் தென்பட்டால், குடும்பத்தில் வாரிசு வந்துவிடும். சுக்கிர மேட்டில் கோடுகளே காணப்படாவிடின் அதுவும் குழந்தை கேள்விக்குறிதான்.

ப் லக்னம் சனி செவ்வாய் ராசிகளாகி 8-ல் சனி சூரியன்கூட அல்லது குரு சுக்கிரன் கூடவும் ஜாதக அமைப்பென்றால், புத்திர சோகம் தவிர்க்க இயலாது. சுண்டு விரலை அடுத்த புதன் மேட்டில் காணப்படும் திருமண ரேகையில் கரும்புள்ளி இதனை உறுதிசெய்யும்.

ப் துவிதியை திதி, ஆயில்ய நட்சத்திரம், சனிக்கிழமை பிறந்த பெண் சப்தமி திதியில் சதைய நட்சத்திரம் செவ்வாய்க்கிழமையில் பிறந்த பெண் துவாதசி திதி சதைய நட்சத்தி ரம் ஞாயிற்றுக்கிழமை பிறந்த பெண்ணும் விஷகன்னிகா தோஷம் உண்டு.

ப் பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் சனி நின்றாலும் 5-ல் சூரியன் நின்றாலும் 9-ல் செவ்வாய் இருந்தாலும் மேற்கூடிய தோஷம் உண்டு.

விஷ தோஷ பரிகாரம்

ப் லக்னத்துக்கோ அல்லது சந்திர னுக்கோ 7-ல் சுபர் நிற்க அல்லது 7-க்குடைய வன் 7-ல் ஆட்சிபெற ஜாதகம் அமைந்தால் தோஷமில்லை. பேச்சியம்மாவை (பேச்சியம்மனை வணங்குவதும் நற்பலன்) தரும். ஒப்பல் என்ற ராசிக்கல் மூன்று காரட்டில் டாலராக அணியலாம். ஒப்பன் செட் மோதிரமாக அணியலாம்.

செல்: 93801 73464

bala061225
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe