சனிபகவானின் மைந்தனாக சாஸ்திரங்கள் கூறும் மாந்தி, சனியைபோலவே பலன்களைத் தருவதாக பல தீபிகை ஆசிரியர் கூறுகின்றார்.
சிலர் மாந்தியும் குளிகனும் வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். மாந்தியும் குளிகனும் ஒன்று என்பதற்கு எடுத்துக்காட்டாக ஜாதக பாரிஜாத ஆசிரியர் மாந்தியின் பெயரை சொல்லும்போது குளிகன் மாந்தி எனக் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறே பிரசன்ன மார்க்கத்திலும், பிரசன்னரீதி போன்ற மலையாள நூலிலும் மாந்தி என்று ஒரு இடத்திலும், மற்றொரு இடத்தில் குளிகன் எனவும் மாந்தியைத்தான் குறிப்பிடுகின்றார். ஆக, மாந்தி என்பதும், குளிகன் என்பதும் ஒன்றே என உணரமுடிகின்றது. மாந்தி மட்டுமல்ல; மாந்தி நின்ற வீட்டோனும் லக்னம் முதல் எந்த பாவத்தில் நிற்கின்றாரோ, அந்த வீடு வழங்கும் நலன்களைத் தடை செய்வார் எனவும் கருத்துகள் இருக்கின்றன. ஜாதகா தேசம் என்னும் நூல் ஆசிரியர் ஏழாம் வீட்டை குறித்து குறிப்பிடும்போது, ஏழாம் வீட்டில் பாவ வர்க்கங்களில் பாவகிரகங்கள் ஒன்று இருந்தாலும், ஏழாம் வீட்டில் பாவ கிரகம் அமர்ந்து மற்றொரு பாவ கிரகத்தால் பார்க்கபட்டாலும், ஐந்தாம் வீட்டோன் பாவகிரகமாக ஏழாம் வீட்டில் அமர்ந்தாலும்,
அவ்வாறே குளிகன் என்னும் மாந்தி பகவான் நின்ற வீட்டோன் ஏழாம் வீட்டில் அமர்ந்தாலும், தார தோஷத்தைத் தருவதாக கூறுகின்றார். இதனை மற்ற நூல்களும் வலியுறுத்துகின்றன. ஆனால் அதேவேளை பல தீபிகாஆசிரியர் மந்தரேஸ்வரரோ, மாந்தி நின்ற வீட்டோன் லக்னத்தில் இருந்து திரிகோணங்களில், கேந்திரத்தில் அமர்ந்தால் அந்த ஜாதகர் தனம், தானியம், செல்வங்களை உடையவராக இருப்பார் எனக் கூறுகின்றார்.
மாந்தி கிரகங்களோடு சேர்ந்த பலன்
மாந்தி சூரிய கிரகத்தோடு இணைய தந்தைக்கு தீமையை தருவதாகவும், சந்திரனோடு இணைய தாய்க்குத் தீமை தருவதாகவும், செவ்வாயோடு இணைய சகோதரர்களோடு பகைமையை உருவாக்குவதாகவும், புதனோடு இணைய மனம் சம்பந்த பாதிப்புகளைத் தருவதாகவும், குருவுடன் இணைய பாவச்செயல் புரிபவனாகவும், சுக்கிரனோடு இணைந்தால் ஈனப் பெண் மோகமும், சனியோடு இணைய தோல் வியாதியையும், ராகுவுடன் இணைய விஷத்தால் அச்சமும்,
கேதுவோடு இணைய வெடி விபத்தாலும், தீயாலும் தீமையின் விளைவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. குளிக காலத்தில் குளிகன் உதிக்கும் லக்னத்தில் முகூர்த்தம் எடுக்க மரண பயமும், குளிக காலத்தில் பிறக்க ஊனமற்றவராகவும் இருக்கும் வாய்ப்புகளும் உள்ளதாக நூல்கள் கூறுகின்றன. ஒரு ஜாதகத்தில் குளிகன் சந்திரனை பார்க்கவும் அல்லது மாந்தியோடு இணைந்து இருக்கவும், மாந்தியை சனிபார்க்க அல்லது இணைய, ஜாதகர் வேறு ஒருவருக்கு தத்து புத்திரனாக- தத்து புத்திரியாகச் சொல்கின்ற யோகம் உள்ளதாக ஜாதக பாரிஜாத ஆசிரியர் கூறுகின்றார். நமது உடலில் நரம்புகளின் காரகன் மாந்தி. அவர் அதிர்ஷ்ட தானம் என்று சொல்லக்கூடிய ஆறு, எட்டு, பன்னிரண்டில் அவர நரம்பு சம்பந்தமான வியாதிகளைத் தருவார். ஒருவருக்கு உணவில் விஷம் அல்லது தீமை தருகின்ற பொருள்கள் கலந்திருக்கின் றதா என்பதனை அறிவதற்கும் இந்த மாந்தியின் பங்கு மிக முக்கியமாகும். ஒருவருக்கு எதிரியாய் செய்யப்பட்ட சூனியம் இருக்கின்றதா என்பதனை அறிய மாந்தி பயனாகின்றார். ஒருவருக்கு ஆரூடம் பார்க்கும் வேளை ஆரூட கேந்திரங்களில் குளிகன் இருக்கவும், குளிகளை சனி பார்க்கவும், அந்த வீட்டில் சூனியம் இருப்பதாக கூறவேண்டும். அடுத்த தாக லக்ன முதல் வீடுகளில் மாந்தி என்ற குளிகன் அமர்ந்தால் ஏற்படும் பலன்களைக் குறித்து காணலாம்.
ஜாதகத்தில் லக்னம் முதலிய வீடு களில் குளிகள் அமர ஏற்படும் பலன் கீழ்வருமாறு சொல்லப்பட்டுள்ளது. மாந்தி லக்னத்தில் அமர கொடிய குணம் கொண்டவராகவும், நோயாளியாகவும், அற்பாயுள் கொண்டவராகவும் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் மாந்தி தனியாக லக்னத்தில் அமர ராஜயோகம் கொண்டவராகவும், மன்னனுக்கு சமமானவராகவும், உயர் பதவி உயர்ந்த வாகனங்கள், வாகன சம்பந்தமான உயர் பதவியை உடையவராக வும் இருப்பார் என்று சில நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
லக்னத்திலிருந்து இரண்டாம் வீட்டில் மாத்தி அமர குறைந்த செல்வம், கல்வி இன்மை, கலக மூட்டுவதில் விருப்பமுடைமை, பிடிவாத குணம், வீணாக வாதம் செய்தல். பிற்காலத்தில் திக்கலான வாக்குடைமை என்று நூல்கள் கூறுகின்றன.
லக்னத்தில் இருந்து மூன்றில் குளிகன் அமர இளைய சகோதரர்கள் இல்லாமல், சகோதரர் ஒற்றுமை இல்லாமல் கர்வம் அகங்காரம் இவை கொண்டவராக இருப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது.
நான்கில் குளியள் அமர சுகம் இல்லாதவனும், அன்னைக்கும் வீட்டிற்கும் தீங்கு ஏற்படுவதோடு தாயிடமிருந்து சுகமும், தாய்வழி செல்வமும் இல்லாதவனும் வாகன விபத்தை சந்திப்பவனும் ஆகும்.
ஐந்தாம் வீட்டில் குளிகன் அமர குரு தந்தையை நிந்திப்பவனும் புத்திரர் இல்லாத நிலையோ வயிற்றில் நோயோ கொண்டவனாகவும் மனதில் துக்கம் அலைபாயும் மனம் இவற்றை கொண்டுவருமாகும்.
ஆறாம் வீட்டில் குடிகள் நம்பர உறவினர்களை விளக்கி வைப்பவனும் எதிரே வெல்பவனும் திருடர்கள் இவரை காண அச்சம் அடையும் சூழலும் நல்ல குழந்தைகளை கொண்டவரும் ஜாலம் அறிந்தவனும் தனக்கு சம்பந்தமான ஒரே அவருக்கு விரோதிகளாய் இருப் பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஏழில் மாந்தி அமர வசிய மருந்து உண்ண நேரலாம். வாழ்வின் துணைகொள்ளவும் எண்ணம். தோன்றும் அந்நியப் பெண் மோகம் யாவராலும் வெறுக்கப்படுபவனும், வாந்தி அவரு நிலையைப் பொறுத்து மனநோய் போன்ற பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
எட்டில் வாந்தி அமர கூர்மையான புத்தி, அதிக வியாதி, விஷம் அல்லது அக்னியால் ஏற்படும் தொல்லை இவை பலனாகும்.
ஒன்பதில் மாந்திய அமர நல்ல ஆச்சாரங்கள் இல்லாதவனும் தந்தை வழியினரை பிரிந்து வாழ்பவனும் பாக்கிய மற்றவனும் ஆகும்.
வக்கீல் மாந்தி அமர நல்ல புகழ், மற்ற நபர்களுக்கு உதவும் குணம், சாஸ்திரங்களில் நல்ல பயிற்சிபெற்று ஆச்சாரியனாகவும் இருப்பர்.
11-ல் மாந்தி தனது கட்டளைகளை நிறைவேற்றும்வண்ணம் ஆள் அடிமை கொண்டவனும், பல்வித லாபங்களை பெற்றவனாகவும் விளங்குவான். 11-ல் மாந்தி ஜாலங்களை அறிந்தவனாக இருப்பான் என்று புலிப்பாணி கூறுகின் றார். எனினும் சனியோடு அல்லது கேதுவோடு மாந்தி 11-ல் அமர்ந்தால் செவியில் குறையுடைய வனுமாகும். 12-ல் மாந்தி பொதுவாகவே அச்சமுற்றவராகவும், சயன சுகம் குறைந்தவனாகவும், தீய கனவுகளை காண்போராகவும், வியாதியால் நகத்தில் கேடு ஏற்பட்டவராகவும் இருக்க வாய்ப்புள்ளது என நூல்கள் கூறுகின்றன. பொதுவாக ஒருவரின் பிறவி, அவர் பிறக் கும் லக்னத்தில் மாந்தியின் சம்மந்தமின்றி நிகழ்வதில்லை. ஒருவரின் ஜாதகத்தில் மாந்தி நின்ற ராசியும் நவாம்சகோமோ அதன் திரிகோணங்களோ அல்லது நவாம்சத்தில் மாந்தி எந்த ராசியில் உள்ளாரோ அதன் திரிகோணங்களோ மாந்தியின் துவாதச ராசியோ மாந்தி இந்த வீட்டு நிற்கின்ற ராசியோ- லக்னமாக அமைவதாக நூல்கள் கூறுகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/18/saturnyogam-2025-12-18-15-36-42.jpg)