அருள்மிகு திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் மகா கும்பாவிஷேக  விழா! ப. ராம்குமார்

chendur

 

னுதர்மமும், ஆகமங்களும், சாஸ்திரங்களும், ஆலயப் புனரமைப்பு திருப்பணிகள் முடிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுவதுதான் உத்தமம் என்று கூறுகின்றன. அந்த ஆகம ஆச்சாரங்களின் அடிப்படையில் தான் கோவிலின் மகா கும்பாபிஷேகங்கள் மரபுப்படி நடத்தப்பட்டும் வந்திருக்கின்றன. ஆனால் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் மரபுமுறை தாண்டி 15 ஆண்டுகளுக்குப் பின்பு தடைகள் தகர்க்கப்பட்டு தற்போது ஜூலை திங்கள் 7-ஆம் தேதி நடந்தேறியிருக்கிறது.

இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7-7-2025 அன்று காலை 6.00 மணிமுதல் 6.47 மணிவரை நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித் தது. இதையடுத்து ஆலயத்தின் பல்வேறு புனரமைப்புப் பணிகள், சீர்திருத்தங்கள் ஆகியவைகள் வேகமெடுத்தன. இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ஆர். சிவராம சுப்பிர மணிய சாஸ்திரிகள் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7-7-2025 அன்று காலை 6.00 மணிமுதல் 6.47 மணிவரை நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இதற்குப் பதிலாக 7-7-2025 பகல் 12.05 மணிமுதல் 12.47 மணிவரை தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரமுள்ளது. எனவே அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வே

 

னுதர்மமும், ஆகமங்களும், சாஸ்திரங்களும், ஆலயப் புனரமைப்பு திருப்பணிகள் முடிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுவதுதான் உத்தமம் என்று கூறுகின்றன. அந்த ஆகம ஆச்சாரங்களின் அடிப்படையில் தான் கோவிலின் மகா கும்பாபிஷேகங்கள் மரபுப்படி நடத்தப்பட்டும் வந்திருக்கின்றன. ஆனால் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் மரபுமுறை தாண்டி 15 ஆண்டுகளுக்குப் பின்பு தடைகள் தகர்க்கப்பட்டு தற்போது ஜூலை திங்கள் 7-ஆம் தேதி நடந்தேறியிருக்கிறது.

இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7-7-2025 அன்று காலை 6.00 மணிமுதல் 6.47 மணிவரை நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித் தது. இதையடுத்து ஆலயத்தின் பல்வேறு புனரமைப்புப் பணிகள், சீர்திருத்தங்கள் ஆகியவைகள் வேகமெடுத்தன. இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரைச் சேர்ந்த ஆர். சிவராம சுப்பிர மணிய சாஸ்திரிகள் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7-7-2025 அன்று காலை 6.00 மணிமுதல் 6.47 மணிவரை நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இதற்குப் பதிலாக 7-7-2025 பகல் 12.05 மணிமுதல் 12.47 மணிவரை தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரமுள்ளது. எனவே அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டுமென்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி கோவில் நிர்வாகம் அமைத்த நிபுணர் குழு முடிவுசெய்த காலை நேரத்திலேயே குடமுழுக்கு நடத்தலாம். இனிவரும் காலங்களில் திருச்செந்தூர் கோவில் நிகழ்வு நடைபெறும்போது கோவில் வினாயகர்த்தாவிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெறவேண்டும் என்று உத்தர விட்டுள்ளது.

கும்பாபிஷேக நேரம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்தும், உயர் நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவுக்கு எதிராகவும் ஆர். சிவராம சுப்பிரமணிய சாஸ்திரிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்களான மனோஜ் மிஸ்ரா மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் விசாரனைக்கு வந்தது. 

அது சமயம் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருச்செந்தூர் கோவில் குடழுக்கு விவகாரத்தில் வினாயகர்த்தாதான் நேரத்தைக் குறித்துக் கொடுக்கவேண்டும். ஆனால் உயர் நீதிமன்றம் குடமுழுக்கு நேரத்தை குறிக்க ஒரு குழுவை அமைத்து அதனடிப்படையில் நேரம் குறிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சாஸ்திரப்படி கும்பாபிஷேகத்தை நண்பகலில்தான் நடத்தவேண்டும். எனவே வரும் 7-ஆம் தேதி கோவில் வினாயகர்த்தா பரிந்துரைக்கும் 12.05 மணிமுதல் 12.45 மணி நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிடவேண்டும். இதனை உயர் நீதிமன்றம் கருத்தில்கொள்ள தவறிவிட்டது. தமிழ்நாட்டில் கோவில்களை மாநில அரசுதான் நிர்வகித்துவருகிறது. ஆனால் இதுபோன்ற குடமுழுக்கு விவகாரங்களை கோவில் வினாயகர்த்தாதான் குறித்துக் கொடுக்க வேண்டும். கும்பாபிஷேக நேரத்தை குறித்துக் கொடுக்க நீதிமன்றம் தனிப்பட்ட முறையில் கமிட்டி அமைக்க முடியாது. 

குறிப்பாக கோவில் ஆகம விதிகளில் தலையிட மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில் இது மதரீதியான ஒன்றாகும் என்று தெரிவித்தார்.

chendur1

மனுதாரரின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அப்படிச் செய்யும்பட்சத்தில் அது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் இதனை ஆய்வு செய்ய நாங்கள் ஒன்றும் நிபுணர்கள் கிடையாது. மேலும் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கும் உங்களுக் கும் இருக்கும் பிரச்சினையை நீங்கள் வழக்காக ஏற்படுத்தி உள்ளீர்கள். குழுத் தரப்பில் குறித்துக் கொடுத்த நேரங்களில் ஒன்றைத்தான் உயர்நீதிமன்றம் உறுதிப் படுத்தியுள்ளது. அதில் தலையிட்டு நீங்கள்தான் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். அதோடு தற்போது கும்பாபிஷேக தேதி மற்றும் நேரம் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. 

அதனை எவ்வாறு மாற்றமுடியும். 

அதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது. எனவே மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம்.

இப்படி திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் பற்றி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பரவி ஆலயத்தின் கும்பாபிஷேகம் பற்றி எதிர்பார்ப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து கும்பாபிஷேகப் பணிகள் வேகமெடுக்க, ஜூலை 1 அன்று 76 குண்டங்களில் சுமார் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு தொடர்ந்து ஆறு நாட்கள் காலை- மாலை வேலைகளில் யாக சாலை பூஜைகள் விறுவிறுப்பாய் நடந்தன.

அன்மைக் காலங்களில் திருச்செந்தூர் செந்திலாண்டவரை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அன்றாடம் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவது தொடர்ந்திருக்கின்றன. குறிப்பாக குடமுழுக்கு தினத்தன்று காலையில் பக்தர்களின் கூட்டம் கடலலைக்கு நிகராக சுமார் மூன்று லட்சம் வரை திரண்டிருந்தது.

குடமுழுக்கு தினத்தன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளே மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட நன்னீராட்டு வழிபாடு, மரபாணி வாசனை தான்ய திருக்குட நீராட்டு நடந்தது. காலை 6.22 மணிக்கு கோவில் இராஜகோபுரம், மூலவர் மற்றும் வள்ளி- தெய்வானை விமான கலசங்களுக்கு தந்திரிகள், போத்திமார்கள் மற்றும் சிவாச்சாரியார்களும் வேத மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. குடமுழுக்கின் போது ஓதுவார்கள் தமிழில் வேதங்கள்  ஓதினர். இந்தக் காட்சியை திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். குடமுழுக்கு முடிந்தவுடன் புனித நீரானது ட்ரோன்கள்மூலம் ஆங்காங்கே திரண்டிருந்த பக்தர்கள்மீது தெளிக்கப்பட்டது.

நம்மிடம் பேசிய நகரின் முன்னணிப்பட்டர்களில் ஒருவரான ஜெயந்திநாதன், குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாகவே செய்திருந்தார்கள். பக்தர்களுக்கான அத்தியாவசியப் பணிகளையும் முறையாகவே செய்திருந் தார்கள். மகா கும்பாபிஷேகமும் சிறப்பாகவே நடந்தது. இங்கே மற்ற பகுதி களில்லாமல் மூலவர் கோபுரம், ராஜ கோபுரம் என தனித்தனியாக உள்ளன. ஆனால் மூலவர் கோபுரத்திற்கு மட்டும் தங்க கலசம் வைக்கப்பட்டுள்ளது. மற்ற கோபுர கலசங்கள் சாதாரனமானதுதான். திருக்கோவிலுக்கு வருமானங்கள் நன்றாகவே வருகின்றன. அதனைக் கொண்டு இராஜ கோபுரம் உள்ளிட்ட மற்ற கோபுரங்களின் கலசங்களும் தங்கத்தினால் அமைக்கப்படவேண்டுமென்று நீண்டநாளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின் றனர். அறநிலையத்துறை மற்றும் அரசும் இதனைப் பரிசீலித்து தங்க கலசங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றார்.

குடழுமுக்கு விழாவில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபு, தமிழகத்தில் 143 திருக்கோவில்களில் 809 திருப்பணிகள் நடைபெற்று குடமுழுக்கு விழா நடத்தப்பட்டிருக்கிறது. முக்கியமாக திருச்செந்தூர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 400 கோடியில் திருப்பணிகளுடன் நடத்தப்பட்டிருக்கிறது என்றார்.

தடைகள் தகர்க்கப்பட்டு நடந்த தென்மண்டலத்தின் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேகம் தமிழகத்தைத் தாண்டியும் பக்தர்கüடையே பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

om010825
இதையும் படியுங்கள்
Subscribe