Advertisment

அஷ்டமாதிபதி தரும் அதிர்ஷ்டம்! -லலிதா சரஸ்வதி

athirdam

8-ஆம் அதிபதியின் வெகு கொடுர செயல்களையும் அதனை சமாளிக்கும் வழிகளையும் கடந்த இதழில் பார்த்தோம். எனில், 8-ஆம் அதிபதியிடம், ஒரு நன்மை யான பலனும் கிடையாதா எனக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா!

Advertisment

8-ஆம் அதிபதியிடமும் சில பல நன்மையான பலன்கள் உண்டுதான். முதல் பலன் ஆயுள் விருத்தியின் அதிபதி, இந்த 8-ஆம் அதிபதிதான். புதையல்; ஆம், ஜாதகர்களுக்கு எதிர்பாராத செல்வத்தை, புதையல் போன்று தருவது இந்த 8-ஆம் அதிபதிதான். வெளிநாட்டு பண பரிவர்த்தனையை தருவது இந்த 8-ஆம் அதிபதிதான். ஏற்றமதி- இறக்குமதிக்கு காரணகர்த்தா இவர்தான். 8-ஆம் அதிபதி சுபரோடு இருந்தால், வட்டி பணம் வாங்குவீர்கள். உயில்களை குறிப்பதும் இவரேதான். பரம்பரைச் சொத்தை பற்றி கூறுவது 8-ஆம் அதிபதிதான். வாழ்க்கைத் துணையின் சொத்து விவரத்தை இதே 8-ஆம் அதிபதி கூறுவார். இன்சூரன்ஸ் பற்றியும் எடுத்துரைப்பார்.

Advertisment

12 லக்னமும் 8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டமும்

மேஷ லக்னம்

மேஷ லக்னத்தின் 8-ஆம் அதிபதி செவ்வாய். இவர், மேஷ லக்ன 10-ஆமிடமான மகரத்தில் உச்சமடைவார். 

மேஷ லக்ன 8-ஆம் அதிபதி, மகரத்தில் உத்திராட நட்சத்திரத்தில் நின்றால் இவர் களின் பூர்வீகம்மூலம், நல்லதிர்ஷ்டம் கிடைக்கும். மேலும் அரசு சார்ந்தும் நல்ல யோகம் பெறுவர். இவர்கள் எத்தனை கீழ்நிலையில் இருப்பினும், இவர்களின் வாரிசுகள் உயர்நிலைக்கு கைபிடித்து அழைத்துச் செல்வர். வேறு சிலர், எங்கோ, ஏதோ ஒரு லாட்டரிச் சீட்டு வாங்க, அதில் பரிசுப் பணம் கிடைத்து, ஓஹோவென யோக நிலையை அடைவர். அல்லது கலையுலகி

8-ஆம் அதிபதியின் வெகு கொடுர செயல்களையும் அதனை சமாளிக்கும் வழிகளையும் கடந்த இதழில் பார்த்தோம். எனில், 8-ஆம் அதிபதியிடம், ஒரு நன்மை யான பலனும் கிடையாதா எனக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா!

Advertisment

8-ஆம் அதிபதியிடமும் சில பல நன்மையான பலன்கள் உண்டுதான். முதல் பலன் ஆயுள் விருத்தியின் அதிபதி, இந்த 8-ஆம் அதிபதிதான். புதையல்; ஆம், ஜாதகர்களுக்கு எதிர்பாராத செல்வத்தை, புதையல் போன்று தருவது இந்த 8-ஆம் அதிபதிதான். வெளிநாட்டு பண பரிவர்த்தனையை தருவது இந்த 8-ஆம் அதிபதிதான். ஏற்றமதி- இறக்குமதிக்கு காரணகர்த்தா இவர்தான். 8-ஆம் அதிபதி சுபரோடு இருந்தால், வட்டி பணம் வாங்குவீர்கள். உயில்களை குறிப்பதும் இவரேதான். பரம்பரைச் சொத்தை பற்றி கூறுவது 8-ஆம் அதிபதிதான். வாழ்க்கைத் துணையின் சொத்து விவரத்தை இதே 8-ஆம் அதிபதி கூறுவார். இன்சூரன்ஸ் பற்றியும் எடுத்துரைப்பார்.

Advertisment

12 லக்னமும் 8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டமும்

மேஷ லக்னம்

மேஷ லக்னத்தின் 8-ஆம் அதிபதி செவ்வாய். இவர், மேஷ லக்ன 10-ஆமிடமான மகரத்தில் உச்சமடைவார். 

மேஷ லக்ன 8-ஆம் அதிபதி, மகரத்தில் உத்திராட நட்சத்திரத்தில் நின்றால் இவர் களின் பூர்வீகம்மூலம், நல்லதிர்ஷ்டம் கிடைக்கும். மேலும் அரசு சார்ந்தும் நல்ல யோகம் பெறுவர். இவர்கள் எத்தனை கீழ்நிலையில் இருப்பினும், இவர்களின் வாரிசுகள் உயர்நிலைக்கு கைபிடித்து அழைத்துச் செல்வர். வேறு சிலர், எங்கோ, ஏதோ ஒரு லாட்டரிச் சீட்டு வாங்க, அதில் பரிசுப் பணம் கிடைத்து, ஓஹோவென யோக நிலையை அடைவர். அல்லது கலையுலகில், அதிர்ஷ்ட ஏணியில் ஏறிவிடுவர்.

மேஷ லக்ன 8-ஆம் அதிபதி திருவோண நட்சத்திரத்தில் நின்றால், இவர்களின் தாயார்மூலம் பங்கு அதிர்ஷ்டம் பெறுவர். இவர்களில் சிலர், வீடு, தோட்டம், கிணறு இவை தோண்டும்போது, முன்னோர்களின் புதையல் கிடைக்க வாய்ப்புண்டு. இவர்களுக்கு ஏட்டுக் கல்வி குறைபாடாக இருப்பினும், அனுபவக் கல்வி அபிரிதமாக அமையும். நிறைய அடிபட்டு அடிபட்டு தெளிவாக இருப்பர். திரவப் பொருட்களில் நிறைய கலப்படம் செய்து, முதன்மை பெற்றுவிடுவர். பாலில் தண்ணீரும் தண்ணீரில் பாலும் கலந்து, அதிர்ஷ்டத்தை அணைகட்டி வைத்துக்கொள்வர்.

மேஷ லக்ன 8-ஆம் அதிபதி, மகரத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் நின்றால் ரொம்ப யோகம் தர இயலாது. ஆனால் இன்சூரன்ஸ், நஷ்டஈடு என இவைபோன்ற இனங்களின்மூலம் பணம் வரும் வாய்ப்புண்டு. எனினும் இந்தப் பணத்தை, இவர்கள் மகிழ்ச்சியோடு வாங்க இயலாது. 

ரிஷப லக்னத்துக்கு 8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டம்

ரிஷப லக்ன 8-ஆம் அதிபதி குரு ஆவார். இவர் ரிஷப லக்ன 3-ஆமிடத்தில் உச்சமடைவார். இதனால் இவர்களுக்கு ரொம்ப தைரியம், எதிர்மறை ஆற்றலும் நிறைய இருக்கும்.

ரிஷப லக்ன 8-ஆம் அதிபதி குரு, கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் நின்றால், இவர்கள் அரசியலில் அதிரிபுதிரியாக நடப்பர். இவர்களைச் சுற்றி, தம்பிகள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்வர். தான் ஏடாகூடமாக இருப்பது மாதிரியே, தம்மிடம் உள்ள தொண்டர் பட்டாள தம்பிகளையும் அதேமாதிரி மாற்றி வைத்திருப்பர். நிறைய ஏஜென்சி, பத்திரிகை, டி.வி இதன்மூலம் நல்ல லாபத்தையும், நினைத்ததை நிறைவேற்றியும் கொள்வர்.

8-ஆம் அதிபதி குரு பூச நட்சத்திரத்தில் நின்றால், தொழில் செய்பவர்களிடம் தனது தம்பி பட்டாளத்தை அனுப்பி, நல்ல வருமானம் பார்த்துவிடுவர். இவர்களது தம்பிகளோ, பணியாட்களோ வருகிறார்கள் என்றால் தொழில் முதலாளிகள் அலறியடித்து ஓடுவர். ஆனாலும், துரத்திபிடித்து வசூல் செய்துவிடுவர்.

ரிஷப லக்ன 8-ஆம் அதிபதி, ஆயில்ய நட்சத்திரத்தில் நின்றால், இவர்களுக்கு கிடைக்கும் பரம்பரை சொத்து கூடவே இளைய சகோதரத்தின் சொத்தையும் பிடுங்கி வைத்துக்கொள்வர். சிலரின் இளைய சகோதரம், மன பிறழ்வு கொள்வதாலும், அவரது சொத்து தன்னிச்சையாக இவருக்கே வந்துவிடும். பூர்வீக நில குத்தகைகளையும் இவரே முழுமையாக வாங்கி வைத்துக்கொள்வார்.

மிதுன லக்னத்துக்கு 
8-ஆமிட அதிபதி தரும் அதிர்ஷ்டம்

மிதுன லக்னத்துக்கு 8-ஆம் அதிபதி சனி ஆவார். இவர் 5-ஆமிடத்தில் உச்சம் அடைவார். 8-ஆமிடம் மகரம் ஆகும். 

சனிபகவான், துலாத்தில் சித்திரை நட்சத்திரத்தில் நின்றால், உங்கள் எதிரிகள்மூலமே நல்ல வருமானம் கிடைக்கும். இவர்கள் அரசியலில் அடாவடித்தனம் செய்து, முதன்மைக்கு போய்விடுவர். 

அதுவும் பூர்வீக இடத்தில், கைப்பற்றிய பதவி நாற்காலியை எதன் பொருட்டும் விட்டுத் தரமாட்டார். கண்டிப்பாக மந்திரி பதவி கிடைத்தால்தான் ஆச்சு என அடம் பண்ணுவர். இவருக்கு எதிராக யாராவது, கலகம் செய்தால், அவர்களை இல்லாமல் செய்துவிடுவர். தந்தையின் சொத்தை தராவிட்டால், அதை இன்சூரன்ஸ் பணமாக மாற்றி பெற்றுக்கொள்வார். இவர் கேட்பதை, விரும்பியதை கொடுத்தால், எதிராளிகள் உயிரோடு இருக்க இயலும்.

மிதுன லக்ன 8-ஆம் அதிபதி சனி சுவாதி நட்சத்திரத்தில் நின்றால், ஒன்று வெளிநாட்டு பண பரிவரித்தனை சம்பந்தமான யோகமாக அமையும். அது நேர்வழியில் இன்றி, குருவி, கொக்கு என்ற பெயரோடு பணம் வரும். சிலர், சில மந்திரிகளின் பினாமியாக இருந்து, பண வசூல் செய்வர். லாட்டரிச் சீட்டை இவர்களே அச்சடித்து, இவர்களே பணமும் விழ வைத்துக்கொள்வர். முக்கியமாக சினிமா உலகின் இருள் நிழல் தாதாவாக இருந்து, அதிர்ஷ்டம் பெறுவர். நேர்மையா, அது எங்கே விற்கும் என வினவுவர்.

மிதுன லக்ன 8-ஆம் அதிபதி சனி, துலாத்தில் விசாக நட்சத்திரத்தில் இந்த அமைப்பு உள்ளவர்கள், நிறைய திருமணம் செய்து, அதன்மூலம் அதிர்ஷ்டம் காண்பர். அட கல்யாணம் எல்லாம் போர் என எண்ணுபவர்கள், மானாவாரியாக காதல் செய்து யோகம் பெறுவர். இவர்கள் சட்டத்திலுள்ள இண்டு இடுக்குகளை நன்கு கற்றுக்கொள்வர். அதைவைத்து செம லாபம் சம்பாதிப்பர். வணிகத்தில் தனது பங்குதாரரை நன்கு ஏமாற்றி பணம் சம்பாதித்து, அவரது சொத்து, அவரது மனைவி, அவரது காதலி என எல்லாவற்றையும், மூட்டைகட்டி தன் வசமாக்கிவிடுவர். உலகில் காதலி, மனைவி இருந்தால், அவர்களுக்கு செலவுதானே ஆகும். 

ஆனால் இந்த அமைப்பு மிகுந்த அதிர்ஷ்டத்தை இவர்களுக்கு தரும் என்பது ஆச்சர்யமான விஷயம்.

கடக லக்னத்துக்கு 
8-ஆம் அதிபதி தரும் அதிர்ஷ்டம்

கடக லக்னத்துக்கு 8-ஆம் அதிபதி சனி ஆவார். அவர் கடக லக்ன 4-ஆமிடமாக துலாத்தில் உச்சமடைவார். கடக லக்ன 8-ஆம் அதிபதி, துலாத்தில் உச்சமாகி, சித்திரை நட்சத்திரத்தில் நின்றால், அதிர்ஷ்டம் என்பது சுமாரான அளவில்தான் அமையும். அப்படியே அதிர்ஷ்டம் கிடைத்தாலும், அது விரும்பத்தகாத அளவில், வெறுப்பு உணர்வுடன் கிடைக்கும். திருமண விவாகரத்துமூலம் கிடைக்கும் ஜீவானம்ச பணம் என்பது மனம் வெறுப்படையச் செய்வது, சில நஷ்டஈடு, சில இன்சூரன்ஸ் பணத்தையும், கண்ணீரோடு வாங்கச் செய்யும். எனவே இந்த அமைப்பிலுள்ள கடக 8-ஆம் அதிபதி, யோகம் தருவார் என்று கூற இயலாது.

கடக லக்ன 8-ஆம் அதிபதி சனி, சுவாதி நட்சத்திரம் பெற்றால், அரசியல், வீடு விற்கும் ரியல் எஸ்டேட் துறை, இடுக்கான இடத்தில் பள்ளி அமைத்து யோகத்தை வரவழைப்பது, கெமிக்கல் போட்டு, நிறைய விளைவித்து நல்ல பணம் சம்பாதிப்பது, தாலி கட்டாமல் நிறைய வீடுகள் வைத்திருப்பது, சும்மா கிடக்கும் தரிசு நிலங்களை தன் பெயருக்கு பட்டா போட்டுக்கொள்வது என மோசமான அதிர்ஷ்டம் அதிகமிருக்கும்.

கடக லக்ன 8-ஆம் அதிபதி சனி, விசாக நட்சத்திரம் பெற்று நின்றால், ஊரிலுள்ள படித்த இளைஞர்களுக்கு, வெளிநாட்டு வேலை வாங்கித் தருகிறேன் எனக்கூறி, அதிர்ஷ்டம் பெறுவர். கோவிலில், ஆன்மிகப்பணி மற்றும் உழவாரப் பணி என்று கூறி, கோவில் நிலத்தை தன் பெயருக்கு மாற்றி அதிர்ஷ்டம் பெறுவர். வெளிநாடு செல்ல கடன், உயர்கல்வி கடன், வீடு வாங்க கடன், வேலையில் சேர கடன், வயல் தோட்டம் வாங்க கடன் என இவ்விதமாக குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருகிறேன் எனக்கூறி, முன்பணமாக பெரும் அதிர்ஷ்டம் பெற்றுவிடுவர். காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடிக்க உதவுகிறேன் எனக்கூறி இவர்கள் நல்யோகம் பெற்றுவிடுவார்.

இதர லக்னங்கüன்


அதிர்ஷ்டம் வரும் இதழில்...

செல்: 94449 61845

bala130925
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe