Advertisment

குபேரராக ஆசிர்வதிக்கும் சிவபெருமான்!

peruman

குபேர் மந்திர்...

இந்த குபேரருக்கான ஆலயம் உத்தர் கண்ட் மாநிலத்தில் இருக்கிறது. ஜகேஸ்வர் என்ற புகழ்பெற்ற புனித தலத்தில் இது இருக்கிறது. அருகிலிருக்கும் நகரம் அல்மோரா. இமயமலை பகுதியில் இந்த கோவில் இருக்கிறது.

Advertisment

இது ஒரு சிவன் ஆலயம். அகழ்வாராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஆலயம் இது.

Advertisment

இந்த ஆலயத்திற்கு அருகில் தனேஸ்வர் ஆலயம், சண்டிகா ஆலயம், ஜகேஸ்வர் ஆலயம், ம்ருத்யஞ்செய் ஆலயம், நந்தாதேவி ஆலயம், நவ்துர்கா ஆலயம், நவகிரக ஆலயம், சூரியன் ஆலயம் ஆகிய ஆலயங்களும் இருக்கின்றன.

இந்த கோவிலில் சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.இந்த பகுதியில் 125 ஆலயங்கள் இருக்கின்றன.

7-ஆம் நூற்றாண்டிலிருந்து 14-ஆம் நூற்றாண்ட

குபேர் மந்திர்...

இந்த குபேரருக்கான ஆலயம் உத்தர் கண்ட் மாநிலத்தில் இருக்கிறது. ஜகேஸ்வர் என்ற புகழ்பெற்ற புனித தலத்தில் இது இருக்கிறது. அருகிலிருக்கும் நகரம் அல்மோரா. இமயமலை பகுதியில் இந்த கோவில் இருக்கிறது.

Advertisment

இது ஒரு சிவன் ஆலயம். அகழ்வாராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஆலயம் இது.

Advertisment

இந்த ஆலயத்திற்கு அருகில் தனேஸ்வர் ஆலயம், சண்டிகா ஆலயம், ஜகேஸ்வர் ஆலயம், ம்ருத்யஞ்செய் ஆலயம், நந்தாதேவி ஆலயம், நவ்துர்கா ஆலயம், நவகிரக ஆலயம், சூரியன் ஆலயம் ஆகிய ஆலயங்களும் இருக்கின்றன.

இந்த கோவிலில் சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.இந்த பகுதியில் 125 ஆலயங்கள் இருக்கின்றன.

7-ஆம் நூற்றாண்டிலிருந்து 14-ஆம் நூற்றாண்டுவரை இந்த ஆலயங்கள் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

வட இந்திய கட்டட பாணியான "நாகரா' பாணியில் இந்த ஆலயங்கள் கட்டப்பட்டு கம்பீரமாக நின்றுகொண்டிருப்பதைப் பார்ப்பது என்பதே ஒரு இனிய அனுபவம்.

அல்மோராவிலிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 1870 மீட்டர் உயரத்தில் இந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு அருகில் ஜடாகங்கா என்ற நதி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயம் இருக்கும் பகுதியில் ஏராளமான தேவதாரு மரங்கள் இருக்கின்றன. நந்தி, சுரபி என்ற இரு அருவிகள் ஆலயம் இருக்கும் பகுதியில் இருக்கின்றன.

நைனிடாலிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது. அருகிலிருக்கும் ரயில் நிலையம் காத்கோடம். அங்கிருந்து 125 கிலோமீட்டர் பயணித்தால், இந்த ஆலயத்தை அடையலாம். ஹால்ட்வானி என்ற நகரத்திலிருந்து 130 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் இருக்கிறது. பேருந்து, ஜீப் வசதிகள் இங்கு இருக்கின்றன.

குபேர் ஆலயத்தில் தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் வரும் "தன்தேரஸ்' என்று வட இந்தியாவில் அழைக்கப்படும் நாளன்று தன்வந்திரி பூஜையும் குபேர பூஜையும் இங்கு செய்யப்படும். அவற்றில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரம் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருவார்கள்.

ஏழைகளும், சிரமங்களில் இருப்பவர்களும் இங்குவந்து வழிபடும்போது, இங்கு அளிக்கப்படும் வெள்ளி நாணயத்தைத் தங்களின் இல்லங்களுக்குக் கொண்டுசென்று, அதை பணம் வைக்கும் இடத்தில் வைத்து தினமும் வழிபடுவார்கள். 

அப்படிச் செய்யும்போது, அவர்களின் கஷ்டங்கள் நீங்கும் என்பது பரவலான நம்பிக்கை.

அதனால், இதை ஒரு வினோதமான ஆலயம் என்றும், அதிசயமான கோவில் என்றும் அனைவரும் நினைக்கிறார்கள். இந்தியாவிலுள்ள குபேரர் ஆலயங்களில் புகழ்பெற்ற கோவில் இது.

இங்கிருக்கும் சிவலிங்கத்தில் ஒரு முகம் இருக்கிறது. அதை குபேரராக நினைத்து மக்கள் வழிபடுகின்றனர்.

பாரதத்திலிருக்கும் பழமையான ஆலயங்களில் ஒன்று இது.  பகவான் சிவனை இங்கு குபேரர் வடிவத்தில் வழிபடுகின்றனர். இங்கு அளிக்கப்படும் வெள்ளி நாணயத்தை ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டி தருவார்கள்.

தாங்கள் மனதில் நினைத்து வழிபட்ட காரியம் நடந்துவிட்டால், பக்தர்கள் இங்குவந்து பாயசம் தயாரித்து, பகவானுக்குப் பிரசாதமாக அளிப்பார்கள். இங்குவரும் பக்தர்களுக்கும் அளிப்பார்கள்.

சிலர் இந்த ஆலயத்திற்கு அருகிலிருக்கும் மண்ணை தங்களின் வீட்டிற்கு எடுத்துச்சென்று, அதை பூஜைசெய்து வழிபடுவார்கள்.

அதன்மூலம் தங்களின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி, தாங்கள் சந்தோஷமாக வாழமுடியும் என்ற ஆழமான நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.

இந்த ஆலயத்திற்குச் செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள், சென்னையிலிருந்து அல்மோராவிற்குப் பயணிக்க வேண்டும். பயண தூரம் 2,372 கிலோமீட்டர். அங்கிருந்து குபேர் ஆலயத்திற்குப் பயணிக்கலாம்.

டில்லியிலிருந்து செல்பவர்கள், ஹால்ட்வானிக்குப் பயணிக்க வேண்டும். பயண நேரம் 6 மணிகள். அங்கிருந்து இந்த ஆலயத்திற்குப் பயணிக்கலாம்.                      

om011225
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe