ராகு+சனி

இந்த கிரக சேர்க்கை எவ்வளவு பெரிய மனிதர்களின் அஸ்திவாரத்தையும் அசைத்துப் பார்த்துவிடும். தொழி-ல் இடையறாத தொந்தரவுகளையும் கடுமையான தொழில் நெருக்கடிகளையும் தருகின்ற கிரக சேர்க்கையாகவும் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கைப் பாதையை திடீரென மாற்றிப் போடும் நிலையை இந்த கிரக சேர்க்கை செய்கிறது. 

Advertisment

பூர்வீகத்தை விட்டுப் பிழைக்க போக வைக்கிறது. பூர்வீகத்தில் இவர்கள் இருக்கும்வரை இவர்களுக்கு அதிக தொந்தரவுகளையும் மனக் கஷ்டங்களையும் தருகிறது. 

ஜாதகரை பெரும் கடனாளியாக்கி, பங்காளி சண்டை களையும் உருவாக்கு கிறது. ஒரு நிரந்தர மான வருமானத்தை ஜாதகருக்கு சில நேரங்களில் தருவதில்லை. பூர்வீக சொத்தை அனுபவிப்பதில் இவர்களுக்கு பிரச்சினைகள் உண்டு. ச-க்காமல் போராடி வாழ்க்கையை நகர்த்தும் கிரக சேர்க்கை இது. 

போராடாமல் எதுவும் கிடைக்காது சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்ய தூண்டிக்கொண்டே இருக்கும். மொத்தத்தில் பொருளாதாரப் போராட்டம் அல்லது உறவுகளுடன் போராட்டம் இருந்துகொண்டே இருக்கும். பல சாதனையாளர்களையும் இந்த கிரக சேர்க்கை உருவாகி இருக்கிறது இந்த கிரக சேர்க்கையுடன் குருவோ அல்லது சுக்கிரனும் சேர்க்கையாக- பார்வையாக இருந்தால் சற்று இது யோகத்தைத் தருகிறது. 

Advertisment

எதிர்பாராத வகையில் திருமணங்கள் நடைபெற இந்த கிரக சேர்க்கை காரணமாக இருக்கிறது பலருக்கு திருமணம் நடந்ததே ஒரு கதைதான் என்கிறார்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும். பெரிய பெரிய பிரச்சினைகள் சர்வ சாதாரணமாகவே நடக்கும். சுப கிரகங்களின் பார்வை இருந்தால் குடும்ப வாழ்க்கையில் சற்று பாதிப்பு குறைவாக இருந்து அப்படியே காலங்கள் ஓடிவிடும். மிகவும் அதிகப்படியான சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள் என்பதால் பிரச்சினைகள் வ-யவரும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் வானவியல் தொடர்பான படிப்புகளை எடுத்து படிப்பது, பெரிய கனரக வாகனங்கள் வைத்திருப்பது, குறி சொல்வது, ஜோதிடம், மாமிசக் கடைகள். இராசயனம் தொடர்பான தொழில், அறுவை சிகிச்சை, மருத்துவம், சலவைத்தொழில், முடிதிருத்தம், துப்புறவு தொழில், அந்நிய தேசம் செல்வது, உறவுகளைவிட்டு வெளிநாடு செல்வது இதுபோன்ற தொழில் அமைப்புகள் இருக்கும். இந்த கிரக சேர்க்கை வெளியூர், வெளிநாடுகளில் தொழிலுக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் உறவு களைவிட்டு செல்லும்பொழுது இவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு தருவது இல்லை. 

இந்த கிரக சேர்க்கை குடும்பத்தில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இருந்தால் பரம்பரை சாபங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகும். இவர்கள் சின்னதாக  தவறு செய்தாலும் மிகப்பெரிய பாதிப்பை தந்து விடுகிறது. இந்த கிரகத்துடன் மற்றொரு பகை கிரகம் சேரும் பொழுது ஜாதகரின் கைகளை கட்டிப்போட்டு வாயில் விஷத்தை ஊற்றுவதை போன்ற கஷ்டங்களைத் தரும். கடுமையான தொழில் போட்டியைத் தரும் பெரிய அளவில் முதலீடுகள்செய்து தொழிலை தொடங்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேராசை இல்லாதபோது இவர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கை பெரிய தொந்தரவுகளை செய்வதில்லை. ஜாதகருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் பேராசை இருக்கக் கூடாது. அப்படி இருக்கும்பட்சத்தில் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்துவிடும். ராகுவின் காரகத் தொழிலை செய்யும்பொழுது இவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை தருவதில்லை. இவர்கள் குலதெய்வத்தை சரியான முறையில் வழிபாடு செய்துவர வேண்டும். காவல் தெய்வங்கள், வாராகியம்மன், காளி, துர்க்கையை இவர்கள் வழிபாடு செய்துவந்தால் இவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பேச: 90802 73877