Advertisment

சங்கடங்கள் தரும் ராகுபகவான் -தப்பிக்க வைக்கும் பரிகாரங்கள் ஜோதிட கலையரசி M.தனம்

புதுப்பிக்கப்பட்டது
raghu


ராகு- கேது இந்த இரண்டு கிரகங்களும் சாயா கிரகங்களாகும். மற்ற கிரகங்களின் செயல்பாடுகளை மாற்றிவிடும் சக்தியை பெற்றுள்ளது. ஒருவருடைய பிறப் பின் பலனும் அவர் வாங்கி வந்த கர்மாவின் பலனுயும் ராகு- கேதுகள்மூலம் தான் வெளிப்படும்.

Advertisment

ஒருவருடைய ஜாதகத்தில் தோஷத்தின் அளவை இந்த கிரகங்களின் மூலம் தான் நாம் அறிய முடியும். ராகு கேதுவுக்கு பார்வைகள் இல்லை. ஆனால் தான் நின்ற ராசிக்கு 1, 3, 11 ராசிகளை கட்டுப்படுத்திக் கொள்ளும். பார்க்கின்ற கிரகம். ஒரு செயலை செய்யத் தூண்டும் கட்டுப்படுத்துகின்ற கிரகம். 

Advertisment

தனது காரகத்துவ செயலைத் தவிர மற்ற செயல்களை செய்ய விடாது. ராகு கேது அனைத்து காலங்களிலும் வக்ர நிலையிலேயே இருக்கும். வக்ரம் பெற்று இருக்கும் கிரகங்களை ராகு கேது பாதிப்பதில்லை மாறாக தன்னுடன் சேர்த்துக்கொள்கின்றது. 

ராகு- கேதுவினால் வக்ரகங்கள் பலவீனம் அடைவதில்லை மாறாக அதிக பலத்தை பெறுகின்றன.ராகுவிற்கு பகை கிரகங்களே அதிகமாக உள்ளது. கோட்சாரத்தில் ராகு வரும் காலத்தில்கூட நல்ல பலன்களை அடைபவர்கள் மிகவும் குறைந்தவர்களே. குணக்கேட்டை அதிகம் தரும் பலர் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் திருடர்கள் ஆவதும் ஊரு விட்டு ஊரு போவதற்கும்  கோட்சார ராகுவே காரண மாகும். ராகு எந்த கிரகத்துடன் சேர்கிறதோ அந்த கிரகத்திற்கு தற்கா-க குண கேட்டை தராமல் போகாது கோட்சாரத்தில் கிரகம் இல்லாத ராசியில் ராகு போவது நல்லது. அப்போது கோட்சாரராகுவினால் எந்த தீங்கும் நடக்காது கிரகம் உள்ள ராசியில் ராகு போவது எந்த பாவமாக இருந்தாலும் நின்ற கிரகத்திற்கும் பாவத்திற்கும் தகுந்த பாதிப்பை செய்யாமல் போகாது. பழகும் தன்மையும் மதமாற்றம் அந்நிய நாடு செல்லுதல் சிறை தண்டனை நாடு கடத்தப்படுதல் போன்றவற்றைக் குறிக்கும். தனித்த ராகு பெரிய அளவில் தோஷத்தை செய்யாது. ராகு உடன் சேர்ந்து செவ்வாய், சுக்கிரன், சந்திரன், கிரகங்கள் மட்டுமே தோஷம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது ராகு சுட்டிக்காட்டாத தோஷமோ, கண்டமோ இல்லை. ராகு பாவத்தின் மூலமே தன்னுடைய சேர்ந்த கிரகத்தின்மூலமே தோஷத்தை செயல்படுத்துகிறது.

ராகு உடன்  பிற கிரக சேர்க்கை பற்றி பார்ப்போம்.

ராகு + சூரியன் 

இந்த கிரக சேர்க்கைகள் தந்தையாருக்கு கடும் கண்டத்தை தருகிறது. ஜாதகர் பிறந்ததற்குப் பின் பூர்வீக சொத்தை அழிக்கிறது அல்லது பெரும் வாரியாக குறைக்கின்றது. தந்தையாரை வெளி மாநிலம் வெளிநாடுகளில் சம்பாதிக்க வைக்கும் பிற்காலத்தில் ஜாதக காரரையும் ஊரை விட்டு வெளிமாநிலம் வெளிநாடுகளுக்கு வருமானமீட்ட வைக்கும் கிரக சேர்க்கை ஆகும். இந்த கிரக சேர்க்கை தந்தையாருடன் நல்ல உறவை தருவதில்லை. ஒரே வீட்டில் இருக்கும் பட்சத்தில் அதிக அளவு பாதிப்பை தரும் அவர்கள் பிரிந்து இருந்தால் பெரிய அளவு பாதிப்பை தருவதில்லை. தந்தையால் இவர்களுக்கு நல்ல ஆதாயம் இருப்பது இல்லை.குடும்பத்தில் பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு சுப காரியத்தை சந்தோஷமாக செய்ய சிரமப்பட வேண்டி இருக்கும். ஜாதகருக்கு பெரிய பொறுப்புகளை கொடுத்து போராட்டங்களையும் தருகின்றது தகுதிக்கு மீறிய பொறுப்புகளை சுமக்க வைத்து விடுகிறது. ஜாதகர் அல்லது ஜாதகரின் தந்தை அரசிய-ல் ஈடுபட்டு இவர்கள் கட்சி பணிகளில் காலம் நேரம் பார்க்காமல் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். 

அரசிய-ல் ஆர்வம் ஏற்பட இந்த கிரக சேர்க்கை காரணமாக இருக்கிறது. இந்த கிரக சேர்க்கை சில விதமான ஆபத்துகளையும் ஏற்படுத்தும் நெருப்பு வகைகளில் காயம், கண்டம் மற்றும் ஆயுதங்களால் காயம், கண்டம் ஏற்படும். ஜாதகருக்கு ஏதாவது ஒரு நோயின் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கண், இதயம், முதுகு எலும்பு போன்ற உறுப்புகளை தொந்தரவு செய்யும் வாய்வுத் தொல்லைகளும் அடிக்கடி ஏற்படும். ஜாதகரின் தாத்தா அல்லது பாட்டன் வகையில் இரு திருமணங்கள் செய்து கொண்டவர்கள் இருப்பார்கள். இந்த கிரக சேர்க்கை பிதுர் தோஷத்தை ஏற்படுத்துகிறது. இந்த தோஷம் அவர் வம்சத்தில் ஆண் குழந்தைகளை அதிக அளவு பாதிக்கிறது. குழந்தைகள் இல்லாமல் இருப்பது ஆண் வாரிசு இல்லாமல் போவது அல்லது அவர்களுக்கு சரியான வாழ்க்கை அமையாமல் இருப்பது. வாழ்க்கையில் எந்தவிதமான வளர்ச்சிகளும் இல்லாமல் இருப்பார்கள். அரசு ஊழியரிடம் இவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவது அரசாங்கத்தின் மூலமாக இவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது லஞ்சம் பொய்யான குற்றச்சாட்டு விவகாரங் களில் இவர்கள் சிக்கிக்கொள்வது இது போன்ற சில பிரச்சனைகள் இவர்களுக்கு வரக்கூடும். ஜாதகர் அல்லது ஜாதகரின் தந்தை சில கெட்ட பழக்கத்திற்கு அடிமை யாக இருப்பது இவர்கள் அதிகம் கோபம் பிடிவாதம் கொண்டவர்களா இருப்பார்கள். இந்த கிரக சேர்க்கைக்கு குருவின் பார்வை இருந்தால் இதனுடைய தோஷத்தின் அளவை குறைத்து தரும். இந்த பாதிப்புகள் எந்த காலத்தில் வரும் என்று பார்த்தால் சூரிய திசையோ புக்தியோ அல்லது ராகு திசையோ புத்தியோ நடக்கும் காலகட்டத்தில் இந்த பாதிப்புகள் ஏற்படும். இந்த கிரகங்கள்மீது கோச்சாரராகுவோ அல்லது  சூரியனோ இந்த கிரகங்கள்மீது வரும் பொழுது அதிக அளவு பாதிப்பை தருகிறது. இவர்கள் இதன் பாதிப்பை குறைத்துக் கொள்ள மனித தலை இல்லாத தெய்வங்களை வழிபாடு செய்வது அல்லது துர்க்கை, பத்ரகாளி, புற்று கண் வழிபாடு போன்ற தெய்வங்களை வழிபாடு செய்து வருவது சிறப்பு. ராகு கால வேளையில் தொடர்ந்து நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபாடு செய்து வரும்போது தோஷத்தின் அளவு குறையும். இந்த கிரக சேர்க்கையின் திசா புத்தி காலத்தில் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்து வரவும்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஞாயிற்றுக்கிழமை கோதுமை பாயாசம் செய்து தானம் கொடுப்பது நல்லது.

பேச: 90802 73877

bala040725
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe