மாற்றங்களை மணித்துüதோறும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் கிரகங்கüன் அலைவரிசையில் அதிநுட்பத்தையும், ஞானத்தையும், அருளும் கேது மனித வாழ்வு என்னும் விருட்சத்திற்கு இயற்கை உரம் ஆகும். 

Advertisment

கேது பகவானுக்கு சிகி, தூமகேது, சுவர்ணகேது, மோக காரகன், ஞானகாரகன், என்கின்ற நாமங்களும் வழங்கப்பட்டுள்ளது. 

Advertisment

தனக்கென ஒரு வீடு இல்லா இரட்டை கிரகத்தின் ஒரு பகுதியான கேது தர்ம திரிகோணங்கüல் தனது முழு நட்சத்திரங்களை முதன்மையாக அமர வைத்துள்ளது. 

மேஷத்தில் அஸ்வினி, சிம்மத்தில் மகம், தனுசு ராசியில் மூலம், என்கின்ற ஆகச் சிறந்த நட்சத்திரங்களுக்கு சொந்தக்காரரான கேது ஏழு வருட தசையில் ஞானத்தை நயமாக புகட்டும் தன்மை வாய்ந்தவர். 

Advertisment

மோட்சம், துறவு, ஆன்மீகம் கடந்த கர்ம பலன், என்று திகட்டுகின்ற தன்மையை வழங்கும் இவர்தான் ஒவ்வொன்றிலிருந்தும் விடுபடவும் வழி அமைத்தும் தருகிறார் என்பது உறுதி. 

யோகம், ஞானம், என்ற இரட்டை பயணத்தில் மனித உடலில் மூளையின் பின்பகுதி அதாவது அக செயல் மையம், குடல் பகுதியில், சிறுகுடல், மறைமுக நோய்கள், மன நோய்கள், போன்றவற்றையும், கண்டறியப்படாத நோய்களையும், இவரே அüக்கின்றார். 

ஆன்மிகத்தின் உச்சம் என்று அழைக்கப்படும் குண்டலினி சக்தி கேது தொடர்பு டையது தான் என்பது உறுதி. அதனால் தான் மூலாதாரத்திற்கு விநாயகர் மற்றும் வல்லபை என்கின்ற இரு தெய்வங்களை உரித்தாக்கி உள்ளனர் நம் முன்னோர்கள். 

வானியல் ரீதியாகவும் பருப்பொருள் இல்லாத தன்மையும், மற்ற கிரகங்களைப் போல் முன்னோக்கி சுழலாமல் பின்னோக்கி நகர்கின்ற தன்மையும், தன்னுள்ளே பொதிந்த இந்த கேது ஒரு பாவகத்தில் அமரும்பொழுது அமரும் பாவகம் மட்டும் அல்லாமல் முன்பின் அமர்ந்த பாவகங்கüன் நிலையையும் தனக்குறியதாக்கி அவைகள் வழங்கும் பலனையும் தடுத்தாட்கொள்ளும் அதிகாரம் கொண்டது. 

லக்னத்தில் அமையப்பெற்ற கேது, ஆழ்ந்த ஞானத்தை வழங்கி தசையை நடத்தும் குறிப்பாக தன்னைப் பற்றி தானே உணரக்கூடிய தன்மையை அதிகமாக உணர்த்தும்.

 ஒரு கேது தசையை லக்னத்தில் இருந்து கடந்தவர்களுக்கு அனுபவத்தின் ஆழம் அதிகமாக இருக்கும். 

இரண்டாம் இடத்தில் அமையப்பெற்ற கேது வருமானத்தில் தடையைக் கொடுத்து வாக்கின் மூலம் அதிருப்தியை அüத்தாலும், பணம் சார் உளவியல் என்கின்ற பட்சத்தில் அவர்கüடம் இந்த கேதுவின் தசை முடிவில் நிதி மேலாண்மை என்கின்ற ஒரு தன்மை ஆழ்ந்து நிற்கும்.

 வெறும் ஏழே வருடங்களுக்குப் பிறகு நிறைந்த செல்வத்தை கை கொள்ளும் சூழலை இந்த கேது இரண்டாம் இடத்தில் இருந்து தசை நடத்தும் பொழுது வழங்கும். 

மூன்றாம் இடத்து கேது காமத் திரிகோணமான மூன்றாம் இடத்தில் அமர்ந்து திசை நிகழ்த்தும் பொழுது தொடர்புகüன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடத்தை நம் கை சேர்க்கின்றது. பெரும்பாலும் மூன்றாம் இடம் குறிக்கும். வாசல் படிகளை மாற்றி அமைக்கும் தன்மையை இந்த காலகட்டத்தில் இந்த கேது வழங்கி வீட்டிற்கு ஒரு பெரும் சுபிட்சத்தை அüக்கும் தன்மையை அனேக ஜாதகங்கüல் காண முடிகின்றது. 

நான்காம் இடத்து கேது சுக ஸ்தானத்தில் அமையப்பெற்ற கேது பூர்வீக இல்லத்தை விட்டு வெüநடப்பு செய்து தன்னை சார்ந்தவர்கள் யார் என்கின்ற தன்மையை அüத்து விடும். கல்வி நிலையில் ஒரு தடையை நிச்சயமாக வழங்கும் கேது பாடமற்ற படிப்பினையை சேர்த்தே வழங்கும். 

ஐந்தாம் இடத்தில் அமையப்பெற்ற கேது குலதெய்வம் சார்ந்த ஒரு பெரும் நிகழ்வை நிகழ்த்திக் காட்டிச் செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்த பொழுதிலும் குழந்தைகள் மற்றும் பூர்வீகம் சார்ந்த தடையை நிச்சயமாக வழங்கும். இந்த காலகட்டம் குலதெய்வத்தின் அருளை நம் இல்லங்கள் பரிபூரணமாக இணைத்துக் கொள்ளும். 

ஆறாமிட கேது கடன், நோய்எதிர்ப்பு, போன்றவற்றை தவிடு பொடியாக்கி நம் வாழ்வில் வளம் சேர்க்கும். 

ஏழாம் இடத்து கேது களத்திர ஸ்தானத்தில் அமைந்து, கணவன் அல்லது மனைவியின் வழியில் கிடைக்கப்பெறும் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையை நமது வசமாக்கும். 

எட்டாம் இடத்து கேது வம்பு, சண்டை சச்சரவு, நீதிமன்ற சூழல் போன்றவற்றை நிச்சயமாக நமக்கு சாதகமாக மாற்றித் தரும் ஆற்றலை வழங்கினாலும் இனம் காணப்படாத வலியையும் வழங்கும். 

ஒன்பதாம் இடத்து கேது உயர்கல்வி, தந்தை, பட்டயப் படிப்பு, வெüநாட்டு யோகம், போன்றவற்றை சிறு வலி யோடு வழங்கி அதன் மூலம் பெறும் ஞானத்தை நமக்கு அüக்கும். 

பத்தாம் இடத்து கேது, பழமொழி யிலேயே "பத்தில் ஒரு பாம்பாவது இருக்க வேண்டும்' என்று கூறுவார்கள் பத்தில் பாம்பே அமர்வது பெரும் சிறப்பை நிச்சயமாக நல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கேது பத்தாமிடத்தில் இருந்து திசை நடத்தும் தருவாயில் தொழில் சார்ந்த விஷயங்கüலும், உடன் பணியாற்றுவோரின் தந்திரங்களும், நமக்கு புலப்படும். 

பதினோராம் இடத்து கேது ஆசைகளை நிறைவேற்றக்கூடிய ஞானகாரகன் 11-ஆம் இடத்தில்அமரும் பொழுது ஆசைகüன் மூலம் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகüல் இருந்து தீர்வை கொடுக்கும் ஞானத்தை நமக்கு வழங்குவார். 

பன்னிரெண்டாம் இடத்து கேது அனுபவத்தின் மூலம் நாம் அடையப்போகும் நல் தன்மையை சிறு வலியுடன் நமக்கு அüத்து வாழ்வில் துறவறம் என்றால் என்ன என்கின்ற தன்மையை வழங்குகின்றது. 

இப்படி பன்னிரண்டு பாவகங்கüல் தனக்கான நிலையில் தன்னை வெüப்படுத்தும் கேது, மொத்தத் தில் புதைகுழி மற்றும் தூய்மையற்ற சூழல் ஆகியவற்றோடு ஒப்பிடப் படுகின்றது.  

கேதுவின் திசை நிகழும் தருவாயானது நமது உடலில் உள்ள அனைத்து செல்கள் மற்றும் ரத்தங்கள் சார்ந்த வழியில் அசுத்தங்களை சேர்த்து, நமது செரிமான மண்டலத்தை பாதித்து அதன் மூலம் சிந்தனைகüன் ஓட்டத்தை தகர்த்தெறியும் தன்மையினால் தான் இந்த கேதுவின் திசை பெரும் பாதிப்பாக கருதப்படுகின்றது. 

கேதுவின் திசை ஆரம்பத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையினை உருவாக்கிக் கொண்டால் மாபெரும் ஞானத்தை அருளும் கேது, செல்வ வளத்தையும், சீரான வாழ்க்கையையும் நிச்சயமாக இணைத்தே அருள்வார் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. 

கேதுவின் திசை ஆரம்பம் முதல் இறுதி வரை மூச்சு சம்பந்தப்பட்ட அணுகுமுறையை கை கொண்டாலே கேது கொட்டிக் கொடுக்கும் கிரகமாக நமக்கு காட்சியüப்பார்.

செல்: 80563 79988