காலம் காலமாக அறிவியலிலும் தொழிலிலும் ஆயிரம் முன்னேற்றங்கள் அடைந்து மாற்றங்கள் நிகழ்ந்தாலும் குடும்பம், காதல், பாசம், அன்பு மற்றும் நட்பு ஆகிய பண்புகள்தான் நம் வாழ்வை அழகாக்கு கின்றன.
நம் வாழ்க்கையின் பாதை பல நேரங்களில் கரடுமுரடாக இருக்கும்போது அதில் மலர் தூவி அழகாக்குபவர்கள் குழந்தைகள் தான். குழந்தைகள் கொண்டா டப்பட வேண்டியவர்கள்; ‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்றார்கள் நம் முன்னோர்கள். குழந்தைகளை இல்லறத்தின் காதல் பரிசாய், அன்பின் அடையாளமாய், மகிழ்ச்சியின் முகவரியாய் பார்த்த காலம் மாறி பல இடங்களில் கௌரவத்தின் அடையாளமாய் வாரிசு வரிசையின் அங்கமாய் சில இடங்களில் வறுமையின் அவலமாய் குழந்தைகள் சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையைத் தருகிறது.
குழந்தைகளிடம் இருக்கும் மழலையைக் கொண்டாடாமல் அவர்களை இயந்திரமாகவும் மனநோயாளியாகவும் மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறது நம் சமூகம். ஒரு ஆப்பிள் ஆரஞ்சாக முடியுமா? ஒரு ஆரஞ்சு கொய்யாப்பழமாக முடியுமா? இல்லை ஒரு கொய்யாப்பழம்தான் மாம்பழமாக முடியுமா? நிச்சயமாக முடியாது; அப்படி ஆனால் அதன் சுவைதான் நன்றாக இருக்குமா?; ஒவ்வொன்றிற்கும் தனித்தனி நிறம்; தனித்தனி சுவை; தனித்தனி குணம்; குழந்தைகளும் அப்படித்தான். ஒவ்வொரு குழந்தையும் தனித்தனி அடையாளங்களுடன் இந்த சமூகத்தில் வளர்கின்றன. ஆனால் நாம் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பீடு செய்துகொண்டே இருக்கிறோம்.
‘எதிர் வீட்டுக் குழந்தை மாதிரி படி’, ‘பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி பாடு’, ‘அடுத்த வீட்டு குழந்தை மாதிரி ஆடு’ என்று ஒப்பீடு செய்து அவர்கள் மிகப்பெரிய மனநோயாளியாக மாறுவதற்கு நாமே காரணமாகி விடுகிறோம். “கையும் காலும் முளைத்த கவிதை குழந்தை” என்கிறார் கவிஞர் இளந்தேவன். “தூக்கி வைத்துக் கொண்டால் இடுப்பு வலிக்கிறது; இறக்கி விட்டால் மனசு வலிக்கிறது; அதுதான் குழந்தை!” என்றான் ஒரு புதுக்கவிஞன். உலகத்திலேயே மிகச்சிறந்த விஞ்ஞானி குழந்தைகள்தான் என்பதை உணர்ந்ததால் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இளைஞர்களைக் கனவு காணச் சொல்லி அவர்களை நோக்கிப் பயணம் செய்தார்.
“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.”
என்று மழலையின் மகத்துவத்தைப் பாடினார் திருவள்ளுவர். குழந்தைகளுக்கென்று தனி உலகம் இருக்கின்றது. குழந்தைகள் நம் வீட்டிற்கு வந்த தேவ தூதர்கள். காதலையும் வீரத்தையும் அணுவணுவாக துய்த்துப் பாடிய சங்க இலக்கியப் புலவர்கள் நன்னெறியில் வாழ்வதற்கான வழிமுறைகளையும் திறம்பட வகுத்திருக்கிறார்கள். இப்படி வாழ்வியல் நெறிமுறைகளைச் சொன்ன சங்க இலக்கியம் ஒரு சின்னஞ்சிறு குழந்தை செய்யும் குறும்புகளை மிக அழகாக பட்டியலிட்டுக் காட்டுகிறது. குறுகுறுவென்று தத்தித்தத்தி நடந்துவருகிற குழந்தை உணவு உண்ணும்போது இடையில் வந்து தன் சின்னஞ்சிறு பிஞ்சுக் கைகளை நீட்டுகிறதாம்; நெய்யூற்றிப் பிசைந்த சோற்றைக் கைகளில் எடுத்து தரையில் சிந்துகிறதாம்; சிந்திய சோற்றைத் தொடுகிறதாம்; வாயில் கவ்வுகிறதாம்; கையால் பிசைகிறதாம்; உடம்பெங்கும் சோற்றைப் பூச சோறு தரையில் சிதறுகிறதாம்; இத்தனை குறும்புகளைச் செய்து நம்மை மயக்கும் குழந்தையைப் பெறாதவர்களுக்கு வாழ்க்கை பயனற்றது;
அவர்கள் வாழும் நாளும் பயனற்றதாகும். பல்வகைச் செல்வங்களையும் பெற்று பலரோடு சேர்ந்து அமர்ந்து உண்ணும் பெரும் பேறு பெற்றவராக இருந்தாலும் அவர்களுக்கு குழந் தைச் செல்வம் இருந் தால் தான் வாழ்க்கை இனிக்கும்.
“படைப்பு பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி,
இட்டும் தொட்டும் கவ்

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குற இல்லை தாம் வாழும் நாளே”
(புறநானூறு - பாடல் எண் - 188)
என்று மிக அழகாக புறநானூற்றுப் புலவன் பாண்டியன் அறிவுடை நம்பி பாடினான். குழந்தை களை குழந்தைகளாகவே வளர்க்கும்போது தான் அதன் குறும்புத்தனத்தையும் சாதுரியத்தையும் ரசிக்க முடியும் என்பதோடு அவர்களின் சுயசிந்தனைத் திறனையும் அதிகப்படுத்த முடியும். குழந்தைகளை கேள்வி கேட்கும்போது கேட்கவிடாமல் அதட்டுவ தாலும், குறும்புத்தனத்தை அதன் வேடிக்கை விளையாட்டைச் செய்யவிடாமல் தடுப்பதனாலும், ஓடி ஆடும் குழந்தையை கைகட்டி வாய்பொத்தி அமர வைப்பதனாலும் குழந்தைகள் தத்தம் இயல்புத் தன்மையை மறந்து குழந்தைத் தன்மையை இழந்து விடுவதோடு எதிர்காலத்தில் சிந்திக்கும் திறமற்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் தரவல்லது. விளையாட்டில் ஆண் குழந்தை வென்றால் வீரன் என்றும் பெண் குழந்தை வென்றால் வீராங்கனை என்றும் சொல்கிறோம்.
“ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!”
என்று குழந்தைகள் எல்லோருடனும் சேர்ந்து விளையாடவேண்டும் என சொன்னான் மகாகவி பாரதி. ஆனால் நாம் நம் குழந்தைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த ஆப்பிளைப்போல மண் படாமல் கல் படாமல் மற்றவர்கள் சொல்லும் படாமல் வளர்க்க ஆசைப்படுகிறோம். ‘அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை ஒருபோதும் உருவாக்காது’ என்பார்கள். விளையாட்டு தான் குழந்தைகளுக்கு வெற்றியைக் கொண்டாடவும் தோல்விகளைத் தாங்கிக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கும். இலக்கியங்கள் குழந்தைகளை மிகச்சிறப்பாக கொண்டாடியிருக்கின்றன.
தமிழ் சிற்றிலக்கிய வகையில் ‘பிள்ளைத்தமிழ்’ என்பது மிகச் சிறந்த இலக்கியம். பாட்டுடைத் தலைவனையோ தலைவியையோ குழந்தையாக கருதி ஒவ்வொரு பருவத்திலும் அவர்கள் ஆடும் விளையாட்டைப் பேசுவதுதான் பிள்ளைத்தமிழ் இலக்கியம். பிள்ளைத்தமிழில் நிறைய வகை இருந்தாலும் மிகச்சிறப்பாக அனைவராலும் போற்றப்படுவது குமரகுருபரர் எழுதிய ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’. பிள்ளைத்தமிழில் ஆண்பாற் பிள்ளைத் தமிழ் பெண்பாற் பிள்ளைத் தமிழ் என்ற இரண்டு வகை உண்டு. தமிழ் பண்பாட்டுக் கூறின் படி குழந்தை பிறந்த முதல் இரண்டு மாதம் குழந்தையை வெளியில் கொண்டுவர மாட்டார்கள்.
அதனால் மூன்றாம் மாதம் முதல் 21 ஆம் மாதம் வரை பிள்ளைகளுக்கான பருவங்கள் பத்து. அதில் ஏழு பருவம் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் பொதுவானது. மீதமுள்ள மூன்று பருவங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் பருவம் - காப்பு; குழந்தை பிறந்து மூன்றாவது மாதம் குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என்று இயற்கையையும் இறைவனையும் வேண்டிப் பாடுவார்கள். “எங்க… சாமியப் பாரு; வானத்தைப் பாரு; பூமியைப் பாரு; செடியைப் பாரு என்று இவைகளை எல்லாம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இப்படி காக்க வேண்டிப் பாடுவதால் இந்தப் பருவத்திற்கு பெயர் ‘காப்பு’.
இரண்டாம் பருவம் - செங்கீரை; ஐந்தாம் மாதம் குழந்தைக்கு நாம் சொற்களை அறிமுகப்படுத்துகின் றோம். “எங்க… அம்மான்னு சொல்லு, அப்பான்னு சொல்லு” என்று மொழியை அறிமுகம் செய்கிறோம். ‘கீர்’ என்றால் மொழி அல்லது சொல் என்று பொருள் படும். இந்தப் பருவத்தில் குழந்தை ஒரு காலை மடக்கி, ஒரு காலை தூக்கி, இரு கைகளை மேலே உயர்த்தி அப்படியே தலையைத் தூக்கிப் பார்க்கும். குழந்தை கவுரும்; அந்த சமயம் செம்மையான மழலைச் சொல் உதிர்க்கும்; அதனால் இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர்.
மூன்றாம் பருவம் - தாலப்பருவம் அல்லது தாலாட்டுப் பருவம்; ஏழாம் மாதம் குழந்தை அதிகம் தூங்காமல் அழும்போது தாய் அழகழகாக தாலாட்டுப் பாட்டுப் பாடி தூங்க வைப்பாள். ‘தால்’ என்றால் நாக்கு என்று பொருள். தாலை அதாவது நாக்கை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு என்றானது.
ஏ..லுலுலாயி… ஆராரோ… ஆரிரரோ ஆராரோ ஆரிவரோ என்று மண்ணிசையோடு சேர்த்து தாலாட்டுப் பாடுவார்கள். ஆராரோ பாட்டுக்கு உள்ளே பல பொருள் வைத்து பாடினார்கள் நம் முன்னோர்கள். ஆராரோ ஆரிரரோ என்றால் என் குடும்பத்தில் வந்து பிறந் திருக்கிறாயே நீ யாரு? என் பாட்டியா? தாத்தாவா? அப்பாவா? என்று பொருள். அடுத்த வரியில் பாடும்போது யார் ஆவாரோ? நீ டாக்டராகப் போகிறாயோ! வக்கீலாகப் போகிறாயோ! என்றபடி பெருமையாக குழந்தையைப் பாடக்கூடிய பருவம்தான் தாலாட்டுப் பருவம். இந்த இசைக்கு மயங்காத குழந்தைகளே இல்லை.
நான்காம் பருவம் - சப்பாணி; சப்பாணி என்றால் ‘சக’ + ‘பாணி’; ‘சக’ என்றால் ‘உடன்’; ‘பாணி’ என்றால் கைகளை சேர்த்து ஒலி எழுப்பி ஒன்பது மாதத்தில் குழந்தை உட்காரத் தொடங்கி மகிழ்ச்சியில் கை கொட்டும்; இது இயல்பாகவே நடக்கும்; இதைத் தான் சப்பாணிப் பருவம் என அழைத்தனர்.
ஐந்தாம் பருவம் - முத்தப் பருவம்; இந்தப் பருவத்தில் குழந்தையை பாராட்டி சீராட்டி மடியில் தூக்கி வைத்துக்கொண்டு “எங்க.. அம்மாக்கொரு முத்தம் கொடு; அப்பாக்கொரு முத்தம் கொடு” என்று கேட்கும் போது குழந்தை ஆவலோடும் அன்போடும் தன் மலரினும் மெல்லிய இதழால் முத்தம் கொடுத்து விளையாடும்.
ஆறாம் பருவம் - வருகை அல்லது வாரணப் பருவம்; தமிழர் பண்பாடே வரவேற்று மகிழ்தல் தான். 13 மாதத்தில் குழந்தை நன்றாக தத்தி தத்தி நடக்கும். குழந்தையை வா… வா… என வாய் குளிர மெய்மகிழ அழைக்கும் பருவம் தான் வருகைப் பருவம் என்பர்.
ஏழாம் பருவம்- அம்புலிப் பருவம்; நிலவைக் காட்டி தாய் குழந்தைக்கு சோறு ஊட்டுவாள். அம்புலி மாமாவை வா… வா… என அழைக்கக் கற்றுத் தருவாள். ‘பிள்ளைக் கலிக்கு அம்புலியாம்’ என்பர்.
இதுவரை வந்த ஏழு பருவங்களும் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. மீதமுள்ள மூன்று பருவங்கள் இருபாலருக்கும் வேறு வேறானது. இதில் முதல் ஏழு பருவங்களில் விளையாட்டு என்பது இல்லை.
விளையாட்டு என்ற ஒன்று வரும்போது ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் பருவங்கள் வேறுபடுகின்றன.
ஆண் குழந்தையின் எட்டாவது பருவம் - சிற்றில் சிதைத்தல்; ஆண் பிள்ளையின் 17 ஆவது மாதத்தில் அம்புலி மாமா வரவில்லை என்று சுட்டித்தனமான கோபத்தில் சிறு பெண் குழந்தைகள் கட்டும் மணல் வீட்டை ஆண் குழந்தை காலால் உதைத்து கலைக்கும் பருவம் ஆதலால் சிற்றில் சிதைத்தல் என்ற பெயர் உண்டானது.
பெண் குழந்தையின் எட்டாம் பருவம்- நீராடல்; 17 ஆம் மாதம் பெண் குழந்தையை நீர்நிலைகளில் விளையாட பழக்கப்படுத்தும் பருவம்தான் இந்தப் பருவம்.
ஆண் பிள்ளையின் ஒன்பதாம் பருவம்- சிறுபறை முழக்கல்; 19 ஆவது மாதத்தில் குழந்தைகளிடம் ஒலி எழுப்பும் பறையைக் கொடுத்து அடிக்கச் சொல்லுவார்கள். பொங்கலுக்கு முன் வரும் போகிக்கு அடிப்பதுபோல ஓசை எழுப்பும் பறையைக் கொடுப்பார்கள்.
பெண் பிள்ளையின் ஒன்பதாம் பருவம்- கழங்கு என்னும் அம்மானை; பத்தொன்பதாவது மாதம் குழந்தைகள் காய்களை வைத்து விளையாடும் விளையாட்டுதான் இது. கள்ளாங்காய் மாதிரியான விளையாட்டை கழங்கு என்பர். மூன்று தோழிகள் கேள்வி கேட்டு விளையாடும் விளையாட்டு அம்மானை.
இந்த அம்மானை ஒரு பாடல் வகை; இறுதிச் சீர் அம்மானை என்று முடியும். இப்படி கழங்கு விளையாடி அம்மானை பாடும் பருவம்தான் இந்தப் பருவம்.
ஆண் பிள்ளையின் பத்தாம் பருவம் - சிறு தேர் உருட்டல்; 21 ஆம் மாதம் குழந்தையை மரத்தால் செய்த சின்னத் தேரை உருட்டி விளையாடச் சொல்லும் பருவம் இந்தப் பருவம்.
பெண் பிள்ளையின் பத்தாம் பருவம் - ஊசல்; 21 ஆம் மாதம் பெண் குழந்தையை ஊஞ்சலில் உட்கார வைத்து விளையாடி மகிழும் பருவம்தான் ஊசல். இவ்வாறு பிள்ளைத் தமிழில் குறிப்பிட்டுள்ள குழந்தையின் பத்து பருவங்களும் குழந்தையின் வளர்ச்சிப் பருவங்களாக இருக்கின்றன. ஆனால், இதில் நுட்பமாக ஊடுருவியிருக்கிற செய்தி என்னவென்றால் ஆண் குழந்தைகள் விளையாடும் மூன்று விளையாட்டும் வீட்டுக்கு வெளியில் விளையாடும் விளையாட்டு (ஞன்ற்க்ர்ர்ழ் ஏஹம்ங்ள்) என்பார்கள். பெண் குழந்தைகள் விளையாடும் மூன்று விளையாட்டும் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டாக (ஒய்க்ர்ர்ழ் ஏஹம்ங்ள்) உள்ளது. அன்றைய காலகட்டமும் சமூகச் சூழலும் இந்த வேறுபாட்டிற்குக் காரணமாக இருந்தாலும் இன்று குழந்தைகள் எல்லாவற்றையும் கடந்து சாதனை படைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் விளையாட்டான கேரம் விளையாட்டில் கருப்புக்கு 5 மதிப்பெண்கள்; வெள்ளைக்கு 10 மதிப்பெண்கள்; அதில் ராணியைக் கூட தனியாக அனுப்பாமல் ஒரு வீரனை (நர்ப்க்ண்ங்ழ்) கூட அனுப்புவான். அப்படியொரு வெள்ளை ஏகாதி பத்தியம் நிறைந்த விளையாட்டில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ‘காசிமா’ என்ற பெண் அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது உலகக் கேரம் போட்டி யில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். அவருக்கு தமிழக அரசு சார்பில் தமிழ்நாட்டு துணை முதல்வர் ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கி உள்ளது சிறப்பிற் குரியது. குழந்தைகளின் சாதனைகள் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும் இந்த சமூகம் குழந்தைகளை வேறு பாதைக்கு திசை திருப்பிக்கொண்டிருக்கிறது.
குழந்தைகள் தரையில் விளையாடிய காலம் போய் திரையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று பம்பரம் விடவேண்டிய பிஞ்சுக் கைகள் பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கின்றன; டயர் வண்டி ஓட்டிய கைகள் ஆய்ஞ்ழ்ஹ் இண்ழ்க் இல் முடங்கிக்கொண்டிருக்கின்றன. நாம் அன்று மண்ணில் விளையாடிய கபடி, கிட்டிப்புள், நொண்டி, கண்ணாமூச்சி, பல்லாங்குழி, உறியடி, ஓடிப் பிடித்தல் மற்றும் நீச்சல் அடித்தல் ஆகிய விளையாட்டுகள் எல்லாம் நமக்கு தன்னம் பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டி வளர்த்தன. ஆனால், ‘வெற்றி பெற்றால் வாழ்வு; தோற்றால் சுட்டுச் சாவு’ என்பதைத் தாரக மந்திரமாய் கொண்டு உருவாக்கப்பட்ட நவ்ன்ண்க் ஏஹம்ங் போன்ற விளையாட்டுகள் பல குழந்தைகளை இன்று தவறான பாதைக்கு அழைத்துச்செல்கின்றன. பணம் வைத்து ஆடும் ரம்மி (தன்ம்ம்ஹ் ஈண்ழ்ஸ்ரீப்ங்) என்ற ஆன்லைன் சூது விளையாட்டு பல குடும்பங்களைக் கொத்துக்கொத்தாக காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஒழுக்கமும் பண்பாடும் ஊட்டி வளர்க்கப்பட்டு தரையில் விளையாடிய குழந்தைகள் கணினித் திரையில் தன் கன்னித் தன்மையை இழந்து நிற்கின்றன. அன்று மண்ணில் விளையாடியபோது வெறும் உடல் தான் அழுக்கானது; ஆனால் இன்று கணினியில் விளையாடுகிறபோது மனதே அழுக்கா னது. கற்கக்கூடாததை, பார்க்கக்கூடாததை, கேட்கக் கூடாததை, சொல்லக்கூடாததை இன்றைய நவீன ஊடகங்கள் குழந்தைகளுக்கு இலகுவாக எடுத்துக் கொடுத்து பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்துவருகின்றன.
வியாபாரமயமாகி வரும் பல செயற்கை கருத்தரிப்பு மையங்களில் குழந்தையை அறுவடை செய்ய தவமாய் தவமிருக்கும் இன்றைய சூழலில் குழந்தைகளை கரையேற்ற வழியில்லாமல் பல கட்டுப்பாடுகளோடு அவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் கூட்டம் ஒரு புறம்; எல்லா செல்வ வளம் இருந்தும் கட்டுப்பாடற்று வளர்க்கத் தெரியாமல் வணிக மாயையில் சிக்கிக்கொண்ட கூட்டம் மறுபுறம்; என்று குழந்தைகளின் உலகம் இரு வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளோடு நாம் நேரம் செலவழிக்காததாலும் பேசத் தவறுவதாலும் தான் குழந்தைகள் பேசாத மிருகங்களோடும் இயந்திர பொம்மைகளோடும் பேசிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் வேறு உலகத்திலும் நாம் வேறு உலகத் திலும் பயணிப்பதால்தான் குழந்தைகள் பாதை மாறிப் போகிறார்கள். குழந்தைகளின் உலகத்தில் பெரிய வர்கள் பயணிக்கும் போதுதான் குழந்தைகள் அழகாகச் செதுக்கப்படுகிறார்கள். குழந்தைகளை சிதைக்கும் அபாயங்களிலிருந்து அவர்களைக் காக்க அவர்களோடு நாம் பயணித்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பெண் வலைத்தளத்தில் சிக்கி கள்ளக்காதலனை விரும்பி தன் கணவனை விட்டுவிட்டு ஓடிப் போகிறாள். இதனால் மது போதைக்கு அடிமையான அவள் கணவன் தன் மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறான். எத்தனையோ கனவுகளும் இலட்சியங்களும் ஆசைகளும் பாசங்களும் கொண்ட அந்தப் பிஞ்சுகளை வெட்டிச் சென்றவனும் விட்டுச்சென்றவளும் எப்படி தாய் தந்தையாக இருக்க முடியும். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகில் கணவன் மனைவி தகராறால் மனைவி தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் கிணற்றிலே தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட கொடூரம் நம்மை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, நாளைய சமூகத்தின் வேராக இருக்கும் குழந்தைகளை வேரோடு சிதைக்கும் இந்த தொடர் சம்பவங்களால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.
மனிதநேயம், அன்பு, உயிரிரக்கம் என்று எதுவுமே இல்லாத பிணவாடை வீசும் அழுகுணிச் சமூகத்தை உருவாக்கும் இவர்கள் உடனடியாக நம் தேசத்திலிருந்து பிடுங்கி எறியப்பட வேண்டிய களைகள் தான். அதனால்தான் தம்பதிகளே!
கட்டிலுக்குப் போகும் முன் கவனமாய் சிந்தியுங்கள்!
உங்களால் ஒரு தொட்டிலை தூக்கி சுமக்க முடியுமா என்று!” எனப் பாடினார் கவிஞர் மு மேத்தா.
“வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுகிறவர்களே! தினங்கள் கொண்டாடுவதை விட்டுவிட்டு குழந்தைகளை எப்போது கொண்டா டப்போகிறீர்கள்” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் கேட்ட கேள்வி தான் இந்த சமூகத்திற்கான சரியான சாட்டையடியாக இருக்கும். குழந்தைகளைக் கொண்டாடி நேசித்ததால்தான் நேரு மாமா என்று செல்லமாக குழந்தைகளால் போற்றப்பட்ட நம் முன்னாள் முதல் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர் லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதியை குழந்தைகள் தினமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
நூற்றாண்டுகளைக் கடந்து ஆட்டங்களும் கொண்டாட்டங்களும் இம்மண்ணில் இருந்தாலும் கொண்டாடப்பட வேண்டிய குழந்தைகளின் அமைதிப் பூங்காவில் வழிநடுக சிதறிக் கிடக்கும் முட்களை அகற்றி அன்பு மலர்களைத் தூவினால் மட்டுமே அந்தக் குழந்தையால் சுதந்திரப் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிய முடியும். குழந்தைகளை சிரிக்க விடுங்கள்;
சிறகடித்து பறக்கவிடுங்கள்; ஏனென்றால், குழந்தைகளால் மட்டும் தான் நிலவில் உலா வர முடியும்; நட்சத்திரங்களை தன் விரல் நுனியில் தொட்டுவிட முடியும்; நாம் சிந்திக்காதவற்றை குழந்தைகளால் மட்டுமே சிந்திக்க முடியும்; வானம் தொட்டு விடும் தூரம்தான் என்ற நம்பிக்கை நம்மை விட குழந்தைகளுக்கு மட்டும்தான் அதிகம் உண்டு.
குழந்தைகளின் உலகமே அலாதியானது; அவர்களை குழந்தையாக மட்டுமே இருக்கவிடுங்கள். இந்த சுதந்திரம்தான் அவர்களை மகிழ்ச்சியாக சிறகை விரித்து பறக்கவைக்கிறது. குழந்தைகளின் இறகுகள் சிறகாவதும் விறகாவதும் இந்த சமூகத்தின் கைகளில் தான் இருக்கிறது. நம் பயணத்தை அழகாக்கும் குழந்தைச் செல்வங்கள்தான் நாம் தூவிச் செல்லும் விதைகள். விதைகள் சரியாக இருந்தால் அது கற்பகவிருட்சமாய் நம் தேசம் காக்கும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us